Page 54 of 401 FirstFirst ... 444525354555664104154 ... LastLast
Results 531 to 540 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #531
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "

    அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்

    "நான் பேசித்தான் தீர வேண்டும் ......"

    நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .

    நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
    நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---

    எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..

    நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---

    உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .

    இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #532
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு பாஸ்கர்

    உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkb மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து

    உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .

    அன்புடன்
    ரவி
    Last edited by g94127302; 16th August 2015 at 08:41 AM.

  4. Likes KCSHEKAR, Subramaniam Ramajayam liked this post
  5. #533
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
    மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Subramaniam Ramajayam liked this post
  7. #534
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தியத் திருநாட்டின் விடுதலை நாளாகட்டும், குடியரசு நாளாகட்டும், தேச பக்தி, விடுதலைப் போராட்டம், தியாகிகள் என்று எந்த அம்சமென்றாலும் நினைவுக்கு வரக்கூடியவை நடிகர் திலகத்தின் பங்களிப்பினால் மேன்மை பெற்ற தமிழ்த்திரைப்படங்களே.

    இதை மேலும் உணர்த்தும் வண்ணம்

    தற்பொழுது முரசு தொலைக்காட்சியில் ரத்தத்திலகம் திரைக்காவியமும்



    சன் லைஃப் தொலைக்காட்சியில் பாரத விலாஸ் திரைக்காவியமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #535
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy Face Book - Sivaji Club of India !

  9. Likes Georgeqlj, KCSHEKAR, sivaa liked this post
  10. #536
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இன்றைய தலைமுறையினர் நடித்த திரைப்படங்கள் சிலவற்றை நாம் கண்டிருக்கிறோம். அதன் போஸ்டர் பார்திரிகிறோம்...அதில் நாயகன் ஒரு இயந்திர துப்பாகியுடன் சற்றே குனிந்து தமிழ் தாயை பாதம் தொடுவதுபோல ஒரு சில போஸ்டர் பார்திரிக்கிறோம்...

    அதற்க்கு முன்னோடி......இதோ ...நம் நடிகர் திலகத்தின் இந்த போட்டோ !

    கையில் இயந்திர துப்பாக்கி இல்லை...ஆனால் அந்த போஸ்..இதோ !!




  11. Likes Georgeqlj, Russellmai, KCSHEKAR, sivaa liked this post
  12. #537
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜ் டிஜிட்டல் பிளஸ் இப்போது வழங்குகிறது நடிகர் திலகத்தின் நடிப்பில் 2012இல் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பிரளயம் ஏற்படுத்தி ...சத்யம் மற்றும் எஸ்கேப் முல்டிப்லெக்ஸ் அரங்கில் மூன்று திரை அரங்குகளில் 100 நாட்கள் கடந்து சத்யம் முல்டிப்லெக்ஸ் அரங்கில் 155 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ஒரே டிஜிட்டல் காவியம் கர்ணன் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !


  13. Likes Georgeqlj liked this post
  14. #538
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  15. #539
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    செய்நன்றிக்கடன் ( Gratitude ) :

    பதிவு 1

    நம் பிறந்தது முதல் இந்த உலகத்தை விட்டு செல்லும் வரை பலருக்கு நன்றி சொல்ல கடன் பட்டுள்ளோம் - நம்மை பெற்றவர்களுக்கு , மனைவிக்கு , நம் குழந்தைகளுக்கு ,நம்முடன் வளரும் உடன் பிறப்புக்களுக்கு , நம் ஆசிரியை , ஆசிரியர்களுக்கு , உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு , அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்கு , இன்னும் கண்களுக்கு தென் படாமல் நம் வாழ்க்கையில் நாட்டம் கொள்பவர்களுக்கு - சொல்லிக்கொண்டே போகலாம் - முடிவில்லாத ஆனால் இனிப்பான செயல் - மறந்துவிடக்கூடிய பல சமாச்சாரங்களில் இதுவும் முக்கியமான ஒன்று - நன்றி என்று உச்சரிக்கும் பொழுது உடனே நினைவில் வருவது நாய் தான் - எந்த மனிதனும் நினைவில் வருவதில்லை . சிலர் வருகிறார்கள் - அவர்களை பற்றிய ஒரு சின்ன தொகுப்பு இது - ஒரு புதிய கண்ணோட்டத்தில் -----

    ஒரு சிறுவன் ஒரு ஓடையில் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான் - பல மீன்கள் அவனின் திறமை மூலம் அவனிடம் வந்து சரணடைந்தன . ஒரு வழிப்போக்கன் அந்த சிறுவனின் திறமையை மிகவும் ரசித்தான் - இந்த சிறு வயதில் என்ன திறமை !! - பலருக்கும் கிடைக்காத மீன்கள் இவனிடம் மிகவும் எளிதாக தஞ்சம் அடைகின்றதே என்று வியந்த வண்ணம் அந்த சிறுவனிடம் சென்றான் - அவனிடம் பேச்சுகொடுத்தான் " தம்பி - உன் திறமை என்னை வெகுவாக வியக்க வைத்தது - ஒருவரின் உதவியும் இல்லாமல் தனியாக மீன் பிடிக்கிறாயே - எப்படி இந்த திறமையை வளர்த்துக்கொண்டாய் ? " என்றான்

    " ஐயா ! மிக்க நன்றி என்னை புகழ்வதற்கு - ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம் தேவை - "ஒருவரின் உதவி இல்லாமல் என்று சொன்னீர்கள் - அது தவறு - ஒருவரின் உதவியுடன் தான் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறேன் ... "

    " சுற்றும் முற்றும் பார்த்த அந்த வழிப்போக்கன் அங்கே யாருமே இல்லாததைப்பார்த்து " தம்பி , ஏன் பொய் சொல்கிறாய் - இங்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லையே என்னைத்தவிர " என்றான் .

    " ஐயா ! இதோ பாருங்கள் - இந்த ஹூக் யை பாருங்கள் , அதில் கட்டப்பட்டுள்ள பைட் ( சிறு புழு ) யைப்பாருங்கள் - இதன் உதவியுடன் தான் மீன் பிடிக்கிறேன் - யாருமே பிறர் உதவி இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது - நம்மில் பலர் இதை ஒப்புக்கொள்வதில்லை " என்றான் அந்த சிறுவன் - வாயடைத்துப்போனான் அந்த வழிப்போக்கன் .

    பதிவு 2.

    பாரதப்போர் முடிவடைந்தது - பாசறையில் தூக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தான் அர்ஜுனன் - சொல்ல முடியாத துக்கம் - நிம்மதி இல்லாத வெற்றி !! தூக்கம் வர மறுத்தது . கண்ணன் அவனின் வேதனையை புரிந்துக்கொண்டு அவனிடம் வந்தான் .

    " அர்ஜுனா வெற்றியின் உச்சியில் இருக்கிறாய் - சந்தோஷமாக இல்லாமல் உன் முகம் ஏன் இத்தனை வேதனை பிடுங்குகிறது ? " எல்லாம் உணர்ந்தவன் எதுவுமே தெரியாதவன் போல வினாவினான் .

    " கண்ணா - நாம் ஜெயித்தது உண்மை ! ஆனால் இந்த வெற்றி கர்ணனுக்குத்தான் செல்லவேண்டும் - என்னை தம்பி என்று தெரிந்தும் என்னுடன் போர் புரிந்தான் - அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு அழகாக அற்புதமாக போர் செய்திருக்க முடியுமா ? உன் கபடம் மூலம் தானே நான் அவனை வென்றேன் ! - அவன் செய்த தர்மம் அவனை காத்தும் உன் தந்திரத்தால் அவனை வீழ்த்தினேன் - இது வெற்றியா கண்ணா ? இதனை நான் கொண்டாட வேண்டுமா ?? "

    உலகை வென்றவன் சிரித்தான் .. " அர்ஜுனா நான் உனக்கு சொன்ன கீதை முழுவதும் கர்ணனுக்கு சொல்லியிருக்க வேண்டும் - நான் சொல்லி நீ இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை - நான் சொல்லாமல் கர்ணன் புரிந்துகொண்டான் .. அவன் செய்த தர்மத்தை விட அவனின் செய்நன்றி குணம் அவனை உன்னை விட புகழ் உள்ளவனாக ஆக்கியது - உலகத்தில் கங்கையை விட புனிதமானது இந்த செய்நன்றி குணம் தான் - இது இல்லாதவன் வாழ்ந்தும் ஒரு உபயோகமும் இல்லை - இதை மறந்தவன் என்னை மறந்தவன் - நான் சொன்ன கீதையை புரிந்துக்கொள்ளாதவன் .

    பதிவு 3.

    நம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு - நன்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது - இருந்தாலும் பிறகு சொல்லிக்கொள்ளலாம் , நேரம் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள் - எப்ப எப்ப முடியுமோ அப்ப அப்ப உங்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் - மனைவியோ , நம் குழந்தைகளோ , நம்மை பெற்றவர்களோ , நண்பர்களோ , நம் வாழ்வில் அக்கறை காட்டிய , காட்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் . உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை நன்றிக்கடன் செய்து முடிக்கும் வரை ....

    பதிவு 4


    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது..


    ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.


    நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.


    தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


    எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    நானும் உன் பழி கொண்டேனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
    மன்னவர் பனி ஏற்கும்
    கண்ணனும் பனி செய்ய
    உன்னடி பணிவானடா கர்ணா..
    மன்னித்து அருள்வாயடா
    கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
    வஞ்சகன் கண்ணனடா
    கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
    வல்லவன் வகுத்ததடா
    கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா.













    இந்த பதிவை படித்த உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    ரவி
    Last edited by g94127302; 16th August 2015 at 08:41 AM.

  16. Likes Georgeqlj, Russellmai, KCSHEKAR, sivaa liked this post
  17. #540
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
    மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.
    இந்த இருவரும் அல்லாமால், பதிவுகளை படிக்கும் உண்மை தெரியாத மக்களுக்கு பொய் செய்தி மெய் செய்தி என்ற நினைப்பு வராமல் இருக்கவேண்டும் அல்லவா....அகவே நாம் நம் கடமையை செய்வதில் தவறில்லை.

    கடமையை செய்யாமல்...காரணம் சொல்லி தட்டிகழிப்பது முறையும் அல்ல !

  18. Likes sss liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •