Page 64 of 400 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #631
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெயிலை குறைக்க எஸ்.வி.சுப்பையாகிட்ட சிபாரிசு பண்ணதுக்கு நன்றி சின்னா. உனக்கு நிகர் வருமோ!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #632
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஹாய் கிருஷ்ணா!

    எங்கே ஒளிந்து கொண்டீர்? நான்கைந்து நாட்களாய்க் காணோம்?

    நீங்க இல்லாம பக்கெட்ட தூக்க முடியல ஒண்டியாய்.

    மாலதி பற்றிய பின்னூட்ட பதிவுக்கு நன்றி! உங்கள் பழைய நினைவுகளுக்கும் நன்றி! தம்பி அம்பிக்கும் நன்றி!

    //28 படங்களின் பெயர்களும் , அவர்கள் நடித்த கதாப்பாத்திரங்களின் பெயர்களும் முறையே//

    நல்ல நினைவூட்டல் கிருஷ்ணா! நன்றி! திரு எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் தோன்று அரிய புகைப்படம் பற்றி அறிய நானும் ஆவலாய் உள்ளேன். கலை சார் உதவுவார் என்று நம்புகிறேன்.
    Last edited by vasudevan31355; 4th June 2015 at 07:10 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #633
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாசுதேவன்

    பாலா பிறந்த நாளில் அவரைப் பற்றி தமிழ் ஹிந்துவில் வெளிவந்த கட்டுரையை இங்கே பதித்ததற்கு மிக நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #634
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்!

    வாங்கோ! வாங்கோ! நன்னா இருக்கேளா? சாப்ட்டேளா? சுகம்தானே! உங்களை வரவழைக்க கிருஷ்ணாதான் லாயக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #635
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்தாங்க கண்ணா!

    வயிறு குளிர சாப்பிடுங்க.







    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks chinnakkannan thanked for this post
  9. #636
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,

    அட்டகாசம். அருமையான பாடலை கொடுத்து ரசிக்கவைத்துள்ளீர்கள். என்ன ஒரு கடின உழைப்பு. குறைச்சலாக பார்த்தாலும் 2 மணி நேரம் பிடித்திருக்கும் என்பது என் கணிப்பு. இன்று திரு.எஸ்.பி.பி. அவர்களின் பிறந்தநாள். அதற்காக அவர் பல்லாண்டுகள் சுகமோ சுகம் என்று வாழ அவரது பாடல் மூலமே வாழ்த்தியிருக்கிறீர்கள்.

    //(பனங் கள்ளிலா? தென்னங் கள்ளிலா? காதலி கையில் விழுவது போதை தரும் கள்ளில் விழுவது போலவாம். கண்ணதாசா! நீயெல்லாம் இறந்திருக்க வேண்டுமா? இருந்திருக்க வேண்டாமா?) //
    என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். நன்றி.

    கிருஷ்ணா சார் பதிவிட்டுள்ள ஸ்டில், என் அண்ணனுக்குப் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்து போட்டோ ஷூட்டோடு நின்று போன நம்ம வாத்தியார் என்று பெயரிடப்பட்ட படம். பின்னர், வீனஸ் பிக்சர்ஸார் மக்கள் திலகத்தை வைத்து ஊருக்கு உழைப்பவன் படத்தை தயாரித்தனர்.

    ராகவேந்திரா சார்,

    தூங்காத கண்ணென்று ஒன்று பாடலுக்கு தங்களின் விளக்கமும் பிரமாதம். ரசித்துப் படித்தேன். உங்கள் உழைப்பும் வணங்கத்தக்கது. நன்றி.

    சின்னக்கண்ணன்,

    அபிராமி பட்டர், தேவாரம் விளக்கம் அற்புதம். ஆமாம், இரவு 10 மணிக்கு மேல் எதற்கு ஃபிளாட்டை விட்டு கீழே சென்றீர்?

    கிருஷ்ணா சார்,

    மக்கள் திலகம், செல்வி ஜெயலலிதா ஸ்டில் அட்டகாசம். படங்கள் விவரங்களுக்கும் நன்றி. தலைப்பும் சூப்பர்.


    கல்நாயக்,

    டூ விட்டது சரியாகி விட்டதா? ரொம்ப கோபித்துக் கொள்வதால், உங்களைவிட நான் சிறியவன் என்று ஒப்புக் கொள்கிறேன்(அறிவில்).

    ரவி சார்,

    உங்களுக்கு 6 வயதுக்கு மேல் தாண்டியிருக்க சாத்தியமில்லையா? ஆனாலும் இவ்வளவு ஆசை கூடாது சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


  10. #637
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    CK/கலை - உங்களுக்காக இந்த பதிவு .

    கல்யாண மந்திரங்கள்

    கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் இளைஞர்களும் பெண்களும் அதுபற்றி அசட்டையாய் இருக்கின்றனர். மந்திரங்களின் அர்த்தங்களை விஷயம் தெரிந்த ஒருவர் கல்யாணத்திற்கு முன்பே விளக்கிச் சொல்லிவிட்டால், மணமக்கள் புரிந்து கொண்டு, அக்கறையுடன் சடங்குகளைச் செய்வார்கள். இதே முறையை உபநயனம் மற்றும் இதர காரியங்களுக்கும் கையாளலாம்.

    - ஐயன்.

    சென்னையில் ஒரு வாலிபருக்கு திருமணம். இருபத்தைந்து வயது போல் இருப்பவர். பெரியவாள் மேல் அவ்வளவு பக்தி, மரியாதை.

    முஹுர்த்தம் அதிகாலை. முடிந்தவுடன் அவசர அவசரமாக ஒரு டாக்ஸி பிடித்து நேராக காஞ்சிபுரம், ஸ்ரீ மடம்.

    மணக் கோலத்திலேயே, ஐயனிடம் ஆசிவாங்கிவிட துடிப்பு, பையனிடம்.

    9 மணிபோல் ஸ்ரீமடம் வந்தாயிற்று.

    அதுவரை எல்லோரிடமும் சிரித்து பேசிக்கொண்டு தான் இருந்தார் ஐயன். இந்த புதுமண தம்பதியிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவில்லை. அதுமட்டுமல்ல. மற்றவரிடம் பேசுகிறார். இவர்கள் எதுவும் பேசினால் மட்டும், முகத்தை திருப்பிக் கொள்கிறார்.

    வந்தவர்களுக்கோ பெருத்த ஏமாற்றம். கவலை, வருத்தம். மணநாள் அதுவுமாக ஏன் ஐயன் நம்மிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவில்லை. சின்னஞ்சிறியவர்கள் தானே?

    கூட இருந்தவர்கள் சொல்லிப் பார்த்தனர். 'குழந்தைக்கு கல்யாணம். பெரியவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க பட்டணத்திலே இருந்து டாக்ஸி பிடிச்சு வந்திருக்கா. பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்'.

    10 மணி போல் ஆனது. தெய்வம் பேசிற்று.

    'என்னைப் பார்க்கணும் ன்னு சாஸ்த்ரிகள் கிட்டே மந்திரத்தை எல்லாம் வேக வேகமா சொல்லச் சொல்லிட்டு இங்கே வந்தானாக்கும். வேத மந்திரத்துக்கு இல்லாத அனுக்ரஹ விசேஷம் என்கிட்டே மட்டும் இருக்கா என்ன?'.

    குழந்தைகள் துடியாய் துடித்தனர்.

    மனம் இரங்கினாள் வேத மாதா.

    'அப்பாக்குட்டி சாஸ்த்ரிகளை நான் கூப்டேன்னு அழைச்சிண்டு வாங்கோ'.

    அப்பாக்குட்டி சாஸ்த்ரிகள் ஸ்ரீ மடத்தின் வேத விற்பன்னர்.

    என்னவோ, ஏதோ என்று அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். பெரியவா கூப்பிடுகிறார் என்றால் ஸ்ரீ மடத்தில் எல்லோருக்குமே ஒரு பதற்றம் இருக்கும்.

    'நீ என்ன பண்றே? என்ன பார்க்கற அவசரத்திலே, இந்த குழந்தேள், கல்யாண மந்த்ரத்தை கூட முழுசா பண்ணாம இங்கே வந்துட்டா. இந்த குழந்தேளை அழைச்சிண்டு போய் அத்தனை கல்யாண மந்தரத்தையும் சொல்லி, அதுக்கு அர்த்தத்தையும் சொல்லிக் கொடுங்கோ'.

    பிராயசித்தமாக திரும்பவும் மந்திரம் காதால் கேட்பது என்று சொல்லி இருக்கிறது.

    அப்பா குட்டி சாஸ்த்ரிகளும் ஐயன் இட்ட கட்டளையை 10 மணி முதல் மாலை 4 வரை ரொம்ப கர்ம ஸ்ரத்தையாக நிறைவேற்றி பின்னரே குழந்தைகளை திரும்பவும் ஐயனிடம் அழைத்து வந்தார்.

    'வேதம் ஒங்களை ஆசிர்வாதம் பண்றதைவிடவா நான் ஆசிர்வாதம் பண்ணிடப் போறேன். சாஸ்திரம், சம்ப்ரதாயம், வேதம் இதுக்கெல்லாம் ஸ்ரத்தையா இரு. என்னோட ஆசிர்வாதம் எப்பவும் ஒன் கூடவே இருக்கும். என்னைத் தேடிண்டு பார்க்க ஸ்ரமப் பட்டுண்டு வரவே வேண்டாம்.'

    அதே சமயம், ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் இருந்து ஒன்றுக்கு இரண்டாக ரெட்டை மாலை பிரசாதம் வந்தது.

    'நீ அவன் கழுத்துலே போடு. அவன் ஒன் கழுத்துலே போடட்டும். இதைவிட ஒசந்ததா வேற என்ன பிரசாதம் ஒங்களுக்கு நான் தரமுடியும்' என்றார் வேதம் வாழ வந்த வித்தகர்.

    குழந்தைகள் கதறித் தீர்த்துவிட்டன.

    இப்படியும் ஒரு காருண்யமா?

    கருணைக்கு கையும், காலும் முளைத்தால் அது தான் மஹா பெரியவா...


  11. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  12. #638
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    Krishna sir

    thanks for your detailed list about our makkal thilagam mgr- jaya movies list with characters name.
    வினோத் சார் , மக்கள் திலகதைப்பற்றி ஏதாவது போட்டால்லொழிய இந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டீர்கள் போல் உள்ளதே - உங்களை வரவழைக்க வேண்டுமென்றால் எங்கள் மற்ற எந்தவிதமான பதிவுகளாலும் முடியாது போலிருக்கின்றது .. எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை ....

  13. Likes rajeshkrv liked this post
  14. #639
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று திரியின் சுவை எல்லோருடைய sugar அளவையும் தாண்டியிருக்கும் . ஒருவருக்குமே மற்றவர்களின் பதிவுகளை படிக்க கண்டிப்பாக இன்று நேரம் இருந்திருக்க முடியாது ( என்னையும் சேர்த்துதான் ) - அடேயப்பா வாசுவின் " (நான்)பாலா பிரளயத்தையே உண்டு பண்ணுகின்றது - நொங்குவின் சுவையுடன் .. கல்நாயக் அவர்களின் பூவின் பாடல்கள் நறுமணத்தை இந்த திரியில் அள்ளி வீசியவண்ணம் உள்ளது - என்னமோ போங்க ! எதை சொல்வது எதை எழுதுவது என்றே புரியவில்லை - சற்றே காற்று அடித்து ஓயிந்து விட்டது என்று நினைக்கும் போது , ராஜேஷின் அருமை பதிவுகள் , கிருஷ்னாஜியின் பிரவேசம் , ராகவேந்தரின் குங்கும திலக சங்கமம் - கலையின் நன்றி பதிவு , CK வின் பதிவுகள் ------- திருஷ்ட்டி சுத்தி போடுங்கள் வாசு , இந்த திரிக்கு .

  15. #640
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மலரே பேசு மெளன மொழி நல்ல பாடல் ராஜேஷ்.. தாங்க்ஸ்.. கோச்சுக்கலையே..

    நீர் ஞானசம்பந்தர்ங்காணும்.. மதுரை பொன்னுக்கோனார் பால் கடையில் பசும்பால் அருந்தினீரே! ( நினைவிருக்கா.. கிருஷ்ணன் கோவில் பக்கத்திலன்னு நினைவு)
    ஏன் இல்லை . நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறதே.. ஹி ஹி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •