Page 43 of 401 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #421
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    85 ஆண்டுகள் தமிழ் சினிமா வரலாற்றில் தமிழகத்தில் இன்றைய தினம் வரை அதிக திரையருங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட
    படம் நடிகர்திலகத்தின் 200 ஆவது படம் திரிசூலம்!
    தமிழ்நாட்டில் எட்டு திரைஅரங்குகளில் வெள்ளிவிழா கண்டது!
    சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
    மதுரை - சிந்தாமணி
    திருச்சி - பிரபாத்
    கோவை - கீதாலயா
    சேலம் - ஓரிஎண்டல்
    வேலூர் - அப்சரா
    வேலூரில் இன்று வரை வேறு எந்த படமும் வெள்ளிவிழா கண்டதில்லை !
    எட்டு திரை அரங்கு களும்
    1000 seats க்கு மேல் capacity கொண்ட பெரிய திரைஅரங்குகள்!
    எல்லா வற்றிலும் திரிசூலம் ரெகுலர் காட்சிகளில் ஓடி வெற்றி கண்டது!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #422
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    85 ஆண்டுகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் இன்றுவரை அதிக படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தவர் சிவாஜியே!
    1952 முதல் 1988 வரை 275 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்துள்ளார்!
    36 வருடங்களில் 275 படங்கள்!
    வேறு எந்த நடிகரும் இதில் பாதி அளவு கூட கதாநாயகனாக தமிழில் நடித்ததில்லை!
    குறிப்பாக 1975 க்கு பிறகு கதாநயகனாக நடிக்க ஆரம்பித்து இன்றும் கதாநாயகநாக நடித்து கொண்டிருக்கும் சில நடிகர்கள்
    40 வருடங்கள் ஆகியும் இன்னும் தமிழில் 100 படங்களை கூட தொடவில்லை!
    சிவாஜியின் அசுரவேக சாதனையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்!
    நன்றி !
    சிவாஜியின் தனிபெரும் சாதனைகள் தொடரும் ..

  4. #423
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hero to zero not uncommon.....but HERO FOREVER....HERO OF HEROES! NT alone!!
    ஹீரோக்களின் ஹீரோ நடிகர்திலகம்!
    உலக திரைச் சரித்திரத்தில் எந்த ஒரு கதாநாயகனும் எடுத்தவுடன் உச்சகட்டப் புகழை எட்டிப் பிடிக்க முடிந்ததில்லை. உலகின் மிகப்பெரிய ஹீரோக்கள் வரிசையில் வருபவர்கள் சார்லி சாப்ளின், ஹம்ப்ரி போகார்ட், கேரி கிராண்ட், ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி, மார்லன் பிராண்டோ, கிரகரி பெக், புரூஸ் லீ.....
    யாருமே ஒரே இரவில் நடிகர்திலகம் நடத்திக் காட்டிய மந்திர நிகழ்வான நட்சத்திர நாயகர் அந்தஸ்தை எட்டிப் பிடித்ததில்லை! சிறு வேடங்களில் தோன்றி படிப்படியாக வளர்ந்து ஆறேழு வருடங்களுக்குப் பிறகே மக்கள் மனதில் ஒரு இனிமையான நிலையான வரவேற்பைப் பெற முடிந்தது !
    நடிப்பிலக்கணத்தின் தொல்காப்பியராக நடிப்பின் அடியும் முடியும் கண்டிட இயலாத விசுவரூபதாரியாக ஒரே படத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் கலைக்குரிசிலாம் நடிகர்திலகம் மட்டுமே !

    படிப்படியாக ஹீரோ ஸ்தானத்தை அடைந்தவர்கள் அந்த புகழ்த் தேனை அருந்துவது சொற்பகாலமே மீண்டும் படிப்படியாக இறக்கம் கண்டு வில்லன் குணசித்திர நடிகர் காமெடியன் துணை நடிகர் என்றெல்லாம் இறக்கமடைந்து இறுதியில் ஜீரோ ஆனவர்களே அதிகம் ஹீரோ டு ஜீரோ சகஜமே !! ஆனால் அமரத்துவம் அடைந்த பின்னரும் மக்களின் இதய சிம்மாசனத்தில் தனது ஹீரோ ஸ்டேட்டசை இக்கணம் வரை பசுமரத்தாணி போலப் பதித்திட்ட நடிகர்திலகமே ஹீரோக்களின் ஹீரோ என்ற சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிக் கலைஞர் !
    பாகுபலி புயல் கரை கடக்கும் நேரத்தில் நமது மகாபலி தென்றலாம் கட்டபொம்மனாரை வரவேற்றிட அத்தப் பூக்கோலமிட்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம் !

    Last edited by sivajisenthil; 12th August 2015 at 02:48 PM.

  5. #424
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயில்:

    விசிட்டர்ஸ் ரூம் .
    வலையினால் ஆன சிறைக்கம்பிகளுக்குபின்னால் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.வெளியே இந்தப்பக்கம் அந்தப்பெண்.விசும்பல்.அழாதம்மா,அம்மா அழாதேம்மா என்று சமாதானப்படுத்துகிறார்.அழுது கொண்டே, அப்பாஇந்தக் கல்யாணம் தேவைதானா அப்பா என்கிறார்அந்தப் பெண்.அம்மா இந்த வீட்டுக்கே நீ குத்து விளக்கு மாதிரி,எல்லாமே நீ தானம்மாஎன்கிறார்.நான்தான் அழிஞ்சு போயி கருகி நின்கிறேனே என்கிறார் அந்தப்பெண். அப்படியெல்லாம் சொல்லாதம்மாஎன்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சமாதானப்படுத்துகிறார்.பிறகு அந்தப்பெண் தனக்கு ஆசி கூறுமாறு கேட்க சிறைக்கம்பிகளுகளுக்கு பின்னேயிருந்து அழுகையும் ஆனந்தக்கண்ணீராயுமாய்வாழ்த்துகிறார்.

    வீடு:

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆட்கள் வருகிறார்கள் தங்கையை அதற்கு ஆயத்தம் செய்யுமாறு அம்மாவிடம் அண்ணன் சொல்கிறார்.அம்மாவும் படுக்கையில் இருக்கும் பெண்ணை எழுப்ப,அவள் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடக்கிறாள்.கதறல்கள்.பெண்ணின் உடல் நடுக்கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறது.மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர்.அதிர்ந்து பின் கொண்டு வந்த மலர்மாலையை உடலுக்கு வைத்துவிட்டு நகர்கின்றனர்.

    மயானம்:
    மகளின் உடலுக்கு கொள்ளி வைக்க சிறையில் இருந்து தந்தையை போலீஸ்
    ஜீப்பில் அழைத்து வருகிறது.சிதையில் கிடத்தி வைக்கப்பட்ட உடலை பார்த்து கதறி துடிக்கிறார்.

    ********* ★*********************************
    இந்தக் காட்சி மனதைகனக்கவைக்கிறதே.
    அவளின் மரணத்துக்கு காரணம் என்ன?அவர் ஏன் சிறையில்?அவர் செய்த குற்றம் தான் என்ன?

    FLASHBACK


    ராஜசேகர் S.P
    கத்திவீச்சு விழிகள்,அது குற்றவாளிகளுக்கு.
    கருணையையும் காட்டும்,அது
    எளியவர்களுக்கு.
    So
    MR ராஜசேகர்
    கருணையும் கம்பீரமும் கலந்த பண்புகளைக் கொண்டவர்.கடமையில் பந்தம்,பாசம்.,சொந்தம் எதுவும் பார்க்கக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாயிருப்பவர்.
    ராஜசேகரின் குடும்பம் ஒரு ஆலயம் போன்றது.அன்பான கனிவான மனைவி.
    இரு மகன்கன்.மூத்தவன் வக்கீல்.பெயர் தியாகு.இளையவன் சங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரே மகள் சீதா.ராஜசேகரின் தன் மகள் மேல் உயிரையே வைத்திருக்கிறார்.சந்தோசமாக
    சென்று கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

    இந்த நிலையில்,

    தீப்பொறி கோவிந்தன் என்பவன் ரௌடி.சைமன் அலெக்ஸாண்டர் என்பவனின் தூண்டுதலால்,
    அவன் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்து கொண்டிருக்கிறான்.அவனை கைது செய்து விசாரணை செய்யும்போது அவனிடமும் நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து அவனை நல்ல பாதைக்கு திருப்பி விடுகிறார்.
    இதற்கிடையில் தீப்பொறி கோவிந்தனின் சிறு வயது மகன் ராஜசேகரின் வீட்டிற்கு சென்று தன் தந்தையை விடுவிக்குமாறு அவர் மனைவியிடம் அடம் பிடிக்கிறான்.

    இதன்பின் அலெக்ஸாண்டர் தீப்பொறி கோவிந்தனை ஜாமீனில் எடுப்பதற்காக ராஜசேகரை சதிக்கிறான்.அப்போது பல வருடங்களுக்கு முன் தன்னால் பிடிக்கப்பட்டு பின் அவருடைய கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடிய கைதி என்று ராஜசேகருக்கு தெரிய வருகிறது.தீப்பொறி கோவிந்தனை தான் ரீலீஸ் செய்து விட்டதாக வும்இனிமேல் அவன் தவறான காரியங்களை செய்யமாட்டான் என்று ராஜசேகர் கூற அவர் மேல் வன்மம் கொண்டு எச்சரிக்கையும் செய்கிறான் அலெக்ஸாண்டர்.

    ராஜசேகரும்அவர் குடும்பமும் தன்னிடமும் தன் மகனிடமும் காட்டும் பரிவு தீப்பொறி கோவிந்தனை நல்லவன் ஆக்குகிறது. ராஜசேகர் மேல்
    மிகுந்த மரியாதை உண்டாக்குகிறது.


    தியாகு ஒரு பெண்ணை காதலிக்கிறான்.அந்த பெண் அலெக்ஸாண்டருக்கு சொந்தமான ஓட்டலில் அவனுடைய ஆட்களால்
    மானபங்கப்படுத்தும் வேளையில்தியாகு வந்து காப்பாற்றி விடுகிறான்.அது அலெக்ஸாண்டருடைய ஓட்டலாதலால்p அவன் கைது செய்யப்படுகிறான்.ஜாமீன் மறுக்கப்படுகிறது.இதுவும் அலெக்ஸாண்டரை ராஜசேகர் மேல் கோபம் கொள்ள வைக்கிறது.

    ராஜசேரின் மகள் சீதா கோவிந்தனின் மகனுடன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது அலெக்ஸாண்டரின் ஆட்கள் சீதாவை கடத்திச் செல்கின்றனர்.கோவிந்தனின் மகன் இந்த விஷயத்தை ராஜசேகருக்கு தெரிவிக்கிறான்.மகளை காப்பாற்றுவதற்காக காரில் ராஜசேகர் விரைந்து செல்கிறார்.அதற்குள் அலெக்ஸாண்டர் சீதாவை கெடுத்து விடுகிறான்.மயக்கத்தில் இருக்கும் அவளை எங்காவது கொண்டு போட்டு விடுமாறு கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வரும் சமயத்தில் ராஜசேகர் உள்ளே நுழைகிறார்.அலெக்ஸாண்டர் அவரைப் பார்த்ததும் மறைந்து கொள்கிறான்.அறைக்குள் வரும் ராஜசேகர் அதிர்கிறார்அலெக்ஸாண்டரின் கட்டளைப்படி அவளை தூக்கி செல்ல அவனுடைய உதவியாள் முயற்சி செய்து கொண்டிருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்து ராஜசேகர் ஆவேசம் கொண்டு அவனை அடித்து பின் கையில் கிடைக்கும் பாட்டிலால் அவனை குத்து கொன்று விடுகிறார்.மகளை எழுப்பி ஆறுதல்படுத்துகிறார்.உன்னை நாசம் செய்தவனை கொன்று விட்டதாக கூறி அவன் உடலை காண்பிக்கிறார்.சீதா தன்னை கெடுத்தவன் இவனல்ல அலெக்ஸாண்டர் என்று சொல்கிறாள்.பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகிறார் ராஜசேகர்.
    இதைப்பயன்படுத்தி தான் தப்பிக்கும் யோசனையில் அலெக்ஸாண்டர் போலீசுக்கு தகவல் கொடுத்து விடுகிறான்.போலீஸ் வருவதை அறிந்து யாருக்கும் தெரியாமல் தன் மகளுடன்
    அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டரான சங்கர் கொலை நடந்த அந்த அறையை பார்வையிடும்போது ஒரு கடிகாரத்தை எடுக்கிறார்.அது தான்தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த கடிகாரம் என்பதை அறிந்து சிறிது குழப்பமடைகிறான்.

    ராஜசேகர் நடந்த விஷயங்களை எல்லாம் தன் மனைவியிடம் கூறி மகன்கள் உள்பட யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.

    போலீஸ் விசாரணையின்போது மேலதிகாரியிடம் ராஜசேகர்தான் இந்த கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று சங்கர் தெரிவிக்கிறான். இறந்து போன தன் உதவியாளனுக்கு ஒரு தங்கை உண்டு என்றும் அவளுக்கும் ராஜசேகருக்கும் தவறான தொடர்பு உண்டு என்றும் அந்த விஷயத்தில் ஏற்பட்ட கைககலப்பில் தன் உதவியாளனை கொன்று விட்டதாக அலெக்ஸாண்டர் போலீஸிடம் கூறுகிறான்.

    அலெக்ஸாண்டரை கொல்லும் நோக்கத்துடன் ராஜசேகர் அவன் வீட்டிற்கு வருகிறார்.அதை அவன் பார்த்து விடுகிறான்.போலுசுக்கு தகவல் தருகிறான்.சங்கரே அவரை கைது செய்கிறான்.

    கோர்ட்டு விசாரணையின்போது ராஜசேகரை காப்பாற்ற தியாகு முயற்சி செய்கிறான்.தன் மகளின் மானம் காப்பாற்றப்படவேண்டும் என்பதால் ராஜசேகர் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். கோர்ட் அவருக்கு தூக்குதண்டனை விதிக்கிறது.

    தியாகு சிறைக்கு சென்று ராஜசேகரை சந்திக்கிறான்.உண்மையை சொல்ல மறுக்கிறார்.தன் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்றும்,அதனால்
    திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தியாகுவிடம் கூறுகிறார்.

    சீதா கர்ப்பம் ஆகிறாள்.இந்த நிலையில் தனக்கு திருமணம் தேவைதானா என்று தாயிடம் அழுது வடிக்கிறாள்.அவள் சமாதானப்படுத்துகிறாள்.தியாகு வர, தந்தையை ப் பார்க்கவிரும்புவதாக கூறுகிறாள்.

    அப்போதுதான்....

    ************************************************** ***
    ஜெயில்
    வீடு
    மயானம்

    காட்சிகள்

    ************************************************** ***
    ....கதறி துடிக்கிறார்....



    மகள் இறந்த சோகத்தில் தாய் பலவீனம் ஆகிறாள்.ராஜசேகர் ,மனைவியை சந்தித்தால் அவளுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என்பதால்அவரை சங்கர் தன் சொந்த பொறுப்பில் கை விலங்குடன் வீட்டிற்கு அழைத்து வருகிறான்.மனைவியை ஆறுதல்படுத்திவிட்டு வீட்டைவிட்டு தப்பி விடுகிறார்.கோவிந்தனின் பட்டறையில் கை விலங்கு உடைக்கப்படுகிறது.போலீஸ் வரும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தும் தப்பி விடுகிறார்.அவர் அங்கு வந்ததற்கான அடையாளம் சாமார்த்தியமாக மறைக்கப்படுகிறது.
    அலெக்ஸாண்டரை பழி தீர்ப்பதற்காகஅவனுடைய இடத்திற்குராஜசேகர் மாறு வேடத்தில்
    செல்கிறார். வந்திருப்பது ராஜசேகர் என்பதை அவன் அறிந்து போலீஸிற்கு தகவல் கொடுத்து விடுகிறான்.போலீஸ(சங்கர்)வரவும் அலெக்ஸாண்டர் தப்புவதுடன் ராஜசேகரும் தப்பிவிடுகிறார்.
    ராஜசேகரைவிட் டுவைத்தால்தனக்கு ஆபத்து என்பதால் ராஜசேகரை தேடி கோவிந்தன் இடத்திற்குஅவனது ஆட்கள் வருகின்றனர்.அப்போது நடக்கும் சண்டையில் கோவிந்தன் கொல்லப்படுகிறான்.அங்கு வரும் ராஜசேகர் கோவிந்தன் நிலை கண்டு மிகவும் கோபமடைந்து
    அலெக்ஸாண்டரை தேடி விரைகிறார்.கோவிந்தன் மகன் மூலமாக ராஜசேகரைப் பற்றிய தகவல்சங்கருக்கு தெரிய வருகிறது.அவரை மடக்குவதற்காக சங்கரும் விரைகிறான்.அப்பாவை சங்கர் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வழியில் தியாகு சங்கரை தடுக்கிறான்.இருவருக்கும் சண்டை ஏற்படுகின்றது.அவர்களின் தாய் ஓடி வந்து சண்டையை விலக்கி,அனைத்திற்கும் காரணம் அலெக்ஸாண்டர் என்று நடந்த விசயங்களைகூறுகிறார்.இருவரும் அலெக்ஸாணடர்இடத்திற்கு செல்கின்றனர்.

    அலெக்ஸாண்டர் ஏவிய ஆட்களை அடித்துப்போட்டு விட்டு பின் அவனையும் அடித்து,துவைத்து அவன் கைத்துப்பாக்கியை கைப்பற்றி சுட்டு வீழ்த்துகிறார்.

    அங்கு வரும் சங்கர் ,தியாகு அதிர்ச்சியாக.,பின்போலீசும் வர ,
    சங்கரால் மறுபடியும் ராஜசேகர் கைது செய்யப்படுகிறார்.அப்போது மனைவி வர
    ராஜசேகர் புன்னகையுடன்ஆரத்தழுவி தியாகுவிடம் ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார்.

    இது

    ராஜசேகரின்

    தீ ர் ப் பு.






    நடிகர்திலகம்:

    SPசௌத்ரீ,JJ அருள்,திருப்பம் ராஜசேகர்
    இவர்களை நினைவு படுத்தாத ஒரு நடிப்பு.
    போலீஸ் வேடங்களை மீண்டும் மீண்டும்
    செய்தாலும் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காட்டி நடிப்பது அவரின் சிறப்பு.வயிற்றை அடிக்கடி தடவிக்கொண்டே பேசும் மேனரிசம்
    இதில் புதுமை.

    துடிப்பான ரசனை யுள்ள காட்சிகள் சில:

    1.அவர் தோற்றமளிக்கும் முதல் காடசியில் அந்த நடையும்,முத்தாய்ப்பாக அந்த சல்யூட்டும்.
    2.அடுத்த காட்சியிலேயே விஜயகுமார்க்கு
    வேறு மாதிரியான ஸ்டைலில் அடிக்கும் பதில் சல்யூட்.போலீஸ் உடை அணிந்த பின் அப்பா என்றழைக்க பார்வையாலாயே தவறை உணர்த்துவது.
    3.ஜெய்சங்கர் விஜயகுமார் சண்டைக்காட்சியில் ,அதைப் பார்த்துக்கொண்டே பரபரப்பில்லாமல் சிகரெட் புகைக்கும் காட்சி
    4.ஸ்டேசனில் பேசிக்கொண்டே சட்டென்று ஜெய்யின் நெஞ்சில் லாட்டியால் குத்துவது
    5மாஸ்டர் சுரேசிடம் பரிவு காட்டி அவன் கன்னத்தை செல்லமாக தட்டுவது
    6.சுதர்சனை சந்திக்கும் அந்தமுதல் காட்சி படு ஜோர்.அந்தக்காட்சி மொத்தமும் நல்ல சுவராஸ்யம்.சுதர்சன் நான் நினைச்சா டெல்லிக்கே போவேன் என்று சொல்ல,
    நான் டைரக்டா டெல்லிக்கே பேசுவேன் என முடிப்பது நல்ல விறுவிறுப்பு.
    7.அம்மா ஓர் அம்பிகை போல் பாடலில் அவர் போடும் அந்த ஆட்டம்
    8.மகளின் அலங்கோல நிலை பார்த்து
    கதறலும் உறுமலுமாய்அவர் காட்டும் ஆவேசம்
    9.சுஜாதாவிடம் நடந்ததைக் கூறி எச்சரிக்கை செய்யும் காட்சி.அதில் சட்டையை அணிவதும் அந்த பட்டன்களை மாட்டுவதும் ,பரபரப்பாக இயங்குவதும்,இவற்றையெல்லாம் பேசிக்கொண்டே செய்வதும்
    10.விஜயகுமார் கைது செய்யும்போது காட்டும் பெருமிதம்.விலங்கு மாட்ட கையை தூக்கும் கம்பீரம்
    11.சிறையில் சரத்பாபு காரணம் கேட்க அதற்கு பதில் சொல்ல விரும்பாததற்கு
    காட்டும் ரியாக்சன்
    12.மகள் சந்திக்கும் அந்த சிறைக்காட்சி.உணர்வு பூரணமான காட்சி அது.அம்மா அழாதேம்மா என்பதில் உச்சரிப்பு
    13.மயானத்தில் துடிக்கும் துடிப்பு
    14.சுஜாதாவைப் பார்க்க வீட்டிற்கு வரும் காட்சி.நாய்களுக்கு கட்டளையிடுவதுஅதன் பின் விழிகளை உருட்டி வீட்டைநோட்டமிடுவது அசத்தல்.
    15.சண்டைக்காட்சியில் செய்யும் ஸ்டைல்கள்.

    பாடல்கள்:
    1.அம்மா ஓர் அம்பிகை போல்
    அப்பா ஓர் ஆண்டவன் போல
    ..நல்ல குடும்பப் பாடல் .

    2.ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான்
    அப்போ யாரழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்.
    ..மரணத்தைப் பற்றி எளிமையான அதேசமயம் வலிமையான கருத்தைக் கூறும் பாடல்.மனம் வலிக்கும்.
    தீயே உனக்கென்ன தீராத பசியோ
    நீ தின்ன உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ...
    M.S.V. யின் கணீர் குரலில் ஆரம்பிக்கும் இந்த வரிகள் நெஞ்சை தாக்குவது உண்மை. நெஞ்சுறுதியை அசைக்கும் பாடல் இது என்றால் அது மிகையாகாது.
    3.சொப்பனத்தில் சிந்து படித்தேன்.
    spb பாடியது.
    4.ஏய்,மிஸ்டர் உங்களைத்தானே
    படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்று.

    டைட்டில்:
    படத்தில் இடம் பெற்ற காட்சிகளைகொண்டு உருவாக்கப்பட்ட டைடட்டில் கார்டு.உருவங்களை தனியாக வெட்டி பின் ஒட்டி லேசாக டச் அப் செய்தது போல உருவாக்கி,அதில் கலைஞர்களின் பெயரை எழுதி டைட்டில் கார்டாக காட்டப்படும்.படம் வந்த போது இது அனைவராலும் பாராட்டப்பட்டது.













    Last edited by senthilvel; 12th August 2015 at 08:26 PM.

  6. #425
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவ மன்னிப்பு ...
    வருகிறது என்று கோவையில்சில முக்கியமான இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  7. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
    Likes Russellbzy liked this post
  8. #426
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு நெய்வேலி வாசு சார்,
    தங்கள் அன்புக்கு நன்றி ! தங்கள் பதிவுகளை படிக்கும் போது எனக்கு ஒரு உண்மையான சந்தோஷம் என்னவென்றால், நான் திரையில் கண்டு ரசித்த
    பல காட்சிகளை நான் ரசித்த அதே ரசனை மற்றும் உணர்வுகளுடன் நீங்களும் ரசித்து இருப்பது உங்கள் எழுத்துக்கள் மூலம் தெரிந்து கொண்டேன் !
    என்ன ஒன்று ,எனக்கு ரசிக்கத்தான் தெரியும், உங்களை போல் கலை நயத்துடன் பதிவிட தெரியாது !
    கலை தெய்வத்துக்கு எழுத்து பூக்கள் மூலம் தங்கள் இலட்சார்ச்சனை தொடரட்டும் !
    நன்றி !

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Georgeqlj liked this post
  10. #427
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் நண்பர்களே !
    என் கடந்த பதிவில் 1952 முதல் 1988 வரை 36 வருடங்களில் தமிழில் 275 படங்களில் கதாநாயகநாக சிவாஜி நடித்தார் என்று பதிவு செய்தேன் !
    அதில் ஒரு திருத்தம் ! சிவாஜி 275 படங்களில் நடித்தார் ஆனால் அவர் கதாநாயகநாக நடித்த படங்கள் 260 தான் ! மற்ற 15 படங்கள்
    அவர் மற்ற மொழிகளில் நடித்தவை ! சிறிய தவறாக இருந்தாலும் மன்னிக்கவும் !
    மற்றபடி வேறு எந்த நடிகரும் அதில் பாதி அளவு கூட தமிழில் கதாநாயகனாக நடித்ததில்லை என்ற தகவலில் மாற்றமில்லை!

    சிவாஜியின் தனிபெரும் சாதனைகள் தொடரும் ..

  11. Likes Georgeqlj, RAGHAVENDRA liked this post
  12. #428
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    dear friends,

    please watch news-7 tamil channel - today (12-08-2015) 9 to 10 pm - discussion about nadigarthilagam statue issue.



    Last edited by KCSHEKAR; 12th August 2015 at 06:11 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Thanks Georgeqlj, eehaiupehazij, Russellbzy thanked for this post
    Likes J.Radhakrishnan liked this post
  14. #429
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி 1952 to 1988 260 படங்கள் தமிழில் கதாநாயகனாக 36 வருடங்களில் நடித்த சாதனை இன்றுவரை மட்டுமல்ல இனி வரும் காலத்திலும்
    அந்த எண்ணிக்கையை எவரும் நெருங்க வாய்ப்பு இல்லை !
    அதில் மற்றும் ஒரு சாதனை அவர் ஒரு வருடம் கூட தவறாமல் இடை வெளி இன்றி அனைத்து வருடமும் படங்களை வெளியிட்டார் ! 36 வருடங்கள் தொடர்ந்து gap இன்றி படங்களை வெளியிட்டவர் தமிழில் இன்று வரை சிவாஜி மட்டுமே !
    சிவாஜி 1988 வரை கதாநாயகநாக நடித்த 260 படங்களில் 94 படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன ! 12/08/2015 இன்றைய தேதி வரை தமிழில் அதிக 100 நாட்கள் கண்டவெற்றி சரித்திரநாயகன் சிவாஜிக்கு மட்டுமே உரியது !
    85 வருட தமிழ் சினிமா வரலாற்றில் சிவாஜி மட்டுமே செய்த சாதனைகள் தொடரும்...

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #430
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •