Page 370 of 400 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3691
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார் – 3
    *
    வணக்கம்”

    நிமிர்ந்து பார்த்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிற்கு ஆச்சர்யம்.. “வாங்க பால முருகன்.. என்ன இந்தப் பக்கம்”

    “சும்மாத் தான் வெங்கடேஷ்ங்க்ணா.. ஜஸ்ட் பார்க்க வந்தேன்..வழக்கம் போல பிஸியா..’

    “மியூசிக்கே மூச்சா இருக்கறவனோட பிஸியைக் கேக்கணுமா என்ன.. ஒரு டியூனை என்னோட அஸிஸ்டெண்ட் போட்டுட்டாரு..பாட்டுக்கு யாரைப் போடலாம்னு யோசனையில இருக்கேன்…சொல்லுங்க”

    “இதோ” கூடவந்தவரைக் காண்பித்தார் பாலமுருகன் “இவரும் கொஞ்சம் நல்லாவே பாட்டு எழுதுவார்.. டென் த் படிக்கறச் சொல்லவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்காராக்கும்..பாரதிதாசனே முன்னுரை எழுதியிருக்கார்”

    “ஐ ஸீ” என்று சற்றே அசுவாரஸ்யத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.. ரொம்ப யங்கா இருக்க்காரே நல்லா எழுதுவாரா.. நான் நம்ம கவிஞரையே (கண்ணதாசன்) இன்னொரு பாட்டும் எழுதச் சொல்லிடலாம்னு ப்ரொட்யூஸர்கிட்டக்க சொல்லியிருந்தேன்..ம்ம் சரி.. டைரக்டர் மாதவன் சொல்லியிருந்தவர் தானே இவர்.. டைரக்டரே ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருக்கார்.. என்ன கேக்கறீங்களா..”

    ஆஹா “ என்றார் பாலமுருகன்.. கூடவே தலையாட்டினார் வந்திருந்த கவிஞர்.

    சிச்சுவேஷன்னு ஒண்ணும் இல்லை.. ஹீரோயின் காலேஜ்ல படிச்சவ ஆனாலும் கிராமத்துப் பொண்ணு

    “ஆஹா”

    “என்னக் கிண்டல் பண்றா மாதிரி இருக்கு ..சரி விடுங்க.. அவளோட ஹஸ்பெண்ட் நிலத்துல கிணறு தோண்டறான்..ஆழம் ஆழமாத் தோண்டினாலும் தண்ணி வரலை..கட்டக்கடோசில தண்ணிவருது..ஹீரோ மயக்கமாயிடறார்.. ஹீரோயின் அந்தத் தண்ணியையே ஹீரோ மொகத்துல தெளிக்கறார்..அடுத்த சீன் பாட்டு வரணுமாம்..”

    “டூயட்டா”

    “ஏங்க ஹீரோ நிலத்துல பாடுபட்டு முன்னேறுகிற மாதிரி கதையாம்.. டூயட்லாம் நம்ம கவிஞரே சூப்பராப் போட்டுக் கொடுத்துட்டார்.. இது கிராமக் கூத்து மாதிரி..ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரி இருக்கணுமாம்..”

    “மூணு பொண்ணு வச்சுக்கலாமா” உடன் வந்திருந்த கவிஞர் கேட்க “பரவாயில்லையே சரி யாருக்குள்ள சண்டை வைக்கறாமாதிரி” என்றார் இசையமைப்பாளர்..

    “மூணு பொண்ணுன்னா திரிவேணி சங்கமமா வெச்சுக்கலாம் கங்கை யமுனை சரஸ்வதி..ஆனாக்க இது தமிழ்க் கிராமம் ஆச்சுதுங்களே.. காவேரி வைகை அப்புறம் ம்ம் கங்கையையே கொண்டுவந்துடலாம்..


    “கொஞ்சம் இருங்க..என் உதவியாளரைக் கூப்பிடறேன்..ராஜா” உதவியாளர் வந்தார் (பிற்காலத்தில் இளையராஜா எனப் பிரபலமானவர்).. “ நீங்க ஒரு மெட்டுப் போட்டீங்கள்ள..அதப் போட்டுக் காட்டுங்க..இவர் எப்படி பாட்டு தர்றார்னு பார்ப்போம்”

    ராஜா மெட்டுப் போட அந்தப் கவிஞரின் பயணம் அந்தப்பாட்டிலிருந்து துவங்கியது.. அந்தக் கவிஞரின் பெயர் முத்துலிங்கம்.. பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்தபொன்னியம்மா..

    சைலண்ட்டாக ஆரம்பிக்கும் பாடல் பொன்னி வைகை கங்கை என கச்சைகட்டிக்கொண்டு மூன்று நதிகளும் சண்டை போடுவது சுவாரஸ்யமாகவே இருக்கும்..(உரையாடல் எல்லாம் என் கற்பனையூரில் நடந்தது!)

    https://www.youtube.com/watch?featur...&v=Uo7QPV9J8YQ

    *
    சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் பிற்ந்தவர் முத்துலிங்கம்..பத்தாம் வகுப்பு வரை படிப்பு வரவில்லை..ஆனால் கவிதை வந்தது.. பத்தாம் வகுப்பையே தனிக்கல்வி முறையில் படித்துத் தேறினார் அவர். பின்னர் முரசொலியில் வேலை வாய்ப்பு..

    பட்டிக்காடா பட்டணமா வசனகர்த்தா பாலமுருகனின் பழக்கம் ஏற்பட்டு பின் பொண்ணுக்குத் தங்கமனசில் முதல்பாடல்.. ம.தியின் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டாள் பாடல் எழுத வாய்ப்பு வந்தது..
    தேவனைத் தேடிச் சென்றேன்
    தேவியுடன் அவன் இருந்தான்
    வீணையுடன் நானிருந்தேன்
    விதியை எண்ணிப்பாடுகின்றேன்.. என வாணி ஜெயராமின் உருக்கமான குரலில் வீணை நாதமும் சேர்ந்து கொண்டு மிக அழகாக அமைந்தது அந்தப் பாடல்
    அது ஹிட் ஆக தொடர்ந்து ம.தி படங்களில் எழுத ஆரம்பித்தார்..

    மீனவ நண்பன் என்ற படம்..ஸ்ரீதர் இயக்கி ம.தி நடித்து முழுவதும் ஷீட் செய்யப்பட்ட நிலை..திடீரென்று எம்.ஜி.ஆருக்கு ஒரு சிந்தனை.. நம்ம முத்துலிங்கத்துக்குப் பாட்டு கொடுத்தீங்களா.. இல்லீங்க..

    சரி சரி..அவரை டூயட் எழுதச் சொல்லுங்க

    படமே முடிஞ்சாச்சேங்க

    பரவால்லை..கனவுக்காட்சியில சேர்த்துக்கலாம்..
    அப்படி எழுதியபாடல் தான்

    தங்கத்தில் முகமெடுத்து,
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

    முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
    தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
    இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
    *
    https://www.youtube.com/watch?featur...&v=Uo7QPV9J8YQ
    *
    இன்று போல் என்றும் வாழ்க படத்திற்கு இவர் எழுதிய அன்புக்கு நான் அடிமை பாடலும் மிகப் பிரபலம்..

    அதுவந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.. பாடல் எழுதுகையில் தயாரிப்பாளர் ஏதோ சொல்லிவிட்டாராம்.. கவிஞர்கள் எல்லாம் கொஞ்சம்கோபக்காரர்கள் போல.. எனில் இவருக்கும் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது..எழுந்து சென்று விட்டாராம். பின் எம்.எஸ்.வியும் டைரக்டரும் தான் அவரை சமாதானப் படுத்தி அழைத்துவந்தார்களாம்..அதற்காக போட்ட வரிகள் – அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை..

    ம.தி பாடுவதாக எடுக்கப் பட இன்ஸ்டண்ட் ஹிட்..

    **
    இவர் எழுதிய மேலும் சில பாடல்கள்
    ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – பயணங்கள் முடிவதில்லை
    மணியோசை கேட்டு எழுந்து –அதே படம்
    சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம் – உதய கீதம்
    மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ – கிழக்கே போகும் ரயில்
    சின்னச் சின்ன ரோஜாப்பூவே – பூவிழி வசலிலே
    இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
    இதயம் போகுதே –புதிய வார்ப்புக்கள்..
    பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – எங்க ஊரு ராசாத்தி
    பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் – தூறல் நின்னு போச்சு
    பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும் (ஈரமா இருந்திருக்குமோ)
    8
    நாம் பார்க்கப் போவது

    ஆறும் அதுஆழம் இல்லை..அது சேரும் கடலும் ஆழமில்லை
    ஆழம் எது அய்யா
    அது அந்த சின்ன ரம்யா கிருஷ்ணன் மனசு தான்யா 
    https://www.youtube.com/watch?featur...&v=7oEyzJmlE9k
    **

    அடுத்த பாடலாசிரியர் கவிஞர் என்பதை விட நாவலாசிரியர் , அஸிஸ்டெண்ட் டைரக்ஷன், நடிப்பு எனப் பிரபலமானவர்..

    அவர்ர்ர்ர்..

    (அப்புறமா வாரேன்)

  2. Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3692
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார்…- 4

    **

    ஆயிரம் சொல்லுங்கள்..இந்த கிராமப் புறங்களில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் இருக்கிறதே.. அது கேட்கும் போது மென்மையாய் வரும் தென்றல்பட்டு சலசலக்கும் அருவி, படபடக்கும் இலைகள், தலையாட்டும் மலர்கள், கொஞ்சம்மெல்லத் துள்ளி எங்கும் பறக்க முடியாமல் துவண்டு தரையில் விழும் உதிர்ந்த பூக்க்ள் போன்றவற்றைப் பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி வரும்..இல்லியோ..

    அடியேனும் முன்பு ஒரு நாட்டுப்புறப் பாட்டு எழுதிப் பார்த்தேன்..(பின்ன இப்படிப் போட்டாத்தான் உண்டு! 

    சொல்லிவிட வேணு மின்னு
    ...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
    அல்லிமலர்க் கால வெச்சு
    ..அன்றவளும் போகை யிலே
    மெல்லமெல்ல வேகங் கூட்டி
    ..மேவிமுன்னால் சென்று நிக்க
    கள்ளவிழி பாத்த பின்னால்
    ...காணாமப் போச்சு வார்த்தை..

    என்ன..அவ்வளவு கிராமியமா இல்லைங்கறீங்களா..என்ன பண்றதுங்க.. பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை சிட்டில.. ஸோ அங்கிட்டு சாயல் கொஞ்சம்கொஞ்சம் வரும்.. இன்னும் எழுத எழுதப் பழகிடுவேன்னு நெனைக்கேன்..

    அதுல பாருங்க ஒரு சினிமால வந்த நாட்டுப் புறப் பாட்டை இப்ப பாக்கலாமா..

    ஆத்தோரம் கொடிக்காலாம்
    அரும்பரும்பா வெத்திலையாம்
    போட்டா சிவக்குதில்லே
    பொன்மயிலே உன் மயக்கம்
    வெட்டி வேருவாசம் அதிலே வெடலப் புள்ள நேசம்..
    வெடலப் புள்ள நேசம்

    இத எழுதின கவிஞரைப் பத்திச் சொல்லணும்னா ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்..
    *

    “ மகாலிங்கம்.. ஒண்ணு சொல்லட்டுமா..தப்பா நெனைக்க மாட்டேளோன்னோ””

    :உங்களை ஏன் ஓய் நான் தப்பா நெனைக்கப் போறேன்..என் சகோதரியின் ஆம்படையான் வேற.. சொல்லுங்கோ..” இப்படிச் சொன்னவர் கன்னரியேந்தல் மகாலிங்கம்..

    “ஒம்ம பையன் சுப்பிரமணிக்கும் வயசாச்சு..என் பொண்ணுக்கும் கல்யாணப் பருவம் வந்தாச்சு.. நல்ல நாள் பாக்கலாமா..”

    :பாக்கலாந்தான்..ஆனா மாமா”

    “ஷ்.. நமக்கு நெலம் நீச்சுல்லாம் இருக்கு..இருந்தாலும் பிள்ளை வேலை பார்த்தா நன்னா இருக்கும்னு அபிப்ராயப் படற..சரி செஞ்சு புடலாம்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய பணக்கார வெயாபாரி நம்ம ஊர்லயே இருக்கான்..அவன் கூட கணக்குக்கு நம்பிக்கையா ஆள் வேணும்னு கேட்டான்..அதனால கல்யாணம் கட்டிக்கிட்டு நம்ம ஊர்லயே வேலையும் பாக்கட்டும்..என்ன சொல்றீங்க..”

    “பேஷா” ஆவுடையார்கோவில்க்கருகே உள்ள கன்னரியேந்தல் கிராமத்தில் பிறந்த சுப்பிரமணியன் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டு தன் அத்தை பெண்ணையே திருமணம் செய்து மாமனார் ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் (பின்ன எப்படிச் சொல்றது) ஆனார்..அங்கு ஒருகடையில் கணக்கு உத்தியோகமும்(மாதச்சம்பளம் பத்து ரூபாய்) பார்த்தார்..

    பின் அந்தக்காலத்தில் நாடகங்களின் மீது ஆர்வமேற்பட அப்பாவிடம் சம்மதம் வாங்கி (அந்தக்காலங்க) நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியம்..

    பின் பின் என்ன ..சினிமா என்று ஒன்று வந்து அதிலும் ஆர்வம் ஏற்பட்டு நடிப்பதற்கும் கதை எழுதுவதற்கும் ஆசை வந்தது சுப்பிரமணியத்திற்கு..


    இவரெழுதிய சில நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பட, அவற்றில் சிலவற்றிற்கு கல்கி பாராட்டி விமர்சனம் எழுத சுப்புவின் பெயர் பிரபலமாயிற்று..சொல்ல மறந்துவிட்டேனே.. மாமனாரின் ஊர் கொத்தமங்கலம்.. சுப்பிரமணியம் வாழ்க்கையைத் துவங்கிய இடம்.. எனில் கொத்தமங்கலம் சுப்பு என்றே அறியப்பட்டார்..

    அப்புறம் சந்திர மோகனா என்ற திரைப்படத்துக்குக் கதை எழுதி (1936) நடிக்கவும் செய்தார்..

    கொத்தமங்கலம் சுப்பு பின் ஜெமினி கம்பெனியில் மாதச்சம்பளம் 300 ரூபாய்க்குச் சேர அவரது கனவும் ஓரளவிற்கு நனவானது எனலாம்.. கதைஇலாகாவில் பிரதான எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ( போன தொடர் இறுதியில அசிஸ்டெண்ட் டைரக்ஷன்னு தவறாய் எழுதியிருந்தேன்),கதாசிரியர் , வில்லிசைக் கலைஞர் , நாவலாசிரியர் எனப்பன்முகத் திறன் இருந்தாலும் கூட இவர் கவிஞராக – பாடலாசிரியராக எழுதிய சில பாடல்கள் மறக்கவொண்ணாதவை (ஹை..என்ன தமிழ்!)

    நாவல்னு பார்த்தீங்கன்னா ந.தி நடித்த தில்லானா மோகனாம்பாள் நாவலா இரண்டரை வருடங்க்ளுக்கும் மேலாக விகடனில் வெளிவந்தது.. கோபுலுவின் சித்திரங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்.. நாம் படத்தில் பார்த்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் எக்டெண்டட் வெர்ஷனில் இன்னும் வெகு அழகாய் கண் முன் மிளிர்வார்கள்..

    சிக்கல் ஷண்முக சுந்தரம் வாசிக்க மோகனாம்பாள் ஆடும் போட்டி – ஆஹா பைண்ட் செய்யப் பட்ட அந்தப் புத்தகத்தில் படங்களுடன் வாசித்தது இன்னுமெனக்குச் சிலிர்ப்பாய் இருக்கிறது..

    வடிவாம்பாள் திருந்துவாள், மோகனா ஷண்முக சுந்தரம் திருமணம் செய்து கொள்வர் (இதற்குக் கல்யாணப்பத்திரிகையும் விகடன் அடித்திருந்த நினைவு)
    பின் ஒரு குழந்தையும் பிறக்கும்..இருவரும் கப்பல் பயணம் மதன்பூருக்குச் செல்வர் எனப் போகும் நாவல்.. முடிவு நினைவிலில்லை..

    தி.மோ தான் திரைப்படத்தில் வந்து இன்னும் நம் நெஞ்சில் இருக்கிறதே..அந்த ச்சிக்கலாருக்கும், மோகனா, தருமன், முத்துராக்கு வடிவாம்பாள், சவடால் வைத்தி என எல்லாருக்கும் முதன் முதல் நாவலில் உயிர் கொடுத்த கொத்தமங்கலம் சுப்பு – விகடனில் வெளியானபோது கலை மணி என்ற பெயரில் எழுதினார்..

    இவர் எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் ஜெமினியே தயாரித்தது..விளையாட்டுப்பிள்ளை என்ற பெயரில்.. ந.தி, பத்மினி, காஞ்ச்..

    பட் இவரதுகவிதா உள்ளத்தைச் சொல்லவில்லையே.. ஹை..சொல்லாமல் தெரியவேண்டுமே..

    இல்லை இல்லை..சொ.தெ.வே பாடலைஎழுதியவர் இவரில்லை.. இவர் எழுதியபாடல் இன்னும்பல வருடங்களுக்குப் பின்னும் பார்க்க உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அது போல மறுபடி வருமா எனச் சந்தேகமே..

    ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
    அன்பின் பாதையில் அணையிடலாமோ
    பேதைமையாலே மாது இப்போதே
    காதலை வென்றிட கனவு காணாதே

    சாதூர்யம் பேசாதடி
    என் சலங்கைக்குப் பதில் சொல்லடி
    நடுவிலே வந்து நில்லடி..
    நடையிலே சொல்லடி

    ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
    ஆணவத்தில் வந்தாயோடி?
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
    படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி

    யெஸ்.. வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணும் கண்ணும்கலந்து எழுதியவர் இவரே.. என்னா பாட்டு என்னா ஆட்டம் என வியக்காதவர் யாருமில்லை அந்தக்காலத்தில்.. இந்தக் காலத்திலும்.

    ராஜாமகள் ரோஜாமலர் – இதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ண்ம் தான்..
    பலபடங்களில் தன்னுடன் நடித்த சுந்தரிபாய் என்ற மராத்தியப் பெண்மணியைக் காதலித்து இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார் ( நிழல் நிஜமாகிறதில் வரும் அனுமந்தின் அம்மா) இருவருமே ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர்..

    கலைமாமணி, பத்மஸ்ரீ எல்லாம் இவர் பெற்ற பட்டங்கள்..

    ஹிந்தோள ராகத்தில் இவர் எழுதிய பாடல் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும்..என்னவாக்கும் அது…

    மனமே முருகனின் மயில்வாகனம்
    மானிட தேகமே குகனாலயம்
    குரலே செந்தூரின் கோவில் மணி – அதுகுகனே ஷண்முகனே
    என்றொலிக்கும் இனி….

    ம்ம் செளகாரும் ஒல்லி ஒல்லி மணிமாலாவும் இணைந்து பாடும் பாடல் (மணிமாலா ரொம்ப அழகா இருப்பார் என என் சித்தப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்!)

    வழக்கம் போல அந்தக் காலத்திலும் கரெக்ஷன் உண்டு… மானிட தேகமே என்றால் ஒருமாதிரியோ என்னவோ நினைத்தார்களோ..அல்லது பாடுவது பெண்கள் என்பதால் – மாந்தளிர் மேனியே குகனாலயம் –என மாற்றிவிட்டார்கள் – சுப்புவின் அனுமதி பெற்று..

    பாட். இதோ.. இதில் வரும் வீணை இசையை மறக்க முடியுமா என்ன..



    குபுகுபு குபுகுபு நான் இஞ்ஜின் டகடக டக டக நான் வண்டி.. நகைச்சுவைப்பாடலையும் எழுதியவர் இவர் தான்..

    பாடல்களில் எளிய சொற்களைக் கையாள்வது இவருக்கு மிகப் பிடிக்கும்..இவரது பாணி என்று கூடச் சொல்லலாம்..

    ஒளவையார் என்று ஒருபடம்.

    கே.பி.எஸ் நடிக்க ஸ்டார் ஆக்ஷன் சொல்லப்பட

    ஒளவையார் – அதியமான் அள்ளி அள்ளிக் கொடுத்தார் –என்பது போல பேசவேண்டும்.. கே.பி.எஸ் ஏதோ நினைவில் – அதியமான் அள்ளிக் கொடுத்தார் – என்றுமட்டும் சொல்லிவிட …கட்ட்.ட்

    டைரக்டர்..- பசின்னா கண்டதையும் சாப்பிடக் கூடாது..இப்படி அல்லிய முழுங்கிட்டீங்களே – என ச் சொல்ல செட்டில் அனைவரும் சிரித்தார்களாம்.. டைரக்டர்… கொத்தமங்கலம் சுப்பு (இது பலவருடங்களுக்கு முன் என் பள்ளி ஆசிரியர் சொன்ன நிகழ்வு- தவறாகக் கூட இருக்கலாம்). ஒளவையாரில் ஒரு முக்கிய கதா பாத்திர்மாகவும் நடித்திருந்தார் கொத்தமங்க்லம் சுப்பு..

    இப்படி எல்லாவகையிலும் மறக்கமுடியாத கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு (மறைந்தது 1974) எழுதிய நாட்டுப் புறப்பாடல் வந்த படம் சந்திரலேகா..
    ஆத்தோரம் கொடிக்காலாம்
    அரும்பரும்பா வெத்திலையாம்
    போட்டா சிவக்குதில்லே
    பொன்மயிலே உன் மயக்கம்

    மாடுகளைக் கட்டிப்போட்டு வெகுநேரமாச்சு
    மானமிருண்டு போச்சு
    ஆருக்களவாணிகண்டா வந்து வந்து போக்கிடுவார்

    மாட்டைப் பார்த்து..: மாமியா வீட்டுக்குப் போறாப்புல
    மசமசன்னு நடக்குற
    கழனிவெக்கிற நேரமாச்சு வேகமாக ஓட்டு
    (கொஞ்சம் வேகமாகஓடும் பாடல் வேகமாக டைப் அடிக்க இயலவில்லை..

    https://www.youtube.com/watch?featur...&v=05jFqxsPT2w

    *
    அடுத்து வரப்போகும் கவிஞர் எழுதிய கணீர்க்குரல் அருவிப்பாட்டு ரொம்பப் பிரபலம் தான்..

    அவர்ர்ர்ர்ர்ர்

    (அப்புறம் வாரேன்)

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #3693
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார் - 5

    *
    ஸ்டார்ட்

    டேப் சுழல ஆரம்பிக்க – மெட்டு – தானனா தன தானனா – என்பதற்கேற்ப எழுதப் பட்ட பாடலைப் பார்த்து பாடகர் பாட ஆரம்பிக்க – டபக்… இருள்.. கரெண்ட் கட்..

    யாரங்கே..

    அந்த யாரங்கேயும் எதுவும் செய்ய இயலவில்லை.. இருபது நிமிடம் கடந்து தான் வந்தது கரண்ட்.

    இசையமைப்பாளருக்கோ எரிச்சல்.. என்னையா இது காலைலருந்து ஒழுங்கா நடக்க மாட்டேங்குது..

    என்ன ஆச்சுதுங்க

    அதையேன் கேக்கற போ..இட்லிக்குத்தொட்டுக்க வித்யாசமா ஒரு வடகறியோ என்னவோ புதுசா ப்ண்ணியிருந்தா வீட்டுக்காரி..ஏதோ மசாலா தூக்க்லோ என்னவோ.. ஒரே கலக்கல்.. இப்ப பரவாயில்லை இங்க வந்தா கரெண்ட் கட்.. இதோ வந்துடுச்சே.. எங்கே செளந்தர்ராஜன்..

    செளந்தர்ராஜன் என விளிக்கப் பட்ட டி.எம்.எஸ். இல்லை.. எதற்கோ அல்லது அருகிலோ தொலைபேசி பண்ணிவிட்டு வருவதாகத் தகவல் வர, இசையமைப்பாளருக்கு மறுபடிகோபம்..அடச் சே. ரிகர்ஸல்பண்ணனுமா மறுபடியும்.. எல்லாம் இந்தப் புதுசா பாட்டெழுத வந்தவனால…

    ஒல்லி ஒல்லியாய்க் கண்ணில் கனவு மின்ன அமர்ந்திருந்த புதுப்பாடலாசிரியருக்கு ஒரு மயக்கம்.. நாமென்ன தவறு செய்தோம்..

    ஆரம்பிச்சதுலருந்தே சகுனம் சரியில்லை – என்றார் இசை.. என்ன பண்ணலாம்.. பேசாம இந்தப் பாட்ட நமக்குத் தெரிஞ்ச பிரபலகவிஞர்கிட்டயே கொடுத்துடலாமா என்ன சொல்றீங்க ப்ரொட்யூஸ்..

    ப்ரொட்யூஸர் பவ்யமாய் ‘ நீங்க சொன்னா சரிண்ணா”

    அவருக்கு ஒரு ஃபோனைப் போடும் )கேட்டுக் கொண்டிருந்த புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞருக்கு பக் பக்) ஓ.. நூறு ஆயுசு அவரே வந்துட்டாரே..

    ரொம்ப சிம்ப்பிளாய் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய பழகியபாடலாசிரியரிடம் இசை சொன்னார்.. இதாங்க மெட்டு ஒரு பாட்டுப் போட்டுத்தாங்களேன்..

    “பேஷா..” என்ற ப.பா “இது யாரு பையன்..”

    ப்ரொட்யூஸர் “ இவரு ஒரு பாட்டுப் போட்டாரு.. என்ன காரணமோ இசைக்குப் பிடிக்கலை”

    “எங்கே.. அந்தப் பாட்டைக் கொடும்” புது ப் பாடலாசிரிய இளைஞன் பவ்யமாய் தான் எழுதிய பாடலைக் கொடுக்க ரசித்துப் படித்து – மலர் மழை போலே மேனியின் மீதே குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே..வாவ். நன்னா எழுதியிருக்கயேப்பா “ (இளைஞன் முகத்தில் மலர்ச்சி) எங்கே இசைப்பாப்பா..

    இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா – என்னங்க

    இந்தப்பாட்டே நல்லாத் தான் இருக்கு இதை வச்சுக்கும் – நான் அப்புறமா வர்றேன்.. எனச் சொல்லி பெரிய கவிஞர் (மனதால்) புறப்பட பு.பா.எ.வ கவிஞருக்குக் கண்ணில் நீர் முட்டியது..

    நிற்க நாம் சொல்லப் போவது அந்தக் காலத்தில் புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞர்.. பிற்காலத்தில் வாலி என அறியப்பட்டவர் – அவரைப் பற்றி இல்லை..

    வாலியின் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் நன்றாக எழுதியிருக்கிறார –எனப் பெருந்தன்மையுடன் சொல்லிச் சென்ற கவிஞர் பற்றி..

    வாலி எழுதிய பாடல் – சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் (படம் நல்லவன் வாழ்வான்)-

    (நிகழ்வின் வர்ணனை என் கற்பனையூர்)
    அவர்…மருதகாசி..

    *
    திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக் ஆர்வம்.

    சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..

    ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..

    மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..

    சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..

    தூக்குத்தூக்கியில்…
    இதுவும்,

    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
    சூலியெனும் உமையே!
    சூலியெனும் உமையே குமரியே!
    குமரியே சூலியெனும் உமையே குமரியே

    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
    மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்
    கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே!


    https://www.youtube.com/watch?featur...&v=VlULJclM6IQ

    *
    கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..

    *
    இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..

    "அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
    "அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
    "அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
    "ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
    "ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
    "இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
    "உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
    (மந்திரி குமாரி, 1950)
    "எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
    "என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
    "என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
    "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
    "ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
    "கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
    "கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
    "கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
    "கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
    "காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
    "கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
    "கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
    "சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
    "சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
    "சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
    "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
    "தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
    "நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
    "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
    "மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
    "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
    "மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
    "மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
    "மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
    "மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
    "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
    "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
    "வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
    "வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
    "வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
    "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
    "வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)


    ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து.. இருந்தாலும் அந்த அருவிப்பாட்டு..

    வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடுகொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்னும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டு தான் நினைவுக்கு வரும்.. சி.எஸ் ஜெயராமன்,தோற்ற்ப்பொலிவுடன் ந.தி இன் பாவை விளக்கு..

    பாடல் முடிந்தவுடன் கொய்ங்க் கொய்ங்க் என்று ஒயிலாக அசைவதாக நினைத்து அசைந்தவண்ணம் :”எண்ணக்கிளி வண்ணக் கிளியிடம் சொல்லுதோ” என ந.தியிடம் கேட்பார் எம்.என். ராஜம்

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே..



    *
    1949 இலிருந்து 1960 வரை பறந்த மருதகாசியின் கொடி கண்ணதாசனின் வரவிற்குப் பிறகு கொஞ்சம் இறங்கியது எனத் தான் சொல்லவேண்டும்.. இவரது குடும்பம் விவசாயக் குடும்பம் எனில் ஊருக்கே சென்றுவிட்டார்..பின் மறுபடி வந்து பாடல்கள் எழுதி..பின் 1989 இல் மறைந்தார்.

    கவிஞர் வாலி தனது இரங்கற்பாவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டது:
    எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும்
    இணைந்த பாடல் இவரது பாடல்;
    எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல்
    எழுதுவதற் கிவரே இலக்கண மானார்!

    பாக்களின் மேன்மை படித்தால் புரியும்;
    பாமரன் என்னால் புகலத் தரமோ?
    செய்யநற் றமிழின் சீர்த்திக ளனைத்தும்
    சிந்துகள் மூலம் செப்பிய மேதை
    உண்மை தான்..
    **
    இன்னொரு பாட்டுப் போட்டுக்கறேனே..

    சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
    கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
    கட்டுமுன்னே கை மேலே படலாமா?

    மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

    வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
    எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
    தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?
    https://www.youtube.com/watch?featur...&v=JoyCPyBySrc
    *
    அடுத்து வரப்போகும் கவிஞர் ஒரு சமூகப் படத்திற்காக எழுதிய சோழன் பாட்டு பிரபலமான ஒன்று..

    அவர்ர்ர்ர்ர்

    (அப்புறம் வாரேன்)

  7. Likes Russellmai, eehaiupehazij liked this post
  8. #3694
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    பாடினார் கவிஞர் பாடினார் - 6

    *
    மனதுள் பொதிந்து
    மலர நினைக்கும்
    வார்த்தை அரும்புகளின் மணம்
    வெளிவிழுந்து வாடிய மலர்களை விட
    மேலானது..
    *
    ஹலோ.. ஏன் மெளஸ க் கீழ தள்ளறீங்க.. இது நா எழுதினதுங்க்ணா..அதுவும் இப்ப..
    சரீ ஈ..இப்போ ஒரு நிகழ்வு (கற்பனையூர் தான்!)
    *
    நமஸ்காரம்

    நமஸ்காரம்..

    இவர்…. இன்னவர்… கல்லூரியில் பேராசிரியரா இருக்கார்…

    ஓஒ…. அந்த… எழுதினது இவர் தானே.. கேள்விப் பட்டிருக்கேன்.. – என்றார் இசையமைப்பாளர்.. சரி பாட்டு எழுதறீங்களா.. தைரியமா எழுதுங்க..இப்பக்கூட இந்தப் புதுப்படத்துக்குத் தான் ட்யூன் போட்டிருக்கேன்..கிராமியக் காதல் கதை.. கிராமத்துப் பொண்ணு ஹீரோயின் ஹீரோ – டூயட்.. பொண்ணு பாடறா மாதிரி ஸ்டார்ட் ஆறது..இந்த…”

    சொல்லிக்கொண்டு போன இசையை மறித்தார் பேராசிரியர்.. இது சரியா பாருங்க..
    காத்து வீசுது புது காத்து வீசுது
    இங்கே
    கதிர்கள்கூட வயல்வரப்பில்
    காதல் பேசுது

    “வாவ்..” என்றார் இசை.. கவிஞரோன்னோ அதான் வார்த்தைகள் குளத்து மீன்களாட்டம் துள்ளி வருது ஸீ.. உங்க கவிதையக் கேட்டும் எனக்கு இப்படி ப் பேசற வர்றது.. சரி..ப்ரொபஸர் சார்..இந்த மெட் கேளுங்க..

    தானனா தானேனா தனனனானே தானேனா.. இந்த பாருங்க..இதுக்கு நானும் குட்டியா எழுதியிருக்கேன்.. சின்னம்மா பொன்னம்மா ஆத்தோரம் போய்ட்டு வரலாமாம்மா.. இந்த மாதிரி வார்த்தை போடப் பாருங்க..”

    கேட்ட பேராசிரியருக்கு நெற்றிக்குள் சுர்ர்ர்ர்.. மன்னிக்கவும்..எனக்கு இப்படி வராதுன்னு நினைக்கறேன்..

    ஓ.. நீங்க கோச்சுக்கிட்டீஙன்னு நினைக்கறேன்.. ஒங்க காத்து வரியை அப்படியே வெச்சுக்கிட்டு ஆரம்பிக்கலாம்.. ஆனா இந்த மாதிரி பாட்டுக்கள் தான் ஜனங்களுக்குப் பிடிக்குது..இப்ப பாருங்க.. வீட்ல வீட்டுக்காரி நமக்காக வார்த்துக்கொடுக்கற தோசை சட்னி எல்லாம் நாம சாப்பிடுவோம். நம்ம ஃப்ரெண்ட்ஸூக்கு வீட்டுக்கு வர்றச்சே கொடுப்போம்.. இதுவே வஸந்தபவன் பார்த்தீங்கன்னா ஹோட்டல்…அது பிஸினஸ்..வர்ற எல்லாருக்கும் பிடிச்சா மாதிரி பண்ணனும்.. அப்பத் தான் நிறையபேர் சாப்பிட வருவாங்க..அதே மாதிரி தான் சினிமாவும்..

    இங்க காதல், சோகம், பாசம், நேசம், துரோகம்,, சண்டை எல்லாமே விஷூவல்ல தூக்கலாத்தான் காட்டப் படும்..ஏன்னாக்க பிஸினஸ்ங்க.. உட்காருங்க எழுதுங்க..”

    பேராசிரியர் அரைமனதாய் எழுதினார்.. செல்லம்மா சின்னம்மா ஒம்மேல ஆசை இருக்குதம்மா.. அப்படியும் அவருக்கு அவருடைய வரிகள் வந்து விழுந்தன..
    ஆத்தங்கரையில் மஞ்சவரப்பில்
    ஒன் ஆசைய உடம்புல பூசிக் குளிச்சேன்.

    பாடல் எழுதி முடித்து படம் பேர் என்னங்க.. அனிச்ச மலர்..ம்ம் தொட்டால் சுருங்கிவிடும் மலர்னு பேர்..எப்படி வரப்போகுதோ சுருங்காம இருந்தா சரி.. “ என மனதுள் ஒரு எண்ணம்..

    அது போலவே அந்தப் படம் பிரபலமடையவில்லை.. கவிஞரின் முதல் பாடல் இடம்பெற்ற படம் என்ற பெருமையை மட்டும் பெற்றது..

    http://freetamilmp3.in/load/A%20to%2...hu%20Puthu.mp3
    *
    இப்ப ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்

    மன பி.எம்.டபிள்யூ காரை டபக்கென ரிவர்ஸ் கியர் எடுத்து முன்னால் ஸ்க்ரீனில் பார்த்தபடியே பலவருடங்கள் தள்ளிப் பின்போனால்..

    தெரியுமே.. தலைகீழ்ப் ப மீசை.. கொஞ்சம் காதைத்தாண்டி நீண்டிருக்கும்கிருதா, ஒல்லி ஒல்லி உடம்பு பளீர் மின்னற்கண்கள்.. வெள்ளை மனசு, வெளிர் கருமை உதடு என அழகாய் இருக்கும் இளைஞனான கல்லூரிக் கண்ணன் என்பீர்கள் தானே..

    எஸ்.. அவனுடைய கையில் உள்ள நோட்புக்கில் முதற்பக்கத்தில் ச்சும்மா மனசுல பதிந்ததுஎன எழுதப்பட்டிருப்பது என்ன..

    என் இதயத் தோட்டத்தில்
    ரோஜாக்களினால் பதியனிட்டேன்
    அறுவடை செய்ய
    உனை அழைத்தேன்
    நீ அரிவாளோடு வந்த பிறகு தான்
    என் தவறு எனக்குப் புரிந்தது..

    இதை எழுதியவர் கவிஞர் மு. மேத்தா.. அவரது கண்ணீர்ப் பூக்கள் கவிதைத்தொகுப்பில் மயக்காத கல்லூரி இளைஞரில்லை இளைஞியில்லை..

    எனக்கு மிகப்பிடித்த கவிஞர்.. இவரது தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி பாடல் தமிழ் அன்சிலியரியில் பாடமாக வந்தது..

    விழிகள் நட்சத்திரங்களை
    வருடினாலும்
    விழிகள் என்னவோ
    ஜன்னல் கம்பிகளுடன் தான்

    என்ற வரிகள்பேசும் கதை தான் எத்தனை எத்தனை..

    ச்ரி சரி ..தலைகீழ்ப் ப மீசை குட்டிக்கண்ணனைத்தவிக்க விடுவானேன்.. அந்தக் காலகட்டத்தில் சினிப்ரியாவில் கல்லூரியை விட்டுப் போய்ப்பார்த்த படம் என நினைக்கிறேன்.. என் கூட இருந்த நண்பன் மிஸாணஷ்ருகி (கிஷ்ணஸ்வாமியின் தலைகீழ்) என்னடா இந்தப் படம்பார்க்கலாம் என்கிற..

    படம் சுமார் தான்… ஆனால் கேள்விப்பட்டது மு.மேத்தா பாட்டு எழுதுகிறார் என்று.. போனால் முன்னுக்கு வந்துகொண்டிருந்த – பக்கத்துவீட்டுப் பெண் சாயல் எனப் பேசப்பட்ட சுகாசினி அவரது ஸோ ஸோ நடனம் – பரப்ப்ரம்மமே என ப் பாடும் கார்த்திக் எல்லாம் ஈர்க்கவில்லை பாடல்..பாட்டு வரிகள்.. தனியாய்த்தெரிந்தன..

    அவை..
    தீம் திரனனன்

    தேனருவியில் நனைந்திடும் மலரோ.. தொடரும் கதையோ
    எது தான் விடையோ
    மன வீணை நான் இசைத்திட..

    முக வாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோஓஒ ம்ம்.
    மனவாசல் கோலமே தினம் போடுதோ
    துறையாகும் தேவியை க் கொடி தேடுதோ
    புன்னகையோ பூமழையோ
    உன் நடையோ தேர்ப்படையோ
    வரமோ அறமோ நான் வளம் பெற

    நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
    இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ
    ஏன் தொலைவோ நீ நிலவோ
    தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
    தீம் திரனன
    தேனருவியில் நனைந்திடும் மலரோ (பாட் கேட் பிடிச் வரி அடிக்கறதும் ஒரு இன்பம்).
    https://www.youtube.com/watch?featur...&v=lrCmn2WdRSE
    ஸோ இவ்ளவு அழகாப்பாடல் எழுதின மு மேத்தா அப்புறம் என்ன ஆச்சு…..

    *
    அனிச்ச மலருக்கப்புறம் வெகு நாட்களாக எழுதவில்லை.. பின் ஆகாய கங்கை.. பாடல் பிரபலமானாலும் படம் பிரபலமாகவில்லை ( இப்பொழுது நகைச்சுவையில் தனியாகத் தெரியும் மனோபாலா இயக்கியபடம்)

    அதன் பிறகு பாலச்சந்தர்.. வேலைக்காரனில் பாட்டு..

    படம் பார்த்த போது இவர் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கவில்லை நான்.. (சொர்ண புஷ்பம் இருக்கே) .. ஆனால்

    தோட்டத்துல பாத்தி கட்டி
    பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
    சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுற பட்டணம் பட்டணமே
    மனம்
    கெட்டியாக இல்லாட்ட மனசு கெட்டுடும் கெட்டுடுமே வரிகள் நிமிரவைத்தன என்றால் வா வா வா கண்ணா வா… வும் ஈர்த்தது..

    அதில் சில வரிகள்..
    காளிதாசன் காண வேண்டும்
    காவியங்கள் சொல்லுவான்
    கம்பநாடன் உன்னைக் கண்டால்
    சீதை என்று துள்ளுவான்

    தாஜ்மகாலின் காதிலே
    இராம காதை கூறலாம்
    மாறும் இந்தப் பூமியில்
    மதங்கள் ஒன்றுசேரலாம்
    **
    உதய கீதத்தில் இளையராஜாவின் இசை.. பாடல் பாடு நிலாவே.

    எழுத ஆரம்பித்தார் கவிஞர்..

    பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
    உன் பாடலை நான் கேட்கிறேன்.. என எழுதிவிட்டு ஆண்பாடும் பாட்டிற்கும்
    அதே வரி போட.. இளையராஜா.. கவிஞரே.. இது கொஞ்சம் இயல்பா இல்லையே..

    என்ன .

    இந்தப் பொண்ணு பாடுது தன்னோட எண்ணத்தை. அந்தப் பாட்டக் கேட்டு ஹீரோபாடறான்..இல்லியோ

    ஆமம்

    இந்தப் பொண்ணு பாடறது நிலாவப் பாத்து அதுவும் ஹீரோக்கு கேக்கணும்னு பாடுது.. ஆனா ஹீரோ இவபாட்டைக் கேட்டுட்டுத் தானே பாடறான்..அதனாலே.

    கவிஞருக்குப் புரிய..சரி பாடும் நிலாவேன்னு ஹீரோபாடறதா வெச்சுக்கலாமா..உங்களுக்கு ஆட்சேபணையில்லியே..

    ஷ்யூர் என்றாராம் மேத்தா..

    இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்..

    நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
    வா வா வா கண்ணா வா
    வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன்
    யார் வீட்டில் ரோஜா பூப் பூத்ததோ
    கற்பூர பொம்மை ஒன்று
    பொன் மானே சங்கீதம் பாடிவா

    *
    எதற்காகப் பாலச்சந்தரிடம் போனாராம்.. கவிதைகள் எழுதினால் சிலபேரை மட்டும் சென்றடைகிறது..திரைப்பாடல்களின் ரீச் எல்லாரையும் சென்றடைகிறதே.. – என்கிறார் கவிஞர்..

    இளையராஜா பாடலுக்கு பல பல்லவிகள் கொடுக்க இளையராஜா தேர்ந்தெடுத்தபல்லவி ஒரு பாடலுக்கு என்ன தெரியுமா..

    ராஜ ராஜ சோழன் நான்
    நான் வாழும் காதல் தேசம் நீதான்..
    உல்லாச மேடை மேலே
    ஓரங்க நாடகம்..
    இன்பங்கள் பாடம் சொல்லும்
    என் தாயகம்.
    கள்ளூரப் பார்க்கும் பார்வை
    உள்ளூரப் பாயுமே
    துள்ளாமல் துள்ளும் உள்ளம்
    சல்லாபமே
    வில்லோடு அம்பு ரெண்டு
    கொல்லாமல் கொல்லுதே
    பெண்பாவை கண்கள் என்று
    பொய் சொல்லுதே.

    மனதை வருடும் மெல்லிசை, வெகு அழகியபிக்சரைசேஷன் , மின்னற் வரிகள் என்றும் மறக்காது..



    *

    அவரது வரிகள் தனியாகத் தெரிவது தான் ஸ்பெஷாலிட்டி மு.மேத்தாவிடம்..

    மரபுக்கவிதையில் தேர்ந்த அவர் எளிமையாகச் சொல்லப்படும் புதுக்கவிதை மூலம் மரபிற்கும் பாலம் கட்டினார் எனலாம்

    அவர் எழுதிய ஒரு மரபு க்கவிதை..
    வ்ரலாறு என்பது தலைப்பு..

    சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
    சாகச முத்திரைகள் - கடல்
    தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
    சிற்சில நீரலைகள்!

    ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
    அடைகிற பிரபலங்கள் - பல
    ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
    அற்புதப் புதைகுழிகள்!

    வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
    வழிகளின் ஓவியங்கள் - சில
    பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
    புகன்றிடும் மூலங்கள்!

    செப்டம்பர் 5 வந்தால் எழுபது வயதாகிடும் கவிஞர் இன்னும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்பது என்னுடைய உள்மன ஆசை..

    **
    அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

    அவர்ர்ர்ர்ர்ர்……

    (அப்புறம் வாரேன்)
    **

  9. Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #3695
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    பாடினார் கவிஞர் பாடினார் – 7

    ஹாய் ஆல்.. ரொம்ப நாளாச்சா இந்த த் தொடரைக் கண்டின்யூ பண்ணி..

    எனில் ஆறாம் அத்தியாயத்தின் இறுதி வரி…

    //அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

    அவர்ர்ர்ர்ர்ர்……//

    **

    சரி அந்தக் கவிஞரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு தகவல் தெரிவதற்கு திருமூலரை அழைப்போம். திருமூலர்? யெஸ் .
    *
    ஒருபாடல் திருமந்திரத்திலிருந்து…


    வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
    புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
    தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
    முழுதும் பழுத்தது வாழைக் கனியே

    என்னவாக்கும் அர்த்தம்?.

    இறைவா என் நெஞ்சில் உனை எண்ணிக் கசிந்துருகும் வண்ணமிருக்கும் யோகப் பயிற்சியை வித்திட்டேன்.. பாகல் எனச் சொல்லப் படும் வைராக்கியம் முளைத்தது.

    .கண்ணை மறைக்கும் புழுதியைப் போல கண்களை மறைத்து உண்மையைக் கூற மறுக்கும் தத்துவங்களை ஆராய்ச்சி செய்தேன்.. பலன் பெரிய பெரிய காய்களைக் கொண்ட பூசணியைப் போல என்னுள்ளே இருந்த சிவமாகிய இறைத் தன்மை வெளிப்பட்டது..

    என்னுள் இருக்கும் இந்திரிய விஷயங்களைத் தொழுது அவற்றை அடக்கி உன்னடி சேர்வதற்குப் பயிற்சியும் செய்தேன்..ஓ. காட்.. என்னாச்சு தெரியுமா.. எனக்கு வாழைப்பழத்தைப் போன்ற சுவைகொண்ட --ஆனால் அவற்றை முன்பின் அறியாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய ஆன்ம லாபம்..உன்னை அடைவதால் கிடைக்கும் பயன் கிடைச்சதுப்பா..தாங்க்யூ..!

    (சைவப் பெரியார் துடிசைக் கிழார்ங்கறவர் எழுதின உரையைக் கொஞ்சம் எனக்குப் புரிந்த வகையில் எழுதிப் பார்த்தேன்.)

    ஆனா பார்த்தீங்கன்னா…இதைத் தழுவி ரொம்ப ஸிம்ப்பிளா நாம் பார்க்கப் போகும் கவிஞர் அன்றே எழுதியிருக்கிறார் என்று சொல்வதற்கு முன் ஒரு காட்சி..
    (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்!)
    *
    பாட்டுக்கு மெட்டு போட்டுட்டயா.. எங்கே…

    கேட்டவர் அந்த ஓரிருபடத்திற்கு இசையமைத்திருந்த புது இசையமைப்பாளரின் நண்பர்..அந்தப் புதுப்படத்தின் புது இயக்குனர்..

    போட்டுட்டேனே.. இதோ ஒரு பாடகியை வச்சு சில வார்த்தைகள் போட்டு பாடச்சொல்லியிருக்கேன்..

    எங்கே சொல்லு..

    தானான தான்னா ஆ ஆ
    தானேனா தான்னா தனனானே தானானா..

    யோவ் மெட்டு எதுக்குய்யா வார்த்தை…

    சொன்னார் இசையமைப்பாளர்.. நல்லா இருக்கே.. எந்தக் கவிஞர்… நம்ம பெரியவரா..

    இல்லீங்காணும்.. என்னோட அஸிஸ்டெண்ட்டா இருக்கானே…” தூரத்தில் வெடவெடவென ஒல்லியாக இருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தார் இசை..

    “டேய்” அடா புடா நண்பர்கள் தான் இசையும் இயக்கமும்.. “அது உன் தம்பியில்லையா”

    “தம்பியே தான்..அமர்..”

    நல்லா இருக்கு..அவனையே முழுப்பாட்டையும் எழுதச் சொல்..

    அப்படி இளையராஜா என்ற இசையமைப்பாளரின் தம்பியான அமர் என்கிற கங்கை அமரனை ப் பாடல் எழுதச் சொன்னது பாரதிராஜா என்ற புது டைரக்டர்..அந்தக்காலத்தில்..

    அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் செந்தூரப் பூவே…. தேசிய விருது எஸ்.ஜானகிக்கு ப் பெற்றுத் தந்த பாடல்..

    தென்றலைத் தூது விட்டு மறு சேதிக்குக் காத்திருப்பேன்
    கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
    கன்னிப்பருவத்தில் வந்த கனவிதுவே
    எண்ண இனிக்குது அந்த நினைவதுவே - ஸீ இதை நினைவிலிருந்து என்னால் டைப் செய்ய முடிகிறது என்றால் காரணம் கவித்துவமிக்க வரிகள்..

    கவிஞர்கள் அனைவருக்கும் இசைஞானம் உள்ளது என்று சொல்ல முடியாது..இசைஞானம் அவ்வளவாக இல்லாத கவிஞர்கள் ,என் போன்ற கவிதை எழுத முயற்சிப்பவர்கள் நிறையவே உண்டு..

    இசைஞானம் உள்ளவருக்கு , இசையமைக்கும் திறமை கொண்ட நபருக்கு , கவித்துவ உள்ளம் கண்டிப்பாக இருக்கும்.. அப்பொழுது தான் மெட்டுக்கள் பொங்கி வரும்..

    அந்தமாதிரிப்பட்டவர் கங்கை அமரன்..

    சிலபாடல்கள் அவர் எழுதியவை என்றால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்..
    *
    இன்னொரு சம்பவம்..

    இளையராஜாவின் இன்னொரு படம்..இந்தாடா தம்பி.. இந்த மெட்டு.. நான் பாட்டுப்போட்டு இருக்கேன் பாரு..

    அரண்மனைக்கிளி அழகுப் பைங்கிளி
    அரங்கில் வந்ததம்மா.. நல்லா இருக்கா நீ எழுது… என கங்கை அமரனைக் கேட்க
    அவர் எழுதிய பாடல்..

    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
    அழகு நெத்தியிலே..
    **

    என்ன பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை ..இசை.. பின் திரைக்கதை டைரக்ஷன் என எல்லாத் துறைகளிலுமே கால் வைத்தார்.. வழுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்..

    ஆனால் பாடலாசிரியராக சிலசமயங்களில் சிற்சில கமர்ஷியல் எனச்சொல்லப்படும் பாடல்களையும் எழுத வேண்டியிருந்தது.. எஸ் ஓரம்போ ஓரம்போ , அண்ணே அண்ணே சிப்பாயண்ணே.. நம்ம ஊர் நல்ல ஊர் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சன்னே, வாடி என் கப்பக் கிழங்கே.. என்பன சில எக்ஸாம்பிள்கள்..

    கவிஞர் கங்கை அமரனின் என் மனங்கவர்ந்த சில பாடல்கள்..
    சீர் கொண்டுவா வெண்மேகமே..
    இது இனிய வசந்த காலம்
    இலைகளில் இளமை துளிரும் கோலம்..
    *
    காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

    *
    உன்பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
    *
    சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

    *
    தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் புது தாளம்வரும்
    அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்..
    மணமாலைவரும் சுப வேளை வரும்
    மண நாள் திரு நாள் சுப நாள்..

    *
    ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சுருச்சு
    பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே

    **
    ஆசையக் காத்துல தூதுவிட்டு
    *
    நீ எப்போதும் பார்த்த புள்ள உன்னை அடையாளம் தெரியவில்லை

    *
    மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
    *
    மண்ணிலிந்தக் காதல் அன்றியாரும் வாழ்தல் கூடுமோ
    *
    இந்த மான் உன் சொந்தமான்பக்கம் வந்து தான்
    சிந்து பாடும்..
    *
    பூ மாலையே தோள் சேரவா..

    *
    பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண்பாவாய்
    *
    புத்தம்புதுக்காலைபொன்னிற வேளை
    என் வாழ்விலே தினம் தோறும் தோன்றும்
    சுப ராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்
    *
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்திலாடுது என் மனமே
    *
    அடியே.. மனம் நில்லுன்னா நிக்காதடி..
    கொடியே… எனைக் கண்டு நீ சொக்காதடி
    *
    நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
    *
    செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே
    *
    ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும்கவலையில்லே
    *
    ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ்வானிலே ஒளி மின்னல் தோன்றுதே
    *

    இன்னும் நிறையச் சொல்லலாம்..

    இங்கு ரெண்டே ரெண்டு..

    தம்தனதம்தன தாளம் வரும்
    சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
    சுவை அள்ளியது
    மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

    பெண் மனம் பூவினும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
    மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
    மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
    மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
    இனிக் கனவுகள் தொடர்ந்திட –

    தம்தன நம்தன தாளம் வரும் பல பாவம் வரும்
    அதில்: சந்தன மல்லிகை வாசம் வரும்
    மண மாலை வரும்.. சுப வேளை வரும்.. மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது



    எப்போதுகேட்டாலும் எனக்கு மெய்மறக்கும் மேலுள்ள பாடல்.. (பிக்சரைசேஷன் எனக்குப் பிடிக்கவில்லை..ஆனால்பாடலைக் கண்மூடிக் கேட்டால் எங்கோ செல்லலாம்…)

    கீழ்வரும் பாடலும் அப்படியே..

    சிறு பொன்மணி அசையும்
    அதில் தெறிக்கும் புது இசையும்
    இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
    நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
    ராகம் தாளம் பாவம் போல
    நானும் நீயும் சேர வேண்டும்


    விழியில் சுகம் பொழியும்
    இதழ் மொழியில் சுவை வழியும்
    எழுதும் வரை எழுதும்
    இனி புலரும் பொழுதும்

    தெளியாதது எண்ணம்
    கலையாதது வண்ணம்
    அழியாதது அடங்காதது
    அணை மீறிடும் உள்ளம்
    வழி தேடுது விழி வாடுது
    கிளி பாடுது உன் நினைவினில்

    **
    இப்போதும் இன்றும்படங்களுக்குபாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.. இன்னும் கவித்துவமாக அவர் எழுதி நல்ல மெலடி கேட்கவேண்டுமென்பதே என் போன்ற சிறு ரசிகனின் ஆசை..

    *
    அடுத்து வரும் கவிஞரின் வாழ்வில் நடந்ததாகக்கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இன்னொரு இந்தக்காலக் கவிஞர் அழகாகச் சிறுகதையும் எழுதியிருக்கிறார்..

    அப்படி அந்தக்காலக் கவிஞர் யார் என்றால்…ஜஸ்ட் வெய்ட் ஃபார் நெக்ஸ்ட் எபிஸோட்..
    *
    ஏதோ மிஸ் பண்ணிட்டேனா..

    ஆமா..ஆரம்பத்துல திருமூலர் பாட்டு அதுக்கும் கங்கை அமரனுக்கும் என்ன தொடர்பு..


    (ரொம்ப சிம்ம்பிளா கங்கை அமரன் (?!) அன்னிக்கே சொல்லிட்டார்..அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்னு. இல்லியோ 

    எஸ்ஸ்கேப்..

    பின்ன வாரேன்

  11. Likes Russellmai, eehaiupehazij liked this post
  12. #3696
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார் – 8

    **

    சிலோனில் ஒரு டீக்கடை..

    அந்த டீக்கடையினுள்ளே ஒரு ரேடியோ.. ஆக சிலோன் ரேடியோ.. அதற்குள் ரேடியோ சிலோன்…!
    ஒரு சாய் போடுங்க..

    வந்த் இளைஞனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கலாம். கொஞ்சம் முரடான முகம் கலைந்த தலை.. கொஞ்சம் சற்றே சிவந்த கண்கள்..அழுக்கான உடை..

    .மத்தியானம் நான்கு மணி ஆனதினால் இசைக்கல்ளஞ்சியம்..

    பேப்ரபேங்க் என்று மியூசிக்..படிக்காத மேதையில் வரும் சீவிமுடிச்சு சிங்காரிச்சு பாட்டிற்கு முன் வரும் மியூசிக்.. முடிந்து இசைக்களஞ்சியம்..

    தொபக்கென வடிகட்டியில் ஊறியிருந்த தேனீருடன் தள தள தள தள என -இளம்பெண்ணைப் பார்க்கும் இளந்தாரி மனசைப் போல- கொதித்துக் கொண்டிருந்த பாலைக் கொஞ்சூண்டு நாசுக்காய் ஒருகிளாஸில் விட்டு இன்னொரு கிளாஸை எடுத்து சர் சர்ரென நுரை பொங்க ஆற்றி பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கடைக்காரர் கொடுக்கவும் இசைக்களஞ்சியத்தில் முதல்பாடல் இது இன்ன படத்தில் எழுதியவர்…எனச் சொல்லி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பாட்டை ப் போட…

    சூடு சூடாய் நல்லமரக்கலரில் நுரைபொங்க இருந்த டீயை ஒரு முறை சிப்பிய இளைஞன் நிறுத்திவிட்டான்.. பின் முழுப்பாடலையும் கேட்டான்..

    டீ கிளாஸ் கையிலேந்திய படியே… குடிக்காமல்.. பாடல் கேட்கக் கேட்க கண்கள் கலங்கியன.. பொசுக்கெனப் பொங்கிடும் வெள்ளம் போலக் கண்களில் நீர்.. சொய்ங்க் என வழுக்கிக் கன்னத்தில் வீழ, “ஏன் கரையறீயள்” எனக் கேட்டார் திகைத்துப் போன கடைக்காரர்..

    உஷ்.. என்றான் இளைஞன்..பாடலை முழுக்கக் கேட்டுவிட்டு, “இந்தப் பாட்டு எழுதினதுயாரு..”

    “இவர்..ப்பா.. என்ன விஷயம்..ஏன் அழறே”

    “எனக்கு என்னோட அம்மா நினைவுக்கு வந்துடுச்சு..பாவி நான்.. போகாதேன்னு சொல்லிச்சு.. இந்தவூர்லயே இருன்னு சொல்லிச்சு..எனக்கு கண்டி ஊரு.. அதவுட்டுட்டு..அவளயும் விட்டுட்டு இந்தக் குன்னாகத்துக்கு வந்துட்டேன்.. அது அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கும் என்ன வளக்க…ஆளாக்க.... பாவி நான் பாவி..”

    “இதுவே பழையபாட்டாச்சுதே..இப்பத்தான்கேக்குறியள்”

    “ஓமம்..ம்ம் நான் ஒடனேபஸ்ஸ்டான் போய் ஊருக்குப் போறன்” சொன்ன இளைஞன் டீக்காசுகொடுத்துவிட்டு நடந்தான் டீயைக் குடிக்காமலேயே..

    அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லுமுன்…

    **
    ”அஸ்ஸலாமு அலைக்கும்..

    அலைக்கும் அஸ்ஸலாம்..”

    “செளக்கியமா பாய்..”

    “செளக்கியம்..சொல்லுங்கள்..”

    “ராமாயணக் கதையை முழுக்கப்படம் எடுக்கறோம்..உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்..”

    “ஆமாம்..”

    “அதுல ராவணன் அரசவைல்ல பாடற மாதிரி பாட்டு வருது”

    “சரி”

    ”அதுக்கு ஒங்க தோஸ்த் மருத காசி கிட்ட பாட்டுக் கேட்டோம்”

    “சரி” மெல்லப் புருவம் உயர்ந்தது

    “அவர் சொன்னார்..அவரும் எழுதுவாராம்.. நீங்களும் எழுதணுமாம்..ரெண்டு பேருக்கும் வேறவேற மெட்டு..ரெண்டுல மிகச் சிறந்ததா இருக்கறத படத்துல உபயோகப் படுத்திக்கலாம்னு சொன்னார்.. பாய்..கோச்சுக்கப் படாது.. அவருக்கு என்ன பேமண்ட் தர்றோமோ அதையே உங்களுக்கும் தந்திடறோம்..ஆனா படத்துல வரலைன்னா கோபிச்சுக்கவும் கூடாது”

    “இது என்ன..பிரம்மாண்டமா படம் எடுக்கறீங்க..அதுவும் உங்க இதிகாசத்த..சிறந்ததில் சிறந்தது வரணும்னு ஆசைப்படறதுல தப்பில்லையே.. ஸ்டூடியோக்கு நான் வரணுமா.. கொஞ்சம் உடல் நிலை சரியில்லையே..எப்போ வரணும்..”

    “அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்..இதோ டேப்ரெகார்டர் கொண்டு வந்துருக்கோம்.. அதுல மெட்டு பதிஞ்சுக்கிட்டு வந்துருக்கோம்.. ஐயா கேட்டு எழுதித் தந்தீங்கன்னா ஸ்டூடியோ போய் ரிகார்ட் பண்ணிடுவோம்..”

    “சரி..வந்தது வந்தீங்க.. நம்ம வீட்டு வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிட்டுப்பாருங்க..”

    “வெஜிடபிள் பிரியாணியா” வந்திருந்தவர்கள் புருவம் உயர்த்த கவிஞர் புன்சிரித்தார்.. “ ஆமாம் நான் வெஜிடேரியன் தான்.. நான்வெஜிடேரியனில்லை..”

    வந்த பிரியாணிக்கும் கவிஞரின் மனம் போலே சுவை..

    பின்னர் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் என்னாயிற்று..

    அதைப் பார்க்குமுன் கவிஞர் யாரெனத் தெரிந்து கொள்ளலாம்..கவி கா.மு.ஷெரிஃப்..

    தன்னைப் பற்றிஅந்த மகா கவிஞர் என்ன சொல்கிறார்..

    சிந்தனை என்ற கலப்பை கொண்டு
    செய்ய தமிழாம் நிலமதனை
    வந்தனை செய்தே உழுதுழுது
    வார்த்தை களென்ற எருவுமிட்டு
    நிந்தனை யற்ற எதுகை மோனை
    நீண்ட வரப்பும் எடுத்துக் கட்டி
    அந்தம் மிகுந்த கவிதைப்பயிர்
    ஆக்கும் ஏழைப் பாட்டாளி நான்.

    மிகப் பழகுதற்கு எளியவர் கவி கா.மு ஷெரிஃப். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர். (1914-1994) முதலில் பாட்டெழுதிய படம் பொன்முடி. பின் மந்திரி குமாரியில் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. மேலும் பாடல்கள் பார்க்குமுன்..

    *

    ராமாயணப் படத்திற்காக மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொடுத்தார் கவி.கா.மு.ஷெரீஃப்.. ஆனால் சம்பூர்ண ராமாயணத்தில் அது இடம்பெறவில்லை.. மருதகாசி ராவணனுக்காக எழுதிய வீணைக் கொடியுடைய வேந்தனே இடம் பெற்றது..கவிஞர் கோபமெல்லாம் கொள்ளவில்லை..எனக்குக் கிடைத்தால் என்ன என் நண்பன் பெற்றாலென்ன என்ற உயர் பண்பு.

    பல வருடங்கள் கழிந்தன.. ஒரு தயாரிப்பாளர் கவி.கா.மு ஷெரீஃபிடம் வந்தார்..

    “சொல்லுங்க”

    “சிவனோட விளையாடல்கள் பற்றிப் படமெடுக்கிறோம்”

    “சரி”

    “எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதிட்டார்.. ஒரே ஒரு பாட்டு பாக்கி..”

    “ம்ம்..அதுக்கு நான் எழுதணுமா”

    “இல்லை நீங்க ஏற்கெனவே எழுதிட்டீங்க”

    “ நானா..” வியந்தார் கவிஞர்..
    “ஆமாம்..சம்பூர்ண ராமயணத்திற்காக ராவணன்பாடற மாதிரி இருக்கற பாட்டு..இங்கே எங்க படத்துல சிவன் பாடற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்”

    :”சிவனடியான் பாடற பாட்ட சிவன் பாடறாரா..யா.அல்லாஹ்.. சரி”

    வந்தவர் மகிழ்ந்தார்..”இன்னும் ஒன்று..”

    “சொல்லுங்க”

    “:இது சொல்லக் கஷ்டமா இருக்கு.. எல்லாப்பாட்டும் கண்ணதாசன் எழுதியிருக்கார்..இந்த ஒருபாட்டுக்கு ஒங்க பேர ப்போடறதுக்குப் பதிலா கண்ணதாசன் பேரையே போட்டுடலாம்னு எனக்கு ஒரு சின்ன எண்ணம்..”

    “சின்ன எண்ணம் ம்ம்”

    “நான் கண்ணதாசன் கிட்ட கேட்டுட்டேன்.. ஷெரீஃப் அண்ணனுக்குச் சரின்னா எனக்கும் சரின்னுட்டார்.. நீங்க தான் சொல்லணும்..”

    “அதுக்கென்ன சரி.. என்னது இது..”

    அழகாய் எவர்சில்வர் தட்டினில் பணக்கட்டுகள் கூடவே வெற்றிலை பாக்கு பழம்..

    இந்தப் பாட்டுக்கான சன்மானம்..

    “என்னங்க நீங்க..” கவிஞர் சிரித்தார்.. ஒரே பாட்டுக்குல்லாம் ரெண்டு தடவை சன்மானமா.. ம்ஹூம் வேண்டாம்..

    ரெண்டு தடவையா..

    ஆமா.. மொததடவையே வாங்கிட்டேனே அந்தத் தயாரிப்பாளர் கிட்ட.. ஸோ.. நீங்க பாட்டை உபயோகப் படுத்திக்குங்க படத்துல..அப்புறம் கண்ணதாசன் தம்பி பேரையே போட்டுக்கிடுங்க..பணம் நீங்களே வச்சுக்குங்க..

    வந்தவர்கள் அதிர்ந்து பின் ஏதும் பேசாமல் வெளியேறினர்.

    அந்தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற”பாட்டும் நானே பாவமும் நானே”

    //எந்த அளவுக்கு இந்தச் சம்பவம் உண்மை எனத் தெரியாது.. வலையிலும், நண்பர்களிடமும் கேட்டு அவர்கள் உண்மை என்று சொன்னதினால் எழுதியிருக்கிறேன்// அப்புறம் எழுதிய சம்பவங்களின் வர்ணனை எல்லாம் என் கற்பனை//

    இதே சம்பவத்தை வைத்து சமீபத்தில் குமுதம் இதழில் சிறுகதை ஒன்றைச் சிறப்பாக எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து.. மார்க்கம் என்ற தலைப்பில்.. அதில் வரும் பாடலாசிரியரின் பெயர் கவி.அப்துல்லா..

    *
    டீக்கடையில் டீ அருந்திய இளைஞனின் மனதைத் திருந்த வைத்த பாடல் அன்னையின் ஆணை படத்தில் வரும்
    பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்
    பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
    வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
    மேதினியில் நாம் வாழச் செய்தாள்!

    அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்
    அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை
    துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
    சுகம்பெற வைத்திடும் கருணை வெள்ளம்!

    நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
    நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
    மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
    மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்!

    வெகு எளிய வரிகள்..பெற்றெடுத்த அன்னையைப் பற்றி வெகு சிறப்பாகப் போற்றும் வரிகள் எளிதில் மறக்கவொண்ணாத வரிகள்..எனில் முழுதாய்க் கொடுத்திருக்கிறேன்..

    கவி.கா.மு.ஷெரீஃபின் மற்ற பாடல்களும் எளிமை எளிமை தான்..அவரைப் போலவே..

    சில பிரபலமான பாடல்கள்...இதைப் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு எளிய வரிகள் கொண்டவை என்று..

    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
    , வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே
    ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?
    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    உலவும் தென்றல் காற்றினிலே

    அதுவும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..

    இன்றும் எவ்வளவு பொருந்துகிறது..,
    *
    “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” – இது கவி. கா.மு.ஷெரீப் சொன்ன முத்து.

    எந்த நிலையிலும் யாரிடமும் போய் நிற்காதவர் கவிஞர்..வாழ்க்கையின் சவால்களை அதன் வழியிலேயே ஏற்றுக் கொண்டவர்..சிறந்து வாழ்ந்து அழகிய பல நூல்கள் படைத்து குணச்செம்மலாய் இருந்து மறைந்தவர்.கவி.கா.மு.ஷெரீஃப்.

    *
    என்ன பாடல் போடலாம்..

    பெண்ணைப் பார்ப்பது மையல் கொள்வது எக்காலத்திலும் இருப்பது தான்..அது எல்லாருக்கும் புரியும் வண்ணம்பாடலில் கொண்டு வரவேண்டும்..

    இந்தப்பாடலைக் கேட்டாலே தெரியும்..

    தூக்கம் கண்ணைக் சொக்கக் கண்டேன்
    தூங்கும் போது கனவு கண்டேன்..
    கனவிலேயும் அந்தப் பெண்ணே
    கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

    வானில் முழு மதியைக் கண்டேன்
    வனத்தினிலே பெண்ணைக் கண்டேன்..

    (யார் நடிகர் நடிகையர் தெரியவில்லை/ க. நா. கோச்சுக்காதீங்க..)

    வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,



    *
    அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

    இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

    அடுத்த எபிசோட்ல சொல்றேனே..

    அப்புறம் வாரேன்

  13. Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #3697
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார் – 9

    *
    ரொம்ப நாள் ஆனதினால recap மாதிரி போன அத்தியாயத்தின் இறுதிப் பகுதி

    *
    அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

    இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

    *
    இனி
    *
    தானானா தானேனா தான தானா…

    கால் டாக்ஸி தான்.. கம்பெனி செலவு.. நல்ல ஏஸி.. குளிரக் குளிர பின்சீட்டிலும் அடித்தது..ஆனால் அதை மீறியும் கவிஞர் பிறைசூடனுக்கு வியர்த்தது..

    எழுத வேண்டியது டூயட் பாடல்.. தானானா தானேனா தான தானா…

    அரை மணி நேரம் தாண்டியவுடன் சட்டென்று யோசனை..

    ஒரு டீக்கடையோரம் நிறுத்தப்பா

    நிறுத்தினார் டிரைவர்..இறங்கி ஒரு டீ போடுங்க என்று கேட்கும் போதே கவிஞரின் நெற்றி முடிச்சுகள் இயல்பு நிலைக்கு வந்தன.. ஏனெனில் அந்தக் கடையில் ஒலித்த பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..

    ஆஹா.. ஒரு பாடல் அவருடைய திரை வாழ்க்கைக்கான முதல் பாடலைப் பிரசவிக்கக் காரணமாயிருந்தது..

    ட்ரைவர் பேப்பர் பேனா இருக்காப்பா

    பேனா இருக்குங்க பேப்பர்..

    டீக்கடைக்காரரே இருக்குங்களா..

    இந்தாங்க கணக்கு எழுதற் நோட்புக் .. நீங்களே கிழிச்சுக்குங்க

    கிழிக்காமல் மணி மணியாய் வரி வரியாய் வரிகள் பெஞ்சில் உட்கார்ந்தவாறே எழுதி விட்டார் முழுப்பாடலையும்..

    தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
    உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
    ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
    ஆசை ஊற்று காதில் கானம் பாட
    நெஞ்சோடு தான் வா வா வா கூட
    *
    இதைக் கிழிச்சுக்குவாங்க..

    நீங்க யாரு..

    கவிஞன்..சினிமாப் பாட்டுக்கு எழுதப் போறேன்..

    டீக்கடைக் காரர் முகத்தில் புன்னகை.. நினச்சேன்..சூழ்நிலை வெயில் எதுவும் பொருட்படுத்தாம வேக வேகமா எழுதினீங்களே.. நல்லதுங்க..அந்த நோட்புக்ல நா எதுவும் பெரிசா எழுதலை.. நான் எழுதினதைக் கிழிச்சுக்கறேன்.. நீங்களே நோட் வச்சுக்கங்க..என்னைக் கொஞ்சம் நினைவும் வச்சுக்கங்க..அதென்னங்க இங்க்லீஷ்ல சொல்வாங்களே.. ஆல் தி பெஸ்ட் சார்..

    ஒரு கணம் வியப்பு, மறுகணம் மகிழ்ச்சி..பரபரவென அவர் கேட்ட காகிதங்களைக் கிழித்துக் கொடுத்து நோட்புக்குடன் டாக்சி ஏறி ஸ்டூடியோ சென்று இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சென்று கொடுத்தால் படித்த ராசாவின் நெற்றிச் சுருக்கங்கள் முதலில் தோன்றி மெல்ல மறைய புன்னகை மலர..எங்கே என தனது டீம் ஐக்கூப்பிட்டு பாடச் சொல்லி… ரீ ரெகார்டிங்க் அன்றே அப்பொழுதே..

    இப்படித் தான் ஆரம்பித்தது பிறைசூடனின் திரைப் பயணம்.. இருப்பினும் தொடர்ச்சியாக இல்லை..சற்றே பிடிவாதக் குணம் கொண்டவராம்..திரைப்பாடல்களில் ஆழ்ந்த ஞானம்..

    இவரைப் பார்த்தது முதன் முதலில் கலைஞர் டிவியில் வந்த ஒரு இசை நிகழ்ச்சி..பாடலாம் டூயட் பாடலை.. ஒவ்வொருபாட்டுக்கும் அதன் சூழலை வெகு அழகாக விளக்கியிருந்தார்.பிறைசூடன்.
    சில பல நல்ல பாடல்களுக்குச் சொந்தக் காரர்…
    மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா – ராஜாதி ராஜா..ச்
    என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி – உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் ( எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று)
    சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுல

    கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
    காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
    *
    செம்பருத்தி ஆர்.கே செல்வமணியின் முதல், ரோஜாவின் முதல் படம் என நினைக்கிறேன்.. பானுமதியின் பேரன் பிரசாந்த்.. சோகமாய்ப்பாடும் பாடல் இவர் எழுதியது தான்..
    *
    நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிபோதும்
    இந்த நிலமும் அந்த வானமும்
    அது எல்லோருக்கும் சொந்தம்
    அடி சொல்லடி ஞானப்பெண்ணே
    உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

    இறக்கை உள்ள குஞ்சு இது
    கூடு ஒண்ணும் தேவையில்லை
    புத்தியுள்ள பிள்ளை இது
    கெட்டு நிற்கப்போவதில்லை
    தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
    தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
    தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
    உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
    கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
    என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
    சொல்லடி ஞானப்பெண்ணே

    ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
    அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
    வெட்ட வெட்ட வாழைதான் - அது
    அள்ளித்தரும் வாழ்வைத்தான்
    வெட்டி போட்ட மண்ணு தான்
    அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
    நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
    உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
    கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
    என்னடி ஞானப்பெண்ணே - உண்மைபா
    சொல்லடி ஞானப்பெண்ணே



    *
    பாட்டியைப் பற்றி பேரன் நினைந்து பாடும் பாடல் வெகு அழகாக இருக்கிறது தானே..

    இவர் பாட்டெழுதிய இன்னொரு அழகான பாடல் அதுவும் ப்ரஷாந்த் தான்.. கூட 36 வயது அப்போது ஆகாத ஜோதிகா..

    ம்...ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா
    திரு ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா

    அதில் எனக்குப் பிடித்த வரிகள்:
    உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
    விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை

    மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
    மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
    தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
    பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...

    நமது தேடல்கள் தான் என்று முடிந்திருக்கிறது..எப்போதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறதுவாழ்வின் இறுதிவரை..

    சுஜாதா எஸ்.பி.பி படம் ஸ்டார்..

    இன்னும் இவர் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்..ம்ம்

    (முற்றும்..தற்காலிகமாக)

  15. Likes Russellmai, eehaiupehazij liked this post
  16. #3698
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மேற்கண்டவை வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியவை...கொஞ்சம் சிலபலபுத்தகங்கள், சில வலைப்பூக்கள், சிறிதே சிறிது கற்பனை கலந்து எழுதிப் பார்த்தவை..சுவாரஸ்யக் குறைவின் அது என் தவறு தான்..

    ஒரேயடியாகப் படித்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்..அதனால் தானிட்டேன்.. வாசக தோஷஹ சந்தவ்யஹ..

    இன்னும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள்..இந்த முறை திரு.கோபால் சொன்ன வாமனன் திரைப்பாடலாசிரியர் புத்தகம் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை..

    பிறிதொரு சமயம் எழுத முயற்சிக்கிறேன்.. நன்றி..
    Last edited by chinnakkannan; 11th September 2015 at 01:57 AM.

  17. #3699
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்த மீள்பதிவு இடுவதற்கு ஒரு காரணம் உண்டு....


    -
    வாழ்க்கையில் சில அவஸ்தையான தருணங்கள் தமிழில் அன்கம்ஃபர்டபிள் சிச்சுவேஷன்ஸ் எப்போதும் உண்டு.. உடல் உபாதையால் வரும் அவஸ்தையை விடுங்கள்…வேறு என்ன அவஸ்தைகள்..பெரிய லிஸ்டேபோடலாம்..

    உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ..போன்ற பாடலகள் மனதிற்கு என்ன கொடுக்கின்றன....யா மோடிவேஷனல் தாட்ஸ்.. சற்று மனதை உயர்த்தி விடுகின்றன..உயர்த்தி? யெஸ் லிஃப்ட். செய்கின்றன தானே..அதுவும் இந்த லிஃப்டில் செல்லும் தருணங்கள் இருக்கிறதே..வெகுகுறுகிய நிமிடங்கள்..

    உடன் வருவது யார் என்று தெரியாது..யாரும் புன்னகைக்கக் கூட மாட்டார்கள்..அதுவும் நேரத்தைப் பொறுத்து.. காலை நேரம் என்றால் என்னவோ உலகமே இவர்கள் தலையில் இயங்குவது போன்ற நினைப்பு..ஆணென்றால் டையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு லிஃப்ட் எண்களில் கண் இருக்கும்.. பெண் என்றால் என்னவோ கண்ணகியின் ஒன்று விட்ட அக்கா அல்லது தங்கை போல கொஞ்சம் ஒதுங்கி.. நீயார் நான்யார் என்று அலட்சியப்பார்வை..அலலது என்ன விதமான எண்ணங்கள் எனக் கண்டே பிடிக்க முடியாது..
    ஒரு பெண் என்ன சொல்கிறாள்..

    நீ யாரோ என்னவோ
    தெரியாது..
    நீ என்னைப் பார்க்கிறாயா..
    நான் உன்னைப் பார்க்கவில்லை..
    மேலிருக்கும் விளக்கில் எவ்வளவு தூசி..
    நடுவில்
    சரியாய் அழுத்திய
    ஆறு புன்னகைக்க, ஓ
    நீ எட்டா.
    . நல்ல எண் இல்லையேப்பா..
    கீழே பார்த்தால்
    கறுப்பு ஷூ தான் சற்றே வெளுப்பாய்..
    சோம்பேறியோ..
    என்ன செண்ட் பார்ஷேவா பாய்சனா..
    நம் மூச்சுக் காற்றுக்கள்
    நட்புடன் சற்றுத் தள்ளியே கலந்து
    ககன வெளியில் செல்கின்றன..

    ஓரக்கண்ணால் நீலச்சட்டை எனத் தெரிகிறது..
    கடங்காரா
    தனியாக வந்திருந்தால்
    கண்ணாடியில் முகம் திருத்தியிருப்பேன்..
    லேசாய் முகம் பார்க்கையில்
    கடுகடுவென இருக்கே..
    ஆஃபீஸ்ல நல்ல டோஸா..
    வேணும் உம்மணா மூஞ்சிக்கு..
    டபக்கென லிஃப்ட் திறக்க
    தொலைந்து போடா டெம்ப்ரவரி நண்பா..!


    *

    மனக் குதிரையைப் புல்மேயவிடாமல் ஷ்ஷீ வா பா பா எனக் கூப்பிட்டு சமர்த்தோன்னோ கொஞ்சம் பின்னால் ஓடுப்பா என வேலை வாங்கி பல வருடங்கள் பின்னால் சென்றால்…

    மதுரை அபிராமி தியேட்டர்..அந்த ஹிந்திப் படம் .. ஹிந்திப் படமெல்லாம் வம்படியாய்ப் பார்க்க வைத்தது என் நண்பன் ரகுராமன்.. அழைத்துச் சென்ற படம் இது..அதற்குப் பிறகு அதே படத்தை க் குறைந்த பட்சம் இருபது தடவையாவது பார்த்திருப்பான் ஓரிரு வருடங்களில்.. ஏனெனில் அவன் அப்போது காதல் வயப்பட்டிருந்தான்..

    அதில் வரும் லிஃப்ட் பாட்டு..

    இளம் இளம் வாலிப கமலஹாசன்.. கொஞ்சம் ஷார்ப் மூக்கு ஷார்ப் கண்ணு ஷார்ப்… ம்ம் உடல் என இருந்த ரத்தி அக்னிஹோத்ரி..ஏக் துஜே கேலியே.. (ஹப்பா பாட்டுக்கு வந்தாச்சு..)

    மேரே ஜீவன் ஸாத்தி ப்யார்கியே ஜாய் ஜவானி திவானி
    கூப் சூரத் ஸித்தி படோசன் சத்யம் சிவம் சுந்தரம் பென்ஹர்..(ஓ இங்க்லீஷ்)

    என அவன் பாடிப் பாடி எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது..! விடேண்டா என்று நழுவி ஓடியிருக்கிறேன்..

    பாட்டு நன்றாகத் தான் இருந்தது சல்திகா நாம் காடி பர்திகா நாம் தாடி மேப்யார்கிஸிஸோ..ஹோகயே ஜானேமன் பந்தன் ..எனப் பாடும் போது விழுந்து விழுந்து கண்ணாடித் தம்ள்ர்களில் விழுந்த பனிக்கட்டிகளைப் போலக் குலுங்கிக் குலுங்கி ரத்திப்பெண் சிரிக்கும் சிரிப்பு.. அழகு தான்..

    பாடலில் ஒன்ற முடிந்ததற்கு இன்னுமொரு காரணம் எஸ்.பி.பி.. படம் ஏக் து ஜே கேலியே..பாலச்சந்தர் டைரக்ஷ்ன்..


    ஆனால் அந்தப் படத்தில் எனக்கு ஹம்தும் தோனோ ஜப் மில் ஜாயேங்கே பிடிக்கும் நயா இதி ஹாஸ் பனாயேங்கே எனப் பாடி நிறுத்தி இதுல ஏண்டா ஹார்ஸ் வருது அதுவும் இதி ஹார்ஸ்னா என்ன என ரகுவிடம்கேட்டு அவன் தலையில் அடித்துக் கொண்டு..ஹார்ஸ்லாம் இல்லை இதிஹாஸ்..இதிகாசம் நயா இதிகாஸ் புது இதிகாசம் எனச் சொல்லியிருக்கிறான்..!

    லிஃப்ட் பாடல்கள் என்று பார்த்தால் விரல் தான் விட முடியும்..எண்ணுவதற்கு.. போன டிகேட் பஞ்ச தந்திரம் என்னோடு காதலென்று சொல்லி வைத்தது நீயா இல்லை நானா வில் கொஞ்சூண்டு லிஃப்ட் வரும்..பாடலிலும் வரும். பாடல் வெகுசுமார்..

    தேரேமேரே பீச் மே.. மே ப்யார்கலி..சலாம், எல்லாம் நல்ல பாடல் ஏக்துஜே கேலியேவில்.. ஆனால் சிலமாதங்க்ளுக்கு முன் அதைப் பார்த்த போது ஏனோ முழுக்கப் பார்க்கத் தோன்றவில்லை..ஒருவேளை எனக்கும் ரத்திக்கும் வயதானது காரணமாய் இருக்கலாம்!

    *

    ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயாவா என்ன தெரியவில்லை ஒரு லிஃப்ட் பாடல் ஒன்று உண்டு..நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது

  18. Likes eehaiupehazij liked this post
  19. #3700
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயாவா என்ன தெரியவில்லை ஒரு லிஃப்ட் பாடல் ஒன்று உண்டு..நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது

  20. Thanks chinnakkannan, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •