Page 15 of 401 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #141
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்

    நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்க்வே செய்யும்.

    குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக Hawaiian Guitar இசைக் கருவியை பிரதானமாக வைத்து இப்பாடலை அமைத்திருப்பார். சில சமயம் இது மேண்டலினை நினைவூட்டும். ஆனால் மேண்டலினுக்கு சிறந்த உதாரணம் உத்தம புத்திரன் படத்தின் யாரடி நீ மோகினி பாடல்.

    இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #142
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அபூர்வ தகவல்கள் சிவாஜி

    * நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)

    *

    ** கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.

    *

    ** சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா? அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.

    *

    ** சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர

    *ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் சிவாஜி கணேசனுக்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள். அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

    *

    ** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.

    *

    ** நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'

    *

    ** பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.

    * பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.

    *

    ** சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.

    *

    ** பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.

    *

    ** இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.

    *

    ** எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

    *

    ** மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.

    *

    ** தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும்.

    *

    ** தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும்).

    *

    ** நடிகர் திலகம் கெüரவ வேடத்தில் நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன், குழந்தைகள் கண்ட குடியரசு, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாயே உனக்காக, சினிமா பைத்தியம், உருவங்கள் மாறலாம், நட்சத்திரம், தாவணிக் கனவுகள், மருமகள், சின்ன மருமகள், பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன், என் ஆச ராசாவே, மன்னவரு சின்னவரு, புதிய வானம், ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் ஆகியவை.

    *

    ** நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா, பலே பாண்டியா (3 வேடங்கள்), தெய்வ மகன் (3 வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்), நவராத்திரி (9 வேடங்கள்) .

    *

    ** "பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .

    *

    ** படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.

    *

    ** பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.

    *

    ** ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.

    *

    ** ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.

    *

    ** நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.

    *

    ** நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

    *

    ** நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

    *

    ** நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

    *

    ** விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி படத்தில் நடிகர் திலகத்துக்கு அக்காவாகவும் நடித்துள்ளார்.

    *

    ** தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.

    *

    ** குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.

    ** பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.

    *

    ** மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார்.

    *

    ** தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.

    *

    ** "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.

    *

    ** இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

    *- சிவ.குகன்


    *

    *

    *

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #143
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dr. A.P.J Abdul Kalam Wanted Chiyaan Vikram To Become Like Sivaji Ganesan


    Vikram has shared his own piece of experience of meeting Dr. A.P.J Abdul Kalam when the actor was blessed with an opportunity to meet India's greatest visionary when he was serving the nation as the President. Walking down the memory lane with a heavy heart, the National Award winning actor has said, "I was very excited the moment I came to know that he wanted to meet me. I wanted to make sure my kids Akshita and Dhruv get to meet Mr. Kalam as he is a great inspiration for young minds." Though Vikram says he was happy that his kids got to speak to him and were made to sit on his lap, what India's President back then had told him would reverberate in Vikram's mind forever. The missile man of our country has said, "I have not seen movies in the past 25 years but I know your hard work and I want you to become like Nadigar Thilagam Sivaji Ganesan". Vikram says he was dumbstruck when those words flew out of the great man's mouth. Vikram went on to add that he would never forget that day and Abdul Kalam's demise is indeed a great loss to our country.

    Read more at: http://www.filmibeat.com/tamil/news/...an-192442.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw, eehaiupehazij liked this post
  8. #144
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Ayyo ayyo. Adhu seri. idhu vikrame sonnaara.. avaru yen sivaji ya mention kooda pannalanu purila inga:

    http://www.rediff.com/movies/report/...h/20150114.htm

    I like different actors for different things.

    I like Salman Khan for the way he carries himself. His self-confidence is fantastic.

    I love what he did in Tere Naam, which was a remake of my film Sethu. He’s a close friend. When I went to his home, the only trophy he had in his living room was that of Tere Naam.

    I like Kamal Haasan’s daring choice of roles. When I was in school and college, I modelled myself on him.

    I was so much in awe of him. I used to do my scenes like him until I did Sethu. Then I made a conscious decision to move away from Kamal Haasan’s influence.

    Next day rajini fan naan. Andhar balti Vikram

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #145
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    குங்குமம் -52

    சென்ற ஞாயிறன்று [ஜூலை 26] அன்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் குங்குமம் திரைப்படம் திரையிடப்பட்டது. 1963 ஆகஸ்ட் 2 அன்று வெளியான இந்த படம் 52 வருடங்களை நிறைவு செய்திருக்கும் தருணம்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பே குங்குமம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இந்த படத்தை திரையிடலாமா என்ற எண்ணம் தோன்றியபோது சற்றே தயங்கினோம். காரணம் வெளியான டிவிடி பிரிண்ட்கள் எதுவும் தெளிவாக இல்லை. ஆகவே குங்குமம் திரையிடல் தள்ளிப் போனது. அதன் பிறகு இரண்டு மூன்று நிறுவனங்கள் குங்குமம் படத்தின் நெடுந்தகட்டை மீண்டும் வெளியிட்டன. அவற்றையும் வாங்கி நாம் பரிசோதித்தபோது அவையும் முன்பு வெளிவந்த டிவிடிகளை விட பெட்டர் என்ற போதிலும் நல்ல பிரிண்ட் என்று சொல்ல முடியாத சூழல். இதற்கிடையில் நமது அமைப்பில் பல உறுப்பினர்கள் இந்த படத்தை திரையிடுமாறு நமக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டேயிருந்தனர்.

    இந்த சமயத்தில்தான் சன் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் சன் லைஃப் சானலில் ஒரு நாள் குங்குமம் ஒளிப்பரப்பாகியது என்ற செய்தி கிடைத்தது [அன்று என்னால் பார்க்க முடியவில்லை]. எப்படிப்பட்ட பிரிண்ட் என்று கேட்டதற்கு ஓஹோ என்று சொல்லமுடியாது. இருந்தாலும் ஓகே என்ற தகவல் கிடைத்தது. அதை பதிவு செய்து வைத்திருந்த நண்பர் ஒருவரிடமிருந்து மற்றொரு டிவிடியில் பதிவு செய்து வாங்கினோம். உறுப்பினர்களுக்கு தகவல் சொன்னோம்.

    சிறந்த நடிகை என்ற தேசிய விருதை மூன்று முறை பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி சாரதா அவர்கள் தமிழில் இந்த படத்தில்தான் அறிமுகமானார். ஆகவே அவரை சென்று அழைத்தோம். இத்தனை வருடங்களுக்கு பிறகும் தன்னை நினைவு வைத்துக் கொண்டு வந்து அழைத்ததில் நெகிழ்ந்து போன சாரதா அவர்கள் வருவதற்கு சித்தமாக இருந்தார். ஆனால் அவர்கள் குடும்பத்தில் நடைபெற இருக்கும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்த அவரால் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

    அதே போல் இந்த படத்தின் மிகப் பெரிய ரசிகரான இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர் அவர் வீட்டில் நடக்க இருக்கும் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டார்.

    படம் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களில் கிருஷ்ணனின் மகள் வயிற்று பேத்தி திருமதி ஜோதி கலந்துக் கொண்டார். ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தார்.

    திரையிடலுக்கு முன்பு படத்தைப் பற்றி குறிப்பிட்ட நாம் இந்த படத்திற்கு நேர்ந்த ஒரு தடையை பற்றியும் குறிப்பிட்டோம். என்னவென்றால் கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார்.

    படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.

    சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.

    மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது.

    படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும். அன்றைய நாளில் படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனாலும் மறு வெளியீடுகளில் படம் சக்கை போடு போட்டதையும் குறிப்பாக 80-களில் பாரகன் அரங்கில் 21 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் அதன் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் ஷிப்டிங் செய்யபட்டதையும் எடுத்துக் கூறினோம்.

    தன் அருமை நண்பன் பந்துலுவிற்காக அவர் நஷ்டப்படக் கூடாதே என்பதற்காக கிட்டத்தட்ட தன் சொந்த கம்பெனி போன்ற ராஜாமணி பிக்சர்ஸ், சொந்த சகோதரன் போன்ற மோகன் ஆர்ட்ஸ் மோகன் (தயாரிப்பாளர்), தன்னை அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு போன்றவர்களை விட பந்தலுவிற்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகர் திலகத்திற்கு பந்துலு செய்த பதில் மரியாதை? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதுதானே நடிகர் திலகத்தின் ஜாதக அமைப்பு!

    இயக்குனர் கிருஷ்ணன் பராசக்தி படத்தின் படப்பிடிப்பின்போது எப்படி நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் பெயரில் வைத்திருந்த மதிப்பையும் செவாலியே விருது பெற்ற சேப்பாக்கம் மேடையில் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கியதையும் நினைவு கூர்ந்தோம்.

    மேற்சொன்ன இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு நாம் பேசி முடித்தவுடன் சிறப்பு விருந்தினர் திருமதி ஜோதி அவர்கள் பேசினார்கள். இரண்டு விஷயங்களுக்காக வெட்கப்படுகிறேன் என்று ஆரம்பித்தவர் முதல் விஷயம் இப்படி ஒரு அமைப்பு மூன்றரை வருடங்களாக இயங்கி வருவதை அறியாமல் இருந்ததற்காகவும் தன் பாட்டனாரை பற்றி தான் அறிந்தவற்றை விட மற்றவர்களுக்கு கூடுதல் தெரிந்திருப்பதை இரண்டாவது விஷயமாகவும் குறிப்பிட்டார். சினிமா சம்மந்தப்பட்ட குடுமபத்தில் பிறந்திருந்தாலும் தான் அதிகம் சினிமா வாடை அடிக்காமல் வளர்க்கப்பட்டதை சொன்ன அவர் அன்றைய நாட்களில் அனைவரும் எப்படி ஒரு குடும்பமாக பழ்கினார்கள் என்பதை சொன்னார். இயக்குனர் பீம்சிங் எப்படி கிருஷ்ணன் குடும்பத்தில் உறவினராக மாறினார் என்பதையும் குறிப்பிட்டார். இனி ஒவ்வொரு நிகழ்விற்கும் தான் நிச்சயமாக வர விரும்புவதாகவும் சொன்ன அவர் தன குடும்பத்தினரை அழைத்து வராததை குறிப்பிட்டு இனி அவர்களையும் அழைத்து வருவேன் என்று சொன்னார். நமது அமைப்பின் சார்பாக குங்குமம் 52 என்று பெயர் பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அவருக்கு நமது நிர்வாக குழு உறுப்பினர் திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.

    அவருக்கு பிறகு பேசிய திருமதி ஜெயந்தி அவர்கள் திருமதி ஜோதி சொன்ன ஒரே குடும்பம் என்பதை வழி மொழிந்தார். அதற்கு உதாரணமாக தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தானும் பீம்சிங் மகள் சுசித்திராவும் நடிகர் திலகத்தின் இளைய மகள் திருமதி தேன்மொழி அவர்களும் சென்றதை நினைவு கூர்ந்தார். இசையரசி சுசீலாம்மா இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மருமகள், இயக்குனரின் மகள், ஹீரோவின் மகள் அனைவரும் சேர்ந்து வந்து கலயாணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது வராமல் இருக்க முடியுமா என்று கேட்டதையும் சொன்னார். மேலும் அவர் பேசுகையில் அன்றைய நாட்களில் நாங்களெல்லாம் சிறுவர்களாக இருந்தபோது சிவாஜிப்பா படம் வெளியாகிறது என்று சொன்னால் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று வீட்டில் உடனே கூட்டி சென்று விடுவார்கள். வேறு படங்களுக்கு அப்படி கூட்டி செல்ல மாட்டார்கள் என்று சொன்னார்.

    அவருக்கும் நமது அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு படம் திரையிடப்பட்டது.

    இங்கே நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல் அன்று மதியம் 4 மணி சுமாருக்கு கட்டபொம்மன் சிறப்பு காட்சி நடைபெற்றது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினருக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியில் நமது ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக சிலரால் குங்குமம் படத்திற்கு வர இயலவில்லை. மேலும் அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலை மாங்கொல்லையில் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் சன் லைஃப் தொலைக்காட்சியில் உத்தம புத்திரன் திரைக்காவியமும் முரசு தொலைக்காட்சியில் பாவ மன்னிப்பு திரைக் காவியமும் ஒளிபரப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி குங்குமம திரையிடலுக்கு வந்த கூட்டம் நம்மை ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தினாலும் நடிகர் திலகத்தின் reach நமக்கு தெரிந்ததுதானே!

    அன்புடன்

  11. #146
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

    குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்
    Raghavendhar Sir
    நான் பெற்ற செல்வம் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிசையில் நடிகர்திலகத்தின் மிக மிக இயல்பான இதமான அதே சமயம் அழுத்தமான நடிப்பினை பதிவு செய்த காவியம்.

    படத்தின் தலைப்பிலேயே வரும் பாடலில் அன்பு மனைவியின் இழப்புக்குப் பின் குழந்தையை சிரமங்களுக்கு இடையே வளர்த்திடும் சோகச் சுமையை அதியற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் !



    சிறுவர்கள் ஒன்றுகூடி பாடும் மாதாபிதா குரு தெய்வம் ( குழந்தைகளை நேசித்த அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவரஞ்சலியான பாடல்) பாடல் காட்சியிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தாது(கடவுளை நம்பு என்ற வாசகங்கள் கொண்ட ஒரே ஒரு பிரேமில் வருவார்! என்றும் எங்கள் நடிப்புக் கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்பதே எதார்த்தம்!) ஓரமாக நின்று ரசிக்கும் அவரது முக பாவங்கள் ஒப்பிட முடியாதவையே!

    Last edited by sivajisenthil; 31st July 2015 at 02:50 AM.

  12. #147
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் நடைபெற்ற குங்குமம் 1952 நிகழ்ச்சியைப் பற்றிய முரளி சாரின் பதிவிற்கு இணைப்பாக..

    நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு

    திருமதி ஜோதி அவர்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்



    திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள்



    நமது அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சிறப்பு விருந்தினர் அவர்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes sss, vasudevan31355, Russellmai liked this post
  14. #148
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like




    ...

    Kattabomman to roar again

    The king of Panchalankurichi, Veerapandiya Kattabomman, is all set to roar again with Jackson Durai, on an upgraded digital 5.1 surround sound format. Veerapandiya Kattabomman, a classic film, will be released soon. A trendsetter and considered a benchmark on dialogue delivery, the film has a scene in which Kattabomman and Jackson, an East India Company representative , light up the screen in what has now become film lore.

    Raj Television Network has digitally restored the film with re-recorded background music with ‘digital intermediates’ (DI) and conversion of the 35-mm film to digital scope. The trailer of the historic movie was released in March, creating a buzz among Sivaji fans and film buffs alike.

    Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, V.K. Ramaswamy and other senior artistes are in the cast of the film, produced by Padmini Pictures.

    Music was scored by G. Ramanathan and directed by B.R. Panthulu. The screenplay was written by Ma. Po. Sivagnanam, while story and dialogue were scripted by Sakthi T.K. Krishnasamy.

    DI restoration and cinemascope were done by Raj TV. Raj TV owns the rights of many old Tamil classics like Aayirathil Oruvan, Karnan, Pasamalar and Ninaithaaley Inikkum which were restored and received well by fans with record box-office collections on their release in their new avatar.
    Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/news/cities/...cle7484458.ece
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #149
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    And the story continues



    Vikram Prabhu on his upcoming release and memories of growing up in the landmark Annai Illam, the house of his grandfather Sivaji Ganesan

    “This place is very special to me,” says Vikram Prabhu, as he poses for our photographer against a picture of his grandfather, “Every day, I stand here, and pray for a while before I head out.”

    We’re at the landmark Annai Illam at Chevalier Sivaji Ganesan Road (South Boag Road) that has seen the who’s who of tinseltown in the last five decades, since the family moved here.

    “It has always been full of people,” he says, “Thatha used to sit in the hall, interacting with visitors. He loved the house.”

    It would’ve looked busy then, but it’s silent now, with a few domestic help scurrying around. Lovely portraits of Sivaji Ganesan adorn the walls, four fans run suspended from the high ceiling and the chandeliers are big and bright. It echoes when you speak; the high windows are almost always open.

    Vikram is busy this week; he has a film, Idhu Enna Mayam, releasing today. He’s just back from London, where he holidayed for a week, while also promoting his release. “Vijay, the director of the film, has a knack of eliciting subtle performances from his actors. He narrated a 15-minute storyline and I really liked the idea. It’s a youthful story, and can be watched by all audiences,” he says about the rom-com.

    It’s coming back to this colourful, urban role that got Vikram hooked, after his rural outing in his last film Vellaikara Durai. It was too commercial, people said. He agrees, “It took me three days to go watch it because I couldn’t initially see myself doing such a film.”

    But it’s the kind of film that works, he feels, because there are audiences who like to indulge in such storylines. “There are always people watching commercial flicks,” he explains. “When you go to parts of rural Tamil Nadu and walk the streets there, you get a better perception of how the business works. Having said that, there are audiences here too who like such films. In fact, I asked Vijay (director of Idhu Enna Mayam) to watch that film. He watched it at Sathyam and loved it.”

    Vikram debuted in Tamil cinema with the hit film Kumki and went on to do others like Arima Nambi and Sigaram Thodu. Point out to him that these flicks did not enjoy the same kind of buzz that his debut vehicle did, and he says, “Kumki was a once-in-a-lifetime sort of a project. A film like Baahubali today has to rely on CG to bring out scenes featuring animals; we did it with live elephants while shooting Kumki. While I’d like all my projects to be as successful as my debut, it cannot be so. I’d like to try out films in different genres; that’s the only way to grow as an actor.”

    He learnt that primarily at San Diego, where, despite going for an engineering degree, he decided to shift tracks to acting. “I loved theatre, I was interested in direction,” he recalls. “I took up an advanced acting course and directed a three-hour play there.”

    And from theatre came his dreams to enter films. “Didn’t my grandfather do the same thing,” he smiles. “I knew that when I got back to Chennai, I wanted to be part of the movie business. I spent a couple of years in Sivaji Productions, our production house, and then got interested in facing the camera.”

    Wasn’t that always on the cards, considering that he hailed from an illustrious family closely linked with the movie world? “When we were in school, it was always about studies. My grandfather always thought that if he had studied and knew English better, he’d have done better for himself. So, he wanted us kids to get a good education before we decided what we wanted to do with our lives,” he recalls.

    It’s those good old times at Annai Illam that were an integral part of Vikram Prabhu’s growing-up years. “We were a huge, joint family. And we looked forward to Sundays. We always gathered for lunch and it would be a feast that we’d cherish,” says the actor, pointing out that living in a joint family taught him to understand people better.

    Vikram grew up almost unaware of his grandfather’s superstardom. “At home, he was just a grandfather. He loved spending time with us, perhaps because he didn’t get to spend a lot of time with his children.” It was during the re-release of Saraswathi Sabatham, which Vikram watched as a young boy, that he actually understood how much Sivaji Ganesan was revered. “I remember that day in the theatre. It was just a re-release but people were going mad, chanting, crying and reciting all the dialogues.”

    He’s looking forward to experiencing that euphoria again, as a re-release of the thespian’s Veerapandiya Kattabomman is lined up. “I’ll surely watch it FDFS with his fans,” he says, “It will be such an experience.”
    Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/features/met...cle7481657.ece
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. #150
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by shwas View Post
    Ayyo ayyo. Adhu seri. idhu vikrame sonnaara.. avaru yen sivaji ya mention kooda pannalanu purila inga:

    http://www.rediff.com/movies/report/...h/20150114.htm
    அதுதானே பார்த்தேன்....!

    ஏதுடா ! நடிகர் திலகத்தை பற்றி நல்ல ஒரு செய்தி வந்தால் உடனே நொட்டை சொல்ல நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரவது ஒருவர் ராஜா மாதிரி குதிரையில வருவாரே..... இது வரை வரவில்லையே என்று பார்த்தேன் திரு.ஸ்வஸ். நல்ல வேளை அந்த வழக்கத்தை நீங்கள் மாற்றாமல் வந்து பதிவு செய்ததற்கு நன்றி !

    இனி உங்கள் கேள்விக்கு எனது பதில். ...

    நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் (http://www.rediff.com/movies/report/...h/20150114.htm) இருப்பது விக்ரமே கூறியதா ?

    ஆனால் இந்த லிங்கில் (Read more at: http://www.filmibeat.com/tamil/news/...an-192442.html) விக்ரம் இப்படி கூறியிருக்கிறாரே.....? மற்ற நடிகர்களை பற்றி எதுவுமே கூறவில்லையே ?

    மேலும்....ஒரு விஷயம்....

    நாம் நடைமுறையில் ஒரு சிலரை இம்ப்ரெஸ் செய்ய பல விஷயங்களை கூறுவோம்...அது அனைத்தும் அடுத்த நிமிடமே மறந்துவிடும்...!

    ஆனால் நம்மிடையே ஒரு மகானோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த நல்ல மனிதர்களோ இவர்களை போல வாழவேண்டும்....இவரை போல நாம் நல்ல விஷயங்களை பின்பற்றவேண்டும் என்று கூறினால் அதனை நாம் ஆயுள் உள்ளவரை மறக்கவே மாட்டோம்...!

    அப்படிப்பட்ட ஒன்று தான் மறைதிரு அப்துல் கலாம் நடிகர் விக்ரமிடம், நீங்கள் நடிப்புத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல வரவேண்டும் என்று கூறியது ! ...

    இந்த STATEMENT நடிகர் திலகம் அவர்களுடைய STANDARD ஐ வலியுறுத்தும் ஒரு விஷயம் ஆகும்...!

    திரு கலாம் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாதெனில் ..இதர பத்தோடு ஒன்று பதினொன்று என்ற ரக நடிகர்களை போல வராமல், நடிகர் திலகம் போல ஒரு நல்ல நிலையில் நடிப்புத்துறையில் வரவேண்டும் என்பதே அதன் பொருள் !

    மறைதிரு கலாம் போன்ற ஒரு விஞ்ஞானி இப்படி ஒரு அறிவுரை கூறுகிறார் என்றால் நடிகர் திலகம் எந்தளவிற்கு, மிகச்சிறந்த திறமைசாலி மறைதிரு அப்துல் கலாம் அவர்கள் மனதில் பதிந்துள்ளார் என்பதுதான் இந்த பதிவிலிருந்து புத்திசாலிகள் புரிந்துகொள்ளகூடிய பாடம் திரு ஸ்வஸ் அவர்களே !

    புத்திசாலிகள் அதனை சரியாக புரிந்திருப்பார்கள் என்பது எந்த சந்தேகமும் வேண்டாம் !
    Last edited by RavikiranSurya; 31st July 2015 at 09:20 PM.

  18. Thanks sss, vasudevan31355 thanked for this post
    Likes sss, vasudevan31355, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •