Page 187 of 400 FirstFirst ... 87137177185186187188189197237287 ... LastLast
Results 1,861 to 1,870 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1861
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை// சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1862
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள்

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #1863
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்
    வித்தியாசமான கோணங்களில் பாடல்களை அணுகுவதில் தங்களுடைய பாணியே தனி. இந்த வகையில் மாற்றார் தோட்டத்து மல்லிகையும் நிச்சயம் தனித்துவமாக விளங்குகிறது.
    இந்தப் பட்டியலில் கம் செப்டம்பர், செப்டம்பரில் தான் வருமோ...?
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  8. #1864
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ

    மீள் வருகைக்கு மீண்டும் நன்றி சி க ! தென்மேற்கே இருக்கும் ஜெமினித் (காதல் மாந் )தோப்பை மட்டும் கேட்டுவிடாதீர்கள்!!

  9. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  10. #1865
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சிவாஜி செந்தில் சார்
    வித்தியாசமான கோணங்களில் பாடல்களை அணுகுவதில் தங்களுடைய பாணியே தனி. இந்த வகையில் மாற்றார் தோட்டத்து மல்லிகையும் நிச்சயம் தனித்துவமாக விளங்குகிறது.
    இந்தப் பட்டியலில் கம் செப்டம்பர், செப்டம்பரில் தான் வருமோ...?
    சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள் Ravi
    Thanks for the complements Raaghavendhar Sir and Ravi Sir
    The Good The Bad and the Ugly, My Name is Nobody, For a Few Dollars More...fame Ennio Morricone next to JB's John Barry
    followed by The Sound of Music, Singing in the rain, Come September...a bonanza of western movies with evergreen music and songs...
    I try my level best to extract...for a change and lateral thinking among our friends..

  11. Likes vasudevan31355 liked this post
  12. #1866
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    விட்டுப் போன ஹோம் வொர்க் ஃப்ரம் 163
    வாசு..அருணோதயம் மதுரை நியூசினிமாவில் பார்த்த நினைவு.. நார்மல் படக்காட்சியிலேயே (35 எம் எம்) சரோஜாதேவி 70 எம் எம் ஆக இருப்பார்..மகா அகலமாக!.. ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு. சோ மனோரமா கொஞ்சம் புன்னகைக்க வைப்பார்கள்.. இந்தப் பாட் பிடிக்கும் என்றாலும் எனக்கு குங்குனாரே மிகப் பிடிக்கும்.. தாங்க்ஸ்..

    //கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
    இழுப்பதற்கு என்ன காரணம்

    என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்' //
    *
    பால் வண்ணம் பருவம் கண்டு, பளிங்கினால் ஒரு மாளிகை..
    சி.செ.. இரண்டுமே நல்ல பாடல்கள் தாங்க்ஸ்
    *

    ராஜ் ராஜ் சார் திடீர்னு கலர் ஜூகல் பந்தி யாருக்காக.. தாங்க்ஸ்லு..
    ///அல்லித் தண்டு கால் எடுத்து
    அடி மேல் அடி எடுத்து
    சின்னக் கண்ணன் நடக்கையிலே
    சித்திரங்கள் என்ன செய்யும்/// எனக்குமிகவும் பிடித்த பாடல் ரவி..தாங்க்ஸ்
    *
    குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்..
    *
    //"nagumOmu ganalEni..." in Abheri raagam...//ராகதேவன் நகுமோமுபாடல்கள் தொகுப்பிற்குஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

    இதைச் சொல்லிக் கீழே வந்தால் ரவியின் அட்டகாசத் தொகுப்பு ப்ரோவ பாராமா.. ரவிக்கும் ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

    அப்புறம் ராஜ் ராஜின் மெல்லிய நகைச்சுவையுடன் பானுமதியின் நகுமோ..ஓ.. மத்யானம் தூங்கியும் இப்பக் கேட்கும் போது தூக்கம் வருகிறது..அமைதியுடன்..தாங்க்யூ சார்..
    அப்புறம் அதே பானுமதி வைத்துமாசிலா உண்மைக்காதலேவிற்கும் ஒரு தாங்க்ஸ்..

    *
    வாசு..கல் தூண் பார்த்ததில்லை..பார்க்கத் தூண்டுகிறது உங்களின் எழுத்து..

    *

    ராகவேந்திரருக்கு 7000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றியும் கூட..
    *
    //Objection your honour!

    ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
    காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார்//
    மங்கையரில் மகராணி பாட்டுக்கும் வழக்கமான அசத்தல் அலசலுக்கும் வாசு விற்கு ஒரு ஓ.. அப்புறம் சி.செ.. காதல்ல எப்படி எல்லாம் வேகமாகும்..குழம்புமே..

    வளமாய் விழியூடி வாகாக நெஞ்சைக்
    குழப்புமே காதலெனக் கூறு!.

    *
    குமார்..பட விளம்பரங்கள் ஆவணங்கள் என அசத்துகிறீர்கள்.. நன்றி..
    //*'ஆபீஸில் வேலை வெட்டியில்லாமல் (?!?!?!) சும்மாதானே உட்கார்ந்திருக்கிறாய். சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல்களை உனக்குத்தெரிந்த வரையில் பட்டியலிட்டால் என்ன?' என்று மனம் கட்டளையிட்டதால் என் நினைவுக்கு வந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். நிறைய விடுபட்டிருக்கு// ஆதி ராம் கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் முத்ராமன் உடன் வருவது யார்..- அந்தப்பாட்டும் சாத்தனூர் தானே

    *
    ஆஹா..பட்டுச் சிறகுகொண்ட சிட்டுக்குருவி பாட்டில்கே.ஆர்.விஜயா அழகாய் இருக்கிறாரே.. நான் இப்போது தான் பாடலைக் கேட்கிறேன் பார்க்கிறேன்..தாங்க்ஸ் வாசு

    *
    நினைத்தால் சிரிப்பு வரும் (மதுரகானம் முதல் பாகத்தில் நான் கேட்டு நீங்கள் கொடுத்தீர்கள் வாசு.. நினைவிருக்கிறதா), மே. க்யா கரூ ஆஸ் முஜே புட்டாமில்கயா இரண்டும் எனக்குப் பிடித்த பாடல்கள்.. வாசு, ராஜ்ராஜ் சார் தாங்க்.ஸ்

    *
    என்ன சொல்ல பாட் இனிமேல் தான் கேக்கணும்..கொஞ்சம் இரவு இன்னும் ஏறட்டும்!
    *
    ரவி..தந்தை பாடல்களில் எல்லா வற்றையும் நான் கேட்கவில்லை.பல ஏற்கெனவே கேட்டது தான்..இருந்தாலும் ஒரு மிஸ்ஸிங் இருப்பது போல் தெரிகிறது..போட்டிருக்கிறீர்களா தெரியவில்லை..தந்தை என்று படித்த போதே எல்லார் மனதிலும் வரும் பாடல் அது..அது என்னவென்றால்…



    *
    சில பல விட்டுப் போயிருக்கலாம்.. என்னை மன்னிக்க..அப்புறம் சி.செ.. தென்மேற்கே இருக்கற தென்னந்தோப்பை தரமாட்டேன்..!

    பின்ன வாரேன்.. நாளை நாம் எல்லாம் போவோமா ஊர்கோலம்(?!)
    *

  13. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  14. #1867
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சி.செ.. உங்கள் அசத்தல் தொடருக்கு டைட்டில் நான் வைக்கிறேன்.. Bondடு ரங்க விட்டலா! (முன்னால் ஒருகாலத்தில் பாண்ட் படங்களைப் பற்றி எழுத த்கவல்கள் சேகரித்து எழுதலாம் என வைத்த தலைப்பு! அப்புறம் விட்டு விட்டேன்..) .. இசை மட்டுமென்றில்லாமல் கொஞ்சம் ஒவ்வொரு படத்தின் ஸ்பெஷாலிட்டியையும் கொஞ்சம் டீடெய்ல்ட் வெர்ஷனாக தமிழில் எழுதுங்களேன்.. சின்ன ரெக்வஸ்ட் ....

    லிவ் அண்ட் லெட் டை எப்போ வரும்னு ஆவல் மிகுகிறது..ஏன் எனில்.. 1996 ல் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கப் பட்ட போது அப்போது தான் மியூஸிக்கல் ஃபெளண்டன் கான்ஸெப்ட் அங்கு வந்தது..அப்போது போட்ட முதல் பாடல் என்ன தெரியுமா.. லிவ் அண்ட் லெட் டை இசை..!
    நிச்சயம் சி க !
    முடிந்த வரை வகைப் படுத்துகிறேன் மேலோட்டமாக ...ஏனெனின் முதலிலேயே என் லெவல் இசையறிவில் அவுரங்கசீப் அளவுதான் என்று பாதுகாப்பாக
    டிக்ளேர் செய்து விட்டேன்
    நீங்கள் ரவி வாசு கோபால் ராகவேந்தர் கல்நாயக். ராஜேஷ் கலை......கோலோச்சும் இசைத்திரியில் நானும் அலைந்து திரிந்து பதிவிடுகிறேன்
    ஆனால் இந்த இசை வகையறாக்களில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் இசையின் தன்மை மற்றும் இதர சங்கதிகள் உங்களனைவரின் கைகளிலேதான் !
    மாற்றார் தோட்டத்து மல்லிகை மணக்கும் போது மெல்லிசை மதுரமாகாதா என்னும் ஒரு சிறிய கருத்துப் பொறியின் விளைவே இது !!

    When Roger Moore took over the Bond duty from Connery, the traditional musician was also changed for a change and the theme music was rarely sprinkled in this movie parts. Duran Duran troop music was so scintillating and added a fresh flavour to this light weight Bond movie with Moore trying his style even though shadowed by Connery till he broke the shell to come out in the Spy Who Loved Me!!

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #1868
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் ''தெய்வத்தாய்

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில்பிரபலமாகக் காணப்பட்டு, முழக்கப்பட்ட இசைக்கருவி பொங்கஸ் ( Bongo Drums) ஆகும்.

    பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும் இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும்தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம்நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. இரண்டு மேளத்திலும் அழவில் பெரிதாக உள்ள மேளத்தை ( Drum ) , ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கிறார்கள். . இது ஸ்பானிய மொழியில்பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாகஅழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 7inch தொடக்கம் 7 8.5 inch ஆகும். ( சிறுவர்களுக்காகசெய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும்

    1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் changui`என்ற இசைக்கு/பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதையசல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

    1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம், பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால்மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தற்போதும்உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.

    இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால்லாவகமாக இசைக்கவேண்டும்.

    1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

    மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

    அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

    courtesy - net

  17. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
  18. #1869
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி அவர்களின் கதையின் கரு -200 பதிவுகள் மிகவும் அருமை .உறவுகள் பற்றி விரிவாக பட்டியிலிட்டு அதற்கேற்றபடங்கள் , பாடல்கள் பதிவிட்டு இந்த நாள் இனிய நாள் என்று தினமும் மகிழ்விக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .

  19. Thanks vasudevan31355 thanked for this post
  20. #1870
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘,

    என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!

    புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில் அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை! மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!

    இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?

    கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..

    “பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..

    துணிவும் வரவேண்டும் தோழா..”

    “நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்

    கொள்கை நிறைவேற்று தோழா..”

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

    திரைப்படம்:தெய்வத்தாய்
    இசை:எம்.எஸ்.வி
    பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை.

    Courtesy
    காவிரி மைந்தன்
    Last edited by esvee; 17th July 2015 at 05:57 AM.

  21. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •