Page 218 of 400 FirstFirst ... 118168208216217218219220228268318 ... LastLast
Results 2,171 to 2,180 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2171
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
    காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!

    சாதனைச்சரித்திரம்
    சரிந்தது ..
    மேகாலயாவில்
    மேகத்தினில்
    கலந்தார் கலாம் ...
    எங்களைக் கனவு காணச் சொன்ன
    கனவு நாயகனே...நீர்
    காற்றினிலே கலந்ததென்ன?
    விண்வெளியின்
    நாயகனே...நீர்
    விண்ணோடு கலந்ததென்ன?
    ஏவுகணை மூலம்
    எல்லா இடங்களையும்
    கண்டவரே ...நீர்
    எட்டா உயரம் சென்றதெங்கே்?
    அக்னி யிலே
    அகிலம் திரும்பச் செய்தவரே...
    அக்னியிலே கலந்ததென்ன??
    தமிழகத்தின் தலைமகனே ...
    இந்தியாவின் கோமகனே...
    தளர்வடையோம்
    உம் பிள்ளைகள் நாங்கள் ...
    மனதினில் மட்டுமல்ல...
    மகவாயும் நீர் வருவாய் ...
    மழலை மொழியும் நீர்
    சொல்வாய் ...

    உனக்காக காத்திருப்போம் ...
    அப்பனே நீர் வருவாய் ....

  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2172
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

    பிறப்பு: அக்டோபர் 15, 1931

    இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

    பிறப்பு:

    1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

    இளமைப் பருவம்:

    அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

    கல்லூரி வாழ்க்கை:

    தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

    1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

    குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

    2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

    விருதுகள்:

    1981 – பத்ம பூஷன்

    1990 – பத்ம விபூஷன்

    1997 – பாரத ரத்னா

    1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

    1998 – வீர் சவர்கார் விருது

    2000 – ராமானுஜன் விருது

    2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

    2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்

    2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

    2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

    2009 – ஹூவர் மெடல்

    2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

    2012 – சட்டங்களின் டாக்டர்

    2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

    ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

    அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

    இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

    உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

  5. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  6. #2173
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rest in peace Dr Abdul Kalaam.

  7. #2174
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ck - உங்கள் தரத்தில் அல்ல ! உங்கள் நடையில் ஒரு சின்ன பொதுவான கவிதை - உங்களுக்கு ஒரு சிறிய காணிக்கை இது .....

    வேடிக்கை நான்கொண்டேன் வெஞ்சினம் கொள்ளாமல்
    கூடிக் களிக்கவே ஓடியிங்கே –பாடி
    மகிழவந்தேன் மன்னுதமிழ் மாண்பின் கவிதைகளால்
    நெகிழவந்தேன் என்னாளு மே

    எந்நாளும் உள்ளத்தின் ஏக்கங்கள் தீராமல்
    வண்ணக் கவிதைகளை வாகாகப் பாடியவன்
    சின்னவனாய்ப் பாவலர்முன் சீருடனே நின்றவந்தான்
    வெண்ணுள்ளம் கொண்டவந்தான் நான்

    நானாய் இருந்தகாலம் நல்லவழி சொல்லாமல்
    தேனாய் தித்தித்துத் தீய்ந்துபோய் – வேண்டுமென
    தெய்வத்தின் தாள்பற்றித் தேடித்தான் பார்த்தபடி
    உய்ய உழல்கிறே னோ

    உழல்வது என்பதெலாம் ஓடித்தான் சென்றே
    சுழலெனச் சுற்றுகின்ற வாழ்வில் – கழலைப்
    பிடிக்கின்றேன் கண்ணனவன் பேரழகுக் காலை
    விடியுமா எப்போ தெனக்கு.

    எனக்காய் இருக்கையிலே ஏற்றங் கொளவும்
    கணக்காக வந்தநண்பர் கூட்டம் – கனவில்லை
    நன்றையே எண்ணியவென் நல்நெஞ்சை மேலெடுத்துத்
    திண்ணமாய்த் தீட்டினார் தாம்..

    தாமாக முன்னே தயங்காமல் பாராட்டித்
    தானாக ஏசுகின்றார் தாளாமல் – பாமாலை
    சூட்ட நினைத்திங்கு சொக்கித்தான் போகின்றேன்
    ஊட்டம் வரவேண்டு மே..

    வரவேண்டும் என்றெல்லாம் வாய்மொழிந்தே பின்பே
    வதங்கி முகம்வைத்து வாகாய் – மரமென்றே
    எள்ளிச் சிரித்திங்கே ஏகடியம் செய்பவரை
    தள்ள இயலவில்லை தான்..

    தானாடும் இல்லை தசையாடும் என்றெல்லாம்
    ஊனோடு கலந்த உறவென்பர் – மீனாடும்
    செம்மதுரைக் காரன்நான் சேர்ந்திங்கே சொல்லிடுவேன்
    இம்மையில் நட்பதுவும் தான்..

    தானாய் வந்திடுமா தங்கத்தில் கற்பனைகள்
    பேனா எடுத்தால் பொங்கிடுமோ – காணாத
    காட்சிகளைக் கண்டுவந்து கண்களுக்குள் கட்டிவைத்தே
    மீட்சிகொள வைக்கவேண்டு மே

    வேண்டுமே எந்நாளும் வெண்ணிதயம் மேதினியில்
    தீண்ட மென்காற்று தேகத்தை – மீண்டுமே
    யாரையும் நோகாமல் ஆட்கொள்ளும் நெஞ்சமெனும்
    தேரையே தெய்வம்நீ தா..

  8. Thanks Russellmai thanked for this post
  9. #2175
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ஜவஹர்லால் நேருவுக்குப் பின் குழந்தைகளின் நலனில், இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்ட, அவர்களுக்குப் பிடித்தமான ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம் அவர்கள். மிகப் பெரிய பேரிழப்பு. இப்போதுதான் மெல்லிசை மன்னரை இழந்தோம். அதற்குள்ளாகவே அடுத்த பேரிடி.தாங்கும் சக்தியை அந்த இறைவன்தான் நமக்கு அளிக்க வேண்டும். மனம் அமைதி அடைந்தபாடில்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai, uvausan liked this post
  11. #2176
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அந்தக் காலத்தில் பொன்னான வாழ்வு என்று ஒரு ஜெய்சங்கர் படம் வெளிவந்தது. அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய நேரு மாமா பாட்டு ஒன்று ( இணையத்தில் எங்கேயும் சிக்கவில்லை ). அந்தப் பாடலை அடித்தளமாகக் கொண்டு டி.எம்.எஸ்ஸுடன் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இன்னொரு பாடலும் அந்தக் காலத்தில் பிரசித்தம்.

    கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
    அதை வரி வரியா பாடிடுவேன் பாடிடுவேன்

    வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே - ஒரு
    சின்ன அழகு ரோஜாச் செடி வளர்ந்திருந்ததாம்
    நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
    ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
    நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே - தன்
    உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

    ( கதை )

    மறு நாள் அவர் வருவார் எனப் பூத்திருந்ததாம் - அவர்
    வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
    தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
    திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்

    அதனைக் கேட்டு ரோஜா மலரும் வாடிப் போனதுவாம்
    நேருஜியை அமர லோகம் தேடி போனதுவாம்
    அவர் முன்னே சென்றதாம் அன்பு நெஞ்சைத் தொட்டதாம்
    கண்ணீர் விட்டதாம் தேம்பித் தேம்பி அழுததாம்

    பூவின் வருத்தம் தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
    அப்படியே ரோஜா மலர் திரும்பி வந்ததாம்
    அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

    ( கதை )

    இந்தப் பாடல் பள்ளியில் ஏதோ ஒரு போட்டிக்காக பாடப்படுவதாக நினைக்கிறேன். படத்தின் பிற்பகுதியில் அந்தக் குழந்தையே இறந்து விடுவதாக காட்சி அமைப்பு இருக்கும் என்று தோன்றுகிறது.

    டி.எம்.எஸ் பாடும் பாடலில் "குங்குமச் சிமிழே கோபுர விளக்கே தங்கக் கலசமே தாமரைப்பூவே ..எங்கே .. எங்கே நீ எங்கே ?" என்று பாடுகிறார். இறுதியில்

    "பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா - அந்த
    மணத்துக்குள்ளே மனதைப் போல நான் இல்லையா
    நேரு மாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா - உன்
    நேரிலேதான் நான் இருக்கேன் தெரியலையா

    குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும் தங்கக் கலசமும் தாமரைப்பூவும்
    இங்கே.. இங்கே.. நான் இங்கே.."

    என்று எம்.எஸ்.ராஜேஸ்வரி குரல் கொடுக்கிறார்.

    நம்ம அப்துல் கலாம் சார் மறைவுச் செய்தி கேட்டதும் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. வகுப்புகளின் நடுவே கிடைத்த சின்ன இடைவேளையில் நண்பர்களுடன் ஓடிச்சென்று ஒரு அறைக்குள் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து வணங்கி விட்டு
    வந்த நினைவு இன்னும் மனதில் மணக்குது...

    அக்கினிச் சிறகுகள் நெருப்பில் எரிவதில்லை.

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355, uvausan liked this post
  13. #2177
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Cloud O'Nine songs of NT Vs Passing Cloud Songs of NT!

    ஒன்பதாம் அடுக்கு மேகங்கள் Vs கடந்து செல்லும் மேகங்கள்

    நேற்று சன்லைப் சானலில் உத்தமபுத்திரன் திரைக்காவியத்தை ஈடுபாட்டுடன் ரசித்த போது சில பாடல்கள் இந்த எண்ணத்தை தூண்டி விட்டன !
    சிவாஜிசெந்தில் சார்..

    இந்தப் பாட்டை எந்த மேகத்திரளினுள் பொதியலாம் ?


  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2178
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    ஆஹா! அற்புதம். மனதுக்குள் ரொம்ப நாள் தூங்கிக்கிட்டு இருந்த பாட்டை சிலிர்க்க வச்சி எழ வச்சுட்டீங்க. அப்படியே பாடல் முழுக்க மனசுல ஓடுது. இதுதான் எங்க மது அண்ணா என்பது. அசத்தீட்டீங்க அண்ணா!

    இப்படிப்பட்ட பாடல்களை நீங்க ஞாபகப்படுத்தி மீண்டும் அதை நாங்கள் அனுபவிக்கும் சுகமே அலாதி.

    மது அண்ணா! இந்தாங்க. ஒரிஜினல் வீடியோ இல்லைன்னாலும் ஆடியோ வடிவில் கேட்டு இன்புறுவோம். மறுபடி மறுபடி ஆயிரம் நன்றிகள் அண்ணா! பாடல் வரிகளுக்கும் நன்றி மதுண்ணா!

    Last edited by vasudevan31355; 28th July 2015 at 12:02 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks madhu thanked for this post
    Likes rajeshkrv, Russellmai liked this post
  17. #2179
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிசெந்தில் சார்..

    இந்தப் பாட்டை எந்த மேகத்திரளினுள் பொதியலாம் ?
    Madhu

    மது சார்
    மேகக் கூட்டங்கள் எல்லாமே மழை மேகங்களாய் மாறிவிடுவதில்லை
    திரண்டு வரும் கார்மேகங்கள் மழை பொழியும் அதில் நனையும் சுகமே அலாதி!! அப்படித்தான் அன்பே அமுதே பாடலும்!
    கடந்து செல்லும் மலைமுகட்டு மேகத்திரள் நமது உடலையும் மனதையும் குளிர்விப்பது போல ...தருணம் பொருத்தமானதாக இருக்க வேண்டுமே!
    மலைமுகட்டில் நின்று அனுபவிப்பது போல உத்தமபுத்திரன் திரையில் பார்க்கும்போது மட்டுமே இப்பாடல் காட்சியமைப்பு நம்மைக் குளிர்விக்கிறது !
    ஆனால் நம்மை ஒன்பதாம் அடுக்கு மேகத்திரளுக்கே தூக்கிச் செல்லும் திரில் ...இப்பாடலில் இல்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து!!
    கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றி
    செந்தில்

  18. Likes madhu, Russellmai liked this post
  19. #2180
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    உங்களுக்கு என் அன்புப் பரிசு.

    'உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன
    அந்த உண்மையைச் சொல்லாயோ'

    'சொல்லத்தான் வந்தேன் ம்ஹூம்... ம்ஹூம்
    அதை எப்படிச் சொல்லுவதோ?'



    'வாழி நலம் சூழ' என்றே வாழ்த்துகிறோம் வாழ்க
    வருடம் ஒருநாள் வருமிந்தத் திருநாள் வாழ்வில்
    நூறு முறை வரவே'

    Last edited by vasudevan31355; 28th July 2015 at 12:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Thanks madhu thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •