Page 292 of 401 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2911
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    98-ம் ஆண்டு காசியில்..


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2912
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    திரு ஜாக்கி சேகர் ஒரு பன்முக பிரமுகர் ... அவரின் பக்கத்திலிருந்து ...


    Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.



    நிறைய விமர்சனங்கள் எழுதி இருக்கின்றேன்..
    ஆனால் இந்த விமர்சனத்தை எழுத எனக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஜாம்பவான்கள் எல்லோரும் மன்னிப்பார்களாக....

    அது போன்ற ஒரு காட்சியை நான் ரசித்து பார்த்ததே இல்லை... அப்படி ஒரு காட்சி அதுவும் தமிழ்சினிமா....

    கருப்பு வெள்ளை திரைப்படம் அது....

    பொதுவாய் கருப்பு வெள்ளை திரைப்படங்களை நான் அதிகம் பார்க்க விரும்புவதில்லை... ஆனால் சில படங்கள் எப்போது போட்டாலும் சில படங்களை வச்ச கண் வாங்காமல் படம் பார்த்தது உண்டு.

    அந்த வகையில் இந்த படமும்... குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லலாம்.... நம்ம கிட்டயும் சரக்கு இருக்குன்னு நான் நம்பிய படம்.....

    அந்த படத்தில் வரும் அந்த சீனும் காம்போசிஷனும்.. சான்சே இல்லாத ரகம்.. அந்த காலத்திலேயே இப்படி அசத்தி இருக்கானுங்களே என்று பொறாமை கொண்டு பார்க்கும் காட்சி அது...

    சிவாஜி நடிப்புக்கு நிறைய படங்களை உதாரணம் சொல்லுவார்கள்.. முக்கியமாக வயலுக்கு வந்தாயா-? நாற்று நட்டாயா? என்பதை பெரியதாய் சொல்லுவார்கள்...ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தையும் இந்த படத்தில் குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லுவேன்...


    இந்த காட்சியில் சிவாஜி மட்டும் அல்ல மேஜர் சந்தர்ராஜனும் சேர்ந்தே கலக்கி இருப்பார்.. இரண்டு பேரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள்...


    காட்சி இதுதான் தான் அவலட்சனமாக இருந்து சொந்து போகும் பெரும் பணம் படைத்த்த பணக்கார சிவாஜி அவலட்சனமாக பிறந்த தன் பிஞ்சு மகனை இரக்கமில்லாமல் தன் டாக்டர் நண்பரிடம் கொல்ல சொல்கின்றார்... டாக்டர் நண்பரும் கொன்று விட்டேன் என்று சொல்லி விட்டு அந்த அவலட்சனமான பையனை வளர்கின்றார்... இதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை....

    வளர்ந்த பையன் தன் தாய் தந்தை யார் என்று தெரிந்து கொண்டு .... தாயை பார்க்க செல்கின்றான்.. யாரோ ஒருவன் தன்னை பார்க்கும் போது தனக்கு ஏன் அவன் மீது அளப்பறியா பாசம் ஏற்ப்படுகின்றது என்று தன் கணவனிடம் கதறுகின்றாள்.. ஒருவேளை தன் டாக்டர் நண்பன் கொல்லாமல் தன் பிள்ளையை வளர்ந்து இருந்தால்? என்று பணக்கார சிவாஜியின் குறுக்கு புத்தி வெகு வேகமாய் கணக்கு போடுகின்றது..

    .ஆனால் 25 வருடமாக டாக்டர் நண்பர் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் பணக்கார சிவாஜிக்கும் இடையில் பேச்சு வார்த்தை சுத்தமாக இல்லை... ஆனால் அந்த குழந்தை பற்றி முழுதும் தெரிய வேண்டும் என்றால் டாக்டரிடம் பேசி ஆக வேண்டும்... 25 வருடம் கழித்து தன் டாக்டர் நண்பனை பார்க்க வரும் அந்த காட்சி இருக்கின்றதே....


    xxxx நான் அடிச்சி சொல்லுவேன்....

    இனிமே அப்படி ஒரு காட்சியை எடுக்கவும் முடியாது.. அப்படி ஒரு ஷாட் கம்பொசிஷனை வைக்கவும் முடியாது.. அது போல உணர்பூர்வமா நடிக்கவும் முடியாது...அப்படி ஒரு மீயூசிக்க போடவும் முடியாது......அதுவும் அந்த காலத்துலேயே..... என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....?


    முத ஷாட்... டிரலியில கேமரா மெல்ல நகர.....வீட்டோட பர்ஸ்ட் புலோர்ல நின்னுகிட்டு மேஜர் பைப் பத்தவைப்பார்... கதவு தட்டற சத்தம் கேக்கும்.. உடனே மேஜர் கமின்ன்னு சொல்லுவார்....


    இப்ப டாப் ஆங்கிள்ள கேமரா இருக்கும்....கதவு திறக்கும் சிவாஜி அந்த வீட்டுக்கு 25 வரஷம் கழிச்சி வரார்...(கடுகடு கோபத்தோட உள்ளே வருவார்.... காரணம் அவர்தான் புள்ளைய அப்பவே கொல்ல சொன்னாரு இல்லை.... இப்ப ஒரு புது பிரச்சனை அதுக்கு காரணம் தன் சொல் பேச்சு கேட்காத டாக்டர்...)


    உள்ளே வந்து கிழ இறங்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைப்பார்.. அப்ப அவர் மொகத்துக்கு லைட் இருக்காது டக்குன்னு ஒரு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து முகத்துக்கு லைட்டை அழகாக வாங்கி கிட்டு மேல பார்ப்பார்... (இது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் , டெக்னிஷியன்களுக்கும் நன்றாக தெரியும்.)


    மிட் ஷாட்டுல இவர் மேல பார்ப்பார்... மேஜர் கீழ பார்ப்பார்... இரண்டு பேருக்கும் இன்டர்கட் ஷாட்டுல சிவாஜி திருட்டு பையன் போல மேல மேஜரை பார்த்துகிட்டு இருப்பார்.. அதுல கோபம் வெறுப்பு இயலாமை எல்லாம் இருக்கும்.... மேஜர் இறங்கி வரார் என்பதை கண்ணில் காட்டுவார்.. விழிகள் டிராவல் ஆகும் அதாவது அவர் மாடி படி விட்டு இறங்கி வருகின்றார் என்பதை கண்களில் குளோசப்பில் உணர்த்துவார்..


    இறங்கி வந்ததும்.... உட்கார சொல்லி விட்டு எதிர் இருக்கையில் மேஜர் அமருவார்... இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளமாட்டார்கள்.. இரண்டு பேரிடமும் டென்ஷன் ஓடிக்கொண்டு இருக்கும்.. பதட்டத்துக்கு மேஜர் பைப்பை நன்றாக புகைப்பார்..

    .
    சிவாஜிதான் முதலில் ஆரம்பிப்பார்...

    டாக்டர் என்னை உங்களுக்கு தெரியுதா? நான்தான் சங்கர்.... உங்க ஓல்டு பிரண்டு என்று சொன்னதும்.. எதுவும் பேசாமல் மேஜர் தலையசைத்து அதை ஆமோதிப்பார்.. (இரண்டு பேருக்கும் தனி தனி மிட் ஷாட்டுல கேமரா இருக்கும்.....)


    நாம சந்திச்சி ரொம்ப நான் ஆச்சி இல்லை என்று சிவாஜி சொல்லும் போது ரொம்ப வருஷம் ஆச்சி என்று மேஜர் சொல்லுவரர்..( அப்ப ஒய்டுல டூ ஷாட்டுல கேமரா இருக்கும்- சட்டுன்னுஉடனே மேஜர் பாயிண்ட் ஆப் யூ ல டூ ஷாட்ல டைட் பிரேம்ல ஒய்டுல இரண்டு பேரும் இருப்பாங்க...)


    எஸ் யூ ஆர் கரெக்ட்...25 வருஷம் கழிச்சி வந்து இருக்கேன்..


    ஆமாம்.. அப்போ பிறந்த குழந்தையை பார்க்க வந்திங்க...


    (சட்டென சிவாஜி ஆர்வமாக) இப்ப அந்த குழந்தையை பத்தி தெரிஞ்சிக்க வந்த இருக்கேன்.....
    ஏன் டாக்டர் அதை என்ன செஞ்சிங்க ..(அந்த அவலட்சனமான பிள்ளையை சிவாஜி..... குழந்தை என்று கூட அழக்க மாட்டார்.. அதை என்ன செஞ்சிங்க என்று விளிப்பார்...)


    நீங்க என்ன செய்ய சொன்னிங்க..? என்று மேஜர் கேட்க....?( சிவாஜி அதுக்கு குற்றஉணர்ச்சியில் எதுவும் பேசாமல் ஒரு ரியாக்ஷனை மட்டும் கொடுப்பார் அதன் பிறகு....)

    கொன்னுடசொன்னேன்....

    அதை நான் செய்துட்டேன்...

    பொய்..... (என்று சிவாஜிகோபமாக சொல்லுவார்)அந்த குழந்தை சாகவும் இல்லை.. உங்க வீட்டுலயும் வளர்க்கலை.. அதை எங்கேயோ கொண்டு போய் விட்டுடிங்க என்று சொல்ல..

    அதுக்கு மேஜர்,

    இல்லை அந்த குழந்தை செத்து 25 வருஷம் ஆயிடுச்சி என்பார்...

    கோபமாக சிவாஜி எழுந்து...

    இல்லை.. அவனுக்கு 25 வயசு ஆகுது... அவனை பத்திய முழு விபரமும் கண்டிப்பாக தெரிஞ்சாகனும்.. come on tell me the truth come on என்று சிவாஜி கத்த... அதுக்கு மேஜர் எழுந்து அவரும் கோபத்துடன் don’t be dare shout at me என்று மேஜர் கர்ஜிப்பார்... பெத்த புள்ளை கொல்ல சொன்ன உனக்கு என் எதிரில் நின்று பேச உனக்கு என்ன தைரியம் என்று ஆங்கிலத்தில் பொரிவார்...



    பைத்தியக்கரத்தனமான உன் பேச்சுக்களை எல்லாம் கேட்டு சகிச்சிகிட்டு இருந்த பழைய நண்பன் ராஜு இல்ல.. உங்க முன் நிக்கறது...just doctor raju to you…. என்று சொல்லுவார்... இந்த இடத்துல தன் இயலாமையால எதையும் பேச முடியாம சிவாஜி கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கே... சான்சே இல்லை..

    அதாவது உன் கிட்ட புள்ளை கொல்ல சொன்னா.. அதை விட்டு விட்டு அவனை அனாதை போல வளர்ந்து திருடனா ஆக்கி இருக்கே என்ற அடிப்படை கோபம்.. பாசக்கோபம்.. இவ்வளவு பணம் இருந்தும் தன் வித்து பிச்சைக்காரன் போல திருடுதே என்ற ஆதங்கம்.. அது எல்லாம் அந்த உடல் மொழியில் கண்களில் காண்பிப்பார்.. அதுக்கு மேஜரும் சளைக்காம ரியாக்ஷன் கொடுத்து இருப்பார்..


    டாக்டர் நீங்க ரொம்ப நல்லவர்.. ஆனா பொய் நிறைய சொல்லறிங்க.. உண்மை என்னன்னு எனக்கு தெரியும்.. நான் சொன்ன படி அவனை அன்னைக்கே கொன்னு இருந்தா.. இன்னைக்கு அவன் பிச்சைக்காரனா, திருடனா நடுத்தெருவுல அலஞ்சிகிட்டு இருக்க மாட்டான்...
    நோ... அப்படி இருக்கவே முடியாது... இதை நான் நம்பமாட்டேன்.. என்று மேஜர் சொல்லுவார்.


    நான் சொல்லறேன்... என் வீட்டுக்குள்ளேய திருட வந்தான்.. துப்பாக்கியால சுட்டேன் டாக்டர் சுட்டேன்...


    மகன் தெரிஞ்சுமா மனசு வந்து சுட்டிங்க...?


    ப்ச்சு... முதல்ல திருடன்னுதான் நினைச்சேன்... அப்புறம்தான் அவன் என் பிள்ளையா இருப்பானோன்னு யோசிச்சேன்... என்று சிவாஜி சொல்ல.
    .
    உடனே புள்ளை பாசம் உண்டாகி என் கிட்ட ஓடி வந்துட்டிங்க இல்லை என்று மேஜர் சரியான நக்கல் விடுவார்..

    அதுக்கு சிவாஜி.. என்னை கேலி செய்ய உரிமை உண்டு ராஜு.. ஐ மீன் டாக்டர் ராஜூ என்று சிவாஜி அவர் பங்குக்கு சொல்லுவார்.


    மிஸ்டர் ஷங்கர்... கொஞ்சம் சிந்திச்சி பாருங்க... ஒன்பது மாதங்களா தாயின் வயிற்றில் சிறையில் இருந்து... பத்தாவது மாசம் வெளிய வந்த உடனே கொலை செய்ய சொன்ன அந்த ஈவு இரக்கம் இல்லாத தகப்பன் எப்படி இருப்பான்? என்று பார்க்கும் ஆசையிலோ அல்லது வெறியிலேயோ உங்க பிள்ளை திருடனா வராம... திருடன் மாதிரி வந்து இருக்கலாம் இல்லையா? அதாவது நான் சொல்லறபடி சாகமா.. நீங்க சொல்லறபடி ஒருவேளை உயிரோடு இருந்து இருந்தா? என்று மேஜர் சொல்ல....


    சிவாஜி.. மேஜர் கிட்ட வந்து.. அழகான கற்பனை என்று சொல்லி விட்டு ஒருமைக்கு தாவி...ராஜூ நீ டாக்டருக்கு படிக்காம வக்கிலுக்கு படிச்சி இருந்தா நல்ல பேர் கிடைச்சி இருக்கும்டா என்று சொல்ல.,.. அதுவரை விரைப்பாய் இருந்த மேஜர் தன் நண்பன் தன்னை டா போட்டு பேசியதும் மகிழ்ச்சியில் இருவரும் மார்பில் செல்லமாக குத்திக்கொண்டு கட்டிப்பிடித்து கொள்ளும் காட்சி ஒன்று போதும்... சான்சே இல்லை.


    அயம் சாரி.. சங்கர்.. என்று மேஜர் சொல்ல....


    ராஜூ...


    சொல்லு சங்கர்.... என்று சொல்லியதில் இருந்து தன் மகனுக்காக பிளான்க் செக் கிழித்து கொடுக்கும் வரை நடக்கும் காட்சிகிள் உணர்ச்சி குவியல்கள்...


    கிளம்பும் நேரத்தில்... சித்தார் இசை கேட்க... கொல்ல சொன்ன பிள்ளையை இப்போதாவது எப்படி இருக்கின்றார் என்று நேரில் பார்க்க மனது துடிக்க.... ராஜூ , ராஜூ, ராஜூ, என்று பேசாமல் வீட்டை சுற்றி நடக்கும் அந்த காட்சியில் தகப்பன் பாசத்தை கண் முன்னால் நிறுத்தி இருப்பார் நடிகர் திலகம்.....


    உன் மகனை பார்க்கனுமா என்று மேஜர் கேட்கும் போது என்னால் எப்படி அவனை பார்க்கமுடியும்..? அதுக்கான அருகதை எனக்கு இருக்கா? என்பது போல் ரியாக்ஷன் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவார்...


    இந்த இடத்தில் அவர் வெளியே போகாமல் கேமரா பிரேம் அவுட் ஆகிவிட்டோம் என்று நினைத்து சிவாஜி அவுட் பிரேமில் நிற்பார்.. ஆனால் அவர் ஷேடோ சுவற்றில் தெரியும்.. அதை அப்படியே கட் பண்ணி இருக்கலாம்...பட் மேஜர் அந்த பிளாக் செக்கை கையில் வைத்து ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.... அதனால் அந்த ஷாட்டை ஷார்ப்பாக கட் பண்ணி இருக்கமாட்டார்கள்..

    கீழே முழு தெய்வமகன் படமும் இருக்கின்றது.. நான் மேலே விவரித்த அந்த காட்சி...1.41.47 நிமிடத்தில் ஆரம்பித்து 1.48.39 நிமிடத்தில் முடியும்.... அதில் முடியும் நேரத்தில் சிவாஜி வீட்டை வெளியே போகாத ஷேடோவையும் பார்க்கலாம்....


    அதுக்கு பிறகு பிள்ளை சிவாஜி பிளான்க் செக்கை எடுத்து போய் தன் தகப்பனை சந்திக்கும் அந்த காட்சியும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத உணர்ச்சி குவியல் அது...அது கிழே உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்........





    ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட வரிசைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படம் இது..
    இயக்குனர் ஏசி திருலோக சந்தர்..வசனம் ஆருர்தாஸ், இசை விஸ்வநாதன் கேமரா தம்பு என்று தன் பங்குக்கு அத்தனை பேரும் மிரட்டி இருக்கின்றார்கள்...


    மற்றபடி இந்த ஒரு சீன் போதும் இந்த படத்துக்கு... மற்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை...
    சிவாஜி என்ற அந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்...இது வைர விழா ஆண்டு... 1952 இல் பாரசக்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து 300க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்து கலையை உயிர் மூச்சாக கொண்ட அந்த கலைஞனுக்கு இந்த பதிவும் அவருடைய மலர் பாதங்களுக்கு காணிக்கை... என் அம்மா ஒரு சிவாஜி வெறியை...

    படக்குழுவினர் விபரம்.

    Directed by A. C. Tirulokchandar
    Written by Harur Daas
    Starring
    Sivaji Ganesan
    Jayalalitha
    Music by M. S. Viswanathan
    Cinematography Thambu
    Release date(s)
    September 5, 1969
    Country India
    Language Tamil

    http://www.jackiesekar.com/2012/10/d...agan-1969.html
    Last edited by sss; 8th October 2015 at 05:36 PM.

  4. #2913
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thank you Jackey Sekar....

    Quote Originally Posted by sss View Post
    திரு ஜாக்கி சேகர் ஒரு பன்முக பிரமுகர் ... அவரின் பக்கத்திலிருந்து ...


    Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.


    http://www.jackiesekar.com/2012/10/d...agan-1969.html
    Thank you Jackie Sekar sir. Watched so many times and particularly for the scene you have mentioned ie., meeting between NT and Major after 25 years. If same movie came in Hollywood then most of Oscars should had been gone for that movie only. What can we do our NT born in India and that too in Tamil Nadu.

    But our NT is always in our heart which is not even 1% of any award.

    We will keep talk about his acting every day and that's 1000 Oscars....

    Long live NT fame...

  5. #2914
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய தினகரன் சினிமா பகுதியில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி திரு கே.என். சிவராமன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் நடிகர் திலகத்தை குறைத்து எழுதுவதே பிரதானமாக தொனிப்பது வருத்தத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது.

    பல தவறான தகவல்கள் இன்றும் தொடர்வது, அதுவும் ஊடகங்களில் எழுதும் நிருபர்கள் தங்கள் சொந்தக் கருத்தை இதில் திணிப்பது இன்னும் தொடர்கிறது.

    முதலில் இந்த மூவேந்தர் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். சிவாஜி எம்.ஜி.ஆர். இவர்கள் இருவர் தான் ஆளுமை புரிந்தனர். இதை சமீபத்திய தொலைக்காட்சி சர்வே ஒன்றும் ஊர்ஜிதப் படுத்துகிறது.

    அதே போல உருவ ஒப்பீடுகளும் அளவீடுகளும் இதில் இடம் பெறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

    நடிகர் திலகம் தன்னுடைய மிகவும் இளமையான காலத்திலேயே வயதான பாத்திரங்களை ஏற்று நடித்தது இந்த ஆசிரியர் வசதியாக மறைத்து விட்டிருக்கிறார். இதைச் சொல்லக் காரணம், அவர் நடிகர் திலகத்தை ஒப்பீடு செய்வதால்.

    நடிகர் திலகம் வெள்ளைக்கார தோரணைக்கு மாறிக்கொண்டிருந்த போது என்று மறைமுகமாக நக்கலடித்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையறிந்து அதற்கேற்ற உடல் மொழியையும் உடையமைப்பையும் வகுத்தவர் நடிகர் திலகம். தேச பக்தி இன்று தமிழகத்தில் உயிரோட்டமாக நிலவுவதற்குக் காரணமே அவருடைய பாத்திரங்கள் தான். ஏதோ மேம்போக்காக ஒரு கமெண்ட் அடிப்பது சரியில்லை. உயர்ந்த மனிதன் வந்த போது உடனே அன்பளிப்பில் கிராமத்தானாக நடித்த படம் வந்தது. பார் மகளே பார் வந்த போது அதே ஆண்டில் கிராமத்தானாக கல்யாணியின் கணவனில் நடித்தார். ஒவ்வொன்றும் நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட பல படங்களை ஒரே சமயத்தில் தந்தவர், ஒரே சமயத்தில் நடித்தவரும் கூட. அவருடைய கால் தூசுக்குக் கூட நம் நாட்டில் எந்த நடிகனும் வர முடியாது.

    கட்டுரையாளரின் காழ்ப்புணர்ச்சியையே அவருடைய வரிகள் காட்டுகிறது.

    ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை என்ப்தை இந்த கட்டுரையாளருக்கு யாராவது உணர்த்தினால் நன்று.

    இந்தக் கட்டுரையாளரை மட்டுமல்ல, பொதுவாகவே நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதெல்லாம் தயவு செய்து ஒப்பீட்டைத் தவிருங்கள்.

    அவரவர் தங்கள் பாட்டுடைத் தலைவரை புகழ்வது அவரவர் விருப்பம், உரிமை. ஆனால் அது இன்னொருவரை ஒப்பிடும் போதோ அல்லது அதன் மூலம் அப்படி ஒப்பிடப்படுபவரின் அபிமானிகளை மனதளவில் காயப்படுத்தும் போதோ விவாதங்களும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தவிர்க்க முடியாதவையாகும்.
    Last edited by RAGHAVENDRA; 9th October 2015 at 11:23 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2915
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அக்டோபர் 7-9, 2015 தேதியிட்ட நக்கீரன் வார இதழில் வெளிவந்துள்ள கங்கை அமரன் அவர்களின் கட்டுரை.







    திரு கங்கை அமரன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தகவலுக்கு நன்றி கோவை டாக்டர் ரமேஷ் பாபு சார்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2916
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையை கலக்கிய உத்தமன்

    அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் உத்தமன் திரைப்படத்திற்கான தியேட்டர் அலங்கரிப்பு வேலைகளைச் செய்தது. அ.இ.துணைத்தலைவர் திரு.கா.சுந்தராஜன், அ.இ.பொதுச்செயலாளர், திரு. நா.ரமேஷ்பாபு, மாவட்டத்தலைவர், திரு. எம்.சோமசுந்தரம் மற்றும் மாவட்டச்செயலாளர் அண்ணாநகர் திரு.எம்.பழனிச்சாமி ஆகியோர் அனைத்து அலங்கார வேலைகளையும் செய்தனர். அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸை சேர்ந்த ராஜன், குமார் ஆகியோரும் தியேட்டர் அலங்கரிப்பு வேலைகளில் தங்களை இணைத்துக் கொண்டனர். திரு.வெங்கடேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் இருவரும் நடிகர்திலகம் நடித்து சென்ட்ரல் திரையரங்கில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை, ஓடிய நாட்கள், வசூல் அடங்கிய சாதனையை விளக்கும் ஃப்ளக்ஸ் வைத்திருந்தனர். இதைப் பார்த்தவர்கள் அனைவரும் தங்களது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது சிறப்பு.
    படம் வெளியான நாள் முதலே வசூலை அள்ளிக் குவித்தது. எல்லாற்றிற்கும் முத்தாய்ப்பாக ஞாயிறு மாலைக் காட்சி சென்ட்ரல் தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது.
    சென்னையில் இருந்து திரு.ஜெயக்குமார், நாகர்கோவிலில் இருந்து ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடும் திரு.பாலகிருஷ்ணன், திருச்சியில் இருந்து திரு.ராமச்சந்திரன் முக்கியமாக திண்டுக்கல்லில் இருந்து மாலையுடன் களமிறங்கிய அருமை நண்பர் திரு.நவரத்தினம் மேலும் சிவகெங்கையில் இருந்து நமது தலைவரை கவிதையால் புகழ்பாடும் திரு.ஆதவன் ரவி ஆகியோர் வந்திருந்து படத்திற்கு சிறப்புச் சேர்த்தனர்.
    கூட்டம் அதிகமாகி்க் கொண்டே போன காரணத்தினால் 5.45 மணிக்கே டிக்கெட் கொடுக்கபட்டது. தலைவரின் கட்அவுட்டுக்கு மாலைகள் குவிக்கப்பட்டன. ரசிகர்கள் நமது தலைவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 5.35 படம் போடும் தியேட்டர் ஆபரேட்டர் கூட்டம் அதிகமாவதைக் கண்டு 5.20க்கே படம் போட்டுவிட்டார். மாலைகள் அதிகமாகிக் கொண்டே போக தலைவரின் கட்அவுட்டுக்கு மாலை போட்ட நமது நண்பர் நாகராஜ் அவர்கள் ஒரு பாடல் போன பிறகு தான் படம் பார்க்க முடிந்தது.
    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த திரு.குமார், திரு.கார்த்திகேயன், சின்னத்தம்பி இவர்களுடன் வி.சி.சேகர் அவர்களும் இனணந்து வந்திருந்த ரசிகர்களுக்கு சேமியா கேசரி கொடுத்தனர். மதுரை கரிமேடைச் சேர்ந்த திரு.பொன்ராம் என்பவர் குஸ்காவும் மட்டன் குருமாவும் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து விட்டார் நமது தலைவர் உத்தமன் சிவாஜி.
    ஞாயிறு மாலைக்காட்சி மட்டும் வசூல் 14,500ஐ குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையின் ஒரு பகுதியில் திடீரென்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் திரையிப்பட்டுவிட்டது. இல்லையென்றால் 16.500 முதல் 17,000 வசூல் வந்திருக்கும். நமது ரசிகர்கள் பிரிந்து விட்டனர் இவ்வளவுக்கும் அந்த விநியோகஸ்தரிடம் நாங்கள் ஏற்கனவே உத்தமன் படம் வருவதால் ஒரு வாரம் தள்ளி கட்டபொம்மனைத் திரையிடுங்கள் என்று கூறினோம், ஆனால் விநியோகஸ்தர் யாருடைய துாண்டுதலாலோ படத்தை அதே தேதியில் திரையிட்டு விட்டார். இதில் விசேசம் என்னவென்றால் அந்த தியேட்டரில் எந்த படம் போட்டாலும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் தான் ஓடும் ஆனால் கட்டபொம்மன் 5 நாட்கள் ஓடி அங்கேயும் நமது தலைவரின் படம் சாதித்து விட்டது.
    உத்தமன் திரைப்படம் தலைவரின் பெரிய சாதனைப் படமல்ல ஆனால் மதுரை சென்ட்ரலில் ஒரு வாரத்தில் 95,000 வசூலை ஈட்டியுள்ளது. மதுரை விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது நிதர்சனமான உண்மை. தியேட்டர் நிர்வாகத்திற்கோ மிகவும் சந்தோசம். ஞாயிறு மாலைக் காட்சியின் போது தொடர்ந்து நமது தலைவரின் படங்களை திரையிட்டு வரும் தியேட்டர் பங்குதாரார் பெரியவர் ஐயா திரு.சுந்தரம் அவர்களை தலைவரின் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தரகள் சந்தித்து தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.







    மேலும் படங்கள் தனிப்பக்கத்தில் காண http://www.sivajiganesan.in/uthaman%20th.html கிளிக் செய்யவும்.


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

  8. #2917
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அமுத சுரபி அக்டோபர் 2015 இதழிலிருந்து..









    நன்றி கோவை பிரபு அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2918
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் அறிந்தவர்...
    தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விஜயம் செய்தவர்..
    புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழைந்து விடும் என்பார்கள் அந்தக் காலத்தில்.. அந்தப் போலீஸே நுழைந்திராத கிராமங்களிலும் கூட நுழைந்தவர் மக்கள் தலைவர் சிவாஜி..
    பட்டி தொட்டியெங்கும் காங்கிரஸ் இயக்கத்தை பரப்பியவர்..
    பட்டி தொட்டியெங்கும் காங்கிரஸ் கொடி ஏற்றியவர்..
    சென்ற இடமெல்லாம் பெருந்தலைவரை அறிமுகப் படுத்தியவர்..
    திராவிட இயக்க சுனாமியைத் தன்னந்தனியாய் சந்தித்து தன் சக்தியென்னும் மாபெரும் சுவற்றால் எதிர் கொண்டு காங்கிரஸ் என்னும் வீட்டைக் காப்பாற்றியவர்...
    ஊட்டி மலை உச்சியானாலும் சரி, தெக்கண பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி..
    அங்கே வெளிச்சம் இருக்கிறதோ இல்லையோ... சிவாஜி என்னும் பெயர் இருக்கும்...

    எந்த மூதாட்டியைக் கேட்டாலும் தவறாமல் அடையாளம் காணும் முகம் ...
    எந்த சலூனில் பார்த்தாலும் போர்டில் இடம் பெற்றிருக்கும் முகம்...
    எந்த ஜவுளிக்க்டையானாலும் போர்டில் இடம் பெற்றிருக்கும் முகம்...

    ஒவ்வொரு கிராமும் சென்று பார்த்தால்.. அங்கே திரும்பிய திசையெல்லாம் சிவாஜியின் திருமுகம் தான் காட்சியளிக்கும்..

    இந்த அளவிற்கு தமிழ் சமுதாயத்தோடும் தமிழ் இல்லங்களோடும் இரண்டறக் கலந்து விட்ட

    அந்த மாபெரும் தலைவன் மக்கள் தலைவன் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளது..

    கங்கை அமரனின் கட்டுரை..

    உளமார்ந்த நன்றி ஐயா...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2919
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    11.10.2015 ஞாயிறு மாலை திருச்சிராப்பள்ளியில் அகில இந்திய சிவாஜி மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடைபெற உள்ள நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்.



    நிழற்படம் நன்றி திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2920
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    பாடலைப் பாடியவர் லதாவாம். சூ

    அதுதான் வாசு சார், கண்ணா நீ வாழ்க...லதா எ புஷ்பலதா...



    அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் ... இது கூட அவங்க தானே...

    இந்தப் பாட்டில் கூட தலைவரும் மெல்லிசை மன்னரும் விளையாடி இருப்பார்கள்..

    மெல்லிசை மன்னர் இப்பாட்டிற்கு வித்தியாசமான லயத்தை உபயோகித்திருப்பார். அந்தத் தாளக் கட்டே மிகவும் ரம்மியமாக இருக்கும். இசைக் கருவிகளே வேண்டாம், அதையே கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் எனத் தோன்றும்.

    தலைவரோ கேட்கவே வேண்டாம். அந்தத் தாளக்கட்டிற்கேற்ப அந்தக் குழந்தையின் இடுப்பில் தாளம் போடும் காட்சி கண்கொள்ளாக் காட்சி...

    அதுவும் அந்தக் குழந்தை மாமாவின் மனசோ வெள்ளை மனசு, மறந்தும் அதிலே களங்கமில்லை என்ற வரிகளின் போது தியேட்டராக இருந்தால் அவ்வளவு தான்...உடனே தாளம் சற்றே மாறி பாடல் சிறிது ஸ்லோவாகி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும்.

    அந்த சரணம்... நினைத்தாலே மெய்சிலிர்க்கும்..

    ஊருக்கு அவரோ கோமாளி
    இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
    நாளைக்கு அவர் தான் மேதாவி
    என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி...

    இந்த வரிகளை தலைவர் ஆமோதிப்பது போல் தன் முகத்தில் காட்டும் பாவனை.,..

    இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் இப்படி ஒர் மக்கள் தலைவனும் கிடைப்பார்களா..

    ...

    மன்னிக்கவும் நடிகர் திலகம் திரியில் போட வேண்டிய பதிவை லதாவுக்காக இங்கே போட்டு விட்டேன்...

    அதனாலென்ன ... அங்கேயும் போட்டால் போச்சு...
    .... மதுரகானம் திரியில் போட்ட பதிவு... மீள் பதிவாக இங்கே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •