Page 208 of 400 FirstFirst ... 108158198206207208209210218258308 ... LastLast
Results 2,071 to 2,080 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2071
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    Hi good evening to all. Now I an in dubai will be back on
    Sunday.

    Vasu sir what happened to your health, Take care,

    Enjoying the postings of friends
    ஒன்றுமில்லை சின்னா! இடைவிடாமல் பதிவுகள் இடுவதால் என்பால் உள்ள அக்கறை பொருட்டு ரவி சார், கல்நாயக் சார், மற்றும் நண்பர்கள் உடல் நலனில் அக்கறை காட்டச் சொல்லி அறிவுறித்தி இருக்கிறார்கள். என் இதய தெய்வம் மற்றும் நம் நண்பர்கள் ஆசியால் நலமாகவே இருக்கிறேன். ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் பிடிப்பதால் இடையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துத்தான் எழுதுகிறேன். இப்போது கல்ஸ் வந்துவிட்டார். ரவி சார் அருமையான தொடர் ஒன்றைத் தர ரெடியாகி விட்டார். நீங்களும் வந்து விடுவீர்கள். அப்போது சற்று ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன். நீங்கள் உங்கள் பணிகளை முடித்துவிட்டு வாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2072
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி சிவாஜி செந்தில் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2073
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ஆதிராம் சார்

    தங்கள் மனம் மகிழ்ந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!

    உங்கள் சந்தோஷக் குரலிலிருந்தே 'பௌர்ணமி நிலவில்' பாடல் எந்த அளவிற்கு தங்களால் அப்போதிலிருந்தே ரசிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர முடிகிறது.

    நிர்மலாவைப் பற்றி நீங்கள் கூறியுள்ளது அனைத்தும் நிதர்சனமான உண்மையே. அழகு இருந்தும், ஓரளவிற்கு திறமை இருந்தும் ராசியில்லாத நடிகை ஆகி விட்டார். 'தமிழகத்தின் மும்தாஜ்' என்று இவரை நான் அடிக்கடி கூறுவேன்.

    நடிகர் திலகத்துடனான நிர்மலா சம்பந்தப்பட்ட படங்களின் பட்டியலில் 'லஷ்மி கல்யாணம்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்தானே! அனைவரும் வியந்த 'ராமன் எத்தனை ராமனடி' பாடலை படத்தில் மங்களகரமாக அவர்தானே பாடுவார்! அந்தப் படத்தில் கூட கல்யாண பிராப்தம் இல்லாத, ராசி இல்லாத பெண்தான்.

    பெரும்பாலான முன்னணி நடிகைகள் செய்த தவறை முன்னணியில் இல்லாத போதே இவரும் செய்தார். 'அவளுக்கு நிகர் அவளே' என்று சொந்தப்படம் எடுத்து அதலபாதாளத்தில் வீழ்ந்தார்.

    ஆனால் பாரதி, நிர்மலா அப்புறம் வாணிஸ்ரீ என்று மிகக் குறைந்த நடிகைகள் மட்டுமே உடலை ஸ்லிம்மாகவும், அழகாகவும் வைத்துக் கொண்டனர். முகமும் இவர்களுக்கு இயற்கையாகவே நல்ல அழகு. மற்ற நல்ல அழகு நடிகைகள் இருந்தும் எல்லோரும் உப்பிப் போன 'போந்தா' கோழிகள்தான். விஜயா கூட ஸ்லிம்மாக இருந்து பின் ஊதியவர்.

    //இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அசத்தல் பாடலான 'அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே' பாடலைக் கேட்கும்போது கிட்டத்தட்ட அதே காலத்தில் வந்த 'வாடி தோழி கதாநாயகி' (துலாபாரம்) பாடலும் என் நினைவுக்கு வரும்//

    அதே போல 'அடிப் போடி பைத்தியக்காரி', (தாமரை நெஞ்சம்) 'அடியே ஒரு பேச்சுக்குச் சொன்னேன்' (அன்புக்கு ஓர் அண்ணன்) பாடல்களும் சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

    //துவக்கத்தில் நீங்கள் சொன்னதுபோல, இத்தகைய அருமையான பாடல்களை தொகுத்து எஸ்.பி.பி. அவர்களிடம் அளிக்கும்போது அவரிடமிருந்து பெரிய பாராட்டும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கப் போவது நிச்சயம்//

    மிக்க நன்றி ஆதிராம் சார். நிச்சயம் உங்கள் எல்லோருடைய ஆதரவிலும் இதைச் செய்து முடிக்கலாம். ஆடியோ மட்டுமல்ல... அந்தந்தப் பாடலுக்கான வீடியோக்களையும் பாலாவிடம் தருவதற்காக தொகுத்துக் கொண்டு வருகிறேன் பதிவு விளக்கங்களையும் சேர்த்து.
    Last edited by vasudevan31355; 24th July 2015 at 07:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #2074
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்

    மற்றவர்களை மனதார பாராட்டும் உயர்குணம் எப்போதும் உங்களுக்கு உண்டு.

    'கன்னிப் பெண்' பாடலை ரசித்து நல்ல பின்னூட்டம் தந்துள்ளீர்கள். பாடலின் தமிழை சுவைத்ததற்கு நன்றி.

    'நெஞ்சிருக்கும் வரை' பதிவை வாசித்து விட்டு தொலைபேசியில் பாராட்டியதற்கும் நன்றி. எஸ்.எம்.எஸ்ஸுக்கும் நன்றி. காவியத் தலைவி ரசிப்புக்கும் நன்றி.





    உங்களுக்கு 'ஸ்கூல் மாஸ்டர்' ரொம்பவும் பிடிக்கும் என்று தெரியும். ஒன்று தெரியுமா? தமிழ் தவிர மலையாளம், இந்தி, கன்னடம் என்று எடுத்த மொழிகளில் எல்லாம் நம் நடிகர் திலகம் கௌரவ நடிகராக, ஸ்கூல் மாஸ்டரின் அன்புக்குரிய மாணவனாக பட்டை கிளப்புவார். படமே இவரை வைத்துத்தான் முடிவடையும். 'எங்கள் குடும்பம் பெரிசு' என்று 1958 இல் கன்னடத்திலிருந்து தமிழிலும் வெளிவந்தது. சரியா ராகவேந்திரன் சார்?



    1973 ல் வெளிவந்த 'ஸ்கூல் மாஸ்டர்' தமிழில் மட்டுமே அவர் அந்த ரோலைச் செய்யவில்லை. திலகத்திற்குப் பதிலாக முத்துராமன். தமிழில் 'ஸ்கூல் மாஸ்டர்' சிவாஜி செந்தில் சாரின் பிரியத்துக்குரிய 'காதல் மன்னன்'.



    எல்லா மொழிகளிலும் வெற்றி அடைந்த படம். பந்துலுவின் தயாரிப்பு. கன்னடத்தில், இந்தியில் (1959) அவரே ஸ்கூல் மாஸ்டர். மலையாளத்தில் (1964) 'திக்குரிச்சி' ('உலகின் மூதல் இசை தமிழிசையே' தவப்புதல்வனின் போட்டியாளர்) நடிகர் திலகத்தின் நெருங்கிய நிஜ நண்பர்.

    'ஸ்கூல் மாஸ்டர்' தமிழில்,

    'தன்னந் தனிமையிலே
    உடல் தள்ளாடும் வயதினிலே'

    மறக்க முடியாத உணர்ச்சிபூர்வமான பாடல்.

    இந்தப் படத்தில் பட்டை கிளப்பிய பாலாவின் பாடல் விரைவில் அவர் பற்றிய தொடரில்.

    ஒரு கொசுறு செய்தி

    இந்த எல்லா ஸ்கூல் மாஸ்டர் படங்களுக்கும் முன்பாக 1943 இல் இந்தியில் ஒரு 'ஸ்கூல் மாஸ்டர்' வந்து விட்டது.

    நன்றி ரவி சார்.
    Last edited by vasudevan31355; 23rd July 2015 at 07:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks uvausan, eehaiupehazij thanked for this post
  8. #2075
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Take Care Vaasu Sir ! We wait for you as the Care Taker of this thread!!
    Happy upon your safe landing back to the pavilion Chinnak Kannan Sir. Enjoy your rest pause!! Good to hear you back Ravi Sir

    with regards, senthil

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2076
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு வணக்கம்.

    ஹலோ, சின்னக்கண்ணன்..

    எப்படி இருக்கீங்க? பிரயாணம் எல்லாம் எப்படி? லொக்... லொக். தேவலையா?

    //ஆனால் கட்டுப்பாட்டுடன் முன்னுள்ள காருக்கு முத்தா கொடுக்காமல் ஊர்ந்து கொண்டிருக்க, துணிக்கடைகளில் கொஞ்சம் கூட்டம் //

    இதுபோன்று புன்னகை அரும்ப வைக்கும் குறும்பு வரிகளை படித்து சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது. வந்ததும் வராததுமாய் மீண்டும் குட்டிப் பயணமா?

    வாசு சார்,

    உழைப்பின் உருவம் நீங்கள். அனுபவி ராஜா அனுபவியில் கரை தட்டி நிற்கும் கப்பல் ஸ்டில்லை மட்டுமல்ல, அந்தக் கப்பலையே கொண்டுவரும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ‘நெஞ்சிருக்கும் வரை’ பதிவு இன்றுதான் படித்தேன்.

    மனதில் உள்ளதை சொல்கிறேன். வெறும் புகழ்ச்சிக்காகவோ, முகஸ்துதிக்காகவோ அல்ல. உங்களுக்கு பிடித்த பாடகி ராட்சஸி என்றால், தான் ரசித்தவற்றை அதே உணர்வுக்கு எல்லாரையும் கொண்டு வருவதில், அதற்கான உழைப்பில் நீங்கள் ராட்சஸர். காவியத் தலைவி பதிவும் அற்புதம்.

    சாதாரணமாக என்னைப் போல டைப் மட்டும் செய்தாலே அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று என்று எனக்குத் தெரியும். அதிலும் விளக்கங்களுக்கு ஏற்றவாறு காட்சிகளை தரவேற்றுவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். பாராட்டுக்கள். நன்றிகள்.

    சிவாஜி செந்தில் சார்,

    தங்கள் ஜேம்ஸ்பாண்ட் பதிவுகள் பொங்கலில் திராட்சையாய் வித்தியாச சுவை.

    நடிகர் திலகம் திரியின் 16-வது பாகத்தை தொடங்க இருக்கும் உங்களுக்கு முன் கூட்டியே எனது நல்வாழ்த்துக்கள். தங்கள் திருக்கரங்களால் தொடங்க இருக்கும் திரியில் அரிய தகவல்களும், தங்களுக்கே உரித்தான விதவிதமான கோணங்களில், வித்தியாச சிந்தனைகளில் வீடியோ பதிவுகளும் இடம் பெறவும், நமது நட்புறவு மேலும் பலம் பெறவும் வாழ்த்துக்கள்.

    ரவி சார்,

    சோர்வாக இருக்கும் நேரங்களில் நீதிகளையும் அறிவுரைகளையும் நல்ல கருத்துக்களையும் கூறும் தங்களின் பதிவுகள் மனதுக்கு இதமளிக்கும். (நான் கொஞ்சம் லேட்டாக படித்தாலும் கூட) சொன்னபடி கேட்டுக் கொண்டிருந்த, வேலைகளை சரியாக செய்து கொண்டிருந்த ஒரு குரங்கை குரங்காட்டி ஒவ்வொரு முறையும் அது சொன்ன வேலையை செய்து முடித்தபின் இரண்டு அடி அடிப்பானாம். ‘‘ஏன்? அதுதான் ஒழுங்காக வேலை செய்கிறதே?’’ என்று கேட்டதற்கு, ‘‘அடித்துக் கொண்டே இருந்தால்தான் அது ஒழுங்காக இருக்கும். இல்லாவிட்டால் பயம் போய் அது வேலையை காட்டி விடும்’என்றானாம். மனம் ஒரு குரங்கு. நல்ல கருத்துக்களால் நெறிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தொடருங்கள் தங்கள் பணியை.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


  11. #2077
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘செல்வர்கள் நீதி நன்றோ?’


    நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்களுக்கான 5 ஆண்டுகால ஊதிய மாற்று ஒப்பந்தம் 31-12-2011-ல் முடிந்து விட்டது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் 20-ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

    வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மக்களுக்கும் கஷ்டம். ஆனாலும், என்.எல்.சி. நிர்வாகம் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக உள்ளது. தொழிலாளருக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைக்கான தொகை இப்போது ஆண்டுக்கு ரூ.1,330 கோடி. ஊதியத்தை உயர்த்தினால் அது ரூ.1,500 கோடியாக உயரும் என்று கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், ‘‘பாவம்.....என்.எல்.சி. நிறுவனமும்தான் என்ன செய்யும்? ரூ.1,500 கோடிக்கு எங்கு செல்லும்?’’ என்று தோன்றும். ஆனால், இப்போது செலவாகும் 1,330 கோடியுடன் ஒப்பிட்டால் வெறும் ரூ.170 கோடி மட்டுமே ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும் என்பதே உண்மை..

    என்.எல்.சி. நிறுவனத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு? 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.170 கோடி தொழிலாளருக்காக ஊதியம் அளித்தால் என்ன? ஊழியர்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர். ஊழியர்கள் கேட்பது ஊதிய மாற்று ஒப்பந்தம். அது 5 ஆண்டுகளுக்கானது. இப்போது, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும். அப்படிக் கணக்கிட்டால் ஊதிய உயர்வு ஆண்டுக்கு தோராயமாக 5 சதவீத்துக்கும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு வாதத்துக்கு நஷ்டம் என்றே வைத்துக் கொள்வோம். தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கி, மக்களுக்கும் சேவை செய்யத்தான் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளனவே தவிர, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளரையும் மக்களையும் சுரண்டுவதாக அவை இருக்க முடியாது.

    நிலக்கரி நிறுவனம் செயல்படுவது தமிழ்நாட்டில். அங்கு கிடைக்கும் லாபம் மத்திய அரசுக்கு. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ராயல்டி தொகை மட்டுமே கொடுக்கிறது. அதுவும் பல கோடி ரூபாய் நிலுவை. இங்கிருந்து அண்டை மாநிலத்துக்கு மின்சாரம் செல்லும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்லும். ஆனால், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். தெலுங்கு சினிமா உலகமே சென்னையில் இருந்து செயல்பட்டது ஒரு காலம். ஆந்திராவின் பொருளாதார மையமாகவும் சென்னை திகழ்ந்தது. ஆனால், பாலாற்றின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாது. ‘நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம்’ என்பதற்கு பெயர்தான் தேசியம் நண்பர்களே.

    அதற்காக, நான் பிரிவினை பேசவில்லை. சீன ஆக்கிரமிப்பின்போதே பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையை கைவிட்டு விட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க உரையில், ‘‘நாம் ஒன்றாக இருந்தால் நமக்குள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் நிலைமை என்னாகும்? எனவே, நாட்டு நலன் கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்ன அந்தக் காரணங்கள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்கின்றன... வலுவாக.. என்பதுதான் வருத்தம்.

    என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அதனால், ஏற்படும் நஷ்டம் எவ்வளவு? அதை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்களே? சென்னையில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. நெய்வேலியில் நாளை உண்ணாவிரதம் இருக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

    மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

    ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.

    பாதாம் அல்வாவை நாவில் எச்சில் ஊற பார்ப்பதுபோல, மக்கள் திலகத்தின் அழகையும் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சி பொங்க விரியும் விழிகளால் விழுங்கும் காஞ்சனாவை குறை சொல்ல முடியாதுதான். மக்கள் திலகத்தைப் பார்த்தால் அந்த நிலைதான் ஏற்படும். படம் வெளியாகும்போது மக்கள் திலகத்துக்கு 55 முடிந்து 56 வயது என்றால்... வெளிநாட்டினர் நம்புவது கடினம்.

    ஒரு இடத்தில் குழந்தைகளிடம் தனக்கு உள்ள அன்பையும் ஆசையையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு மேஜையாக பரிமாற கேக்கை எடுத்துச் செல்லும்போது புயல் வேகமாகச் செல்பவரின் கண்களில் ஒரு குழந்தை பட, அப்படியே நிதானித்து, வேகம் குறைத்து கண்களில் கருணை வழிய குழந்தைக்கு கேக் கொடுக்கும் பாசமும் அழகும்.... ஏதோ படத்துக்காக நடிப்பது போலவே தெரியாது.

    மத்திய அரசின் நவரத்தினா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த அளவுக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியிருப்பது யார்? படத்தில் மக்கள் திலகம் பாடும் வரிகளில் சொன்னால்...

    ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
    உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
    நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
    உதித்தது மெய்யல்லவோ?...

    ஏற்கனவே வறுமையால் மக்கள் வாடிய நிலையில், பிரான்சில் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது ஆணவம் பிடித்த அரசியின் கிண்டல். ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? மக்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்’ என்ற வார்த்தைகள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. அந்த அரசியைப் போன்ற செல்வந்தர்களின் நிலையை புரட்சித் தலைவர் தோலுரிக்கிறார், புரட்சிக் கவிஞரின் பாடல் வழியாக....

    தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
    சாட்சியும் நீயன்றோ?, பசி தீரும் என்றால்,
    உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
    ....செல்வர்கள் நீதி நன்றோ?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 23rd July 2015 at 09:15 PM.

  12. #2078
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,
    வழக்கம் போல வேலை பளு காரணமாக எப்போதாவது வந்து உறுப்பினர்களை வாழ்த்தி விட்டு ,ஏதோ ஒரு பத்திரிகை செய்தி போல ஒன்றை போட்டு ,அதற்கு சற்றும் சம்பந்தமில்லா படத்திலிருந்து ஒரு துக்கடா பாட்டை மேற்கோள் காட்டும் பாணியை விட மாட்டீர்கள் போல.
    நினைவு நாளன்று ,தமிழர்களின் ஒரே பெருமையான நடிகர்திலகத்தை வாழ்த்த கூட மனமில்லாத தங்களை,உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நிறைந்த இந்த சபை , நண்பராக ஏற்று விடும் என்று கனவு கூட காண வேண்டாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #2079
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

    ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.



    SUPERB KALAI
    Last edited by esvee; 24th July 2015 at 04:47 AM.

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #2080
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நானோ இப்போது ஒரு பதுமை//

    கல்ஸ்!

    நீங்கள் இல்லாமல் திரி வெறுமை. உங்கள் பதிவு அருமை. எனக்குத் தெரியும் கடலூர் நண்பரின் திறமை மற்றும் அவர் பெருமை. நீங்கள் அடிக்கடி திரிக்கு டிமிக்கி கொடுத்து விடுவது கொடுமை. இதுவரை நான் காப்பது பொறுமை. செல்லத் திட்டில் திண்டாடப் போவது உங்கள் நிலைமை. எனவே மறக்கக் கூடாது உங்கள் கடமை. கலை, உங்களிடம் இருப்பது இளமை, உங்கள் பூப் பதிவுகள் தந்தது இனிமை. நண்பர்கள் இல்லாமல் போனால் திரி வறுமை.

    பாராட்டிற்கு நன்றி கல்ஸ். உங்கள் பதிவுகளுக்காக எல்லோரும் வெயிட்டிங்.

    அப்புறம் நம் ஊரில் வரும் 31ம் தேதி 'வீரபாண்டியக் கட்ட பொம்மன்' நண்பர்களுடன் பார்க்கப் போகிறேன். ஏற்பாடுகள் அமர்க்களமாக நடக்கின்றன. இப்போதே மனம் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டது.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks kalnayak thanked for this post
    Likes eehaiupehazij, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •