Page 69 of 400 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #681
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாங்க கிருஷ்ணா ஜி.. பில்வ மங்கள் பற்றி அடியேன் எழுதியிருந்த போஸ்டிற்கான லிங்க்..

    http://www.mayyam.com/talk/showthrea...1%3B-3/page344
    நன்றி சி கே. படித்தேன் .அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்
    gkrishna

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #682
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ck - உங்கள் லிங்க் யை மீண்டும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது - அருமை என்ற ஒரு வார்த்தை போறாது .

  5. #683
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்னாஜி - கண்ணன் உங்கள் காதலன் மட்டும் அல்ல - நம் எல்லோருடைய காதலனும் அவனே ! Treta Yuga வில் ஒரு கண்ணன் எல்லோரையும் ஆட்டிவைத்தான் - அவன் புல்லாங்குழலில் எழுந்தது மதுர கானங்கள் . இன்று அவனே சின்ன கண்ணனாக இங்கு வந்து எழுப்பும் மதுரகனாத்தில் நாமெல்லாம் மெய்மறந்து போகிறோம் - என்னமோ போங்க ! உங்கள் பதிவு எங்களை கட்டிப்போட்டு விட்டது - மீள பல நாட்கள் ஆகலாம் ....

  6. #684
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    6

    அதே 'மாலதி' படத்தில் இன்னொரு உற்சாக வெள்ளம் கரை புரளும் பாடல்.

    அதே பாலா சுசீலா குரல்களில்.



    ஸ்கூட்டரில் சரோஜாதேவியை உட்கார வைத்து ஜெமினி ஓட்டிச் செல்வது போல ஆரம்பக் காட்சி. பேக் ப்ரொஜெக்ஷன் காட்சி சிறிது நேரம்.

    அப்போதைய புகழ் பெற்ற லேம்பி அல்லது லேம்ப்ரேட்டா ஸ்கூட்டர் என்று நன்றாகத் தெரிகிறது. அப்போதைய ரிச் ஸ்கூட்டர். நிற்கும் ஸ்கூட்டரில் ஜெமினியும், சரோஜாவும் பயணம் போவது போல நன்றாக பிலிம் காட்டுவார்கள்.

    தேளின் வால் போல சரோஜாவின் கன்னத்தில் விக் முடி சுருண்டு J போல இருக்க, பின்னால் பிகர் இருக்கும் குஷியில் காதல் மன்னன் நிற்கும் ஸ்கூட்டரின் ஹேண்டில் பாரை வளைத்து வளைத்து ஓட்டுகிறார்.

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.

    பச்சைக் கிளி போல ஊரெங்கும் பறந்து

    இச்சை மொழி பேசி எங்கெங்கும் திரிந்து

    பார்த்தும் பாராமல் மகிழ்ந்தாலென்ன

    பாடித் திரிந்தாலென்ன

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.



    அப்புறம் நிஜ மகாபலிபுரத்தின் சாலையில் உண்மையாகவே ஜெமினி மிரண்டு மெதுவாக ஸ்கூட்டர் ஓட்ட, மகாபலிபுர ஒரிஜினல் சிற்பங்களைக் காட்டி, பின் மகாபலிபுர செட்டுக்கு வந்து விடுவார்கள். திக்கான கார்ட்போர்ட் அட்டையில் கடற்கரை கோவிலை வெட்டி தூரத்தில் வைத்து உண்மை என்று நம்ப சொல்வார்கள்.

    சினிமாவில் இதெல்லாம் சாதரணமப்பா.

    தென்றலும் கடலின் அலைகளும் கொஞ்சுமோ
    உறவு தரும்படி கெஞ்சுமோ
    பெண்ணைப் போல் வெட்கம் கொண்டு அஞ்சுமோ

    மங்கையின் மனதில் இருப்பது கொஞ்சமோ
    அலைகள் அடிப்பது நெஞ்சமோ
    எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ
    வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.

    டக்கென்று பாடல் ஸ்பீட் எடுக்கும். பாலா திடீரென்று குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இறங்க அதற்கேற்ற குத்தாட்டம் போட ஆரம்பிப்பார் ஜெமினி.

    வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது

    வலம்புரிச் சங்கு ஒன்று கரை வந்தது.
    வாழ்த்துக்கள் பாடிட வருகின்றது

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.

    பல்லவன் மலையில் எடுத்தது சிலைகளோ
    ------------------------------------------?
    அங்கே மன்னன் கொண்ட காதலோ

    மன்னவன் எனையும் உனையும் எண்ணியே
    கலைஞர் சிலரிடம் சொல்லியே
    கட்டினான் சிற்பம் தன்னை கல்லிலே

    பாண்டவர்க்குத் தேரெடுத்த கடலோரம்
    பார்ப்பவர்க்கு இன்பம் உண்டு வெகு நேரம்

    'ம்ஹூம் ம்ஹூம்' என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தைக் கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல. நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது. அப்படியே அந்த சுசீலாவின் லா லா லா லா ஹம்மிங்கையும் மறந்து விடலாகாது.

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.

    ஜாலிப் பாடல். அப்படியே மாமல்லன் புகழும் பாடப்படும் இந்தக் காதல் டூயட்டில்.

    பாலாவும், சுசீலாவும் சும்மா ஊதித் தள்ளியிருப்பார்கள்.

    Last edited by vasudevan31355; 5th June 2015 at 05:10 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes gkrishna, rajeshkrv, sss liked this post
  8. #685
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

    கொஞ்சம் பாகற்காய் ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டே பிஸியா இருந்தேனா (எதுக்குப் பாகற்காய் ஜூஸ்..அந்த சோகம் அப்புறம்) அதான் லைக் போட்டுட்டு லிங்க் கொடுத்துட்டு பேசாம இருந்தேனா.. இப்ப வந்துட்டேன்

    கிருஷ்ணா ரவி நன்றிகள். வழக்கம் போல கண்ணா அண்ட் கருவின் கரு நைஸ்..

    வாசுங்க்ணா..அந்த்ப் பாட் பார்த்துக் கேட்டேன் ஆர் கேட்டுப் பார்த்து இப்போ எழுதறேன்..

    இந்த லேம்ப்ரட்டா ஸ்கூட்டர் அழகிய மிதிலை நகரினிலே சச்சு அந்த இன்னொரு ஆள்(வழக்கம்போல ஆம்பளை பேர் மற்ந்து போச்) கார் ஓட்டும் போது பின்னால் வருமில்லையா அல்லதுஅது பஜாஜ் சேட்டக்கா.. கல்லூரி காலத்தில் (இது உண்மை) ஒரு நண்பன் நடராஜன் என்று பெயர் .. அவர் அப்பா ஃபார்மசூட்டிகல்ஸ் ஹோல்சேல் ..எக்கச்சக்க பைஸா அப்பொழுது.. நாஙக்ளெல்லாம் பஸ்ஸில் வர அவன் வருவான் ஸ்கூட்டரில்..ஓரிரு முறை ஓட்டியிருக்கிறேன்.. நன்னா இருக்கும்

    '//ம்ஹூம் ம்ஹூம்'என்ற இசையரசியின் ஹம்மிங் இப்போது வரும். சரோஜாதேவி உதடுகள் குவித்து கொவ்வைப் பழத்தை கொத்த வரும் கிளி போல் பாவம் காட்டுவது ராஜேஷ்ஜிக்கு மட்டுமல்ல. நமக்குக் கூட என்னவோ போல்தான் உள்ளது.// ஓய் ஆக்சுவலா அப்படியே லலாலா போடாமல் விட்டிருக்கலாம்.. ஜிஜிக்கு முத்தா கொடுப்பது போல அந்த உதடுக்குவிப்பு இருந்தது கொ.ப.கொ.வ கிளியாம்.. உம்மை நிஜக் கிளியை விட்டுக் கொத்தணும்


    அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..

    //சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கே போவோம்

    சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் சிட் எங்கும் போவோம்.//

    போய்ட்டோமே மகாபலிபுரம் உங்க தயவாலே ஜெ. சர்ரூ கூட புறம் திரும்புங்க நன்றி ஹி ஹி..


    *

    சாலமன் பாப்பையா குரலில் படிக்கவும்..

    அய்யா..லீவு நாளும் அதுவுமா சின்னக் கண்ணா தேவிகா படம் பார்க்கறது தப்பாய்யா.. சீரியஸா பாக்கலையே தொடரும் தொடரும் புது உறவுப் படத்தை - அதான் தெய்வீக உற்வு
    படத்தை சின்சியரா ஓட்டி ஓட்டி ப் பாத்துக்கிட்டிருந்ததும் தப்பாய்யா..

    ஒரு தேவிகாக்கு ரெண்டு தேவிகான்னு சொன்னதும் தப்பாய்யா.. சரி லீவ் நாள் காஃபி தான் வீட்லருந்து வருதுன்னு டம்ளரை வாங்கி சூடில்லையேன்னு கூட நினைக்காம டபக்குன்னு வாய்ல வார்த்துக்கிட்டது தப்பாங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது அது பாகற்காய் ஜூஸ்னு.. குடிச்சுட்டேன்..என்ன செய்றது

    படம் சுமார் தான் அந்தப் பாட்டும் கட் மத்த பாட்லாம் இருக்கு.. அந்த தொடரும் தொடரும் பாட்டில ஒல்லியா த் தெரிஞ்சவர் படம் முழுக்க குண்டா வர்றாரே எப்படி எப்படி..தெரியலையே..

    ம்ம் பின்ன வாரேன்

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  10. #686
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //வெண்கல வாணிகரின் வீதி முனையில்
    வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
    கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
    கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? .// பாரதியார் பாடலை மறுபடி படிக்கவும் அதுபற்றி எழுதியிருந்த விளக்கத்துக்கும் நன்றி க்ருஷ்ணா..

    *

    இந்தக் குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா - எனக்குத்தெரிந்து இரண்டு மூன்று உறவுகளின் அந்திம காலத்தில் அவர்கள் கேட்ட பாட்டு..எப்போது கேட்டாலும் நெஞ்சை அள்ளும்.. தாங்க்ஸ் ஃபார் த உ.ச ரைட் அப் அண்ட் நினைவூட்டல் ஆஃப் திஸ் ஸாங்க் ரவி..

  11. #687
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    காற்றில் கலந்த இசை 7: தென்றலின் ஒலி வடிவமாய் ஒரு குரல்



    பூந்தளிர்

    தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் பிரவேசம் நிகழ்ந்த அன்னக்கிளி படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குநர்கள். திரையிசையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்த அந்தப் படத்துக்குப் பின்னர் அவர்கள் இயக்கிய பல படங்களுக்குத் தனது அற்புதமான இசையை அளித்தார் இளையராஜா. அந்த வரிசைப் படங்களில் ஒன்று பூந்தளிர்(1979). அன்னக்கிளி படத்தில் நடித்த சிவகுமார், சுஜாதா ஜோடிதான் இந்தப் படத்திலும். நிஜ வாழ்வில் சிறந்த ஓவியரான சிவகுமார் இப்படத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞன் அஷோக்காக நடித்திருப்பார். மலையாளப் பெண்ணான மாயாவை (சுஜாதாவை) காதலித்துத் திருமணம் செய்துகொள்வான் அஷோக். காலமும் சூழலும் இருவரையும் பிரித்துவிடும். தனது காதல் கணவனைத் தேடிக் குழந்தையுடன் வரும் மாயாவும் இறந்துவிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை அநாதையாகத் திரியும். இறுதியில் அஷோக்கின் கலைதான் குழந்தையை அவனிடம் சேர்ப்பிக்கும்.

    கிட்டத்தட்ட அன்னக்கிளி படத்தின் அதே குழுதான் எனினும், அப்படத்தில் மூன்று அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி இப்படத்தில் ஒரு பாடல்கூடப் பாடவில்லை என்பது விசித்திரம். ஆனால், படத்தில் ஒரேயொரு பாடலைப் பாடியிருக்கும் ஜென்ஸி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் தீவிர இசை ரசிகர்களின் சேகரிப்பில் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை. வருடிச் செல்லும் தென்றலின் ஒலி வடிவமாக நிலைத்துவிட்ட குரல் ஜென்ஸியுடையது.

    குரலுலகின் தேவதை

    இப்படத்துக்கு முன்னர் அடி பெண்ணே, ஆடச் சொன்னாரே என்று பிரபலமான பாடல்களை ஜென்ஸி பாடியிருந்தாலும் இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ஞான் ஞான் பாடணும் பாடலின் விசேஷம், அது அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்டது என்பதுதான். தபேலாவின் துள்ளலான தாள நடையுடன் தொடங்கும் அந்தப் பாடலில் இசைக் கருவிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டே விளையாடிச் செல்லும். பரவசப்படுத்தும் கிட்டாரின் ஒலி, சோகம் இசைக்கும் வயலின், ரகசியத்தைக் கிசுகிசுக்கும் புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டியிருப்பார் இளையராஜா. காதல் ஏக்கம் என்பதையும் தாண்டி, தனக்கு நேரப்போகும் துயரத்தை முன்பே அறிந்துகொண்ட மனதின் மென்சோகத்தின் வெளிப்பாடாக ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. மாங்குயில் ஜோடிகள் மெல்லக் கூவும் ரகசியம் என்று தொடரும் சரணத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து, அதை ஆமோதிக்கும் விதமாக வயலினும் புல்லாங்குழலும் மென்மையாக ஒலிக்கும். எங்கோ ஒரு மலையடிவார கேரள கிராமத்துக்குக் காற்றின் வழியே பயணம் செய்யும் அனுபவத்தைத் தரும் பாடல் இது.

    தாம்பத்ய சங்கீதம்

    அன்பே எனும் வார்த்தையைக் காதலுடன் வயலினில் வாசித்துக் காட்ட முடியுமா? வா பொன்மயிலே என்று தொடங்கும் பாடலின் முகப்பு இசையைக் கேளுங்கள்! காதலில் திளைக்கும் கணவன், தன் மனைவியின் அழகை இயற்கையின் வனப்புடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னர் பல்லவியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக்கொண்டே விரிந்து செல்லும் இசைக்கோவையில் இளையராஜாவின் மேதமை மிளிரும். எஸ்.பி.பி.யின் குரல் தாம்பத்யத்தின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும். உயிரிலே கலந்து மகிழ வா..பொன்மயிலே என்று பல்லவியுடன் சங்கமிக்கும் சரணத்தின் முடிவில் எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரத்தின் பேரமைதியை உணர முடியும்.

    பகலின் குரல்

    காதல், சோகம் எனும் பட்டியல் வகைப் பாடல்களைத் தாண்டி, சூழலின் தன்மையை மென்மையாகப் பதிவுசெய்யும் பல பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். மனதில் என்ன நினைவுகளோ எனும் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. எஸ்.பி.பி. ஷைலஜா பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸபோன் என்று மேற்கத்திய இசைக் கருவிகளின் துள்ளல் இருந்தாலும் அவற்றைத் தாண்டிப் புல்லாங்குழலின் இசை ஒரு யோகியின் பரிவுடன் பாடல் முழுதும் வருடிச் செல்லும். பா..பாபா.. என்று உற்சாகம் பொங்கும் குரலுடன் பாந்தமாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பரபரப்பாக இயங்கும் நகரின் பகல் நேரத்து அமைதி, அதன் இயல்பில் பதிவான பாடல் இது.

    ஆதரிக்க யாருமின்றித் தனியே திரிந்துசெல்லும் தன் மகனை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயின் ஆன்மா பாடும் ராஜா சின்ன ராஜா பூந்தளிரே எனும் பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். எஸ்.பி. ஷைலஜா பாடிய கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  13. #688
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    சினிமா ரசனை 1: அந்த மூவரில்... நீங்கள் யார்?




    மிக மிக உயர்ந்த ரசனை கொண்டவர்கள் நமது தமிழ்நாட்டு சினிமா பார்வையாளர்கள் என்பது உண்மை. இவர்கள், எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி, அவை உன்னதமான படங்களாக இருந்தால், அந்தப் படங்களை மொழி தெரியாமலேயே மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல படங்கள் வெளியாகத் தாமதமாகும்போது, பொழுதுபோக்க வேண்டும் என்பதற்காக மிக மிக மோசமான படத்தைக்கூட ஒருதடவை அல்ல; பல தடவை பார்ப்பார்கள். முறையான சினிமா பற்றித் தெரிந்த எவரும் பார்த்துச் சிரிப்பார்களே என்ற வெட்க உணர்வு துளியும் இல்லாமல், நாகரிகத்தின் உச்சாணிக்கு நாம் போய்விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இன்றைய காலகட்டத்திலும் நம் சினிமாக்களில் காதலன், காதலி டூயட் பாடியாடும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இந்த அலங்கோலத்தை இந்திய நாட்டைத் தவிர வேறு எந்தவொரு நாட்டின் சினிமாவிலும் பார்க்க முடியாது’.

    ‘சினிமாவும் நானும்’ என்ற நூலில் இயக்குநர் மகேந்திரன்.

    தமிழ்நாட்டில் நிலவும் சினிமா ரசனையை இதைவிடத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது. ஒரு ‘சராசரி’ (இந்த வார்த்தையே கண்டிக்கத்தக்கது. ஏன் என்று சற்றுப் பின்னால் கவனிப்போம்) திரைப்பட ரசிகனாக இன்றைய தேதியில் நமக்குத் தேவையானது என்ன என்று யோசித்தால், ‘நல்ல திரைப்படம் பார்க்க வேண்டும்’ என்ற ஆசை எல்லாருக்குமே இருப்பதை மறுக்க முடியாது. இதில் ‘நல்ல’ என்பதுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

    இருவகை ரசிகர்கள்

    ஒரு சாரார், ‘உலகின் சிறந்த திரைப்படங்களைப் போலவே தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்படும் காலகட்டம் வர வேண்டும்; அப்படங்களே எங்களைப் பொறுத்தவரையில் நல்ல படங்கள்’ என்கிறார்கள். இவர்கள் யார் என்று கவனித்தால், செர்கய் ஐஸன்ஸ்டைனில் தொடங்கி சமீபத்தில் வெளியாகியிருக்கும் இயக்குநர் டாட் ஹெய்ன்ஸ் இயக்கியிருக்கும் ‘கரோல் ’(Carol - 2015) திரைப்படம் வரையில் தேர்ந்தெடுத்தே பார்ப்பவர்கள். எல்லா உலக சினிமா விழாக்களுக்கும் தவறாமல் ஆஜராகிவிடும் தீவிரமான சினிமா நேசிப்பாளர்கள். இவர்களைப்பொறுத்தவரை சினிமா என்பது வணிகம் என்ற அம்சத்தைத் தாண்டி, கலை என்பதன் முழுமையான வெளிப்பாடு. ரித்விக் கட்டக், சத்யஜித் ராய், ஜான் ஆப்ரஹாம், ராமு காரியத், அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், கிரீஷ் காஸரவள்ளி, கிரீஷ் கர்னாட், மிருணாள் சென், தபன் சின்ஹா போன்ற பல இயக்குநர்களின் படங்களைக் கரைத்துக் குடித்திருக்கும் தீவிர ரசிகர்கள் இவர்கள்.

    இன்னொரு சாராரோ இவர்களுக்கு நேர் எதிரானவர்கள். ‘திரையரங்கு சென்றால் எங்களுக்குப் பொழுது போக வேண்டும். எங்களை சுவாரஸ்யப்படுத்தும் காட்சிகள் வர வேண்டும். அலுப்பே ஏற்படக் கூடாது’ என்பவர்கள். இவர்களுக்குத் தேவை வணிகப் படங்கள். இவர்களால் சென்ற பத்தியில் சொல்லியிருக்கும் இயக்குநர்களின் படங்களில் ஒன்றைக்கூட முழுமையாகப் பார்க்க இயலாது.

    முக்கியமான மூன்றாம் குழு

    இந்த இரண்டு நேர் எதிரான குழுக்களுக்கு இடையே அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இன்னொரு கும்பலும் உள்ளது. இவர்கள்தான் திரைப்பட ரசிகர்களில் அதிகமான சதவிகிதம். இவர்களைத்தான் இயக்குநர் மகேந்திரன் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள மேற்கோள் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் பெரும்பாலான திரை ரசிகர்களாகிய இவர்களுக்கு எப்படிப்பட்ட படங்கள் வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் கணினி, இணையம் ஆகியவற்றை அதிகமாக உபயோகப்படுத்தும் மக்கள் இவர்கள். இதன்மூலம் விரும்பியோ விரும்பாமலேயோ நல்ல படங்களின் தாக்கம் இவர்களைச் சென்று அடைந்திருக்கிறது. உடன் வேலை செய்யும் நண்பர்கள் சொல்லியோ, இணையத்தில் தேடியோ, தொலைக்காட்சியைப் பார்த்தோ, வலைப்பூக்கள், சினிமா பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றின் மூலமோ இவர்களுக்கு உலகின் சிறந்த திரைப்படங்கள் பற்றிய ஞானம் ஓரளவு உள்ளது. இவர்களால் அப்படிப்பட்ட படங்களை அவசியம் ரசிக்க இயலும். அதே சமயம், எப்போதுமே அப்படி இருக்காமல், அவ்வப்போது வணிகப் படங்களும் பார்த்து ரசிக்கக்கூடியவர்கள் இவர்கள்.

    ஓராண்டுக்கு முன்னர் சென்னையில் உலகத் திரைப்பட விழாவின்போது லூஸியா திரையிடப்பட்டது. அந்தத் திரையரங்குகளில் நிரம்பிய கூட்டத்தால் பலரும் நின்றுகொண்டே அப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் படம் திரையிடப்பட்ட எல்லாச் சமயங்களிலும் இதேதான் நடந்தது. இது மட்டுமல்லாமல், இன்னும் உலகத் திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய புகழ்பெற்ற படங்கள் எல்லாவற்றுக்குமே நிரம்பும் பெரும்பாலான கூட்டம் இவர்களால்தான்.

    இந்த வகையைச் சேர்ந்த ரசிகர்கள்தான் இப்போது இணையத்திலும் எந்தப் படம் வெளிவந்தாலும் உடனடியாக அதைப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கின்றனர். எந்த நடிகருக்கும் ரசிகராக இல்லாமல், நடுநிலையாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க இவர்களால் முடிகிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பல திரைப்படக் குழுமங்களில் இவர்கள்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். தினந்தோறும் பல படங்களை இணையத்தின் மூலம் பார்த்துவிட்டு இக்குழுக்களில் இவர்கள்தான் அவற்றைப் பரிந்துரைக்கின்றனர். இந்தத் திரைப்பட ரசிகர்கள் நாள்தோறும் வளர்ந்தும் வருகின்றனர்.

    அனுபவமாக மாறுமா?

    இந்த வகைத் திரை ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். “ஒரு திரைப்படம் என்பது கொடுக்கும் ஆழமான அனுபவத்தைத் தேடிச் செல்கிறோம்” என்பதே அது. அப்படம் எந்த மொழியில் இருந்தாலும் சரி; எந்த வகையாக இருந்தாலும் சரி; அது ‘லைஃப் இஸ் ஃப்யூட்டிஃபுல்’(Life is Beautiful) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்; அதுவே ‘எ செர்பியன் பிலிம்’ (A Serbian Film) படமாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். அப்படங்களின் வாயிலாகச் சொல்லப்படும் கருத்துகளில் எங்களின் திரை ரசனையை நாங்கள் மேம்படுத்திக்கொள்கிறோம் என்பதே இவர்களின் நோக்கம்.

    உங்களுக்காகவே

    இந்த வகையைச் சேர்ந்த, தமிழகத்தின் பெரும்பாலான நடுநிலையான திரை ரசிகர்களுக்குத் தேவையான படங்கள் என்னென்ன? அவற்றின் மூலம் சொல்லப்படும் செய்திகள் என்னென்ன? அவற்றின் இயக்குநர்களும் திரைக்கதையாசிரியர்களும் அப்படங்களில் சொல்ல முயன்றவை என்ன? அந்த நோக்கம் நிறைவேறியதா? இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக, தெளிவாக இத்தொடரில் கவனிக்க இருக்கிறோம். நீங்கள் தரமான திரைப்படங்களை விரும்புபவராக இருந்தால் உங்களுக்காகத்தான் இத்தொடர் எழுதப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளலாம். இப்படங்கள் எப்படி உலக அளவில் பேசப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட படங்கள் தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; அவை மூலம் பல்வேறுபட்ட கருத்துகள் பேசப்பட வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். இடையிடையே சினிமா பற்றிய பல விஷயங்களும் உள்ளே வரும்.

    ஆரம்பிக்கலாமா?

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #689
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அந்த செட் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது இல்லியோ.. நல்ல கூர்மையான பார்வை..//

    போட்டுகிட்டு இருக்கிற கண்ணாடி 12000 ரூவா சின்னா.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes chinnakkannan liked this post
  17. #690
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக் சார் , CK , கிருஷ்னாஜி , கலை சார் , ராஜேஷ்

    உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் . உடனே நமக்கு -இந்த திரிக்கு தேவை disaster management plan . ஒவ்வொரு தடவையும் "பாலா " என்ற காட்டு வெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு நம்மையெல்லாம் அடித்துச்செல்கின்றது - நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் திணறுகிறோம் . மீண்டும் இந்த" பாலா" வெள்ளம் சீக்கிரமே மீண்டும் வரக்கூடும் . வருவதற்குள் எப்படியாவது நாம் அடித்துச்செல்லாமல் நம்மை பார்த்துக்கொள்ளவேண்டும் . உங்கள் யோசனை வரவேற்க்கப்படுகின்றன .

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •