Page 381 of 400 FirstFirst ... 281331371379380381382383391 ... LastLast
Results 3,801 to 3,810 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3801
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீங்கள்தான் அடுத்த ஐந்தாம் பாகத்தை தொடங்க வேண்டும் என்பது ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்ட ஒன்று. அதில் மாறுதல் வேண்டாம். இது ஒட்டுமொத்த மதுரகான நண்பர்களின் வேண்டுகோள். தயை கூர்ந்து சம்மதித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவும். வேறு எதுவும் சொல்ல வேண்டாம். ப்ளீஸ்.
    அதே அதே சபாபதே

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, madhu, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3802
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கல் / Stone
    உங்க மனசென்ன கல்லா ?
    கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ...
    சொல்லாலடிப்பதை விட கல்லாலடிப்பதே மேல் !
    கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது !
    கல்லுக்குள் உறையும் தேரை !
    ஒரேகல்லில் ரெண்டு மாங்காய் !
    இப்படிக் கல்லின் மகாத்மியம் சொல்லிக்கொண்டே போகலாம் !
    திரைப்பாடல்களில் .....?! கல்லின் பயன்பாடு!
    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?.....நடிகர்திலகத்தின் பார்வையில்...

    கடவுள் ஏன் கல்லானார் ?.....மக்கள்திலகத்தின் கணிப்பில்

    கல்லுக்கு நீதி சொல்ல முடியாது ...காதல் மன்னரின் தீர்ப்பில்


    கல்லிலே கலைவண்ணம் கண்டான் ...
    [url]https://www.youtube.com/watch?v=CtaUn2jlpYY
    கல்லும் கனியாகும் ...
    [url]https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4
    Last edited by sivajisenthil; 11th September 2015 at 10:20 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #3803
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார், சின்னா, மது அண்ணா, சிவாஜி செந்தில் சார், ஜி, ரவி சார், வாசுதேவன் சார், ராக தேவன் சார், வினோத் சார், கலை சார், குமார் சார், யுகேஷ் சார், செந்திவேல் சிவராஜ் சார், கோபால், முரளி சார், சிவா சார், ஆதிராம் சார், கோபு சார், நண்பர் கல்நாயக், கிருஷ்ணா சார், ராஜ்ராஜ் சார், கார்த்திக் சார், ரவிகிரண் சூர்யா சார், மற்றும் விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும்.

    நாளை, மறுநாள் ஊர்ப்பயணம். அதற்குள் பாகம் முடிவடைந்து விட்டால் மது அண்ணா அடுத்த பாகத்தைத் தொடக்க வேண்டும் என்பது இந்த அடியேனின் வேண்டுகோள். மதுண்ணா செவி சாய்க்க வேண்டும்.

    வழக்கம் போல் மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் நான்கிற்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், பங்களிப்பு செய்த உயிரினும் மேலான சகோதரர்களுக்கும், வெளிப் பார்வையாளர்களுக்கும், மாடரேட்டேர்களுக்கும், மற்ற திரி நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

    திங்களன்று சந்திப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3804
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    கல்லாய் வந்தவன் கடவுளம்மா
    அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா
    புல்லாய் மொளச்சவ சக்தியமா
    அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா

    மகா நடிகர் மகாகவி காளிதாஸாய் வாழ்ந்த படம்.

    புல்லாங்குழல் வாசிக்கும் அழகு கோடி பெறும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, madhu, eehaiupehazij liked this post
  9. #3805
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அடியேனை ஆரம்பிக்க வைத்து இவ்வளவு பக்கங்கள் விரைவாக சுவாரஸ்யமாக அமோகமாக இன்னும் என்னவெல்லாமோவாக க் கொண்டு சென்ற அனைத்து நண்பர்களுக்கும்..
    என் நன்றிகள் + வணக்கங்கள்

    எத்துணை எத்துணை விஷயங்கள்..ம்ம் எல்லாம் வெகு அழகு..சொல்ல வார்த்தைகளில்லை..

    வழக்கம் போல் அனைவரும் பாகம் ஐந்தில் வந்து மதுண்ணாவுடன் சேர்ந்து பரிமளாக்க அச்சோ இது தேவிகா பெயரோன்னோ.. பரிமளிக்க வைக்க வேண்டுகிறேன்..

    இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே..

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes eehaiupehazij, vasudevan31355 liked this post
  11. #3806
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நகமும் சதையும் எதிரும் புதிரும் ஆகும்போது//

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai, eehaiupehazij liked this post
  13. #3807
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அஞ்சு பாகத்துக்கு புச்சா ஒரு தொடர் ஆரம்பிக்கணுமே..மக்கள்ஸ் ஒரு நல்ல தலைப்பா தாங்களேன்

  14. #3808
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நிஜம் சின்னா!

    எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு சுவாரஸ்யங்கள், எத்தனை விதவிதமான தலைப்புகள், எவ்வளவு அரிதான பாடல்கள், எவ்வளவோ தலைப்புகள், எவ்வளவு குட்டி குட்டி சண்டைகள், எவ்வளவு பெரிய சண்டைகள், படங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொடர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாய் இருக்கிறது. படித்து மகிழ நேரம் போதுமோ!

    நன்றி சின்னா!
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #3809
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    பிறக்கும் போதே சொல்லிவிட்டார்
    ..பேதை நானும் உனக்கென்று
    அடடா அழகுப் பூஞ்சிரிப்பு
    …அழகி இவளும் உனக்கென்று
    பதமாய்ச் சொன்னார் உன் அம்மா
    …பார்க்க மறுத்தீர் சிறுவயதில்
    இதமாய் இளமை பூத்திருக்க
    …இனிதாய்ப் படித்தேன் வளர்ந்துவிட்டேன்

    வந்தேன் மாமா உமைத்தேடி
    ..வாகாய்ப் பேச வரச்சொன்னால்
    செந்தேள் கொட்டாய் ஒருபார்வை
    …சேர்த்துக் கோர்த்த ஒருசிரிப்பு
    பெண்ணில் நானும் அழகிலையா.
    ..பெரிய படிப்புப் படிக்கலையா
    எண்ணந் தன்னில் இன்னொருத்தி
    ..எளிதாய் உமக்கு அமைந்ததுவா..

    செல்லக் கிளியாய் சின்னத் திமிராய்
    .கள்ளச் சிரிப்பாய் கனிவாய்ச் சிவப்பாய்
    வெல்லத் துளியாய் வேகங் கூட்டி
    ..மெல்ல இங்கே அழைத்தாய் பெண்ணே
    பொய்யோ என்னும் இடையா என்றால்
    …மெய்யே என்னும் பார்வை வீச்சு
    சில்லாய்த் தெறித்த தேங்காய் வெண்மைத்
    ..தூக்கல் தெரியும் பற்கள் தன்மை

    வந்தால் எண்ணம் ஆட்டங் காண
    .;..மனதைத் திறந்து சொன்னாய் கண்ணே
    உன்னை மறந்தே இருப்பது என்றால்
    ..ஊரை என்னை மறந்தாற் போல
    திண்ணம் வேலை சிலமா தத்தில்
    ..திகைந்தால் நானும் வருவேன் உன்னூர்
    கண்ணில் நெஞ்சில் கலக்கம் விட்டு
    …கனிவாய், கனிவாய் கொடுப்பாய் முத்தம்…!

    *




    கால்கள் நின்றது நின்றது தான்.. முத் ராமன் மணிமால்ஸ்..

  16. Likes Russellmai liked this post
  17. #3810
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நிஜம் சின்னா!

    எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு சுவாரஸ்யங்கள், எத்தனை விதவிதமான தலைப்புகள், எவ்வளவு அரிதான பாடல்கள், எவ்வளவோ தலைப்புகள், எவ்வளவு குட்டி குட்டி சண்டைகள், எவ்வளவு பெரிய சண்டைகள், படங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், தொடர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாய் இருக்கிறது. படித்து மகிழ நேரம் போதுமோ!

    நன்றி சின்னா!
    சண்டைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை..அதைப் பற்றி நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம்..அதெல்லாம் பாஸிங்க் க்ளெவ்ட்ஸ்.. விரைவில் கலைந்து விடும்..

    பட் நான் இன்னும் ஹோம் ஒர்க் செய்யவில்லை..அதைச் செய்யவேண்டும்,..ஒரு ஷார்ட் ரிவ்யூ கொடுக்கவேண்டும்..என நினைத்திருந்தேன்..முடியுமா தெரியவில்லை..

    உங்களது பாடல்கள் வைர நெஞ்சம், ஒரே சாட்சிமற்றும் இன்னும் நிறைய பாடல்கள் கேட்கவில்லை வாஸூ..அது தான் எனக்கு வருத்தம்..பட் கேட்கவேண்டும்..

    நிறைய புத்தகங்கள் படிக்கவேண்டும் என டைம்டேபிள் வைத்துக் கொண்டு படிக்கிறேன்.. நிறைய எழுத வேண்டும் என்று ஆசை..இங்கும், இன்னும் மற்ற ஆன்மிகம், சிறுகதைகள் என்று.. ஆனால் அதெல்லாம் ஏனோ தயங்கிக் கொண்டே தாமதமாகிறது.. ஆனால் எழுதுவேன் கண்டிப்பாக

    உங்களைப் போன்ற உழைப்பாளி- தேடி எடுத்து ப் பாடலக்ள் போட்டும் - பாடல்களை உள்ளாழ்ந்து ரசிக்கும் தன்மையும் எனக்குக் கிடையாது..மேக்ஸிமம் பாடல் வரிகள்..எங்கு இருக்கிறது எங்கிருந்து சுட்டிருக்கிறார்கள் அக நானூறா புற நானுறா குறளா நாலடியா என்று தான் எண்ணம் செல்லும்..சில வரிகள் பிடித்திருப்பின் அதில் விழுந்துவிடுவேன்

    கூடிய வரை சுவாரஸ்யமாக இன்றைக்கென்று எழுதாமல் என்று படித்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்றபடி என் எழுத்து இருக்கவேண்டும் என்பதே என் ஆவல்..அதற்காகவே நான் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்..

    இன்னும் நல்ல விதமாக எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் ஆசை..ஆண்டவன் அருளும் உங்கள் சி.செ மதுண்ணா ராஜ் ராஜ், ராகதேவன்,ராகவேந்தர் போன்ற பெரியவர்களின் ஆசியும் எனக்கு வேண்டும்..

    ஏதாவது வாசக தோஷமாய் எழுதியிருந்தால் மன்னித்து மறந்து விடக் கேட்டுக்கொள்கிறேன்..

    அன்புடன்

    சி.க.
    Last edited by chinnakkannan; 11th September 2015 at 11:25 PM.

  18. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •