Page 207 of 400 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2061
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் ரசித்த காட்சி.

    நான் மிக மிக ரசித்த காட்சி ஒன்றை சொல்கிறேன். காவியப்படமான 'காவியத் தலைவி' யிலிருந்து தான்.

    தன் கணவர் எம்.ஆர்.ஆர்.வாசுவுக்குப் பயந்து ஹாஸ்டலில் தன் குழந்தையைத் தங்க வைத்துப் படிக்க வைப்பார் நடன மாது சௌகார்.



    குழந்தைக்காக துணி எடுக்க சௌகார் துணிக்கடை சென்றிருப்பார். அப்போது பார்த்தால் தான் முன்னால் காதலித்துப் பிரிந்த காதல் மன்னன் அங்கு இருப்பார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள். (காதல் மன்னன் இப்போது பெரிய வழக்கறிஞர். வழக்குகளில் வெற்றி பெற்றவருக்கு வாழ்க்கையில் தோல்வி. அதுவும் காதல் மன்னனுக்கே காதல் தோல்வி) இப்போது சௌகார் நேராக ஜெமினியிடம் வருவார். ஜெமினி பழைய நினைவுகளைச் சொல்லி கண் கலங்குவார்.

    யாருக்கும் தெரியா வண்ணம் முகம் பார்த்தும், முகம் பார்க்காமலும், கோட்டை தனக்கு அந்த சமயம் துணையாகப் பிடித்து சௌகாரிடம் 'உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?' என்று தாழ்குரலில் கேட்பார் வேதனையோடு. அதற்கு சௌகார் ஜெமினியிடம் நேரிடையாக பதில் சொல்லாமல் மிக புத்திசாலித்தனமாக துணி எடுத்துக் கொடுக்கும் பையனிடம்,

    "ஏம்பா! இந்தத் துணியில ஒரு கோட்டும், ஒரு பேண்ட்டும் தைக்கணும்னா எவ்வளவு துணி வேணும்?"

    என்பார்.

    உடனே கடைக்காரப் பையன் 'வீட்டுக்காரருக்கு சூட்டா?' என்று சௌகாரிடம் கேட்க, சௌகார் புரிய வைத்துவிட்ட தோரணையில் இப்போது ஜெமினியைப் பார்ப்பார். ஜெமினி அவர்களின் சம்பாஷணையிலிருந்து சௌகாருக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்று புரிந்து கொள்வார்.



    'ஓ'..என்று அதிர்ந்து அதிர்ச்சி முகபாவம் காட்டுவார். சௌகாரும் மிக பாவமாக நடித்திருப்பார்.

    உடனே கடைப்பையன்,

    'இந்தத் துணியைத்தானே கேட்டீங்கம்மா'

    என்று துணியை எடுத்துப் போட,

    சௌகார்,

    'இல்லே! அவர் கேட்டதையேதான் நானும் கேக்கிறேன்' என்று இருபொருள் படக் கூறுவார்.

    அதாவது ஜெமினி கேட்ட துணியை கேட்பது போல் ஜெமினி இவரிடம் கேட்ட 'கல்யாணம் ஆயிடுச்சா? என்ற அதே கேள்வியை பூடகமாகக் கேட்பார். கேட்டு ஜெமினியின் பதிலை ஆவலுடன் அவர் முகத்தில் எதிர்பார்ப்பார்.

    கடைப்பையன்,

    'ஏன் சார் நீங்களும் இதைத்தான் கேட்டீங்களா?'

    என்று ஜெமினியிடம் கேட்டவுடன்,

    'முதலில் லேடீஸை கவனிப்பா. இந்தத் தனிக்கட்டையைப் பத்தி என்ன? வீட்ல என்ன பெண்டாட்டியா பிள்ளையா? (குரலில் விரக்தி) என்று விரக்தியுடன் கூறி தனக்குக்கு இன்னும் திருமணம் ஆகாததை சௌகாரின் அந்தப் பாணியிலேயே சொல்லி பதிலை உணர்த்துவார். ஜெமினி இன்னும் தன் நினைப்பில் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிந்ததும் சௌகார் கண்கலங்குவார் வேதனையோடு.

    கடைக்காரப் பையன் 'துணி கிழிக்கட்டுமா?' என்று கேட்டவுடன்

    'வேண்டாம்பா! அந்த அதிர்ஷ்டம் எனக்கில்லே!'

    என்று சௌகார் கண் கலங்குவார். ஜெமினி இன்னும் குழம்பி அதிர்வார். 'கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்கிறாள்....ஆனால் துணி வாங்க அதிர்ஷ்டம் இல்லையென்று சொல்கிறாளே... ஒருவேளை புருஷனை இழந்து விதவை ஆகி விட்டாளோ' என்று ஒருகணம் குழம்புவார்.

    இருவரும் அப்போது பிரிந்து மீண்டும் கடையில் உடனே சந்திப்பார்கள்.

    'நீ ஏன் அப்படி சொன்னே?'

    என்று ஜெமினி விடாமல் சௌகாரிடம் கேட்க,

    சௌகாரோ பேச்சை மாற்றுவார். ஜெமினி புகழ் பெற்ற பாரிஸ்டர் என்பதை பத்திரிகைகளில் பார்ப்பதாக, படித்ததாக சொல்வார்.

    அதற்கு ஜெமினியின் பதில்,

    'நினைவுகளை மறக்க நீதிமன்றத்துக்குப் போறேன்'

    'துணியெல்லாம் பேக் பண்ணியாச்சு'

    என்று பையன் வந்து சொல்ல, அப்போது ஜெமினி சௌகாரிடம்,

    'நீ எப்படி? வசதியாக இருக்கியா?'

    என்று அடுத்த கேள்வி கேட்பார்.

    அதற்கும் சௌகார் நேரிடையாக பதில் சொல்லாமல் பையனிடம்,

    'ஏம்பா ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கியிருக்கேன். கொஞ்சம் குறைச்சி போடக் கூடாதா?' என்று கேட்பார்.

    அதிலிருந்து சௌகார் வசதியாக இருக்கிறார் என்று ஜெமினி புரிந்து கொள்வார். (பின்னே! அப்பெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினா சும்மாவா?)

    'நீங்க எப்படி இருக்கீங்க?'

    என்று சௌகார் ஜெமினியிடம் திரும்பக் கேட்பார்.

    'நான் நெனச்சபடி வாழ்க்கையை நடத்த முடியல்ல. வழக்குகள் நடத்திகிட்டு இருக்கேன்'

    என்று ஜெமினி சலிப்போடு சொல்லிவிட்டு,

    'உன் கணவருக்கு இந்த ஊருதானா?'

    என்று சௌகாரிடம் எப்படியாவது அவர் கணவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாய்க் கேட்க,

    அதற்கு சௌகாரோ,

    'நான் மெட்ராஸில தான் இருக்கேன்'

    என்பார் கணவரைப் பற்றி மறந்தும் கூட குறிப்பிடாமல். (எம்.ஆர்.ஆர். வாசு சொல்லக் கூடிய கணவன் வகை இல்லையே)

    ஜெமினி வெறுத்து,

    'உன் கணவரைப் பத்தி நான் எதுவுமே தெரிஞ்சிக்கக் கூடாதா?'

    என்றதும்..

    சௌகார்,

    'இப்போ எந்த வழக்குல குறுக்கு விசாரணை செய்றீங்க?'

    என்பார் அழுகையுடன்.

    'எந்த வழக்குல நான் தோத்துப் போய்ட்டேனோ அந்த வழக்குலதான்'

    என்று ஜெமினி பதில் சொல்லி வேதனைப்படுவார்.

    உடனே சௌகார் அவசரமாகக் கிளம்பி விடுவார்.

    என்ன மாதிரி வசனங்கள்! உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்! டைரக்டோரியல் டச். பாலச்சந்தர் பாலச்சந்தர்தான்.



    காதல் தோல்வியையும், பிரிந்த காதலர்களின் தற்போதைய நிலைமையையும் பார்வையாளர்கள் ரசனையுடன் புரிந்து கொள்ளுமாறு காட்சி அமைப்புகள். ஜெமினியின் பிரிவு வேதனை நெஞ்சை நெருடும். சௌகார் கிழடு தட்டிப் போய் பார்க்க சகிக்கா விட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி தெரியும். அளவான முகபாவங்கள்.

    வசனங்களுக்காகவே நான் மிக மிக ரசித்த காட்சி இது.
    Last edited by vasudevan31355; 23rd July 2015 at 03:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2062
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    பாடல்களாகட்டும் காட்சிக் கண்ணோட்டமாகட்டும் அதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயும் அப்பாடக்கர் நீங்களே !
    காவியத்தலைவியில் இந்த மனம் பிசையும் நடிப்புடன் கூடிய காட்சியை நீங்கள் விவரித்திருக்கும் விதமே உங்கள் மாஸ்டர்பீஸ் !!
    ஜெமினி திரி சார்ந்த நன்றிகள் !!
    ஜெமினியின் திரியிலும் மீள்பதிவிட்டுப் பெருமைப் படுத்த வேண்டுகிறேன்
    செந்தில்

    GG and Sowkaar both are on their recession phase of visibly aging symptoms of rills on face and reduced energy levels in physical movements!!



    Last edited by sivajisenthil; 23rd July 2015 at 12:01 PM.

  4. Thanks vasudevan31355 thanked for this post
  5. #2063
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி செந்தில் சார்.

    ஜெமினி திரியில்தான் முதலில் பதித்தேன். அப்புறம்தான் இங்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2064
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோட்ட மெல்லிசை மது/ரம்
    பகுதி 16 : For Your Eyes Only / Roger Moore as Bond OO7!

    வழக்கமான காமெடி கலந்த விறுவிறுப்பான மூரின் பாண்ட் படம்
    அதிரடி இசைக் கோர்வையில் ஷீனா ஈஸ்டன் பாடல் !
    சாகசக் காட்சிகளின் பின்னணி இசைக் கோர்ப்பும் ரசனையே !






    Last edited by sivajisenthil; 23rd July 2015 at 06:16 PM.

  7. #2065
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    பாலா தொடரில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்' பாடலை அசத்தலாகத் தந்து ஆனந்தப் படுகுழியில் தள்ளிவிட்டீர்கள். பாலாவின் கொஞ்சும் குரலினிமைக்காக கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    நீங்கள் சொன்னதுபோல பாடல் வெகுநாள் வரையில் இலங்கை வானொலி, விவித்பாரதி என அனைத்து வானொலிகளிலும் பட்டையைக் கிளப்பியது. படம் பார்க்கதவர்களுக்கும் பாடல் மனப்பாடம் ஆனது.

    படம் வெளியானபோது நான் பார்க்கவில்லை. சில வருடங்கள் கழித்து மறு வெளியீட்டில்தான் பார்க்க முடிந்தது. (அப்போதெல்லாம் ஜெய்சங்கர் படங்களும் மறுவெளியீட்டிற்கு வருவதுண்டு). படம் பார்க்கும் வரையில் இந்தப்பாடல் ஜெய்சங்கர் லட்சுமி ஜோடிக்கு என்றே நினைத்திருந்தேன். படத்தில் சிவகுமாருக்கு என்றதும் சற்று ஏமாற்றமாக இருந்தது உண்மை. ('என் கேள்விக்கென்ன பதில்' தந்த ஏமாற்றத்தை விடவா?. நடிகர்திலகத்தின் ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளிய விஷயமாயிற்றே)

    ஜோடியாக நடிக்கும் நடிகையை தொட்டு நடித்தால் தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற பயத்திலிருந்து சிவகுமார் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததுதான் 'பௌர்ணமி நிலவில்'. கொஞ்சம் நெருங்கியிருப்பார்.

    தன் காலத்தில் இருந்த மொக்கை நடிகைகளைஎல்லாம் முதல்தர கதாநாயகிகளாக உயர்ந்துகொண்டிருக்க, கொள்ளை அழகிருந்தும், மெல்லிய உடலிருந்தும் பெரும்பாலான படங்களில் இரண்டாம் நிலை நாயகியாகவே நடித்துக் கொண்டிருந்த அதிர்ஷ்டமில்லாத நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. (கார்த்திக் சார் இவரை 'வெண்ணிறக் கொடியிடை நிர்மலா' என்று பொருத்தமான பெயரில் குறிப்பிடுவார்) . இவர் எம்.எல்.சி.ஆகிறார் என்றதும் மேல்சபையே கலைக்கப்பட்டு விட்டதென்றால் இவர் அதிர்ஷடத்தை என்னவென்று சொல்வது.

    'சிலரது நஷ்ட்டம் சிலருக்கு லாபம்' என்பதுபோல, இவர் ஒரு படப்பிடிப்புக்கு தாமதமாக வரப்போய் "நான் சிவாஜி சாரோடு நடித்த ஒரே படம்" என்று சொல்லி பெருமைப்படும் வாய்ப்பு லதாவுக்கு கிடைத்தது. இருந்தாலும் தங்கச்சுரங்கம், எங்க மாமா, தங்கைக்காக, பாபு, உனக்காக நான் என்று பல படங்கள் நிர்மலாவும் பெருமைப்படும்படி அமைந்தன.

    'பௌர்ணமி நிலவில்' கவிஞர் வாலி அவர்களின் வார்த்தை ஜாலங்களும் அவைகளை பாலா உச்சரிக்கும் அழகும் அட்சரம் பெரும். ஜானகியம்மாவும் தன் பங்குக்கு அசத்தியிருப்பார்.

    இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அசத்தல் பாடலான 'அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே' பாடலைக் கேட்கும்போது கிட்டத்தட்ட அதே காலத்தில் வந்த 'வாடி தோழி கதாநாயகி' (துலாபாரம்) பாடலும் என் நினைவுக்கு வரும்.

    துவக்கத்தில் நீங்கள் சொன்னதுபோல, இத்தகைய அருமையான பாடல்களை தொகுத்து எஸ்.பி.பி. அவர்களிடம் அளிக்கும்போது அவரிடமிருந்து பெரிய பாராட்டும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கப் போவது நிச்சயம்.

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2066
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - உங்கள் பாலாவின் பாடல்களில் இன்று பதித்த " பௌர்ணமி நிலவில் " அலசல் மிகவும் அருமை . எனக்கு மிகவும் பிடித்த பாடல் - தமிழின் சுவை இந்த காதல் பாட்டில் வரும் காதல் சுவையை விட மிகவும் ரசிக்கும்படி இருக்கும் - அந்த காலத்தில் TMS - NT -கண்ணதாசன் -MSV என்ற combination படங்களையும் பாட்டுக்களையும் நம் மனதில் ஆழமாக பதித்தன . இன்று இதையே சற்று மாற்றி சொல்ல வேண்டும் - பாலாவின் பாடல் + வாசுவின் அலசல் + ராட்சஸியின் பங்கேற்ப்பு - பதிவுகளை அற்புதமாக்கி விடுகின்றன . கூடவே உங்கள் மீது ஒரு கோபமும் வருகிறது - இப்படி உங்களை வருத்திக்கொள்ளத்தான் வேண்டுமா? - எங்களுக்கு மொத்த பொன் முட்டைகளும் தேவையில்லை - தினமும் சாதரணமான ஒரு முட்டையே போதும். உங்கள் உடம்பு ஆரோக்கியத்திலும் கவனம் தேவை .

    உங்கள் " நெஞ்சிருக்கும் வரை " பதிவை நேற்றுதான் படிக்க முடிந்தது - நெஞ்சை உருக்கி விட்டது . கொஞ்சம் நேரமே வரும் ஒரு காட்சியே இவ்வளவு அருமை என்றால் - அவரின் நடிப்புத்திறமையை இன்னும் புரிந்துக்கொள்ளாத , புரிந்தும் ஏற்றுக்கொள்ள மனம் வராத , அரசியலை புகுத்தாமல் அவரை - ஒரு தமிழ் நாட்டை சேர்ந்தவரை இன்னும் ரசிக்க தெரியாதவர்களை நினைத்தால் என்ன ஜென்மங்கள் என்றுதான் பரிதாப பட வைக்கின்றது - தமிழன் என்று சொல்லடா ! தலை குனிந்து நில்லடா நடிகர் திலகத்தை புரிந்து கொள்ளும் வரை --- என்றே சொல்ல தோன்றுகிறது .

    " காவியத்தலைவி " ஜெமினி - சௌகார் சந்திப்பு , உரையாடல் மிகவும் அருமை - சிந்திக்க வைக்கும் வசனங்கள் பாலச்சந்தரின் மிகப்பெரிய சக்தி - ஒரு முழு படத்தையே பார்த்த சந்தோஷத்தை பதிவின் மூலம் தந்து விட்டீர்கள் . எனக்கு அவர்கள் ஜோடியாக நடித்த படங்களில் " ஸ்கூல் மாஸ்டர் " என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும் - மிகவும் போற்றத்தக்க நடிப்பு , தாம்பத்தியத்தின் பெருமைகளை அருமையாக இருவரும் நடிப்பில் எடுத்துக்காட்டுவார்கள் ...

  10. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  11. #2067
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'நெஞ்சிருக்கும் வரை' மற்றும் 'காவியத்தலைவி' காட்சி விளக்கம் அருமை. மிகவும் தத்ரூபமாக இருந்தன.

    எழுத்துக்களை காட்சி வடிவில் தருவதில் ஸ்ரீதரும், பாலச்சந்தரும் 'இரு வல்லவர்கள்' என்றால், அந்தக்காட்சி வடிவங்களை மீண்டும் எழுத்து வடிவில் தருவதில் நீங்கள் 'வல்லவன் ஒருவன்'.

    நெஞ்சிருக்கும் வரை படத்தின் மிக முக்கியமான காட்சியை அப்படியே கண்முன் ஓடவிட்டு விட்டீர்கள். பாராட்டுக்கள்.

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  13. #2068
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    மன்னிக்கவும், சிந்துபாத்துடன் திமிங்கிலத்தின் உள்ளே இருந்து பயணம் போனபோது தொடர்பு அறுந்து போனதால் என்னுடைய பதிவுகளை இட முடியவில்லை - என்று சொல்லி நான் சமாளிக்க முடியாது. கிடைக்கும் நேரம் வெகு சொற்பமே. அதில் நான் வரும் நேரம் எல்லோரது பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை. தற்போது கடைசி இரண்டு பக்க பதிவுகளை வேகமாக பார்த்துவிட்டு இப்பதிவை இடுகிறேன்.

    கருவின் கருவை ரவி நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன். அபாரமான தொடர். அன்னை, தந்தை, மற்ற உறவு முறைகளுக்கும் எழுதி இருந்தார். எல்லா உறவு முறைகளுக்கும் எழுதினாரா என்று தெரியவில்லை. நல்ல கதைகளையும், நிகழ்வுகளையும் அற்புதமாக கோர்த்து மதுர கானத் திரிக்கு அழகுக்கு அழகு சேர்த்தார். தொடருமாறு அவரை கோருகிறேன்.

    வாசு, உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ரவி சொல்வது போல உங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்தி உங்கள் தொடர்களை நீண்ட மெகா தொடர்களாக வழங்கி எங்களை மகிழ்விக்க வேண்டும். காவியத் தலைவி படக் காட்சியை நீங்கள் விளக்கியிருப்பதை படித்தேன். அப்பா என்ன ஒரு விளக்கம். எவ்வளவு கூர்ந்த கவனிப்பு. கன்னிப்பெண் பட பாலா பாடல் படித்தேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் இந்த பாட்டைக் கேட்டிருக்கிறேன். யார் நடித்தது, எந்த படம் என்ற விவரங்களுக்கு நான் கேட்க வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. கன்னிப் பெண் என்று திரைப் படம் உள்ளதென்று தெரியும். வானொலி மூலம் கேட்டது நினைவுக்கு வருகிறது. வானொலி மூலமே இப் பாடல் இவ்வளவு பிரபலம் அடைந்திருக்க வேண்டும். நிச்சயமாக பாலாவும், மெல்லிசை மன்னரும், வாலிபக் கவிஞரும் தங்கள் கைவண்ணத்தை அட்டகாசமாக காட்டி இருக்கிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொடுத்து, அட்ட, அட்ட, அட்டகாசமாக எழுதி மகிழ்சிக் கடலில் தள்ளி விட்டீர்கள். நன்றி.

    ஆதிராம் தங்கள் பாடல்களுக்கு பதில் அளித்து அவர் பங்குக்கு தன் நினைவில் வரும் விஷயங்களாக அள்ளித் தருவதும் அருமை. எனக்கோ உங்கள் எல்லோரின் எழுத்துக்களும் புதுமை. நானோ இப்போது ஒரு பதுமை.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. Thanks vasudevan31355, uvausan thanked for this post
    Likes vasudevan31355, chinnakkannan liked this post
  15. #2069
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Hi good evening to all. Now I an in dubai will be back on
    Sunday.

    Vasu sir what happened to your health, Take care,

    Enjoying the postings of friends

  16. #2070
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசை மது/ரம் கானங்(கள்)!
    பகுதி 17 : ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யுசிக் மற்றும் டைட்டில் பாடல்கள் வரிசை
    ஆக்டோபுசி / OCTOPUSSY starring ROGER MOORE as JAMES BOND OO7!

    வயதின் நிழல் படிந்து விட்ட நிலையில் ஷான் கானரியும் ரோஜர் மூரும் நல்ல நண்பர்களாக போட்டி அடிப்படையில் வெளியிட்ட பாண்ட் படங்கள் ஆக்டோபுஸ்சி / நெவர் சே நெவர் அகைன் !!

    இரண்டு பேருக்குமே தனிப்பட்ட ரசிகர் வட்டம் உண்டாகி விட்ட கால கட்டம் ...

    இரண்டு படங்களுமே வசூலை வாரிக் குவித்தாலும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் மீள் வருகை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!!
    சென்னையில் இரண்டு படங்களுமே நூறு நாட்களைக் கடந்தன!!

    ஆக்டோபுசி பல காட்சிகள் இந்தியாவில் எடுக்கப் பட்டது கூடுதல் ஈர்ப்பானது !

    ஜேம்ஸ் பாண்டின் ஆட்டோ ரிக்ஷா சாகசங்கள் முறுவலை வரவழைத்தாலும் இறுதிக்கட்டங்களில் படம் சற்றுத் தொய்வே!!புரோக்கோலி ரோஜர் மூருக்கு மாற்று நடிகர் தேடும் முயற்ச்சியை ஆரம்பித்தாலும் மூரை வைத்தே அடுத்த படமான எ வியூ டு எ கில் படத்தையும் எடுத்து முடித்து நீண்ட காலம் ஷான் கானரியின் மாற்று பாண்டாக உலக ரசிகர்களை மகிழ்வித்து வெற்றிக் கொடி நாட்டிய ரோஜர் மூருக்கு ஓய்வளிக்கப் பட்டது!!




    இனிய தீமிசைக் கோர்ப்பும் டைட்டில் பாடலும்







    Last edited by sivajisenthil; 24th July 2015 at 05:56 PM.

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •