Page 394 of 401 FirstFirst ... 294344384392393394395396 ... LastLast
Results 3,931 to 3,940 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #3931
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    நெருக்கியடிக்கும் திருவிழாக் கூட்டத்தில் வெயிலில் அலைந்த களைப்பு தீர
    மரத்தடி நிழலில் நின்று
    பருகும் இளநீர் தரும் ஒரு
    குளுமையை...

    சத்தம், சாப்பாடு,சந்தோஷம்
    எல்லாமே கொஞ்சம் அதிகமாக
    காணப்படுகிற கல்யாண வீட்டு
    களேபரத்திலும், பெண்ணைப்
    பெற்றவனின் மனம் காணும்
    நிம்மதி மிகுந்த மௌனத்தை..

    மடித்துக் கட்டிய வேட்டியும்,
    பனியனை வெளிக் காட்டும்
    மெல்லிய ஜிப்பாவும், கண்களில்
    கனலும், நீட்டி முழக்கிப் பேசும்
    பேச்சுமாய் நடிகர் திலகம்
    வாழ்ந்த "கருடா சௌக்கியமா"
    படத்தின் வேகப் போக்கினூடே
    இந்த மென்பாடலைப் பார்த்த
    போது உணர்ந்திருக்கிறேன்.

    சில வருத்தங்கள் நம் மனதோடு தங்கி விடுகின்றன.
    "வேறு மாதிரியான நல்ல படம்" என்பதற்கான மிகச்
    சிறந்த உதாரணப் படமாய்
    அமைந்த இந்தப் படம் ஏன்
    அதிகமாகப் பேசப்படவில்லை..
    போற்றப்படவில்லை..?
    - என்கிற வருத்தத்தைப் போல.

    ஒரு படம்.அதற்குள் பாடல்களைத் திணிக்கிற கதைச் சூழல்கள்.. இதெல்லாம்
    மீறி இந்தப் படத்தின் கதையோடு ஈஷிக் கொண்டு
    வருகிற இந்தப் பாடலின்
    சூழல் அற்புதமானது.

    சதையைப் போற்றும் சராசரிப்
    பாடல்களிலிருந்து தூரமாய்
    விலகிக் கொண்டு, காதலைக்
    கண்ணியமாய்ப் பேசுகிறது..
    இந்தப் பாடல்.

    மெல்லிசை மாமன்னர் இந்தப்
    பாடலின் மென்மையில்
    வாழ்கிறார்.

    அரிதான, இனிமையான சசிரேகாவின் குரலை நமக்கும்,
    காற்றுக்கும் மிகவும் பிடிக்கிறது.

    "பாடும் நிலா" என்று எஸ்.பி.பி
    அவர்களை அழைப்பது சரிதான்
    என்று அழுத்தமாய் நிரூபிக்கிறது இந்தப் பாடல்.

    இசை வெளிச்சமற்று இருண்டு
    கிடக்கிற நம் இதயங்கள்
    ஒளிர, ஒளிர "நிலா" பாடுகிறது.

    ரௌடிக் கட்டு விடுத்து, கண்ணியமான அந்த வேட்டிக்
    கட்டல், அடர் நீலச் சட்டை அணிந்து நடந்து வரும் அழகு,
    நடிகர் திலகத்திற்கு மட்டுமே
    வாய்த்த அழகு.

    " சந்தன மலரின் சுந்தர வடிவில்" என்று பாடத்
    துவங்குகிற நிமிஷத்தில்,
    மனைவியின் முன் நின்று
    ஓர் வளர்ந்த குழந்தை போல்
    சட்டையின் கீழ்ப்புறமாய்
    நீவி விட்டுக் கொண்டு பாடும்
    நடிப்பை இந்தத் தலைமுறை
    நடிகர்களெல்லாம் பார்த்துப்
    பார்த்துக் கற்றுக் கொள்ள
    வேண்டும்.

    ஊரையே பயந்து மிரள வைக்கும் தீனதயாளு தன் அன்பான மனைவிக்கு மட்டும் தனது சுயரூபம் காட்டாது,
    மென்மையானவனாய்க் காட்டிக் கொள்கிற கதைச் சூழலை உள்வாங்கிக் கொண்டு
    அவர் வெளிப்படுத்துகிற
    நடிப்பில் அசந்து போகிறோம்.
    -----------
    "மு த் து க் கி ரு ஷ் ணா.."
    என்று விரல் சொடுக்கி
    அழைப்பதிலும், சிரித்த முகம்
    மாற்றாமல் கானம் பாடி"
    நடப்பதிலும் மயங்கிக் கிடக்க
    நாமிருக்கிறோம்.

    எது வேண்டுமென்று நாம்
    நினைக்கிறோமோ.. அதை
    அப்படியே தருவதற்கு அவர்
    இருக்கிறார்.

    பிறகென்ன..?



  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3932
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செந்தில்வேல்,
    மாணிக்கத்தின் சவாலை திறம்பட சமாளித்த நீங்கள் தொடரும் பாகத்தையும் திறம்படத் துவக்கி அனைவரையும் ஆனந்தக் களிப்பில் மூழ்கடிப்பீர்கள் என்பது திண்ணம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Georgeqlj thanked for this post
  6. #3933
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன்
    வியட்நாம் வீடு ஸ்டில்ஸ் ஒவ்வொன்றுமே கண்களைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளையடிக்கின்றன. பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3934
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி
    முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
    என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
    தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
    உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  9. #3935
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நான் யாரை மனதில் நினைத்திருந்தேனோ அவரையே அனைத்து நண்பர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள் எனும்போது மகிழ்வாக இருக்கிறது.அனைவரின் ஒருமித்த கருத்திற்கேற்ப இளைய சகோதரர் செந்திவேல் அவர்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Part -17-ஐ துவக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    அன்புடன்

  10. Thanks Georgeqlj thanked for this post
  11. #3936
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாகம் 17 ஐத் துவக்கப் போகும் செந்திவேல் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 17ல் ஆவணங்கள் ஆனவரை நிறையட்டும். ஒரு வரிப் பதிவுகள் அகலட்டும். அலசல்கள் தொடரட்டும். அனைத்துப் பங்களிப்பாளர்களும் தத்தம் பங்கை நல்கட்டும். விரைவில் 18 ஐக் காண்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks Georgeqlj thanked for this post
  13. #3937
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ரவி
    முத்துக்கிருஷ்ணன் என்னையும் வாசுவையும் ஆட்கொண்டாற்போல தங்களையும் விடவில்லை. தங்களை மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் விடவில்லை.
    என்ன சொல்பவர் சிலபேர், மௌனமாக ரசிப்பவர் பலர்.
    தலைவரின் சொல்லழகிற்கோர் உன்னதக் காவியம் கருடா சௌக்கியமா.
    உளமார்ந்த பாராட்டுக்கள்.
    ராகவேந்திரன் சார்,

    N.T Fans association சார்பாக 'கருடா சௌக்கியமா?' படத்தை திரையிட வேண்டும் என் நீண்ட நாளைய ஆசை. அதை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Georgeqlj liked this post
  15. #3938
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராகவேந்திரன் சார்,

    N.T Fans association சார்பாக 'கருடா சௌக்கியமா?' படத்தை திரையிட வேண்டும் என் நீண்ட நாளைய ஆசை. அதை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள் சித்தம் என் பாக்கியம் வாசு சார்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #3939
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்
    17ஆம் பாகத்தை துவக்கி வைக்கும் பெருமையை அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    பழைய திரிகளில் பங்கெடுத்து பெருமை சேர்த்தவர்களை அழைத்து வர முயற்சி செய்ய வேண்டும்.உங்களால்முடியும் .
    நீங்களும் உங்கள் அனுபவ தொடரை பெரிய இடைவெளி இல்லாமல் தொடர எல்லோரும் விரும்புகிறோம்.
    நன்றி.

  17. #3940
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Daily Thanthi


    சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

    புதுடெல்லி

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

    சிவாஜி கணேசன் சிலை
    சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை கடந்த 2006–ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    எனினும் சிலை இதுவரை அகற்றப்படாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது, திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    மேல் முறையீடு
    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2014 ஜனவரி 23–ந் தேதி பிறப்பித்த உத்தரவின் படி உடனடியாக சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்றும், இது குறித்து அடுத்த மாதம் (நவம்பர்) 16–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

    2 ஆண்டுகள் ஆகும்
    நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும்.

    இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே 2 ஆண்டுகளும் நடிகர் சிவாஜி சிலை தற்போது உள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பிலேயே தொடர்ந்து வைத்திருக்க அவகாசம் வழங்க வேண்டும்.

    மேலும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •