Page 216 of 400 FirstFirst ... 116166206214215216217218226266316 ... LastLast
Results 2,151 to 2,160 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2151
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2152
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  5. #2153
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  7. #2154
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2155
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2156
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் ரசித்த பாடல்.

    'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்'



    ஒரு அருமையான பக்தி மற்றும் புராண சம்பந்தப்பட்ட, ஒரு காலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து ரசித்த ஒரு போட்டிப் பாடல்.

    நாரத முனியின் 'நாராயண' செருக்கை அடக்க அகத்திய முனிவர் நாரதரின் உள்ளங்கையில் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை வைத்து 'அது துளியும் சிந்தாமல் உலகத்தை ஒருமுறை சுற்றி வர வேண்டும்' என்று கூறிவிட, எண்ணெய் சிந்தி விடக் கூடாதே என்று முழுக் கவனம் வைத்து, அந்த நேரங்களில் 'நாராயணா' நாமத்தை மறந்தவராய் உலகத்தை சுற்றி வர, அதற்கு அகத்தியர் 'இன்று நீர் நாராயணனை எத்தனை முறை நினைத்தீர்?' என்று நாரதரிடம் கேள்வி கேட்க, அதற்கு நாரதர் கடுப்புடன், 'என்னை எங்கே நாராயணனை நினைக்க வைத்தீர்? எண்ணெய் சிந்தாமல் இருக்க வேண்டும் என்றுதானே என்னை நினைக்க வைத்தீர்!' என்று புலம்ப, நாரதராக டி,.ஆர்.மகாலிங்கமும், நாரத முனியாக சீர்காழி கோவிந்தராஜனும் அமர்க்களப்படுத்த.....

    தன்னை அவமானப்படுத்திய அகத்தியரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இலங்கை அதிபதி ராவணேஸ்வரனிடம் செல்கிறார் நாரதர். வீணைக்குக் கொடி கொடுத்த வீணைக் கொடியுடைய வேந்தனிடம்

    'இசையில், அதுவும் வீணை மீட்டலில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்று அகத்தியர் மார் தட்டுகிறார்'

    என்று நாரதர் தெளிவாகப் பற்ற வைக்க, ராவணன் சினந்து அகத்தியரை சந்திக்க வருகிறான்.

    அவனை வரவேற்கும் அகத்தியர் அவன் வந்த காரணம் கேட்கிறார். 'நீர் வீணை வாசிப்பதில் வல்லவரானால் என்னுடன் போட்டியிட வேண்டும்' என்று ராவணன் கூற, ராவணைன் இசை மகத்துவம் அறிந்த அகத்தியர் முதலில் அதை மறுக்க, ராவணன் சற்றே ஆணவம் கொண்டு அகத்தியரை நையாண்டி செய்ய, இறுதியில் 'ஈசன் ஒருவனுக்குத்தான் கட்டுப்படுவேன்' என்று கூறி அவனுடன் வீணைப் போட்டிக்குத் தயாராகிறார் அகத்தியர்.




    அகத்தியரின் ஆசிரமக் குடிலிலேயே போட்டி நடக்க ஏற்பாடாகிறது. போட்டிக்கு 'யார் நடுவர்?' என்று ராவணன் கேட்க, 'போட்டியை ஆரம்பித்து வைத்த நீங்களே நடுவரையும் தேர்ந்தெடுத்து விடுங்கள்' என்று அகத்தியர் கூற, கலைமகளை நடுவராக இருக்க அழைக்கிறான் ராவணன். கலைமகளோ 'எதற்கு வம்பு?' என்று நயமாக இருவரிடமும் பேசி 'நம்மாலாகாது' என்று ஒதுங்கி விடுகிறாள்.

    இறுதியில் 'இசைக்கு உருகாதது எது?' என்று இருவரும் ஆராய்ந்து இறுதியில் 'கல் உருகாது' என்று முடிவெடுத்து அந்தக் கல்லை வீணை இசையால் யார் உருக வைக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள் என்று முடிவாகிறது. அதற்கு தென் மலையாம் பொன் மலையைத் தேர்ந்தெடுத்து அந்த மலையை நடுவராக நியமிக்கிறான் ராவணன்.

    இப்போது தேவர்கள், மகரிஷிக்கள் சூழ்ந்திருக்க, அகத்தியருக்கும் ராவணனுக்கும் இசைப் போட்டி நடக்க ஆரம்பிக்கிறது.

    ராவணேஸ்வரன் வீணையைக் கையில் எடுத்து செருக்குடன் அகத்தியரைப் பார்த்துப் பாட ஆரம்பிக்கிறான்.


    'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்
    நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
    எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்'

    என்று கொக்கரிக்கிறான்.

    அவன் கொட்டம் அடக்க பதிலுக்கு அகத்தியர் அடக்கமாய், ஆனால் கம்பீரமாய்,

    'வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்
    அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து
    உன்னை வென்றிடுவேன்... உன்னை வென்றிடுவேன்'

    என்று சிவனை மனதில் தொழுது ராவணனுக்கு மரண அடி கொடுக்க சித்தமாகி பதிலுக்குப் பாடுகிறார்.

    ராவணன் தன்னுடைய இசையில் மயங்கி சிவனே எழுந்து ஓடோடி வந்தவன் என்று ஆண்டவனையே இழிவு பேசி அகந்தை தொனிக்க பாடுகிறான்.

    இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்
    என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்
    உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
    எழுந்'தோடி' வந்தான்
    என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்

    என்று அகத்தியரின் 'எம்பெருமானை' எள்ளல் செய்கிறான். 'தோடி' ராகத்தின் மகிமையையும், அதில் தனக்கிருக்கும் திறமையையும் சாமர்த்தியமாக எடுத்துரைக்கிறான்.

    'நடித்தான் தமிழை
    படைத்தான் இசையை
    வடித்தான் தன்னை மறந்தனனே
    முத்தமிழ் புலமை சித்தமமும்
    எனது வித்தகம் கண்டு பரிவுடனே
    என் இசை கேட்டு எழுந்'தோடி' வந்தான்'

    தமிழைப் படைத்து, இசையை வடித்து, நடிப்பின் நாயகனாம்(!)அந்த 'திருவிளையாடல்' புரியும் ஈசனே ராவணன் இசையில் மயங்கி அவனை மறந்தனாம். ராவணன் சொல்லிக் காட்டுகிறான்.


    விடுவாரா அகத்தியர்? பதில் சூடு கொடுக்கிறார் பத்துத் தலையனுக்கு.

    'ராகத்தின் பெயரை வைத்தே என் ஈசனை எள்ளி நகையாடுகிறாயா?... விட்டேனா பார் உன்னை?' என்று கைவசம் 'ஆரபி' ராகத்தை ஆயுதமாய் எடுக்கிறார்.

    ராவணனை சுட்டிக் காட்டி,

    'ஆரபிமானம் கொள்வார்?
    ஆரபிமானம் கொள்வார்?'

    அதாவது,

    'இவ்வளவு திமிர் பிடித்த அரக்கனே! ராவணனே! உன் மேல் யார் அபிமானம் (ஆரபிமானம்) கொள்வார்?' என்று பரிதாபக் கேலிக் கேள்வி கேட்கிறார்.

    'பெரும் அகந்தையினால் உனது அறிவது மயங்கிட
    இறைவனை இகழ்ந்தனையே!
    அகந்தையினால் உனது அறிவது மயங்கிட
    இறைவனை இகழ்ந்தனையே!
    ஆரபிமானம் கொள்வார்?'

    என்று செம குடைச்சல் கொடுக்கிறார்.

    அது மட்டுமா?...

    'வெற்றி எட்டு திசை முட்டவே
    பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா?
    தனித்து நினைத்து மனத்தை மறைத்து
    கொடுத்த வரத்தை கணத்தில் மறந்தனையே
    ஆரபிமானம் கொள்வார்?'

    என்று அவனுக்குப் புத்தி புகட்ட முயற்சிக்கிறார்.

    அதற்கு ராவணன் கூறுவது என்ன?

    'சண்முகப்பிரியன் என்னும் தைரியமா?
    இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
    சண்முகப்பிரியன் என்னும் தைரியமா?
    இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?'

    'சண்முகப்ப்ரியா' ராகத்தைக் கொண்டு ஷண்முகனின் பிரியனான அகத்தியரை சாடி, அவரை அசைத்துப் பார்க்க முற்படுகிறான் ராவணன். இசையில் 'எனக்கு எவரும் ஈடு இணையில்லை' என்று எக்காளமிடுகிறான்.




    அகத்தியர் பதிலுக்கு வரிந்து கட்டுகிறார்.

    'நாடகமா? தர்பார் நாடகமா?
    அடக்குமுறை தர்பார் நாடகமா?
    எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?
    அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?'

    'என்ன? 'தர்பார்' நாடகம் நடத்துகிறாயா? அதுவும் அடக்குமுறை தர்பார் நாடகம். ஈசன் அருள் இல்லாமல் எதுவும் நடந்து விடுமா?'

    என்று அறிவுரை கூறுகிறார்.

    அதெல்லாம் எங்கே இவன் காதில் விழுகிறது? அடுத்த தற்பெருமைக்குத் தாவுகிறான் ராவணேஸ்வரன்.

    "அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்"

    பதிலுக்கு அகத்தியர்,

    'அட சும்மா இருய்யா! எல்லாமே உன்னுடயதுதானா? எதற்கு உனக்கு வீண் ஆணவம், அகம்பாவம்?'

    என்ற அர்த்தத்தில்,

    'அனைத்தும் உன் வச(ம்)ந்தானா? ஆணவம் ஏன்?'

    என்று அடக்குகிறார் அடங்காத அரக்கனை.

    'மோகன கானம் நான் மீட்டிடுவேன்'---- இது ராவணன்.

    'மனோ'லயம்' இல்லை உன் பாட்டினிலே'---- இது அகத்தியர்

    'பாகேஸ்வரியோ...பரம்பொருளோ
    பாகேஸ்வரியோ...பரம்பொருளோ
    பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
    பாற்கடலில் துயிலும் சாரங்கனோ'

    என்று அனைத்து தெய்வங்களையும் ராவணன் அலட்சியப்படுத்தி,

    'வச்சிருக்கேன்பா ஒரு ராகம்.. எப்படிப்பட்ட கடவுள் ஆயினும் கட்டிப் போட்டுவிடும் ராகம்'

    என்பதை இப்படிப் பாடுகிறான்.

    'யார் வந்தால் என்ன? காம்போதி'...

    என்று காம்போதி ராகத்தை இசைத்துக் காட்டி,

    'யார் வந்தால் என்ன காம்போதி
    ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
    ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்'

    என்று காம்போதி ராகம் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கிறான் தெய்வங்களைத் தோற்கடிப்பதற்கு.

    'நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
    எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்'

    தன்னம்பிக்கை கொஞ்சமும் தளராமல் ராவணன் ரகளை செய்கிறான்.

    'நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ...எனக்கு'...

    'கௌரி மனோகரி துணையிருப்பாள்'

    தெய்வத்தின் பெயரோடு ராகத்தின் பெயரை சாமர்த்தியமாக நுழைக்கிறார் இருபொருள்பட அகத்தியர்.

    அத்தோடு விட்டாரா?.... மிக அழகாக,

    'கல்யாணி மணாளன் கை கொடுப்பான்'

    என்று 'கல்யாணி' ராகத்தோடு தான் வணங்கும் கல்யாணியின் மணவாளன் துணையும், ஆசியும் தனக்கு உண்டு என்று பதமாகக் கூறுகிறார்.

    'சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்
    சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்
    சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
    சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்.

    அந்த 'பைரவி' துணைவன் பாதம் பணிந்து
    உன்னை வென்றிடுவேன்
    உன்னை வென்றிடுவேன்'

    என்று அகத்தியர் ராவணனை நடுக்கம் கொள்ள வைக்கிறார்.

    உச்சகட்டத்திற்கு வருகிறான் ராவணன்.

    என்ன கேட்கிறான் பாருங்கள் கில்லாடி?

    'தபமகரிசரி மபதததபபா தபதா.... சமமா?'

    "யோவ் அகத்தியரே! நீ எனக்கு சமமா?" என்று இறுமாப்பு கொள்கிறான்.

    அகத்தியரும்,

    'கமகசா நிதநி சமகசா... சமமா? நீ சமமா?

    என்று அகத்தியரும் இறுமாப்பை எதிர்கொள்கிறார்.

    'பநிசரிமகரி நிதநிதப... நீ சரிசமமா?' ----ராவணன்.

    'தநிசா நிதாநி (நிதானி) தமகரிசா மதமா? நீ சதமா?'----அகத்தியர்.

    என்று கையால் அடக்கல் வேறு இந்த அகத்தியருக்கு. 'நிதாநி' என்பதை 'சற்று நிதானி' என்று அர்த்தம் கொள்ள வைப்பார். மதம் கொண்டு திரிகிறாயா என்று கேட்பார்.

    'நிதபமகரிச மநிதா!... நீ பாதக மனிதா'...

    அகத்தியரை ஜாடையாகத் திட்டித் தீர்ப்பான் ராவணன்.

    'சரிகமகசரி தமபதநி சநிதநிம... பரிகாசமா? சாகசமா?'

    அகத்தியர் கொஞ்சமும் சலியாமல், அலட்டாமல் 'பரிகாசம் செய்கிறாயா?.. அதைப் பெரிய சாகசம் என்று நினைக்கிறாயா புத்தி கெட்டவனே!' என்பார் அமர்க்களமான பதிலோடு.

    இப்படியே பாடல் ஸ்வரப் போட்டியுடன் தொடரும்.


    ராவணன் தன் அவசர புத்தியாலும், செய்கையாலும் வீணையின் கம்பிகளை அசுரத்தனமாக மீட்ட, அந்த அரக்கனின் விரல் வலிமை தாங்க மாட்டாமல் கம்பித் தந்திகள் ஒவ்வொன்றாக அறுந்து போய் வீணை இசைக்க முடியாமல் பாழடைய,

    பொறுமையோடு காத்திருந்த அகத்தியர் இப்போது வீணையை அருமையான இசையால் 'பிடிபிடி'யென்று பிடிக்க, 'திருதிரு'வென ராவணன் செய்வதறியாது திகைத்து முழிக்க, அகத்தியரின் அரும் இசையினால் பொன்மலை உருக ஆரம்பித்து விடுகிறது. நடுவராக நின்று அகத்தியரே வெற்றி பெற்றவர் என்று தீர்ப்பையும் கல்மலை தன் உருகலால் கூறி விடுகிறது.

    'அகத்தியரே! நாம் இருவருமே சிவ பக்தர்கள்தானே. நம்மில் யார் ஜெயித்தால் என்ன?'

    மீசையில் மண் ஒட்டாத குறையாக ராவணன் தோல்வியை ஒத்துக் கொள்ள மனமில்லாதவனாய் இப்படி அகத்தியரிடம் கூறுகிறான்.

    இனி வருவதுதான் எல்லாவற்றையும் விட டாப்.

    "அகத்தியரே! நான் தோற்றேன் என்று சொல்வதைவிட தாங்கள் வென்று விட்டீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்"

    என்று போடுவானே ராவணன் தன்னை விட்டுக் கொடுக்காமல் ஒரு போடு! அமர்க்களம்.

    அகத்தியர் வென்றதற்கு தன்னிடம் ஏதாவது பரிசு கேட்குமாறு ராவணன் அவரிடம் கூற, அதற்கு அகத்தியரின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

    'இந்தத் தென்னகத்து மக்களை நீங்கள் கொடுமைப்படுத்தாமல் நிம்மதியாக வாழவிட்டால் அதுவே போதும் எனக்கு'

    ஈழம் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களுக்குப் பிரச்சனைதானோ!

    ராவணனுக்கும் அகத்தியருக்கும் நடந்த இசைப் போட்டியில் பொதுவாக நின்று தீர்ப்பு வழங்கியதால் அந்தப் பொதுமலை அதற்குப் பிறகு 'பொதிகை மலை' என்று அகத்தியரின் அருள்வாக்கால் பெயர் மாற்றம் பெற்றதாம்.



    ராவணனாக நாடகக் காவலரும், அகத்தியராக அம்சமாக குள்ள சீர்காழியாரும் சரியான தேர்வு. மிடுக்குக்கும், தோரணைக்கும் என்றைக்குமே பஞ்சம் இருந்ததில்லை மனோகரிடம். சிசுபாலன், சாணக்யா, இலங்கேஸ்வரன் என்று எத்தனை வேஷங்கள் கட்டியவர்!

    ராகங்களின் பெயர்களைக் கொண்டே தற்பெருமைகளும், புத்தி புகட்டல்களும், வசை பாடுதலுமாய் எவ்வளவு அழகான பாடலுக்குத் தகுந்த இருபொருள் அர்த்தம் பொதிந்த வரிகள்!

    ஏனோ தானோ என்று எதையோ வெட்டி, ஒட்டி மலை செட் அப் என்று காதில் பூ சுற்றுவார்கள்.

    இசை ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான 'குன்னக்குடி'. வீணையின் இசை அம்சம்.
    .
    சும்மா பாடகர் திலகமும், வெண்கலக் குரலோரும் புகுந்து புறப்பட்டிருப்பார்கள். நடிப்பைப் போலவே பாடுபவர்களுக்குள்ளேயும் போட்டிதான். மலை கூட தீர்ப்பு சொல்ல முடியாது.

    அற்புதமான போட்டிப் பாடல். மறந்த நண்பர்கள் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு இன்புறலாம்.


    Last edited by vasudevan31355; 27th July 2015 at 08:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #2157
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - இன்று பதிவு போட மனமே வரவில்லை - இன்று முழுவதும் - உங்கள் பதிவை படித்துக்கொண்டிருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன் - நேரம் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன் . ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் மூன்றே பேர் - ஒன்று சனி - சனீச்வரன் ; இரண்டாவது சண்டீகேஸ்வரர் - மூன்றாவது இராவணன் . அவ்வளவு பெருமை வாய்ந்தவன் தன் சக்தியை எல்லாம் தன் தலை கணத்தால் ( 10 தலைகள் இருந்தால் , தலை கணம் வருவது நியாயம் தான் என்றாலும் ) வீனாக்கிக்கொண்டவன் . அவன் இறைப்பக்திக்கு ஈடாக எதுவுமே சொல்ல முடியாது - அப்படி இருந்தும் தான் கொண்ட கர்வத்தால் ஒரு மனிதனால் மட்டுமே அவன் தன் முடிவை தேடிக்கொண்டான் .

    உங்கள் கை வண்ணத்தில் முதல் முறையாக புராணப்படங்கள் ஜொலிப்பதையும் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது . இந்த பாடல் அன்று ஒலிக்காத இடமே இல்லை - மலை உருகும் காட்சி மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும் ( budget இல் துண்டு விழுந்திருக்கலாம் ) - நல்ல பாடல் , நடிகர்கள் , அவர்களின் அருமைகளை எடுத்துச்சொல்லும் நல்ல நெய்வேலி மணம் .

  13. Likes rajeshkrv liked this post
  14. #2158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே ரூம்.ஒரெ டிரஸ்.எந்தவித ஆட்டங்களும் இல்ல.உடல்மொழிகளாலும்.,முகத்தில் காட்டுகிற உணர்ச்சிகளாலும் மட்டுமே
    பாட்டைக் கொண்டு போகணும்.இந்தப் பாட்டோ சோகத்தோட சந்தோசத்தையும் கலந்து பாட வேண்டிய பாட்டு வேற.சோகம் தூக்கலாயிச்சுன்னா பாட்டோட ரசனை மாறிப்போய்விட வாய்ப்புகள் அதிகம்..இந்த பாடலின் சிச்சுவேசனை கேட்கிற யாராயிலிருந்தாலும் அவங்க மனசுல சோகம்தான்தங்கும்.நடிக்கிறவர்களும் சோகத்தைக் காட்டியேதான் நடிப்பாங்க.அதனால் இந்த மாதிரி பாடல்கள் நன்றாக இருந்தாலும் உணர்ச்சி மயமாக நடிப்பு அமையாதபோது அந்த பாடல்கள் காலம்தாண்டி நிற்பதில்லை.

    அந்தந்த கோணங்களில் காட்டப்பட்ட நடிகர்திலகத்தின் பாவனைகளும் அசைவுகளும் இப்பாடலை உயரத்துக்கே கொண்டு சென்று விட்டது.அலட்டிக்கொள்ளாத நடிப்பில்அசர வைக்கும் பாடலாக மாறிய அதிசயம் இந்தப் பாடல்.


    (கல்யாணமாம் கச்சேரியாம்
    பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
    ஜோர் ஜோர் ஜோர் ஜொஜொ ஜொஜோர்)

    ஜோர் ஜோர்னு பாரதியின் முகத்திற்கு அருகில் சென்று அந்த வார்த்தைகளை பாடும்போது அந்த காட்சிக்குமேற்கூறிய விளக்கம் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
    TMS ன்குரல் வெளிப்படுத்திய உச்சரிப்பை
    பலமடங்காக உயர்த்திக்காட்டிய பாவனை அது.அது காட்சிப்படுத்தப்பட்ட பின்பு தான்TMSக்கே அதன்பலம் புரிந்திருக்கும்.

    அதன் பின் ஒரு சிறுநடை.அந்த உடம்பு அசையற பாணியே தனிதான்.சோகப்பாட்டாவது.
    வாழ்த்துப்பாடாவது.
    அவர் நடந்தாலே போதும்யா.என்ன அழகு.நடைதிலகம்யா.

    மறுபடியும் கல்யாணமாம்..,

    கல்யாணியில் ஆலாபனை
    கண்ணீரில்ஆராதனை(கல்

    ஆலாபனையில் முகம் சொக்கவைக்கும்
    ஆராதனையில் முகம் மயங்க வைக்கும்.
    ஆராதனை என்று முடிக்கும்போது அவர்
    மெல்ல கண்மூடி திறக்கும்போது நம்மையுமஅதுபோல் மெல்ல கண்முடி திறக்க வைக்கும் உணர்வைக் கொண்டு வரும்.


    இப்போது Backround music

    இதுல வருதய்யா அந்த சீன்.நடந்து வந்து
    டீப்பாய்அருகில் வந்துமெல்லக் குனிந்து
    காகிதங்களைப ப்ப்பூபூ என்று ஊதி தள்ளும் ஸ்டைலுக்கு எந்த நடிப்பிலக்கணம் யாரால் எழுதப்பட்டு உள்ளது?
    அட்டகாசமான ACT(K)ING.


    நான் வளர்த்த பூங்குருவி வேறிடம்தேடி

    இப்போதுகையசைவில் கலங்கடிப்பார்

    செல்ல நினைத்தவுடன்அமைந்தம்மா

    அதற்கொரு ஜோடி

    நிழல்படமாய் ஓடுதம்மா என் நினைவுகள் கோடி

    அவரின் நிழலும் நடிப்பதற்கு உண்டான ஆதாரம் இப்போது காட்சிகளாய்...

    அந்த நினைவுகளால் வாழ்த்துகிறேன் காவியம் பாடி
    (கல்
    பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்ற காட்சி.அழகியல் நடிப்பு எதுஎன்பதற்கு இதுவே சாட்சி.

    ஏடெடுத்தேன் எழுதிவைத்தேன்நான் ஒரு பாட்டு

    silhouette எனப்படும் நிழல் படத்தில் கூட நடிப்பை காட்டக்கூடிய நடிகன் உலகில் நீ மட்டுமே
    .அதை சாதாரணனும்எளிதில் புரிந்து கொள்வான் இந்தக் கணமே.


    அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தைப் போட்டு
    அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்இறைவனைக் கேட்டு
    அவன் நினைத்தது போல் மணமுடிப்பான் மாலையைச் சூட்டு
    (கல்
    மறுபடியும் அந்த ஜோர் ஜோர் பாவனை..
    அட்டகாசப்படுத்தும்.




    இப்போது Backround music

    ஒன்பது வகையான பாவங்களை தொன்னூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச் சொல்வேனா?
    இது கண்ணாதாசன் சொன்னது.
    தொன்னூறு வகை பாவங்கள் காட்டப்படும் காட்சிகளின்அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்.


    காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
    அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
    தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
    உந்தன் தலைவனுடன் நலம் பெறுவாய் வாழிய மானே!
    இடது கையை தூக்கி ஒரு விரலை காட்டி வாழிய மானே என்று வாழ்த்தும் ஸ்டைலுக்கு வயது வித்தியாசமின்றி கைதட்டல் பறக்கும்.'
    அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும்.


    காமிரா உலாவலும், கோணங்களும் ரசிப்பை தூண்டும்.

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes JamesFague, uvausan, Russellmai liked this post
  16. #2159
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    நீங்க ஒரு ராகமாலிகை.
    எங்கள் மனமே உங்கள் மாளிகை

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv liked this post
  18. #2160
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    நீங்க ஒரு ராகமாலிகை.
    எங்கள் மனமே உங்கள் மாளிகை

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •