Page 287 of 400 FirstFirst ... 187237277285286287288289297337387 ... LastLast
Results 2,861 to 2,870 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2861
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சீக்கிரமே கரி மனம் வைரம் ஆகட்டும்.. நிர்வாகம் நல்ல முடிவைத் தரட்டும்.. ஆண்டவன் அருள் சேரும்.//

    நன்றி மது அண்ணா!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2862
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    என்னை சொல்லிட்டு நீங்க எனக்கு தூக்கம் இல்லாம பண்ணிட்டீக உமா ரமணன் பாடலகளைப் போட்டு. எதைக் கேட்பது எதைத் தவிர்ப்பது என்று குழப்பமாகிப் போய் விட்டது. அந்தக் குரலில் ஏதோ ஒரு தனி சுகம் காணலாம். என்ன சொல்லுங்க...'ஆனந்த ராகம் கேட்கும் காலம்' பாட்டுக்குப் பின்தான் அவருடைய எல்லா பாட்டும். 'நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்' வித்தியாசம். சில பாடல்களில் ஜானகிக்கு பதிலா ராஜா இவரை யூஸ் பண்ணியிருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும். சொற்பமான பாடல்களே பாடி விட்டார்.

    ஆனால் 'வெள்ளி நிலவே எனக்குப் பிடிக்காது. பாடலின் சிச்சுவேஷனும் பிடிக்காது. கார்த்திகையும் அந்தப் பாடலில் பிடிக்காது. ஹீரோயினை சுத்தமாகப் பிடிக்காது. பாலா வேறு 'முல்லை மலரே'வை 'முல்லை மலழ்ழே' என்று ஓவரகாப் பண்ணுவார். அவரையும் இந்தப் பாடலில் பிடிக்காது. டோட்டலாவே எந்த அம்சமும் இப்பாடலில் பிடிக்காது. பிடித்தவர்கள் என்னை மன்னித்துக் கொ(ல்)ள்க.

    நன்றியோ நன்றி சின்னா! அருமையான உமா பாடல்களின் தொகுப்புக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes chinnakkannan liked this post
  5. #2863
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , இந்த போராட்டம் உங்களுக்கு வந்த சோதனை அல்ல - எங்கள் எல்லோருக்கும் வந்த சோதனை - நீங்கள் முன் வரிசையில் இருக்கிண்டீர்கள் - அவ்வளவு தான் வித்தியாசம் . எங்கள் பிராத்தனைகளுக்கு வந்த சோதனையாகத்தான் நான் கருதுகிறேன் . இன்னும் எங்கள் வேண்டுதல்களை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் - இறைவனின் செவிகளில் எட்டும் வரை எங்கள் பிராத்தனைகள் தொடரும் - அதற்கு பின்பும் தொடரும் - ஏனென்றால் அவனுக்கு மனமார நன்றியும் சொல்ல வேண்டும் அல்லவா - நம்பிக்கையை கை விடாதீர்கள் - உங்கள் சுக துக்கங்களில் நாங்கள் என்றுமே பங்கு கொள்வோம் ...

  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #2864
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு.. உங்களுக்கு வந்த சோதனை விரைவில் தீர்வதற்கு நான் தினமும் ப்ரார்த்தனை செய்து கொண்டு வருகிறேன்.. விரைவில்.. விரைவில் சரியாகி விடும்..

    எனக்கும் வெள்ளி நிலவே பிடிக்கவில்லை.. செவ்வரளித்தோட்டத்திலே பார்த்தேன்..அதுவும்கண்மூடிக் கேட்கலாம் தான்..

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2865
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒன்றில் இரண்டு - புதிய பதிவு , புதிய எண்ணங்களில் , பழைய பாட்டுக்களுடன் :



    பகுதி 1

    ஒன்றில் இரண்டு ( two in one ) : ஆங்கிலத்தில் " count your blessings " என்று சொல்வார்கள் - உனக்கு கிடைத்துள்ள வரங்களை நீ எண்ண ஆரம்பித்தால் உன் ஆயுசு முடிந்து விடும் " என்பார்கள் . இறைவன் நமக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு வரங்களைத்தந்திருக்கிறார் - நாம் தான் அவைகளை எண்ணிபார்ப்பதில்லை - மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டே இறைவன் நமக்கு கொடுத்த வரங்களை அலட்ச்சியம் செய்து கொண்டிருக்கிறோம் . How much enough is enough ?? என்ற கேள்விக்கு இன்னும் பதில் யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை . இறைவன் நமக்கு அள்ளித்தந்த பரிசுகளில் விலை மதிக்க முடியாதது " நட்பு " - நண்பர்கள் - அந்த நட்பை பற்றிய உயரிய பதிவு தான் இது ...

    இந்த திரியையே எடுத்துக்கொள்வோம் - வெறும் பதிவுகளை மட்டுமே படித்து நட்பை வளர்த்துக்கொண்டுள்ள திரி இது - இங்கு இருப்பவர்கள் கருப்பா , வெளுப்பா , என்ன சாதி ? என்ன மதம் ? எந்த தெய்வத்தை வணங்குகிறார்கள் ? பாங்கில் எவ்வளவு பணம் உள்ளது ? எந்த பதவியில் இருக்கிறார்கள்? , society யில் என்ன மதிப்பு ? - எவ்வளவு தூரம் படித்திருக்கிறார்கள் ? இந்தியாவில் இருக்கிறார்களா இல்லை NRIs யா ?? - இப்படி எந்த கேள்விகளும் நம்முள் இன்று வரை எழுந்ததே கிடையாது -- நல்ல பதிவுகளை மட்டுமே போட வேண்டும் - தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் , தெரியாத கண்ணோட்டத்தில் அலச வேண்டும் , பிறரை காயப்படுத்தும் வகையில் பதிவுகள் இருக்ககூடாது - உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு வரும் பதிவுகளாக இருக்க வேண்டும் - நகைச்சுவைகள் இருக்க வேண்டும் - ஆனால் அவைகள் திரியில் இருப்பவர்களை கலாய்க்கும் வகையில் இருக்க கூடாது - இப்படி பல எழுத படாத சட்டங்கள் , கொள்கைகள் , யாருமே தெரிவிக்காமலே நம்முள் ஊறி விட்டன / ஒன்றி விட்டன . ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்ததில்லை ( சிலர் இதில் விதி விலக்காக இருக்கலாம் ) ஆனாலும் ஒருவருக்கு ஏதாவது பிரச்சனைகள் என்றால் நம்முள் இருக்கும் நிம்மதி நம்மிடம் சொல்லிக்கொள்ளாமலே விடை பெறுகிறது - கைகள் உயர எழுந்து இறைவனை நோக்கி வணங்குகின்றன - சமீபத்தில் மணிவிழா கொண்டாடிய திரு ராகவேந்திரா அவர்களுக்கு எல்லா திரிகளும் ஒன்று சேர்ந்து , தங்கள் கருத்து வேறுபாடுகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு உடனே விரைந்து வணங்கி வாழ்த்தியது இன்னும் நம் மனங்களில் பசுமையாக இருக்கின்றன .

    மது சார் நல்ல உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் - திரும்பவும் திரியில் வந்து , திரியை அலங்கரிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு மனதாக ப்ராத்தனை செய்துகொண்டது நினைவில் பசுமையாக இருக்கின்றன - வாசுவின் பிரச்சனைகள் நம் சிரிப்பை என்றோ நம்மிடம் இருந்து பிடுங்கி கொண்டு விட்டது . CK வின் இந்திய பயணம் வெற்றி அடைய ஒருமனதாக எல்லோரும் வாழ்த்தினோம் -- இப்படி பல உதாரணங்கள் -- சொல்லிக்கொண்டே போகலாம் .

    இப்படிப்பட்ட நண்பர்கள் ஆண்டவன் நமக்கு கொடுத்த இனிமையான வரம் அல்லவா ? இந்த வரத்தை நாம் போற்றி புகழ வேண்டாமா ? இந்த எண்ணம் என் மனதில் பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது - இன்று அந்த எண்ணங்களுக்கு சிறிய வடிவம் கொடுக்கலாம் என்ற ஆசை - அதன் விடைதான் இந்த நன்றி சொல்லும் பதிவு . மாதா , பிதா , குரு , தெய்வம் என்று சொல்வார்கள் - இதை சற்றே மாற்றி சொல்ல வேண்டும் - மாதா , பிதா , மனைவி , நண்பன் , குரு என்று.

    மாதா , பிதா , மனைவி இவர்களை "கருக்குள் கருவில்" சந்தித்து நன்றி சொன்னோம் - பலர் மறந்திருக்கலாம் . இந்த பதிவு நண்பர்களின் முக்கியத்துவத்தை சொல்லும் பதிவு . சிலருக்கு சிலவற்றை கண்டிப்பாக சொன்னால்தான் படிக்கவே நாட்டம் வரும் - அவர்களுக்காக சொல்கிறேன் இதை - சிறிய பதிவுதான் - மெகா தொடர் இல்லை .

    ஆமாம் - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் -?? CK வின் குரல் காதுகளில் விழுகிறது - சொல்கிறேன் ... இந்த பதிவுகளில் துணைக்கு திருவள்ளுவரும் என்னுடன் பயணிக்கிறார் - அதானால் தான் ஒன்றில் இரண்டு என்ற தலைப்பு .

    பகுதி 2

    குறள்கள் - நட்பு

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.


    அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

    நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.


    படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.


    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.


    இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

    ( நட்பு தொடரும் )

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  11. #2866
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.


    இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

    பகுதி 3

    இனி திரை பாடல்கள் , நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பாடல்களை இரசிக்கலாமா ?

    முதலில் ஒரு வீர சிங்கத்தின் கர்ஜனையை மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நல்ல நாளில் , அந்த சிங்கத்திற்கு , தேச பக்தி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்துக்காட்டிய மகானுக்கு , தமிழ் என்னும் மொழி உயர்ந்த ரக தேனில் தோய்க்கப்பட்ட ஒன்று - அதை சொல்பவர்கள் சொன்னால் மட்டுமே அந்த தேனின் இனிமையை அனுபவிக்க முடியும் என்று கர்ஜித்த அந்த கேசரிக்கு இந்த பாடல்களை சமர்ப்பிகின்றேன் . இன்றும் என்றும் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவனும் , தனக்கு தேச பக்தி இருக்கிறது என்று மார் தட்டிக்கொள்ளும் எவனும் , நான் இந்த தாயகத்தில் பிறந்தேன் , இந்த நாட்டின் "அசல் வித்து " என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்கவைத்தவனுக்கு நாம் எல்லோரும் தலை குனிந்து நன்றி சொல்லுவோம் .......

    பகுதி 4 - பாடல்கள்

    பள்ளிக்கூட காலத்து இரு நண்பர்கள் உலக நடைமுறைகளினால் நீண்ட காலம் பிரிந்திருந்து வயதான காலத்தில் மீண்டும் தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் அவர்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்?

    இந்த பாடல் அவர்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. பாருங்கள்! கேளுங்கள் !!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே நண்பனே
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன் ஏன் நண்பனே நண்பனே



    ராமு ஐ லவ் யூ
    ராஜா ஐ லவ் யூ
    .
    இமை தொட்ட மணி விழி
    இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
    இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
    அதுதான் அன்பின் எல்லை
    .
    ( ராமு )
    .
    கண்ணினிடம் குசேலன் கண்ட சுகம்,
    இல்லை இல்லை..
    கம்பனிடம் சோழன் கண்ட சுகம்,
    இது காரிய காலத்து அன்பு மனம்
    பசும் பாலையும் நீரையும் சேர்த்த விதம்
    .
    ( ராமு )
    .
    பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும்
    உன்னை நானாக நினைப்பேன்
    பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும்
    உன்னை என்னோடு அணைப்பேன்

    மாலை கொண்டாலும் மணநாள் வந்தாலும்
    நாளை உன்னோடு கழிப்பேன்
    பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக
    வாழ்வை உன்னோடு இணைப்பேன்
    .
    ( இமை )
    .
    கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி
    நான் ஓர் கற்பூரம் எரிப்பேன்
    சிந்தும் கற்பூர வாசம் நீ என்று
    சொந்தம் கொண்டாடி இருப்பேன்

    அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல்
    அவன் போல் நான் எங்கு கலப்பேன்
    எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக
    இறைவா நான் உன்னை அழைப்பேன் ..



    தெய்வம் என்றால் அது தெய்வம்
    அது சிலை என்றால் வெறும் சிலைதான்




    ( நட்பு தொடரும் )

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2867
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    pillow talks 1 / கண்ணற்ற காதலில் எண்ணற்ற தலையணை மதுர கீதங்கள் : பகுதி 1

    பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !
    காதலிகள் காதலனாக எண்ணி இறுக்கக் கட்டி உம்மாவெல்லாம் தருவார்கள் ! லிப்ஸ்டிக் படிந்த இலவம் பஞ்சுத் தலையணை விலைமதிப்பற்றதே!!
    அதையே காதலன் கையாளும் விதம்..கட்டி அணைத்திடுவர் காதல் மகளிர்! கசக்கிப் பிழிந்திடுவர் காதல் நாயகர்!..அப்ஜக்ஷன் யுவர் ஆனர்தான்!!
    தலையணையும் நடிக்கும் மதுர கானங்களில் முதலிடம் காதலிக்க நேரமில்லைக்கே !


    ஒரு இளம் பிஞ்சு நெஞ்சத் தலையணையே இன்னொரு இலவம் பஞ்சு மஞ்சத் தலையணையில் ஒரு இ(ச்)ஞ்சுக்கு இதழ் பதிக்கும் அனுபவம் கொஞ்(சு)சம் புதுமை பஞ்சம் தீர்த்ததே!!

    Last edited by sivajisenthil; 22nd August 2015 at 01:58 PM.

  14. #2868
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !//

    நடிகர் திலகமே தெய்வம்

  15. #2869
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்!

    ஏன்... உங்கள் காதல் மன்னனை நினைத்து மெத்தையில் படுத்து, தலையணைகளுக்கு மத்தியில் உருண்டு புரளும் புன்னகை அரசியின் பு(அ)லம்பலை எப்படி மறக்க முடியும்?

    'நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட
    உத்தமன் யாரோடி தோழி'

    அதுவும் ஒன்றுக்கு இரண்டு தலையணை. இன்னும் தங்களிடமிருந்து என்னென்ன தலைப்புக்கள் வந்து எங்கள் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறதோ! விடுங்க ஆளை. ஜூட். கட்டபொம்மன் அழைக்கிறார். கைதான் டைப் அடிக்கிறதே ஒழிய எண்ணமெல்லாம் என் தெய்வத்தைப் பற்றியே.

    Last edited by vasudevan31355; 22nd August 2015 at 01:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #2870
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்

    அமர்க்களம். நட்புக்கு திரியை உதாரணம் காட்டி விளக்கியிருப்பது அருமை! நட்புக்கு உதாரணம் காட்டி பதிந்திருக்கும் மூன்று பாடல்களுமே நடிகர் திலகத்தின் பாடல்கள் என்பது இன்னொரு சிறப்பு. 'இமை தொட்ட மணிவிழி' பாடலின் முழு வரிகளுக்கும் நன்றி! நடிகர் திலகத்திற்கு நன்றி சொல்லும் தங்கள் பாங்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடருங்கள் தங்கள் நட்பை எல்லோரிடமும்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •