Page 54 of 400 FirstFirst ... 444525354555664104154 ... LastLast
Results 531 to 540 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #531
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - நான் கடலூருக்கு என் அன்னையுடன் சென்று கொண்டிருந்தேன் - நெய்வேலியைத்தாண்டிக்கொண்டிருந்தேன் . அம்மாவிடம் ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை எழுப்பினேன் ( என் எல்லா கேள்விகளுமே சிறுபிள்ளைத்தனம் கொண்டதுதான் - என்ன செய்வது பால்மனம் இன்னும் மாறவில்லை ) -- அம்மா " சிவகாசிக்கும் , நெய்வேலிக்கும் என்ன ஒத்துமை ?"

    என் அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள் - அவள் எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரசி என்பது உங்களுக்கும் புரியும் .

    " ஒற்றுமை என்று ஒன்றும் இல்லை , சில வேற்றுமைகள் உண்டு - ஒரு உதாரணம் சொல்கிறேன் --- சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் . சிவகாசியில் முதுகை சொறிபவர்கள் உண்டு - நெய்வேலியில் முதுகை வருடி தருபவர்கள் அதிகம் - அணிலுக்கு ராமன் வருடியதைப்போல ---அங்கு இருப்பவர்கள் - நெய்யிற்கு எப்படி என்றும் குறையாத மணம் உண்டோ அதைப்போல - அவர்கள் சொல்லுக்கு என்றுமே பெருமை உண்டு - வார்த்தை மாற மாட்டர்கள் - அப்படி மாறினால் அடுத்த வினாடி உயிர் வாழ மாட்டர்கள் ----"

    எவ்வளவு உண்மை அவள் வார்த்தைகளில் வாசு !!
    Last edited by g94127302; 2nd June 2015 at 03:17 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #532
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote :

    எதிர்க் கேள்வி ஒன்று.

    நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா? அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா?

    இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

    ஆமாம்! இன்னும் எஸ்.எம்.எஸ்ஸில் நூறு ரூபாய் வந்து சேரலியே? காலையிலிருந்து வெயிட்டிங். பந்தயமா கட்றீங்க பந்தயம்...

    Unquote :

    வாழ்வதற்காக சாப்பிடுவதும் இல்லை - சாப்பிடுவதற்க்காகவும் வாழ்வதும் இல்லை - உங்கள் இரண்டு கேள்வியும் தவறு வாசு - பிறர் வாழ்வில் நாம் வாழ்கிறோம் - நாம் மற்றவர்களுக்காக வாழும்போது பிறரின் தவம் பலிக்கின்றது .

    நாம் செய்துகொண்ட பந்தயம் - நேற்று நீங்கள் பேப்பர் திருத்தும் வேலையில் இருந்ததால் உங்களுக்கு சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது . நான் ஜெய்த்தால் நீங்கள் முன்பு என்னை விலைக்கொடுத்து வாங்கிய அதே தொகையை தர வேண்டும் - நீங்கள் தப்பித்தவறி ஜெயித்து விட்டால் எனக்கு நீங்கள் ஒன்றும் தர வேண்டாம் என்பதே !! நீங்கள் எனக்கு தரும் ஒரு அறிய வாய்ப்பை தவறி விட்டீர்கள் ........

  5. Likes kalnayak liked this post
  6. #533
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜேஷ் - அருமையான பதிவு - மிகவும் அழகாக , அருமையான பாடலுடன் ஆரம்பித்து உள்ளீர்கள் . இதில் வரும் வரிகள் இன்னும் புதுமையாகவும் , பக்தி மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது - முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் ; அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் ---- ஆஹா - என்ன வரிகள் - உலகத்திற்கே அவள் தாயானாலும் , தன் குழந்தை என்று வரும் போது சற்றே சுயநலம் வரத்தான் செய்கிறது ----- தொடருங்கள் ---

  7. Likes rajeshkrv, kalnayak liked this post
  8. #534
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார் உங்கள் அபூர்வ கானங்கள் - மதுர கானங்களை விட ஒரு படி முன்னே போய் விட்டது - எப்படி இவ்வளவு புதையல் உங்களுக்கு மட்டும் ? பொறாமையாக இருக்கின்றது

  9. #535
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சிவகாசியில் காசை கரியாக்குகிரார்கள் - நெய்வேலியில் கரியை காசாக்கிரார்கள் // மதுரையிலும் அப்படி கரியைக் காசாக்கிய நபர் இருந்தார்..என் தந்தையார்.. வைத்திருந்தது ஒரு கரிக் கடை.. நகைக்கடை வீதியில். அவரது நகைக்கடை நண்பர்கள் தீபாவளியின் போது அவரிடம் சொல்லும் கமெண்ட் - நாங்கள்ளாம் வெடி வாங்கி காசை க் கரியாக்கறோம்,.. நீங்க கரியைக் காசாக்கறீங்க..

    அதுசரி..ரவி..என்னை மட்டும் கவனிக்கவில்லையே

  10. Likes kalnayak liked this post
  11. #536
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரே வெய்யில் வெளியில்... ம்ம் என்ன பண்ணலாம் .. மழை பெய்ய வைக்கலாம்!


  12. Likes kalnayak liked this post
  13. #537
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    படத்தின் அபூர்வத் தன்மையைக் கருத்தில் கொண்டு இதுவரை அதிகம் யாரும் பார்த்திராத திரைப்படம் துள்ளி ஓடும் புள்ளி மான்...

    நம் மதுரகானத் திரி நண்பர்களுக்காக ..

    முழுப்படம்...

    தரவேற்றிய ராஜ் வீடியோ விஷனுக்கு நன்றி



    இதில் ஒரு விசேஷம்.. இயக்குநர் எல்லா நடிகர்களையும் இயக்கும் போது நடிகர் திலகத்தை நினைத்து இயக்கியிருப்பார் போல.. ஒருத்தர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் அவருடைய நடிப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள்.

    குறிப்பாக க்ளைமாக்ஸில் ரவி, ஆவேசம் வந்திருச்சு என்று சண்டைக்கு தயாராகும் கட்டம். மற்றும் ஒரு முகத்தில் ஏனிந்த ஒன்பது பாவம் பாடல் காட்சியில் நாயகனை அப்படியே நடிகர் திலகத்தைப் போல் நடிக்க வைத்திருப்பார்கள்.
    Last edited by RAGHAVENDRA; 2nd June 2015 at 05:39 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes kalnayak liked this post
  15. #538
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தப் பாட்டுக்காக முதல் நாள் முதல் காட்சியில் ரவியைப் பார்க்க ஓடினோம்... ஆனால்..

    என் கேள்விக்கென்ன பதிலாய் ஏமாற்றி விட்டது...

    ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்.. இந்த பல்லவியை காதலன் காதலியைக் கேட்பது போய் இயக்குநர் தியேட்டரில் ரசிகர்களைப் பார்த்துக் கேட்கும் படி யாகி விட்டது.

    இதற்கு மேலும் இந்த படத்தை ஓட வைக்க ரசிகர்கள் இசைவார்களா என்ன... துள்ளி ஓடும் புள்ளி மானாய் படம் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது...

    திரை இசைத் திலகத்தின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் இனிய குரலில் அருமையான பாடல்...

    துள்ளி ஓடும் புள்ளி மான் படத்திலிருந்து..

    இப்பாடலை இதற்கு முன் கேட்டிருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அநேகமாக வாசுவையும் என்னையும் தவிர வேறு யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes kalnayak liked this post
  17. #539
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’


    வாசு சார்,

    //நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன். கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ//

    நீங்கள் சிறந்த கலை ரசிகர் என்று எனக்கு தெரியும். ஆனால் கலை மீது (கொலை) வெறி கொண்டவர் இல்லை. அதனால் எல்லாம் நன்றாகவே முடியும். பி கேர் ஃபுல் (எனக்கு சொல்லிக் கொண்டேன்)

    ரவி சார்,

    உங்களுக்கு கவிதையும் எழுத வருமா? பாராட்டுக்கள். தாய் பற்றி நேற்று நீங்கள் எழுதிய கவிதை அருமை. அதிலும்,

    தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
    சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
    மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
    அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .

    ... வரிகள் என்னைக் கண்கலங்க வைத்தன. தாயை இழந்த உங்களின் சோகம் வரிகளில் தெரிகிறது. இயற்கையின் வழியே தாயை காணும் உங்களுக்கு தாயின் ஆசி இயற்கையாகவே உண்டு.

    சின்னக்கண்ணன்,
    //அப்புறம் என்ன கேட்டாளா.. ஸ்பெஷல் க்ளாஸ்க்கு துணைக்கு வாங்கன்னு கேட்டாள்..
    மூணாங்க்ளாஸுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் க்ளாஸ்..வரமாட்டேன்னு சொல்லிட்டேன்! //
    *

    //அப்புறம் வாரேன்..//

    ..........எங்கே கிளாசுக்கா?

    ராகவேந்திரா சார், தங்களின் அபூர்வமான வீடியோ பதிவுகளுக்கு நன்றி.

    கிருஷ்ணா சார், கல்நாயக் எங்கே?
    ..........................................


    ஒரு பெரியவர். அவரை ஜகத்குரு என்று அழைப்பார்கள். ஒருமுறை அவர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது, ஒருவர் அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை சந்தித்து, ஒரு குறிப்பிட்ட மதத்தின் குருவாக இருக்கும் உங்களை இந்த உலகத்துக்கே குரு என்று சொல்கிறார்களே? அதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்.

    அதற்கு அந்தப் பெரியவர், ‘‘அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஜகத்குரு என்று சொல்லும்போதெல்லாம் இந்த ஜகமே எனக்கு குரு என்பதாகத்தான் நினைக்கிறேன்’ என்றார். கேள்வி கேட்டவர் வெட்கி, அந்தப் பெரியவருக்கு வணக்கம் தெரிவித்து போய்விட்டார். அந்தப் பெரியவர்...

    சின்னக் கண்ணன், நீங்கள் பக்தி கொண்டிருக்கும் காஞ்சி மகா பெரியவரேதான் அவர். 1966-ம் ஆண்டு ஐ.நா. சபையில் எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடுவதற்காக அவர் கொடுத்த பாடல்தான் உலகையே அன்பால் வென்று எல்லாரும் சுகமாக வாழ வேண்டும் என்பதை விளக்கும் ‘மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி....’

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாடுகளுக்குள்ளே சண்டை ஏது? போர் ஏது? வசுதேவ குடும்பகம் என்பதுபோல உலகமே ஒரு குடும்பமாகிவிடுமே?

    அப்படிப்பட்ட நிலை வந்தால்......... இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்கிறார்.

    உலகமே ஒன்றானால் தனியுடமை கொடுமை ஏது? அந்த நிலை அடையவேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்த உணர்வு வந்தால் அயராமல் உழைப்போம். தனியுடமை பேசும் மனிதரையும் ஒதுக்கிவிடுவோம்.

    உணர்வெனும் கனலிடை
    அயர்வினை எரிப்போம்
    ஒரு பொருள் தனி எனும்
    மனிதரைப் பிரிப்போம்

    பிரிப்பது என்றால் அவர்களை பிரித்து துரத்துவது என்று அர்த்தமல்ல. அவர்களை பிரித்து இனம் கண்டு பின்னர் திருத்த வேண்டும். சூழ்நிலையால் தவறு செய்யும் மனிதர்களையும் பண்படுத்தி நேர் வழியில் திருத்தும் கதையமைப்பைக் கொண்ட மக்கள் திலகம் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக் கவிஞரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்.’ பாடல் மிகவும் அருமையான சிந்திக்கத் தூண்டும் பாடல்.

    ஆஹா... எதையோ சொல்ல வந்து எங்கோ போய்விட்டது. மகா பெரியவரை பற்றி சொன்னேனே. இன்று அவரது பிறந்த நாள். அவரது நினைவோடு புரட்சிக் கவிஞர் பாடலை மக்கள் திலகம் பாடும் காட்சியை ரசிப்போமே.

    புதியதோர் உலகம் செய்வோம்
    கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

    மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி...

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  18. #540
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கலைவேந்தன்,

    நான் எங்கும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறேன். வாசு, சி.க., ராஜேஷ், ரவி, ராகவேந்திரா, நீங்கள் எழுதுவதையெல்லாம் படிக்கவே நேரம் போத மாட்டேனென்கிறது. நான் எழுத என் அலுவல் பணி விடமாட்டேன் என்கிறது. அதனால் நீங்கள் கேட்ட (இல்லை இல்லை. சொன்ன) மக்கள் திலகம் பாடல் இதோ (audio only):



    மத்தபடி எழுதறப்ப நல்லாத்தான் எழுதறேள். என்னைப் பத்தி மட்டும் தப்பா புரிஞ்சிகறேள். ஏன்?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •