Page 185 of 400 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1841
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 199

    பாகம் 2 - தந்தை



  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1842
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 200

    பாகம் 2 - தந்தை


    அருமையான பாடல் - பாலாவின் குரலில் - இந்த 200 வது பதிவை எல்லோருக்கும் மதுர கானத்தை , தன் உடம்பை மிகவும் வருத்திக்கொண்டு , பிரதிபலன் பார்க்காமல் அள்ளி அள்ளி வழங்கும் நம் வாசுவிற்கு சமர்ப்பிக்கிறேன் .


  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #1843
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 201

    பாகம் 2 - தந்தை


    எந்த தந்தை மனமகிழ்வுடன் தான் வாழும் காலத்தில் இப்படி பாடுகிறானோ , அந்த நாள் நம் வாழ்வில் ஒரு பொன்நாள் - நாம் நம் பிறவிப்பயனை அடைந்த நாள் .

    " எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
    பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு
    இவை அத்தனையும் அன்பு பரிசு
    நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு "

    தந்தையைப்பற்றி பேசுவது , எழுதுவது என்பது சமுத்திரத்தில் ஒரு துளி தண்ணீரை மொண்டு எடுப்பதுப்போல - அவரின் பெருமைகள் கண்டிப்பாக 100 பதிவுகளில் அடக்கி விட முடியாது . ஏதோ என்னால் முடிந்த வரை ஆத்மார்த்தமாக பதிவுகள் போட்டுள்ளேன் - இதை மிகவும் பொறுமையுடனும் , பாராட்டுக்களுடனும் படித்த , வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

    அன்புடன்
    ரவி

    Last edited by g94127302; 16th July 2015 at 10:00 AM.

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  8. #1844
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like






    Last edited by vasudevan31355; 16th July 2015 at 08:55 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks uvausan thanked for this post
    Likes Russellmai, uvausan liked this post
  10. #1845
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    அபபா/(தத்துப்) பிள்ளை பந்தம்/சொந்தம்...

    "கண்ணான கண்ணா உன்னை..."

    "நீ தானா அந்தக் குயில்"; வைரமுத்து/ இளையராஜா/ கே.ஜே. யேசுதாஸ்...



    This is one of my (K.J. Yesudas' too!) most sentimental TFM songs. If I have posted this one before,
    please bear with me...

  11. Likes Russellmai liked this post
  12. #1846
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    18

    'என்ன சொல்ல! என்ன சொல்ல! '



    பாலா பாடிய பாடல்களில் சற்று விரசம் தூக்கலான பாடல். காட்சியமைப்பிலும்தான். 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு' பாடலுக்கு முன்னோடி.

    இந்த மாதிரிப் பாடலுக்கு அப்போது வேறு யார் பாலாவுடன் ஜோடி சேர முடியும் ராட்சஸியைத் தவிர. பின்னால் அந்த வேலை ஜானகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. விஸ்தாரமாக எழுதுவதற்கும் இல்லை. மாட்டிக் கொண்டு விழிப்பதாயும் இல்லை.

    மோக தாபப் பாடல். அவ்வளவே! அப்போது திரையரங்கில் நெளிய வைத்த பாடல்தான். இப்போதும் கூடத்தான். அதுவும் பாசமான 'பாபு' படத்தில். தவிர்த்திருக்கலாமோ என்று கூடத் தோன்றும். இந்தப் பாடலை இணைத்தால்தான் அந்தக் காவியமா? இன்னும் ஒன்று 'அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்'.

    அப்போதைய இளம் ஜோடிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். இளம் வாலிபனுக்கு அப்போது சூர்யாவின் அப்பாவை விட்டால் ஆளேது? இவருக்கு பொருத்தமாக நிர்மலா, லஷ்மி இருவரும் அளவெடுத்தாற் போல் பொருந்தியது வேறு வாட்டமாகப் போய் விட்டது. அந்தக் காலத்தில் கண்ணன் சிவக்குமார் என்றால் கோபிகா ஸ்திரீ நிர்மலா. ஆரம்ப காலத்தில் பேந்தப் பேந்த விழித்த சிவக்குமார் இளம் சிட்டுக்கள் ஜோடி சேர, சேர சிலிர்த்தெழுந்த காளையானார். சபை நடுக்கம் போய் குளிர் நடுக்கம் கண்டவராக மனிதர் ஜமாய்க்க ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ற மாதிரி பின்னணி பாட பாலா வசமாகச் சிக்கினார். (சிவக்குமாருக்கு பாலா சிறந்த பொருத்தம்) அப்புறம் ஈடு கொடுக்க இல்லை இல்லை ஈடுக்கு மேல் ஈடு கொடுக்க ஈஸ்வரி இருக்க, ஈரப் பாடல்களுக்கு இங்கித இசை தந்து 'மெல்லிசை மன்னர்' இளசுகளை ஈர்க்க ஆரம்பித்தார். (பெருசுகளையும்தான்)

    மழை கொட்டு கொட்டு என்று கொட்ட, அழகான சிவக்குமார் அடுக்குமல்லிச்சர நிர்மலாவுடன் சரசமாடும் பாடல். 'ஸ்.....ஸ், ஆஹஹஹா...ஓஹோஹோ' என்று சப்த நாடியையும் அடக்கும் சப்தங்கள். உதடு மடித்து, கடித்து உஷ்ணம் ஏற்றும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா. (அவளுக்கு நிகர் அவளே)

    'லஹஹஹஹா...அஹ்ஹஹ்ஹா' என்று அலற ஈஸ்வரி அவர்களுக்கு சொல்லித் தர வேண்டுமா?

    ஒற்றை ஒற்றை வரிகள். நாயகனும் நாயகியும் மாறி மாறி.

    பாட்டின் இசைப் பின்னணி சங்கதிகள் சிலவற்றை 'சிவகாமியின் செல்வன்' பாடலில் மறுபடி கேட்கலாம்.

    அப்புறம் நான் என்ன சொல்ல? (ஆதிராம் சார் எதிர்பார்ப்பு நிறைவேறியது)

    பாடலைக் கேட்க, கேட்க 'மெல்ல மெல்ல' நான் சொன்னது விளங்கும். கொஞ்சம் நடுக்கமும் ஏற்படும்.

    பாட்டின் முனகல் சப்தங்களை நான் சென்ஸார் செய்து பாடல் வரிகளில் நீக்கி விட்டேன். தயவு செய்து யாரும் போராட்டம் நடத்த வேண்டாம்.

    இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான்.



    என்ன சொல்ல என்ன சொல்ல

    சொல்லித் தர நானிருக்கேன்

    மெல்ல மெல்ல விளங்கும் போது
    மயக்கமேன்

    என்ன சுகம் என்ன சுவை

    அள்ளித் தர நானிருக்கேன்

    தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
    நடுக்கமேன்


    என்ன சொல்ல என்ன சொல்ல

    சொல்லித் தர நானிருக்கேன்

    மெல்ல மெல்ல விளங்கும் போது
    மயக்கமேன்

    என்ன சுகம் என்ன சுவை

    அள்ளித் தர நானிருக்கேன்

    தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
    நடுக்கமேன்

    ஓ... நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்

    ஓ... நன்றி என்ன என்னையே நீ கொண்டு செல்

    எடுத்துக் கொள்ளவோ

    தடுத்துக் கொள்ளவோ

    இடை அணைக்கவோ

    தடை விதிக்கவோ

    எடுத்துக் கொள்ளவோ

    தடுத்துக் கொள்ளவோ

    இடை அணைக்கவோ

    தடை விதிக்கவோ

    எதுவும் சொந்தமோ

    எழுதிச் சொல்லவோ

    தழுவக் கூடுமோ

    நழுவிப் போகுமோ


    என்ன சொல்ல என்ன சொல்ல

    சொல்லித் தர நானிருக்கேன்

    மெல்ல மெல்ல விளங்கும் போது
    மயக்கமேன்

    என்ன சுகம் என்ன சுவை

    அள்ளித் தர நானிருக்கேன்

    தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
    நடுக்கமேன்

    ஓ...ஓரிடத்தில் விழியிரண்டின் சங்கமம்

    ஓ...ஒருவருக்கு ஒருவர் தந்த சங்கமம்

    வழி தெரிந்தது

    நதி நடந்தது

    கரை கடந்தது

    கடல் கலந்தது

    விழி சிவந்தது

    வாய் வெளுத்தது

    உடல் குளிர்ந்து

    மனம் வெளுத்தது


    என்ன சொல்ல என்ன சொல்ல

    சொல்லித் தர நானிருக்கேன்

    மெல்ல மெல்ல விளங்கும் போது
    மயக்கமேன்

    என்ன சுகம் என்ன சுவை

    அள்ளித் தர நானிருக்கேன்

    தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
    நடுக்கமேன்


    Last edited by vasudevan31355; 16th July 2015 at 11:30 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes sss, Russellmai, chinnakkannan liked this post
  14. #1847
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Hi folks !

    Hope all is well ( அதான் வந்துட்டியேய்யா.. இனிமே எப்படி இருக்கப் போகுதோ! “ “யார்ப்பா அங்க குரல் விடறது”)

    ம்ம் என்ன சொல்ல என்ன சொல்ல ( ஹா ஆ ஆவ்..ஒண்ணுமில்லீங்க்ணா டயர்ட் கோல்ட் காஃப் அப்புறம் களைப்பு..!)

    பின்ன வாரேன்

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #1848
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ”நீங்கள் வாழும்காலத்திலேயே நாஙகள் வாழ்வது எங்களுக்குப்பெருமையாக இருக்கிறது”

    பற்பல வருடங்களுக்கு முன்னால் பாலகுமாரனின் ஒரு மாத நாவலைப் புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது இந்த வாசகர் கடிதம்.. எதேச்சையாக கண்கள் டிவி பார்க்க.. ட்ட்ட டட்ட ஆ ஆ..ஆஆ.. என சுசீலாம்மா ஹம்மிங்கில் அ.கா கனவுக்கன்னி(?!) செளகார் மைக் பிடித்து பார்த்த ஞாபகம் இல்லையோ பாட ஆரம்பிக்க நாவலை வைத்து விட்டு பாட்டை முழுக்கப் பார்த்துவிட்டுத் தான் மறுபடி படிக்க ஆரம்பித்தேன்..அப்போது மனதில் ஓடிய எண்ணம் - எம்.எஸ்.வி வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதெ பெருமை என்பது..

    எத்துணை பாட்டுக்கள்.. இறப்பு என்பது எல்லாருக்கும் வருவது தான் தவிர்க்க முடியாதது..பழுத்த இலை உதிர்வது இயல்பு நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கூட ம்ஹூம் ஆற மாட்டேன் என்கிறது..

    தனக்கு, தன் குரலுக்குப் பொருத்தமான பாடல்கள் எப்படி தேர்வு செய்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சர்யம்..

    அவர் குரலில் எனக்கு மிகப் பிடித்த பாடல் ஒன்று.




    அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  18. #1849
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இரு நூறு தந்தைப் பதிவுகள் அளித்த ரவிக்கு பாராட்டுக்கள். அப்புறம் மற்ற உறவுகள் எல்லாம் கடந்து மச்சினி க்கு இவர் வர எவ்வளவு காலம் ஆகும் என வாசு சாரைக் கேட்க வேண்டும்

  19. Likes vasudevan31355 liked this post
  20. #1850
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    Hi folks !

    Hope all is well ( அதான் வந்துட்டியேய்யா.. இனிமே எப்படி இருக்கப் போகுதோ! “ “யார்ப்பா அங்க குரல் விடறது”)

    ம்ம் என்ன சொல்ல என்ன சொல்ல ( ஹா ஆ ஆவ்..ஒண்ணுமில்லீங்க்ணா டயர்ட் கோல்ட் காஃப் அப்புறம் களைப்பு..!)

    பின்ன வாரேன்
    நடிகர் திலகமே தெய்வம்

  21. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •