Page 43 of 400 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #421
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    காலை வணக்கம்

    ஒரு கடினமான பாடல் இசையரசியின் குரலில்.
    எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையில் .
    சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானும் ஹரிஹரனும் அவரது முகனூல் பக்கத்தில் இந்த பாடலைப்பற்றியும் இசையரசி பற்றியும் மிகவும் பெருமையாக பேசியிருந்தார்கள்



    மோகினி பஷ்மாசுரா திரையில்

    குறைந்த வரிகள் கடினமான பாடல்.. குரல் மட்டுமே

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #422
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    'முத்துச் சிப்பிக்குள்ளே' சூப்பர். ஆமாம்...நான்தான் பாலா பழைய பாடல்களை தொடராகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனே! இதெல்லாம் பின்னாடி விவரமா வருதே. பாலா பாட்டா (பன்னிரண்டு மணியடித்தால்) தேடித் பிடிச்சு போட்டா நான் அப்புறம் எப்படி தொடராக போட்றதாம் கண்ணா? (உங்க ரேர் சாங் பக்தி எனக்குப் புரியுது கண்ணா) அவர் எனக்கே சொந்தம்.

    என்னோட நெடுநாள் ஆசை என்ன தெரியுமா? அனைத்து பாலா பழைய (புதிது அல்ல) பாடல்களும் முழு விவரத்தோட நம்ம எல்லார்கிட்டேயும் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல இருக்கணும். எப்ப வேணுமானாலும் எடுத்து பார்த்து படித்து அனுபவிக்கணும். பாலாவுக்கும் பார்சல் பண்ணி தந்துடணும். அதுக்கு ரெண்டு வருஷங்களாவது ஆகும். (ஒன்னு தெரியுமா? பாலாவிடம் அவர் பாடிய பழைய பாடல்கள் பிரபலமானது தவிர எதுவுமே கைவசம் இல்லையாம். கிருஷ்ணா சொன்னார். ஆச்சர்யமாக இல்லை?) எனவே அவருக்கு எல்லாத்தையும் ஒன்னு விடாம தரணும். அதனாலே இன்னும் வேகம் கூடுது. அது சம்பந்தமாத்தான் முழு மூச்சா பாலா பாடல்களை விவரங்களோடு சேகரித்து இங்கு தொடராக அளித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் சிரமப்படக் கூடாதே என்பதற்காகத்தான் தொடரின் பாடல்கள் பதிவின் லிங்கையும் தருகிறேன்.

    நீங்க இங்கே வரும் போது நாம எல்லோரும் பாலாவை நேரே பார்த்து பாடல்களைத் தந்துடலாம். ஓ.கே வா?
    Last edited by vasudevan31355; 30th May 2015 at 08:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #423
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி! அருமை!அருமை!
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes rajeshkrv liked this post
  7. #424
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vaanga ji
    nalama

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #425
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு, கல்நாயக், ராஜேஷ், சி.க., கிருஷ்ணாஜி,
    திரியை சூப்பராய்க் கொண்டு செல்கிறீர்கள்.. பாராட்டுக்கள்.

    தாலாட்டு, ராஜ பாண்டியன், விஜயஸ்ரீ, நாகார்ஜுன், அமலா, சிவா, உதயம்... பழைய பாலா, டாபிக் எப்படியெல்லாம் ரூட் போடுதுப்பா... நடுநடுவில் ரம்பாவின் சீனியர் ஏ.சகுந்தலாவின் மின்மினி மடல் வாழை ....ழகு.. என ஒரு மார்க்கமான பயணம் வேறு..

    எங்கே போனால் என்ன . எப்படியோ எல்லோரும் ஒண்ணா அசெம்பிளாயிடறீங்க.. அது போதும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks chinnakkannan, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #426
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.

    அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.

    இருந்தால் என்ன?

    அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.

    மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.

    தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.

    சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப் படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...

    அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
    அழுது புரண்டாலும்
    மகனே!
    அன்னை வருவாளோ!
    உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
    முன்னை தவமிருந்து
    உன்னை முன்னூறு நாள் சுமந்து
    பொன்னைப் போலே உன்னை
    போற்றி வளர்த்திட்ட
    அன்னை வருவாளோ!
    கொள்ளி இடவும் வகையில்லை
    என்றே நீ கொடுஞ்சிறையில்
    கலக்கம் கொள்ளாதே!
    அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
    அன்பை சொரிவாய் மகனே!
    கண்ணீராலே நீராட்டு
    அன்னை தன்னை
    மண் மேலே தாலாட்டு

    என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,

    ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.

    'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes rajeshkrv liked this post
  13. #427
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மறந்து போன பாடல்கள் தொடர்ச்சி

    மிஸ்டர் மெட்ராஸ் (பல படங்களின் உல்டா)
    வித்யாசாகரின் இசையில் வாலி ஐயாவின் வரிகள்
    பூங்காற்று வீசும் -- பாலாவின் குரலில் அழகு பாடல்



    வந்தாளப்பா வந்தாளப்பா



    அழகா அழகா சிரித்தால் அழகா .. பிரபு சுவலட்சுமி



    அப்பாஸ் சிம்ரன் கொஞ்ச காலம் நிறைய படங்கள் நடித்தார்கள் .. ஹ்ம்ம்ம்ம்ம்
    அழகான பாடல் . சிற்பியின் இசையில் ஹரிஹரன் குரலில்
    நீ இல்லை நிலவில்லை


  14. Likes chinnakkannan liked this post
  15. #428
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங் ஆல்

    வாசு சார்..

    //அவர் எனக்கே சொந்தம்.// ஷ்யூர் அண்ட் ஸாரிங்க்ணா.. நான் பாடல்களில் கேட்பது இனிமை ப்ளஸ் லிரிக்ஸ் மட்டுமே..இன்னின்னார் எனப்பார்ப்பதில்லை.. அப்படி நான்பார்த்து செலக்ட் பண்ணி வைத்திருந்ததைத்தான் தொடர்கிறேன் - டாபிக் எழுதும் போதுமட்டும் பாட்டு லிங்க் கொடுத்து அதன் தொடர்பாய் அப்போது என் சிந்தையில் என்ன ஓடுகிறதோ அதை எழுதிவிடுவேன்..அம்ம்புட்டு தேன்..

    இனி கேர்ஃபுல்லா இருக்கேன்..உமக்கு எஸ்.பி.பி எனக்கு கே.பி.எஸ்.. ஓகேயா ம்ஹூம் நான் ஒத் கொள் மாட்டேன்!

    வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணாம்பா - சிறையில் ஒரு இனிய சர்ப்ரைஸாக வருவார்..வந்து ஜெமினி தான் ரஜா சொல்லி டொப்க் கென மரணிப்பது - விறுவிறுப்பான கதையோட்டத்தில் படம் முடிந்த பிறகு நெஞ்சில் நிற்காமல் போய் விட்ட ஒன்று - வெகு ஜனங்களின். அதுவும் அந்த கண் கண் சொந்த் பாட் தானெல்லாரும் நினைவில் வைத்திருப்பார்கள்..இல்லியோ

    நன்னாயிட்டு எழுதியிருக்கேள்..ரவிக்கு Gap filler மாதிரி

  16. Thanks vasudevan31355 thanked for this post
  17. #429
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்தப் பூச்சுடவா இருக்கே ராஜேஷ்..அதான் சிம்ரனின் முதல் படமாக வரவேண்டியது ஒன்ஸ்மோர் முந்திக் கொள்ள (ஆர்...விஐபி?) இது இரண்டாவது படம்.. பார்க்க வெகு அழகு.. நடிப் சுத்தமாய் வராது..ஆனால் படம் ஆச்சர்யமாய் கொஞ்சம் கலகல எனப் போகும் - மணிவண்ணன் கல்பனா காமெடியால்.. நாகேஷும் உண்டு.. பாடல்களும் நன்றாக இருக்கும்..

    காதல் காதல் காதல்
    என் கண்ணில் மின்னல் மோதல்
    என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
    நீ பார்க்கும் பார்வையில்
    மனம் காதல் தீ வரும்
    நான் கொஞ்சம் அணைக்க
    என் கன்னம் சிவக்க

    இது பற்றி எழுத வாசு சார் அவர்களை அழைக்கிறேன்.. எஸ்.பி.பி ஸாங்க்..

  18. Thanks vasudevan31355 thanked for this post
  19. #430
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    இது பற்றி எழுத வாசு சார் அவர்களை அழைக்கிறேன்.. எஸ்.பி.பி ஸாங்க்..
    நோ!நோ!நோ!

    கண்டிப்பாக இல்லை. இளையராஜா வருகைக்கு முந்திய பாலாவின் பழைய பாடல்கள் மட்டுமே. அப்புறம் இளையராஜா இசையில் பாலாவின் ஒன்றிரண்டு. அவ்வளவே!

    பிறகு வந்த பாடல்களில் பாலாவை அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை. 'தங்கத் தாமரை மகளே' போன்ற ஒரு சில பாடல்கள் மட்டுமே விதிவிலக்கு.

    குரலும் இனிமை குறைந்து தடிப்பாயிற்று. இசைக்கருவிகளின் ஆதிக்கம் வேறு பாலாவின் இனிமையைக் குறைத்தது. ரஜனி கமல் படங்களில் ஹீரோயிசம் தலை தூக்கியதால் பாலா இரண்டாம் தரமானார். ஒருதரம் இரண்டு தரம் அத்தோடு சரி!

    நமக்குத் தேவை 70' களின் பாலா. 'கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேக' பாலா. வழுவழு வழுக்கைக் குரல் பாலா.
    Last edited by vasudevan31355; 30th May 2015 at 11:02 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Thanks chinnakkannan thanked for this post
    Likes Gopal.s, rajeshkrv, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •