Page 347 of 401 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3461
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974

    7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
    சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .

    சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .


    நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
    லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .


    மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .


    உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .

    1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
    .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3462
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்


    டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

    பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

    உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

    கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
    வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

    ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

    கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

    ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

    கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

    ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

    சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

    கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
    (லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

    உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

    பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

    ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3463
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் படத்தின் சிறப்புக்கள் .

    01. மக்கள் திலகம் இரட்டை வேடம் - போலீஸ் அதிகாரி -முஸ்லிம் தாதா வேடம் .

    02. கொஞ்ச நேரம் என்னை ..மறந்தேன் கனவு பாடலில் விதவிதமான உடைகளில் ,மேக் அப்பிள் மக்கள் திலகம் தோன்றும் இளமை பொங்கும் காட்சிகள் .

    03.ஒன்றே சொல்வான் ... ஒன்றே செய்வான் என்ற கொள்கை பாடலில் அருமையாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .

    04. நீ என்னை விட்டு போகதே .. பாடலில் மக்கள் திலகம் மிகவும் இறுக்கமாக , ஒரு போலீஸ் அதிகாரிக்கு உள்ள மிடுக்கான் தோற்றத்துடன் தோன்றி நடித்திருப்பார் .

    05.உலகமெனும் நாடக மேடையில் ... பாடலில் சிறப்பாக நடனமாடி ஜொலித்திருப்பார் .

    06. பொன் மன செம்மலை ... பாடலில் மிகவும் அழகாக ஆடி பாடி நடித்திருப்பார் .

    மக்கள் திலகம் - பொன்மனச்செம்மல் மோதும் சண்டை காட்சி விறு விறுப்பாக மற்றும் புதுமையான முறையில் இருந்தது .

    மக்கள் திலகம் -ஜஸ்டின் மோதும் குளியல் அறை சண்டைகாட்சி அற்புதம் .

    இறுதி காட்சிகள் 25 நிமிடங்கள் . பரபரப்பான கட்டம் .

    படமாக்கபட்ட விதம் சூப்பர் .

    ஆர் .கே . சண்முகம் வசனங்கள் அனல் பறக்கும் .

    மெல்லிசை மன்னரின் இனிமையான இசை .


    டைட்டில் -இசை மிகவும் பிரமாதமாக இருந்தது .

    மக்கள் திலகம் மாறு பட்ட இரட்டை வேடங்களில் அமர்க்கள படுத்தியிருப்பார் .

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #3464
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3465
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3466
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்
    சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்



  11. Thanks orodizli thanked for this post
    Likes mgrbaskaran, orodizli liked this post
  12. #3467
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  13. #3468
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  14. #3469
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  15. #3470
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •