Page 293 of 401 FirstFirst ... 193243283291292293294295303343393 ... LastLast
Results 2,921 to 2,930 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2921
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sundararajan,



    உத்தமன் மதுரை அளப்பரைக்கும் அதை இங்கு நிழற்படங்களாகப் பகிர்ந்து கொண்டமைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள், நன்றி.

    வீரபாண்டிய கட்டபொம்மன் அதே சமயத்தில் இன்னோர் அரங்கில் திரையிட்டும் இந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுள்ளது என்றால் நடிகர் திலகத்தின் வசூல் மகாத்மியத்தின் சான்று.

    ஒரே ஒரு வேண்டுகோள்.. அன்புடன் பரிசீலிக்கவும்.

    ஆடியன்ஸூக்கு அசைவ உணவு வழங்குவதை முற்றிலும் தவிர்த்து விட்டு இனிப்புகளோடு நிறுத்திக்கொள்ளலாமே. ஏனென்றால் இது நெகடிவாகப் போகும் அபாயமும் உள்ளது.

    இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2922
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யா திரு.ராகவேந்திரா அவர்கள் பதிவிட்டிருந்த
    நடிகர் திலகம் குறித்த "அமுத சுரபி" கட்டுரையைப் படித்தேன்.

    அருமையாய்ப் போய்க் கொண்டிருந்த கட்டுரை ஒரு
    இடத்தில் மட்டும் நெருடலைத்
    தந்தது.

    அய்யா நடிகர் திலகம் அவர்கள்
    பாடல்களுக்கு வாயசைப்பதைப்
    பற்றி விவரிக்கும் போது இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலுக்கு ஆரம்ப காலத்தில்
    சில பாடல்களுக்கும்,மிகவும்
    பிற்காலத்தில் எஸ்.பி.பி,
    ஜேசுதாஸ்,மலேஷியா வாசுதேவன் குரல்களில் வந்த
    பாடல்களுக்கும் செய்த வாயசைப்பை நீக்கி விட்டுப்
    பார்த்தால், நடிகர் திலகத்தின் வாயசைப்பு வரலாற்றில் இடம்
    பெறத்தக்கது என்று கட்டுரை
    ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

    ஏன் நீக்க வேண்டும்?

    ஒன்றென்றால் ஒரே ஒரு
    பாடலைக் கூட நீக்க வேண்டியதில்லை.

    பாடகர் திலகம்,தெய்வீகப் பாடகர் அமரர்.டி.எம்.எஸ்
    அவர்களின் கம்பீரக் கலைக்குரல்,நம் நடிகர் திலகத்தின் சிம்மக் குரலோடு
    கைகோர்த்துக் கொண்டு ஜெயித்த சந்தோஷத்தை எல்லாம் இன்னும் பல யுகங்களுக்கு எழுதிக் கொண்டே இருக்கலாம்.

    அதுவல்ல விஷயம்.

    மெலிந்த உருவமும்,தாடி வளர்த்த ஒளிமுகமுமாய் கோயில் வாசலில் நின்றபடி..
    பின்னொலிக்கும் சி.எஸ்.ஜே
    குரலுக்கு ஒரு துளி பிசகாமல்
    முதல் படத்திலேயே
    வாயசைத்த "நெஞ்சு பொறுக்குதில்லையே"வை
    எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    அத்தனை திசைகளுக்குமாய்
    அதிர்ந்தெழும்பும் அற்புதக் குரலில் வந்த "காவியமா..நெஞ்சின் ஓவியமா" பாடலுக்கு அரேபியக் குதிரையாட்டம் துள்ளி நடந்து வந்து செய்த வாயசைப்பை
    எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    அழகாகத் தோற்றங்காட்டுவதே
    முக்கியப்படுத்தப்படும் காதல்
    பாடல் இலக்கணத்தை உடைத்து,குட்டிக்கரணம் போன்ற குறும்பான உடல்மொழிகளுடனே வாயசைத்து வென்ற "விண்ணோடும் முகிலோடும்"
    பாடலை எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    "போனால் வராது..இது போலே
    காலமினி" என்று உச்சஸ்தாயியில் ஒலிக்கும்
    குரலுக்கு தன்னுருவம் தந்த அந்த "தெய்வப்பிறவி"யின்
    வாயசைப்பை எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    பிற்காலம் என கட்டுரையாசிரியர் குறிப்பிட்ட
    எங்கள் தலைமுறையின்
    பொற்காலத்தில் "வேண்டும்..
    வேண்டும்"என்று எங்கள்
    இதயம் கேட்ட எஸ்.பி.பி.யின்
    "வேண்டும் வேண்டும்"
    பாடலுக்கான அலட்டிக் கொள்ளாத வாயசைப்பை
    எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    காலம் வெகுவாய் மாறிப் போனாலும்,அறிமுகமான
    50 களிலிருந்த அதே துள்ளலுடன் 80 களில் செய்த "காலம் மாறலாம்" பாடலுக்கான வாயசைப்பை எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    கலாகர்வமாய் சம்மணமிட்டுக்
    கொண்டு ,தேனொழுகும் ஜேசுதாஸின் இனிப்புக் குரலில்
    வந்த கர்நாடக சங்கீதத்துக்கு,
    "கவரிமான்" படத்தில் செய்த
    வாயசைப்பை எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    "மரகத வல்லிக்கு மணக்கோலம்" என மீண்டும்
    நம் இதய வாசலில் குரல் கோலமிட்ட ஜேசுதாசிற்காகச்
    செய்த வாயசைப்பை எப்படி
    நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    'இப்படி ஒரு படம் வராதா'?
    எனும் அன்றைய நம் ஏக்கங்களுக்கு இறுதி மரியாதை செய்த "முதல் மரியாதை"படத்தில் அமரர்.மலேஷியா வாசுதேவன்
    அவர்களின் எழுச்சிக் குரலில்
    வந்த " ஏ..குருவி" பாடலுக்கு
    கண்கள் சிரிக்க செய்த கச்சிதமான வாயசைப்பை
    எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    "சின்னஞ்சிறு அன்னம் ஒன்று"
    எனும் "ராஜமரியாதை"படத்தில் மலேஷியா வாசுதேவன் குரலில் வந்த சோகமிழையும்
    பாடலுக்குத் தந்த சீரிய வாயசைப்பை எப்படி நீக்குவது?
    ஏன் நீக்குவது?

    அதே அற்புத கணீர்க் குரலுக்கு,
    தன் காயத்தையே திரியாக்கி
    எரியும்" ராஜரிஷி"யாய்
    "சங்கரா..சிவசங்கரா"பாடித் தந்த வாயசைப்பை எப்படி
    நீக்குவது?
    ஏன் நீக்குவது?
    --------
    அவர் பாணியிலேயே சொன்னால்..
    அந்த வரிகளை மட்டும் நீக்கி விட்டால் கட்டுரை மிக அருமை.


    Sent from my GT-S6312 using Tapatalk

  5. #2923
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நன்று சொன்னீர்கள் ரவி.

    இன்னும் சொல்லப் போனால் என் தனிப்பட்ட எண்ணமென்னவென்றால் எந்தப் பாடகரானாலும் தன் உதட்டசைவின் சிறப்பினால் பாடலுக்கும் பாடகரின் குரலுக்கும் உயிர் கொடுப்பவர் நடிகர் திலகம். எல்லோருடைய எண்ணமும் அதுவாகத் தான் இருக்க முடியும்.

    உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தூக்குத்தூக்கியிலிருந்து கொடிகட்டிப் பறந்த டி.எம்.எஸ். அவர்களின் கொடியையின் தாக்கத்தையும் மீறி 1960ம் ஆண்டு வாக்கில் மீண்டும் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு பாடி அப்போதும் நடிகர் திலகம் அப்பாடல்களுக்கு ஜீவனளித்திருப்பார். தெய்வப்பிறவி, குறவஞ்சி, பாவை விளக்கு பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன என்றால் அதற்கு இசைச்சித்தரின் குரலுக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இந்த ஒரு பாடலே போதும் இந்த சிறப்பினை உணர்த்த.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Georgeqlj, Russellmai liked this post
  7. #2924
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கூத்து....நாடகம்...

    அந்தக் கால சினிமாக்களில் ஊடால கூத்து, டிராமா, ஓரங்க நாடகம் போன்ற அயிட்டங்கள் பாடல்களுடன் அம்சமாக வந்து போகும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் அது மாதிரி அதிகமாகவே இருக்கும். உடனே நம் நினைவுக்கு வருபவை நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை. இதெல்லாம் அடிக்கடி பார்த்தாயிற்று. இருந்தாலும் சலிக்காது.

    'சபாஷ் மீனா' வில் ஒரு நாடகம்.



    கனவான்களின் கூத்து. கும்மாளம். கன்னி மயில்களுடன் ஆட்டம். அங்கு வருகிறார் கோமாளி வேடத்தில் நடிகர் திலகம். நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறார். மிக வித்தியாசமான கெட்-அப்பில் புளோரசென்ட் லிப்ஸ்டிக் அடித்து அவர் ஒரிஜினல் கோமாளி போல் மேடையில் சுற்றி வருவது நம்மை வாய் பிளக்கச் செய்யும். நடன அசைவுகளை ரொம்ப அலட்சியமாக பண்ணுவார். கால்களை கவனித்தீர்களானால் ஒரு இடத்தில் கூட நில்லாது. கடினமான வரிகள். வார்த்தைகள். விறுவிறு என்று வேறு பாடுவார் பாடகர் திலகம்.

    'ஓ....சுயநல வெறிமிகு மாந்தர்களே
    சுகம்தனில் மிதந்திடும் வேந்தர்களே
    ஆட்டத்தை நிறுத்துங்கள்
    அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்'

    புத்தி சொல்லும் கோமாளியின் முகத்தில் கனவான் ஒருவன் கிரீம் எடுத்து அடித்து அவமானப்படுத்தி 'நிறுத்து' என்று கத்த,

    அந்த ஏழைக் கோமாளியோ,

    'நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே'

    என்று எலும்பும், தோலும் காட்டும் வறுமைக் குழந்தைகளோடு பாடுகிறான்.

    படத்தில் தந்தைக்கு நடிகர் திலகம் கூத்தாடுவது பிடிக்காது. அப்படிப்பட்டவர் இந்த ட்ராமாவுக்கு வந்துவிட, மேடையில் ஏழைகளுக்கு ஆதரவாக பாடி ஏய்ப்பவர் கூட்டத்திடம் சவால் விடும் நடிகர் திலகம்,

    'கொற்றவனே வந்தாலும்
    என்னைப் பெற்றவனே வந்தாலும்'

    என்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து தந்தையைப் பார்த்துவிட்டு, பயத்தில் பாடத்தை மறந்துவிட்டு, திரை மறைவில் ஒருவர் வசனத்தை எடுத்துக் கொடுக்க, ('முடியாது' என்று எடுத்துக் கொடுப்பார்) அதையே நடிகர் திலகமும் இனி தந்தை முன்னால் தன்னால் நடிக்க முடியாது என்பதை அதே

    'முடியாது'

    வார்த்தையை வைத்தே நடுங்கிப் பாடி பயந்து ஓட. இழுத்து மூடு ஸ்க்ரீனை.

    செம ரகளை. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும். நடிகர் திலகத்தில் அசாத்திய கோமாளித் திறமை சேட்டைகளை அனுபவித்து பார்த்து ரசிக்கலாம். வழக்கம் போல வியக்கலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks RAGHAVENDRA, sss thanked for this post
  9. #2925
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like




    DESIGN OF THE FLEX BANNER FOR OCTOBER 11, 2015 NADIGAR THILAGAM BIRTH DAY FUNCTION AT TRICHY

    image courtesy: Trichy Annadurai, Spl Invitee, All India Sivaji Fans Association
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #2926
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சிவாஜி ரசிக நண்பர்களே! சிவாஜி திரியை பார்வையிடும் பொதுவான ரசிக நண்பர்களே!
    நடிகர் திலகத்தின் பிறந்த தினத்துக்காக பல பத்திரிகைகளில் வந்த சிறப்பு கட்டுரைகளை என்னை போலவே அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று
    நம்புகிறேன்! வழக்கம் போல சிவாஜியை போல வசனம் பேச, நடிக்க, யாராலும் முடியாது என்ற பல்லவிதான்! அவரின் படங்கள் தான் 1952 - 1988 வரை
    தரத்திலும், வசூலிலும் முன்னிலை வகித்தது! தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி என்றால் 1952 - 1988 வரை சிவாஜி மட்டுமே! அவர் செய்த பாக்ஸ்ஆபீஸ்
    சாதனைகளில் 50% கூட எந்த நடிகராலும் அந்த காலகட்டத்தில் செய்ய முடியவில்லை என்பது போன்ற உண்மைகளை எழுத இன்னும் எத்தனை வருடங்கள்
    ஆகுமோ தெரியவில்லை!
    அந்தகால சாதனை செய்தி ஒன்று சொல்கிறேன்! சில உண்மைகளை புரிந்து கொண்டு உண்மையான வசூல்மன்னனாக அந்த காலத்தில் யார் இருந்திருப்பார்
    என்று தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!
    பொதுவாக கறுப்பு வெள்ளை படங்கள் கலர் படங்கள் அளவுக்கு அந்த காலங்களில் மக்களை ஈர்க்காது! கருப்புவெள்ளை படங்கள் 25 வாரங்கள் ஓடிவெள்ளி
    விழா காண்பது கடினமான ஒன்று! 1950 - 1980 வரையிலான காலகட்டத்தில் கருப்புவெள்ளை படங்கள் வெள்ளிவிழா கண்டதில் முதல் மூன்று இடங்களை பிடித்த நடிகர்கள் யார் தெரியுமா?
    முதல் இடம் சிவாஜிக்கு! 5 படங்கள்! பராசக்தி, பாகபிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடாபட்டணமா ஆகியவை!
    இரண்டாம் இடம் ஜெமினிக்கு! 4 படங்கள்! மிஸ்ஸியம்மா, கணவனேகண்கண்டதெய்வம், கல்யாணபரிசு, பணமாபாசமா ஆகியவை!
    மூன்றாம் இடம் சிவகுமாருக்கு! 2 படங்கள்! பத்ரகாளி, அன்னக்கிளி ஆகியவை!
    யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே! அண்டம்காக்கைக்கும் குயிலுக்கும் பேதம் புரியலே!

    இதை படிப்பவர்களாவது உண்மையான ரெகார்ட் செய்தவர்கள் யாரென்று புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
    நன்றி!

  12. Likes Harrietlgy liked this post
  13. #2927
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கல்தூண்


    சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ளே
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே

    வார்த்தைகளும், வார்த்தைகளைஒலியாக்கிய குரலும்,குரலோடு கலந்து இனிமையாக்கிய இசையையும் இதுவரை கண்டிருக்கிறதா தமிழ்திரை?
    தாலாட்டானாலும் கம்பீரத்தையும் சேர்த்தே விதைப்பது கொங்கு மண்ணுக்கே உண்டான மரபு.
    அன்று"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி" உழவுக்கும், உழவனுக்கும் பெருமை சேர்த்தது.
    சிஙகார சிட்டுத்தான் பாடல் பிறப்புக்கும் அதன் வளர்ப்புக்கும்
    பெருமை சேர்க்கிறது.
    பாடல் சிறப்பாயிருந்தால் மட்டும் போதுமா?அதன் பழம்பெருமை பேச வைக்க யாரால் முடியும்?

    தேவனாய் பிறந்து முதலியாரின் ஆதரவில் வளர்ந்து நாடாருக்கு பெருமை சேர்த்து பரமேஸ்வர கவுண்டராய் வாழ்ந்த நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்.
    பாடலைப் பார்ப்போம்.

    சுற்றங்கள் சூழ்ந்திருக்க காப்பியத்தலைவன்(நடிகர்திலகம்)
    தள்ளி நின்றிருக்க நடுக்கூடத்தில் ஊஞ்சல் ஒன்று.சிவப்பு பட்டுடத்தி
    நாயகி(கே ஆர் விஜயா)குழந்தையை ஊஞ்சலிலே இட்டு மெல்ல ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே
    சிங்கார சிட்டுத்தான் என்ட புள்ள
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ள
    கோடானு கோடியிலெ ஒத்த புள்ளே
    என்று பல்லவியில் ஆரம்பிக்கும் பாடல்.
    வட்டார பாஷையில் பாட வேண்டுமென்றால் நன்றாக அந்த பாஷையை கேட்டு பழகி பாடும்போது ஒன்று பாடல் வார்த்தைகளின் உச்சரிப்பில் அந்தப்பாடல் தவறில்லாமல் அமைந்திருக்கலாம்.அதே சமயம் வழக்கமான குரல் நளினம்இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஜீவன் இருந்தால்
    வட்டார பாஷை கேலிக்கூத்தாக மாறிவிட வாய்ப்புண்டு.அனுபவமும்,திறமையும் கொண்டவர்களுக்கே இது போன்ற பாடல்கள் பிடி கொடுக்கும்.இங்கே இரண்டும் சிறப்பாக அமைந்திருக்கும்.
    முதல் இரண்டு வரிகளுக்குப் பின்னே வரும் பிண்ணனி இசையில்.,வலது தோளை சிறிதாக மெல்ல அசைத்து
    சிறு அசைவில் தலையை ஆட்டி வலது கையை இடுப்பில் ஊன்றி நடிகர்திலகம் தன் இருப்பை காட்டும் விதம் அம்சமானது.இமை முடிஇமை திறப்பதற்குள் முடிந்து விடும் ஷாட்டானாலும் சரி,அதிலும் கூட நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பு மெய் சிலிர்க்கும்.அதற்கு சிறு உதாரணம் இந்த பிரேம்.
    "அதுதான்யாநடிகர்திலகம் "
    இந்த வார்த்தைகளை திரையரங்கில் உச்சரிக்காத உதடுகள் உண்டா இத் தமிழ்நாட்டில்?

    மனதை மயக்கும் மதுரகானம் தொடர்கிறது..
    சிங்கார சிட்டுத்தான் என்டபுள்ளே
    சிறுவாணித்தண்ணீரு என்ட புள்ளே
    கொங்குநாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தபுள்ளே

    1981 ஆம் வருடம் மே மாதம் 1ஆம் தேதி தமிழில் அதிகமாக ரசிக்கப்பட்ட
    வார்த்தை "கொங்கு நாட்டு அய்யாவு"ஆகத்தான் இருக்கும்.
    கொங்குநாட்டு அய்யாவு வார்த்தைகளின் போது நடிகர்திலகம் மீசையை முறுக்குவது போல் காட்சி வைத்தால் விசிலும் கைதட்டலும் பறக்குமே என்று அதை காட்சிப்படுத்தியதில் டைரக்டரின் "டச்அப்" அதில் தெரியும்.(டைரக்டர் மேஜர் நடிகர்திலகத்தின் கூடவே நெடுங்காலம் இருந்திருப்பதால் ரசிகர்களின் உணர்ச்சிகள் அவருக்கு நன்றாக தெரிந்திருக்குமே)
    மீசையை முறுக்கி ராஜகளையை காட்டும் அந்தக் காட்சியினால்,

    எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதி மீசையை முறுக்குவது,
    ராஜ ராஜ சோழன் மீசையை முறுக்குவது,
    என்மகனில் ராமையாத்தேவன் மீசையை முறுக்குவது,
    கட்டபொம்மன் மீசையை முறுக்குவது,
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அவர் செய்தது ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல....
    எல்லா உருவங்களும் அவரவர் சிந்தனைகளுக்கு தகுந்தபடி வந்து போகும்.
    காட்சிக்கு வருவோம்.

    அவங்க பாடிட்டாங்க நீங்க சும்மா நின்னுகிட்டு இருக்கீங்களே? நீங்க போயி உங்க சங்கதிய எடுத்து விடுங்க என்று சொந்தம் உசுப்பி விட,
    ஆஜானுபாகுவான அந்த உடம்பை குலுக்கி குலுக்கிஅதையே ஒரு நடனமாக்கி.,
    "இதோ வர்றேன் என்பாட்டை வச்சிக்கிறேன் "
    என்பது போல நடந்து செல்லும் அந்த நடைக்கு தியேட்டரில் இசை கேட்காது.கை தட்டலில் தான் காது கிழியும்.
    'இனி என் முறை' என்பது போல் ஆரம்பிப்பார்.

    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி

    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி

    மழலை ஒன்று பிறக்கும் வரை மனைவியை தாங்குவான் கணவன்.
    மழலை வந்தபின் அதை கொஞ்சி
    சீராட்டும்போது தன் குழந்தைஎன்பதிலே சற்று கர்வம் காட்டுவான்.மனைவியிடத்திலே பாசம் கொண்டிருந்தாலும் தன் பேர் சொல்லும் வாரிசு என்று சொல்வதில் மனைவியை விட அதிக உரிமை தனக்குத்தான் என்பதில் சற்று அகந்தை வருவது கிராமத்து(நகரத்திலும்உண்டு) மனிதர்களிடம் இன்றும் காணப்படும்ஆணாதிக்க வழக்கம்.அதைத்தான் அழகாக பாடலில் நடிகர்திலகம் வெளிப்படுத்தியிருப்பார்.
    'அட நீ என்ன தாயாரு ' என்பதை
    கே ஆர்விஜயாவின் தலையில் முட்டி,
    பார்வையை குழந்தை மேல் வீசிக்காட்டி தகப்பனின் பெருமிதத்தை
    ' நான் தாண்டி அப்பன்'
    என்று பாடி ஒரு தகப்பனின்உணர்ச்சிகளைகாட்டும் அந்த நடிப்பில்தன்னிகரற்று விளங்க நடிகர்திலகததால் மட்டுமே முடியும்.
    'என்னால வந்தானடி '
    என்பது தகப்பனின் உறவையும்உரிமையையும் நிலை நாட்டும் சொல்.அது
    ஆண் கொள்ளும் கர்வம்.அதை வெளிப்படுத்தும்
    அவர் நடிப்பு "சபாஷ்" போட வைக்கும் ஆண்களை.


    இங்கிருந்து அங்கு அம்புஎய்தாகி விட்டது.தாய்க்குலம் விடுமா?யோசிக்கிறது,
    தந்தைக்குலம் தொடுத்த தாக்குதலுக்கு எப்படி எதிர்அம்பு விடுவது என்று.ஒன்றும் பிடிபடவில்லை.

    அட இதுக்கு என்னத்த ரோசனை? பெத்தெடுக்கிற யோக்யதை இல்லாட்டி ஆம்பளைக்கு எப்படி வரும் வீராப்பு?
    தாய்க்குலத்தின் மூத்தகுலம் சங்கதி
    எடுத்துக்கொடுக்க,

    ஆரம்பமாகிறது வார்த்தை யுத்தம்.

    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
    !ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    போட்ட வெதை தப்பாமே தந்தாரு சாமி
    கருஉருவாச்சு என்னாலய்யா
    அய்யா உருவாச்சு என்னாலய்யா

    சத்தியத்தின் அடி வேர் எடுத்துக்காட்டப்படுகின்றன.யாரால் இதை மறுதலிக்க முடியும்?சரியான வார்த்தைகள் தானே இது?சாமியை வேறு துணைக்கு அழைக்கிறதே?
    என்ன செய்ய?சவுக்கடி கொடுத்தது தவறோ என்று மூளையை குழப்பச் செய்கிறது?தகப்பன் குலம் மிரண்ட வேளையில்,

    மனுஷனுக்கு விலாசம்அவனோட
    முகந்தான்.ஜாடையைப் பாரு.யாரப் போலய்யா இருக்கு?இதக் கேளப்பா,
    முதிர்ந்த குலம் உசுப்பி விட,

    சற்றுமுன் ஓடிப்போன கர்வம் இப்போது வந்து ஒட்டிக்கொள்ள
    தலையெடுக்கிறது தகப்பனின் வாய்ஜாலம்.

    ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
    என் வாக்கு தப்பாதடி
    அடியே என் வாக்கு தப்பாதடி

    மாறி மாறி வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் குடும்பத்திற்கு ஆகுமா?நல்லகுடும்பம் விட்டுக்கொடுக்கும்.இருவருக்கும் புரிகின்றது.
    "என்ட புள்ளே "இப்போது "அம்மபுள்ளே "
    சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
    சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
    கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
    ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்


    மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைசெழுமையாகக் காட்சியளிக்கும் வயல்வெளிகள்.எங்கும் பசுமை.நீர்வளங்கள்.இது போன்ற இயற்கைச் சூழலைஅனுபவிக்கும் பாக்கியம் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களுக்கே கிடைக்கும்.

    பாடல் ஆரம்பமாகிறது.
    செழித்து வளர்ந்த வயல்வெளிகள் எங்கும்.அதில் ஆகாய நிற த்தில் சட்டையும் வெள்ளை வேட்டியுமாய் நடிகர்திலகம்.வயல் வேலைகளை
    செய்து கொண்டு இருக்கிறார்.கஞ்சிப்பானையை தலையிலும்,குழந்தையை இடுப்பிலும் வைத்து கே ஆர் விஜயா நடந்து வருகிறார்.மனைவியை பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
    தலைதான் நரைக்கும்.
    ஆசையுமா?
    எடுத்து விடுகிறார்.

    கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
    கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள
    என்று அவர் முடிக்க,

    விவசாயிக்கு தெரியும் மண்வாசனை
    மனைவிக்கு தெரியாமல் போகுமா புருஷனின் மன்மத வாசனை?
    இதற்கு வேண்டுமே எல்லை
    அதை மீறினால் தொல்லை
    என்ற அர்த்தத்தில்.,

    அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
    அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
    என்று முடிக்க,

    உடனே சுதாரித்து, தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்ற
    கருத்தில்..
    கலங்காத என் தேவ இந்த பூமி
    கடசிப்புள்ள தாண்டி நம்ம பழனிச்சாமி

    பூமியைப் பெருக்கி
    குடும்பத்தை சுருக்கி
    வாழ்வைநிறைக்கலாம் எனும் அர்த்தத்தில் முடிப்பார்.

    பெண்புத்தி முன்புத்தி.
    ஆண்புத்தி அவசரபுத்தி..
    ஒரு வீம்புக்கு ஆசைஇல்ல ன்னு ஆம்பளையை தடுத்தா,
    சரிதானேன்னு ஆம்பள விலக,
    அதையே குத்திக்காட்டுது
    பொம்பள மனசு.

    இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித்தான் முந்தி கூட பேசுநீங்க
    என்று இடிப்பார்.

    நிற்க...

    தன்னந்தனிக்காட்டு ராஜா

    நடிகர்திலகத்தை தாண்டி யாராவது பயணிக்க முடியுமா என்ன?
    கையில் வைத்திருக்கும் மண் வெட்டியை கே ஆர் விஜயா வருவதைப் பார்த்ததும்,எத்தனை நேரந்தான் இதையே புடிச்சுட்டிருக்கிறது ன்னு அப்படியே வலது கையால தூக்கி எறிவார் பாருங்கள்.சிரிப்பும்,ரசனையும் வரவழைக்கும் நமக்கு.கவுண்டரா காட்டு வேலை செஞ்சாலும் நடிகர்திலகம் நடிப்புக்கு திலகம்தான்.மண்வெட்டி தூக்கி எறியும் ஸ்டைலே தனி.
    வேட்டியை ரெண்டு கையால தூக்கிக்கிட்டு வலது கால் மாத்தி இடதுகாலு,இடதுகால் மாத்தி வலதுகாலு ன்னு வயக்காட்டுல ஆடற அழகே அழகு. அதோட தொடர்ச்சியா தாளத்துக்கு ஏற்றமாதிரி அவர் ஆடிக்கொண்டே கொஞ்சம் லாங்கா டான்ஸ் ஆடிட்டு வர்ற அந்த கிரேன் ஷாட்டுல நடிகர்திலகத்தோட
    டான்ஸ் மூவ்மென்ட் படு எதார்த்தம்.

    படத்தில் டான்ஸ் ஆட ஸ்கோப் உள்ள ஒரே இடம் அதுதான்.கிடச்ச கேப்புல பூந்து விளையாடிருப்பார். அந்த ரெண்டே ஸ்டெப்ல படம் பார்க்கிற அத்தன பேரையும் ஆட வச்சுருவாரு.
    தலைமுடிக் கொண்டையும் கதிர் அரிவாளை ஞாபகப்படுத்தும் அந்த மீசையும்,வெகு பொருத்தம்.மேல் பட்டன் இரண்டும் போடாத நிலையில் சாதாரணசட்டைதான்
    அணிந்திருப்பார்.!ஆனாலும் அதில் இருக்கும் கம்பீரம் வியக்க வைக்கும்.

    தொடர்கிறது...

    பெற்றோரின் பெரும் சந்தோசங்களில் ஒன்று தங்கள் குழந்தை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கும் முதல் வார்த்தைகளுக்குத்தான்.
    பழனிச்சாமி என்று பெயர் வைக்கப்பட்ட அந்த குழந்தை சற்று
    பெரியவனாகி அம்மா அப்பா என்றழைக்கிறான்.
    இவ்விடத்தில ஒருஉண்மையான தகப்பனின் மனநிலையை நடிகர்திலகம் வெளிப்படுத்தும் அழகே அழகு.கிராமத்து பாமரனின் இயல்புத்தன்மை யை அப்படியே பிரதிபலிப்பார்.
    குழந்தை அப்பா என்று அழைத்ததைப் பார்த்ததும்
    " அட்ரா சக்கன்னானா ஓஹோய்"
    சத்தமிட்டு ஒத்தக்கால தூக்கி
    உற்சாக ஆட்டம் போடுவது
    அட்டகாசம்.

    நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
    இருவர்அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )
    இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*ஹா... ஹா...
    ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*

    சுபம்.
    நடிகர்திலகத்தின் நடிப்பு ஒரு கோணம்
    பாடலின் சிறப்பு ஒரு கோணம்
    கிராமியம் ஒரு கோணம்
    இந்த மூன்று கோணங்களும்
    கலந்து பயணிக்கும்
    மேற்கண்ட எழுத்து நடை.

    நன்றி..

    செந்தில்வேல்.


    கொங்கு நாட்டு அய்யாவு

    வயல்காட்டில் கொண்டாட்டம்

    அட்ராசச்கைன்னானேன்


    பாடல்:
    பல்லவி
    பெண்சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள
    கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
    கோடான கோடியில ஒத்தப் புள்ள
    கொங்கு நாட்டையாவு தந்த புள்ள
    கோடான கோடியில ஒத்தப் புள்ள
    சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

    இசைசரணம் - 1
    ஆண்நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    நீல மலக் காத்தாக நான் பெத்த புள்ள
    மண்ணாளப் பொறந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி
    அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்
    என்னாலே வந்தானடி
    சிங்காரச் சிட்டுத் தான் என்டே புள்ள
    சிறுவாணித் தண்ணீரு என்டே புள்ள

    இசைசரணம் - 2
    பெண்பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும் ம்... ம்...
    ஆ... பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்*
    தாய் தானே முன்னாலய்யா
    போட்ட வெதை தப்பாமே தந்தாரு
    கருஉருவாச்சு என்னாலய்யா
    அய்யா உருவாச்சு என்னாலய்யா

    இசைசரணம் - 3
    ஆண்அவ போல பொறந்தானா நீ பெத்த ராசா*
    கேள்றா டேய்
    ஆஹே ஓம் போல பொறந்தானா நான்பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    அட ஓம் போல பொறந்தானா நான் பெத்த ராசா
    எம் போல இருக்கானடி
    ஒரு காலம் பொறக்கட்டும் எம் போல ஆவான்
    என் வாக்கு தப்பாதடி
    அடியே என் வாக்கு தப்பாதடி ( இசை )

    சரணம்4
    ஆண்:கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே
    கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள

    பெண்:அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல
    அடுத்தொன்னு பொறந்துட்டா ரொம்ப தொல்ல
    பெண்இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க
    இருந்தாலும் பொல்லாத ஆளு நீங்க
    இப்படித் தான் முந்தி கூட பேசினீங்க

    இருவர்:சிங்கார சிட்டுத்தான் அம்மபுள்ள
    சிறுவாணித்தண்ணீரு அம்மபுள்ள
    கொங்கு நாட்டு அய்யாவு தந்த புள்ளே
    கோடானு கோடியிலே ஒத்தப்புள்ளே
    ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜோரி ஜோஜொரிய்
    குழந்தைஅம்மா... அப்பா... அம்மா...

    ஆண்அட்ரா சக்கன்னானா ஓஹோய்...

    இசைசரணம் - 5
    ஆண்நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    அட நல்லா தான் பேசிப் புட்டான் நம்ம கொழந்தே
    நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே
    பெண்அம்மாவை கும்பிட்டேன் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்பேன்
    இருவர்:அம்மாவை கும்பிட்டோம் அள்ளித் தான் கொடுத்தாள்
    ஆயிரம் பான வெச்சு பொங்கல் படைப்போம் ( இசை )

    இருவர்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா... *ஹா... ஹா... ஹா...*
    பெண்ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா... ஹஹ்ஹா...*
    ஹா... ஹா... ஹா... ஹா...*

    படப் பதிவு: டி.எம்.சௌந்தரராஜன் Kalthoon (1981) 2:
    Last edited by senthilvel; 10th October 2015 at 05:31 PM.

  14. #2928
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே! 1950 முதல் 2015 வரையிலான 65 ஆண்டு தமிழ்சினிமா வரலாற்றில் ஒரே ஆண்டில் ரிலீஸ்ஆன இரண்டு படங்கள் 25 வாரங்கள் ஓடி
    வெள்ளிவிழா கண்ட மகத்தான சாதனையை நிகழ்த்தியவர்கள் யாரென்று பார்க்கலாமா?
    முதல் இடம் சிவாஜிக்கு! நான்கு முறை இந்த வரலாற்று சாதனைகளை புரிந்திருக்கிறார்!
    1959 வீரபாண்டியகட்டபொம்மன், பாகபிரிவினை
    1961 பாவமன்னிப்பு, பாசமலர்
    1972 பட்டிக்காடாபட்டணமா, வசந்தமாளிகை
    1983 நீதிபதி, சந்திப்பு

    1985 இல் வெளிவந்த முதல்மரியாதை, படிக்காதவன் இரண்டும் வெள்ளிவிழா கண்டன! ஆனால் படிக்காதவன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி ஹீரோ
    என்பதால் அதை சிவாஜியின் சாதனையில் சேர்க்கவில்லை!

    இரண்டாம் இடம் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு!
    1982 இல் ஒரே ஆண்டில் வந்த மூன்று படங்கள் வெள்ளிவிழா கண்டு சரித்திரம்படைத்தன!
    வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, சகலகலா வல்லவன் ஆகியவை!

    சிவாஜி, கமல் தவிர வேறு எவரும் இது போன்ற சாதனைகளை செய்ததாக தெரியவில்லை! ஒருவேளை தவறுதலாக விடுபட்டிருந்தால்
    தாராளமாக எந்த ரசிகராக இருப்பினும் உண்மையை சொல்லலாம்!

    நன்றி!

  15. Likes Harrietlgy liked this post
  16. #2929
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Aathavan Ravi;1258565]அய்யா திரு.ராகவேந்திரா அவர்கள் பதிவிட்டிருந்த
    நடிகர் திலகம் குறித்த "அமுத சுரபி" கட்டுரையைப் படித்தேன்.

    --------
    அவர் பாணியிலேயே சொன்னால்..
    அந்த வரிகளை மட்டும் நீக்கி விட்டால் கட்டுரை மிக அருமை.


    ஆதவன் அவர்களே,
    அமுதத்திலும் சிறிது விஷம் கலந்து விட்டது போலும்.

    உங்கள் வரிகள்
    விஷத்தை போக்கும் அமுதம்.
    Last edited by senthilvel; 10th October 2015 at 05:56 PM.

  17. Likes Russellbzy, Russellmai liked this post
  18. #2930
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சுந்தரராஜன் அவர்களே
    மதுரை காட்சிகள் உவகை.
    கூடவே
    அதைப் பார்க்கநேரில் முடியவில்லையே
    என்ற வருத்தமும்,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •