Page 78 of 400 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #771
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எருமையைக் கருமை என்பார்
    ..எமனவன் ஊர்தி என்பார்
    சிறுமைகள் மனதில் கொள்ளா
    ..ஜடமென உலகை ப் பார்த்தே
    வெறுமையாய் நிற்கும் ஆங்கே
    ..வேற்றுமை தெரிந்திடாமல்
    பெருமையின் அர்த்தம் என்றும்
    ..பேதைகள் அஃதறி யாதே..!

    ஹை..குட்டீக் கவித எழுதிப் பார்த்தேனே

    க்ருஷ்ணா ஜி.. வியட்னாம் வீடுல ந.தி பொண்ணா வாடி ரமணி போடி ரம்ணின்னு போன்ல பேசுமே..அவங்களப் பத்தி இங்க பேசியாச்சா (பொழுது போலைன்னா என்னபண்ணனும்..பத்த வைக்கணும் )
    Last edited by chinnakkannan; 8th June 2015 at 03:43 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #772
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி கிஷ்ணாஜி - என் கற்பனையில் வறுமை இருப்பதால் , வெளிவரும் கவிதைகள் கொடுமையாக இருக்குமே என்று எண்ணி மேலும் மடமை வராமல் இத்துடன் நிறுத்திக்கொண்டேன் .

  5. #773
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    உன்னைத் தொட்ட காற்று வந்து.. பாடலைப் போலவே உங்கள் அலசலும் சுகம். நீங்கள் சொல்வது போல ஹார்ட்டுக்குள் இறங்கிய பாடல்தான். உங்களிடம் எனக்கு பிடித்தது சொல்ல வேண்டியதை சுவைபட விளக்குவதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அதற்கான கடின உழைப்பும். நன்றி.

    ரவி சார்,
    //இந்த திரியில் இருக்கும்/ திரியைப்படிக்கும் எல்லா உள்ளங்களும் அம்மா, அப்பாவிற்கு சேவை செய்த, செய்துகொண்டிருக்கும் , கருணை நிறைந்த, கடமை உணர்சிகள் நிறைந்த உள்ளங்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை -//
    ..நீங்கள் சொல்வது 200 சதவீதம் உண்மை. நூடுல்ஸ் விளம்பரம் தொடர்பான உங்கள் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். விளாசி விட்டீர்கள்.

    சின்னக்கண்ணன்,
    வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் சுவையாக (?!) இருந்தது.(படிப்பதற்கு), ஜலதோஷம் தேவலையா?

    கிருஷ்ணா சார்,
    நீங்கள் விவரித்த சம்பவம் (இடையிடையே நீங்கள் நகைச்சுவை தெளித்திருந்தாலும்) வருத்தத்தை அளித்தது. அதிகாலை 4.15 மணிக்கு அதுவும் மணப்பெண்ணை எப்படி தனியே பணம் எடுத்து வர அனுப்பினர்? இந்த சம்பவத்தை விடுங்கள். சாதாரணமாகவே அது பாதுகாப்பானதல்லவே? தங்களின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

    கல்நாயக்,
    நண்பர்கள் செல்லக் கோபத்துடன் டூ விடுவதும் பிறகு சேர்ந்து கொள்வதும் சகஜம். நீங்கள் டூ விட்டு என் மீது கோபித்துக் கொண்டு விட்டீர்கள். அதற்காக, என்னை சந்திர மண்டலத்துக்கு அனுப்பத்தான் வேண்டுமா? நான் பயப்படுவதாக நினைக்க வேண்டாம். மேலும் வயதை குறைக்க எனக்கு ஆசையில்லை. 18-ஏ போதும். ஏதோ பாத்து செய்ங்க.

    வேலை முதுகை முறிக்கிறது. அதனால் பாட்டு கொண்டு வரவில்லை. எல்லாரும் மன்னிக்கவும். இந்தப் படத்தில் இருந்து இந்தப் பாடலை போடுங்கள் என்று மட்டும் சொன்னால் எனக்கும் திருப்தியாக இருக்காது. பாடல் பற்றியும் அதையொட்டிய நிகழ்வுகள் பற்றியும் விளக்கினால்தான் எனக்கும் திருப்தி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. Thanks uvausan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  7. #774
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post


    நீங்கள் விவரித்த சம்பவம் (இடையிடையே நீங்கள் நகைச்சுவை தெளித்திருந்தாலும்) வருத்தத்தை அளித்தது. அதிகாலை 4.15 மணிக்கு அதுவும் மணப்பெண்ணை எப்படி தனியே பணம் எடுத்து வர அனுப்பினர்? இந்த சம்பவத்தை விடுங்கள். சாதாரணமாகவே அது பாதுகாப்பானதல்லவே? தங்களின் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    நண்பர் கலை

    மிக்க நன்றி . மன பாரத்தை குறைக்கவே சற்று நகைச்சுவை கலந்து எழுதினேன் . மற்றபடி இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை.

    ஸ்டேஷன் இல் இறங்கி உடன் எல்லோருமே van இல் சத்திரத்தை நோக்கி சென்று விட்டோம். நாங்கள் யாருமே மணப்பெண் மிஸ்சிங் என்பதை கவனிக்கவே இல்லை. பெண்ணின் பெற்றோர் கூட எந்த பரபரப்பும் காட்டவே இல்லை. காலையில் 11 மணிக்கு அவர்கள் சொல்லும் போது தான் எல்லா விஷயமும் தெரிய வந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் உறவு என்பதால் பெரிய அளவில் வாக்கு வாதம்,போலீஸ் என்று செல்லவில்லை. மாப்பிள்ளை பையனும் மிகவும் எந்தவித பரபரப்புக்கும் ஆளாகாமல் மதியமே சென்னைக்கு கிளம்பி விட்டார். என் வருத்தம் எல்லாம் அந்த பெண் மீது தான். 6 ஆண்டுகள் வேறு ஒருவரிடம் பழகி விட்டு எதற்காக இந்த திருமணத்திற்கு ஓத்து கொண்டார். பிறகு திருமணத்திற்கு முன்தினம் இப்படி ஒரு முடிவு எடுத்தார். மணப்பெண் வீட்டாரும் பெரிய அளவில் கவலைப்பட வில்லை. பெண்ணின் பெற்றோர் எதற்காக பெண்ணிற்கு பிடிக்காத ஒன்றை பெண்ணிடம் திணிக்க வேண்டும் . படித்த பெண்கள் கூட இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கம் ஒன்றே மனதை வாட்டுகிறது . மன்னிக்கவும்
    சம்பவத்தை மறக்க நினைக்கிறேன்.முடியவில்லை
    gkrishna

  8. #775
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மன்னிக்கவும்
    சம்பவத்தை மறக்க நினைக்கிறேன்.முடியவில்லை// அதோட தாக்கம் சில நாள் இருக்கும் கிருஷ்ணாஜி.. மனசுல ரொம்ப எடுத்துக்காதீங்க..

  9. #776
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    தொடர் அருமையாக சென்று கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

    'தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்' என்ற உங்கள் கூற்றே தவறு. பின்னே?. தவறு இல்லாத ஒன்றில் தவறை கண்டுபிடிப்பது தவறிப்போய்க்கூட செய்யக்கூடாத தவறான ஒன்றல்லவா?. எனவே தவறியும் நான் அந்த தவறை செய்வதாக இல்லையென்று தவறாமல் உறுதியெடுக்கிறேன்.

    (கண்டது கற்றால் பண்டிதன் ஆவான் என்பார்கள். ஆனால் சின்னக்கண்ணன் பதிவுகளைப் படித்தால் (என்னைப்போன்ற) கணடவ்னும் பண்டிதன் ஆகலாம் போலிருக்கிறதே)

  10. Likes uvausan liked this post
  11. #777
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ரவி,

    நான் ஏற்கனவே வாசுவிற்கு போட்ட பதிவில் சொல்லியிருக்கேனே, இது ஒரு சுகமான சுனாமி, அடிக்கடி வரவேண்டும் என்று. இது நம்மை மயக்கும் உண்மை, நம்மை அடித்துச் செல்லும் அதுவும் உண்மை. அது நம்மை கொன்று போடாது. நாம் அந்த பித்தத்தில் மதி மயங்கி தெளிவு பெற வேண்டும். ராஜேஷ் ஜி மயக்க நிலையில் இருக்கலாம். நிச்சயம் வருவார். அவரது சுகானுபத்தை நமக்கு விளக்குவார்.
    இந்த சுனாமி ஒரு இசைச்சுனாமி .. எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

  12. #778
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    கல்நாயக் மற்றும் கலைவேந்தர்,

    நீங்க ரெண்டுபேரும் உங்கள் வயது விஷயமாக சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும்போது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் சொன்ன ஜோக்தான் நினைவு வருகிறது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரீகன், பேச்சுவாக்கில் "அமெரிக்க ஜனாதிபதியாக ஒரு பெண் வரவே முடியாது" என்றர்.

    நண்பர்களுக்கு ஆச்சரியம்.

    "மிஸ்டர் பிரசிடெண்ட், நமது சட்டத்தில் அப்படி ரூல்ஸ் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே" என்றனர்.

    "நேரடியாக இல்லை. ஆனால் மறைமுகமாக ஒரு தடை இருக்கிறது" என்றார் ரீகன்.

    "அதென்ன?" என்று நண்பர்கள் கேட்க ரீகன் சொன்னார்...

    "அமெரிக்க அதிபராக வருவதற்கு 35 வயது நிரம்பியிருக்க வேண்டுமல்லவா?. அமெரிக்காவில்தான் எந்தப்பெண்ணும் தனக்கு 35 வயது நிரம்பியதாக ஒப்புக்கொள்ள மாட்டார்களே"

    அதிபர் சொன்னதைக்கேட்டு நண்பர்கள் மத்தியில் பெரிய நகைப்பொலி.

  13. #779
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    எடைப்பாடல்கள் 'அட' என்று ஆச்சரியப்பட வைக்கின்றன. தண்ணீர் வராம தரையில் குப்பறப்படுத்து யோசித்து டைட்டில் பிடிக்கிறீரோ! அப்புறம் எங்களையும் யோசிக்க வைத்து தண்ணி காட்டுகிறீர்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes chinnakkannan liked this post
  15. #780
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //எனக்கும் , என் மனைவிக்கும் சேர்ந்து பிடிக்கும் ஒரே விஷயம் ஜல தோஷம் ஒன்றுதான்//

    தைரியசாலி அய்யா நீர் சி.கவுக்குப் பிறகு.

    அம்பா பாடல்கள் அருமை. குட்டிக் கதைகள் நிறைய யோசிக்க வைக்கின்றன. ஆயர்பாடி மாளிகையில் பாடலை கருவில் மறக்காமல் சேர்த்ததற்கு நன்றி ரவி சார். மிகப் பொருத்தமான ஆராதனா பாடல். அழகான ஷர்மிளா.

    ஆனால் தத்தி செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்புக்கு ஒரே ஒரு வரிதானா?

    சுனாமியெல்லாம் இல்லை ரவி. சும்மா ஜாலியாக ஆனால் மனம் லயித்து எழுதுகிறேன். தினம் கருவைக் கலைக்கும் இந்தக் காலத்தில் நீங்கள் மறக்காமல் கருவில் கலக்குகிறீர்கள். அம்பா ஜனனி என்று தலைப்புகளும் வாழ்கின்றன. புயலாய் சீறுவது தாங்கள்தான்.

    அனைத்து பாடல்களுக்கும் அருமையான எழுத்துக்களுக்கும் நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks uvausan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •