Page 198 of 400 FirstFirst ... 98148188196197198199200208248298 ... LastLast
Results 1,971 to 1,980 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1971
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks a lot CK for sharing your nostalgia on The Man With the Golden Gun taken over by Roger Moore as the inevitable replacement Bond to Connery!
    It was just a mediocre Bond flick but gradually establishing the cult comical image of Bond carved by Moore over a long sustaining stay in that role!!

    Though Roger Moore was not that manly like Sean Connery (the perfect body frame with a hairy chest and a tough face!) Moore slowly settled in that role comfortably after his impressive performance in his next grand gala venture The Spy Who Loved Me' managing to come out of the shadows of Connery. There upon he could successfully perform in his own format..but over comedy elements slowly eroded the characterization till Timothy Dalton could resume the danger of Connery!!

    I am happy that CK's format of light vein interaction on Bond flicks is quite interesting and dominating over my just tit-bits type video dependant presentations!! Kudos and thumbs up CK!!

    Thanks a lot for the sustained encouragment from Vasu, Ravi,Gopu, Adiram, Raagadevan and Rajesh (grown up in the era of Moore's Bond?!) as regards this extended series on Bond music and its global influence on all other language spy genre movies, particularly in Tamil..through Tamil Bond Jaishankar movies ably supported by Vedha and TR Paappa!!

    with regards, Senthil

    I hope, having become good friends in our threads, kindly address me just Senthil. Suffix like Sir may still keep us distance apart! Any objection your honour...I am just in this corner!(Gowravam?)
    Last edited by sivajisenthil; 19th July 2015 at 11:11 AM.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1972
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சி.செ.. செம்மீன் பற்றி தொழில் பாட்டுகளில் ஏற்கெனவே எழுதியிருந்தேனே.. பாடல்கள்..ம்ம் ஓ.கே..அது பற்றி டீடெய்லாக எழுதவிலலை என நினைக்கிறேன்.. ஒரு மீள் பதிவு போட்டட்டுமா?

    Thanks CK for pointing out my oversight on this. I have to peruse your writings back. as I came into this thread only recently...sorry about that CK.

  5. Likes chinnakkannan liked this post
  6. #1973
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு'

    ராகதேவன் சார்,

    பன்மொழி 'எக்ஸ்பிரஸ்' பாடல்களுக்கு நன்றி!

    தெலுங்கில் கிருஷ்ணா நடித்த 'Circar Express' படத்தில் இருந்து தாங்கள் அளித்துள்ள ஆடியோ லிங்க் பாடலான "Kuchchula kollu chudu chudu, pichchuka goollu chudu chudu...You you girls" பாடல் தமிழ் 'நீலகிரி' யிலும் உண்டு.

    இதில் ஒரு விசேஷம். தெலுங்கில் 1968 ல் நமது பாலா ஈஸ்வரியுடன் சேர்ந்து அந்தப் பாடலைப் பாடியிருப்பார். அப்போதெல்லாம் காமெடி டிராக் பாடல்களை தெலுங்கில் பாலா பாடிக் கொண்டிருந்தார். சத்யம் அவர்கள் அப்போதுதான் தெலுகு பீல்டில் நுழைந்த நேரமும் கூட.



    தமிழில் 'வாலிபம் ஒரு வெள்ளிதட்டு' என்ற அந்தப் பாடல் 'கள்ளபார்ட்' நடராஜன், ராஜேஸ்வரி மற்றும் கோஷ்டியினர் ரயிலில் ஜாலியாக அரட்டை அடித்துப் பாடுவது போல வரும். சோ மற்றும் விஜயலலிதா டிரெயினில் அமர்ந்திருக்க துணை நடிகர்கள் (காலேஜ் ஸ்டூடெண்ட்ஸாம்) ஆரவாரத்துடன் இப்பாடலைப் பாடுவார்கள். இந்தப் பாடலையும் ஈஸ்வரி தான் பாடியிருப்பார். தெலுங்கில் பாலா பாடியதை தமிழில் சௌந்தரராஜன் ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருப்பார்.

    நான் இரண்டு நாட்களாகவே இந்தப் பாடலைத்தான் அடுத்து 'ஜாலிப் பாடல்கள்' வரிசையில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். சில தினங்களுக்கு முன் கூட பாடலைப் பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! நீங்கள் முந்தி கொண்டு விட்டீர்கள்.

    இந்தப் பாடல் மிகவும் ஜாலியாக இருக்கும். (இதே போல் 'சுமதி என் சுந்தரி' படத்தில் 'எல்லோருக்கும் காலம் வரும்' என்ற பாடல் உண்டு. இதைப் பற்றி மதுரகானத்தில் விவரமாக எழுதி இருக்கிறேன்.)

    டி.கே ராமமூர்த்தியின் உற்சாகமான இசைக்கு கண்ணதாசன் இளமை பொங்க பாடல் வரிகளை இயற்றி இருப்பார். பல படங்களில் வில்லனாக நடித்த 'கள்ளபார்ட்' நடராஜன் மிகச் சிறந்த டான்ஸர். கோஷ்டி நடிகராக அப்போதைய பல பழைய படங்களில் இவரைக் காணலாம். ஆனால் குள்ளம் இவரது மைனஸ் பாய்ன்ட். இவரை ஞாபகம் வைத்து பின்னாளில் 'தேவர் மகன்' படத்தில் மறக்காமல் இவருக்கு ஒரு நல்ல ('அட புதியது பிறந்தது.... பழையது ஒதுங்குது... ஹரஹர சிவசிவ பழைய பரமசிவமே! ரேவதியின் அப்பா) சான்ஸ் தந்தார் கமல். (ஒரு டான்ஸரை இன்னொரு டான்ஸர் விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன!?)

    உடன் ஆடும் நடிகை ராஜேஸ்வரி என்ற நடன நடிகை. ('கலாட்டா கல்யாணம்' படத்தில் ஏ.வி.ராஜன் அவர்களுடன் உறவினில் 50 50' பாடலுக்கு ஆடியிருப்பார். நடிகர் திலகம் நடித்த 'பாலாடை' படத்தில் 'அப்படி என்னப் பார்வை அங்கும் இங்கும்' பாடலுக்கும் நடனமாடுவார்) 'நவராத்திரி' கூத்துப் புகழ் சந்திரன் பாபு கூட இப்பாடலில் ஆடுவார்.

    பாடலின் பாதி வரை வெஸ்டர்ன் மியூசிக். 'சோ' வந்து இவர்களை சத்தம் போட்டவுடன் அப்படியே folk டைப் குத்துப் பாடலாக மாறும்.

    'கொட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி
    இந்தக் குருட்டு மாட்டைக் கட்டுங்கடி'

    என்று எல்லோரும் 'சோ'வை கேரோ செய்வார்கள்.

    இதில் சில ரசிக்கத்தக்க வரிகள் வரும்.

    'சோ' அவர்களின் பெயரை வைத்தே அவரை பொருத்தமாகக் கிண்டல் அடிப்பார்கள்.

    'ஆத்தாடியோ மொகத்தப் பாரு ஆலோலங்காடி 'சோ'
    ('சோ' 'சோ' 'சோ' 'சோ' 'சோ' 'சோ' என்று எக்ஸ்ட்ரா நடன நடிகைகள் கத்துவார்கள்)
    அய்யா வேட்டியைக் கிழிச்'சோ'ம்
    போட்ட சட்டையைக் கிழிச்'சோ'ம்.

    அம்மாமாரு கும்மாங்குத்து வாங்கிக் கட்டிகிச்'சோ'
    சும்மா ராங்கி பண்ணிகிச்'சோ'
    இன்னும் பாக்கி வச்சுகிச்'சோ'
    ஒட்டிகிச்'சோ' சிக்கிகிச்'சோ'
    ஒட்டிகிச்'சோ' சிக்கிகிச்'சோ'

    என்று பாதி பாடல் முடியும் வரை ஒரே 'சோ' மயம்தான். கண்ணதாசனின் டைமிங் குறும்பு. படத்துக்கு கதை வசனம் 'சோ' தான். என்ஜாயபிள் சாங் தான்.

    Last edited by vasudevan31355; 19th July 2015 at 11:47 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #1974
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மீள் பதிவு// சி.செ அண்ட் படிக்காதவர்களுக்காக..

    **

    தொழில் பாட்டுக்கள் 10
    அது ஒரு கனாக்காலம் என்று ஆரம்பிக்கலாமா.. அல்லது
    அது ஒரு கற்பனைகள் பூத்துக் குலுங்கித் திரிந்த காலம் எனலாமா
    அல்லது அது ஒரு அழகிய எழிலெலாம் கோர்த்த வெள்ளந்தி மனம் கொண்டிருந்த, இகவாழ்வு பற்றி அறியாத இளமைப் பருவம் எனலாமா..

    (யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
    வெய்ட் வெய்ட்)

    யெஸ். இளமைப் பருவம்.. என்னுடையது.. 1990. தலைகீழ்ப் ப மீசை, கண்களில் மின்னல், காதுகளுக்குத் துணையாக விருதாவுடன் மின்னிய கிருதாக்கள், விட்டேத்தியாய் அலைபாயும் தலைமுடியை அடக்கி வாசித்திருந்த சமயம்..பின்ன ஆஃபீஸுக்குள்ள போய் வந்துக்கிட்டிருந்தேன்.

    ஒரு நாள் டெலிஃபோன் தபுவாய் ச் சிணுங்கிக் கூப்பிட்டது..

    எடுத்தால் “ நாளைக்குக் காலை கிளம்பறியாடா கண்ணா..கூட ஹரி வர்றானா”

    கேட்டது டாக்டர் கல்யாணி ஆண்ட்டி.. என் சகோதரியின் கணவரின் ரிலேஷன். இருந்தது அபுதாபி தாண்டி டெல்மா ஐலேண்ட் எனப்படும் இடத்தில்.. வேலை ஹாஸ்பிட்டல் இன்சார்ஜ்.. கைனி. (இப்போது அவர் உயிருடன் இல்லை)

    யெஸ் ஆண்ட்டி.. ஹரியும் வர்றான்..காலைல பஸ்ல அபுதாபி வந்துடுவோம்..பின் அங்கருந்து ஜபல்தானாக்கு இன்னொரு பஸ்..அப்புறம் கடல்கரை தானே..போட் தானே..

    ஆமாம்” என்றார் டாக்டர்.. “ நீ வர்றச்சே ஃபெர்ரி போயிருக்கும். ஸோ கரைல்ல ஒரு மோட்டார் போட் சின்னது சொல்லியிருக்கேன்.. ரெண்டு லோக்கல் ஆள் இருப்பாங்க..என் பேரைச் சொல்லு. நானும் அவங்களோட பேசிடறேன்..

    சரி என்று ஃபோனை வைத்து ஹரியைக் காலை வரச் சொல்லிவிட்டு உறங்கினேன்..

    மறு நாள் காலை கத்தரிக்காய்க்கு கைகால் முளைத்துக் கண்ணாடியும் போட்டாற்போல் இருந்த ஹரி துள்ளிக் குதித்து வர அவனை அள்ளி பஸ்ஸிலேற்றி துபாய் டு அபுதாபி இரண்டரை மணி கழித்து அபுதாபி ட்டு ஜபல்தானா இரண்டுமணி நேரம் ட்ராவல் செய்து அந்தப்பக்கம் உள்ள கடற்கரையை அடைய மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. (நடு நடுவில் பஸ் மாற காத்திருக்க வேண்டியிருந்தது)

    போனால் ஒரு சின்ன இயந்திரப் படகு..முழு வெள்ளை ஆடை அணிந்து தலையிலும் முக்காடும் அணிந்த இரண்டு அரபு நபர்கள்..

    ஹாய்..

    ஹாய்.. நீங்கள் டாக்டர் சொன்ன..

    அவர்களே தான்.. போகலாமா..

    இரண்டு அரபு நபர்களில் ஒருவன் ஒல்லி கருப்பு இன்னொருவன் செவேலென இருந்தான் சற்றே குண்டு.. டபக்கென எங்களை ஏறச் சொல்ல, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலைகளினால் சற்றே மெலிதாக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்த படகில் கால் வைக்க அது வெட்கப் பட்டு மறுபடியும் ஆட ஹரி பொத்தென உள் விழுந்தான். பின் நான் ஏறி அமர..ட்ர்ருர்… எனக் கிளம்பி கடலில் படகு தாவினால்..


    ஆஹா.. மேலே வெளிர் நீல வானம்.. சிலச் சில வெண்ணிற மேகங்கள் பலப் பல வடிவில்.. கீழே யாரோ கோபித்துக் கொண்டு வெள்ளிக்காசுகளை நீலப் படுக்கை விரிப்பில் எறிந்தாற்போல் மின்னுகின்ற கடல்..

    கிடுக் கிடுக்கென இருபது நிமிடத்தில் படாரெனக் கடல் நடுவில் வந்துவிட சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீல ம் நீலம் நீலம்…

    எவ்ளோ நல்லா இருக்கு – என்றான் ஹரி..
    ம்ம் என்றேன் நான்..என் மனக்கடலில் சாண்டில்யனின் ராஜதிலகக் கதா நாயகி மைவிழிச் செல்வி (எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!) வாளை மீன் குட்டியாய்க் கடலில் நீந்திக் கொண்டிருக்க அருகில் ராஜசிம்மனாய் மாறிய நான் அவளுக்கு இணையாய் நீந்த இடையில் அவள் இடையில் கை பட அவளோ மென் குரலில் கடலுக்குள்ளேயே சிவந்த உதடுகளை அசைத்து “ம்க்கும் இப்படி எல்லாம் செய்தால் எப்படி நீந்துவது ட்ர் ரி க் க்ர்ர்ர்” என ஏன் இவள் குரல் இப்படி இருக்கிறது என திடுக்கென முழித்தால்.. படகு நின்றிருந்தது. நடுக்கடலில்..

    “என்ன ஆச்சு”

    ஒல்லி அரபி நோப்ராப்ளம் என மென்சிரிக்க குண்டு அரபி மோட்டாரைக் கொஞ்சம் செக் செய்து கொண்டிருக்க ஹரி கவலையுடன் “ கண்ணா என்னடா இது”

    “அவன் தான் நோ ப்ராப்ளம்னு சொல்றானே”

    “எனக்கென்னவோ பயம்மா இருக்குடா..அதோ பார்” நடுக்கடலைக் காட்டினான்.”அங்கிட்டிருந்து என்னோட தாத்தா கூப்புடறமாதிரி இருக்கு”

    “ஷ் ஷ்..கவலைப் படாதே” எனச் சொன்னாலும் என்னையும் கவலை பற்றத் தான் செய்தது..சற்றே ஆடிய படகில் ஒல்லியும் ஹெல்ப்புக்கு ச்சென்று மோட்டாரின் கவரைக் கழற்றி உடம்பு தெரிந்து செக்ஸியாக நின்றிருந்த இயந்திர பாகங்களை என்னவோ ஆராய்ந்துகொண்டிருந்தான்..

    ஹரி விடாமல், “கண்ணா.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் பண்றதா இருந்தோமே” எனப் புலம்ப “அப்படில்லாம் ஐடியா வச்சிருந்தீனா நானே இப்படிக் குதிச்சுடுவேன்” என நான் சொல்ல “இல்லடா நீ தனியா நான் தனியாடா “ என எக்ஸ்ப்ளனேஷன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ட்ர்ரு ட்ரு.. மோட்டார் கிளம்பி விட்டது..

    துள்ளிக் குதித்து டுவேர்ட்ஸ் டெல்மா ஐலாண்ட்..ஆனால் எனக்கோ மனதில் தினம் தோறும் கடலாடுபவர்கள் நினைவில் வந்தார்கள்..மீனவர்கள்..

    பின் அரைமணி நேரத்தில் டெல்மா ஐலண்ட் போய் அங்கிரு நாட்கள் கல்யாணி ஆண்ட்டியுடன் தங்கி அந்தக் குட்டி த் தீவைச் சுற்றிப்பார்த்து பின் துபாய் வந்தது எல்லாம் கனவாய்த் தான் இருக்கிறது..

    இருந்தாலும் இந்தக் கடல் – இன்று வரைத்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்னை..

    கடல் எப்போதும் ஆச்சரியம் தான்..
    **
    ஆழம் பலகொண்டு ஆட்டுவிக்கும் நெஞ்சத்தில்
    கோலமிட்டு நன்றாய் கொலுவிருக்கும் - வேழத்தைப்
    போல வலுவும் பொலிவுகளும் கொண்டமங்கை
    நீலக் கடலுக்கு நேர்
    சுமையெதுவும் எண்ணாமல் சூதானமாய் நின்றே
    அமைதியாய் உள்ளிருக்கும் ஆற்றல் – இமைப்பொழுதில்
    சூறையென ஆடியே தூற்றியே நீர்தூவும்
    பிறைநெற்றிப் பெண்ணாம் கடல்


    முத்த மிடுதற்போல் மீன்களது நீந்தியங்கு
    சித்தமது சொன்னாற்போல் செல்வதுவும் – நித்தமும்
    எண்ணிலா ஜீவன்கள் ஏற்றமாய் வாழுமிடம்
    கண்படுங் காதற் கடல்

    அலைபோல எண்ணங்கள் ஆர்ப்பரிக்கும் என்பார்
    கலையாக ஆடுங் கடலால் – வலைவீசும்
    ஆடவர் மீன்பிடிக்கும் அல்லலெலாம் கண்டாலோ
    வாடி மனமிளகு வார்..
    **

    கடலைப் பற்றிய பலபடங்கள் வந்திருக்கின்றன..இருந்தாலும் மனதுள் பதிந்த ஒரு படம் அது.. அதைப் பற்றி..

    **
    (thodarum)

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  10. #1975
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    thozil paattukkaL 10 thodarchchi..


    **


    நீளமாய், நீலமாய் வானில் காய்ந்துகொண்டிருந்தான் கதிரவன்..

    கீழே அவனைப் பிரதிபலித்தவண்ணம் சிற்சில எண்ணச் சலனங்களைக் கொண்டவாறு அலைபாய்ந்திருந்தது..கடல்..

    சற்றுத் தள்ளிக் கரையோரம் போடப்பட்டிருந்தது ஒரு தோணி..கொஞ்சம் நீளவாக்காக இருந்தாலும் சற்றே உயரமாக இருந்தபடியால் தோணியின் அந்தப்புறத்தில் கொஞ்சம் நிழல்..அந்த நிழலில் சாய்ந்து கொண்டு பரீக்குட்டி..அவனைப் பார்த்தபடி நின்றிருக்கும் கறுத்தம்மா..

    கறுத்தம்மா தன் வெண்பற்கள் காட்டிச் சிரித்தாள்..”என்ன சின்ன மொதலாளி..என் அப்பாக்கு தோணிவாங்கக் காசு வேண்டுமென்றால் எனக்காக வேண்டுமென்றால் தாரேங்கறீங்க.. எம்மேல அம்புட்டு நம்பிக்கையா”

    சிரித்த கறுத்தம்மாவையே பார்த்தான் பரீக்குட்டி..இவள் .கறுத்தம்மா..மரக்காத்தி..சிறுவயது முதற்கொண்டே இந்தக் கடற்கரையோரம் எனக்குக் கிடைத்த சினேகிதி.. நாங்கள் பேசாச பேச்சா..விளையாடாத விளையாட்டா..ஆனால் இப்போது..

    மீண்டும் பார்க்க கறுத்தம்மாவின் உடை.. பெயர் தான் கறுத்தம்மா..ஆள் நல்ல சிவப்பு.. அவள் கழுத்திலிருந்து இடைவரை சரேலென இறங்கி அடங்கியவண்ணம் இருந்த செவேல் ரவிக்கை. பின் மாலை மங்கி இரவு கூடிவரும் பொழுதில் மெல்லிய இருள் படரும் மலர்களைப் போல சற்றே மங்கிய நிறத்தில் சின்னப் பூக்கள் போட்ட சாயம்போன பாவாடை.. நன்றாகத் தான் வளர்ந்திருக்கிறாள்..உடலெங்கும் ததும்பி நிற்கும் அழகு..அழகுடன் துள்ளும் இளமை..அட இவள் சிரிப்பு என்னை எங்கோ தூக்கிச்செல்கிறதே..

    சிரித்துக்கொண்டிருந்த கருத்தம்மா நிறுத்தினாள்.கொஞ்சம் வெட்கம், பயம் வந்தது சின்ன முதலாளி பார்த்த பார்வையினால்..உடலில் ஒருவித கூச்சம்..கூடவே ஒரு சிலிர்ப்பு.. என்னாயிற்று இவனுக்கு என நினைத்துப் பார்வையைத் திருப்ப பயம்..ஏனெனில் தொலைவில் இருந்த மரமொன்றின் பின்னால் பார்த்திருந்த பஞ்சமி.. அவள் தங்கை..

    கறுத்தம்மா..

    பரிக்குட்டி கூப்பிட்டான்.. ‘உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா”

    கறுத்தம்மாவினால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.. நான் யார் கறுத்தம்மா.. ஒரு மரக்காத்தி..சின்னமொதலாளி வேறு இனம்.. ஆனாலென்ன.. ஏனிப்படி ஒரு கேள்வி.. பதில் சொல்ல நேரமில்லை..பஞ்சமி பார்த்து விட்டாள்..இப்போது கிளம்பியாக வேண்டும்..

    வர்றேன் மொதலாளி..
    சட்டெனக் கிளம்பிச் சிட்டென ஓடினாள் தொலைவில் இருந்த தனது குடிசை நோக்கி..

    அதற்குள் வெடி பத்தவைக்கப் பட்டு விட்டது பஞ்சமியால்..

    வீட்டு வாசலிலேயே சக்கி. அவளுடைய அம்மா...”என்ன இவளே..எங்க போன”

    அழகின் பொக்கிஷமாய் குறுகுறு கண்களில் கனவுடன் ஓடி வரும் மகள்..அவள் எண்ணம் சக்கிக்குச் சட்டெனவும் புரிந்தது..

    “இங்க தான் கொஞ்சம் காலாற நடந்தேம்மா.. நீ ஏன் இப்படிக் கலவரப் படறே”

    “கொஞ்சம் உள்ளவா” குடிசையுள் அழைத்துச் சென்று சொன்னாள் சக்கி. “சின்ன மொதலாளி கூடவா இருந்தே”

    “ஆமாம்..ச்சும்மா பேசிக்கிட்டிருந்தேம்மா”

    “சிரிச்சுப் பேசினயாம்”

    “யார் சொன்னதும்மா” பஞ்சமியாய்த் தான் இருக்கும்..மனசுள் நற நற.

    ‘இந்த பார். நீ வளந்துட்ட . பெரிய பெண்ணாய்ட்ட..ஒனக்குக் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு க் கவலை அடிச்சுக்குது..ஏன் தெரியுமா கறுத்தம்மா.. நீ ஒரு மரக்காத்தி..மரக்காத்திங்கறவ நெருப்பாட்டம் இருக்கணும்.. அப்படி இல்லாம கொஞ்சம் மனச அலைபாய விட்டுட்டு இருந்தேன்னாக்க உன்னைக் கட்டிக்கிட்டவன கடல் காவு வாங்கிடும்.. நியாபவம் வெச்சுக்கோ..”

    “அம்மா..ஏம்மா இப்படில்லாம் நெனக்கறே”

    “எனக்கு ஒன்னோட நெனப்பு தெரியும்டி..அதான் கண்ணு ஒடம்புல்லாம் மலந்து மலர்ந்து பேசுதே.. அந்த சின்ன மொதலாளி நினைப்புல்லாம் வேண்டாம்..
    ‘அம்மா”

    “சும்மா பேசாத..இன்னிக்கு அந்த ஆளு வரட்டும் அவன்கிட்ட ஒன்னோட கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு கேக்கப்போறேன்”

    சக்கி அந்த ஆள் என்று சொன்னது செம்பன் குஞ்சுவை..அவள் கணவன்..மரக்காத்தன்..இப்போதைக்கு கும்பலோடு கும்பலாய் தோணியிலேறி மீன்பிடிப்பது தான் தொழில்..ஆனால் அவனுக்கும் ஒரு நெடுங்காலக் கனவு..இந்தத் துறையில் சொந்தமாய்த்தோணி வாங்க வேண்டும் என்பது..

    அந்த மீன்பிடிக்கும் திருக்குன்றங் கரையில் பலகாலம் கடலாடுபவன் தான் அவன்.. மரக்காத்தன் கையில் துட்டு சேராது என்பது காலம் காலமாகப் பேசப்படும் வழக்கு.. அதை முறியடிக்க வேண்டும். சொந்தத்தோணி எக்கச் சக்க துட்டு..

    அன்றிரவு செம்பன் குஞ்சு வர, ஒருபுறம் சக்கி கறுத்தம்மா பற்றி பேச்செடுக்க நினைக்கையிலேயே அவன்சொன்னான்..” ஒரு பழைய தோணி விலைக்கு வருது வாங்கலாமுன்னு இருக்கேன்”
    சக்கிக்குக் கறுத்தம்மா பற்றிய கவலை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட “அவ்ளோ பணம் எப்படி சம்பாரிக்கப் போறீங்க”

    “சக்கி. எனக்கு வாரதெல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கறேன்..”

    “அது சரி..ரெண்டு பொட்டப் புள்ள..காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேண்டாமா. அப்படி ஒண்ணும் நா நிறையசேத்துடலை. நீங்களும் நிறைய தந்துடலை”

    “கவலைப் படாதே சின்ன முதலாளி தர்றேன்னுசொல்லியிருக்காங்க”

    “யாரு கிட்டங்கி பரீக்குட்டி மொதலாளியா” சக்கியின் நெஞ்சுக்குள் பகீர்.. “எப்ப்டித்தருவாகளாம்..”

    “பிடிக்கிற மீன்லாம் தர்றேன்னு சொல்லியிருக்கேன்.. நாளைக்கே பக்கத்து கிராமத்துல ஒருதோணி விலைக்கு வருது வாங்கப் போறேன்”

    உரையாடலைக் குடிசையில் இன்னொரு தட்டியறையில் கேட்டுக் கொண்டிருந்த கறுத்தம்மாவிற்குப் புரிந்தது. பரீக்குட்டியிடமும் அவ்வ்ளவு துட்டு இல்லை..இருக்கிற – தன் கிட்டங்கி வியாபாரத்தின் முதலுக்காக வைத்திருக்கும் பணத்தை – தன்னை நம்பித் தருகிறான் என்பது..ஆனால் அப்பா திருப்பித் தருவாரா என்பது சந்தேகம் தான்.

    செம்பன் குஞ்சு வெளியில் போனதும் கேட்டும் விட்டாள். “அம்மா..மொதலாளிக்கு தந்துடுவாரா அப்பா”

    சக்கியின் மனதிலும் சந்தேகம் தான்..இருப்பினும்.” நல்லாத்தருவாக சும்மா கவலைப் படாதே”

    இரவில் பாயில் படுத்திருக்கும் போது கரையோரம் பரீக்குட்டி பாடும் பாட்டு அவளுக்குக் கேட்டது..விச்ராந்தியாய் வெள்ளந்தியாய் பாடுகின்ற அந்தப் பாட்டு அந்தக் குரல் அவள் மேனியை சிலிர்க்க வைத்தது..

    சொன்னாற்போல மறு நாள் தோணி பார்க்கப் போய்விட்டு கொஞ்சம் கவலையுடன் வந்தான் செம்பன் குஞ்சு..
    “ஏன் கவலை”

    ‘சக்கி நீ சேர்த்துருக்கற துட்டும் பரீக்குட்டி கொடுத்திருக்கற முன்னூறு ரூபாயும் பத்தாது.. இதர சாமானுக்கு முப்பதாவது வேணும்”

    “என்னபண்ணப் போறீங்க..”

    “பரீக்குட்டியையே கேக்கப் போறேன்” போய் கேட்டு வந்தவன்சந்தோஷமாய் இருந்தான்.. முதலாளி தந்துட்டாரு.. நாளைக்கே தோணி வாங்கி மறு நாள் கடல்ல இறக்கறேன்.

    அதே போல் தோணியைக் கடலாடி – செம்பன் குஞ்சு சில ஆட்களையையும் வைத்துக் கொண்டு – திரும்பும்போது பார்த்தால் தோணி முழுக்க மீன்கள்..முகம் முழுக்க சந்தோஷம்..

    கரையில் வரும்போதே சில்லறைவணிகத்துக்காக மீன்கள் வேண்டி பெண்கள் சூழ்ந்து கொள்ள, கூடவே பரிக்குட்டியும்… ஆனால் செம்பன் குஞ்சு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.. வந்த மீன்களையெல்லாம் நல்ல விலைக்கு மற்றவர்களிடம் விற்று கிடைத்த காசை சக்கியிடம் கொடுக்க சக்கி, “மொதலாளிக்கு மீன் கொடுக்கலையா”

    “என்ன அவசரம்” அலட்சியமான பதில்.. கொஞ்சம் சேர்த்துக்கிட்டு கொடுக்கலாம்.. இப்ப கொடுத்தா காசு வாராது.. கடன்ல குறைச்சுக்கிடுவார்…

    கறுத்தம்மாவுக்கு அப்போதே புரிந்தது.. தன் தகப்பன் பரீக்குட்டிக்குத்தரப் போவதில்லை..

    அதே போல் சில மாதமும் போக நல்ல வியாபாரம் செம்பன் குஞ்சுவும் செய்ய பரீக்குட்டி முதல்போடக் காசில்லாமல் அவனது கிட்டங்கி வேலை நின்று போனது..ஆனாலும் செம்பன் குஞ்சுவிடம் கொடுத்த காசை க் கேட்கவில்லை அவன்.

    கறுத்தம்மா உசுப்பேற்ற சக்கியும் கவலையாய் சிலசமயம் செம்பன்குஞ்சுவிடம் கேட்டாள்..கிடைத்த பதில் “சும்மா யிரு பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கலாம்”

    கறுத்தம்மாவிற்குத்தான் பரீக்குட்டியின் நினைப்பு பொங்கும்..கூடவே சக்கி விடுகிற முறைப்பும் புரியும்..அவனுடன் பேசுவதும் இல்லை.பார்த்தாலும் விலகி விலகிச் சென்றாள்

    ஒரு நாள் செம்பன் குஞ்சு சந்தோஷமாய் “ கறுத்தம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..இதுபழனி.. என்கிட்ட புதுசா சேர்ந்தவன் மத்த குன்றத்து ஆள்..”

    “உறவுகள்ளாம்” சக்கி கேட்க “அதெல்லாம் இவனுக்குக் கிடையாது.. நல்ல மரக்காத்தன்..சும்மா சொய்ங்க் சொய்ங்க்னு மீனு அள்ளுறான்.. நல்லா துடுப்பும் போட்றான். கறுத்தம்மாவை கவனிச்சுக்குவான்”

    பழனி நல்ல கறுகறுவென்று இருந்தான்..சின்னவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் தானாக்வே தோணியில் சேர்ந்து தொழில் காரன் ஆனவன் எது பற்றியும் கவலை இல்லாதவன்..

    ஆனால் சக்கிக்குக் கொஞ்சம் குழப்பம்..உறவுசனம் இல்லாதவனுக்குப் பொண் கொடுப்பதா.. கறுத்தம்மா ஒன்றும் சொல்லவில்லை. பரவாயில்லை அம்மா..சின்னமொதலாளி கடன் மட்டும் கொடுத்துவிடச் சொல்லு அப்பாவை..

    நல்ல நாளில் மீனவர்தலைவரான துறை அரையரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்கையில் தான் அது நடந்தது..

    மீனவக் குடும்பங்களில் வேறு துறை க்காரர்கள் மணம் செய்யவேண்டுமென்றால் துரை அரையருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..செலுத்தாமலும் இருக்கலாம்..ஆனால் துரை அரையர் இஷ்டம் அது..

    கல்யாணத்திற்கு பழனி தன் நீர்க்குன்றத்துறையிலிருந்து பத்து ஆண்பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான் அதுவே கறுத்தம்மாவின் துறையில் இருந்தவர்களுக்கு அதிசயம்…என்ன ஒரு பெண்பிள்ளை கூட இல்லை..

    துறை அரையர் மாப்பிள்ளை 75 ரூபாய்கொடுக்கணும் கட்டணமாய் என்றதும் வெடித்தது பூகம்பம்.. “அதெப்படிக் கேக்கலாம் “ என பழனியுடன் வந்த ஒருவன் கேட்க “அது அப்படித் தான்” எனத் துறை அரையர் சொல்ல வந்தவன் “ எங்களுக்கு விஷயமேதும் தெரியாதுன்னா சொல்றீங்க..ஒங்க துறைக்காரப் பொண்ணு ஒண்ணும் அவ்ளோ சுத்தமிலலின்னு எல்லாரும் பேசிக்கறாங்க.மத்த சாதிக்காரனோட அது சிரிச்ச சிரிப்பு ஊரெல்லாம் சிரிக்குதே..இல்லைன்னா ஏன் சாதிசனம் இல்லாத எங்க ஊர் ஆளை மாப்பிள்ளையாக் கூட்டிருக்கீங்க”


    (தொடரும்)

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  12. #1976
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் 10 தொடர்ச்சி..

    **

    கேட்ட பழிச்சொல்.. சக்கி எதிர்பார்த்துப் பயந்த சொல்.. கறுத்தம்மாவை பார்த்து நடந்துக்கோடி எனச் சொல்லிச் சொல்லி வளர்த்தும் எங்கிருந்தோ வந்தவன் ஏகடியமாகச் சொன்ன சொல். சக்கி அப்படியே மயங்கி விழ வைத்தியரைக் கூப்பிட ஆள் போகிறது.

    செம்பன் குஞ்சுவோ பழனியைத்தனியாகக் கூப்பிட்டு தன் பணம் 75 ரூபாயைக் கொடுத்து துறை அரையனிடம் கட்டச் சொல்ல கல்யாணம் நடக்க பின் தான் குழப்பமே.

    “மாப்பிள்ளை..கொஞ்சம் இங்க தங்கிட்டு அப்புறம் உங்க குன்றத்துக்குப் போங்களே.ன் என் பொண்டாட்டிக்கு உடல் சரியில்லை..கறுத்தம்மா கொஞ்ச நாள் தங்கினா பார்த்துக்குவா”

    உள்ளே சக்கிக்கோ மகள் பற்றிய கவலை..மகளிடம் “கறுத்தம்மா என்னைப் பத்திக் கவலைப் படாதே.. இங்க இருந்தால் இன்னும் ஊர் பேசும்.. உனக்கும் மனசு மாறினாலும் ஆகும்..நீ புருஷனோட போய்டு”

    “அம்மா”

    “இப்ப நீ கல்யாணங்கட்டின மரக்காத்தி. ஒனக்கு நெனப்பு கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு போனாலும் ஒன் புருஷன் உனக்கு இல்லை

    ” நா அப்படில்லாம் இல்லைம்மா”

    “எனக்குத் தெரியும் ஆனா..போய்டேன்..”

    பழனி செம்பன் குஞ்சுவிடம்.. “ நான் கூட்டிக்கிட்டே போய்டறேன்.என்னோட ஆட்கள நீங்க என்னபேச்சு பேசினீங்க”

    செம்பன் குஞ்சு கெஞ்ச, துறை அரையர் அந்தப் பொண்ணிடமே கேட்கலாம் எனச் சொல்ல கறுத்தம்மாவிடம் கேட்டால் க்றுத்தம்மா “ நான் அவர் கூடவே போறேம்பா”

    செம்பன் குஞ்சுவிற்குக் கோபம்மிக அதிகமாகி “என் முகத்துலயே முழிக்காதே போ”

    கறுத்தம்மா பிறந்து வளர்ந்து பழகிய கடற்கரையைப் பார்த்தாள் அம்மாவை மறுப்டியும் ஒருமுறை பார்த்தாள்..பின் புறப்பட்டுவிட்டாள் பழனியின் நீர்க்குன்றத்திற்கு..

    **

    பழனி நல்ல கணவன் தான். சமர்த்தாய் வெள்ளென தோணியோட்டி மீன்பிடித்து மாலை நேரம் வந்துசம்பாதித்ததை கறுத்தம்மாவிடம் கொடுத்து இணக்கமாகத்தான் இருந்தான்.. கறுத்தம்மாவிற்குப் பிடித்த் வண்ணம் எல்லா விதங்களிலும் இருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் அவன் மனதில் வெகு ஆழமாய். கறுத்தம்மா அவள் வீட்டிற்குப் போகக் கூடாது.

    கறுத்தம்மாவும் நல்ல மரக்காத்தியாகத் தான் இருந்தாள்..விருப்பத்துடன் தன்னைக் கொடுத்தாள் அவனுக்கு.

    அவள் நினைவில் பரீக்குட்டி மங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்..ஆனால் ஊரார் நினைவில். அப்படி இல்லை.

    ஒரு நாள்
    சூழ்நிலையில் சக்கி மரிக்க செம்பன் குஞ்சுவுக்கு கறுத்தமமாவிடம் சொல்லியனுப்ப மனமில்லை..ஆனால் பரிக்குட்டிக்குத் தான் பொறுக்கவில்லை.

    சொல்லலாம் என நீர்க்குன்றம் வர, அங்கு பார்த்தது பழனியுடன் தோணி தள்ளுபவன்..

    என்ன திருக்குன்றங்காரவுகளே இந்தப் பக்கம்

    கறுத்தம்மா…பழனி வீடு எங்க இருக்கு

    எதுக்காம்.

    இல்ல கறுத்தம்மா வோட அம்மா இறந்து போய்ட்டாங்க சொல்லலாம்னு தான்

    அதுக்கு நீங்க எதுக்கு வந்தீங்க அதுவும் இவ்வளவு கருக்கலல் இம்புட்டு தூரம் – ம்ம் ஊர்வாய்..அப்படித்தான் கேட்கும்

    பரிக்குட்டி எதுவும் சொல்லாமல் விவரம் வாங்கி கறுத்தம்மா இருக்கும் குடிசைக்குச் சென்று தட்ட அவள் கதவைத் திறக்க மறுக்கிறாள்..ம்ஹூம்.. ம்ஹூம் கூடாது.. நான்மரக்காத்தி..என் காதலை, கனவை குழிதோண்டிப் புதைத்தவள். அவனைப் பார்க்கமாட்டேன்..

    தூளியில் இருக்கும் இருமாதப் பெண்குழந்தையை ஆட்டியும் விடுகிறாள்…

    கறுத்தம்மா

    பரீக்குட்டியின் குரல்

    கறுத்தம்மாவிற்கோ கையறு நிலை உள்ளே படுக்க விரித்திருந்த பாயில் அப்படியே கூனிக்குறுகி உட்காருகிறாள்

    கறுத்தம்மா உன்னுடைய அம்மா சக்கி இறந்து போய்ட்டாங்க. சொல்லத்தான் வந்தேன் – பரீக்குட்டி தள்ளாடி த் திரும்பிச் செல்ல…
    இவளுக்கோ காதை சுறா கவ்வியது போலப் பிரமை..ஓஹ்.. எண்ட அம்மே எனக் குரலெடுத்து அழலாம் என்றால் மறுபடி தட் தட்

    யாரு
    நாந்தான் – பழனியின் குரல்

    கதவைத்திறந்து உதடு கண் கன்னம் தலைமுடி எல்லாம் துடிக்க ஏங்க…

    கண்சிவந்திருந்த பழனியோ “என்ன ஒஞ் சின்ன முதலாளி வந்தானா இங்கே”

    அதெல்லாம் காதில் விழவில்லை..”ஏங்க எங்கம்மா இறந்து போய்ட்டாங்க நான் போகணும்..

    ம்ம் முடியாது ஏன் சொல்லிவிட வேற ஆள் கிடைக்கலையா.. ஏன் இந்த ஆள் வரணும் இன்னும் அவனை நெனச்சுக்கிட்டிருக்கியா

    சுருக்..

    கறுத்தம்மா பார்த்தாள்..”ஹச்சோ நாந்தான் எல்லாத்தையும் ஒங்ககிட்ட வந்த மொத நாள்ளே சொல்லிட்டேனே. நா எதும் தப்புத் தண்டா செய்யலீன்னு..பேசினதுமட்டும் தான் குத்தம்.. அம்மாவப் பாக்கணுங்க”

    ‘ஒன்னப் பத்தித் தெரியும்..ஊர்ப்பேச்சு ஒண்ணு இருக்குல்ல..ஆனா ஒங்கம்மா சாவுக்கு நீ போக முடியாது போ” இறுதியான முடிவு பழனியிடமிருந்து.

    *
    ஊர் பேச்சு எனச் சொன்னது வாஸ்தவம் தான்.. ஒரு நாள் பழனி தோணியில் மீன்பிடிக்கச் செல்லும் போது சுக்கான் பிடித்த படி ஏதோ சிந்தனையில் ஆழ்கடலுக்குள் சென்று விட உடனிருந்த்வர்களுக்கு பயம்.பழனி பழனி என உலுக்கியபிறகு தான் அவனுக்கு நினைவே வந்தது.

    கரை திரும்பியதும் சக தோணிஓட்டுபவர்கள் கலந்தாலோசித்து “அவஞ்சம்சாரம் தான் மாறிப்போனது ஊரே சிரிக்கே.. மரக்காத்தி மாறிப்போனா கடல் காவுகொள்ளும்லா..அவம் போறது பத்தாதுன்னு நாமும் சாகணுமா என்ன” எனப் பேசி மறு நாள் அதற்கு மறு நாள் என பழனிகடற்கரைக்கு வரும்முன்னமேயே தோணி எடுத்துச் சென்றுவிட பழனிக்குக் கோபம் வருகிறது.. நான் நல்லவன் என் பொஞ்சாதியும் தான்..

    பின் முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் இருட்டிலேயே இருக்கும் ஊரார் தோணியில் மீன் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் உலை பொங்கக் கொடுக்க ஆரம்பித்தான்.

    கறுத்தம்மாவிற்கோ வாழ்க்கையே சோகம்..அதில் பழனியின் வார்த்தைகள் வேறு.. இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கியா.பரீக்குட்டியை.. தன்னைத் தானே கேட்டுக் கேட்டு க் கேட்டு..கடைசியில் ஆம்.. நேசம் இருப்பது பரீக்குட்டியிடம் தான்..அவன் தான் தனக்காக எல்லாம் தியாகம் செய்தான்.. அவனை உதறிவிட்டு விட்டேன்..அவன் மேல ஆசையா..இல்லை இல்லை ஆமாம்..அவனுக்கும் தான்..ஆனா தப்பா ஒரு பார்வை பார்த்ததில்லயே.. நான் செஞ்சது தப்பு தான் …என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில்….

    அங்கே நீர்க்குன்றத்தில் செம்பன்குஞ்சு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டும் நிம்மதியற்ற நிலையில் இருக்க கருத்தம்மாவின் தங்கை பஞ்சமி அக்கா ஊருக்கு வருகிறாள்.

    குழந்த செவேல்னு ஒன்ன மாதிரி இருக்குக்கா

    கறுத்தம்மாவிற்கோ ஏக சந்தோஷம் அவ்வளவுதுக்கத்திலும்.. பஞ்ச்சமீயின் கையைப் பிடித்து கட்டிப்பிடிக்க பஞ்சமி எல்லாவற்றையும் சொல்கிறாள்

    “அப்பா தோணிய வித்துடுச்சு. அவர் கல்யாணங்கட்டிக்கிட்ட பொம்பளை அவ பையனுக்கு அப்பா பணத்த எடுத்துக் கொடுத்திச்சா அப்பா அவளை வெரட்டி விட்டுட்டார்.. திரும்பவும் கூட்டிக்கிட்டார்.. ஆனா பித்துப்பிடிச்சுடுச்சு அப்பாக்கு
    அப்புறம் சின்ன மொதலாளி பரிக்குட்டிய ப் பார்த்தேன் வரவழில்ல.. ரொம்ப மாறிட்டாக..எதையோ பறிகொடுத்தாப்புல.. அவரோட கிட்டங்கியும் போச்சு தெரியும்லா”

    எல்லாப் பேச்சும் கறுத்தம்மாவின் காதில் விழவில்லை.கடைசியில் பரீக்குட்டி என்று சொன்னது மட்டும் காதில் விழ.”சின்ன முதலாளியப் பார்த்தியா.எப்படி இருக்காக”

    அவள் கேட்டது இன்னொருவன் காதிலும் விழுகிறது..பழனி. உள்ளே வந்து பஞ்சமியை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து பின் “ நா அன்னிக்கு கேட்டது சரி தான் நீ இன்னும் மறக்கல அவனை”

    கறுத்தம்மா விழி சுருங்கி ஏதும் பேசாமல் மெளனிக்க அதுவே அவனுக்கு எதையோ உணர்த்த கோபமாய் வெளியில் கடற்கரைக்குச் சென்று இருந்த தோணியைக் கடலில் தள்ளி வேக வேகமாக கடலுக்குள் செல்கிறான்..

    பஞ்சமி குழந்தையைப்பார்த்துக்கோ

    கறுத்தம்மா கொஞ்சம் நடக்க சற்றுத்தொலைவில் அந்த மாலை வெளையில் வருவது யார்… தளர்வாய்..பரீக்குட்டி

    கறுத்தம்மாவின் கண்கள் அவன் கண்களுடன் பேசுகின்றன
    நிறைய ஆசை
    நிறைய பாசம்
    நிறையக் காதல்
    நிறைய ஏக்கம்
    நிறைய துக்கம்

    துக்கம் விழிகளில் முட்ட சின்ன மொதலாளி இப்படி மாறிட்டீங்களே என்ற வார்த்தைகள் காற்றுடன் சிக்கி ஒலியிழக்க

    பரீக்குட்டி – கறுத்தம்மா இன்னும் என்னை விரும்பறயா…

    என்ன கேள்வி இது சின்ன மொதலாளி நா எங்க ஒங்களை வெறுத்திருக்கேன்..

    விம்மல் அழுகை துடிப்பு ஏக்கம் தடுமாற்றம் – தூண்டிவிடும் காற்று..வெகுதொலைவில் கேட்கும் அலையோசை

    கறுத்தம்மா

    மறுபடி பரீக்குட்டி விளிக்க அவள் அப்படியே சாய்கிறாள் அவன் மார்பில்.. பரிக்குட்டியும் அணைக்க காற்றுகொஞ்சம் வேகமாய் சுழன்றடிக்கிறது..

    *

    கடலுள் தோணியைச் செலுத்திய பழனிக்கும் அப்படித்தான். எண்ணங்கள். இப்படி ஒருத்தி இருப்பாளா.. முதலிலேயே சொல்லியிருக்கலாமே. ஏன் காற்று இப்படி அடிக்கிறது அலைகளும் வேகமாகக் கூவுகின்றன.. இதோ இது என்ன…

    கன்னங்கரேலெனச் சுறா ஒன்று மேலெழும்புகிறது.. பழனியின் தூண்டிலில் வாய் மாட்ட்டிக்கொண்டிருக்க வேண்டும்..உயிர் போகக்கூடாது எனக்கு.. என்னையா எடுக்கப் பார்க்கிறே என உயிராசையால் மறுபடியும் மோதி அலைபாய..

    பழனி வேகமாக இழுக்கிறான்..எங்கிருந்தோ மேகங்கள் சுழற்காற்று..தோணியும் சுழல்கிறது.. இது என்ன எங்கிருந்து வந்தது இந்தக் காற்று.. இத்தனை நாள் கடலாடினேனே எனக்கு நிகழ்ந்ததில்லையே. இது போல்…ஒரு வேளை ஒருவேளை என்வீட்டு மரக்காத்தி தவறிழைக்கிறாளா..இருக்காது.அவள் என்னிடம் தவறேதும் செய்யவில்லை எனச் சொன்னவளாயிற்றே….இருந்தும் அவளைக் குத்திக் காட்டியது தவறோ..என்ன இது இந்தத் தோணி சுற்றுகிறது..இந்தச் சுறாவேறு ஆட்டங்கண்டு இருக்கிறது.. கடலம்மா என்னைக் காவு வாங்கப்போகிறாளா..என்னைக்காப்பது கறுத்தம்மாவின் கையிலல்லவா இருக்கிறது…

    கறுத்தம்மா. அடிவயிற்றிலிருந்து உயிரின் ஓசையாய் பழனியின் குரல் இடி மின்னல் காற்றலைகளில் கலந்து அமுங்கிப்போக அவன் தோணி கவிழ்ந்து சுழலில் சிக்கிக் கொள்ள அவனும் சுழன்று சுழன்று சுழன்று அதலபாதாளத்தில்…..
    **
    மறு நாள் விடிகாலை பஞ்சமி கடற்கரையில் கொஞ்சம் குழந்தையுடன் வெகு தூரம் நடந்த போது தெரிந்தது…வெகு தொலைவில் கடலலைகளுடன் அணைத்தபடி உயிர் விட்டிருந்த கறுத்தம்மாவும் பரீக்குட்டியு.ம்

    சில மைல் தொலைவில் உள்ள இன்னொரு கடற்கரையில் தூண்டிலை முழுங்கிய சுறா ஒன்று ஒதுங்கியது..

    பழனியின் உடல் மட்டும் கிடைக்கவேயில்லை..

    **
    இது தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் மலையாள நாவலின் மிகச் சுருங்கிய சுருக்கம்.. (தமிழில் மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி)

    **
    கடல் பாட்டுக்காக கடல் மேல் பிறக்கவைத்தான் எழுதலாம் என இருந்தேன்.பின் இந்தப் படம் செம்மீன் (ஆம் முதலில் நாவலாய் வந்து பின் மலையாளத்தில் திரைப்படமாய் வந்தது) பத்தி எழுதலாம் என்று இருந்தால் படம் பார்த்ததில்லை.. நாவலும் படித்ததில்லை.

    (thodarum)

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  14. #1977
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    thozil paattukkaL 10- thodarchchi..

    **

    பின் வாங்கி வைத்திருந்த நாவல் முழுவதும் படித்த பின் உடனே படம் பார்க்க முடியவில்லை..காரணம் நாவல் அப்படி.அப்படியே கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும் வசனங்கள்
    பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன்
    ..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்கள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
    செம்பன்குஞ்சு கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.

    அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)

    செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..

    அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்

    பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்

    முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்..

    http://www.youtube.com/watch?x-yt-cl...yer_detailpage

    http://www.youtube.com/watch?feature...&v=Qv5p8OwwbYE


    முற்றும்..

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  16. #1978
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
    பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன்
    ..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்கள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
    செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.

    அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)

    செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..

    அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்

    பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்

    முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்
    ..


    இத ..இத...இதைத்தான் எதிர்பார்த்தேன் சி க!
    மலையாளக் கடலில் செம்மீன் பிடித்துப் பந்தி பரிமாறுங்கள் சி க , வாசு, ராகதேவன்...
    ஒரு மறக்க முடியாத நல்ல திரைப்படத்தின் மென்மையான இசையும் மேன்மையான ஒளிப்பதிவுடன் கூடிய பாடல் காட்சிகளும் இனிமையான மதுர கானங்களும்
    உங்கள் மீள்பதிவால் எங்களை நீந்திக் களிக்க வையுங்கள் !!
    செந்தில்
    Last edited by sivajisenthil; 19th July 2015 at 12:06 PM.

  17. #1979
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர்கள் நரஸ்துதி செய்ததாலேயே, திராவிட பிரபலங்கள் அளவு மீறிய புகழ் அடைந்தனர். அப்படியே பார்த்தாலும் ,நரஸ்துதி செய்த அத்தனை கவிஞர்களும் ,வாலி உயரத்தை எட்ட முடியவில்லையே ?(புலமை பித்தன் உட்பட ). வாலி புகழ் ,அவர் திறமையால் மட்டுமே கண்டது.

    நான் சொல்ல வந்தது, அவரை கண்ணதாசன்,வைரமுத்து அளவிற்கு போற்றாத காரணம் , Brand பண்ணி கொண்டதால் வந்த வினையே.

    மற்றபடி ,அவர் இவர்களுக்கு சமமான திறமை கொண்டு,இவர்கள் அளவு போற்ற தக்கவர் என்று குறிப்பிட்டேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. #1980
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மிள் பதிவு போட்டதில் ஒரு சுய நலமும் உண்டு.. வாசு அப்போது மெடர்னிடி (?!) ஸாரி டைப்போ பேடர்னிடி லீவில் போயிருந்தார் லாங்க் லீவாக.. கிஷ்ணாவும் மிஸ்ஸிங்க் எனில் கல் நாயக் தான் குட்டி பக்கெட்டில் இறால் மீன் அதாவது செம்மீன் கொணர்ந்தார்.. ராகதேவனும் முரளியும் பின்னூட்டம் அழகாகத் தந்திருந்தனர்..அதைத் தேட வேண்டும்..

    எனில் வாசுவிடமிருந்து பெரிய பக்கெட் எதிர் பார்க்கலாம் என....

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •