Page 296 of 400 FirstFirst ... 196246286294295296297298306346396 ... LastLast
Results 2,951 to 2,960 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2951
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2952
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ராஜேஷ் ஜி,

    பக்திப் பாடல்கள் வரிசையில் 'ஜகம் புகழும் புண்ணிய கதை' ஒலி-ஒளி காட்சிக்கு நன்றி. இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப் படப் பாடல் என்று நினைத்ததில்லை. அருமை. முடிந்தால் லவ-குசா திரைப் படம் பார்க்க வேண்டும். முயற்சிக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லுவது - 'இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை' - என்பது உண்மைதான். நன்றி. நன்றி. நன்றி.
    Last edited by kalnayak; 25th August 2015 at 02:58 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #2953
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?

    வா காதல் செய்து பார்ப்போம் பாட்டைப் பாடிக்கொண்டேதான் மச்சி பாட்டைக் கண்டுபிடித்தேன்.. ஆஹா... இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. என் மனசுல தோன்றுவதை எல்லாம் நீங்க சொல்லிடுறீங்க...

    அடுத்ததாக.. தேடித் தேடிக் காத்திருந்தேன் பல்லவியை எப்போது கேட்டாலும் அல்லது நினைத்தாலும் கூட ஏதோ ஒரு சோகம் கலந்த சுகம் தொண்டைக்குள் வந்து நிற்கும். நீங்களும் அதையே எழுதி இருப்பதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

    ம்ம்ம்... இப்போ அடுத்த டவுட்டையும் வச்சிடறேன்.

    நம்ம ராட்சசி பாடிய மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா.. இதில் மறைஞ்சிருக்குற ரகசியத்தை நீ புரிஞ்சுக்க மாமா என்ற பாடல் பற்றிய விவரங்கள் ப்ளீஸ்..

  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  7. #2954
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!

    வீரபாண்டிய கட்டபொம்மன் சூப்பராகக் கலக்கி பட்டையைக் கிளப்பிக் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கொண்டாட்ட வேளையில் !

    குயில் 1 :
    நடிகர்திலகம் ஜெயில் பறவையாக.....கூண்டுக்கிளியாக!!

    சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
    சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
    பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
    அதிக அளவில் சிறை வாழ்க்கையை திரையில் அனுபவித்ததிலும் நடிகர்த்திலகத்திற்கே முதலிடம் !!
    புதிய பறவை தவிர ஏகப்பட்ட படங்களில் நடிகர்திலகம் செய்யாத குற்றத்திற்குத்தான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !!
    ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
    ஆரம்பம் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே ...

    ஜெயில் 1 / குயில்1 பலே பாண்டியா!

    ஆள் மாறாட்டத்தில் யாரை எங்கே வைப்பது என்பதில் சட்டத்தின் ஓட்டையால் நீதிதேவன் கோட்டை விட்டதால் நடிகர் திலகமும் கொஞ்ச காலம் சிறையில் குறட்டை விட நேரிடுகிறது !!
    விரக்தியில் சக சிறைத்தோழர்களும் கைகோர்த்துக் கலக்கும் கருத்தாழமிக்க ஜெயில் குயிலிசை!!




    ஜெயில் 2 / குயில் 1 சரசுவதி சபதம்
    ஈகோ தலையெடுத்ததால் அல்லிராணி தன்னைப் புகழ்ந்து பாட மறுத்த புலவர் பெருமகனை ஜெயிலில் தள்ள இதற்க்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத நடிகர்திலகம் காவலர் தலைவர் நாகேஷும் கால் தடுமாறி ஆடும் வண்ணம் ஒரு குயிலிசைப் பாடலை புயலிசையாக வீசுகிறார் !



    ஆனாலும் கதாநாயகர்களாயிற்றே தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று உணர்த்தி விடுதலை ஆகி விடுவார்கள்
    Last edited by sivajisenthil; 25th August 2015 at 09:16 PM.

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  9. #2955
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி...

    காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?
    மதுண்ணா!

    தன்யனானேன். மகிழ்ச்சி.

    அதேதான். நீங்கள் எடுத்த 'காரியம் முழுதும் வெற்றி'தான். உங்களோடு எனக்கும் சேர்த்து.

    காரியம் முழுவதும் வெற்றி
    ஆஹா... காதல் கொண்டாள் குட்டி
    கல்யாணம் ஆகட்டும்
    கையில் அணைப்பேன் கட்டி

    (இப்ப வரும் பாருங்க ஜாலி வரிங்க)

    அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
    சிரித்த முகம் படு சுட்டி

    ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
    சிரித்த முகம் படு சுட்டி

    (அப்போ இந்த ரெண்டு வரிகளும் ரொம்ப பாப்புலர் மதுண்ணா! இதையேத்தான் பாடிக் கொண்டிருப்பேன்.)

    தாடி தடுத்தாலென்ன
    மீசை மறைத்தாலென்ன
    என்னை சங்கர சம்போ சாமி
    இவன் என நினைத்தாலென்ன

    பட்டுப் பாவாடையும்
    கட்டும் மேலாடையும்
    தொட்டுத் தாலாட்டினால்
    சிட்டு தானாடுமே

    (அட ஜில்ஜில்)

    கட்டி இழுக்காவிட்டால்
    பட்டம் பறக்காதம்மா
    ஒரு கட்டிலும் மெத்தையும்
    இல்லாவிட்டால் சுவைக்காதம்மா
    மஞ்சள் நூல் வாங்குவேன்
    கொஞ்சம் பொன் வாங்குவேன்
    மஞ்சம் நான் வாங்குவேன்
    நெஞ்சில் அவள் தூங்குவாள் (இன்னா ஒரு ஆசை!... கனவு!)

    (ஜில்ஜில்)

    பாடல் பாதிதான் ஞாபகத்தில் இருந்தது. எடு சி.டி பக்கெட்டை. தேடு. எப்படியோ ஒருவழியா சேமிப்புக் கிடங்கிலிருந்து தூசி தட்டி எடுத்துட்டேன். பாடல் வரிகளை விட மனசு வரல. அதான் பாட்டைக் கேட்டுகிட்டே டைப் அடிச்சுட்டேன். ரேர் சாங் வேற. உபயோகப் படட்டுமே! உங்க பாணியிலயே ஒரு ஹி ஹி யும் போட்டுடறேன்.

    'பாடகர் திலகம்' இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவாரே.


    அப்புறம் மதுண்ணா!

    ராட்சஸி கோஷ்டியுடன் 'அத்தைக்கு மீசை வச்சி' ஸ்டைலில் ஒரு பாடல் பாடுவாரே!

    இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
    நொண்டி நொண்டி ஓடிவரும் மக்குப் பொண்ணப் பாரு
    ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
    ஹோ ஹோ ஹோ டட்டட்டா

    நாத்தனாரைப் பாரடி
    காலைக் கொஞ்சம் வாரடி
    நாலு பக்கம் கூடடியோ

    (இப்போ இங்கே ஒரு அமர்க்களம் நடக்குமே!.... ஈஸ்வரி இடைவிடாமல் முழங்குமே!)

    அடி வாடி...பூக்காரி....ராஜாத்தி....என் கண்ணு....என் முத்து...ஒரு காலு.... நீ வாங்க வந்தியா?

    இந்தப் பாட்டும் 'சிரித்த முகம்'தானே மது அண்ணா?


    அடுத்தது

    டி.எம்.எஸ். பாடும் இன்னொரு பாடல்

    இதுவும் 'சிரித்த முகம்' படப் பாடல்தானே? இதுவும் கேட்க சூப்பராவே இருக்கும்.

    எந்தன் பேரு கோமாளி
    நான் எல்லோருக்கும் ஏமாளி
    ஏனோ வந்தேன் பூமியில் நானும்
    இறைவனிடத்தில் வாதாடி

    நல்லது நடக்குது தள்ளாடி
    கெட்டது போகுது முன்னாடி
    நல்லது கெட்டது தெரியா உலகில்
    நானும் வந்தேன் ஆத்தாடி
    நானும் வந்தேன் ஆத்தாடி

    (எந்தன் பேரு)

    அவன் புத்தியில் படைத்தது மண்ணு
    போதையில் படைத்தது பொண்ணு
    பொண்ணு... பொண்ணு... பொண்ணு
    மத்தியில் கிடந்து மயங்கட்டும் என்று
    மனிதர்க்கு வைத்தது கண்ணு
    மனிதர்க்கு வைத்தது கண்ணு
    ஆத்தாடி

    (எந்தன் பேரு)

    ஹா ஹா ஹா ஹா
    ஹா ஹா ஹா ஹா

    அறிவிருக்குது எனக்கு
    அழகிருக்குது ஒனக்கு
    இரண்டும் உள்ள பிள்ளை பிறக்கும்
    திருமணமானால் நமக்கு
    திருமணமானால் நமக்கு

    (எந்தன் பேரு)

    சிங்கப்பூர் சீமானின் 'எம் பேரு ஜோக்கர்' பாட்டு உடனே நினைவுக்கு வருது.

    இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது மது அண்ணா! நிறைய பேருக்குத் தெரியாத அற்புதமான பாடல்களையெல்லாம் எடுக்க வச்சுட்டீங்க. தேங்க்ஸோ தேங்க்ஸ் உங்களுக்கு. அப்புறம் இன்னொரு வேலை கொடுத்து இருக்கீங்க. அதை வேற பார்க்கணும். அதை நெனச்சாலே 'டக்'குன்னு 'தாய்' படத்தின் 'சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சுக்க மாமா...கொஞ்சம் சிங்காரமா உன் மனச விரிச்சுக்க மாமா' உள்ளே ஓடுது. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்?
    Last edited by vasudevan31355; 25th August 2015 at 06:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes kalnayak, rajeshkrv, madhu liked this post
  11. #2956
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
    வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...

  12. #2957
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    இப்போ கேட்டுட்டு அப்புறம் நினைவுக்கு வருதான்னு சொல்லுங்க.

    http://www.mediafire.com/download/qt...atti+Vacha.mp3
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2958
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி...

    எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
    வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...
    கற்பூரமே இப்படி சொன்னா வாழை மட்டை நான் என்ன சொல்றதாம்?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2959
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நீங்க காய்ஞ்ச கட்டை நான் ஈரமான கற்பூரம்னு வச்சுப்போம் வாசுஜி.. ( கவனிக்க.. நான் வாழைன்னு சொல்லலைந்.. சந்தனக் கட்டைனு சொல்றே )

    ஜில் ஜில் மேனி பாட்டை முழுசா பாடிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதே ஸ்டைலில் வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்திலிருந்து

    நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை..
    கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா
    நீ காட்டுக் குட்டி நான் ஒரு காடு வெட்டி
    நீ பாட்டி வேஷம் போட்ட போதும் காதல் உண்டம்மா

    அப்படின்னு டி.எம்.எஸ் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது.

    அதையும் ரசிப்போமே


  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  16. #2960
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நிச்சயமாக. அதை மறக்க முடியுமா? போட்ட புள்ளியை நெஞ்சிலிருந்து அகற்ற முடியாதே. ஆனந்தமாக ரசித்துவிட்டு இதையும் ரசிப்போம். அதே போல இன்னொரு பாட்டு. அதே ஜெய். உஷாவுக்கு பதிலாக உப்பிய விஜயா. ஆனால் பிளாக் அண்ட் ஒயிட்.

    பொன்னா? இல்லை பூவா?
    கண்ணா? இல்லை மீனா?
    பொட்டு வச்சக் கட்டழகு
    கட்டி வச்ச மொட்டழகு
    ரெண்டு கண்ணு போதாது அம்மா
    முத்து முத்துப் பல்லழகு
    மூடி வச்ச முன்னழகு
    தந்த பசி தீராது சும்மா

    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes kalnayak, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •