Page 72 of 400 FirstFirst ... 2262707172737482122172 ... LastLast
Results 711 to 720 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #711
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி! நீங்களே கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி?

    இப்போது நான் ஒன்று கொடுக்கிறேன். செம ஜாலி பாடல்.

    விட்டாலாச்சார்யா இயக்கிய 'வீர குமார்' படத்தில் ஒரு இனிய பாடல். சற்றே பர்மா பின்னணி மியூசிக். காமெடியன்ஸ் சாங் தான். ஆனால் வெகு ஜோர்.

    சி.க, கிருஷ்ணா நீங்களும் கேளுங்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes gkrishna, Russellmai, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #712
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அருமை ஜி!

    என்ன ஒரு சாங்! உத்தமபுத்திரன் நடிகர் திலகம் ஸ்டைல் டிரெஸ் போட்டு இருக்கிறார் ராஜ்குமார். 'அவர்கள்' ரஜினி அம்மா (லீலாவதி) ரொம்ப யங்காகத்தான் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணகுமாரியுடன் நெருங்கவே முடியாது.

    தெலுங்கு ஒரு படி டாப். இது இந்த நாட்டாமையின் தீர்ப்பு. நல்ல பாடல்களுக்கு நன்றிஜி!
    கிருஷ்ணகுமாரி ஆம். அவர் முன் லீலாவதி ஒன்றுமே இல்லை.
    தெலுங்கு சூப்பர் ....

  5. #713
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    படம் 'வீரகுமார்'தான்

    அழகு கிருஷ்ணகுமாரி ராணி (போர்) உடை கம்பீரமாகத் தரித்து சாரட் வண்டியில் தோழிகளுடன் பாடும் பாடல். கிருஷ்ணவேணி குரல் தந்திருப்பார்.

    'ஆளும் தமிழ்நாட்டைப் பார்
    அம்மலை மேல் கண் கொண்டு பார்'

    பாடலாசிரியர் கில்லாடி. ஆந்திராப் பெண்ணை 'ஆளும் தமிழ் நாட்டைப் பார்' என்று பாட வைத்து விட்டாரே! அதே போல இன்னொரு மாங்காயும் அடிக்கிறார். ஒரிஜினல் தமிழ்ப்ப் படம் போல பார்ப்பவர்களை ஏமாற்ற 'தமிழ் நாட்டை' சேர்த்து விட்டார். ஏமாற நாங்கள் என்ன சின்னக் கண்ணனா?

    சின்னக் கண்ணனுக்கு கிருஷ்ணகுமாரி இருந்தால் போதும். ஆனால் இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #714
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இதோ ஒரு கிண்டல் கேலி பாடல்
    இசையரசியுடன் ஜானகி

    யாராரு என்னன்னு தான் சொல்றேண்டா கண்ணா


  7. #715
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எல்லோருக்கும் காலை வணக்கம்..

    வாசு, ராஜேஷ்,
    நீங்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட பாடலின் ஒரிஜினல் இதுவா கேளுங்கள்..



    பல்லவியின் முதல் வரி மெட்டு எடுத்துக் கொள்ளப் பட்டு அவரவர் மொழிக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கலாம்.

    ஆனால் தாங்கள் குறிப்பிட்டிருந்த கன்னடம், தெலுங்கு இரு பாடல்களின் முதல் வரி மெட்டுக்களும் கவலை இல்லாத மனிதன் பாட்டைத் தான் நினைவூட்டுகின்றன.
    Last edited by RAGHAVENDRA; 6th June 2015 at 12:00 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes Russellmai liked this post
  9. #716
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே.. ஒரு ஹாய் நன்னாருக்கு எழுதினது என்று சொல்வது எநத விதத்தில் தவறாகும் எனத் தான் எனக்குத் தெரியவில்லை..//

    மர மண்டைகளுக்கு புரிஞ்சா சரி!
    நான் உருப்படியான பெரிய பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை (தெரியாது என்பதால்). இருந்தாலும் மற்றவர் பதிவுகளை பாராட்டுவதுண்டு. கணினி அடிக்கடி மக்கர் பண்ணுவதாலும், தமிழ் கன்வெர்ட்டர் அப்பப்ப ஸ்ட்ரைக் பண்ணுவதாலும் அனைத்து பதிவுகளுக்கும் பாராட்டு தெரிவிக்க முடிவதில்லை. பெரும்பாலும் 'தேங்க்ஸ்', 'லைக்ஸ்' மட்டும் போடுவதுண்டு.

    இருப்பினும் நானும் அந்த 'மரமண்டைகள்' பட்டியலில் இருக்கிறேன்தானே?.

    நெட்வொர்க் கோளாறால் ஒருவாரத்துக்குப் பின் நேற்றுதான் நடிகர்திலகம் திரிக்கு சென்றேன். புயலடித்து ஓய்ந்திருந்தது தெரிந்தது. ஆனால் 'காற்றழுத்த தாழ்வுநிலை' உருவாக காரணமான பதிவுகளை காணோம். திரி அமைதியடைந்தது கண்டு மகிழ்ச்சி. தங்கள் புறக்கணிப்பு கண்டு வருத்தம்.

  10. #717
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்காக

    கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.

    “இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.

    ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..

    இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

    பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.

    “இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

    மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

    “அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.

    அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

    அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

    வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம்.

    நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

    ஆகவே, சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.


  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  12. #718
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - இந்த பதிவு மதுர கானத்திரிக்கு தேவை இல்லாத ஒன்றுதான் - இருந்தாலும் சில விஷயங்களை நினைத்துப்பார்க்கும் நெஞ்சு பொறுக்கவில்லை - மனதை திறந்து பேச இந்த திரியை விட்டால் வேறு எங்கு சொல்ல முடியும் என்பதால் , இங்கு கொட்டித்தீர்க்கிறேன் - deviation க்கு மன்னிக்கவும் .

    விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?

    மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்!

    நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா?

    இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் அவங்களை கைது செய்ய வேண்டமா?

    மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?

    இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?

    தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!

    பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!

    விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!

    சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!

    பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!

    பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!

    கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!

    மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!

    அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!

    கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!

    ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!

    செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!

    கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!

    போங்கடா நீங்களும் உங்க சட்டமும்!


  13. Thanks gkrishna, vasudevan31355 thanked for this post
    Likes gkrishna, Russellmai, vasudevan31355 liked this post
  14. #719
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதி,

    கூப்பிட்லாமில்லே?

    உங்களைப் போய் அப்படிச் சொல்வேனா? நீங்கள் மரமண்டை அல்ல. மகா மண்டை.

    எவ்வளவு விஷயங்களை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து பல சிறு சிறு தவறுகளை மற்றவர் மனம் கோணாமல்... நன்கு கவனிக்கவும்... மற்றவர் மனம் கோணாமல் திருத்தி உள்ளீர்கள்!. அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் தாங்கள்.

    நீங்கள் அடிக்கடி இங்கு வராததுதான் மிகப் பெரிய குறை எங்களுக்கு. அதே போல பாராட்டைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை எழுதவில்லை.


    //இங்கு எழுதுபவர்கள் ஏதாவது பைசா வருகிறது என்றா எழுதுகிறார்கள்.. முகம்,வயது, பதவி - எதையும் அறியாத அன்பு நெஞ்சங்கள், தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே//

    மேற்கண்ட வரிக்கு மட்டுமே அந்த மரமண்டை பதில்.

    நாம் கலந்து கட்டி 'அங்கு' விளையாடிய நாட்கள் பசுமையானவை. முக்கியமாக வைர நெஞ்சம், பாரத விலாஸ்.

    உங்களுக்குத் தெரியாத தமிழ்த் திரைப்பட ரகசியமே இருக்க முடியாது.

    அதை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு எங்களையும் பயனடையச் செய்ய வேண்டுகிறேன். தினம் ஒரு பதிவாவது தாங்கள் இங்கு இட வேண்டும். இது என் அன்பு வேண்டுகோள்.

    நன்றி!
    Last edited by vasudevan31355; 7th June 2015 at 05:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan liked this post
  16. #720
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சபாஷ் ரவி!

    உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். இதே கேள்விகள்தான் என் நெஞ்சிலும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இருந்து என்ன பயன்? நாம் இருப்பது இந்தியா ஆயிற்றே!

    அருமையான ஆக்ரோஷ பதிவு. ஒவ்வொரு அரசியல்வாதியும் உணர வேண்டிய கருத்துக்கள்.

    நீங்கள் சொல்வது போல் மீடியாக்கள் எல்லாத் தவறையும் செய்து விட்டு ஜம்மென்று தப்பிக் கொள்கின்றன. முக்கியமாக பத்திரிக்கைகள்.

    உள்ளக் குமுறலை நடிகர் திலகத்தின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடல் மூலம் தணிக்க வைத்ததற்கும் நன்றி! பொருத்தமான பாடல்.
    Last edited by vasudevan31355; 7th June 2015 at 05:54 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •