Page 121 of 401 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1201
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நண்பர் ஆதவன் ரவி அவர்களின் கவிதை நிழற்படம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1202
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நமது அன்பிற்குரிய சகோதரர் ஆதவன் ரவி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #1203
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 3

    "கப்பலோட்டிய தமிழன்".

    இன்னுமொரு முறை
    பார்த்தேன்..
    இதயத்தைக்கல்லாக்கிக்
    கொண்டு!

    ஆனால்..
    நடிப்பாயுதம் பலமாய் இறங்கி
    கல் உடைக்கிறது.

    கலங்கி விடக் கூடாதென்று
    திண்மையாயிருந்தது,
    தூள்,தூளாகிறது.
    ----------
    அந்நியத் துணிகளைப்
    புறக்கணிக்கும் தீவிர
    உணர்வோடு, சின்னஞ்
    சிறுவனின் பட்டாடைகளையும்
    உருவிக் கொளுத்துகிற
    ஆவேசம்..

    சட்டம், சாமான்யர்களைத்
    தண்டித்து விடக் கூடாதென்ற
    மிகுந்த நல்லெண்ணத்தில்,
    மாடசாமிக்காக வாதாடுகிற
    ஆர்வம்...

    அலைந்து, போராடி,
    அலைகடல் மீது கப்பல் ஓட விட்டு, முகத்தில் காட்டுகிற
    பெருமிதம்...

    "சிவம்" என்பதை "சவம்" என்று
    உச்சரிக்கும் ஆங்கிலேய
    அதிகாரியை வார்த்தைகளால்
    சுட்டெரிக்கிற கோபம்...

    எல்லோர்க்கும் உணவளிக்க,
    தன்னுடையது,
    மனைவியினுடையது
    போதாது
    என்று குழந்தையின்
    நகைகளையும் கழற்றித் தரும்
    பெருங்குணம்...

    தாகம் வறட்ட, தளர்ந்த உடல்
    தள்ளாட, கல்லுடைத்துச் செக்கிழுக்கிற சோகம்...

    தோல் அழுகத் தொழுநோய்
    தாக்கிய தேசத் தலைவனின்
    உடலை, "உன் வியாதி எனக்கும்
    வரட்டும்" என்று
    ஆரத் தழுவுகிற அன்பு...

    "பிள்ளைவாள்.. உங்களுக்கு
    இன்று விடுதலை" என
    அறிவிக்க வந்த சிறைக்
    காவலாளி, எந்தச் சலனமும்
    காட்டாத முகம் பார்த்துத்
    திகைத்து, 'விடுதலை
    என்கிறேன்..சந்தோஷத்தையே
    காணோமே?' என்று வினவ,
    "தேசத்துக்கா விடுதலை..
    சந்தோஷப்பட?" எனும் போது
    நாம் அடைகிற வியப்பு...

    பாரதி போய் விட்டாரென்று
    தகவல் வர, பதைத்தழும்
    அழுகை...

    மரணப் படுக்கையில் கிடக்கும்
    போதும் நாட்டின் விடுதலை
    காணத் துடிக்கும் மனத்
    துடிப்பு..

    இவற்றிலெல்லாம் நாம்
    பார்த்தது.. கப்பலோட்டிய
    தமிழனின் தேசப்பற்றை
    மட்டுமா?

    கலையுடன் மிளிரும் நம்
    கணேசத் தமிழனின் தேசப்
    பற்றையும்தானே?
    -----------
    அமரர் மணிவண்ணன் இயக்கி,
    திரு.சிவகுமார் அவர்கள்
    நடித்த, 'இனி ஒரு சுதந்திரம்'
    திரைப்படத்தைப் பார்த்த பிறகு,
    அய்யா நடிகர் திலகம்,
    சிவகுமார் அவர்களிடம்
    "பிரமாதமா நடிச்சிருக்கேடா"
    என்று பாராட்டி விட்டுச்
    சொன்னாராம்...
    "கப்பலோட்டிய தமிழன்" படத்துல
    உயிரைக் கொடுத்து
    நடிச்சேன்.பட்டை நாமத்தைச்
    சாத்திட்டாங்க.உனக்கும்
    குழைச்சுக்கிட்டிருக்காங்க"
    என்று.

    நிஜமான நிஜமாய் உணர்வு
    காட்டி..
    உள்ளார்ந்த தேசபக்தியெல்லாம்
    வெளிக்கொணர்ந்து..
    உள்ளக் கற்பனைகளுக்கெல்லாம்
    உயிர் கொடுத்து..
    கலை வாழ தன்னை வருத்திக்
    கொண்ட ஒரு மகா கலைஞனின் இந்த
    மன வருத்தமென்பது...

    கல்லுடைத்து, செக்கிழுத்து,
    சித்ரவதைப்பட்ட தேசத்
    தலைவருக்கு இழைக்கப்பட்ட
    சிறைக் கொடுமைகளைக்
    காட்டிலும் கடுமையானது.

    கொடுமையானது.

  7. #1204
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    http://www.behindwoods.com/tamil-mov...ce-aug-30.html

    Week :2
    Total collections in Chennai :Rs. 8,46,213

    No. Shows in Chennai (Weekend): 15
    Collection in Chennai (Weekend): Rs. 73,836

    No. Shows in Chennai (Weekdays): 40
    Collection in Chennai (Weekdays): Rs. 2,18,472
    Dear Joe,

    Comfortably BEHIND WOODS has given a MEGA discount of 50%. May be because Diwali is approaching.

    AS per BEHINDWOODS, weekend collection is Rs. 73,836

    A SIMPLE CALCULATION BASED ON REAL DATA

    Friday, Saturday and Sunday - STUDIO 5 - FULL HOUSE - Per show 12,000 x 3 Days = 36,000

    Sai Shanti Per Show full board is 19,520 ( 244* 80 Rs.) Sunday 2 Shows full - 39,040

    Baby Albert Sunday Evening Show was Full HOUSE = 21,000 approximately - ( baby Albert capacity more than Said Shanthi)

    The total for 6 shows itself is crossing = Rs. 96,040

    Balance 9 shows even at a low avg of 5,000 per show will be 45,000. Both amount when added comes to Rs 1,41,040.

    This itself proves that BEHINDWOODS HAS GIVEN A ADVANCE DIWALI DISCOUNT OF 50%. AND THEIR COLLECTION REPORT IS TOTALLY WRONG !


    The Exact Chennai Collection Figure till yesterday is Rs. 14,23,477. Those who have doubts on this collection can call M/s SAI GANESH FILMS, CHENNAI

    Similarly, Madurai for the first week has collected a whopping Rs.8,36,308.50 as per the data and detail taken from the MR Representative.

    However, The Distributor strangely has given a figure range 7,50,000 - 8,60,000 kku ulla irukkum !!!!!!

    i don't know why he has given the range but one thing for sure is VPKB one week collection is not less than Rs. 7,50,000 in Madurai Ramnad Area ( Ramnad did not have a screen that too )

    I am trying to collect Coimbatore Details.

    Trichy, I have the detail of only Kalaiarangam Theater which I had put last week.

    Going by Just Chennai and Madurai territory, VPKB has collected close to Rs.22,00,000 approximately without including Trichy Thanjavur / Coimbatore / Salem / Tirunelveli and Kanyakumari Territory...!

    RKS !!!

    VERDICT : VPKB - BOX OFFICE SUPERHIT !!!!!
    Last edited by RavikiranSurya; 31st August 2015 at 11:19 PM.

  8. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellbzy, joe liked this post
  9. #1205
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Rks ,

    நீங்க எதிர்வினையாற்றுவீங்க என எதிர்பார்த்து தான் அதை பதிந்தேன்.. நன்றி !
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #1206
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    Ear rks
    madurai area collection is net rs.7.00 lakhs up to saturday..now the film is running in 3 theaters.hope it will touch rs.10.00 lakhs before sunday.then the distributor decided to release all areas before deepavali.you. Can predict the total net. நடிகர் திலகம் என்றும் தயாரிப்பாளர் நண்பர் தான்.

  11. Likes Russellbzy liked this post
  12. #1207
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 4

    இரண்டு கண்கள் வேண்டும்.

    அவற்றில் மிகுந்த ஒளி
    வேண்டும்.

    கண்களில் ஒளிரும் ஆர்வம்
    வேண்டும்.

    அடுத்த வருஷம்,அடுத்த மாசம்,
    அடுத்த வாரம்,அடுத்த நாள்,
    அடுத்த நிமிஷம், அடுத்த
    நொடி என்று எந்தக் கவலையும்
    இல்லாதபடி ஒரு சந்தோஷ
    ஓய்வு வேண்டும்.

    காண்பதற்கோர் அகல
    வெண்திரை வேண்டும்.

    காலத்தால் அழிந்துபடாத இந்த
    கானம் அதில் ஓட வேண்டும்.

    இசையரசர்களின் உருக்கும்
    இசை மற்றும் கவியரசரின்
    உண்மை வரிகளுக்குக்
    காதுகளையும், கலையரசரின்
    உண்மை அசைவுகளுக்குக்
    கண்களையும் கொடுத்து
    விட்டு நாம் நமக்குள் இருந்து
    வெளியேறி விட வேண்டும்.

    அந்த சிறியதொரு
    மலைக்குன்றின் மீதொரு
    இமயமாய் வரும் நடிகர் திலகம்...
    அபிநய சரஸ்வதியின் அதீத
    அழகு பாவங்களை வென்று
    விடுகிற விதமாய்
    வெளிப்படுத்துகிற அங்க
    அசைவுகளை,

    தன் உதடுகளுக்குப்
    போட்டியாக தன் கண்களையே
    சிரிக்கச் செய்கிற வியப்புகளை,

    வேகம் குறைத்த ஓட்டத்தில்
    வந்து நின்று, ஒய்யாரமாய் கை
    நீட்டுகிற பேரழகை,

    "ம்ம். .ம்ம்..ம்ம்..ம்ம்"

    ஒவ்வொருமுறை "ம்ம்"
    கொட்டுகிற போதும், வேறு
    வேறு விதமாய் அழகு
    காட்டுகிற அந்தப் புன்னகைப்
    பூ முகத்தை..

    பார்த்துக் கொண்டே இருக்க
    வேண்டும்.

    பார்த்துக் கொண்டே இருக்க
    வேண்டும்.

    ஆகவே...


  13. Likes Russellmai, Russellbzy liked this post
  14. #1208
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
    கட்டபொம்மன் collection details கண்டேன். நீங்கள் தந்த வசூல் விவரங்கள் 100% சரியானது! நடிகர்திலகம் உலகின் தலைசிறந்த நடிகர் என்பது மட்டும்
    உண்மையல்ல ! தமிழகத்தை பொறுத்த மட்டில் வசூல் அடிப்படையிலும் சரி, சிறந்த படங்கள் அடிப்படையிலும் சரி, 100 நாட்கள் , வெள்ளிவிழா போன்ற
    வெற்றிப்பட அடிப்படையிலும் சரி, அவரின் சாதனைகளை இதுவரை எவரும் நெருங்கியதும் இல்லை! இனி நெருங்கபோவதும் இல்லை! 36 வருடங்கள் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தவர் தமிழ் சினிமாவில் அவர் ஒருவரே! சிலர் 40 வருடங்களாக நாயகனாக நடித்து கொண்டிருப்பதாக சொல்லலாம்! ஆனால் 25 வருடங்களுக்கு மேல் அவ்வப்போது ஒரு சில வருடங்கள் நடிக்காமல் இருப்பார்கள்! அப்படியே நடித்தாலும் 20 வருடங்களுக்கு 10 படம் கூட நடிக்கமாட்டார்கள்! 1952 முதல் 1988 வரை தொடர்ச்சியாக 36 வருடங்கள் நாயகனாக நடித்தது ஒரு சாதனை என்றால் , ஒரு வருடம் கூட தவறாமல் அனைத்து
    வருடங்களிலும் 100 நாட்கள் ஓடிய படங்களை அளித்தவர் இன்று வரையிலும் நம் சிவாஜி மட்டுமே! 36 வருடங்களில் 260 படங்களில் கதாநாயகன்!
    வெள்ளி விழா , 100 நாட்கள் இரண்டும் சேர்ந்து மொத்தம் 94 படங்கள் கதாநாயகனாக நடித்ததில் மட்டும்! அப்பப்பா! சொல்லி மாளாது அவரின் சாதனைகளை! ரவிகிரன் சார் நீங்களாவது சிவாஜியின் பாக்ஸ்ஆபீஸ் சாதனைகளை தொடர்ந்து தெரியபடுத்துங்கள் ! தங்களுக்கு என் நன்றி!

  15. #1209
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  16. #1210
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •