Page 286 of 400 FirstFirst ... 186236276284285286287288296336386 ... LastLast
Results 2,851 to 2,860 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2851
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    வருக!

    வருத்தம் வேண்டாம். தங்கள் மனப்புண்ணிற்கு மருந்தாக மதுரகானங்கள் அமையட்டும். இனி நடப்பவை எல்லாம் நலமாக நடக்க இறைவனை வேண்டுவோம். கட்டபொம்மனின் வெற்றிக் களிப்பே மனக் காயங்களுக்கு களிம்பு. நாளை சாந்தியில் சந்திப்போம். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2852
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு பொம்மை பொம்மை விக்குது பாருங்க

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #2853
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu Sir
    I really feel atop cloud 9 after witnessing the stupendous crowd pulling capacity of VPKB even after 56 years with the same standing ovation and reception for NT's meticulous dialogue delivery and electrifying performance sustained throughout this unique stand alone movie of all times!! Immortal NT in his evergreen saga!!
    The picture quality in its digital cinemascope format is amazing even as some patches are irrecoverable from the original film negative.
    However, the movie requires some more trimming that you can understand when you see!

    senthil

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #2854
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நண்பர்களே!

    ஸ்ட்ரைக் தொடர்கிறது. நிர்வாகம் நசுக்குகிறது. மிரட்டுகிறது. இன்று ரயில் மறியல் போராட்டம். 32 நாட்கள் முடிந்து விட்டன. இத்தனை நாட்களுக்கும் ஊதியம் இல்லை. இன்னும் தொழிலார்கள் அமைதிதான் காத்து வருகின்றனர். நேற்று டெல்லியில் அதிமுக எம்பிக்கள், யூனியன் லீடர்ஸ் பிரதமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். பிரச்னை முடிந்த பாடில்லை. லாக்-அவுட் செய்துவிடுவோம் என்று திமிர்த்தனத்துடன் நிர்வாகம் மிரட்டுகிறது. இன்னும் பொறுமை காக்கிறோம்.

    எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?
    எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?
    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லாப் படுபாவியால் வாழ்வு பறி போவதோ?
    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லாப் படுபாவியால் வாழ்வு பறி போவதோ?

    நிர்வாகத்தையும், அதிபரையும் நினைத்தால்

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #2855
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu Sir
    We all feel for this quandary at your premises and pray continuously for the smooth recovery to normality and happiness to prevail
    senthil

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #2856
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா! ஜி!

    உங்களுக்காக ஒரு அரிய பாடல்.

    'பால்மனம்' கொண்டு உங்களுக்கு அளிக்கிறேன். ஜெய், மணிமாலா பாடும் அருமையான, இனிமையான தாலாட்டுப் பாடல்.

    ஆரிரோ ஆரிரோ..... ஆரி ராரிரோ

    தாயறிந்த ஒரு பாட்டு தாலாட்டு
    திருமகனே கண் வளராய் நீ கேட்டு
    தாயறிந்த ஒரு பாட்டு தாலாட்டு
    திருமகனே கண் வளராய் நீ கேட்டு
    பிள்ளை சொன்ன மழலை மொழி நான் கேட்டு
    பிள்ளை சொன்ன மழலை மொழி நான் கேட்டு
    பாட்டாக பாடுகிறேன் தாலேலோ

    (தாயறிந்த)

    மடியில் விதையாகி
    கொடியில் அரும்பாகி
    புன்னகையில் பூப்போலே
    மலர்ந்தவன் நீயே

    மடியில் விதையாகி
    கொடியில் அரும்பாகி
    புன்னகையில் பூப்போலே
    மலர்ந்தவன் நீயே

    காயென்றும் கனியென்றும்
    காலத்தில் மரமாகி
    காயென்றும் கனியென்றும்
    காலத்தில் மரமாகி
    நிழல்தரும் நம்பிக்கையில்
    இருப்பவள் தாயே

    (தாயறிந்த)

    அன்புக்கு அன்னை என்பார்
    அறிவுக்கு தந்தை என்பார்
    அன்னை உள்ள இடத்தில் இன்று
    தந்தை இல்லை கண்ணே

    அன்புக்கு அன்னை என்பார்
    அறிவுக்கு தந்தை என்பார்
    அன்னை உள்ள இடத்தில் இன்று
    தந்தை இல்லை கண்ணே

    உதட்டில் உறவு வைத்து
    உள்ளத்தில் மறதி வைத்த
    உதட்டில் உறவு வைத்து
    உள்ளத்தில் மறதி வைத்த
    உலகத்தில் நடப்பதெல்லாம்
    விந்தை இல்லை கண்ணே

    (தாயறிந்த)

    ஆஹா! அருமையிலும் அருமை. சுசீலா, சௌந்தரராஜன் அமைதியாக அமர்க்களம்.

    மது அண்ணா!

    கதை ப்ளீஸ். மணிமாலா ஜெய்க்குத் தங்கையா? அப்போ மணிமாலாவின் ஏமாற்றுக் கணவர் யாரோ? நான் படம் பார்த்ததில்லை.

    Last edited by vasudevan31355; 22nd August 2015 at 09:01 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes rajeshkrv, Russellmai liked this post
  14. #2857
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Vasu Sir
    We all feel for this quandary at your premises and pray continuously for the smooth recovery to normality and happiness to prevail
    senthil
    நன்றி செந்தில் சார். வேண்டுதல்கள் என்றுமே வீணாவதில்லை. தங்களைப் போல் நல்லுள்ளம் கொண்ட நண்பர்களின் பிராத்தனையால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இது உறுதி.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #2858
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    வந்தாளே மகராசி பாடலை பதியலாம் என்று வந்தபோதே உங்க பதிவைக் கண்டேன்..நன்றி நன்றி....

    சீக்கிரமே கரி மனம் வைரம் ஆகட்டும்.. நிர்வாகம் நல்ல முடிவைத் தரட்டும்.. ஆண்டவன் அருள் சேரும்.

    தாயறிந்த ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதன் ஆடியோ கூட கிடைக்காமல் தேடி அப்புறம் ராஜேஷ் ஒரு முறை கொடுத்தார். வீடியோ போன வருடம் யூடியூபுக்கு வந்தது.

    பால் மனம் படம் பற்றி ஒன்றுமே தெரியாது. பார்த்தசாரதி இசையில் இந்தப் பாடல், "நிலவுப் பெண் முகம் பார்க்க" மற்றும் "கன்னி ஒருத்தியிடம்" ஆகிய பாடல்கள் மட்டுமே நினைவில் உள்ளன. கே.ஆர்.விஜயா ஜோடி என்பதால் இப்பாடலைப் பாடும் மணிமாலா தங்கையாக இருக்கலாம். ( ஒரு சமயம் ராஜமன்னார்குடி ஸ்ரீராம் தியேட்டரில் இந்தப் படம் ஓடுவதாக மாட்டு வண்டியில் நோட்டீஸ் கொடுத்து விட்டுப் போனாங்க.. அடுத்த நாள் போனால் தியேட்டர் கோடவுன் ஆகிவிட்டது. அறுவடை சமயத்தில் தியேட்டரை மூடி நெல் மூட்டை அடுக்கிடுவாங்களாம் )

    ராகவேந்திரா சார் உதவி செய்வார் என்று நினைக்கிறேன்.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv, vasudevan31355 liked this post
  17. #2859
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    அருமை! அருமை!

    செம பாட்டை ஞாபகப்படுத்திட்டீங்க

    கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி! (என்னா குறும்பு!)
    கனிகளின் சுவையே தனித்தனி
    கண்ணைக் கவரும் அந்த அருங்கனி
    தின்ன முடியாத சித்திரக்கனி (அநியாயம்! அநியாயம்!)

    அடடா! எத்தனை நாளாயிற்று கேட்டு?! இப்போ கேட்டுக் கொண்டே டைப் அடிக்கிறேன். இந்த மாதிரி பாடல்களில் இருக்கும் சுவையே தனி. அதுவும் மக்கள் கலைஞர், ரவி படங்களில்தான் இந்த மாதிரி வைரங்கள் கிடைக்கும். இதற்கு பாடும் பாடகர் திலகத்தின் பாணியும் தனிதான். இன்று முழுக்க இந்தப் பாடல்தான். நன்றி அண்ணா! ஜெய், விஜயா டூயட்டை அப்படியே மனக் கண்ணால் உணர முடிகிறது. ஆமாம்! இந்தப் பாடலின் வீடியோ இருக்கா?
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #2860
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அறுவடை சமயத்தில் தியேட்டரை மூடி நெல் மூட்டை அடுக்கிடுவாங்களாம்//

    அறுவடை முடிந்ததும் மீண்டும் தியேட்டர் ஆகி விடுமா?
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •