Page 131 of 401 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1301
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    எந்த அப்போனட பணத்தில் எல்லோருக்கும் மணிமண்டபம் கட்டினார்களோ அந்த பணத்தில் தான் பல் நல்ல காரியங்கள் நாட்டுக்கு செய்த நல்ல மனிதர் சிவாஜிக்கும் கட்ட போகிறார்கள்.தமிழென்று நில்லடா தமிலனேன்றும் நில்லடா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1302
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்பது சிவாஜி ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பொதுமக்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் அரசின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது. இந்த வாதத்தை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்கலாம் ஆனால் தர்மம், நியாயம், மனசாட்சி உள்ளிட்ட யாராலும் ஏற்க முடியாத நிலைப்பாடாகும். மணிமண்டபம் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பு நமது உள்ளத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அரசின் நிலைப்பாடு மறக்கடிக்கச் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் சிலையில் தான் விழவேண்டும் என்கின்ற அளவிற்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு தலைவர்களின் சிலைகள் சாலைகளின் நடுவில் தான் அமைந்துள்ளன. அவையெல்லாம் ஏற்படுத்தாத இடைஞ்சலையா நடிகர் திலகத்திற்கென அமைக்கப்பட்டுள்ள சிலை ஏற்படுத்தப்போகிறது.

    சிலையை எடுப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் தமிழினத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றும் நடிகர் திலகத்திற்கு இது ஒரு அவமரியாதையாகத்தான் வரலாறு சித்தரிக்கும். அதுதான் உண்மையும் கூட. அப்படி அகற்றித்தான் தீரவேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், அதே கடற்கரை காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் இடையில், குறிப்பாக காமராஜரின் சிலையை ஒட்டி அதற்கருகிலேயே நடிகர் திலகத்தின் சிலை அமைக்கவேண்டும். மணிமண்டபத்திற்கெனத் தனியே சிலை செய்து வைக்க வேண்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  5. #1303
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1304
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "நேத்து நான் குடுத்த
    முட்டாயெல்லாம் கக்கு" -என
    சண்டையிடும்
    சின்னப் பிள்ளைகள் போல,
    நேற்றுச் சொன்ன
    நன்றிகளை
    வாபஸ் கோரப்போவதில்லை.

    ஆனந்தக் கண்ணீர்
    காய்வதற்கு முன்பே
    அழ வைத்ததற்காக
    கோபப்படப் போவதில்லை.

    அப்போது சொன்ன
    நன்றியெல்லாம் பொய்யென்று
    பொய் சொல்லப் போவதில்லை.

    சத்திய வார்த்தைகள் விடுத்து
    சாக்கடைப் பேச்சு
    பேசப் போவதில்லை.

    ஆத்திரமாய்க் காலுதைத்து
    அரசியல் சகதியை
    அப்பிக் கொள்ளப் போவதில்லை.

    அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

    ஆதங்கப் பள்ளத்தில்
    விழப் போதில்லை.

    பொய்யான அனுதாபங்கள்..
    போலியான கோபங்கள்..
    ரகசியச் சிரிப்புகள்..
    முதுகுக்குப் பின் எள்ளி
    நகையாடும் முகமில்லா
    முகங்கள்..

    எதையும் கண்டுகொள்ளப்
    போதில்லை.

    உத்தமரை நேசிக்கும்
    பெருங்கூட்டத்தின் மத்தியில்
    ஒரே ஒரு கேள்வி மட்டும்
    உண்டு..

    நல்லது நடக்குமென்றும்,
    அதே இடத்தில் நிலைக்குமென்றும்
    நாங்கள் வைத்த நம்பிக்கையை
    அகற்றிய பின்
    எங்கே வைப்பீர்கள்..?

    Sent from my GT-S6312 using Tapatalk

  7. Thanks RAGHAVENDRA thanked for this post
  8. #1305
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்பது சிவாஜி ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பொதுமக்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஆனால் அரசின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது. இந்த வாதத்தை சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்கலாம் ஆனால் தர்மம், நியாயம், மனசாட்சி உள்ளிட்ட யாராலும் ஏற்க முடியாத நிலைப்பாடாகும். மணிமண்டபம் கட்டப்படும் என்கின்ற அறிவிப்பு நமது உள்ளத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சியை அரசின் நிலைப்பாடு மறக்கடிக்கச் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் சிலையில் தான் விழவேண்டும் என்கின்ற அளவிற்கு பல்வேறு இடங்களில் சாலைகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு தலைவர்களின் சிலைகள் சாலைகளின் நடுவில் தான் அமைந்துள்ளன. அவையெல்லாம் ஏற்படுத்தாத இடைஞ்சலையா நடிகர் திலகத்திற்கென அமைக்கப்பட்டுள்ள சிலை ஏற்படுத்தப்போகிறது.

    சிலையை எடுப்பதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் தமிழினத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றும் நடிகர் திலகத்திற்கு இது ஒரு அவமரியாதையாகத்தான் வரலாறு சித்தரிக்கும். அதுதான் உண்மையும் கூட. அப்படி அகற்றித்தான் தீரவேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், அதே கடற்கரை காமராஜர் சாலையில் காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் இடையில், குறிப்பாக காமராஜரின் சிலையை ஒட்டி அதற்கருகிலேயே நடிகர் திலகத்தின் சிலை அமைக்கவேண்டும். மணிமண்டபத்திற்கெனத் தனியே சிலை செய்து வைக்க வேண்டும்.
    "அரசின் நிலைப்பாடு " .. "நீதிமன்றம் கருதினால்" .. அடங்கப்பா ..உலக நடிப்புடா சாமி !
    மணிமண்டபம் கட்டுறாங்கண்ணு சொன்னா 'இதய தெய்வம்' 'புரட்சித் தலைவி' .. சிலையை தூக்குனா நேரடியா பெயர் கூட சொல்லமாட்டாங்களாம் .. அரசு ..நீதிமன்றம் ..

    இதே கருணாநிதியா இருந்தா அவர் பரம்பரையையவே இழுத்து வசை பாடியிருப்பார்கள் .

    இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ..இதே நடிகர் திலகம் திரியியையே அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் தளமாக மாற்றியவர்கள் தானே .
    Last edited by joe; 2nd September 2015 at 12:31 PM.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. Likes adiram, Harrietlgy liked this post
  10. #1306
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    The happiness of News regarding Mani Mandapam & Veera Pandiya Kattabomman Release vanished yesterday on hearing the news of shifting the statue of NT.Numerous statues of various prominent leaders ,famous personalities are there in Chennai & other places in State , but repeated instances of removing NT statue is really disheartening . Now it is duty of Nadigar Sangam to voice their opinion in this regard.

    No national recognition , proper state recognition while acting -for King & God of Acting

    As quoted in an article in newspaper on next day of his death - Sivaji Sir's death teaches us how not to treat an actor

    This phrase unfortunately in made valid till now

  11. Likes Russellbzy, JamesFague liked this post
  12. #1307
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    We can only remember the Vasantha Maligai Dialogue ' SILAYAI AGATRA THUNINTHA INTHA SAMRAJYAM MANNODU MANNAGA POGATTUM"

  13. Likes Russellbzy liked this post
  14. #1308
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    நாங்கதான் அப்பவே சொன்னோம்ல...

    மணிமண்டப அறிவிப்புக்காக எல்லோரும் நன்றி மழை பொழிந்தபோதே சொன்னோம்ல..

    ஜெயலலிதா புல்லுக்கடியில் பதுங்கியிருக்கும் பாம்பு. அதன் குணத்தைக் காட்டாமல் விடாதுன்னு சொன்னோம்ல..

    மணிமண்டப அறிவிப்பே (வெறும் அறிவிப்புதான்) சிலையை அகற்றும் வேலைக்கான முன்னோட்டம் என்று சொன்னோம்ல

    சென்னையில் மட்டும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக 143 சிலைகள் இருக்கின்றன. அவற்றை எப்போது அகற்றப் போகிறீர்கள் என்று எந்த நடிகனாவது கேட்டானா?.

    இனி எந்த நடிகனாவது மேடையில் சிவாஜி பெயரை சொல்லிப்பார்க்கட்டும்.

  15. #1309
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    சிலைக்கடியில் இருக்கும் கருணாநிதி பெயர் தாங்கிய சிலை திறப்பு விழா கல்வெட்டை மட்டும் அகற்றிவிட்டால் 'போக்குவரத்து இடைஞ்சல்' எல்லாம் காணாமல் போய்விடும்.

  16. #1310
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    திருச்சியில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் அவ்வளவு பெரிய ரவுண்டானா மத்தியில் இன்னும் போர்த்தப்பட்டு இருக்கும் நடிகர்திலகத்தின் சிலையை திறக்க அனுமதிப்பதில் இந்த அரசுக்கு என்ன கேடு?.

    ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டு இருக்கும்போது நேற்று ஒட்டுமொத்த சிவாஜி குடும்பமும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து, பாராட்டு, நன்றி.

    தாங்கலைப்பா..

  17. Likes Harrietlgy, Russellbzy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •