Page 361 of 401 FirstFirst ... 261311351359360361362363371 ... LastLast
Results 3,601 to 3,610 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #3601
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3602
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    பொறாமையால் நயவஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உண்மைகளை என்னதான் மறைத்தாலும் அது வெளியே வாராமல் போகாது. நடிகர் சங்கம் உருவாகவும் வளர்ச்சி அடையவும் தனது சொந்தப் பணத்தை போட்ட உத்தமத் தலைவன் நம் புரட்சித் தலைவர். நடிகர் சங்கத்துக்கு அது செயல்பட தனது வீட்டையே கொடுத்து உதவியிருக்கிறார்.

    அவர் நடிகர்சங்க வளர்ச்சிக்கு உதவியதும் நிலம் வாங்க பணம் கொடுத்ததும், புரட்சித்தலைவர்தான் " ஸ்டார் நைட் " நடத்தச் சொன்னதாக வி(வரம் தெரியாத) கே. (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி பச்சையாக புளுகியிருப்பதும் ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளது. நடிகர் சங்க வெப்சைட்டிலேயே இது சம்பந்தமான தகவல்கள் உள்ளது.



    1955-ம் ஆண்டில் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் 22 கிரவுண்டு நிலம் பதிவுக்கட்டனமும் சேர்த்து அப்போது, 75,000/- ரூபாய். அதற்கு தேவைப்பட்ட தொகையை எல்லா கலைஞர்களிடமும் சேர்த்து வசூலித்தும் 35,000/- ரூபாய்தான் வசூலாகியுள்ளது. மீதியுள்ள 40,000/- ரூபாயை கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனது 3 படத்துக்கான சம்பளத்தில் இருந்து பெற்று 40,000/- கொடுத்துள்ளார். அதாவது, எல்லா நடிகர்களும் பணம் போட்டும் (அதிலும் நம் பொன்மனத் தலைவர் பணம் கொடுத்திருப்பார்) 75,000/- வசூலாகாததால், மீதி 40,000/-த்தை (அதாவது பாதித் தொகைக்கு மேல்) தொகையை தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து நிலம் வாங்க உதவி இருக்கிறார் பொன்மனச் செம்மல். 1955-ல் 40,000/- என்பது இன்றைக்கு பல கோடிகளுக்கு சமம்.

    கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.

    ஆனால், உண்மையாக நடந்தது யாதெனில், கட்டிடம் கட்ட ஸ்டேட் பாங்கில் வாங்கிய 18 லட்சம் கடனுக்கு மாதா மாதம் 8,000 ரூபாயும் வருடத்துக்கு ஒருமுறை ‘ஸ்டார் நைட்’ (நட்சத்திர இரவு) நடத்தி 1,00,000 கொடுப்பதாக, அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள் வங்கிக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ராமசாமியும் ஒருவர்.. அதன்பேரில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

    கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பே "ஸ்டார் நைட்" நடத்துவதாக வங்கியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள். ஆனால், கட்டிடம் கட்டி முடித்து விட்டு கடனை அடைக்க முடியாததால் என்ன செய்யலாம்? என்று புரட்சித் தலைவரிடம் கேட்டதாகவும் அவர்தான் ‘ஸ்டார் நைட்’ நடத்தச் சென்னதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் ராமசாமி. கடனை அடைக்க முடியாமல் போனதற்கு அவ்வளவு பெரிய கட்டடம் கட்டியும் வருமானம் வரவில்லை என்பதுதான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

    நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு, நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்திருக்கிறார். அதில் நடிகர் சங்க நிலத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்று எஸ்.எஸ். ராஜேந்திரன் கண்டுபிடித்திருக்கிறார். பின்னர்தான் பத்திரத்தை பொதுக் குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து நிலத்தை மீட்டிருக்கிறார் என்பதும் இப்போது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது.

    கடனை அடைக்க முடியாத நிலையிலும், அரசு மூலம் நடிகர் சங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் கொடை வள்ளல் புரட்சித் தலைவர்.

    இதையல்லாம், நாங்கள் சொல்லவில்லை. நடிகர் சங்க வெப் சைட்டிலேயே நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்கள்.

    நாங்களே "ஸ்டார் நைட்" நடத்தி கடனை அடைக்கிறோம் என்று பாங்கில் எழுதி உத்தரவாதம் கொடுத்து விட்டு, புரட்சித் தலைவர்தான் 'ஸ்டார் நைட்' நடத்தச் சொன்னார் என்று பச்சை பொய்யன் ராமசாமி கூறியிருப்பது யாரையோ திருப்திப்படுத்தவே !

    அதையும் திரியில் பதிவு செய்திருக்கின்றனர். புரட்சித் தலைவர் மீது ஏதாவது புகார் என்றால் அது அநியாய பச்சை பொய்யாக இருந்தாலும் திரியில் போட வேண்டியதன் காரணமே பொறாமை, காழ்ப்புணர்ச்சி, மக்கள் திலகத்தின் புகழை தாங்கி கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்தான் காரணம்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

    மேலே கூறப்பட்ட உண்மை விவரங்கள் சம்பந்தமாக நடிகர் சங்கம் வெப்சைட்டில் கொடுத்துள்ளனர். அது பொதுமக்கள் பார்வைக்கு:

    http://nadigarsangam.org/

    தொடக்கமும் வளர்ச்சியும் :

    1930 மற்றும் 1940 வருடங்களில் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான திரு கே.சுப்பிரமணியம், 1950ஆம் ஆண்டு 'தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' என்ற அமைப்பினை மேலும் சில திரைத்துறை சார்ந்த வல்லுனர்களுடன் சேர்ந்து நிறுவினார். இதுதான் நடிகர்களை ஒன்றிணைக்க, அவர்தம் வாழ்வு சிறக்க, இடப்பட்ட முதல் விதை ஆகும். அவர் இன்று நாட்டிய உலகில் தலை சிறந்து விளங்கும் பத்மபூஷன் பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்பை தொடர்ந்து, நடிகர்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, திரு. தி என் சிவதாணு, மற்றும் ஆர் எம் சோமசுந்தரம் போன்ற கலைஞர்களால் 1952 ஆம் ஆண்டு 'தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

    இந்த அமைப்பை பற்றியும் அதன் உயர்ந்த குறிக்கோளையும் பற்றி, அப்போது முன்னணி கதாநாயகனாக இருந்த மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்களிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து வந்த உடனடி கேள்வி அமைப்பின் செயலாளர்களை திகைப்படைய செய்தது. அவர் கேட்ட கேள்வி 'நானும் இந்த அமைப்பில் உறுப்பினர் ஆகலாமா?' இந்த மாபெரும் மனிதர் கேட்ட ஒரு கேள்வியின் விளைவுதான் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற மாபெரும் அமைப்பு. . இன்று வரை இந்த அமைப்பு. இசை நாடக நடிகர்கள், சமூக நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்கள் என அனைத்து வகை கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் வாழ்க்கை மேம்பட சிறப்புடன் செயல்படுகிறது.

    நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தானும் ஒரு உறுப்பினராக ஆனதோடு மட்டுமல்லாமல், 1952ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கங்களுக்கான சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யப்படுவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்து உதவினார்.

    இவ்வாறு தொடங்கப்பட்ட 'தென்னிந்திய நடிகர் சங்கம்' சுருக்கமாக, நடிகர் சங்கத்தின் அலுவல்களை கவனிக்க இடம் இல்லாத சூழ்நிலை. அப்போது லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அலுவலகம் அன்று எம் ஜி ஆர் அவர்களின் இல்லமாக இருந்தது. அந்த இல்லத்திலேயே ஒரு பாகத்தை சங்கத்தின் பணிகளை மேற்கொள்ள, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பெரும் மனதுடன் ஒதுக்கி தந்தார். 1952 முதல் 1954 வரை சங்கப்பணிகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டன. திரை வானில் கொடிகட்டி பறந்த அனேக கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆனார்கள்.

    சங்கத்தின் பணிகள் மேலும் சிறக்க நிரந்தர இடம் தேவை என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, இடம் தேட ஆரம்பித்தனர். ஜெமினி மேம்பாலம் அருகில் இருந்த 'சன் தியேட்டர்ஸ்' இடமும் தற்போது உள்ள ஹபிபுல்லா சாலை இடமும் பரிசீலிக்கப்பட்டது. மேம்பாலமும் அருகிலிருந்த பிரதான சாலையும் பின்னாளில் விரிவு படுத்தப்படும்போது, சிரமம் வரலாம் எனக் கருதி, ஹபிபுல்லா சாலையில் உள்ள இடமே முடிவு செய்யப்பட்டது. சுமார் 22 கிரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த இடம் பதிவு கட்டணம் உட்பட ரூபாய் 75,000/- மதிப்பில் வாங்கப்பட்டது. இந்த இடத்தை வாங்குவதற்கு ரூபாய் 35,000/- அனேக கலைஞர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப் பட்டது. மேலும், கூடுதல் தேவையான ரூபாய் 40,000/- த்தை நம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் 3 திரைப்படங்களின் சம்பளத்தை 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று, நெருக்கடியான சூழ்நிலையில் இந்த சங்கத்துக்கு உதவினார். இப்படி ஒரு தனிமனிதனின் தியாகத்தையும், ஏனைய பல முன்னணி நடிகர்களின் உழைப்பையும் தாங்கி இந்த மாபெரும் சங்கம் வளர்ந்தது.

    1972 வரை நடிகர் சங்கம் ஒரு கூரை வேய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் தேவை என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக முடிவு செய்து வங்கியில் ரூபாய் 22 லட்சம் கடன் வாங்கப்பட்டது. கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

    காலபோக்கில் நிரந்தர அல்லது தொடர்ந்த வருமானம் இல்லாத நிலையில், கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த தருவாயில் கூட, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவினார் மேலும் பலர், இயன்ற அளவு உதவி செய்து இந்த அமைப்பு சிறந்து விளங்க பாடுபட்டனர்.


    http://nadigarsangam.org/index.php/sifa/nigalvugal

    1971 வரை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஒரு கொட்டகை (SHED) மட்டும் இருந்தது. அங்கே சின்னதாக ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 1971ல் சிவாஜி கணேசன் தலைமை பதவியேற்று, புரட்சி தலைவர் 'பாரத்' பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழா நடத்தும் போது சங்கத்திற்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும், அதுவரை தம்பி சிவாஜி கணேசன் அவர்கள் தான் தலைவராக இருக்கவேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூடியிருந்த உறுப்பினர்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.

    சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராகவும், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் பொதுச் செயலாளராகவும், வி.கே.ராமசாமி அவர்கள் பொருளாளராகவும், பொறுப்பேற்று, சங்க கட்டிடம் கட்ட ஸ்டேட் வங்கியில் ரூ 18,00,000/- கடனாக பெறப்பட்டது. வங்கியில் கடன் வாங்கும் போது, வங்கி கடனை அடைக்க, மாதா மாதம் ரூ 8000/- மும், வருடத்திற்கு ஒரு முறை 'ஸ்டார் நைட்' நிகழ்ச்சி நடத்தி ரூ 1,00,000/- கொடுப்பதாகவும் எழுத்து மூலமாக கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் சங்க கடனை அடைக்க முடியாமல் நாளுக்கு நாள் வட்டியும், அசலும் அதிகமானது. வங்கியில் கடன் பெற்று இப்போது இடிக்கப்படும் முன்பு இருந்த கட்டிடத்தை கட்டினர். ஆகஸ்ட் மாதம் 1979 ல் "புரட்சி தலைவர்" முதலமைச்சர் ஆனவுடன் கட்டிடம் அவர் கையால் திறந்து வைக்க பட்டது.

    1979ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடனை அடைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. அரசு மூலம் அவரும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். இருப்பினும் கடன் அடைக்கப்படவில்லை. அசலுடன் வட்டி நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. ஏன் கடன் அடைக்கப்படவில்லை என்றால். வங்கி கடன் கட்டும் அளவுக்கு கட்டப்பட்ட கட்டிடத்தினால் வருமானம் வரவில்லை. வட்டியும் அசலும் கட்டாமல் கடன் வளர்ந்து வந்தது. 1,400 பேர் அமரக் கூடிய அரங்கம், பிரிவியு தியேட்டர் இருந்தும் வங்கி கடனை திருப்பி செலுத்த வருமானம் வரவில்லை.

    பின்னர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்தார். நடிகர் சங்க சொத்து தானமாக நடிகர் சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து அதில் நடிகர் சங்க நிலத்திற்கு நடிகர் சங்கத்திற்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை கண்டுபிடித்து, திரு. சிவாஜி கணேசன் அவர்களிடம் அதை தெரிவித்து, அந்த தான பத்திரத்தை பொதுக்குழு தீர்மானம் மூலம் ரத்து செய்து, நிலத்தை மீட்டார். அப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் போதிய வருமானம் வராததால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகை வளர்ந்து கொண்டே வந்தது.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    திரியை படிக்கும் பொதுமக்களே, உண்மைகளை புரிந்து கொண்டீர்களா?

    இனிமேலாவது பொய்யர்கள் புரட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தட்டும்.

    நாய்கள் குரைத்து சூரியனில் தூசு படியாது
    சத்தியத்தாய் பெற்றெடுத்த உத்தமத் தலைவனாம் எங்கள் புரட்சித் தலைவன் மீது என்றைக்கும் மாசு படியாது.
    காரிருளால் சூரியனை மறைக்க போமோ
    கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ
    சந்திரன்தான் வீதியிலே வீழ்ந்ததுண்டா
    ராமச்சந்திரனே உன்னை எதிர்த்தார் வாழ்ந்ததுண்டா?


    களங்கமில்லா தலைவனின் பெருமையை ஆதாரத்தோடு நிரூபித்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3603
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரைப் பற்றி அவதூறாக வந்த பொய் செய்தியை பொறாமையால் வயித்தெரிச்சல் கொண்டு பதிவிடுவது யார்? என்று ஞாயம் தெரிஞ்ச பொது மக்களுக்கு தெரியும்.

    ஸ்டேட் பாங்கியிலேயே, கடன் வாங்குவதற்காக நட்சத்திர இரவு நடத்தி பணத்தை கட்டுவோம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள் அப்போதைய நிர்வாகிகள். பொருளாளர் ராமசாமியும் சேர்த்து. அது புரட்சித் தலைவர் கொடுத்த உத்தரவாதாம் இல்லை. அவ்வாறு நட்சத்திர இரவு நடத்துவதாக பாங்கியில் தாங்களாகவே உத்தரவாதம் அளித்துவிட்டு பிறகு, ‘எம்ஜிஆர்தான் ஸ்டார் நைட்’ நடத்தச் சொன்னார் என்று ராமசாமிதான் பச்சையாக புளுகியிருக்கிறார்.

    பச்சையாக புளுகுவது யாரு? அதையும் எடுத்துப் பதிவிட்டு வக்காலத்து வாங்குவது யாரு? சிவப்பாக புளுகுவது யாரு? கருப்பாக புளுகுவது யாரு, என்றெல்லாம் பொதுமக்களுக்கு தெரியும்.

    சிவா... சிவா... ராமா... ராமா.. முருகா... முருகா..

    சாதாரண நடிகனா இருந்து தனது திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்து கலைஞர்களுக்கெல்லாம் பெருமை தேடித் தரும் வகையில் நாட்டுக்கே முதல்வராகி சிறப்பாக ஆட்சி செய்து ஏழைகளுக்கு உதவிய வள்ளலை, பொன்மனச் செம்மலையும் எல்லாரும் மதிக்க வேண்டும். எங்களை ஒண்ணும் யாரும் மதிக்க வேண்டாம்.. அவரை மதிக்கிறவங்களுக்கு நாங்களும் மதிப்போம்.

    பிராப்தம் பற்றிய பதிவு எங்கள் திரியில் வருவதற்கு முன்னாடியே, அங்கு திருச்சி தினமலர் பேப்பரில் மக்கள் திலகத்தை பற்றி கேவலமாக விமர்சித்து (யாரோ பாடகி அருகில் நிற்க கூட தகுதியில்லாதவர் என்றெல்லாம் அதில் ஒரு பொறாமை கொண்ட விச ஜந்து எழுதியுள்ளது) வந்த மொட்டை கடிதம் அந்த திரியில் வந்தது. பானுமதி பற்றிய அங்கு வந்த தினமணி பதிவிலும் மக்கள் திலகத்தை தவறாக விமர்சிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினைக்கு காரணம். எது முதலில் வந்தது என்று யார் வேண்டுமானாலும் தேதியை சரிபார்த்து கொள்ளலாம்.

  7. Thanks orodizli thanked for this post
  8. #3604
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    டிசம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

    தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959

    தாயின் மடியில் - 1964

    ஆசைமுகம் - 1965

    பெற்றாதான் பிள்ளையா - 1966

    ஒரு தாய் மக்கள் - 1971

  9. Likes orodizli liked this post
  10. #3605
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று மதுரை சென்ட்ரல் -
    ஒளி விளக்கு வசூல் 30000.

    தகவல் - அன்பு நண்பர் - ஆர் சரவணன்.

  11. Likes orodizli liked this post
  12. #3606
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    hi Vinoth


    photos and posters of our thalaivar

    superb

  13. #3607
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மாடறேட்டர் ரவிச்சந்திரன், வல்ல அல்லா மீது ஆணையாக நீதிக்கு தலைவணங்கியவரின் வழியிலே நாம் வந்தவர்கள். யாரையாவது தூற்றி நமது ஈடு இணையில்லா புரட்சித் தலைவர்க்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ‘நடிப்பின் கதை’ பதிவை எடுக்கும் சிரமத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை. நீதிக்கு தலைவணங்கி நானே தூக்கி விட்டேன்.
    ந்யாயத்துக்கு குரல் கொடுத்த நமது தெய்வத்தின் பக்தர்கள் செல்வகுமார், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.

  14. Thanks orodizli thanked for this post
  15. #3608
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணர் குடும்பத்துக்கு உதவிய வள்ளலுக்கு வள்ளல்

    கலைவாணர் மகன் பேட்டி.

    ----------------------------

    சினிமாவுக்கு போனா வாழ்க்கை சீரழிஞ்சிடும்னு அம்மா தடுத்தாங்க...

    ‘‘அப்பா கூட நான் இருந்த காலம் வெறும் மூன்று வருடங்கள்தான். ஆனாலும்
    இன்னிவரைக்கும் எங்களை வழிநடத்தறது அவர்தான்...’’ என்று உற்சாகமாக பேசுகிறார்
    நல்லதம்பி. பொறியியல் படித்துவிட்டு அரசுத் துறையில் உயர் பதவி வகித்த இவர்,
    இப்போது ஓய்வுபெற்ற பிறகு பேத்திகளுடன் காலத்தை இனிமையாக கழித்து வருகிறார்.

    இவரது அப்பா, வேறு யாருமல்ல. தமிழ்ச் சினிமாவின் முக்கிய ஆளுமையான கலைவாணர்
    என்.எஸ்.கிருஷ்ணன்தான். இவருக்கு நல்லதம்பி என்ற பெயர் வந்த கதையே சுவாரஸ்ய
    மானது. ‘‘அப்ப அறிஞர் அண்ணா எழுதின கதையை ‘நல்லதம்பி’ என்கிற பேர்ல அப்பா படமா
    எடுத்தாரு. மதுவிலக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வு குறித்த அந்தப் படம் சூப்பர்
    டூப்பர் ஹிட். படத்தைப் பத்தி ஒருநாள் அப்பாவும், அண்ணாவும் பேசிட்டு
    இருந்தாங்க.

    அப்பத்தான் நான் பிறந்த செய்தி அவங்களுக்கு கிடைச்சிருக்கு. உடனே அண்ணா,
    ‘நல்லதம்பி பொறந்துட்டான்’னு சொன்னார். அதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப
    சந்தோஷமாகிடுச்சு. அதையே என் பேரா வைச்சுட்டார்...’’ என்று பழைய சம்பவத்தை அசை
    போட்டவருக்கு தன் அப்பா குறித்து உரையாட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
    ‘‘நாகர்கோவில்தான் அப்பாவுக்கு சொந்த ஊர்.

    அஞ்சு வயசு வரைக்கும் அங்க என் சித்தப்பா வீட்லதான் வளர்ந்தேன். மாசத்துக்கு
    ஒருமுறை எங்களை பார்க்க அப்பா வருவாரு. அப்ப வீடே கலகலப்பா இருக்கும். ஒருமுறை
    அப்பா வந்த சமயத்துல பாட்டிய தேள் கொட்டிடுச்சு. எல்லாரும் பயந்து போய்
    அலறினோம். அதைக் கேட்டுட்டு அப்பா, கைல வேப்பிலை கொத்தோட வந்தாரு. தேள்
    கொட்டின இடத்துல பாட்டிக்கு மருந்து தடவி, வேப்பிலையால அடிச்சுகிட்டே ஏதோ
    மந்திரம் சொன்னாரு. கொஞ்ச நேரத்துல ‘எனக்கு சரியாகிடுச்சு’னு பாட்டி எழுந்து
    போயிட்டாங்க.

    உடனே அப்பாவோட சிநேகிதர், ‘உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே...
    அப்புறம் எப்படி மந்திரம் சொல்லி குணமாக்கின’னு கேட்டாரு. அதுக்கு அப்பா,
    ‘நான் எங்க மந்திரம் சொன்னேன்? அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதனால
    அவங்களை திருப்திப்படுத்த ‘நீ என்னை கடி... நான் உன்னை கடிக்கிறேன்’னு
    தொடர்ந்து முணுமுணுத்தேன். அது பார்க்க மந்திரம் சொல்றா மாதிரி
    தெரிஞ்சிருக்கு’னு சொன்னார்.

    இப்படி நிறைய சம்பவங்களை சொல்லிட்டே போகலாம்...’’ என்று சொல்லும்
    நல்லதம்பியின் பால்ய காலம் வறுமையில்தான் கழிந்திருக்கிறது.
    ‘‘இல்லாதவங்களுக்கு உதவறதுல அப்பாதான் பலருக்கு முன்னோடியா இருந்தார். நல்லா
    இருந்த காலத்துல வயிறார எல்லாருக்கும் சாப்பாடு போடுவார். ஆனா, தன்னோட கடைசி
    காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாரு. சொந்தமா அப்பா தயாரிச்ச படம் சரியா போகல. பெரிய
    அளவுல நஷ்டம் ஏற்பட்டுச்சு. ஆனாலும் தானம் செய்யறதை நிறுத்தலை.

    அப்பா காலமானதும் நாங்க நிர்கதியா நின்னோம். வறுமைக் கோட்டுக்கு கீழ எங்க
    குடும்பம் தத்தளிச்சது. அந்த நேரத்துல அப்பாவால முன்னுக்கு வந்த பலபேரு எங்களை
    கண்டுக்கவேயில்ல. அந்த வலி இப்பவும் மனசுல இருக்கு...’’ என்று
    உணர்ச்சிவசப்பட்ட நல்லதம்பி, எம்ஜிஆர் குறித்து பேசும்போது கண்
    கலங்குகிறார்.‘‘அப்பாவால வளர்ந்தவங்கள்ல எம்ஜிஆரும் ஒருத்தர். ஒரு இக்கட்டான
    சூழ்நிலைல அவர் தவிச்சப்ப, அப்பாதான் அம்மாவோட வளையலை கழட்டி அவர்கிட்ட
    கொடுத்தாரு.

    அந்த நன்றியை சாகற வரைக்கும் அவர் மறக்கலை. அப்பா மருத்துவமனைல இருந்த
    விவரத்தை கேள்விப்பட்டு எம்ஜிஆர் பார்க்க வந்தாரு. அப்ப அப்பாவோட நிலையை
    பார்த்தவர் யாரும் கேட்காமலயே ஒரு கட்டு ரூபா நோட்டை அப்பாவோட தலையணைக்கு கீழ
    வைச்சுட்டு போனாரு. அப்பாவோட இழப்பு அம்மாவைத்தான் ரொம்ப பாதிச்சது. கடன்
    கழுத்தை நெறிச்சது. அதனால எல்லா சொத்தையும் வித்தோம்.

    பெரிய மாளிகைல மகாராணி மாதிரி வாழ்ந்த அம்மா, வாடகை வீட்டுக்கு குடிவந்தாங்க.
    நாகர்கோவில்ல இருந்த வீடும் ஏலத்துக்கு வந்தது. விஷயம் தெரிஞ்சதும் அந்த
    வீட்டை எம்ஜிஆர் வாங்கி, அப்படியே எங்ககிட்ட கொடுத்துட்டார். இப்ப அந்த வீட்ல
    எங்க பெரியம்மா குடும்பம் வாழ்ந்துட்டு வர்றாங்க. அப்பா தமிழ்ச் சினிமாவுல
    ஜாம்பவானா இருந்தாரு. ஆனா, அவருக்கு அப்புறம் அதே சினிமா எங்களை
    கைவிட்டுடுச்சு. இதை எங்கம்மாவால தாங்கிக்க முடியலை.

    அதனால எங்க யாருக்குமே சினிமா ஆசை வரக் கூடாதுன்னு கட் அண்ட் ரைட்டா
    சொல்லிட்டாங்க. ‘நல்லா படிங்க. அது மூலமா கிடைக்கிற வேலைல சேருங்க. சந்தோஷமா
    வாழுங்க. சினிமா வாழ்க்கை உங்கப்பாவோட போகட்டும். அது பணமும் கொடுக்கும்.
    அதளபாதாளத்துலயும் தள்ளிவிடும்’னு எங்க மனசுல பதிய வைச்சாங்க.அதே சமயம்,
    எங்களை காப்பாத்தணுமே... அதனால ஒரு படத்துல விதவைத் தாயா நடிச்சாங்க.

    இதைப் பார்த்துட்டு எம்ஜிஆர், ‘ஐயா கூட நீங்க நடிச்சதை பார்த்துப் பழகின
    கண்களுக்கு தனியா உங்களை திரைல பார்க்கப் பிடிக்கலை’னு சொன்னார். உடனே அம்மா,
    ‘நான் நடிச்சு சம்பாதிக்கலைனா என் ஏழு பசங்களையும் யார் காப்பாத்துவாங்க’னு
    கேட்டாங்க. அப்ப எம்ஜிஆர், ‘அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கறேன்’னு சொன்னார்.
    அதை கடைசி வரைக்கும் நிறைவேற்றினார்.
    ஒருவகைல எங்க குடும்பத்தை அவர் தத்து எடுத்துகிட்டார்னே சொல்லலாம்.

    எங்களோட எல்லா தேவைகளையும் நாங்க கேட்காமயே அவர் நிறைவேற்றினார். நம்ப
    மாட்டீங்க... சரியா முதல் தேதி ஆச்சுன்னா, டான்னு அந்த மாச செலவுக்கு
    அவர்கிட்டேந்து எங்களுக்கு பணம் வந்துடும். ஒரு மாசம் கூட இது தவறினதில்ல.
    நாள், கிழமைனா புதுத் துணிங்க எங்களை தேடி வரும். நாங்க ஆசைப்பட்ட படிப்பை
    எந்தக் கேள்வியும் கேட்காம படிக்க வைச்சதும் அவர்தான். கல்யாணம் பண்ணி
    வைச்சதும் அவர்தான்.

    ஆனா, அவர் உதவி செய்யறதுனாலயே நாம ஆடம்பரமா வாழக் கூடாதுன்னு அம்மா கண்டிப்பா
    சொல்லிட்டாங்க. எளிமையாதான் வாழ்ந்தோம். அண்ணன் தலையெடுக்கிற வரைக்கும்,
    அதாவது, 12 வருடங்கள், நாங்க தலைமறைவாதான் இருந்தோம். யார்கிட்டயும் நாங்க
    ‘கலைவாணரோட வாரிசுங்க’னு சொன்னதே இல்ல. அதுக்கு எங்க வறுமையான நிலையும் ஒரு
    தடையா இருந்தது. மத்தவங்க அனுதாபத்தோட பார்க்கிற பார்வையை சந்திக்க எங்கம்மா
    தயாரா இல்ல...’’ என்று சொல்லும் நல்லதம்பி, வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று
    குறிப்பிடு வது மதுரத்தைதான்.

    ஆனால், இவரை பெற்றவர், மதுரத்தின் சகோதரி. என்றாலும் அனைவரும் ஒன்றாகவே
    வாழ்ந்ததால், மதுரத்தையே அம்மா என்று அழைக்க ஆரம்பித்ததாக குறிப்பிடுகிறார்.
    பசுமரத்தாணி போல் இவர் மனதில் பதிந்த விஷயம், எம்ஜிஆர் சொன்ன அறிவுரைதான்.
    ‘‘அந்தக் காலத்துல இன்ஜினியரிங் படிக்கிறது சாதாரண விஷயமில்ல. பொறியியல்
    கல்லூரில சேர விரும்பினேன்.

    அதுக்கு ரூபாய் மூன்றாயிரம் தேவைப்பட்டது. எம்ஜிஆரை பார்க்கப் போனேன்.
    விஷயத்தை சொன்னதுமே அந்தப் பணத்தை எடுத்து கொடுத்தாரு. கூடவே ‘உங்கப்பா
    எவ்வளவு சம்பாதிச்சார்... எவ்வளவு வரி கட்டினார்னு தெரியுமா’னு கேட்டார்.
    நான், ‘தெரியாது’னு சொன்னேன். ‘வரிப் பணமா மட்டுமே உங்கப்பா ஒன்றரை கோடி
    ரூபாய் கட்டியிருக்கார். பணம் இன்னிக்கி வரும். நாளைக்கு போகும்.

    ஆனா, கல்வி அப்படியில்ல. அது எப்பவும் நிரந்தரம். அது மட்டும்தான் என்னிக்கும்
    சோறு போடும். உன்னை காப்பாத்தும்’னு சொன்னார். அதுதான் உண்மை. இதை
    அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். படிச்சு முடிச்சதும் நல்ல வேலை கிடைச்சது.
    இதோ இன்னிக்கி நான் நல்லா இருக்கேன். என்னோட மூணு பொண்ணுங்களையும் நல்லா
    படிக்க வைச்சேன்.

    இப்ப அவங்களும் கை நிறைய சம்பாதிக்கிறாங்க. மாசாமாசம் பென்ஷன் வாங்கறப்ப
    எல்லாம் எம்ஜிஆர் சொன்னதுதான் நினைவுக்கு வரும்...’’ சொல்லும்போதே
    நல்லதம்பியின் குரல் உடைகிறது. அழுகையை கட்டுப்படுத்துவதற்காக சில நிமிடங்கள்
    மவுனமாக இருந்தவர், தொடர்ந்தார்.‘‘படிப்பு மட்டுமில்ல, எங்க திருமணத்தையும்
    எம்ஜிஆர்தான் நடத்தி வைச்சாரு. எங்கக்காவுக்கு நூறு சவரன்ல நகை போட்டு பெரிய
    மாநாடு மாதிரி கலைஞர் தலைமைல கல்யாணம் செஞ்சு வைச்சாரு.

    அதுக்கு அப்பா கூட பிறந்த அக்கா, தங்கைங்க எல்லாரும் வந்திருந்தாங்க. ஆனா,
    யாருக்குமே கட்டிக்க நல்ல புடவை இல்ல.அதைப் பார்த்துட்டு ஜவுளிக் கடையையே
    எம்ஜிஆர் வரவழைச்சாரு. எல்லாருக்கும் பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்தாரு.
    ‘கலைவாணர் வீட்டு விழாவுல அவரோட பிறந்தவங்க பட்டுச் சேலைதான் கட்டணும்’னு
    அடிச்சு சொல்லிட்டார்.

    ஒரே வார்த்தைல சொல்லணும்னா, எம்ஜிஆர் இல்லைனா எங்க குடும்பமே இல்ல. இன்னிக்கி
    நாங்க எல்லாருமே நல்லா இருக்கோம். என்னையும், அண்ணனையும் இன்ஜினியரிங் படிக்க
    வைச்சாரு. பெரிய அக்காவை நல்ல இடத்துல கட்டி கொடுத்தாரு. இரண்டாவது அக்காவை
    பட்டதாரியா ஆக்கினாரு. கடைசி தங்கைய டாக்டருக்கு படிக்க வைச்சாரு. என் மனைவி
    கல்லூரி முதல்வர். பெரிய அண்ணனோட மக ரம்யா, இப்ப சினிமாவுல பின்னணி பாடறாங்க.
    தங்கையோட மக அனுவர்த்தன், சினிமாவுல ஆடை அலங்கார நிபுணர்.

    என்னோட இரண்டு மகள்கள் வெளிநாட்டுல செட்டிலாகியிருக்காங்க. மூணாவது பொண்ணு
    வெப் டிசைனரா சென்னைல இருக்கா. இப்படி எங்க குடும்பமே இன்னிக்கி நல்லா
    இருக்கு. நல்ல நிலைல இருக்கு. இதுக்கு காரணம் அப்பா செஞ்ச தான தர்மம். அதுதான்
    எம்ஜிஆர் வடிவத்துல எங்களை காப்பாத்தி யிருக்கு...’’ என்று சொன்னவர், தன்
    பெரிய அண்ணனின் திருமணத்தை
    மறக்கவே முடியாது என்கிறார்.

    ‘‘கலைஞர் தலைமைல கல்யாணம்னு பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. ஊர் முழுக்க
    கொடுத்தாச்சு. ஆனா, கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னாடி எம்ஜிஆரை
    கட்சியை விட்டு நீக்கிட்டாங்க. என்ன செய்யறதுனு தெரியலை. அண்ணன் தயக்கத்தோட
    எம்ஜிஆரை போய் பார்த்தார். அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘குறிப்பிட்ட
    நாள்ல உன் கல்யாணம் நடக்கும். நாங்க ரெண்டு பேரும் வருவோம்’னு சொன்னார். அதே
    மாதிரி கலைஞர் தலைமை வகிச்சாரு.

    எம்ஜிஆர் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைச்சாரு. அரசியல் வேற, நட்பு
    வேறங்கறதுக்கு இதை விட வேற என்ன உதாரணம் வேணும் சொல்லுங்க..?’’ என்று கேட்கும்
    நல்லதம்பி, தன் அப்பாவின் நினைவுகளை இப்போது தன் பேரக் குழந்தைகளுக்கு கடத்தி
    வருகிறார்.

    பகிர்ந்தவர் : நாகூர்கனி காதர் மொஹைதீன் பாஷா

    --
    https://groups.google.com/forum/#!to...ai/sszhPimOrKM

  16. Thanks orodizli, siqutacelufuw thanked for this post
    Likes orodizli, siqutacelufuw liked this post
  17. #3609
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by shahriyar akbar View Post
    மாடறேட்டர் ரவிச்சந்திரன், வல்ல அல்லா மீது ஆணையாக நீதிக்கு தலைவணங்கியவரின் வழியிலே நாம் வந்தவர்கள். யாரையாவது தூற்றி நமது ஈடு இணையில்லா புரட்சித் தலைவர்க்கு பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ‘நடிப்பின் கதை’ பதிவை எடுக்கும் சிரமத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை. நீதிக்கு தலைவணங்கி நானே தூக்கி விட்டேன்.
    ந்யாயத்துக்கு குரல் கொடுத்த நமது தெய்வத்தின் பக்தர்கள் செல்வகுமார், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.
    இனிய நண்பர் அக்பர் அவர்களே

    புரிதலுக்கு நன்றி !

    உங்களுடைய சிறந்த பண்பிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் !

    கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கேற்ப உள்ளது உங்களது செயல் !

    உங்களிடம் நான் பொறுமை காக்கும்படி விண்ணப்பித்தது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

    மீண்டும் ஒருமுறை உங்களுடைய பண்பிற்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் !

    ஜசக் அல்லாஹு க்ஹைர் !

    rks

  18. #3610
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like


    கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.
    சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, கையொப்பமிடுவதை கண் டிருக்கிறோம்.
    ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பவழ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த போது, வழக்கம் போல் பள்ளி நிர்வாகத்தினர், பார்வையாளர் பதிவேட்டை எம்.ஜி. ஆரிடம் கொடுத்தனர். அப்போது, மேடையில் சக அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, அரங்கநாயகம் ஆகியோர் வாழ் த்துரை வழங்கி கொண்டிருந்தனர்.

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •