Page 316 of 400 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3151
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் ( அவள் ஒரு தொடர்கதை )

    ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் ( கை தட்டி தட்டி சிரித்தாளே - ஜோடி )

    ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ( பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா - அன்னமிட்ட கை )

    ஐந்து நாள் வரை, அவள் பொழிந்தது ஆசையின் மழை ( வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே )

    இது ஐந்து புலன்களின் ஏக்கம் ( விழிகளின் அருகினில் வானம் - அழகிய தீயே )

    ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் ( அமர்க்களம் )

    ஐந்து என் கிறாய் என் ஐந்து புலன் அவள் ( பத்துக்குள்ளே நம்பர் - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் )

    இனி

    ஐந்தோடு ஆறும் சேர்ந்து வரும் "அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்குப் பொருத்தமடி" ( என்னடி ராக்கம்ம - பட்டிக்காடா பட்டணமா )

    "ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா" ( மலர்களே மலர்களே - லவ் பர்ட்ஸ் )

    "கடல் ஐந்தாறு மலை ஐநூறு
    இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை" ( கண்கள் நீயே காற்றும் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள் )

    "ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
    அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்" ( அவள் யாரவள் அழகானவள் - அன்பு )

    இன்னும் நிறைய இருக்கலாம்னு தோணுது

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellrqe, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3152
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹை..ஒரே சூறாவளிதான் போங்க மதுண்ணா கலக்கிப் புட்டீய..

    ஆமா இந்த க் குஞ்சான் இனிப்புக்கடை மன்னார்குடி எப்படி இருக்கும்..

  5. Likes madhu liked this post
  6. #3153
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி

    பகுதி 1

    திரு ராஜ் அவர்களின் வேண்டுகோள் படி தெய்வத்தைப்பற்றியும் சிறிய அளவில் அலசி விடலாம் என்று நினைக்கிறேன் - அவர் அளவுக்கு ரசித்து போட முடியாமல் போனாலும் , முயற்ச்சியை கை விட மனம் வரவில்லை . இத்துடன் என் நீண்டபயணமும்மான ஆன - மாதா - பிதா - மனைவி , நண்பர்கள் , குரு , தெய்வம் இனிதாக நிறைவேறும் .

    இறைவன் உண்மையில் இருக்கின்றானா ? அவன் இருந்தால் ஏன் தென் படுவதில்லை ? பார்க்க முடியாத ஒன்றை எப்படி நம்புவது - அப்படி நம்புவது அடிமுட்டாள் தனமல்லவா ?? இப்படிப்பட்ட கேள்விகள் , உலகம் தோன்றிய முதல் எழுந்த வண்ணம் தான் உள்ளது - இப்படி கேட்ட பலர் பிறகு ஞானிகளாக மாறி வணங்கப்படுபவர்களானார்கள் .

    என்னைப்பொறுத்த வரையில் - "Creativities" என்பதை நாம் ஒத்துக்கொள்ளும் போது , அதற்கு ஒரு "Creator " என்பதையும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் -- . எப்படி நமக்கெல்லாம் பெற்றோர்கள் இருக்கிறார்களோ அப்படி !! . நம்மில் பலருக்கு அதிர்ஷ்ட்டம் இருக்கலாம் " கொள்ளு தாத்தா , பாட்டி " நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு . இப்படி வாழை அடி வாழையாக செல்லும் உறவில் , நாம் பலரை பார்க்காமலேயே , அவர்கள் இருந்திருப்பார்கள் என்று நம்புகிறோம் . அதை நாம் என்றுமே சந்தேகப்படுவதில்லை . நம்முள்ளேயும் இறைவனை பார்த்திருக்காத , அதே சமயத்தில் நன்றாக அவனை உணர்ந்து இருக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் - ஆனால் அவர்கள் சொல்வது மட்டும் ஏன் விவாத மேடைக்கு வர வேண்டும் ??

    தெய்வம் உணரப்படவேண்டிய ஒன்று ! அனுபவிக்க வேண்டிய ஒன்று - மற்றவர்களின் பண்புகளில் நாம் காண வேண்டிய ஒன்று . நிலாவில் Neil Alden Armstrong - " இறைவனே உனக்கு நன்றி " என்று சொல்லித்தான் கால்களை ஊன்றினார் . மறுபடியும் சொல்கிறேன் - creativities are many but creator is only one - இந்த நம்பிக்கை நமக்கு வந்துவிட்டால் , ஜாதி , மத வேறு பாடுகள் - அந்த கடவுள் தான் உயர்ந்தவர் - இந்த கடவுள் மட்டம் என்று பிதற்றிக்கொண்டிருக்க மாட்டோம் - ஏசுவாக , ஈசனாக , , கண்ணனாக அல்லாவாக , குருநாயக் ஆக இருப்பதும் அந்த ஒரு creator தான் . ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள் இந்த உண்மையை - நமக்குள் சகோதர பாசம் பூத்து குலுங்க ஆரம்பித்துவிடும் , நாட்டில் மத , இன சண்டைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடும் . பிறகு எங்குமே அன்புதான் , அமைதிதான் !!!.

    மாதா , பிதா , மனைவி , நண்பன் , குரு ---- இத்தனை பேர்களுக்கும் பிறகுதான் தெய்வம் - எல்லா படைப்புக்களுக்கும் காரணமான தெய்வத்தை ஏன் கடைசி வரிசையில் தள்ளி விட்டோம் ? அவர் அவ்வளவு முக்கியம் இல்லாதவரா ??? - அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது . தெய்வம் என்றுமே தானாக இயங்குவதில்லை . அவர் செய்யும் கருணைகள் , காரியங்கள் , தன்னுடைய representatives மூலமே நிறைவேற்றுகிறார் . பெற்றோர்கள் அவருடைய முதல் representatives , பிறகு நல்ல மனைவியை நமக்கு கொடுப்பதின் மூலம் அன்பையையும் , சிறந்த பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார் ; பிறகு நல்ல நண்பன் கிடைத்தால் , அதன் மூலம் பிறருக்கு உதவி செய்வது எப்படி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார் . பிறருக்கு மனமார நன்றி சொல்வது எப்படி என்பதும் ஒரு சிறந்த நண்பன் மூலம் தான் நமக்குத் தெரிய வருகின்றது .பிறகு குருவின் மூலம் நம் அறிவை அதிகரிக்கிறார் . இத்தனையும் அவர் செய்து விடுவதால் அவர் இருக்கும் இடம் காலியாகத்தானே இருக்கும் - அதில் தான் அவர் உணவு அருந்துவதும் , உறங்குவதும் எல்லாமே !!

    மஹா பாரதம் முடிவடைந்தது - கண்ணன் , அர்ஜுனனிடம் கேட்கிறான் " அர்ஜுனா உனக்கு நான் தந்தையாக இருந்து உனக்கு சில கடமைகளை சொல்லிக்கொடுத்தேன் , குருவாக இருந்து யாருக்குமே கிடைக்காத கீதையின் மூலமாக பல உண்மைகளை சொன்னேன் . உனது வேலைக்காரனாக இருந்து உனக்கு ரதம் ஓட்டினேன் . உன் நண்பனாக இருந்து , உன்னை என்றும் பிரியாமல் உனக்கு உதவியாக இருந்தேன் , என் தங்கையை உனக்கும் மணம் முடித்து உனக்கு நெருங்கிய உறவினரானேன் ..... நான் போட்ட இத்தனை வேடங்களில் உனக்கும் பிடித்த வேடம் எது ? "

    அர்ஜுனன் கண்களில் கண்ணீர் மல்க " கண்ணா உன்னை நண்பானாக அடைய எவ்வளவு ஜென்மங்கள் தவம் செய்திருப்பேன் என்று எனக்குத்தெரியாது - எனக்கு எல்லாமே நீ தான் ! - நீ தான் என் தன் நம்பிக்கை , முயற்சி , வெற்றி ... நீயே சரணம் !!" - ஒரு நண்பனின் உயர்வை இதற்கு மேலும் சொல்ல முடியுமா ? யார் யார் எப்படி உறவு கொண்டாடுகிறார்களோ அப்படியெல்லாம் இறைவன் தன்னை அதற்கு ஏதுவாக தன்னை தயார் படுத்திக்கொள்கிறான் ..

    நம்பிக்கை வேண்டும் - எல்லா மதங்களும் சொல்வது இதைத்தான் !! அவனிடம் செல்லும் வரையில் நமக்கு சந்தேகம் இருக்கலாம் - அது தவறு இல்லை - அவனை அடைந்த பின் அவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வரக்கூடாது ..

    (தொடரும் )
    Last edited by g94127302; 29th August 2015 at 01:13 PM.

  7. Likes eehaiupehazij, Russellrqe liked this post
  8. #3154
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி


    பகுதி 2

    ஒரு பெரியவர் ஸ்ரீமத் பாகவதம் சொற்ப்பொழிவு நடத்திக்கொண்டிருந்தார் - இரவு 10 மணியாகிவிட்டது - அவர் சொற்ப்பொழிவு தொடர்ந்தது - மக்கள் அவருடைய பேச்சில் தங்களை மறந்து லயித்திருந்தார்கள் . ஒரு திருடனும் , திருடுவதற்காக அங்கே வந்தான் - கூட்டம் எழுந்திருக்காததால் அவனும் தன்னை ஒரு புதற்குள் மறைத்துக்கொண்டு அவர் சொல்லும் குட்டி ( CK இது மலையாள குட்டி அல்ல !!) கதைகளில் தன்னை மறந்திருந்தான் - அதிகமாக படிக்காதவன் . ஒரு இடத்தில் அவர் கண்ணனைப்பற்றி வர்ணித்தார் - அவன் போட்டுக்கொண்டிருக்கும் ஆடை அணிகலன்களைப்பற்றி விளாவாரியாக சொன்னார் . ஒளிந்திருந்த அந்த திருடனுக்கு ஒரு பிரகாசமான யோசனை வந்தது " சொற்ப்பொழிவு முடிந்தது . எல்லோரும் கலைந்தனர் . திருடன் அந்த சொற்ப்பொழிவு சொன்னவரை அணுகினான் - அருகில் எவரும் இல்லை " சுவாமி - உங்கள் கதைகளைக்கேட்டேன் ! நான் ஒரு திருடன் - ஐந்தோ , பத்தோ தான் கிடைக்கிறது - எனக்கே இது பத்தவில்லை - நீங்கள் சொன்னீர்களே கண்ணன் ... அவன் எங்கிருக்கிறான் ?? அவனிடம் ஏது இவ்வளவு நகைகள் - அவனிடம் திருடலாம் என்று இருக்கேன் -- அவனுடைய விலாசத்தை சொல்ல முடியுமா ?"

    திருடன் என்று சொன்னதில் வந்த பயம் , அவன் அறியாமை நீக்கி விட்டது . அந்த பெரியவர் அவனிடம் தப்பிக்க வேண்டி இப்படி சொன்னார் " தம்பி அவன் அணிந்திருக்கும் நகைகள் விலைமதிக்க முடியாதவைகள் - அவன் இருக்கும் இடம் துவாரகா - இங்கிருந்து 100 km தொலைவில் உள்ளது - அங்கே இருக்கும் நதியின் கரையோரும் மாலைப்பொழுதில் அவன் தன் அண்ணனுடன் அங்கு வரலாம் - நீ அங்கு செல் " --

    திருடன் விடவில்லை " சுவாமி கண்ணனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?" - பெரியவர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் , அவர் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு முட்டாளை அவர் பார்த்ததே இல்லை !"

    " வருபவன் கண்ணன் தான் என்று அவனின் கருமையான உருவத்திலும் , அவன் கையில் இருக்கும் புல்லாங்குழல் மூலமாகவும் , அவன் தலையில் மயிலின் ஒரு சிறகின் மூலமும் தெரிந்து கொள்ளலாம் " என்றார் .

    அவசர அவசரமாக எப்படியோ , எதையோ சொல்லிவிட்டோம் என்ற திருப்தியில் அந்த பெரியவர் ஓட்டம் எடுத்தார் .

    திருடன் மனதில் உறுதி பிறக்க ஆரம்பித்தது - இந்த சின்ன சின்ன திருடுகளை விட்டுவிட்டு கண்ணனிடம் உள்ள நகைகளை திருடி விட்டால் , இந்த தொழிலுக்கு ஒரு முழுக்கு போட்டு விடலாம் ... கால்கள் துவாரகையை நோக்கி பயணித்தன . எப்படியோ துவாரகை வந்து சேர்ந்தான் - ஆதவன் விடை பெரும் நேரம் - நதிக்கரையோரம் - பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தன --- ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு கண்ணன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தான் அந்த திருடன் ... தொலைவில் இரு சிறுவர்கள் வருவதைப்பார்த்து அவனுக்கு அளவில்லாத சந்தோஷம் - வருபவன் கண்ணாக இருக்க வேண்டும் என்று அவன் உள்மனது வேண்டியது - ஆம் வந்தவன் எவரையும் மயக்கும் மாதவன் தான் - கருமை நிறம் - உடல் முழுவதும் விலைமதிக்க முடியாத நகைகள் , வைரங்கள் .... கையிலே புல்லாங்குழல் - இதழ்களில் வாடாத புன்னகை !!

    மரத்தில் இருந்து ஒரே தாவாக தாவி கண்ணனை மடக்கினான் . கண்ணனும் அவனிடம் மிரள்வதுபோல நடித்தான் -- " உன் பெயர் கண்ணனா ? உனக்கு ஏது இவ்வளவு நகைகள் ?? நான் ஒரு திருடன் - நீயோ ஒரு சிறுவன் - உன்னை அடிக்க மனம் வரவில்லை - உடனே எல்லாவற்றையும் கழட்டு ""

    கண்ணன் சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் கழற்றி அவனிடம் கொடுத்தான் . மிரளாமல் , பயப்படாமல் கண்ணன் எல்லாவற்றையும் அவனுக்கு தரும்போது , திருடன் கேட்டான் " உன்னை உன் அம்மா அடிக்க மாட்டாளா ??" - கண்ணன் சொன்னான் " அதை நான் சமாளித்துக்கொள்கிறேன் - நீ இத்தனை நகைகளையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு உன் ஊருக்கு செல் - நீ போகும் பாதை சரியல்ல --- திருடர்கள் நிறைந்த பாதை -- கீதையின் தத்துவம் திருடனுக்கு எங்கே புரியப்போகிறது ??? .. கண்ணன் மறைந்தான் ...

    ஊருக்கு திரும்பிய திருடன் அந்த பெரியவரைப்பார்த்து அவர் கால்களின் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான் -- பெரியவரே " கேட்டதும் கொடுப்பவனை , உங்கள் புண்ணியத்தால் பார்த்தேன் - அவனின் நகைகள் முழுவதும் இதோ இந்த பையில் இருக்கிறது - எனக்கு நீங்கள் வாழ்வு கொடுத்தற்காக , நீங்கள் இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் " என்றான் - அந்த பெரியவருக்கு ஒன்றுமே புரியவில்லை - கண்ணனை பார்த்தாயா ? இவைகள் அவன் அணிந்த நகைகளா ?? - அந்த நகைகளைப் பார்வை இட்டார் - அவரால் நம்ப முடியவில்லை - அவர் சொற்ப்பொழிவில் வர்ணித்த அதே நகைகள் - ஒன்றுமே விட்டு விடாமல் அனைத்தும் அந்த பையில் இருந்தன . கண்களில் கண்ணீர் கங்கையாக பிரளயம் எடுத்தது . அவனிடம் கெஞ்சினார் தன்னையும் அதே இடத்திற்கு கூட்டிச்சென்று கண்ணனை தனக்கும் காண்பிக்க வேண்டினார் . அந்த திருடன் அவரை அதே இடத்திற்கு அழைத்துச் சென்றான் - அதே மாலை பொழுது - இருவரும் ஒரு மரத்தடியில் , கண்ணன் வரவிற்காக !! சிறிது நேரம் சென்றது - திருடன் துள்ளிக் குதித்தான் - அதோ என் கண்ணன் --- அவனுடன் வருவது அவன் அண்ணன் பல ராமன் ........ பெரியவருக்கு யாருமே தெரியவில்லை - கண்ணை கசக்கிக்கொண்டுப்பார்த்தார் - கண்கள் சிவந்துதான் மிச்சம் - கண்ணன் தெரியவில்லை -- அவனுடைய மதுர கானமும் கேட்கவில்லை ----- அவருடைய அமைதி அவரிடம் இருந்து விடைப்பெற்றது -- புலம்பினார் --- " கண்ணா - நீ ஓர வஞ்சனைக்காரன் - உன் பாகவதத்தை ஒரு நாளும் நான் விடாமல் எல்லோருக்கும் சொல்கிறேன் - நீயோ ஒரு திருடனுக்கு காட்சி கொடுக்கிறாய் ! என்ன நியாயம் கிருஷ்ணா ?? "

    கண்ணன் கனவிலே வருகிறான் --- " நான் என்றுமே ஓர வஞ்சனை செய்பவன் அல்ல -- நீ பாகவதத்தை வெறும் கதையாகவே நம்பினாய் - அதை கதையாகவே சொன்னாய் - அதனால் உனக்கு நான் என்றுமே ஒரு கதையாகவே இருப்பேன் ... மாறாக அந்த திருடன் உன் கதைகளை கதைகளாக நம்பாமல் உண்மைகள் என்றே நம்பினான் - அவன் நம்பிக்கையை நான் எப்படி மோசம் செய்ய முடியும் ??"

    நம்பிக்கை வேண்டும் என்பதை உறுதி செய்யும் சம்பவம் இது . "தெய்வம் என்றால் அது தெய்வம் ! வெறும் சிலை என்றால் அது சிலை தான் !!" உண்டு என்றால் அது உண்டு ! இல்லை என்றால் அது இல்லை !! - கண்ணதாசனின் அருமையான வரிகள் ----

    ( தொடரும் )

  9. Likes madhu, eehaiupehazij liked this post
  10. #3155
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பக்தி

    பகுதி 3.

    இறைவன் இருக்கின்றானா ? - கேள்வியும் பதிலும்


    இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கிறான் - அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?



    ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒரு சுவாரஷ்யமான நிகழ்ச்சி. இப்பாடலை பாடவந்த T.M.S, கண்ணதாசனின் ஒரு சொல்லைக்கண்டு அதிர்ந்தார். அவன் (கடவுள்) காதலித்து வேதனையில் சாகவேண்டும் என்பது கவிஞர் வரி. பாட மறுத்தார் T.M.S. உடனடியாக கவிஞர் அழைக்கப்பட்டார். எவ்வளவு எடுத்துக் கூறியும் T.M.S, கடவுளை சாகவேண்டும் என பாடமாட்டேன் என்றார். அதன்பிறகு "வாடவேண்டும்" என மாற்றிக் கொடுத்தார் கவிஞர். ஒரு இடையூறும் இல்லாமல் ஒரே தடவையில் டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. பணம் என்றால் பிசாசுபோல் அலைவர் இக்கால கலைஞர்கள். ( இணைய தளத்திலிருந்து -----)



    உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி

    மயங்க வைத்த கன்னியர்க்கு
    மணம் முடிக்க இதயமில்லை
    நினைக்க வைத்த கடவுளுக்கு
    முடித்து வைக்க நேரமில்லை


    உனக்கெனவா நான் பிறந்தேன்
    எனக்கெனவா நீ பிறந்தாய்
    கணக்கினிலே தவறு செய்த
    கடவுள் செய்த குற்றமடி
    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதை தவிக்க விட்டான்
    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி



    இந்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்த சில திரைப்பட பாடல்களை நாளை பார்ப்போம் !!

    ( தொடரும் )

  11. Likes eehaiupehazij liked this post
  12. #3156
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மதுஜி ! சி க !!
    இதற்குப் பேர்தான் 'கோடு போட்டால் ரோடு' என்பதா !?
    கருத்துப் பரிமாறல்களால் திரியின் மாட்சிமையும் பதிவர்களின் மாண்பும் அதிரி புதிரி மேன்மை அடைகிறது !!
    தங்குதடையற்ற கருத்துக் கோர்ப்புக்கு நன்றிகள் !
    செந்தில்

    புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ....அஞ்சுக்கு பின்னாலே வந்த பிள்ளை.....

    Last edited by sivajisenthil; 29th August 2015 at 02:44 PM.

  13. Likes madhu liked this post
  14. #3157
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எண்ணற்ற தமிழ்த் திரை மதுர கானங்களில் எண்களின் ஆதிக்கம் !!
    எண் 7

    வானவில்லின் வண்ணக் கற்றைகள் ஏழு VIBGYOR ! ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் !உலக அதிசயங்கள் ஏழு !ஸ்வரங்கள் ஏழு ச ரி க ம ப த நி! உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களாமே!

    மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் ஏழுமலை தாண்டி ஒரு குகைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வாலின் தலையில் இருக்குமாமே!

    ஏழு எல்லோராலும் விரும்பப் படும் ஒற்றர்திலகம் ஜேம்ஸ் பாண்டின் தொழில்ரீதியான அடையாளக் குறியீட்டு எண் OO7!

    இரண்டு கண்களோடு மூன்றாவதான ஞானக்கண் போல மனிதரின் ஆறாவது அறிவையும் தாண்டி ESP புலனறிவான ஏழாவது அறிவே அவரை புகழுச்சிக்கு
    இட்டுச்செல்கிறது!!


    ஏழுகடல் சீமை..... அதை ஆளுகின்ற நேர்மை.... எங்க ஊரு ராஜா ....தங்கமான ராஜா



    ஏழு ஸ்வரங்களுக்குள் ....

    Last edited by sivajisenthil; 29th August 2015 at 03:23 PM.

  15. Likes raagadevan liked this post
  16. #3158
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில் சார் - ஒரு ஆச்சரியத்தை கவனித்தீர்களா - " SENTHIL " - இந்த பெயரும் 7 letters யை உடையது . இதனால் 7 என்ற எண்ணிற்குத்தான் எத்தனை பெருமை , கர்வம் - இந்த ஒரே விஷயத்தில் மற்ற எல்லா எண்களையும் தன் மேல் பொறாமை பட வைத்து விட்டதே !!!

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  18. #3159
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை ??


  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  20. #3160
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழு மலை வாசா , எம்மை ஆளும் ஸ்ரீனிவாசா - எந்நாளும் துணை நீயே ஸ்ரீ வெங்கடேசா !!!


  21. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •