Page 300 of 400 FirstFirst ... 200250290298299300301302310350 ... LastLast
Results 2,991 to 3,000 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2991
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு, மது
    மரத்தை வெச்சவன் தண்ணியே ஊத்துவான் பாடல் எதிரொலி படத்தினுடையது. விஜயலலிதாவுக்கு இரண்டு பாடல்கள். திரையரங்கு அல்லது விநியோகஸ்தர்களின் புண்ணியத்தில் பல ஊர்களில் நீக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். ஒரு வேளை ஏதாவது பிரதியில் இருந்தாலும் இருக்கலாம்.
    நன்றி ராகவேந்திரன் சார் மரத்தை வச்சவன் பாடல் விளக்கத்துக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2992
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    நீலவானம் / நில்கவனி காதலி ..நீச்சல் குள நீராடல்கள் போட்டிருக்கலாம்தான்.... விடியோ கட்டுப்பாட்டுக்காக விட்டுவிட்டேன்!! மூன்றெழுத்து ஷவர் விடியோவும் கிடைக்கவில்லை! பட்டணத்தில் பூதம் ரொம்பக் கவர்ச்சியாக
    இருந்ததால் கூச்சப் பட்டு கண்ணை மூடிக் கொண்டேன் !
    எல்லோரும் சேர்ந்து என்னை பெஞ்ச் மேல் ஏற்றுவதற்குள் குளியல் விடியோஸ் குளோஸ்டு!
    அடுத்த கான்செப்ட் நம்பர் பாட்டுக்கள் !! ஏற்கனவே பதிவுகள் இருந்தால் விட்டுவிடுகிறேன்!!

    Teaser for Number 1

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ....பாடுகிறார் உலகின் நம்பர் 1 நடிப்புச் சக்கரவர்த்தி!

    Last edited by sivajisenthil; 26th August 2015 at 06:49 PM.

  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  5. #2993
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார், மதுண்ணா!



    'மரத்தை வச்சவன்' பாடல் மேஜர் சுந்தர்ராஜனிடம் விஜயலலிதா பாடுவதாக வருவது போல.

    'காரோட்டும் மாமா
    காக்கிச் சட்டை மாட்டிகிட்டு சைடு காட்டிகிட்டு
    காரோட்டும் மாமா'

    என்று கேட்பது டாக்சி டிரைவரான மேஜரிடம்தான் கேட்கப்பட வேண்டும். எனக்கு ரொம்ப ரொம்ப லேசாகத்தான் நினைவில் இருந்தது. பாடலைக் கேட்டவுடன் 'டக்' என்று ஞாபகம் வந்து விட்டது.

    இந்தப் பாடலை வழங்கிய பேராசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இதோ முழுப் பாடல் வரிகளும் அனைவருக்காக. முக்கியமாக மது அண்ணாவுக்காக.

    மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
    மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா
    இதில் மறைஞ்சிருக்கிற ரகசியத்த நீ புரிஞ்சுக்க மாமா
    தெரிஞ்சுக்க மாமா... புரிஞ்சுக்க மாமா

    (மரத்த வச்சவன்)

    வயசுக் கோளாறு
    நான் தனியாப் படுத்தா தூக்கம் வரலே
    வயசுக் கோளாறு
    இது சரியாப் போக மருந்தா இல்லே மாமா நீ கூறு
    நீ துணையா வரணும் தருவதைத் தரணும் சொர்க்கம் அது பாரு
    திண்ணை இருக்குது திரையும் இருக்குது தனிச்சிப் பேசலாமா?
    தனிச்சிப் பேசலாமா?

    (மரத்த வச்சவன்)

    காரோட்டும் மாமா
    காக்கிச் சட்டை மாட்டிகிட்டு சைடு காட்டிகிட்டு
    காரோட்டும் மாமா
    நீ சட்டை பண்ணாம சந்தியில் நிற்கிற தேரோட்டலாமா?
    இந்தத் தேரை ஓட்டலாமா
    நான் சொன்னதைக் கேட்டும் நின்னுகிட்டிருக்கே
    அவசரக் கேஸ் மாமா
    மோட்டார் ஓடுது மீட்டர் ஏறுது லேட்டு பண்ணலாமா?
    லேட்டு பண்ணலாமா?

    (மரத்த வச்சவன்)
    Last edited by vasudevan31355; 26th August 2015 at 06:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks madhu thanked for this post
  7. #2994
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எண்கள் நமது கண்கள் /
    எண்ணங்களின் வண்ணங்கள் திரை மதுர கீதங்களாக!

    எண் ஒன்று

    உலகில் பிறந்த எல்லோருமே எல்லா வாழ்வியல் முயற்ச்சிகளிலும் முதல் இடம் அடைவதில்லை ! முயற்சியுடையோரே இகழ்ச்சியடையாது முதலிடம் நோக்கி நகர்ந்தாலும் அந்த இடத்தை அடைந்து நிலையாகத் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்!!

    முதல் படத்திலேயே உச்சப் புகழடைந்து இறுதிவரை உலக நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அந்த இடத்தைத் தக்கவைத்து இன்றும் ரசிக நெஞ்சங்களில் முதல் தர நடிப்பிலக்கணமாகக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் நடிகர்திலகம் உருவகப் படுத்திய வீரபாண்டிய கட்டபொம்மனின் சிரஞ்சீவித்துவம் வாய்ந்த வெற்றியே சாட்சி !!

    நம்பர் ஒன் என்னும் மந்திர எண் மதுர கானங்களில் நடத்தும் இந்திரஜாலம் !!
    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா நடிகர்திலகமே!! எல்லோரும் ஒன்றாயிருக்கக் கற்றுக்கணும் என்ற தாரக மந்திரமுரைத்தவரும் அவரே!
    One and the only One NT!





    வாழ்வில் வெற்றிக்கனி பறித்திட நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சீரிய புரிதலுடன் கூடிய திட்டமிடுதலாக இருத்தல் வேண்டும் என்ற கோட்பாட்டை மிகச் சரியாக நடைமுறைப் படுத்திக் காட்டியவர் மக்கள் திலகம் !

    மக்களைக் கவர பொழுது போக்கு அம்சங்கள் மேலோங்கிய படங்களையே ஜனரஞ்சகமாகத் தந்த போதிலும் தேன் தடவிய மருந்தாக நல்ல கருத்து
    விருந்தையும் புத்திசாலித்தனமாக எதிர்கால தீர்க்கதரிசனத்துடன் நிதானமாகப் படிப்படியாகப் புகுத்தி 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்' என்னும் ஒற்றை மந்திரப் பாடல் காட்சியமைப்பை மூலதனமாக்கி மக்களை ஈர்த்து திரைப்பட நடிகரும் நாடாளலாம் என்பதை உலகுக்கே வழிகாட்டிய ஜாம்பவான்!
    மனிதநேயமிக்க மக்களின் நம்பர் ஒன் அரசியல் சாம்ராஜ்ய மன்னராக இன்றளவும் சிரஞ்சீவித்தனம் குறையாத ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர் MGR கண்ணோட்டத்தில் எண் ஒன்றுக்கான முக்கியத்துவம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'


    Last edited by sivajisenthil; 26th August 2015 at 08:16 PM.

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  9. #2995
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் 4-ன் வெற்றிகரமான 300-ஆவது பக்கம். எவ்வளவு பாடல்கள்! எத்தனை தலைப்புக்கள்! அனைவரின் பங்களிப்பும் அபாரம். வெற்றிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனார்ந்த நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks eehaiupehazij, madhu thanked for this post
    Likes eehaiupehazij, madhu liked this post
  11. #2996
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜீஈஈஈஈஈஈஈ....

    மரத்தை வச்சிட்டு தண்ணியை ஊத்தாம போயிட்டீங்களே ! பாட்டு லிரிக்ஸ் மட்டும்தானே இருக்கு.. வீடியோ அல்லது ஆடியோ...காணலியே ?
    ( மறுபடி என் கண்ணுல கோளாறா ? பேராசியர் ? முத்து நகரத்தவரா ?

  12. Likes vasudevan31355 liked this post
  13. #2997
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்
    தேடித் தேடிக் காத்திருந்தேன்.,
    என்ன சொல்ல.. மெல்லிசை மன்னரின் டாப் டென்னிலும் முதல் இடத்தில் அமரும் பாடல், என்னைப் பொறுத்த வரை.
    இதைப் போல இன்னோர் பாடல் இந்த ஏழேழு லோகத்திலும் இன்னும் ஏழேழு ஜென்மத்திலும் யாராலும் போட முடியாது.
    ஒரு இடத்தில் ஷெனாய் ஒலிக்க அதை அப்படியே தன் குரலில் பின் தொடரும் இசையரசியின் குரல் .... ஆஹா...
    நெஞ்சை நசுக்கிப் பிழிந்து ஜூஸாக்கி நம்மிடமே கொடுத்துப் பருகச் சொல்லி விடுவார்...

    படம் எப்படியோ ஆனால் இந்தக் காட்சி மட்டும் படத்தில் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். சரோவின் நடிப்பிற்கென உள்ள சில படங்களில் இதுவும் ஒன்று.
    அதுவும் பாடலுக்கு முன் வரும் வசனமும் பின்னணி இசையும் நம்மை நெக்குருகச் செய்து விடும்.

    இந்தப் பாட்டிற்கு நான் வெறும் பைத்தியமல்ல.. வெறி பிடித்த பைத்தியம்.. ஒரு லட்சம் தடவை தொடர்ந்து கேட்கச் சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
    நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
    thedi thedi kathirundhen paadalukku thaan mudhal mudhalil KJJoy accordion vasithaar

  14. #2998
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    பேராசிரியர் கந்தசாமி கொடுத்த பாடலை சேமிக்க முடிந்ததே தவிர லிங்க் இல்லை. எனவே நான் Media Fire-ல் இப்போ பாடலை அப்லோட் செஞ்சேன். அதான் வெயிட்டிங். முடிச்சாச்சு. இப்போ கேட்டு ரசிங்க.

    அதற்கு முன் ஒரு டவுட்டு. இதே டியூனில் நான் இன்னொரு பாடலை கேட்ட மாதிரி நினைவிருக்கு. தொண்டையில் நிக்குது. வருவேனா என்கிறது. இல்லை பிரமையா என்றும் அறியேன்.

    'தெரிஞ்சுக்க மாமா... புரிஞ்சுக்க மாமா'

    ரெண்டாம் தடவை வரும்போது அந்த இடத்தில் ஈஸ்வரி குரலில் 'கணக்குப் பண்ணுற?....எதுக்கு நிக்குற?' அப்படின்னு வர்ற மாதிரி ஒரு நெனப்பு. ஆனா நிச்சயமாத் தெரியல. உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருக்கா?

    அதுக்கு முன்னால பாடலை கேட்டு ரசிங்க.

    http://www.mediafire.com/download/u5...+Thanniyai.mp3
    Last edited by vasudevan31355; 26th August 2015 at 08:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks madhu thanked for this post
  16. #2999
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜ்ராஜ் சார்,

    1952-ல் வெளிவந்த 'Daag' (1952) படத்தில் நாயகன் திலீப் குமாருக்கு Talat Mehmood பாடிய அற்புத பாடல் ஒன்று. "Ae Mere Dil Kahin Aur Chal" என்ற அந்தப் பாடல் மிக மிக இனிமையானது.



    இந்தப் பாடலின் டியூனை அப்படியே அடுத்த வருடம் 1953-ல் வெளிவந்த 'பிரதிக்ஞா' என்ற தெலுங்குப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்படத்தின் நாயகன் காந்தாராவ். அவர் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த நேரம். இப்படத்தில் ராஜநாளா, சாவித்திரி, கிரிஜா என்று நட்சத்திரங்கள். காந்தாராவ் குதிரையில் ஏ.எம்.ராஜா குரலில் பாடிக் கொண்டே வருவார். ('சாகினி ஜீவிதம் ஜோருகா'). குதிரைக் குளம்பொலியுடன் 'டடடடா... டடடடா... டடடடா' என்று ராஜா பாடுவது அம்சமாக இருக்கும். அப்போ ரொம்ப பாப்புலர். 'மிஸ்டர் மைசூர்' பட்டம் பெற்ற சுதர்சன் என்ற நபர் இப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

    இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. இதே படம் தமிழிலும் 'வஞ்சம்' என்று பெயரிடப்பட்டு அதே நடிகர்களைக் கொண்டு தமிழிலும் வெளிவந்தது. தமிழிலும் அதே டியூனில்தான் பாடல்.

    "Ae Mere Dil Kahin Aur Chal" ('Daag')



    'சாகினி ஜீவிதம் ஜோருகா' ('பிரதிக்ஞா')



    'துள்ளியே ஓடுமே வாழ்வுமே' ('வஞ்சம்')

    Last edited by vasudevan31355; 26th August 2015 at 09:06 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes eehaiupehazij, rajeshkrv liked this post
  18. #3000
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் வணக்கம் - நான் எடுத்துக்கொண்ட ஒரு சிறு முயற்சியில் இது கடைசி மையில் கல் . பலர் இந்த திரியில் முன்னம் பதிவிட்டதை மறந்திருக்கலாம் - பல குளியல் காட்ச்சிகள் , தலையணிகள் இவைகளின் நடுவே இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புவதும் தவறாக இருக்கலாம் . ஆயிரம் கரங்கள் நீட்டி என்று ஆதவனை வரவேற்றோம் , பிறகு கருக்குள் கருவாக நம் பெற்றோர்களை பூஜித்தோம் - மனைவியின் பெருமைகளை வாழ்த்த்தினோம் , பிறகு நட்பு எவ்வளவு முக்கியம் , எல்லோருக்கும் நன்றி சொல்வது எவ்வளவு அவசியம் என்பதையும் ஒரு சிறு தொடர் மூலமாகப்பார்த்தோம் . மாதா , பிதா , மனைவி , நண்பன் ---- இந்த வரிசையில் அடுத்து ( கடைசி ) நாம் வணங்கப்போவது குரு , டீச்சர் , ஆசான் - எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் . இந்த பிரத்யேக பதிவுகளை திரு ராஜ் ராஜ் , திரு கோவை சிவாஜி செந்தில் , திரு செல்வகுமார் , மற்றும் teaching இல் நாட்டம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் . திரு ராஜ் - "திரையில் பக்தி " என்ற பதிவைத் தொடர்வதால் நான் வரிசையில் கடைசியாக வரும் " தெய்வத்தை " பற்றி பதிவுகள் போடப்போவதில்லை .

  19. Likes madhu, eehaiupehazij, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •