Page 295 of 401 FirstFirst ... 195245285293294295296297305345395 ... LastLast
Results 2,941 to 2,950 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2941
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த வார நக்கீரன் இதழிலிருந்து





    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Harrietlgy thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2942
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நகைச்சுவை நடிகை, கதாநாயகி, பாடகி, வில்லி, டான்ஸர், என்று பல அவதாரங்கள் எடுத்தவர் மனோரமா.

    'மஞ்சக் கயிறு... தாலி மஞ்சக் கயிறு'

    என்று 'உனக்கும் வாழ்வு வரும்' திரைப்படத்தில் மனோரமா தள்ளுவண்டியில் தாலிக் கயிறு விற்று பாடிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.

    அது போல,

    'வாழ நினைத்தால் வாழலாம்' படத்தில் 'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்' என்ற வாய் குழறிப் பாடும் பாடலும் அப்போது ரொம்பப் பிரசித்தம்.

    'நீதி'படத்தில் ஜெயலலிதாவைவிட மனோரமாவே பிரதானம். இவரே நடிகர் திலகத்தின் ஜோடி என்னுமளவிற்கு நடித்திருப்பார். இவர் நடிகர் திலகத்திடம் 'ராசா... ராசா' என்று உருகுவது அப்படியே நிஜம். நடிப்பல்ல.

    'காசேதான் கடவுளடா' படத்தில் ஆங்காரம் மிகுந்த பணக்காரியாய் நகைச்சுவை மிளிர இவர் நடித்தது யாராலும் மறக்க முடியாது.

    'தில்லானா மோகனாம்பாள்' பற்றி சொல்லவும் வேண்டுமோ!

    சட்டைக்காரியாக கவுன் அணிந்து ஆங்கிலம், தமிழ் கலந்து பேசி அசத்த மனோரமாவை விட்டதால் வேறு யார்? இந்த மாதிரி வேடத்தில் பல படங்கள்.

    'ஜாம்பஜார் ஜக்கு'வைக் காதலிக்கும் சென்னைத் தமிழ் பேசும் 'சைதாப் பெட்டைக் கொக்கு' ஆச்சியை வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

    ஆச்சியுடன் ஓரிருமுறை பேசி பழகிய சம்பவங்கள்....அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வந்து மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன. அவரிடம் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' பாடிக் காட்டி, அவர் வாய்விட்டு சிரித்ததை இன்று நினைத்தால் அழுகை பீறிடுகிறது. 'டிராக்டர் பொன்னம்மா'வை என் வாயால் புகழக் கேட்டு அவர் சந்தோஷமடைந்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.

    'தியாகம்' படத்தில் ஐயராத்து மாமியாக வந்து சிலம்ப சண்டை போட்டு எப்படி அசத்துவார்!

    நேற்று கூட சினிமாவில் கூத்து, நாடகம் தலைப்பிட்டு பதிவுகள் ஆரம்பித்ததும் இவரை மனதில் கொண்டே.

    'ராஜாபார்ட்'டில் இவர் நாடக நாயகியாக வலம் வந்து பிகு பண்ணிக் கொள்வது அருமையோ அருமை.

    அதையே பின்னால் 'எமனுக்கு எமன்' படத்தில் எமன் நடிகர் திலகத்தை 'ராசபார்ட்டு... ராசபார்ட்டு' என்று காலம் கடந்தும் கன் டின்யூட்டியாகத் தொடர்வது அற்புதமல்லவா!

    திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 'சந்திரோதயம்' படத்தில் நாகேஷை காசிக்கு ஓட வைக்கும் மனைவியாக அடிதூள் ஆச்சி.

    நாகேஷுடன் எத்தனை படங்கள்! சோவுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களம். 'முகம்மது பின் துக்ளக்'கில் துக்ளக் நியமிக்கும் பெண் அமைச்சர். தேங்காயுடன் சேர் ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பாடல். சுருளியுடன் அனாயாசமாக ஜோடி சேர்ந்து இணை....கவுண்டமணியுடன் ஜோடி. மூர்த்தியிளிருந்து ஐ.எஸ்.ஆர் வரை. அடுக்கிக் கொண்டே போகலாம்.

    எல்லாவற்றுக்கும் சிகரமாய் நடிகர் திலகத்துடன் இணைந்து 'ஞானப்பறவை'. நெடுநாள் ஆசைக்கனவு நிறைவேறியது இந்த ஞானப் பெண்ணுக்கு.

    நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.

    இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.


    பாதிப் பாடலாக 'மஞ்சக் கயிறு'



    'கானாங் குருவிக்குக் கல்யாணமாம்'

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post
  6. #2943
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    First Re-release Tamil movie in Indonesia - 1

    Dear friends,

    Our Nadigar Thilagam's epic movie Veerapandiya Kattabomban has been released in Jakarta, Indonesia. This is the FIRST Tamil re-release movie in Indonesia and NT has proved again that he is trend setter.

    Please find attached images, posting as per request from Gopal, Jakarta, Indonesia. From Gopal's FB. Thank you Gopal sir...

    Last edited by goldstar; 11th October 2015 at 11:45 AM.

  7. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai, KCSHEKAR liked this post
  8. #2944
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    First Re-release Tamil movie in Indonesia - 2


  9. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  10. #2945
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    First Re-release Tamil movie in Indonesia - 3


  11. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  12. #2946
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    First Re-release Tamil movie in Indonesia - 4


  13. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  14. #2947
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    First Re-release Tamil movie in Indonesia - 5



    Thank you Gopal sir...

  15. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #2948
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மக்கள் தலைவரைவாழ்த்திப் பாடும் மனோரமா... படம் நீதி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  18. #2949
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "ஜில்..ஜில்" என அருகில் அழைத்து, அருகில் வந்து நின்றவுடன் அமரர்.பாலையா "உர்..ர்ர்ர்"என தன்னிடமிருந்து வரும் வாசனையை மோப்பம்
    பிடிக்க, "..ச்சேய்.."என நடிகர் திலகம் அதட்ட, ஒரு முதிர்ந்த ஆடவரால் தன் அழகும், பெண்மையும் அப்பட்டமாக
    ரசிக்கப்படுவது பற்றிய
    எவ்விதக் கூச்சமுமில்லாது
    வெகுளித்தனமாய் வெளிப்படுத்தும் அந்த சிரிப்பு...

    ஒவ்வொரு பேச்சுக்கும்,ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் "அந்தமான் காதலி"யின் அழகான நடன அசைவுகள்...

    தூக்கத்தில் நடந்து சென்று, நள்ளிரவில் சமைத்து, வாய்க்குக் கொஞ்சமும், வானத்துக்கும்,பூமிக்கும் மிச்சமுமாய்ப் பேயாய்த் தின்னும் "புதிய பறவை"அல்லியின் அடாவடிகள்..

    கதையெழுதும் கணவனோடு
    தனித்திருக்கும் இரவில்,தன்னை மீறிய சந்தோஷ உணர்வில்,மூச்சிரைக்கப் பாடியும்,ஆடியும் வரும் "பாரதவிலாஸ்" நாயுடு மனைவி காட்டிய நகைச்சுவை
    வெளிச்சங்கள்...

    ஆச்சி அவர்களே..!

    இவையெல்லாம், இன்னொருத்தர் கொண்டு இட்டு நிரப்பி விட முடியாத உங்கள்
    தனித்த சாதனைகளின் மிகச்
    சில சான்றுகள்.

    போய் வருக..ஆச்சி..!

    மகிழ்வொன்றே எமக்குத் தந்த
    மகத்துவமே போய் வருக..!

    தன் தாயென உங்கள் தாயைக்
    கொண்டு, வெண்பட்டு உடுத்தி
    வழியனுப்பிய உங்கள் தமையன் அங்கேதானிருக்கிறான்.

    அன்புக் கதைகள் அவனோடு
    பேச..

    ஆச்சி அவர்களே..
    போய் வருக..!






    Sent from my GT-S6312 using Tapatalk

  19. #2950
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வை மூதாட்டி அன்று.

    திரைகடல் ஓடியும் சிவாஜி புகழ் பாடு எனக் கூறியிருப்பார் இன்று.

    இதை நிரூபிக்கும் வண்ணம் இந்தோநேஷியாவில் தலைவரின் புகழ் பாடும் கட்டபொம்மனின் வெற்றி வெளியீட்டைப் பற்றிய தகவலைத் தந்த கோபால் அவர்களுக்கும் அதை இங்கே பதிவிட்ட சதீஷ் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Thanks goldstar, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •