Page 224 of 401 FirstFirst ... 124174214222223224225226234274324 ... LastLast
Results 2,231 to 2,240 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #2231
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2232
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தி.நகர், பி.டி.தியாகராயர் மண்டபத்தில், ஞாயிறு (25/10/2015) அன்று மாலை 6 மணி அளவில் , தர்மம் தலை காக்கும் மாத இதழ் சார்பில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா, தர்மம் தலை காக்கும் மாத இதழ் 2 வது ஆண்டு விழா, மற்றும் பணம் படைத்தவன் பொன்விழா ஆண்டு தினம் என முப்பெரும் விழா வெகு விமரிசையாக திரு. மின்னல் பிரியன் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழா மண்டபத்தை சுற்றிலும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் பேனர்கள் ,
    பதாகைகள் அமைத்திருந்தன. குறிப்பாக சைதை திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள்
    அமைத்திருந்த வரவேற்பு பேனர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

    நிகழ்ச்சி தொடங்கும் முன்பு , அரங்கிற்கு முன்னால் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    நிகழ்ச்சி துவக்கத்தில், தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக ,புரட்சி தலைவரின் " அச்சம் என்பது மடமையடா " என்கிற பாடல் ஒலிக்கப்பட்டது.

    விழாவில், முக்கிய விருந்தினர்களாக, கவிஞர்கள் திரு.புலமை பித்தன், திரு.முத்து லிங்கம் , இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், திரு.எம்.ஜி.ஆர். வாசன், (116 வது வட்ட கவுன்சிலர் ), திரு.தி. நகர் மூர்த்தி, திரு. மேஜர் தாசன் , திரு.அருளானந்தர் (கல்வி நிறுவனர் ) திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மலேசியா நடன கலைஞர்கள் திரு.எம்.ஜி.ஆர். ஹரி,
    திருமதி ஹேமா போன்றோர் கீழ்கண்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனம்
    ஆடி ரசிகர்களை /பக்தர்களை மகிழ்வித்தனர்.
    என்னை தெரியுமா -குடியிருந்த கோயில்,
    நினைத்தேன் வந்தாய் -காவல்காரன்
    ஆடிவா , ஆடபிறந்தவளே - அரச கட்டளை
    ஏமாற்றாதே, ஏமாறாதே - அடிமை பெண்
    பூமழை தூவி - நினைத்ததை முடிப்பவன்
    நான் பாடும் பாடல் - நான் ஏன் பிறந்தேன்
    ஒருவர் மீது - நினைத்ததை முடிப்பவன்



    திரு. எம்.ஜி.ஆர். தங்கராஜ் கீழ்காணும் சில மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
    நிலவு ஒரு பெண்ணாகி -உலகம் சுற்றும் வாலிபன்
    தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி

    நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் , பணம் படைத்தவன் பொன்விழா ஆண்டு தினம் -விழாவை முன்னிட்டு , அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை தேர்வு செய்திருக்கலாம்.





    பாடல்களுக்கு இடையில் , பல நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. முக்கிய அம்சமாக மதுரை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.மாரியப்பன் என்கிற மாற்று திறனாளிக்கு சக்கரங்கள் பொருந்திய நாற்காலி
    வழங்கப்பட்டது . மற்றொரு நபருக்கு செயற்கை கால் பொருத்தும் கருவி வழங்கப் பட்டது. ஆரம்ப காலங்களில் 4 கிலோ எடை கொண்ட இந்த கருவி, தற்போது,
    முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி
    400 கிராம் அளவிற்கு எடை குறைந்த , தரமான செயற்கை கால் பயன்பாட்டுக்கு
    வந்துள்ளதாக , ரசிகர்களின் கரகோஷத்துடன் திரு. மின்னல் பிரியன் செய்திகளை
    பகிர்ந்து கொண்டார்.

    மதுரையை சேர்ந்த எம்.ஜி.ஆர். பக்தர் ஒருவரின் மகளுக்கு திருமண வைபவத்திற்காக பெங்களூர் திரு. கா. நா. பழனி அவர்கள் தன் மனைவி, மகளுடன் கலந்து கொண்டு பட்டு புடவை பரிசளித்தார். அந்த மணமகளின் திருமணத்திற்கு
    கணிசமான நிதி உதவிகள் குவிந்தன. திருமண விழாவில், இசை அமைப்பாளர்
    திரு. சங்கர் கணேஷ் கலந்து கொண்டு புரட்சி தலைவரின் சில பாடல்களை
    வாசிப்பதாக மணமகள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களுடன் தெரிவித்தார்.

    தர்மம் தலை காக்கும் மாத இதழ் சார்பாக உயர் கல்விக்கான நிதி உதவிகள்
    காசோலைகளாகவும், பணமாகவும் சிலருக்கு வழங்கப்பட்டது.

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர், மற்றும் பல நகர மன்ற தோழர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சி அறிவிப்பாளராக திரு. மின்னல் பிரியன் அவர்களின் மனைவி திருமதி, பவானி அவர்கள் செயல்பட்டார்.

    திரு. மின்னல் பிரியன் அவர்களின் மகள் பாடல்களுக்கு நடுவே, புரட்சி தலைவரின் அருமைகள் /பெருமைகள் /சிறப்புகள் / உதவிகள் ஆகியவற்றை தொகுத்து
    வழங்கி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு எம்.ஜி.ஆர். விருது, மற்றும் முக்கிய எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு எண்களுக்கு பதிலாக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவங்கள் பொருந்திய கடிகாரங்கள் நினைவு பரிசாக அளிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியின் இடையில் , விழாவை சிறப்பாக நடத்தியதற்காக, பல்வேறு எம்.ஜி. ஆர். மன்ற பக்தர்கள் திரு. மின்னல் பிரியன், மற்றும் அவர் மனைவிக்கு பொன்னாடைகள் போர்த்தி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.



    நிகழ்ச்சி முடிவில் , விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ உணவு
    பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    பொதுவாக , தர்மம் தலை காக்கும் மாத இதழ் சார்பில் நடத்தப்பட்ட இந்த
    நிகழ்ச்சி , சற்று வித்தியாசமாக இருந்ததாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர் .


    விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை தொடரும்................!

  4. #2233
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''விக்கிரமாதித்தன் '' 27-10- 1962.
    54th ANNIVERSARY.
    பல சிறப்புகளுடன் வந்த மக்கள் திலகத்தின் காவியம் . இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள் .மற்றும் மக்கள் திலகம் பல மொழிகள் பேசி சிறப்பித்த படம் .
    மக்கள் திலகம் பத்மினி பி எஸ் வீரப்பா தங்கவேலு ஸ்ரீரஞ்சனி ராகினி
    மற்றும் பலர் நடிப்பில்
    இசையமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் இசைவண்ணத்தில் உருவான
    விக்கிரமாதித்தன் படப்பாடல்கள்
    அதிகம் பிரபலமாகாத பாடல்கள் போல் தெரிந்ததன
    மற்றைய மக்கள் திலகம் படப்பாடல்களோடு ஒப்பிடும்போது
    விசாரித்துப் பார்த்ததில் றேடியோ சிலோன் வானொலியில்
    வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு .. மட்டும்
    இடை விடாமல் ஒலித்ததாம் அதுவும் மகளிர் அழுகை விருப்பமாக
    வண்ணம் பாடுதேயும் . .கன்னிப் பெண்ணின் ரோஜாவும்
    நெஞ்சில் நிறைந்தவையில் அவ்வப்போது வருமாம்
    பலதரப்பட்ட பாடலாசிரியர்கள் டைட்டிலில் இடப் பிடித்து இருக்கிறார்கள்




    ஏகப்பட்ட பாடல்களை சலிக்காமல் நிறைவேற்றி இருக்கிறார்
    S ராஜேஸ்வர ராவ்
    ஆடல் டூயட் தெருக்கூத்து சோகம் என்று அந்நாளைய வரிசைப்படி
    மக்கள் திலகத்தோடு நாட்டியப் பேரொளி நடிப்புச்சுடர் பத்மினிக்காக
    இனிமையான பி சுஷீலாவோடு கம்பீரமான டி எம் எஸ் இணையும்
    ..வண்ணம் பாடுதே
    வான் என்னும் நீல ஓடை
    தன்னில் நீந்தும் வெண்ணிலா
    எளிமையான வரிகள்
    மென்மையான உணர்வுகளை இதமாக ரம்மியமாக வெளிப்படுத்தும்
    சூழலில் அழகான இருகுரலிசை !

    thanks tfm lover

  5. #2234
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    காஞ்சித் தலைவன் . நரசிம்ம பல்லவனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் மக்கள் திலகம். மயங்காத மனம் யாவும் மயங்கும் மக்கள் திலகத்தின் எழிலை இப்படத்தில் காணும் போது. கம்பீரம் என்பதற்கு மறுபெயர் எம்.ஜி.ஆர் தான். ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமான நடிப்பைத் தந்திருப்பார் மக்கள் திலகம்.

    மாறு வேடத்தில் சிற்பியாக தன்னந்தனியே சிலை வடிக்கும் காட்சியில் மிக நுட்பமான நடிப்பைத் தந்திருப்பார். அதிலும் தான் வடிவமைத்த சிற்பத்தின் வனப்பை வெவ்வேறு கோணங்களிலிருந்து சரிபார்க்கும் நுட்பம் முகபாவங்கள் அலாதியானது. அதனைத் தொடர்ந்து பானுமதியுடனான விவாதக் காட்சி அற்புதம். கலைஞரின் வசனங்களும் அந்தக் கட்டத்தில் பிரமாதமாக இருக்கும். உலகப் பேரழகன் தன்னை அவலட்சணம் என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். அரசவையில் அமர்ந்திருக்கும் கம்பீரம், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வழக்கை வித்தியாசமான அணுகுமுறையால் தீர்க்கும் காட்சி அமர்க்களம். விருந்துக்கு அழைத்து தற்பெருமை பேசி மக்கள் திலகத்தின் மான உணர்ச்சியைத் தூண்டும் கட்டத்தில் பானுமதி அமர்க்களப் படுத்தியிருப்பார் என்றாலும் அதைச் சகித்துக் கொள்ளும் மக்கள் திலகம் இறுதியில் பொங்கியெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆமாம் ஆமாம் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பின்னர் தன் தந்தையையும் பழித்துப் பேசும் போது பொங்கியெழுந்து இந்த வார்த்தைகளைப் பேசி இந்நாட்டிலிருந்து ஒருவர் தப்பித்து போவது என்பது இயலாது.

    விருந்தினர் என்பதால் பொறுத்தேன் எனக்கூறி விருட்டென வெளியேறும் அந்த ஒரு காட்சிக்கு ஆயிரம் பாரத் பட்டங்கள் கொடுக்கலாம். மல்லனைப் போரில் தோற்கடிக்கும் காட்சி அற்புதம். ஒரு கொடியில் இருமலர்கள் பாடல் காட்சி உருக்கம். நண்பன் மானவர்மன் மனைவியை சோதிக்கப் புகுந்து தன் பெயரில் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் காட்சியிலும் அவர் நடிப்பு உணர்ச்சிகரமாக இருக்கும். எல்லாவிதத்திலும் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நரசிம்ம பல்லவனாகவே வாழ்ந்திருப்பார். ஆனால் கல்கி விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல (ஏற்கனவே நமது திரியில் அதனைப் பதிவிட்டிருக்கிறேன்.மக்கள் திலகம் இந்தப் படத்தில் மிக உருக்கமாக நடித்திருக்கிறார்.
    ஆனால் ஏராளமான சரித்திர ஆதாரங்களுடன் கூடிய கதையாக இது இல்லை) கதை அம்சம் இன்னும் சற்று மெறுகேற்றியிருக்கலாம். பாடல்களில் உலகம் சுற்றுது எதனாலே , வெல்க நாடு வெல்க நாடு தவிர மற்றவை அனைத்தும் அருமை.
    Courtesy - jaisankar.

  6. #2235
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ‘அழகுத் தலைவன்’

    மேகலா பிக்சர்ஸ் சார்பில் கருணாநிதி, முரசொலி மாறன் தயாரிப்பில் 1963ம் ஆண்டு வெளியான தலைவரின் படம்.

    ‘கண்கவரும் சிலையே...’ அட்டகாச பாடலுடன் சிற்ப கூடத்தில் தலைவரின் அறிமுகம். இதிலும் அவரது தேக்குமர தேகத்தை காணலாம். அவரை சாதாரண குடிமகன் என்று நினைக்கும் பானுமதி அடுத்த காட்சியில் அவர் மன்னர் என்று அறிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவதும் அந்த காட்சியில் தலைவர் கம்பீரமாக நடந்து வருவதும் அற்புதம்.

    தலைவருக்கு விருந்து கொடுக்க அழைக்கும் பானுமதி, உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரை உணவை அருந்த விடாமல் தடுக்க வேண்டுமென்றே கோபமூட்டுவார். தங்கள் நாட்டுக்கு வந்துள்ள விருந்தாளி அதிலும் பெண் என்பதால் தலைவர் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ‘‘ஆமாம்... ஆமாம்..’ என்று கூறிக் கொண்டே அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கைப்பிடியை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில், தலைவரின் நடிப்பு டாப்.

    இந்தக் காட்சிக்கு முன்னால் வரும் பாடல் காட்சி. பானுமதியின் இனிமையான குரலில் ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்....’ இதில் தலைவரின் அழகு கொஞ்சும் சிரிப்பும் நிதானமான, அதேநேரம் கம்பீரமான நடையும் .... சொக்க வைக்கும். ‘மரத்தில் மறைந்தது மா மதயானை..’ என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியிருப்பது போல ‘தலைவரில் மறைந்தது மா மதயானை ’ என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கட்டுக் கோப்பான, பலமான உடல் வாகை காணலாம். நீதிக்குப் பின் பாசம் படத்தில் ‘சின்ன யானை நடையைத் தந்தது’ என்று தலைவரை கவிஞர் பாடியிருப்பது இதைப் பார்த்துத் தானோ என்னவோ?

    தளபதி பரஞ்சோதியாக திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் நடிப்பு கச்சிதம். அவருக்கு வானத்தில் வருவது ஒரு நிலவு..... விஜயகுமாரியுடன் இனிமையான பாடல்.

    அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும் ‘ஒரு கொடியில் இருமலர்கள்...’ பாடல் அருமையான மெலடி.

    இலங்கை மன்னன் மான வர்மனாக வருபவர் வளையாபதி முத்துக்கிருஷ்ணன் அவர்கள். கணீர் குரலுடன் வசனம் பேசும் திறமையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் வாய்ந்த நடிகர். அண்ணாவின் மேல் பேரன்பு கொண்ட திராவிட இயக்க நடிகர்களில் இவரும் ஒருவர். வளையாபதி என்ற படத்தில் திரு.முத்துக்கிருஷ்ணன் நடித்ததால் படத்தின் பெயர் இவருக்கு முன் சேர்ந்து கொண்டது. ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ போல.

    மான வர்மன் தன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டு தலைவரிடம் சொல்வா். உண்மையிலேயே அவர் அப்படித்தானா என்பதை கண்டுபிடிக்க தலைவர் அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவது போல நடிப்பார். இருந்தாலும் தனது இயல்பான நன்னடத்தை குணம் காரணமாக, காமச் சிரிப்பாக இல்லாமல், இப்படி நடிக்க வேண்டியிருக்கிறதே என்ற சங்கடத்துடன் அந்தக் காட்சியில் லேசான அசட்டு சிரிப்பும், அந்த பெண்ணின் கையை பிடிக்கப் போகும்போது தனது கை லேசாக நடுங்குவதையும் அந்த நடுக்கத்தை தவிர்க்க முயற்சி செய்வதையும் தலைவர் தனது நடிப்பில் காட்டியிருப்பார் பாருங்கள்....... ஏ க்ளாஸ்.

    சாளுக்கிய மன்னன் புலிகேசியாக திரு.அசோகனின் ஆக்ரோஷ நடிப்பும் அற்புதம்.

    எதிரிநாட்டு உளவாளியாக வரும் திரு.எம்.ஆர்.ராதாவின் நடிப்பு வழக்கம்போல் ஆர்ப்பாட்டம். ‘உலகம் சுத்துது எதனாலே? நம்ம உடம்பு சுத்துது அதனாலே...’ என்று அவருக்கு ஒரு பாட்டு. பார்ட்டி ஏற்கனவே கொஞ்சம் லொள்ளு. குடித்து விட்டு ஆட்டம் போடும் காட்சி என்றால் கேட்கவா வேண்டும்? பாடலை எழுதியவர் கருணாநிதி. அனுபவித்து எழுதியிருக்கிறார் போல. இந்தப் பாடலை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். அதற்கு பதிலாக எம்.எஸ்.ராஜூ என்பவர் (பலே பாண்டியாவில், மாமா.. மாப்ளே பாட்டுக்கு ராதாவுக்கு குரல் கொடுத்தவர். சாந்தியில் ‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்’ பாடலுக்கு விசில் அடித்திருக்கும் திறமையாளரும் இவரே) பாடியிருந்தால் பாடல் இன்னும் reach ஆகியிருக்கும் என்று கருதுகிறேன்.

    எதிரி நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரன் தனது நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் நாட்டு வீரரை வீழ்த்தும்போது தலையை கவிழ்ந்து தர்மசங்கடத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தலைவரின் முகபாவம் கண்ணிலேயே நிற்கிறது. இருந்தாலும் அந்த வீரனை மதித்து பாராட்டுவதும் தலைவரின் பெருந்தன்மையை விளக்கும் காட்சி. அந்த வீரன் இந்த நாட்டில் என்னை எதிர்த்துப் போரிட யாரும் இல்லையா? என்று கொக்கரிப்பான். அப்போது, நாட்டின் மானத்தை காக்க தலைவரே கோபத்துடன் எழுந்து ஒவ்வொரு படியாக இறங்கி வருவதும் அப்போது, கிரீடம், மற்றும் உடைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொருவரிடம் கழற்றிக் கொடுத்துக் கொண்டே கோபத்துடன், நிதானமாக, இறங்கி வரும்போது திரையரங்கே வெறி கொண்டு அலறியது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது.

    அந்தக் காட்சியில் வீரனுடன் மோதுவதற்கு தயாராக, உடல் தெரியும் மெலிதான பனியனை அணிந்தபடி சண்டைக் கோழி போல தோளைக் குலுக்கும் தலைவரின் சிலிர்ப்பு... என்ன ஒரு உடல் மொழி. அந்த வீரன் தலைவரை விட நல்ல உயரம். இருந்தாலும் சண்டையின் முடிவில் அந்த வீரனை தலைவர் தனது தோள்களில் தூக்கி சுழற்றி வீசும் காட்சி. சமீபத்தில் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள், ‘பத்தாவது அடி உனக்கு வரும்’ என்று தலைவர் கூறிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த திரு.யுகேஷ் பாபு, தலைவரை, ‘ரீல் சூப்பர் ஸ்டார் அல்ல, ரியல் சூப்பர் ஸ்டார் ’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

    (இங்கே நண்பர்களுக்கு ஒரு விளக்கம். நரசிம்ம பல்லவர் பாத்திரத்தை தலைவர் ஏற்றிருந்தார். அந்த மன்னன் மல் யுத்தத்தில் சிறந்து விளங்கியவன். யாராலும் வெல்ல முடியாததால் அவன் ‘மாமல்லன்’ என்று போற்றப்பட்டான். கலையுணர்ச்சி கொண்ட அவன் நிர்மாணித்த கலைக்கோயில்தான் அவனது பெயரால் வழங்கப்படும் ‘மாமல்ல’புரம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடிக்கும் படங்கள் பற்றிய விமர்சனங்களில் எனக்கு தெரிந்த செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறேன். தலைவரைப் பற்றி மட்டும் சொன்னால் போதும் என்றால் தயங்காமல் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறேன். ஏனென்றால், யாரும் போரடிப்பதாக நினைத்து விடக் கூடாது.)

    வழக்கமாக எல்லாப் படங்களிலுமே அதிலும் அரச உடையில் தலைவர் அழகாக இருப்பார். அதிலும் இந்தப் படத்தில் அவர் நெற்றியில் இட்டிருக்கும் திலகம் அவரது முகத்துக்கு கூடுதல் அழகு தரும். முதல் முறை படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்ததும், தியேட்டர் வாயிலில் அடுத்த காட்சிக்கு வாழ்த்து கோஷங்களுடன் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கிடையே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவரின் கட் அவுட்டை சிறிது நேரம் பார்த்தபடி நின்றேன். படத்துக்கு ‘அழகுத் தலைவன்’ என்று பெயரிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
    COURTESY -கலைவேந்தன்

  7. #2236
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2237
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் நற்பணி மன்றத்தின் சார்பாக நடந்த விழா
    தொகுப்பு மிகவும் அருமை .நன்றி திரு லோகநாதன் சார் .

  9. #2238
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர்
    பண்பட்ட சிறந்த நடிகர் .
    இயக்குனர்
    தயாரிப்பாளர்
    சிறந்த நடன வித்தகர் .
    சிறந்த எடிடர்
    இசை ஞானம் பெற்றவர்
    வீர தீர சண்டைகாட்சிகள் -பயிற்சி பெற்றவர்
    கட்டுகோப்பான உடல் அமைப்பு பெற்றவர்
    புரட்சிகரமான வேடங்களில் நடித்தவர்
    என்றும் மாறாத இளமை தோற்றம் கொண்டவர் .
    ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தவர் .
    மக்களுக்கு படிப்பினை தந்த வாத்தியார்

  10. #2239
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினச்சுடர், பெங்களூர் -19/10/2015


  11. #2240
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •