Page 26 of 400 FirstFirst ... 1624252627283676126 ... LastLast
Results 251 to 260 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #251
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 17

    ஒரு உண்மை சம்பவம்

    நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் இல் தந்தையின் அஸ்தியுடன் , அம்மாவையும் அழைத்துக்கொண்டு வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்தேன் - எவ்வளவோ தடவைகள் இருவருடனும் நான் பல தடவைகள் இதே வண்டியில் அவர்களை அழைத்து சென்றுள்ளேன் - இந்த தடவை முதன் முறையாக என் தந்தை என் மடியில் அஸ்த்தியாக அமர்ந்து வந்து கொண்டிருந்தார் . தாயின் கண்கள் வற்றி பல நாட்கள் ஆகிவிட்டன - கண்களில் இருந்த பார்வையும் தான் .... அவள் நெஞ்சில் என்றும் நான் தான் நிழலாடிக்கொண்டிருப்பேன் - அன்று பார்வை மங்கிப்போனதால் அவள் கண்களில் நிழலாக ஆடிக்கொண்டிருந்தேன் ... வண்டி வாரணாசியை எட்டிப்பிடித்தது - பாரமான இதயத்துடன் அம்மாவுடன் இறங்கினேன் -- wheel chair இல் அம்மாவை உட்க்காரவைத்து வண்டியில் எப்படியோ ஹனுமான் காட் வந்தடைந்தேன் - பட்ட வேதனை 13 நாட்கள் ரூபத்தில் இன்னும் தன்னை அதிகப்படுத்திக்கொண்டது . வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதை அங்கு வந்து குமியும் சடலங்களும் , கங்கையில் அடித்துச் செல்லும் சரியாக வேகாத உடல்களும் சொல்லிக்கொண்டே இருந்தன ..

    13 நாட்கள் இருந்து இருவரும் தந்தையை வழி அனுப்பி வைத்தோம் - அம்மா என் கைகளை தேடி பற்றிக்கொண்டாள் - " ரவி - அப்பாவின் காரியத்தை சிரத்தையாக பண்ணி அவரை வழி அனுப்பி வைத்தாய் - எனக்கு ஒரு உதவி செய்வாயா ? - எனக்கும் இதே மாதிரி செய்துவிடு - காசியில் இருந்து புறப்பட்ட உன் தந்தையை நான் காசியிலிருந்து தான் கிளம்பி பிடிக்க வேண்டும் - இது தான் என் கடைசி ஆசை - நீ செய்வாய் எனக்குத்தெரியும் "

    இதயத்தில் ஒரு ரோடு என்ஜின்யை இறக்கியது போல இருந்தது அந்த வார்த்தைகள் . அம்மா நீ என்னுடன் நிறைய ஆண்டுகள் இருப்பாய் - வார்த்தைகள் கண்ணீரில் , கங்கையை விட வேகமாக அடித்து செல்லப்பட்டன ......

    அம்மாவை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு - மீண்டும் ஒரு முழுக்கு போட கங்கையில் இறங்கினேன் . என் அருகில் ஒரு நடுத்தர வயது ஜோடி சேர்ந்து குளித்துக்கொண்டிருந்தது - சற்று தூரத்தில் ஒரு 80 வயது இருக்கலாம் - ஒரு தாய் - அமர்ந்து இருந்தாள் - கையில் துளசி மாலை - உதடுகள் ராம நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தன ..

    " என்னங்க - உங்களைத்தானே - சீக்கிரம் கிளம்ப வேண்டும் - வண்டிக்கு நேரம் ஆகிக்கொண்டுருக்கின்றது "

    " மனோ அம்மாவை இப்படியேவா ---- வார்த்தைகளை மென்றுகொண்டிருந்தான் ரகு என்னும் ரகுவரன் ..

    " எவ்வளவு தடவை சொல்வது உங்களுக்கு - இந்த பக்கமாக சென்று விடலாம் ---- உங்கள் அம்மா தானே காசியில் உயிரை விட வேண்டும் என்று விரும்பினாள் -- ம்ம் கிளம்புங்கள் - திடீரென்று எங்கிருந்துதான் இந்த அம்மா பாசம் வந்து விட்டதோ உங்களுக்கு " மனைவியின் வார்த்தைகள் தடித்தன .

    மெதுவாக அந்த தாயிடம் சென்றேன் - " என் ரகுவை தெரியுமா உங்களுக்கு - இங்கு தான் அவனும் , அவள் மனைவியும் குளித்துக்கொண்டிருந்தார்கள் - இரு அம்மா 5 நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனான் - பாவம் அவன் இன்னும் சாப்பிடவே இல்லை - இங்கு எங்கேயாவது அவனை பார்த்தீர்கள் என்றால் நான் அவன் சொன்னபடி எங்கும் நகரவில்லை - இங்குதான் உட்க்காந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா ?

    ரகு அவளிடம் இல்லை ஆனால் நம்பிக்கை இருந்தது - வாயில் ராமனையும் , மனதில் ரகுவையும் சுமந்து கொண்டிருந்தாள் - கங்கைக்கு ஆரத்தியாம் - எதற்கு ? இதோ கங்கைக்கு புண்ணியம் சேர்க்கிறாளே இவளுக்கு அல்லவா ஆர்த்தி எடுக்க வேண்டும் ! அவளை மெதுவாக அருகில் இருக்கும் சங்கர மடத்தில் சேர்த்தேன் - 10 மாதங்கள் யாரையோ அவள் சுமந்தாள் - அவளுக்கு நான் ஒரு மாதம் மட்டுமே போதுமான உதவியை செய்ய முடிந்தது - என் நம்பரை சங்கர மடத்தில் கொடுத்துவிட்டு மாதம் மாதம் அனுப்பும் பணத்தில் அங்கு இருந்த கருவறைகளுக்கு பிரசாதம் கொடுக்க சொன்னேன் ..

    ஓடி வந்து என் அம்மாவின் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் - நான் ரகு அல்ல ரவி -- அம்மாவை விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளவில்லை - எனக்கு அவள் என்றுமே வேண்டும் -- வண்டி வாரணாசி யை விட்டு கிளம்பியது ...

    " எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் - அன்னை வளர்ப்பினிலே !" பாடல் காற்றில் மிதந்து வந்தது..

    இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக்
    கட்டி வைத்தேன்
    அதில் பட்டுத் துகிலுடன்
    அன்னச்சிறகினை மெல்லென
    இட்டு வைத்தேன்-----



    Last edited by g94127302; 26th May 2015 at 10:20 AM.

  2. Likes adiram, chinnakkannan, kalnayak, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #252
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 18


    கன்றின் குரலும் , கன்னித்தமிழும் சொல்லும் வார்த்தை - அம்மா அம்மா

    கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா
    அம்மா

    அனாதைகளுக்கு அவன்தானே எல்லாமே - எல்லாம் இருந்தும் அம்மாவை அனாதையாக விடுபவர்களுக்கு ????


  5. Likes adiram, Russellmai, kalnayak liked this post
  6. #253
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பாடலை ஒருவர் அழகாக இணையதளத்தில் அலசியிருப்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

    செல்லக் கிளிகளாம் பள்ளியிலே

    எங்க மாமா (1970)

    பியானோவில் ஒரு தாலாட்டு!

    இத்தொடரில் பியானோ பாடல்கள் விவரிப்பில் மிகக் கடினமான பாடல் இப்பாடல் தான் என்று நான் கருத பல காரணங்கள் உள்ளது. இசையின் ஒரு சில அங்கங்களை நன்கு குறிப்பிட்டு விவரித்து மகிழலாம். உதாரணமாக தாள வகைகள், ஸ்வரங்கள், பாடல் உணர்த்தும் பொருள் - போன்றவை. ஆனால் ஒரு குழந்தையின் சிரிப்பை விவரிக்க முடியுமா? சிறு வயது தாலாட்டுப் பாடலைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வை எடுத்துரைக்க முடியுமா?

    அது போல் கடினம் நிறைந்ததுதான் மெல்லிசை மன்னரின் உணர்ச்சிப் பெருக்கு மிகுந்த பாடல்களை விவரிப்பது. அது மனம் வருடும் தாலாட்டாக இருந்துவிட்டால் 'கடினம்' என்பது இயலாமையாக மாறுகிறது. எனினும் துணிந்து என்னால் இயன்ற வரை இப்பாடலைப் பற்றி எழுதுகிறேன்.

    அமைதியான முன்னிசை. மெல்லிய டிரம்ஸ் சப்போர்ட்டுடன் கொண்ட வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் இதமாய்த் தொடங்க, தாலாட்டுக் குரலாக டி.எம்.எஸ் இன் ஹம்மிங்க் "ல லா லா லால லா" என்று!

    செல்லக் கிளிகளாம் பள்ளியிலே (பியானோ பிட்)
    செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
    என் பொன் மணிகள்
    ஏன் தூங்கவில்லை

    இடையிசையில் குழலும் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் ஒன்றோடொன்று விளையாடும். இடையிசை முடிகையில் அற்புதமான விசில்... மனத்தை அப்படியே வருடும் விதமாய்! விசில் முடிய முடிய அழகாக பியானோ சரணத்திற்கு எடுத்துக் கொடுக்கும். ஒரு பாடலின் முன்/இடையிசைகளிலும், அது அழகாகப் பாடகருக்குப் பாடலை எடுத்துக் கொடுக்கும் அழகிலும் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரே!

    சரணத்தில் கவியரசர் கண்ணதாசனின் உணர்ச்சி வரிகளுக்கு மெல்லிசை மன்னர் ஊட்டிய அழகைப் பாருங்கள்.

    ஒரு ஆணித்தனமான கருத்தை மிக மெல்லியதாக இசைத்தாற்போல்....
    கன்றின் குரலும்
    கன்னித் தமிழும்
    சொல்லும் வார்த்தை
    அம்மா அம்மா (குழல் பிட்)

    கருணை தேடி
    அலையும் உயிகள் (இந்த இடத்தில் உருக்கம் மனத்தில் பாயும்)
    உருகும் வார்த்தை
    அம்மா அம்மா

    தொட்டிலை ஆட்டுவது போல், பாடல் மேலும் கீழுமாக பயணிப்பது அற்புதம்!

    கீழே போகிறது பாடல்....பின்னணியில் அமைதி...
    எந்த மனதில்
    பாசம் உண்டோ
    அந்த மனமே
    அம்மா அம்மா

    மெதுவாக மேலே போகிறது....
    இன்பக் கனவை
    அள்ளித் தரவே (இந்த இடத்தில் பாடலின் உருக்கம் கதையின் இறுக்கத்தை உணர்த்துவதாக இருக்கும்!!!....... மெல்லிசையே, நீ வாழிய!!!)
    இறைவன் என்னைத்
    தந்தானம்மா

    என் பொன்மணிகள்
    ஏன் தூங்கவில்லை !!

    இரண்டாம் இடையிசையில் இரண்டு லேயர் வயலினுடன் டபுள் பாஸ் ஆர்கெஸ்ட்ரேஷனை அவ்வளவு அழகாக அமர்த்தியிருப்பார்.

    மனத்தில் நமக்கே தெரியாமல் எங்காவது ஒரு சிறு காயமோ, கவலையோ இருந்தாலும் அதைத் தேடிச் சென்று வருடி இதம் கொடுத்துவிடும் இப்பாடல் !!! படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் குழந்தைகளை உறங்கச் செய்யும் தன்மையே இதற்குச் சாட்சியானது!

    பாடலில் நடிகர் திலகத்தின் கண்களில் தான் எத்தனை மிளிர்ச்சி !!! 'நடிப்பு' எனும் வார்த்தை இவர் திரையில் வாழ்ந்த வாழ்க்கையை குறைவு படுத்துவதாக உள்ளது !!!

    மெல்லிசை மன்னர் - கவியரசர் - நடிகர் திலகம் கூட்டணியில் இப்பாடல் ஒரு சகாப்தம் என்பது உண்மையே!!

    இசை என்பதை விளக்க: "இசை புனிதமானது; உணர்ச்சிகள் அதில் மிகுதியானது; அது பிரபஞ்சத்தைக் கடக்க வேண்டும்; உள்ளுணர்வுகளைத் தொட வேண்டும்;" என்று சிரமப்பட்டு விளக்கங்கள் தர அவசியமில்லை. "இசை என்பது மெல்லிசை மன்னரின் நல்லிசை போல் இருக்க வேண்டும்" என்று ரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டு பெருமிதமாக விடை பெற்று வரலாம். மற்ற அனைத்து விளக்கங்களும் அதில் அடங்கி விடும்!

  7. Likes adiram, RAGHAVENDRA, Russellmai, kalnayak liked this post
  8. #254
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 19

    அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே !!

    குழந்தை கமலஹாசனனின் அற்புதமான பாடல் - காலத்தையும் கடந்து நிற்கின்றது . அநாதை அநாதை என்று சொல்கிறோம் - உண்மையில் யார் அநாதை ? தாயை தவிக்க விடுபவர்களும் , தர்மத்தை சூறையாடுபவர்களுமே உண்மையில் அநாதைகள் - காலம் அவர்களுக்கு இப்பொழுது சற்றே கருணை காட்டினாலும் , அவர்கள் ஒதுக்கப்படுவார்கள் ஒரு நாளில் - உள்ளத்தில் நல்ல உள்ளங்களை நிம்மதியாக உறங்க வைக்காதவர்கள் , உறங்கும் போது அநாதைகளாகத்தான் இருப்பார்கள் - இதை நான் சொல்லவில்லை - காலம் சொல்கின்றது -------

    Last edited by g94127302; 26th May 2015 at 07:47 PM.

  9. #255
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கரு தொடரும் -----

  10. #256
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Ravi,

    arumai

  11. #257
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கடந்த ஞாயிறு அன்று மேற்கண்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத ஒரு மாலை பொழுதாக அமைந்தது .பாடும் நிலா பாலுவின் என்றும் இளமை மாறாத குரலுடன் இன்றைய இளம் பாடகர்கள் இணைந்து பாடினார்கள். (விஜய் சூப்பர் சிங்கர் சோனியா நல்ல இணையாக விளங்கினார்). நேற்று பதிவிட மறந்து இன்று காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் இதழில் இது பற்றிய செய்தி வந்த உடன் நினைவிற்கு வந்து பதிவிடுகிறேன்.





    CHENNAI: Whistlepodu might have been the buzzword among the fans of Chennai Super Kings at the IPL Finals, as they cheered frantically for their team to win. However Whistlepodu had been doing the rounds at the Isai Saral concert, by S P Balasubrahmanyam, which was organised by Kadayam R Raju, on Sunday, as fans could not resist humming and whistling along with each song that he sang.

    One was amazed at the fact that despite being the D-Day for CSK, a fair number of people, who have been ardent followers of each of the songs sung by him, still gathered to listen to the enchanting voice of SPB. The evening kicked off by the performances of singers like Solomon, Nirmala, and others who might be lesser known to the music loving crowd, or who might have been a part of such concerts before. However, the perfection with which they sang was enough to keep the audience engrossed.

    Sonia, from Airtel Super Singer 4, performed with so much precision, that a young singer like her performed, alongside the legend. The songs that they performed were Idhu Oru Nila Kaalam, Andru Vandadhu Ore Nila, Janani Janani Jagam Nee Agam Nee and others, following the most awaited moment came when SPB ushered in the spirit of celebration of music, with the song Paatu Thalaivan Paadinal from the film Ithaya Kovil.

    The first few gamagams itself garnered the best response from the audience.

    Next was Naan Pesa Vanthen from the 1976 film Paalooti Valartha Killi, which is in itself became an instance of how long and musical, his career has been. After listening to the song Ange Varuvadhu Yaaro from Netru Indru Naalai, one came to a realisation that his evergreen voice could still capture the essence of happiness and romance, through his effective voice modulation.

    Though, the audience kept on demanding popular hits that he performs on stage, SPB giddily said the songs which were lesser performed, but have a qualitative spirit, have to be sung more often. Hence, the songs performed were more of the lesser performed songs by SPB.

    Other songs that were sung were Meenamma Meenamma from Rajadhi Raja, Nandha En Nila from the film Nandha En Nila. However, the loudest cheers came when he sang a few lines of Tere Mere Bheech Main from Ek Duje Ke Liye, and the entire auditorium lingered with fans chanting Once More, only to go listen to a parody, wherein he gave his best wishes to CSK.

    The songs covered a wide range of genres and actors, starting from MGR, Rajnikanth, Kamal Hassan and others, which yet again became an instance to show how his voice suited each and every one of them.

    The evening saw the lively performance of SPB, for whose musical charm, it seemed that age has not withered his flair for music, as fans from all age groups equally enjoyed his songs.

    The sponsors included ADT Saral, Dinamani, New Indian Express, Cinema Express, Tamizhan Channel, The Chennai Silks, Vasantha Bhavan, Vasana Furnitures, YBM Construction and Repose.

    gkrishna

  12. Likes kalnayak liked this post
  13. #258
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    உங்கள் அன்னையின் நினைப்பில் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்து விட்டீர்கள். தாயைப் பற்றிய கவிதை நினைவுகளும் நெஞ்சை தொடுகின்றன. என்னமோ போங்க. பாடல்களினால் கவரப்பட்டு நானும் சொல்லத் துடிக்குது மனதை முதல் நாளே தேடித் பிடித்து பார்த்தேன். நினைத்துப் பார்த்தால்... என்னவோ போங்க.
    Last edited by kalnayak; 26th May 2015 at 10:40 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. Likes RAGHAVENDRA, chinnakkannan liked this post
  15. #259
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    hi good morning ravi, rajesh, kal nayak..

    ரவி..அஸ் யூஸ்வல் குட்.. இதே டைப் தான் நான் சொன்ன நண்பர் ஆனந்த்ராகவ்வின் சிறுகதை..

    கல் நாயக் நன்றி.. ம்ம் துரத்தும் நினைவுகளுக்கு என்ன சொல்வது

    ராஜ் ராஜ் சார்.. யெஸ் மிதிலா விலாஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன் படித்ததில்லை..இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்குமா தெரியவில்லை..பட்.. ஒன் திங்க்.. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன் தேவன் - இப்போதும் க்ளாஸ்..கையிலெடுத்தால் படித்துவிட்டுத்தான்வைத்தேன்..

    டாக்டர் திரிபுர சுந்தரியின் ஆப்பிரிக்காகண்டத்தில் பல ஆண்டுகள் படித்தீர்களா.. நன்றாக இருக்கும்.

  16. #260
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,

    நீங்கள் சொல்ல வரும் நடிகர், நடிகைகள் யாரென்று படிப்பவருக்கு தெரியும் வரை விட மாட்டீர்கள் என்பதற்கு நடிகை கீதாஞ்சலி மற்றும் தெலுங்கு நடிகர் ராமக்ருஷ்ணாவை பற்றி நீங்கள் வரைந்த கட்டுரை ஒன்று போதும். நன்றி. வயதான போடோவிற்கு சி.க. கொடுத்த கமெண்ட் (கீ இ பு போ யா அ) எப்படி? 'இப்ப ஏதாவது படத்தில் நடித்தால் தெரியனுமொன்னோ!' என்று சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •