Page 134 of 401 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1331
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1333
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1334
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes mgrbaskaran liked this post
  7. #1335
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1336
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellrqe thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  10. #1337
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திரத்தில் பல மாற்றங்கள் , புரட்சிகள் , அதிசயங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் நிகழ்கின்றன . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் அனுபவத்தில் நேரில் கண்ட உலகமே வியக்கும் புரட்சி களம் கண்ட நம் இதயதெய்வம் மக்கள் திலகம்
    எழுப்பிய ''உரிமைக்குரல் '' அக்டோபர் -1972..
    சரித்திரம் தொடரும் ....

  11. Likes Russellrqe liked this post
  12. #1338
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மக்கள் திலகத்தின் பல்வேறு பதிவுகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

  13. #1339
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பல்லவன் பல்லவி பாடட்டுமே …

    COURTESY .கவிஞர் காவிரிமைந்தன்.

    கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.

    டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர் சொன்ன உண்மை தெரிந்தது.
    எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின!

    பல்லவன் பல்லவி பாடட்டுமே

    ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
    ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே …
    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…

    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாளப் பேதங்கள் ஆடலில் விளங்க
    ஹோ… ஹோ…ஹோ… ஹோய்…
    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாள பேதங்கள் ஆடலில் விளங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
    தத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே

    ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
    ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …

    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே

    ஹோய் ஆரிரோ …ஹுஹு …ஆரிரோ ஹுஹு…
    ஆரிரோ ஓ….
    ஆரிரோ ஹுஹு… ஆரிரோ ஹுஹு…
    ஆரிரோ ஓ….

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே


  14. #1340
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டு… ஒரு பாட்டு …

    courtesy -கவிஞர் காவிரிமைந்தன்

    பாட்டு ஒரு பாட்டுபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    பாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல்! ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா!

    அப்படி என்ன பாட்டு? கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …

    இசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…

    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு

    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு

    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
    இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •