Page 210 of 400 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2091
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங் ஆல்

    குறுகிய விடுமுறைக்காக துபாய் செல்ல முடிவெடுத்து இயந்திரக் குதிரையை உசுப்பி வந்தாகி விட்டது.. வழக்கம் போல் துபாய் கலர்புல்லாக வானளாவிய கட்டடங்களுடன் கொஞ்சம் மனம் வெறுத்த மனிதர்களுடனுமாய் காட்சி தருகிறது..

    அடுதத மாதம் முதல் துபாயிலும் பெட்ரோல் விலை உயர்கிறதாம்! மஸ்கட்டில் இப்போதைக்கு ஆகாது என ப்ரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன்

    வாங்க கலை..தாங்க்ஸ்.. கூடிய விரைவில் மீண்டும் எழுதுகிறேன்

    ஆதிராமிடம் மிஸ்டர் கார்த்திக்கின் சாயல் நன்றாகவே தெரிகிறது,,அல்லது என் மனப் பிரமையா

    வாசு சார் விளக்கமான பதிலுக்கு நன்றி.. யெஸ் டேக் கேர் பட் டோண்ட் ரிலாக்ஸ்.. பின்ன எங்களுக்கு கட்டுரைகள் வேண்டுமே

    ஸ்கூல் மாஸ்டர் பார்த்ததில்லை. மற்றமொழிகளில் ந.தி என்பது நான் அறியாத ஒன்று

    சி.செ வாழ்த்துக்கள்..

    சரி வந்ததுக்கு ஒரு பாட்,, பத்மப்ரியா இவரும் வாசுவின் எழுத்துக்களுக்கு அடிமையாம்!


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2092
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பதமாய் இளஞ்சிவப்பாய்ப் பார்க்க இனிதாய்
    இதமாய் இருக்கும் இதழ்

    கனவுடைக் கன்னியரின் கண்களின் கீழ்தான்
    உணர்வினைத் தூண்டும் உதடு

    என்றெல்லாம் ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்!

    எனில் இந்தப் பையனும் பெண்ணும் என்ன சொல்லிப் பாடுகிறார்கள்

    குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத்துடிக்கும் உதடு …ம்ம்\



    இன்னும் நிறைய உதடு பழைய பாடல்கள் வரும் தானே

  4. Likes eehaiupehazij liked this post
  5. #2093
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil HIndu

    காற்றில் கலந்த இசை 14: தனித்துவம் கொண்ட குரல்களின் பாடல்



    இளையராஜாவுடன் ஜென்ஸி...

    தமிழ்த் திரையிசையில் ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர்களைப் போல், மிகச் சில பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்கள் நினைவில் நிலைத்து விட்டவர்கள் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றில் புகழ்பெற்ற பாடல்களின் சதவீதம் அதிகம் கொண்டவர்கள் தனிரகம். பாடகர்களில் ஜெயச்சந்திரனும், பாடகிகளில் ஜென்ஸியும் இப்பட்டியலின் முதல்வர்கள். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் இவர்கள் பாடிய எல்லாப் பாடல்களும் ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவை.

    ஜேசுதாஸ் குரலுடன் ஜெயச்சந்திரனைப் போட்டுக் குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. அதேபோல், (ஆரம்பகால) சுஜாதாவின் பாடல்களை ஜென்ஸி பாடியதாகச் சொல்பவர்களும் உண்டு. உண்மையில், இவர்கள் இருவரின் குரல்களும் ஒப்புமை இல்லாத் தனித்தன்மை கொண்டவை. மெல்லிய உணர்வை அதன் இயல்புடன் வெளிப்படுத்தத் தெரிந்த மிகச் சிறந்த கலைஞர்கள் இவர்கள்.

    ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் உள்ளிட்டோருடன் பாடியிருக்கும் ஜென்ஸி, ஜெயச்சந்திரனுடன் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒன்று ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் ‘ஏ… மஸ்தானா’. ஜெயச்சந்திரன் ஜென்ஸி இணையின் மற்றொரு பாடல், ‘அன்பே சங்கீதா’ படத்தில் இடம்பெற்ற ‘கீதா… சங்கீதா’.

    1979-ல் வெளியான ‘அன்பே சங்கீதா’ படத்தின் நடிகர்கள் தேர்வு பல ஆச்சரியங்களைக் கொண்டது. ராதிகாவுக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடித்திருப்பார். முக்கியப் பாத்திரத்தில் சுமித்ரா, தேங்காய் சீனிவாசன் என்று ’வித்தியாசமான’ படம். ‘அச்சாணி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய காரைக்குடி நாராயணனின் இந்தப் படம் தோல்வியடைந்தது. ஆனால், வெற்றி தோல்விகள் படங்களுக்குத்தான்; இளையராஜாவின் பாடல்கள் அந்த எல்லையைக் கடந்தவை.

    பட்டியலில் அடங்கா இசை

    ‘லாலாலலலா… லாலாலலலா’ என்று புத்துணர்வுடன் தொடங்கும் ஜென்ஸியின் குரலைப் பின்தொடர்வது போல் புல்லாங்குழல் ஒலிக்கும். இனிமையான அந்தக் கலவையைத் தொடர்ந்து அழுத்தமான உணர்வுகளின் தொகுப்பாக வயலின் இசைக்கோவை காற்றில் படரும். காதல் பாடல்தான் என்றாலும், பாடல் முழுவதும் மெல்லிய சோகம் தொனித்துக்கொண்டே இருக்கும்.

    பாந்தமான கம்பீரத்துடன் ‘கீதா… சங்கீதா’ என்று பல்லவியைத் தொடங்குவார் ஜெயச்சந்திரன். ‘ஜீவ அமுதம் உன் மோகனம்’ எனும் வரிகளைப் பாடும்போது ஆண் குரலுக்குள் இத்தனை மென்மை இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். ‘கண்ணா… என் கண்ணா’ என்று பதில் தரும் ஜென்ஸியின் குரலில் இருக்கும் மெல்லிய நடுக்கம், காதலில் தடுமாறும் இளம் இதயத்தின் நுட்பமான பதிவு.

    இப்பாடலின் நிரவல் இசை முழுவதும் கடந்த காலத் தருணங்களை நினைவூட்டும் இசைக்கூறுகளைக் கொண்டது. நகரம் அல்லது சிறு நகரம் ஒன்றின் தெருக்களின் சித்திரத்தை இப்பாடல் மனதுக்குள் வரையும். மதிய வேளைக்கும் மாலை நேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் மனதுக்குள் பதிவான காட்சிகளை இப்பாடல் தொகுத்துத் தரும். காதல், சோகம் எனும் பட்டியல் உணர்வுகளைத் தாண்டி மிக நுட்பமான உணர்வுகளைத் தரும் பாடல்களை உருவாக்கியதில் இளையராஜாவின் பங்கு மகத்தானது. அவற்றில் ஒன்று இப்பாடல். எச்சரிக்கை: இப்பாடல் யூட்யூபில் காட்சி வடிவிலும் கிடைக்கிறது. அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, ஒலி வடிவில் மட்டும் இப்பாடலைக் கேட்பது நலம்.

    நிழல் மேகத்தின் பாடல்

    படத்தின் தலைப்பைக் கேட்டவுடன் பலரது நினைவில் வரும் பாடல், ‘சின்னப் புறா ஒன்று’. தனது இசையுலக வாழ்வின் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த எஸ்.பி.பி. உணர்வுபூர்வமாகப் பாடிய பாடல்களில் ஒன்று இது. இயலாமையின் வலியைப் பிரதிபலிக்கும் பியானோ இசையைத் தொடர்ந்து, சோக தேவதையின் அசரீரி போல் எஸ்.பி. ஷைலஜாவின் ஹம்மிங் ஒலிக்கும். இசைக் கருவிகளால் எட்ட முடியாத உயரத்தை, தர முடியாத உணர்வைப் பொழியும் குரலாக அவரது குரல் காற்றை ஊடுருவும்.

    இழப்பின் வலியை உணர்த்தும் பாடலுக்கு, ஒரு இசையமைப்பாளர் எத்தனை நியாயம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் பாடல். பியானோ, வயலின், கித்தார் என்று இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் சோக வண்ணங்களைப் பூசியிருப்பார் இளையராஜா. ‘எந்தன் ராகங்கள் தூங்காது…’ எனும் வரியைத் தொடர்ந்து ஒலிக்கும் தாளத்தின் மாற்றத்தில் ஒரு சின்ன நுணுக்கத்தைக் காட்டியிருப்பார் இளையராஜா.

    ‘நூறாண்டுகள்… நீ வாழ்கவே’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் குரலின் தொடர்ச்சியாகத் எதிர்பாராத வெள்ளம் போன்ற அடர்த்தியுடன் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின், இறுகிய மனதைக் கூட உடைத்து அழச் செய்துவிடும். ‘மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை?’ எனும் வாலியின் வரிகள் அன்பின் இழப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும்.

    ஜெயச்சந்திரன் பாடும் ‘பெத்தாலும் பெத்தேனடா’, இளையராஜா பாடும் ‘ரெண்டு பொண்டாட்டி’ ஆகிய பாடல்களும் இப்படத்தில் உண்டு.

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #2094
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசை மது/ரம் கானங்(கள்)!
    பகுதி 18 : ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யுசிக் மற்றும் டைட்டில் பாடல்கள் வரிசை
    எ வியூ டு எ கில் / A View to A Kill starring ROGER MOORE as JAMES BOND OO7!

    ரோஜர் மூரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம்!!
    சிலிகன் வேல்லி கைப்பற்றுதலில் முனைந்த வில்லன் கும்பலை எப்படி பாண்ட் போட்டுத் தள்ளி உலகை காப்பாற்றுகிறார் என்பதே கதைக் களம்
    தளர்ச்சியின் வெளிப்பாட்டால் மூர் இப்படத்துடன் விலகிக் கொண்டார்
    ஆக்ஷனுக்குப் பஞ்சமில்லை... .... ஆனால் ......சுவாரஸ்யமில்லை!! படமும் சுமாரான ஓட்டத்தில் சுருண்டது.
    வழக்கம்போல இனிமையான கலக்கலான டைட்டில் தீமிசைப் பாடல் ....சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பு!


    Duran Duran's song!





    Last edited by sivajisenthil; 24th July 2015 at 06:14 PM.

  8. #2095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பெரும்பாலான பாடல் காட்சிகளில் துள்ளி குதித்து ஓடி ஆடி பாடுவார் .

    தொழிலாளி
    படகோட்டி
    பல்லாண்டு வாழ்க
    படங்களில் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து சாந்தமாக பாடும் காட்சிகள் மனதை மயக்கும் மதுர கீதங்கள்


  9. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  10. #2096
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குமார் சார்
    பல அபூர்வமான விளம்பர நிழற்படங்கள் நம்மையெல்லாம் அக்காலத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பாராட்டுக்கள். எல்லாமே அபூர்வ பொக்கிஷம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2097
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்களுடைய அசராத உழைப்பில் வெளிவரும் ஒவ்வொரு பதிவும் ஒரு முனைவர் பட்ட ஆய்விற்குத் தகுதியுடையவை. பாலாவின் பழைய பாடல்களாகட்டும், அபூர்வமான காட்சி ஆய்வுரைகளாகட்டும், அனைத்துமே தங்களுடைய தனித்துவம் வாய்ந்த எழுத்தில் மிளிர்கின்றன.
    தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    தாங்கள் கூறியது சரி. ஸ்கூல் மாஸ்டர் தமிழில் எங்கள் குடும்பம் பெரிசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதி மதுரா அனுராதா கன்னட ஸ்கூல் மாஸ்டர் பாடலின் மெட்டே தமிழிலும் பயன்படுத்தப்ப்ட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  13. #2098
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    athi mathura anuraga in kannada

  14. #2099
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony Breaker

    மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம்
    பகுதி 19 : ஜாங்கோ (அல்லது டிஜாங்கோ) Franco Nero in and as D'Jango!
    ஜாங்கோ ஒரு புகழ் பெற்ற கௌபாய் பாணி திரைப்படம்
    பிராங்கோ நீரோ என்னும் துடிப்பான கதாநாயகர் ஜாங்கோ கதாபாத்திரத்துக்கு உயிரூட்டினார்!!
    இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பும் டைட்டில் பாடலும் மறக்க முடியாதவை


    Last edited by sivajisenthil; 24th July 2015 at 11:47 PM.

  15. #2100
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'குழந்தை உள்ளம்' (1969)

    அடுத்து பாலா தொடருக்குப் போவதற்கு முன்னால்.

    ஜெமினி சொல்ல சொல்லக் கேட்காமல் சாவித்திரி சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய, அந்த பிடிவாதத்தின் விளைவாக 'குழந்தை உள்ளம்' வந்து விழுந்தது. ஜெமினியின் வாக்கு மெய் ஆனது. சாவித்திரியின் நம்பிக்கை சரிந்து விழுந்தது.

    தமிழ், தெலுங்கு இரண்டிலும் கோலோச்சிய, அதுவும் 'நடிகையர் திலகம்' என்று பட்டம் வாங்கிய நடிகை நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்கலாம். விதி, ஆசை இரண்டும் யாரை விட்டது?

    சரி! ஸ்ரீசாவித்திரி புரொடக்ஷன்ஸ் தயாரித்த, அதிகம் பேருக்குத் தெரியாத, 'குழந்தை உள்ளம்' படத்தின் கதையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் சுருக்கமாக இங்கு அளிக்கிறேன். பிற்பாடு தொடருக்கு வருகிறேன்.



    காட்டுக்குள்ளே திரிந்து ஓவியங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் ஜெமினி அங்கு வேறு என்ன செய்வார்? நிச்சயம் அங்கு ஒரு பெண்ணைப் பார்ப்பார் இல்லையா? காட்டுவாசிப் பெண்ணான வாணிஸ்ரீயை சொன்னபடி பார்த்து லவ்ஸ் விடுகிறார். அவ்விடமும் சம்மதமே. ஆனால் வாணிஸ்ரீயின் முறைமாமன் முரட்டு வில்லன் மனோகர் 'வாணிஸ்ரீயை கட்டிக் கொண்டே தீருவேன்' என்று உறுதியாய் இருக்கிறார். வாணிஸ்ரீ இதற்கு ஒத்துக் கொள்வாரோ? இல்லை. அப்புறம் ஜெமனி வாணிஸ்ரீயை யாருக்கும் தெரியாமல் காட்டிலேயே கல்யாணம் செய்து அங்குள்ள ஒரு வீட்டில் குடித்தனமும் செய்கிறார்.

    ஊரிலிருந்து வேலைக்காரப் பெரியவர் ரங்காராவ் ஜெமினியைத் தேடிக் காட்டுக்கு வருகிறார். 'ஜெமினியின் அம்மா சாந்தகுமாரிக்கு உடல்நிலை மோசமாகி விட்டது... உடனே புறப்பட வேண்டும்... அம்மா ஜெமினிக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்'... என்று ரங்காராவ் கூற, ஜெமினி தனக்கு வாணிஸ்ரீயுடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ரங்காராவிடம் சொல்கிறார். ரங்காராவ் வாணிஸ்ரீயை 'இப்போது அழைத்து வர வேண்டாம்' என்று சொல்லி ஜெமினியைத் தனியே ஊருக்கு அழைத்துப் போகிறார்.

    ஜெமினி அம்மாவிடம் தனக்கு வாணியுடன் நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல, முதலில் அதை ஏற்க மறுக்கும் சாந்தகுமாரி பின் மனம் மாறி, ஜெமினியிடம் காட்டுக்குச் சென்று வாணிஸ்ரீயை அழைத்து வரச் சொல்கிறார். ஜெமினியும் சந்தோஷமாக வாணிஸ்ரீயை அழைத்து வர காட்டிற்குப் போக, அங்கு அவருக்கு பேரதிர்ச்சி. காட்டில் வெள்ளம் வந்து காட்டையே அழித்துவிட்டதாகவும், அதில் வாணிஸ்ரீ இறந்து விட்டதாகவும் அங்கிருப்பவர் சொல்ல மனம் உடைந்து ஊர் திரும்புகிறார் ஜெமினி.

    பின் அம்மாவின் வற்புறுத்தலால் சௌகார் ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவில் தன்னுடைய துயர காதல் கதையை சௌகாரிடம் மறைக்காமல் சொல்லியும் விடுகிறார். எல்லா கதையும் தெரிந்த சௌகார் ஜெமினியிடம் வாணிஸ்ரீயை மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறார். வாணிஸ்ரீயை மறக்க முடியாமல் தவிக்கிறார் ஜெமினி.

    இதற்கிடையில் வாணிஸ்ரீ காட்டில் உயிருடன் தப்பித்து ஜெமினியின் குழந்தைக்குத் (ரோஜாரமணிக்கு பையன் ரோல்) தாயாகிறார். தாய்மாமன் வில்லன் மனோகர் இப்போது மனம் திருந்தி அண்ணனாய் இருந்து வாணிஸ்ரீயை கவனித்துக் கொள்கிறார்.

    இங்கோ காதல் மன்னனின் இன்னொரு முயற்சியால் சௌகாருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. காட்டில் வாணிஸ்ரீயும், நாட்டில் சௌகாரும் ஒரே சமயத்தில் குழந்தைகளை தாலாட்டி 'உத்தமபுத்திரன்' பட ரேஞ்சுக்கு ஒரு பாடலில் வளர்க்கிறார்கள். '(பூ மரத்து நிழலமுண்டு')

    ஜெமினி தன்னைத் தேடி வராதது கண்டு கவலை கொள்கிறார் வாணிஸ்ரீ. தன் பையன் ரோஜாரமணி, மாமன் மனோகர் சகிதம் பட்டணம் புறப்பட்டு ஜெமினையைத் தேடுகிறார். ஒருவழியாக ஜெமினியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போனால் அங்கு சௌகார் தான் ஜெமினியின் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் வாணிஸ்ரீயைத் தெரிந்து கொண்டு, சென்டிமென்ட் டயலாக் சொல்லி, 'ஜெமினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது...அவர் மனைவி சந்தோஷமாக இருப்பதை தடை செய்ய வேண்டாம்' என்று சொல்லி வாணிஸ்ரீயை திருப்பி அனுப்பி விடுகிறார். வாணிஸ்ரீயும் சௌகாருக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து, இறுதியில் ஜெமினியின் நினைவால் தன் உயிரையும் தியாகம் செய்து விடுகிறார். மனோகர் இப்போது பையனை வளர்க்கிறார். ரோஜாரமணியை படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்று துடிக்கிறார்.



    ஜெமினியின் இரு குழந்தைகளும் ஒன்றையொன்று தற்செயலாகச் சந்தித்து இணைபிரியா நண்பர்கள் ஆகின்றனர். அண்ணன் தங்கையாகவே பழகுகின்றன. எல்லா விஷயமும் தெரிந்த ரங்காராவ் நைஸாக வாணிஸ்ரீயின் பையன் ரோஜாரமணியை ஜெமினி வீட்டிற்கு அடிக்கடி கூட்டி வருகிறார். இரு குழந்தைகளின் நட்பும் இறுகுகிறது. சௌகாரின் கோப குணத்தால் தனக்குத் தெரிந்த எதையும் சொல்ல முடியாமல், தெரிந்தால் ஜெமினியின் நிம்மதி கெடும் என்று வாய் பேசாமல் ஊமையாய் இருக்கிறார் ரங்காராவ்.

    காட்டுவாசிப் பையன் ரோஜாரமணி என்பதால் 'அவனுடன் பழகக் கூடாது' என்று சௌகார் தன் மகள் ஷகீலாவைத் தடுக்கிறார். ரொம்ப காலமாக அந்த வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல பாம்பு யாரையும் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அந்த பாம்பை பிடித்துக் கொல்ல சௌகார் ஒரு பாம்புப் பிடாரனை அழைத்துவர ரங்காராவிடம் சொல்ல, ரங்காராவ் பாம்பு பிடிக்கும் பிடாரன் மனோகரைக் கூட்டி வருகிறார். மனோகர் பாம்பைப் பிடிக்கும் போது அது கொத்தி உயிரை விடுகிறார். உயிர் விடும்போது வாணிஸ்ரீயின் பையன் அதாவது தன் மருமகனை ஜெமினி கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார் ஜெமினிதான் அக்குழந்தையின் தகப்பன் என்று தெரியாமலேயே.

    இப்போது ஜெமினி ரோஜாரமணி தன் பிள்ளை என்று தெரியாமலேயே வீட்டில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மனோகருக்குக் கொடுத்த வாக்கின்படி வளர்க்கிறார். ரோஜாரமணி சௌகார் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட, ரங்காராவ் ரோஜாரமணியைத் தன் தோட்டத்து வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார். ஜெமினி மனோகர் ஆசைப்படி அவனை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்.

    ரோஜாரமணியால் ஜெமினிக்கும், சௌகாருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.

    இதை உணர்ந்த ரோஜாரமணி தன்னால்தானே இவ்வளவு பிரச்னையும் என்று வீட்டைவிட்டுக் கிளம்ப, அதைக் கண்ட தங்கை ஷகீலா பின் தொடர்ந்து ஓடிவர, அந்த நேரத்தில் அங்கிருக்கும் பாம்பு ஷகீலாவைக் கொத்திவிட, காட்டுவாசி சிறுவன் ரோஜாரமணி தங்கையின் உடலில் கலந்த விஷத்தை உறிஞ்சி அவளைக் காப்ற்ற, விஷத்தை உறிஞ்சியதால் தான் உயிருக்குத் தவிக்க, முடிவில் தயாரிப்பாளர் சாவித்திரி டாக்டராக வந்து ரோஜாரமணியைக் காப்பாற்றி படத்தைக் காப்பாற்ற முடியாமல் போக, ரங்காராவும் ஜெமினியிடம் எல்லா விவரங்களையும் கூறி ரோஜாரமணி அவருடைய மகன் என்ற உண்மையை சொல்லி விட, இறுதியில் சௌகார் தவறு உணர்ந்து தன் மகளைக் காப்பற்றிய ரோஜாரமணியைத் தன் இன்னொரு குழந்தையாக ஜெமினி மனம் மகிழும்படி ஏற்றுக் கொள்ள, முடிவு ஒரு வழியாக சுபம்..

    அப்பாடா! ஒரு வழியாக எப்படியோ கதை எழுதி முடித்துவிட்டேன். தலை சுற்றுகிறது. என்ன கதையோ! என்ன படமோ!

    அப்புறம் ஏன் எழுதினாய் என்று நீங்கள் குமுறுவது புரிகிறது. எல்லாவற்றையும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 'குழந்தை உள்ளம்' பற்றி பல பேர் பலவிதமாக நினைத்திருப்பார்கள். அதுவும் சாவித்திரியின் சொந்தப்படம் வேறு. இப்போது தெளிவாகி விடுமல்லவா?



    ஜெமினி, வாணிஸ்ரீ, சௌகார் தவிர வி.கே.ஆர், தேங்காய், ரங்காராவ், சுருளிராஜன் மனோகர், வீரப்பன், ரமாப்ரபா, சாந்தகுகுமாரி, சி.கே சரஸ்வதி, சுந்தரிபாய், கௌரவ நடிகையாக 'நடிகையர் திலகம்' என்று நட்சத்திரக் கும்பல். அத்தனையும் வேஸ்ட்.

    படத்தின் மெயின் கதையைவிட நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் அனைவரும் செம பிளேடு போடுகின்றனர். ஜெமினிக்கும், சௌகாருக்கும் பழகிப் புளித்துப் போன ரோல். நமக்கும் இதுமாதிரிப் பார்த்து சலித்துப் போன படங்கள் ஏராளம்.

    எத்தனை படத்தில்தான் ஜெமினி இரண்டு மனைவிகளுக்குக் கணவனாக வருவாரோ! எங்காவது காடு மலை என்று சுற்றி அங்கு ஒன்றை செட் அப் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வந்து விட வேண்டியது. அப்புறம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது. அப்புறம் முதல் சம்சாரம் திரும்ப குழந்தையுடன் உயிரோடு வரும். அப்புறம் இரண்டு சம்சாரங்களுக்கிடையில் சிக்கி நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டியது. சம்சாரங்களையும் தவிக்க விடவேண்டியது. மனிதருக்கு இதே வேலைதானா நிஜ வாழ்க்கையைப் போன்றே?



    வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். வயிறு இவருக்கு அடங்காது. சௌகார் எரிச்சல். இதிலும் முதல் இரவுக் காட்சில் அழுவார். இவர் தரும் சித்ரவதை சொல்லி மாளாது. ரங்காராவின் கடைசி காலம். அவரால் முடியாது. சிரமப் படுவார். இவருக்கு பொருத்தமே இல்லாமல் டி.எம்.எஸ்.பாட்டு வேறு.

    காட்டுவாசிகள் என்று ஆந்திர வாடை அதிகம். வாணிஸ்ரீ காட்டுவாசிப் பெண். அழகாகவே இருக்கிறார். மனோகர் மேல் உடம்பு காட்டி, டார்ஜான் போல காட்டுவாசி டான்ஸ் ஒன்று போடுவது கொஞ்சம் புதுமை. ஜெமினியுடன் 'திருவாரூர்' தாஸ் புண்ணியத்தில் ஒரு ஃபைட்டும் உண்டு. கொடும் வில்லன் திடுமென்று அநியாயத்துக்கு நல்லவராக ஆகி விடுவார்.

    நகைச்சுவை நடிகர்கள் படத்தை சர்வ நாசம் செய்வார்கள். தேங்காய் ஹிப்பி ரேஞ்சுக்கு செம அறுவை. வி.கே.ஆர் முதற்கொண்டு வீரப்பன் வரை அநியாயத்துக்கு நம் பொறுமை சோதிப்பார்கள்.

    ஒரே ஒரு நல்ல விஷயம். சில நல்ல பாடல்கள்.

    'பூமரத்து நிழலுமுண்டு...பொன்னி நதி பாட்டுமுண்டு'

    'அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்'

    தொடரில் வரப் போகும் பாலா பாடல்,

    என்று அருமையான பாடல்கள்.

    'ஓ...தர்மத்தின் தலைவனே' (சுமார்தான்)

    இசை தெலுங்கின் கோதண்டபாணி. நம் தொடர் நாயகர் பாலாவை நமக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். (இவருடைய இனிஷியலும் எஸ்.பி.தான்) அருமையான மூன்று முத்தான பாடல்களைத் தந்திருப்பார். ஒளிப்பதிவு சேகர் சிங் அபாரம். தயாரிப்பு திரைக்கதை, டைரெக்ஷன் சாவித்திரி.



    சாவித்திரி ஹீரோயின் ரோல் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் டாக்டராக சிறிது நேரம் வருவார். ஆனால் சற்று உடல் இளைத்து மிக அழகாக அருமையாக இருப்பார். இயக்கத்தில் கவனம் செலுத்தியதால் நடிக்க அவாய்ட் செய்து விட்ட மாதிரி தெரிகிறது. தவிரவும் இந்த மாதிரி ரோல்களை சாவித்திரி நிறைய செய்தும் விட்டார். தன் கணவருடன் இணைந்தே. 'பார்த்தால் பசி தீரும்' ஒன்று போதாதா?

    புகழ் பெற்ற நடிகைகளாய் இருந்தாலும் நடிகைகள் படமெடுக்கக் கூடாது....இயக்கமும் செய்யக் கூடாது (சில விதிவிலக்காக இருக்கலாம்) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப்படம். 'நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று' தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி பெற்ற கதைகளை திரும்பத் திரும்ப எடுத்தால் அது தோல்வியில்தான் முடியும் என்று சாவித்திரிக்கு ஏன் தெரியாமல் போனது? வேறு புதுக் கதை ஒன்றைக் கையில் எடுத்திருக்கலாம்.

    கொஞ்சம் அபூர்வமான இந்தப் படத்தைப் பற்றித் தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    விரைவில் இப்படத்தின் அருமையான பாலாவின் பாடலோடு உங்களைச் சந்திக்கிறேன்.

    நன்றி!
    Last edited by vasudevan31355; 25th July 2015 at 10:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •