Page 289 of 400 FirstFirst ... 189239279287288289290291299339389 ... LastLast
Results 2,881 to 2,890 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2881
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சி.செந்தில்.. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி)
    Request or challenge?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2882
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாரதர் சீஸன்லாம் முடிஞ்சுடுத்தே.. அமெரிக்கால்லருந்து நாராயணான்னு கொரல்கேக்கறதே

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #2883
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandii 50 - Veera Pandiya Kattabomman (1959)

    Quote Originally Posted by kalnayak View Post
    ராகவேந்திர அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் மகிழ்ச்சியில் இருக்க
    To make Raghavendra happier here is a song from Veera Pandiya Kattabomman

    anjaadha singam en kaaLai.....



    From the Hindi dubbed version Amar Shaheed

    alhad mera jawan jaage

    Last edited by rajraj; 22nd August 2015 at 10:08 PM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. Likes kalnayak, Russellmai, eehaiupehazij liked this post
  8. #2884
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றுவிடும் சி க !
    வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!
    படங்காட்டுவதை நிறுத்திவிட்டு இனி உங்களோடுதான் ரேஸ் ! சரியான ட்ராக்கில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி!!
    சிரிக்கும் கண்ணனை சீரியஸ் கண்ணனாக்கி விடமாட்டேன்!! என்ன...ஒரு 3000 தாண்டினபின்னால் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்....
    Last edited by sivajisenthil; 22nd August 2015 at 10:49 PM.

  9. Thanks raagadevan, chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  10. #2885
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சி.செந்தில்.. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி)
    Request or challenge?


    கூடலில் முடியும் ஊடல் / Building Strong Basement Weak!!

    பகுதி1
    குளிர் நிலவு நெருப்பாகி மலரே முள்ளாகும் காதல் களம்!

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் / போலீஸ்காரன் மகள் (1962)

    காதல் களம் வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்க்களத்தை விட சவால்கள் நிறைந்ததே ! போர்க்களத்தில் எல்லாமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்!!போர்க்கள எதிரிகள் நிஜ உலகில் கண்ணுக்குத் தெரிந்தவரே! காதல்களமோ கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை காரணிகள் மலிந்த மாயா லோகம்!

    நெஞ்சிலே பாயும் வேலுக்குக் கூட அஞ்சாத வீரனும் வேல்விழியாளின் ஊடலம்புக்கு நெஞ்சம் நடுங்கி விடுவானே !!பெண்ணின் மேல் ஆணாதிக்கம் மற்றவர் கண்கட்டும் தந்திர வித்தையே ! தனிமையிலோ பெண்ணாதிக்கத்தின் முன்னே (Body) Building strong ஆன ஆணின் Basement Weak தான் ! அவ்வாறே கடலை விட ஆழமான புதிரான பெண்ணின் ஊடல் வெளிப்பாடும் ஆணின் கூடல் வேண்டியே!!

    போர்க்களத்தில் ஒருவர் ஜெயிக்க ஒருவர் தோற்றே ஆகவேண்டும் ..ஆனால் காதல் களத்தில் போட்டியிடும் இருவருமே வெல்வதுதான் உளவியல்ரீதியாக நமக்கு உறைக்கும் உண்மை நிலைப்பாடு !

    போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இந்தக் கோட்பாட்டை மிக அழகாக பாலாஜி புஷ்பலதா பங்கு பெரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் வாயிலாக பி பி ஸ்ரீனிவாசின் ஜெமினிக் குழைவில் மெல்லிசை மன்னர்களின் இசைத் தென்றலில் உயிர்ப்பான காட்சியாக நமது விழிகளுக்கு வெண்திரை வாயிலாக விரியச் செய்திருப்பார் !
    காதலிக்கும் தெரியும் காதலனுக்கும் புரியும் மங்கையின் ஊடல் மன்னனின் காதல் ஆழத்தை சோதித்திடவே என்பது! காதல் வயப்படும்போது கனவுலகில் சஞ்சரிக்கும் போது காதலன் காதலியின் ஊடலால் மெர்சலாகி அவள் குளிர் நிலவாக இருந்தாலும் ஊடலின் வெப்பம் உணர்கிறான் அவள் மிருதுவான சுகந்த மலராக இருப்பினும் கூரான முள் குத்துவதாக கசந்த உணர்வை அடைகிறான்

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ..நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் ..முள்ளாய் மாறியது...
    கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்.....கனலாய் காய்கிறது
    உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்.. கணையாய்ப் பாய்கிறது!


    காதல் களம் போர்க்கோலம் பூணுவது போன்ற பிரமையை கவியரசர் உருவாக்குகிறார் ....

    Follows :
    பகுதி 2 : காதல் கள பனிப்போரில் காதலியைக் கவிழ்த்திட காதலனின் சாம பேத தான தண்ட அணுகுமுறைகள்

    இந்த ஊடல் பனிப்போர் எப்படி கூடல் வெற்றியாக இருபக்கமும் முடிகிறது என்பதைத் தொடர்வோம் ...சிக வாசு ராகவேந்தர் கல்நாயக் ரவி ராஜ்ராஜ் மது ராகதேவன் உள்ளிட்ட இத்திரியின் பதிவு வேந்தர்கள் எனது இந்த கன்னி முயற்சியான விரிவுப்பதிவை படங்காட்டாமலே என்னாலும் போட முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதித்தால்.....


    அன்புடன் செந்தில்
    Last edited by sivajisenthil; 23rd August 2015 at 12:16 AM.

  11. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, chinnakkannan liked this post
  12. #2886
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆசிகள் சொல்வதற்கு ஞான் மிகச் சின்னவன் சி.செ. வாழ்த்துகள்.. எழுதுங்கள்.. ( நாளை ஒர்க்கிங் டேயின் முதல் நாள் எனில் என்னால் வர இயலாது எனில் தூக்க நாயகி கண்ணா வா வா என ஆவலாக இருகரம் நீட்டிச் சிரிமுகம் காட்டி தவழ்ந்து வந்தாலும் ஒதுக்கி உங்களை வாழ்த்துகிறேன்..)

    உந்துதலும் வெறிசேர்ந்தால் என்ன ஆகும்
    ...உணர்வுடனே துரிகையில் கற்ப னைகள்
    விந்தையெனக் கரங்களிலே வண்ண மெல்லாம்
    ...வித்தையுடன் சரம்சரமாய் தீற்றி விட்டே
    சிந்தையினைக் கொள்ளைகொளும் ஒவி யம்போல்
    ..சிற்பங்கள் போலிங்கே எழுதும் நீவீர்
    கொந்தளிக்கும் அலைகடலாய்ப் பெருகி இங்கே
    ...கோட்டைபல பிடிக்கட்டும் செய்யும் நீரே..

    ..

    முந்தானை பிடித்தங்கே மோகத்தில் காதலியை
    சொந்தங் கொளநினைத்தே சோர்விலாமல் - சிந்தையில்
    காலாடி எண்ணங் கனலோடிப் பாடியவர்
    பாலாஜி என்றே பகர்...

    குலுங்கும்முந்தானை சிரிக்கும் அத்தானை
    மிரட்டுவதேனடியோ

    ம்ம் புஷ்பலதாவின் மயக்கும் விழிகளுடன் மல்லாடும் பாலாஜி.. நைஸ் தான் இல்லியா செந்தில்

    பூடகமாய்க் கோபமும் புன்சிரிக்கும் உள்ளமென
    ஊடலிலே காட்டும் உணர்வு

    என்று புஷ்பலதாவும் கொஞ்சம் ஓ.கே தான் இல்லியோ..

    என்ன பாலாஜியின் அத்தைமகள் புஷ்பலதா.. பாலாஜி கள்ளப் பையர்.. படத்தில்.. விஜயகுமாரியை லவ்ஸ் விட்டு புஷ் ஷைசைடில் சைட் அடித்து நைச்சியம் பண்ணுபவர்.. தெரியாதா என்ன உமக்கு..

    இருப்பினும் பாடல் சிச்சுவேஷன் சொல்லி மெட்டும் பாடலும் செய்வித்ததில் எதுவும் முடிவதில்லையே

    அழகாய்ப் படம்பிடித்த டைரக்டரும் நடித்த பாலாஜி புஷ் தானே பெசப்படுகிறார்கள்..இவ்வளவு ஆண்டு காலமாகியும்..

    ஆமாம்..ஊடல் சிறு மின்னல்னு ஒருபாட்டும் இருக்கு ஓய்..அதைப்பற்றியும் எழுதும்..

    தொடர்போட தானே எழுதறேன்..கண்ணுக்குள்ள நித்ரா வந்துட்டாங்காணும்.. தொடருங்கள்.அசத்துங்கள்..மீட் யூ டுமாரோ நைட் இன் த மூன் லைட்.. நாளைக்கு ஈவ்னிங் வர்றேன்னு சொன்னேன்...
    Last edited by chinnakkannan; 23rd August 2015 at 01:43 AM.

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij liked this post
  14. #2887
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் .......தொடர்கிறது....பகுதி 2

    இப்படத்தில் ஜெமினிதான் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் !
    ஆனால் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் எதிர்மறை விளைவுகள் கருதி காதல் மன்னர் வளர்ந்து வந்த பாலாஜிக்கு பொருந்தி வரும் என்பதாக ஸ்ரீதரிடம் கூறி பாலாஜிக்கு உதவினார் என்று கேள்வி. இதேபோல எதிர்மறை குணாதிசயம் படிந்த படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா திரைப் படங்களிலும் ஜெமினி பாடல்களைப் பாடி நடிக்கும் அதிர்ஷ்டம் பாலாஜிக்கு அடித்தது. ஸ்ரீனிவாசின் குரல் ஜெமினிக்கு அப்புறம் பாலாஜிக்கும் முத்துராமனுக்கும் ரவிக்கும் நன்றாகவே பொருந்தியது !! பாலாஜியும் தனது நன்றியறிதலை அண்ணாவின் ஆசை திரைப்படத்தில் ஜெமினியை நாயகனாக்கி வெளிப்படுத்தினார். பின்னாளில் பாலாஜி நடிகர்திலகத்தின் ஆஸ்தான தயரிப்பாளரானது தனிக் கதை. உனக்காக நான் படத்திலும் பாலாஜி நடிகர் திலகத்திற்கு இணையான பாத்திரப் படைப்பில் ஜெமினியைப் பொருத்தினார்


    போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் விஜயகுமாரியை ஏமாற்றிவிட்டு புஷ்பலதாவை அடைய முயலும் கேரக்டரில் நன்கு பொருந்தினார் பாலாஜி!
    விஷயம் தெரியாது அவரை விரும்புவார் புஷ்பலதா இப்பக்கக் காதலில் ஒரு ஊடல் சூழலில் பாலாஜி புஷ்பலதாவின் மனம் கவர போடும் சாம பேத தான தண்ட பிட்டுக்களை அருமையான பாடல் வரிகளாக்கியிருப்பார் கவியரசர் பாலாஜியின் மலரும் நினைவுகளில் புகழ் பெற்ற பாடலாயினும் இன்றும் கண்ணை மூடிக் கேட்கையில் ஜெமினி பாடலாகவே உணரப்படுகிறது !


    இந்த சூரிதார் துப்பட்டா கால மாற்றத்தில் குலுங்கும் முந்தானை அத்தான் பொத்தான் எல்லாம் மறக்கப் பட்டுவிட்டதே !

    குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுவதேனடியோ
    உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
    இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக பாடல் வரிகள் முன்னேறி ...
    சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு ...உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு... என்று பெரிய ஐஸ் கட்டியை புஷ்பலதா என்னும் டைடானிக் கப்பலின் வேகப் பாதையில் தடைப் பாறையாகப் போடுகிறார் பாலாஜி !

    திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான்தானே என்ற உத்தரவாத முத்தாய்ப்பில் கவிழுகிறார் புஷ்பலதா !!

    ஸ்ரீதரின் எந்தப் படத்திலும் பாடல்கள் சோடை போனதில்லை போலீஸ்காரன் மகளும் மிக இனிமையான இசைக்கோர்வையில் காலத்தை வென்று இன்றும்
    தேனிசை மதுரங்களாய் உலவிக்கொண்டிருக்கும் பாடல்களை உள்ளடக்கியதே! ராண்டார் கை Blast from the Past பாணியில் சொல்வதென்றால் the film did not fare well at the box office !

    ஏன் இந்தப் பாடல் காட்சியமைப்பை நான் சிலாகிக்கிறேன் என்றால் .....
    எனது கல்லூரிப் பருவத்தில் எங்கள் ஆர்கெஸ்ட்ராவில் ஜெமினியின் ராஜா / ஸ்ரீநிவாஸ் குரல்களுக்கு நான் மைக் முன்னணிப் பாடகனாக இருந்தேன்!!!
    பாட்டுப் பாட வா, நிலவே என்னிடம், மயக்கமா கலக்கமா......நான் விரும்பிப் பாடியவை...வெறும் பாத்ரூம் சிங்கிங் பிராக்டிஸ்தான்!!
    அவ்வப்போது கொஞ்சம் காற்று வாங்கப் போனேன், உலகம் பிறந்தது எனக்காக, யார் அந்த நிலவு போன்ற TMS பாடல்களையும் தொட்டுக் கொள்வேன் !
    இந்தப் பாடல்களையெல்லாம் மதுரகான திரி ஜாம்பவான்கள் விலாவரியாக அலசியிருப்பீர்கள்!

    இருந்தாலும் சி க உங்கள் ஆதங்கமும் சரியே ! உங்கள் யானை பலத்தின் முன் நானெல்லாம் மியாவ் மியாவ் பூனைக்குட்டியே! இத்திரியில் எனது எழுத்துத் திரியை சரியாகத் தூண்டிவிட்டு எண்ணெய் ஊற்றி பிரகாசிக்க வைக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் !

    senthil

    பிரிக்க முடியாதது எதுவோ ? செந்திலும் கான்செப்ட் காணோளியுமே!! அப்பத்தானே இது புல் பிளட்ஜ்டு ரைட் அப்!!!

    Last edited by sivajisenthil; 23rd August 2015 at 08:10 AM.

  15. Likes kalnayak, chinnakkannan, Russellmai liked this post
  16. #2888
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வள்ளூஸ் இன்னும் ஒண்ணு சொல்லியிருக்காருங்காணும்..

    நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கண்
    மேற்சென்றிடித்தற் பொருட்டு..

    உமக்குத் தெரியாதா என்ன..

    ஆண் பெண் நட்பு பாட் வேற ஏதாவது இருக்கா.. போடுமேன்/போடுங்களேன்..
    சிக்கா... நான் தமிள்ல வீக்கு.. வள்ளூஸ் சொன்னதுக்கு அர்த்தம் சொல்லுங்க..

    நட்புன்னா அவங்க மேலே போய் இடிக்கணுமா ? அப்புறம் மிக்ஸ்ட் நட்பு பத்தி வேற சொல்றீங்க.. அடி விழப்போகுது.

    ஆளை அறியாமல் மேலே போய் இடித்தால்
    காலை கழட்டிடு வார்

    ( ஹி ஹி.. குரல்.. குரள்.. ம்ம்ம் குறள்தானே... எப்படி இருக்கு ? )

  17. #2889
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!.
    senthil: My sculpting/chiselling days are over! I did it for more than 25 years teaching my engineers how to write a report and how to make a presentation! I am sure some of them asked who is this Indian to tell us how to write?
    I am sure they knew I was trying to help them. I understood that because I was given the nicknames 'walking dictionary' and 'professor'. Those were the days ! If you picked up something from me it is purely accidental !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes chinnakkannan liked this post
  19. #2890
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எல்லோருக்கும் வணக்கம். அத்தனை பேரும் கலக்குறீங்க. கல்ஸ் நண்பா! வாங்க. தோ சென்னை கிளம்பிட்டேன். கட்டபொம்மனை தரிசித்துவிட்டு வந்துடறேன். அதுவரை என் தொல்லை இல்லாம தூள் கிளப்புங்க.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Thanks kalnayak thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •