Page 60 of 400 FirstFirst ... 1050585960616270110160 ... LastLast
Results 591 to 600 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #591
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ கானங்கள்

    உண்மையிலேயே இதுவும் அபூர்வமான கானம் தான். இளைய திலகம் பிரபு அவர்களின் ஆரம்ப காலப் படம், நலந்தானா விலிருந்து மெய்மறந்து நம்மை சொக்க வைக்கும் இனிய பாடல்.. கல்யாண மாலை சூடி...

    இந்தப் பாட்டெல்லாம் மீண்டும் காணவும் கேட்கவும் வாய்ப்பளிக்கும் நண்பர்களுக்கும் யூட்யூப் இணைய தளத்திற்கும் நன்றி.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #592
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ரவி,

    கருவின் கருவில் உங்கள் புண்ணியத்தில் நல்ல ஆன்மீக கதைகளும், அருமையான தெலுங்கு, மலையாளப் பாடல்களும் கேட்டு தாயைப் பற்றி நிறையவே சிந்தித்து அதிகமாக புண்ணியம் செய்து கொள்கிறோம். நன்றி.
    நன்றி பல கல்நாயக் சார் . இப்படி மற்றவர்களுடைய பதிவுகளை தேடிக்கண்டுபிடித்து , இருக்கும் உங்கள் குறுகிய நேரத்திலும் பாராட்டுவதால் தான் உங்களை மிகவும் பெரியவர் என்று சொல்கிறோம் . இப்படிப்பட்ட நற்குணம் எங்களைப்போன்ற சிறியவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது - பாருங்களேன் - அழகான "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா." என்ற பாடலை எனக்காக பதிவு செய்து உள்ளீர்கள் - பாராட்ட உடனே தோன்றுகிறதா எனக்கு - இல்லையே பெரியவர்கள் பெரியவர்கள் தான் - நாங்கள் நாங்கள் தான்

  4. #593
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    இன்னும் பல நாட்களுக்கு உங்களுக்குள் ஒரு ஹேங்ஓவரை ஏற்படுத்தப் போகிற பாடல்...
    வரிகள்.. ஜீவனுள்ள வரிகள்.
    எப்போதாவது அத்தி பூத்தாற்போல காவியமாய் அமையக் கூடிய பாடல் வரிகள் இப்பாடலுக்குள் இடம் பெற்று, இப்பாடலின் இலக்கியத்தரத்தை எங்கோ இட்டுச் செல்லுகின்றன.

    முதல் வரியே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பாடியுள்ளார் பாலா.

    ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
    மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு...

    வாசு சார். இந்தப் பாடல் உங்களுக்காகவே... எஸ்.பி.பாலாவின் பழைய பாடல்களைப் பற்றித் தாங்கள் எழுதும் தொடரில் இப்பாடல் இடம் பெறும் போது..

    இப்போதே சொல்லி வைக்கிறேன்.

    தங்கள் பதிவே ஓர் காவியமாகி விடும்.

    நங்கூரம் படத்திலிருந்து காமினி ஃபொன்சேகா, லக்ஷ்மி இணையில் காலத்தால் அழியாத காவியப் பாடல்..

    மெல்லிசை மாமணி மற்றும் இலங்கை இசையமைப்பாளர் இணை இசையில்
    Last edited by RAGHAVENDRA; 3rd June 2015 at 09:04 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #594
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறு காணிக்கை -

    மன்னிக்கவும் , சுருக்கமாக எழுத தெரியவில்லை . பொறுமையாக படிக்கவும் . கிருஷ்ணனை பலரும் பல விதமாக நிந்திப்பதை கேட்ருக்கிறேன் - அவன் நினைத்திருந்தால் , பாரத போரை நிறுத்தி இருக்கலாம் - பல அப்பாவிகளின் உயிர் தப்பி இருக்கும் . அவன் நினைத்திருந்தால் , தர்மரின் சூதாட்டத்தை நிறுத்தி இருக்க முடியும் - அவன் செய்ததெல்லாம் திருட்டுத்தனம் , பொய் , பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் அதிகம் - நம் தாயையே நம்மால் சிறப்பாக புரிந்துக்கொள்ள முடியவில்லை - கிருஷ்ணனையா புரிந்துகொள்ள போகிறோம் ? இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது இதுவரை புரியாத , தெரியாத பல உண்மைகள் கிருஷ்ணன் வாயில் இருந்தே நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . இந்த பதிவு எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.

    கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?

    (கண்ணனின் அற்புத விளக்கம்)

    ***************************

    பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

    இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

    துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

    ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

    தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

    ''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

    ''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

    உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

    ''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

    ''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

    நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

    விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

    அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

    தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன்.

    அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

    மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய்.

    மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

    ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

    இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

    பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

    உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

    ''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன்.

    அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

    சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

    தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

    'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்;

    என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

    யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

    பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

    அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

    அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

    . துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

    அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

    ''அருமையான விளக்கம்

    கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

    ''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

    புன்னகைத்தான் கண்ணன்

    . ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

    ''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

    ''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

    அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

    பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

    நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

    உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

    பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.

    அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

    அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது
    மறுபடிப் பிறந்திருக்கும்
    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று நீ
    விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
    வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
    .
    என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
    எனதென்றும் அறிந்து கொண்டாய்
    கண்ணன் மனது கல்மனதென்றோ
    காண்டீபம் நழுவவிட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே மக்களும் நானே
    மரம் செடி கொடியும் நானே
    சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
    துணிந்து நில் தர்மம் வாழ
    .
    புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப்
    புண்ணியம் கணணனுக்கே
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
    கண்ணனே கொலை செய்கின்றான்
    காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக
    இக்களமெலாம் சிவக்க வாழ்க...
    .
    பரித்ராணாய சாதூனாம்
    விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
    சம்பவாமி யுகே யுகே.

  6. Likes kalnayak liked this post
  7. #595
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்
    உங்கள் அபூர்வ கானங்கள் ஒவ்வொன்றாய் கேட்டு வருகின்றேன்..
    ஒரு பார்வை பார்க்கும் போது மனம் பாடும் நூறு பாட்டு..
    மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு// கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்துக் கொண்ட வெள்ளம்..// நைஸ் இதுவரை கேட்டதில்லை லஷ்மி தெரிகிறது மற்றவர் (லோ பட்ஜெட் படமா..பாவம் லஷ்மி ப்ளவ்ஸ் கிழிஞ்சிருக்கு!)
    கல்யாண மாலை சூடிபாட்டும் நன்றாக இருந்தது.. பாஸ்கர், கீர்த்திசுரேஷின் அம்மா(எனக்கு அப்படித்தான் தெரியும்) மேனகா..ம்ம்

    கதவைத் தட்டிய மோகினிப் பேய் – போஸ்டர் பார்த்த நினைவு.. வாழ்க்கை ஒரு சீட்டாட்டம், அப்புறம் ஜெய் ஸ்ரீதேவி அம்மாடி பொண்ணு என்னம்மா கண்ணு கேட்டிருக்கிறேன்..

    ஜெய்க்காக க் கொடுத்த உள்ளத்தின் கதவுகள் கண்களடா எனக்கு மிகவும் பிடிக்கும்..
    ம்ம்
    நானும் அடுத்த போஸ்ட்ல ஒரு ஜெய் பாட் போடறேன்.. ஆண்டவா “போட்டாச்’ சா இல்லாம இருக்கணுமே a.g kku nandri ragavendra sir (innum niraiya paat ketkanum)

  8. #596
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    ராஜேஷ் - இந்த பதிவு உங்களுக்கு ஒரு சிறு காணிக்கை -

    மன்னிக்கவும் , சுருக்கமாக எழுத தெரியவில்லை . பொறுமையாக படிக்கவும் . கிருஷ்ணனை பலரும் பல விதமாக நிந்திப்பதை கேட்ருக்கிறேன் - அவன் நினைத்திருந்தால் , பாரத போரை நிறுத்தி இருக்கலாம் - பல அப்பாவிகளின் உயிர் தப்பி இருக்கும் . அவன் நினைத்திருந்தால் , தர்மரின் சூதாட்டத்தை நிறுத்தி இருக்க முடியும் - அவன் செய்ததெல்லாம் திருட்டுத்தனம் , பொய் , பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் அதிகம் - நம் தாயையே நம்மால் சிறப்பாக புரிந்துக்கொள்ள முடியவில்லை - கிருஷ்ணனையா புரிந்துகொள்ள போகிறோம் ? இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது இதுவரை புரியாத , தெரியாத பல உண்மைகள் கிருஷ்ணன் வாயில் இருந்தே நாம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . இந்த பதிவு எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.

    கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?

    (கண்ணனின் அற்புத விளக்கம்)

    ***************************

    பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

    இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

    துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.

    ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

    தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

    ''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

    ''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.

    உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

    ''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்..

    ''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.

    நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.

    விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.

    அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.

    தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.

    அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

    மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

    மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?

    ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

    இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

    பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

    உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

    ''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

    அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

    சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

    தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

    'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;

    என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.

    யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.

    பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

    அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.

    அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..

    . துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

    அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

    ''அருமையான விளக்கம்

    கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

    ''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

    புன்னகைத்தான் கண்ணன்

    . ''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

    ''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

    ''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.

    அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

    பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

    நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

    உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

    பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.

    அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

    அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
    மரணத்தின் தன்மை சொல்வேன்
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது
    மறுபடிப் பிறந்திருக்கும்
    மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்
    வீரத்தில் அதுவும் ஒன்று நீ
    விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி
    வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
    .
    என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
    எனதென்றும் அறிந்து கொண்டாய்
    கண்ணன் மனது கல்மனதென்றோ
    காண்டீபம் நழுவவிட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே மக்களும் நானே
    மரம் செடி கொடியும் நானே
    சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
    துணிந்து நில் தர்மம் வாழ
    .
    புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப்
    புண்ணியம் கணணனுக்கே
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
    கண்ணனே கொலை செய்கின்றான்
    காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக
    இக்களமெலாம் சிவக்க வாழ்க...
    .
    பரித்ராணாய சாதூனாம்
    விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
    சம்பவாமி யுகே யுகே.

    ரவி அருமை அருமை. இது எனக்கு எதுக்கு காணிக்கை. எல்லாம் கண்ணனுக்கே....

    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
    கண்ணனே கொலை செய்கின்றான்
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ... முத்துராமனின் பதட்டமும் என்.டி.ஆரின் அந்த கம்பீர தோற்றமும் விளக்கமும் அடேயப்பா
    இன்றும் கர்ணன் போல் ஒரு திரைப்படம் எடுக்க யாருமிலலை நடிக்கவும் யாருமில்லை

    நன்றி நன்றி நன்றி ...

  9. Likes kalnayak liked this post
  10. #597
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?.//

    ரவி, உத்தவ கீதை – உத்தவரின் கேள்வி பதில்களை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி ( நான் காதல்பற்றி போஸ்ட் எழுதிக்கிட்டிருக்கேன்..ம்ம் என் வயசு அப்படி)

    பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரெளபதியின் அறச்சீற்றம் தான் நினைவுக்கு வருகிறது..

    'நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை
    நல்கும் உரிமை அவர்க்கில்லை.புலைத்
    தாயத்தி லேவிலைப் பட்டபின், -- என்ன
    சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
    தாயத்தி லேவிலைப் பட்டவர்; -- புவி
    தாங்குந் துருபதன் கன்னிநான். – நிலை
    சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், -- பின்பு
    தார முடைமை அவர்க்குண்டோ!

    ம்ம்

    என் செய்கேன்?’ என்றே இரைந்தழுதாள். பாண்டவரை
    மின்செய் கதிர்விழியால் வெந்நோக்கு நோக்கினாள்

    பின் பின் பின் இறுதியில்..
    பலவிதமாய்க் கண்ணனை அழைக்கிறாள்

    ‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
    காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
    வம்புரை செய்யுமூடா” -- என்று
    மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
    செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
    தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
    நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
    நாணழியா திங்குக் காத்தருள்வாய்.

    ‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
    மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
    ஐய, நின் பதமலரே -- சரண்.
    ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
    பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
    புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
    தையலர் கருணையைப்போல், -- கடல்
    சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,

    சரண் – கண்ணா நீயே கதி என்ற பிறகு தான் கண்ணன் வருகிறான்..

    பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
    பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
    கண்ணபிரா னருளால், -- தம்பி
    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
    வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
    வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
    எண்ணத்தி லடங்காவே; -- அவை
    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    *
    நீங்கள் சொன்ன பிறகு தான் –முன்பேபடித்திருந்தாலும்- இப்போது பாஞ்சாலி சபதத்தைப் படிக்கையில் – கண்ணன் மீது நம்பிக்கை என்பது கடைசியில் கொள்வதால் கடைசியில் வருகிறான் கண்ணன் என்பது

    என்னைக் கொஞ்சம் இலக்கியம் படிக்க வைத்துவிட்டீரய்யா..!

    *

    உத்தவ கீதை சொன்னீர் – இங்கு
    நித்தமும் ஒளியினைப் பெருக்க வந்தீர்..

    நன்றி ரவி அகெய்ன்

  11. Likes kalnayak, uvausan liked this post
  12. #598
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க - 19
    *
    என்னமோ வேற என்னவெல்லாமோ எழுதணும்னு நினச்சுருந்தேனா.. ரவியோட உத்தவகீதையைப் படிச்சுட்டு பாஞ்சாலி சபதமும் கொஞ்சம் படிச்சேனா.. என்னாச்சுன்னாக்க…

    சிந்துப் பாட்டு எழுதணும்னு ஆசை வந்துடுச்சா.. புத்தகம் எடுத்துப் படிச்சு ரெஃபர் பண்ணி எழுதிப் பார்த்தேன்..

    கலைநிலவாய்ப் பொலிந்தவளும் கனிந்து வந்திட – நிலை
    கண்டவனும் நிலைகுலைய அழகும் நின்றதே
    மலையனைய நெஞ்சகத்தில் காதல் பொங்கிட – அந்த
    மன்னவனைப் பாவையெழில் மெல்லத் தின்றதே
    சிலையதுவா சொர்ணத்தில் வார்த்த மேனியா – உளம்
    சீர்படுத்தும் எனநினைத்தால் கொள்ளை கொள்ளுதே
    உலையெனவே உணர்வினையே கொதிக்க வைத்தவள் – இவள்
    உடையழகும் இடையழகும் மெல்லக் கிள்ளுதே..

    *
    சரியா ஓகேயா வந்துருக்கா
    இதுக்குப் பொருத்தமா பாட்டுல்லாம் தேடலையே..ஏற்கெனவே எடுத்து லிரிக்ஸும் ஏற்கெனவே அடிச்சு வச்சுருந்தேனா..ஸோ போட்டுடலாமா..

    என்னபண்றது சொல்லுங்க எந்தக்காலத்துலயும் இந்தக் காதல் இருக்கே, தொடரும் தொடரும் இது தொடர்கதை போலத் தொடரும்.. என்னமோ போங்க..

    முதலில் பாடல் வரிகள்

    *

    அழகிய தென்னஞ்சோலை
    அமைதி உலாவும் மாலை
    இளையவன் ஒருவன் வந்தான் அங்கு
    இயற்கையில் எதையோ கண்டான்

    தொடரும் தொடரும் இது
    தொடர்கதை போலத் தொடரும்

    குளிர்ந்தது தென்றல் காற்று – இசை
    கொடுத்தது தென்னங்கீற்று
    எழுந்தது சலங்கையின் ஓசை
    நெஞ்சை இழுத்தது ஏதோஆசை

    ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
    அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
    ஓசை வரும் திசை பார்த்தான்
    அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்

    மரகதம் போல் அவள் மேனி – திரு
    மஞ்சள் முகம் கொண்ட தேனி
    அருகினிலே மெல்ல நடந்தாள் அவன்
    அழகிய மார்பினில் விழுந்தாள்

    தானே விழுந்ததனாலே அவன்
    தழுவிக்கொண்டான் கைகளாலே
    மானே கனி இதழாலே முத்தம்
    வழங்கெனக் கேட்டான் மேலே

    இப்படியும் ஒரு பெண்ணா அதில்
    இத்தனை மொழி சொல்லும் கண்ணா
    கைப்பிடியில் அவள் கிடந்தாள் இரு
    கன்னங்களில் மழை பொழிந்தாள்

    இரவினில் ரகசியம் கேட்டு ஓர்
    இதயத்தில் இதயத்தைப் போட்டு
    விடியும் வரை விளையாட்டு அன்று
    முடியவில்லை அந்தப் பாட்டு

    தொடரும் தொடரும் இது
    தொடர்கதை போலத் தொடரும்

    லலலாலலலா

    *

    இளமை தேவிகா, இளமை ஜெய்.. தெய்வீக உறவாம் படம் பேரு..

    பின்ன வாரேன் (ஹோப் போட்டாச் இல்லை தானே )

  13. Likes kalnayak, rajeshkrv liked this post
  14. #599
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 35 - Filial bond

    There were some posts about filial bond.

    Here is a song about motherly love, except that it is not by a son.

    From Mangaiyar Thilakam (1955)

    Nee varavilai enil aadharavedhu......

    From Bhabi ki chudiyan(1961), Hindi remake of Mangaiyar Thilakam

    Tum se hi ghar ghar......

    I still remember Mangaiyar Thilakam after nearly 60 years. Sivaji Ganesan and Padmini act in the movie, but in different roles. Watch the movie if you like. I posted the Tamil song in a different thread a few months back.

    Both songs are set to Darbari Kanada, one of my favorite ragas !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  15. Likes chinnakkannan, kalnayak liked this post
  16. #600
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning

  17. Likes chinnakkannan, kalnayak, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •