Page 10 of 401 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #91
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இதை விட பெரிய சந்தோஷம் உண்டோ ?


    "உலக நாயகர் விருது" நடிக்க வந்த ஏழே வருடத்தில் எப்படி முடிந்தது என்பதை இந்த படத்தை பார்த்தால் விளங்கும் !

    தமிழக மக்களுக்கு, இந்த கால இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் ஒரு விருந்தளிக்கும் என்பது நேற்று படம் பார்த்து முடிக்கையில் உணர்ந்த உள்ளங்கை நெளிக்கனி !

    நிச்சயம் வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மையான ஒரு வெள்ளிவிழா மீண்டும் கொண்டாடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...!

    திரைப்படம் அவ்வளவு பிரமாதமாக வந்துள்ளது...!


    Rks
    ரவி கிரண் சூர்யா சார்


    நீங்கள் மிகவும் கொடுத்து வைத்த பாக்யசாலி சார். நாம் ஆவலுடன் எதிர்நோக்கும் தலைவரின் கம்பீர நடையழகையும் சிம்மக்குரலையும் ரசித்து விட்டு வந்துள்ளீர்கள். டிஜிட்டல் வடிவம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக்க மகிழ்சசி அளிக்கிறது. இனி ஒவ்வொரு நொடிப்பொழுதும் படத்தின் வருகையை பற்றிதான்
    தங்களின் கருத்துக்கு நன்றி

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #92
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [quo
    te=sundarajan;1240126]


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
    [/quote]


    சுந்தர்ராஜன் சார்

    தங்களுடைய புதிய முயற்சியான புதிய இணையத்தளம் வெற்றி வாகை சூடி பாரபட்சம் இன்றி உண்மை செய்திகளை அவ்வப்போது சிவாஜி ரசிகர்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன்.

    spchowthry ram

  5. #93
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    நான் படித்த திருச்சி செயின் ஜோசப் கல்லூரியில் பயின்ற திரு.அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்கு திருச்சி சிவாஜி பக்தர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

  6. Thanks ifohadroziza thanked for this post
  7. #94
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அக்கினிச் சிறகுகள் தந்தவர்!! மக்களின் ஜனாதிபதியாக ஒளிர்ந்தவர்!! இளைஞர்களின் கனவாற்றலை தூண்டியவர்!!
    பாரத ரத்னா ஏவுகணை விஞ்ஞான வழிகாட்டி apj அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது!!
    நடிகர்திலகம் திரி சார்ந்த கண்ணீர் அஞ்சலி

  8. Thanks ifohadroziza thanked for this post
  9. #95
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இந்தியாவின் அடுத்த தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசிய அப்துல் கலாம் அவர்களின் மறைவு, இன்னும் பல தலைமுறைகளுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

    அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

    அவருடைய லட்சியக் கனவான எதிர்கால இந்தியாவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இளைஞர்களிடத்தில் உள்ளது, அவர் ஊட்டிய தன்னம்பிக்கை அதை சாதிக்கும் என்ற நம்பிக்கையோடு அவருக்கு நாம் பிரியா விடையளிப்போம்.

    அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த அஞ்சலி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks ifohadroziza thanked for this post
  11. #96
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாரத குடியரசின் முன்னாள் தலைவர் இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் சாதனை புரிந்தவர் இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாக விளங்கியவர் வகித்த பதவிகளுக்கெல்லாம் மரியாதை தேடி தந்தவர், எளிமையை கடைபிடித்தவர். திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் நடிகர் திலகம் திரி சார்பிலும் அஞ்சலி.

  12. Thanks ifohadroziza thanked for this post
  13. #97
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பதவி , பணம் , ஆடம்பரங்கள் எதுவுமே இல்லாமல் , ஒரு அறை உள்ள வீட்டில் , திருமணமே பண்ணிக்கொள்ளாமல் குழந்தைகளுடன் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மகான் , நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடி மகனும் பெருமை பட வேண்டும் .ஒரு தேசிய வாதி , இந்த தேசமே கனவு காண வேண்டும் என்றே சொல்லிவிட்டு அவரே கனவாகிவிட்டார் .... நல்லவர்கள் நினைப்பது மட்டும் தான் நடப்பதில்லை இந்த தமிழ் நாட்டில் !!! பக்கத்துவீட்டுக்கு சென்றாலே - "அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கும் கோமகனே வருக வருக " என்று போஸ்டர்கள் அடித்து , ஆலயங்கள் சென்று மொட்டைகள் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் , இப்படியும் ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது , ஒவ்வொரு தமிழனின் தலையும் நிமிர்ந்து நிற்க வேண்டும் ...

  14. Thanks ifohadroziza thanked for this post
  15. #98
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
    காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!

    சாதனைச்சரித்திரம்
    சரிந்தது ..
    மேகாலயாவில்
    மேகத்தினில்
    கலந்தார் கலாம் ...
    எங்களைக் கனவு காணச் சொன்ன
    கனவு நாயகனே...நீர்
    காற்றினிலே கலந்ததென்ன?
    விண்வெளியின்
    நாயகனே...நீர்
    விண்ணோடு கலந்ததென்ன?
    ஏவுகணை மூலம்
    எல்லா இடங்களையும்
    கண்டவரே ...நீர்
    எட்டா உயரம் சென்றதெங்கே்?
    அக்னி யிலே
    அகிலம் திரும்பச் செய்தவரே...
    அக்னியிலே கலந்ததென்ன??
    தமிழகத்தின் தலைமகனே ...
    இந்தியாவின் கோமகனே...
    தளர்வடையோம்
    உம் பிள்ளைகள் நாங்கள் ...
    மனதினில் மட்டுமல்ல...
    மகவாயும் நீர் வருவாய் ...
    மழலை மொழியும் நீர்
    சொல்வாய் ...

    உனக்காக காத்திருப்போம் ...
    அப்பனே நீர் வருவாய் ....

  16. #99
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

    பிறப்பு: அக்டோபர் 15, 1931

    இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

    பிறப்பு:

    1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

    இளமைப் பருவம்:

    அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

    கல்லூரி வாழ்க்கை:

    தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

    1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

    குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

    2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

    விருதுகள்:

    1981 – பத்ம பூஷன்

    1990 – பத்ம விபூஷன்

    1997 – பாரத ரத்னா

    1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

    1998 – வீர் சவர்கார் விருது

    2000 – ராமானுஜன் விருது

    2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

    2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்

    2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

    2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

    2009 – ஹூவர் மெடல்

    2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

    2012 – சட்டங்களின் டாக்டர்

    2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

    ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

    அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

    இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

    உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

  17. #100
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


    கடந்த பதிவின் இறுதி பகுதி

    வசந்த மாளிகை படத்திற்கு வந்த கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது

    திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட ம்தார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.

    வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.

    மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.

    ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.

    இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.

    ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.

    அன்றைய தினம் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு அன்றைய [முதல் நாள்] இரவுக் காட்சி சமயத்தில் மழை பெய்ததையும் அப்படி இருந்தும் மக்கள் அந்த அடாத மழையிலும் விடாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த விவரத்தையும் நமது திரியிலே பல வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன்.

    ஒரு நாள் நமது அருமை நண்பர் பம்மல் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கும்போது "சார் நான் செக் பண்ணினேன் சார். நீங்கள் சொன்னது கரெக்ட்தான்" என்றார். என்ன சுவாமி? எதைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை சார். வசந்த மாளிகை வெளியான அன்று இரவு மழை பெய்தது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். பழைய தினமணி பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்டது போல் அன்று மதுரையில் மழை பெய்த விவரம் பேப்பரில் வந்திருக்கிறது என்றார்.

    அவரிடம் மேலதிக விவரங்கள் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எப்படி இந்த தகவலை தேடிப் பிடித்தார் என புரிந்தது.

    விஷயம் என்னவென்றால் வசந்த மாளிகை படம் வெளியானது செப்டம்பர் 29 வெள்ளி. மூன்றாவது நாள் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை நடிகர் திலகத்தின் பிறந்த நாள். பழைய தினமணி நாளிதழ்களை [மதுரை பதிப்பு] பார்வையிடும் வாய்ப்பு சுவாமிக்கு கிடைத்தபோது அன்றைய தினம் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை மதுரை பதிப்பு தினமணியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதனால் ஏதேனும் விளம்பரமோ அல்லது செய்திகளோ வந்திருக்குமா என பார்த்திருக்கிறார். அப்போது ஒரு பெட்டி செய்தியாக வெள்ளிக்கிழமை இரவு மதுரை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்தது என்று வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டுத்தான் சுவாமி இதை கூறியிருக்கிறார்.

    நான் அவரிடம் சொன்னேன். சுவாமி எப்போதும் நடந்தவற்றை பற்றி மட்டும் எழுதுவதுதான் என் பாணி. பொய்யாக நடக்காத ஒன்றை நடந்தது போல் அள்ளிவிட மாட்டேன். எழுதும் செய்தி நமக்கு இனிப்பாக இல்லாவிட்டாலும் கூட அதை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று சொன்னேன்.
    .
    அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் புலர்ந்தது

    (தொடரும்)

    அன்புடன்

  18. Thanks eehaiupehazij thanked for this post
Page 10 of 401 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •