Page 231 of 401 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #2301
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my GT-S6312 using Tapatalk

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2302
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Aathavan Ravi View Post


    Sent from my GT-S6312 using Tapatalk
    Let us all celebrate our THALAIVAR BIRTHDAY AND SEEK HIS BLESSINGS.
    ENDERUNDUM UN NINAIVUDAN

  4. Likes Russellbzy liked this post
  5. #2303
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    கலைத்தாயின் அருந்தவப்புதல்வன், தமிழகக் கலையின் அடையாளம், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்தநாளில் (01-10-2015), அவர் புகழ் போற்றி, தமிழனின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கப் பாடுபடுவோம்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. Likes Georgeqlj, Russellbzy liked this post
  7. #2304
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மனக் கோயிலில் வீற்ற இறைகளுக்கு நிஜகோயிலும்

    கண்டன மதங்கள் தமிழ்மதம் தலைநிமிர ஒரேஇறை

    பணிக்கான தமிழ்மன கோயிலின் கொற்றவனுக்கு

    மணி கோ யிலில் வீற்றிருக்க காலம் வந்ததே கண்டதே

    பெருமிதத்துடன் தொழ தமிழனுக்கு தமிழ்க் கோட்டம்

    இருதிசைகளில் தொழுகை அன்னையில்ல திசையொ ன்று

    ஆட்சியன்னை தந்த மணிக் கோயில் திசையின்று

    மாட்சிமைமிக்க மகாசிவனுக்கும் ராஜராஜனே கண்டான்

    கோட்டம் திருவிளையாடிய சிவனுக்கோ தமிழ் அய்யன்

    தந்தருளிய சிலையொன்று அன்னையின் மண்டபமொன்று

    அந்தவகையில் ஆட்சியாளர் கடன் தீர்த் தனர் தமிழர்க்கு

    திகதியில் காணும் திருநாள் தித்திப்பல்ல உவப்பல்ல

    ஆகமக் கடவுள் போல நட்சத்திர,திதிகளில் காணும் திருநாளே

    நல்மரபாம் நம்மிறைகளுக்கு நடிப்பின் கலையிறைக்கும் காண்போம்

    வெல்வது தமிழேயென தரணி காண செல்வோமினி தமிழ்மண்டபம்

    இத்திருநாள் குடும்ப கொண்டாட்டமல்ல மக்கள் திருநாள்

    முத்தமிழும் முத்தமிடும் முதற் திருநாள் முதற் தமிழனுக்கு

    மாற்றோர் பண்பாள ர்களின் சிற்றவைக்கு பிரதியாக

    போற்றுவோர் போற்றும் மறத்தமிழனின் பேரவை

    உண்டு கொழுக்காமல் உண்ணாமல் வென்று

    கண்ட மண்டபம் கண்ட கண்ணிமைக்காத சந்திரனுக்கு

    என்றுமே வென்றுநிற்கும் அதிசய எழுத்தால் அர்ச்சித்த

    மன்றமே வியந்து போற்றும் கோபாலனின் தலைவணக்கம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2305
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நண்பர்களே, கலை, அரசியல், பொது வாழ்வு, இல்லறம் என அனைத்திலுமே அப்பழுக்கற்ற, தூய்மையான, நேர்மையான, வெளிப்படையான வாழ்க்கையினை வாழ்ந்து காட்டி, ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து தலைவன் என்கிற சொல்லுக்கும் உண்மையான விளக்கமளித்து, தியாகம், பண்பு இவற்றின் உறைவிடமாக விளங்கும் மக்கள் தலைவன் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் பரப்பி அவருடைய மேற்கண்ட அத்தனை சிறப்புகளையும் எதிர்காலத்தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் உள்ளது. அதை நிறைவேற்ற நமக்கு உந்து சக்தியாக விளங்கப் போவது இந்த உறுதிமொழி. இதை நாம் தாரக மந்திரமாக எண்ணி மக்கள் தலைவரின் பாதையில் பயணிப்போம் என்பதற்கான உத்தரவாதமாகக் கூறி சபதமேற்போம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2306
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கலைவேந்தன்
    தங்களுடைய அன்பிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் உளமார்ந்த நன்றி. என்னைப் பொறுத்தவரையில் மக்கள் தலைவன் சிவாஜியை ரசிகனாக மட்டுமல்லாமல் ஒரு தொண்டனாகவும் தன்னை பாவித்துக்கொண்டு அவருடைய பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் என் அன்பு சகோதரனாகத் தான் போற்றுகிறேன். அந்த வகையில் இங்கு ஒவ்வொருவரும் அப்படியே. நடந்ததெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம் என்ற வரிகளுக்கேற்ப, இந்நாளில் தொடங்கி இனி வரும் காலங்களில் அவருடைய புகழைப் பாடுவதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இதற்கெனத் தனியாக உறுதிமொழியும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்களுக்கும் மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிக சகோதரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks siqutacelufuw, Russellzlc thanked for this post
  11. #2307
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார்,
    தங்களுடைய ஆதரவான அன்பான பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் தங்களுடைய அனைத்து அலுவலக சலுகைகளையும் புறந்தள்ளி, தங்களுடைய சொந்த செலவில் த.மு.மு. விற்காகப் பணியாற்றியது உளமார்ந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்கள் மட்டுமல்ல தங்களைப் போன்ற பல எம்.ஜி.ஆர். ரசிகர்கள் த.மு.மு. விற்காக உழைத்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். அதே போல ஜானகி அம்மையாரின் அணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் தலைவன் சிவாஜியின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் தங்களுடைய சொந்த செலவில் உளமார்ந்த உழைப்பினை அளித்துப்பணியாற்றியதையும் தாங்கள் அறிவீர்கள். ஒரு சிலர் கேள்வி கேட்பதை நாம் புறந்தள்ளுவோம்.

    இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏராளமான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழும் போதும் சரி, அவர் பூவுடலால் இவ்வுலகை விட்டுச் சென்று 14 ஆண்டுகளாகியும் இன்றும் சரி, அவர் அங்கு இருப்பதாகத் தான் உணர்கிறார்கள். இதை அனைவரும் அறிவர்.

    ஆனால் பலர் அறியாத ஒன்று, இதே திருவிழாக் கோலத்தை அன்னை இல்லம் ஜானகி அம்மையாருக்காக நடிகர் திலகம் காங்கிரஸை விட்டு விலகி வந்த மறுநாள் தொடங்கி தொடர்ந்து தேர்தல் வரையில் நீடித்தது என்பதை. நான் பலமுறை முன்பே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். நடிகர் திலகத்தின் வீட்டருகில் சாலையெங்கும் லாரிகள் அணிவகுத்து நிற்கும், பல்வேறு வயதையொட்டிய ஆண்களும் பெண்களும் லாரியிலிருந்து இறங்கி நேராக அன்னை இல்லத்தில் நுழைந்து மக்கள் தலைவர் சிவாஜியின் காலடியில் விழுந்து உணர்ச்சி வசத்தோடு நன்றி கூறி கண்ணீர் விட்டு அழுததைக் கண்ணால் பார்த்தவன் நான். எத்தனையோ எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்னிடமே வந்து அவரைப் பற்றி தழுதழுத்தவாறு பாராட்டியதைக் காது குளிரக் கேட்டவன். அப்போது தொடங்கிய இறுமாப்பு இன்னும் பல ஜென்மங்களுக்குத் தொடரும். புராணங்களிலும் கதைகளிலும் படித்த நட்பின் சிறப்பை அன்று நடிகர் திலகம் இந்த 20ம் நூற்றாண்டில் நிரூபித்துக் காட்டினார். கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையர் உள்பட பல நட்பின் சிறப்பைப் படித்த நாம் அதை நடிகர் திலகம்-எம்.ஜி.ஆர். அவர்களிடம் கண்டோம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்திடம் ஒப்படைக்க இருந்த பெரும் பொறுப்பை நடிகர் திலகம் கண்ணியமாக மறுத்து அதை அவரிடம் எடுத்துரைத்து, அவருக்குப் பிறகும் தன் முழு ஆதரவை அவருடைய வேண்டுகோளுக்கேற்ப நல்குவதாக உறுதியளித்தார். இதை அன்றைய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் அறிவர்.

    அந்த அடிப்படையில் இந்திய அரசியல் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை அளித்த தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 1st October 2015 at 06:32 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks siqutacelufuw thanked for this post
  13. #2308
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #2309
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு மிக்க பம்மலார்
    தங்களுடைய இரு புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
    அதுவும் புகழ்மாலை 2ல் மேலே காணப்படும் நிழற்படம் அபூர்வமானது. பத்திரிகைகளில் மட்டுமே வெளியாகியிருந்த இந்நிழற்படம் இதுவரையில் இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததில்லை. இதற்காகத் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellzlc liked this post
  16. #2310
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜியார் பக்தர்கள் சார்பில் நடிகர் திலகதிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


  17. Thanks Subramaniam Ramajayam thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •