Page 284 of 401 FirstFirst ... 184234274282283284285286294334384 ... LastLast
Results 2,831 to 2,840 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #2831
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரியில் தீபாவளித்திருநாள் வாழ்த்துக்களை பதிவு
    செய்த மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு எனது
    இதயபூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

    அன்புடன்

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2832
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..- கவிஞர் நா. காமராசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா
    கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..·

    நினைவுகளும் கனவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றானவை. நிழல்களும் நிஜங்களும் போல! நினைவுப் பிரதேசங்களின் நீட்சியாக சில நேரம் கனவுப் பிரதேங்கள் அமைவதுண்டு! எண்ணக்கனவுகளில் வண்ணங்களிருந்தால் எழுகின்ற கனவுகள் ஆயிரமோ?

    வரிவரியாய்வாரிவழங்கும்கவிவள்ளல்பரம்பரையில்.. தன் சிந்தனைச் செம்மையால் தலைநிமிர்ந்த புதுக்கவிதைப் பிதாமகன் நா.காமராசன் ஆவார். இவரெழுதித் திரையில் மிதந்த கானங்கள் ஒருசிலதான்! அவற்றுள் ஒன்று இது எனலாம்!

    கற்பனை கொடிகட்டிப் பறக்க காதலின் ராஜ்ஜியம் நடக்கிறது பாருங்கள்! கவித்துவபாணியில் மலர்ந்த கற்பகத்தருவா இந்தப் பாடல்!

    மக்கள்திலகத்துடன் கதாநாயகி லதா இணைய நீதிக்குத்தலைவணங்கு திரைப்படத்தில் டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு மகோன்னதப் படைப்பை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்திருக்கிறார்.

    மானுடவாழ்வின் ஜீவநதி காதல் என்பதால் அன்பின் சங்கமம்நடைபெறும்! என்னுயிர் நீயென உன்னுயிர் நானென உறவின் தத்துவங்கள் பிறக்கும்!
    வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர் பாடல்களில் கனவுக் காட்சிகளுண்டு! வண்ண வண்ண ஆடைமாற்றங்கள் உண்டு! எழுதித்தாருங்களேன் ஒரு கனவுப்பாடலாக ஒரு காதல் பாடலை என்று கேட்டமாத்திரத்தில்..

    · பொங்கிவந்த தமிழமுதை பூப்போன்ற வார்த்தைகளால் அங்குலம் அங்குலமாய் அழகியல் ஆராய்ச்சி நடத்தி என்றென்றும் நம் இதயத்தில் நிறைந்த இனியபாடல் பிறந்ததோ?
    கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என்
    கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
    கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை
    இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வர விடுங்கள் (கனவுகளே)
    நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

    முகம் என்று அதற்கொரு தலைநகரோ விழிகள் மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளைவிலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே (கனவுகளே)

    உடை என்ற திரைமட்டும் விலகட்டுமே இன்ப உடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில் ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியாட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே…

    courtesy -கவிஞர் காவிரி மைந்தன்

  4. Likes orodizli liked this post
  5. #2833
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் '' ஊருக்கு உழைப்பவன் '' இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் .
    12.11.1976

    ஊருக்கு உழைப்பவன்-

    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.

    இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

    பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.

    மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.

    உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

    தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.

    இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.


    இதயத்தை வருடும் இன்பகானங்கள்...


    1. இதுதான் முதல் ராத்திரி
    அன்புக்காதலி என்னை ஆதரி!
    தலைவா கொஞ்சம் பொறுத்திரு
    வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!

    2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
    இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
    காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.

    3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
    எழுதிய ரதிவர்மன் எங்கே?
    இலக்கிய காவியம் இங்கே-அதை
    எழுதிய பாவலன் எங்கே?

    4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
    பிள்ளைக்காகப் பாடுகிறேன்
    மல்லிகைபோல் மனதில் வாழும்
    மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்

  6. Likes orodizli liked this post
  7. #2834
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை ''

    11.11.1966

    பொன் விழா ஆண்டு துவக்கம் .

    ராமண்ணாவின் முதல் வண்ணப்படம் . பல புதுமைகள் நிறைந்த பொழுது போக்கு சித்திரம் .

    1966ல் வந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படங்கள் .

    அன்பே வா - முற்றிலும் மாறுபட்ட காதல் வரலாற்று காவியம் .

    முகராசி - 12 நாட்களில் படமாக்கப்பட்டு 100 நாட்கள் ஓடிய படம் .

    நான் ஆணையிட்டால் - சமூக சீர்திருத்த படம் .

    நாடோடி - சாதி கொடுமையை எதிர்த்து வந்த படம் .

    சந்திரோதயம் - பத்திரிகை அதர்மத்தை எதிர்த்து வந்த சமூக படம் .

    தாலி பாக்கியம் - முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படம் .

    பறக்கும் பாவை - சர்க்கஸ் மையாமாக கொண்டு வந்த சிறந்த படம்

    தனிப்பிறவி - இனிய பாடல்களுடன் வந்த மக்கள் திலகத்தின் புதுமை படம் .

    பெற்றால்தான் பிள்ளையா - நடிக பேரசரின் நவரச காவியம் .

    இனி பறக்கும் பாவை ..........

    ஏராளமான நட்சத்திர கூட்டங்களோடு மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் மக்கள் திலகத்தின்சிறப்பான நடிப்பில் - புதுமையான சண்டைகாட்சிகள் - பாடல் காட்சிகள் - நடனங்கள் என்று காட்சிக்கு காட்சிவிறுவிறுப்புடன் வந்த பொழுது போக்கு படம்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் விரும்பும் படங்களில் பறக்கும் பாவையும் ஒன்று .

  8. Likes orodizli liked this post
  9. #2835
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் (இரவு 7 மணி முதல் ), மக்கள் தலைவர்
    எம்.ஜி.ஆர். அவர்களின் "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகி வருகிறது.
    கண்டு மகிழுங்கள்.!.


  10. #2836
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தர்மம் தலை காக்கும் நற்பணி சங்க விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!

    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களுக்கும், மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும்
    வழங்கப்பட்ட நினைவு பரிசின் தோற்றம் .

  11. #2837
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசிய நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி அவர்களுக்கு, கோவை திரு.
    துரைசாமி அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை வழங்கும் காட்சி.

  12. #2838
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு, திரு. மின்னல் பிரியன்
    அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி.
    திருவாளர்கள்: ,கணேஷ் , ரவிக்குமார் , பாண்டியராஜன், பாண்டியன் , தயாளன்

  13. #2839
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசிய பாடகர் திரு. எம்.ஜி.ஆர். தங்கராஜ்.

  14. #2840
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் அவர்களால் , திருச்சி மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் காட்சி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •