Page 178 of 400 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1771
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வரதகுமார் சுந்தரராமன் (குமார்) சார்,

    தங்களின் மகத்தான 1000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் .

    இது மேலும் பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள்.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1772
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    மு.க.முத்துவின் சிறந்த பாடல் ஒன்றினை எதிர்பாராத நேரத்தில் திடுமென பதித்து அசத்தி விட்டீர்கள். அதுவும் தலைப்பு 'கருப்பு சிவப்பில்'.

    உண்மையில் எம்.ஜி.ஆர் நடித்த பாடலுக்கு முத்து குரல் கொடுத்தது போலத்தான் இருந்தது. அந்த காப்பிதான் அவரது பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்து போனது. ஒன்றிரண்டு படங்களோடு சுதாரித்திருக்கலாம். கோட்டை விட்டுவிட்டார். கார்பன் காப்பி எப்போதும் அசலாகாது என்பதை அறியத் தவறிவிட்டார்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் பார்முலா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மு.க.முத்து., பாக்கியராஜ், ராமராஜன் ஆகியோர் உணரத் தவறியது அவர்கள் துரதிஷ்டமே.

    இவ்வளவு பெரியஅரசியல் பின்புலம் இருந்ததற்கு, மதுவுக்கு அடிமையாகாமல், தனிப்பட்ட ஒரிஜினல் நடிப்பை மேற்கொண்டிருந்தால் ஒரு முப்பது நாற்பது படங்களாவது தந்திருக்க முடியும்.

    ஆனால் மனிதர் பாட்டு ராசிக்காரர். அவர் படங்களில் பாடல்கள் அருமையாக அமைந்து விடும்.

    நல்லதொரு பாடலை பதிவிட்டதற்கு நன்றி.

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #1773
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு குமார் - 1000 பதிவுகள் - உங்கள் அயராத உழைப்பை எடுத்துக்காட்டுகிறது . எவ்வளவு ஆவணங்கள் - எப்படி இப்படி சேமித்து வைத்து உள்ளீர்கள் - முன்பே இப்படி ஒரு மய்யம் வரும் என்று தெரியுமா ? தீர்கத்தரசி என்று உங்களை அழைத்தால் அது மிகையாகாது - 1000 பதிவுகள் பல லக்ஷ்சம் பதிவுகளைத்தொட உங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் , இதே உற்ச்சாகத்தையும் இறைவன் அளிக்க வேண்டுகிறேன்
    Last edited by g94127302; 12th July 2015 at 05:24 PM.

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes adiram, vasudevan31355 liked this post
  8. #1774
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    17

    'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு '

    படம்





    உற்சாகம்...உற்சாகம்... உற்சாகம்

    அப்படி ஒரு உற்சாகம்... கரை கடந்த உற்சாகம்

    அணை உடைத்த வெள்ளமாய் பொங்கி வரும் உற்சாகம்.

    கட்டவிழ்ந்த காட்டாறாய் கரை புரண்ட உற்சாகம்

    அதுதான் பாலாவின் இந்தப் பாடல். உற்சாகம் அன்றி வேறு எதுவுமே இல்லை.



    மழைக்கு மரத்தோரம் ஒதுங்கும் ஜெமினி. அதே மழையில் நனைந்து அதே மரத்தோரம் காஞ்சனா ஒதுங்க, ஜெமினி தன் வேலையைத் தொடங்க, கரெக்டாக அந்தக் கால தப்பாத சினிமா பார்முலாவின்படி ஒரு பெரிய இடி இடித்து வைக்க, நாயகி மிரண்டு நாயகனை பயத்தில் கட்டிப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, நாயகன் இன்ப சுகம் அனுபவிக்க, சட்டென்று நாயகி சுதாரித்து விலகி வெட்கத்தில் ஓடிவிட, நாயகன் மனதில் 'ஆயிரம் நினைவும் ஆயிரம் கனவும்' வருவது நிஜம்தானே!

    மனம் மகிழ்ச்சி எல்லை மீறி துள்ளிக் குதித்து பாட ஆரம்பிக்கிறான் காதலன் கொட்டும் மழையிலே. அந்த பூங்காவைச் சுற்றி ஓடி ஆடி தன்னுள் பொங்கும் ஆனந்தத்தையெல்லாம் அள்ளித் தெளிக்கிறான் அங்கு பெய்யும் மழையை விடவும் வேகமாக .


    காதலனாக ஜெமினி. முழுக்க முழுக்க மழையிலே (செயற்கை) எடுக்கப்பட்ட பாடல். ஜெமினி துள்ளாட்டம் போட்டிருப்பார். ஜெமினிக்கு இந்தப் பாடலில் 'இது தேவையா?' என்று பாதியும், "ஏன் நன்றாகத்தானே இருக்கிறது? அதுக்கென்ன?" என்று மீதியுமாக விமர்சனங்கள் அப்போது எழும்ப நான் அதில் இரண்டாவது கட்சி.

    மனதை வருடும் மென்மையான பாடல்களிலேயே நாம் பார்த்துப் போன ஜெமினி இதில் எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு அங்குமிங்கும் ஓடி ஆடி, கை கால்களைத் தூக்கி ஆடிப் பாடுவதும் ரசிக்கத் தகுந்ததே.

    மழைக் காட்சிகளை மெனக்கெட்டுப் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். ஆனாலும் சில இடங்களில் கன்டின்யூட்டியில் கோட்டை விட்டுவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    'பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
    போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்'

    சரண வரிகளை முதல் முறை ஜெமினி பாடும்போது முழுக்க தொப்பரையாக நனைந்திருப்பார். பேன்ட் ஷர்ட் முழுக்க நனைந்திருக்கும். அதே வரிகள் திரும்ப வரும்போது பார்க்கில் உள்ள நீர்த்தேக்கக் கட்டையில் அமர்வார். அப்போது பேன்ட் காய்ந்து இருக்கும். பிறகு மழை நீர் பட்டு மீண்டும் நனைய ஆரம்பிக்கும். எப்படி?

    அதே போல நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கும். வரிசையாக நடப்பட்டிருக்கும் அசோகா மரங்களின் இடைவெளிகளில் நிழலும், வெயிலும் மாறி மாறி நன்றாகவே தெரியும். ஆனால் ஜெமினி முழுக்க பூவாளி பக்கெட்டுகளின் மழைச் சாரலில் நனைந்து கொண்டிருப்பார்.

    சரி! வெயில் அடிக்கும்போது அதே சமயம் மழை பெய்யக் கூடாதா? அது என்ன அதிசயமா? என்று ஜெமினி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம். காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்றே நினைத்துக் கொள்கிறேன். போதுமா?

    ஜெமினிக்கு முன்னால் மட்டுமல்ல... அவருக்குப் பின்னாலேயும் நீண்ட தூரம் மழை பெய்ய வைத்து காட்சியின் மழை சூழ்நிலைக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அதைப் பாராட்டியே தீர வேண்டும். ஸ்ரீதர் ஸ்ரீதர்தான்.

    பாடலின் நடுவில் காட்சி தரும் வானவில் அழகுக் கோர்வை. ஆனால் வானவில் வானத்தில் இல்லாமல் பூஞ்செடிகளின் மேல், பூங்காவின் தரையில் எல்லாம் ஊடுருவிப் பாயும். இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.




    ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.

    பொல்லாத கவிஞன் எழுதிய,

    'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ'

    வரிகளை நல்லவேளை ஜெமினி தன்னை அணைத்துக் கொள்வது போல பாவம் காட்டி நம் வயிற்றில் பால் வார்த்தாரோ! நாம் தப்பினோமோ!

    கொஞ்சம் ஏமாந்தால் போதும்டா சாமி! கண்ணதாசன் நம்மை மண்ணைக் கவ்வ வச்சுடுவார். புரிஞ்சவங்க மத்தியில் சங்கடத்திலும் நெளிய வச்சுடுவார்.


    இப்பாடலின் இசை பற்றி என்ன சொல்ல! எப்படி எழுத!?

    ஒவ்வொரு வாத்தியமும் வசியம் செய்கிறது. முதல் சரணம் தொடங்குமுன் வரும் அந்த ஷெனாயின் அற்புதத்தை வார்த்தைகளில் விவரித்து விட இயலுமா என்ன? அதற்கப்புறம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் அந்த இசை. யம்மாடி! இசை மழை என்பார்களே! இசை வெள்ளம் என்பார்களே! அது இந்தப் பாடலுக்குத்தான் பொருந்தும். மழைப் பாடலுக்குத் தக்கபடி மகத்தான இசை. சின்ன சின்ன புல்லாங்குழல் கலக்கல்களை மறக்கவே முடியாது.

    'என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ' என்று பாலா முடித்தவுடன் அப்படியே அந்த டியூனையே மன்னர் இசையாகக் கொடுக்கும் அழகு கோடி பெறும். அதே போலத்தான் 'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ' வரிகள் முடிந்ததும்.

    'மெல்லிசை மன்னர்' விஸ்வரூப இசை அமைத்து நமக்களித்த பாடல் இது. படத்தின் டைட்டில் இசை மறக்கவே முடியாத ஒன்று. (டைட்டில் இசையில் 'கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா' பாடலின் கிடார் இசை டியூனை மிக அழகாக கொஞ்சமாக தெரியாத வண்ணம் கலந்து கொடுத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்')

    பாலா பாடல் காட்சியை நன்கு மனதில் உள்வாங்கி குதூகலித்திருப்பார். நம்மையும் குதூகலிக்க வைப்பார்.

    அந்த முதல்

    'லா...ஹஹஹா ஹோஹஹோ
    ஹஹஹா ஹஹஹா ஹா'

    ஹம்மிங்கிலேயே கதாநாயகனின் சந்தோஷ மனநிலையை மிக அருமையாக பாலா தன் குரலில் கொண்டு வந்து விடுவார். என்னவோ லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த உற்சாக மனநிலை நமக்கு ஏற்பட்டுவிடும்.

    இந்தப் பாடல் விரும்பிகள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன அந்த ஹம்மிங்கை முணுமுணுக்காமல் இருக்கவே மாட்டார்கள். (யாருக்கும் தெரியாமல்)

    இந்த உற்சாகம் கொப்புளிக்கும் பாலாவின் பாடலுக்குப் பின்னால்தான் மற்ற பாலாவின் பாடல்கள் எல்லாம்.

    'நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ? என்ன ஆகுமோ?
    எங்கே போகுமோ?'

    என்று எதிர்கால சந்தோஷ நினைவுகளை நினைத்து 'என்ன ஆகுமோ...இது எங்கு போய் முடியுமோ' என்று காதலன் இன்பக் கவலை ஒன்றை மட்டுமே படும்படி வார்த்தைகளில் கண்ணதாசன் விளையாடும் விளையாட்டே விளையாட்டு.

    கேட்க, கேட்க, பார்க்க பார்க்க பரவசம் ஒன்றையே பரிசாகத் தரும் பாலாவின் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுதான்.




    ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
    ஒஹஹஹோ ஹஹஹா ஹா

    லா...ஹஹஹா ஹோஹஹோ
    ஹஹஹா ஹஹஹா ஹா

    ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
    ஒஹஹஹோ ஹஹஹா ஹா

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
    காணுது மனது ஹோ ஹோ
    பெண்ணைத் தொட்ட உள்ளம்
    எங்கும் இன்ப வெள்ளம்
    எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
    எங்கே அந்த சொர்க்கம்

    லா...ஹஹஹா ஹோஹஹோ
    ஹஹஹா ஹஹஹா ஹா

    ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
    ஒஹஹஹோ ஹஹஹா ஹா

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
    காணுது மனது ஹோ ஹோ
    பெண்ணைத் தொட்ட உள்ளம்
    எங்கும் இன்ப வெள்ளம்
    எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
    எங்கே அந்த சொர்க்கம்

    பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
    போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
    பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
    போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
    என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ
    நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ
    நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
    எங்கே போகுமோ

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
    காணுது மனது ஹோ ஹோ
    பெண்ணைத் தொட்ட உள்ளம்
    எங்கும் இன்ப வெள்ளம்
    எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
    எங்கே அந்த சொர்க்கம்

    மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
    ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
    மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
    ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்

    கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ
    நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளரத்தாளோ
    நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
    எங்கே போகுமோ

    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
    காணுது மனது ஹோ ஹோ
    பெண்ணைத் தொட்ட உள்ளம்
    எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
    எங்கே அந்த சொர்க்கம்

    லா...ஹஹஹா ஹோஹஹோ
    ஹஹஹா ஹஹஹா ஹா

    ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
    ஒஹஹஹோ ஹஹஹா ஹா


    Last edited by vasudevan31355; 12th July 2015 at 02:58 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1775
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    நேற்று 'மங்கையரில் மகராணி' படித்தபோதே நினைத்தேன், தொடர்ந்து 'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' வருமென்று. தாமதிக்காமல் வந்தே விட்டது. பாராட்டுக்கள்..

    வழக்கம்போல கூர்ந்த கவனிப்பு, வழக்கம்போல சிரத்தையான உழைப்பு, வழக்கம்போல கலர்புல் பரிமாறல், வழக்கம்போல முழுப்பாடல் வரிகள், வழக்கம்போல அருமையான வீடியோ இணைப்பு, பாடல் காட்சிகளை பாராட்ட மட்டும் செய்யாமல் படமாக்கத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டல்... என வழக்கம்போல அறுசுவை விருந்து.

    முதல் பாடல் பதிவில் இருந்த டெம்போ கொஞ்சமும் குறையவில்லை உங்களிடம். சொல்லப்போனால் கூடிக்கொண்டே போகிறது.

    இதுவரையில் இந்தப்பாடல் நிஜ மழையில் எடுத்தது என்றே எண்ணியிருந்தேன். அந்த அளவுக்கு ஏரியா முழுவதும் தூறல்கள் விழும். பல படங்களில் செயற்கைமழை அப்பட்டமாக தெரியும் (உ-ம்: நான் படத்தின் போதுமோ இந்த இடம்). ஆனால் இப்பாடலில் மரங்களின் நிழல் விழுந்ததை நான் கவனிக்கவில்லை. (அதுசரி, எல்லோரும் வாசு ஆகிவிட முடியாது)

    உண்மையான மழையில் எடுக்கப்பட்ட காதல்கோட்டை கிளைமாக்ஸ் அபாரம். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நிஜ மழையிலே படமாக்கி அசத்தியிருப்பார்கள் அகத்தியனும் தங்கர்பச்சானும்.

    கண்டினியூட்டி விஷயத்தில் பல இயக்குனர்கள் கோட்டை விடுவது வழக்கமே. தியாகம் படத்தின் 'வருக எங்கள் தெய்வங்களே' பாடல் காட்சியின் இறுதியில் தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் நடிகர்திலகம் இறுதி கட்டத்தை நெருங்கும்போது பலரும் பிரார்த்தனை செய்வார்கள். அப்போது கடிகாரம் மணி இரண்டை நெருங்கும். அப்போது நடிகர்திலகத்தின் சீடர்களில் ஒருவர் ஜீசஸை பிரார்த்திப்பதை காட்டுவார்கள். அப்போது சூரியன் மாலை ஐந்து மணி பொசிஷனில் இருக்கும்.

    இப்பாடலில் ஜெமினி தொப்பலாக நனைந்து துள்ளாட்டம் போடுவது இருபது வயது இளைஞனை நினைவுபடுத்தினாலும், உருவத்திலும் முகத்திலும் முதிர்ச்சி நன்றாக தெரியும்.

    செயற்கை மழை என்பதை மறைக்க வானவில் உத்தியை ஸ்ரீதர் கையாண்டிருப்பார் போலும்.

    நல்ல பாடல்.. நல்ல ஆய்வு வேறென்ன சொல்ல?.

  10. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #1776
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு , மீண்டும் வார்த்தைகள் கிடைக்கவில்லை - ஒரே ஒரு மொழியில் மட்டும் சில வார்த்தைகள் கிடைத்தன - அவற்றின் தமிழாக்கத்தை எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன் .

    இரிஸ் : "தொப்பாக்கோ தோன்டோ , டமால் மாண்டோ - அபுள்ளே கஷ்ட்டம் சபோக்கோ ஜாக்கோ "

    தமிழாக்கம் : தொப்பாக்கோ தோன்டோ : உண்மையான உழைப்பு ; டமால் மாண்டோ : என்றுமே வீண் போகாது ; அபுள்ளே - அப்படி இல்லாமல் ; கஷ்ட்டம் : ஏனோதானோ என்று ; சபோக்கோ ஜாக்கோ : எழுதினால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் ....

    சுருக்கம்மாக சொன்னால் , திரு ஆதிராமின் வார்த்தைகளை அப்படியே ஆமோதிக்கிறேன் ...

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes adiram, vasudevan31355 liked this post
  13. #1777
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஆதிராம் - நன்றாக எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் அவர்கள் போடும் பதிவுகளை ரசனையோடு படிப்பவர்கள் , படித்து மனமார பாராட்டுபவர்கள் - இவர்கள் இல்லையென்றால் எழுதும் எழுத்துக்கள் செடிகள் போல பூத்துக்கொண்டே இருக்காது , வெறும் பூக்கள் போல பூத்து வாடிவிடும் - எழுதுபவர்களுக்குக் கூட அவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - ஆனால் , படித்து , அதற்குப்பின்னால் இருக்கும் உழைப்பை உணர்ந்து அவர்களை ஓர் இரண்டு வார்த்தைகளாவது சொல்லிப்பாராட்டுவதர்க்கு பரந்த மனம் தேவை -

    இந்த திரியில் யாருமே எதையுமே எதிர்ப்பார்க்காமல் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே நினைப்பில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம் - இந்த உழைப்பை , dedication யை வேறு எங்காவது காண்பித்து இருந்தால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் - இங்கு கிடைப்பது விலை மதிக்க முடியாத ஆத்ம திருப்தி - இது ஒன்றுதான் வாசு போன்றவர்களுக்கு உங்கள் மூலமும் , கொஞ்சம் என் மூலமும் கிடைக்கிறது - சிலர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவர்கள் வழியில் , அவர்களுக்குப்பிடித்ததை மட்டுமே பதிவிட்டு மற்றவர்களின் ஈடுபாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது - எழுதுபவர்களுக்கு ஒன்றும் இல்லை ஆனால் அந்த போக்கு நமக்குள் இருக்கும் சகோதரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைவதில்லை .

    மற்றவர்களுடைய நல்ல பதிவுகளை எவ்வளவு பழைய பதிவுகளையும் மனதில் கொண்டு அதையும் சம்பந்தப்படுத்தி அவர்களைப்பாராட்டுவது என்பது உங்களது பரந்த மனம் - இறைவன் கொடுத்த வரம் . வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன் - நம்மால் வாசுவிற்கு திருப்பி செய்யும் நன்றிக்கடன் இது ஒன்றுதான் - என்னால் உங்களைப்போல எழுத வராது , அதனால் ஒரு பெரிய நன்றி மீண்டும் உங்களுக்கு !!

  14. Thanks adiram, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #1778
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    ஆயிரம் வளைவு ஆயிரம் நெளிவுசுளிவுடன் உங்கள் வர்ணனை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றித் தூறல்கள்!!

    இப்பாடல் காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் மழை நனைவுப் பாடல்களின் இலக்கண இலக்கியக் காட்சியமைப்பைக் கொண்ட Singing in the Rain திரைப்படமே!

    இப்புவியின் நம்பர் ஒன் நடன நாயகரான ஜீன் கெல்லியின் காலமழை கரைக்க முடியாத குடை டான்ஸ்!! கதாநாயகியின் தீண்டுதலால் மகிழ்வு தூண்டப்பட்ட நாயகன் மழையில் நனைந்து ஓடி ஆடி பாடி தாண்டி ஆடுவதே தீம் !!

    குடைநடனம் காதல்மன்னரின் நடன வரையறைக்கு அப்பாற்பட்டதால் ஸ்ரீதர் அவரது மென்மையான தன்மைக்கு ஏற்ப ஜெமினியை குடை பிடிக்காமல் மழையில் நனைய விட்டு விட்டார் !!

    Last edited by sivajisenthil; 12th July 2015 at 06:42 PM.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  17. #1779
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ஆதிராம் சார்,

    தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரவி சார் சொன்னது போல கடின உழைப்புப் பதிவுகளின் பெருமைகளை எந்த நாளிலும் நீங்கள் பாராட்டத் தயங்கியதே இல்லை. அடுத்தவர் பதிவுகளை அலட்சியம் காட்டாமல் படித்து அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டி பதிவர்களை உற்சாகப்படுத்துவது என்பது தங்களுக்குக் கைவந்த கலை. இது எல்லோருக்கும் அமையாது.

    சிறு சிறு கருத்து மோதல்கள் நண்பர்களுக்கிடையே ஏற்பட்டாலும் அது குழந்தைகளின் சண்டை போலத்தான். ஆனால் அதை மனதிலே வைத்து நீங்கள் பதிவுகளை படிக்காமல் பாராட்டாமல் விட்டது கிடையாது. இது ஒரு உயரிய பெருங்குணம். இதுவும் எல்லோரிடமும் அமையாது.

    அது போல நிறைய தரம் சொல்லியிருக்கிறேன். பதிவைப் பற்றிப் புரிந்தவர்கள் மனதார அதை ரசிப்பார்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை பதிவாளர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்பதற்கு சிறந்த முன் உதாரணம் நீங்கள். நடுவில் திரிக்கு வேலை நிமித்தம் தாங்கள் வர இயலாவிட்டாலும் ஒரு வாரம் சென்று மீண்டும் வந்தால் கூட மறக்காமல் பழைய பதிவுதானே என்று விட்டுவிடாமல் அதையும் படித்து கருத்துக்கள் கூறி பதிவாளர்களை நீங்கள் உற்சாகப்படுத்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். குமார் சாருக்கு நீங்கள் வாழ்த்து கூறியிருப்பது உங்கள் பாராட்டும் உயர் குணத்திற்கு சிறந்த உதாரணம். தங்கள் உண்மையான பாராட்டுதல்களுக்கு என் நன்றிகள் மீண்டும். தங்கள் ரசிப்புத் தன்மைக்கும் என் மனமுவந்த பாராட்டுதல்கள்.

    'தியாகம்' படத்தின் கன்டின்யூடி விஷயம் அருமை. இனிமேல்தான் பார்க்கப் போகிறேன். நான் இதுவரை கவனித்ததில்லை ஆதி சார்.

    நிறையப் படங்களில் சண்டைக் காட்சிகளில் ஹீரோ, வில்லன் அடியாட்கள் சேற்றில் புரண்டு, வீதியில் விழுந்து சண்டை இடுவார்கள். பேன்ட் பின்புறம் எல்லாம் அழுக்காக இருக்கும். சண்டை அடுத்த கட்டத்தைத் தாண்டும் போது மீண்டும் பேன்ட் அழுக்கே இல்லாமல் சண்டை போடுவார்கள். வேடிக்கையாக இருக்கும்.

    அவ்வளவு ஏன்? பிரம்மாண்ட பெரிய படமான 'ஷோலே' படத்தில் கவனிக்காமல் மிகப் பெரிய தவறொன்றை செய்திருப்பார்கள். அது என்னவென்று விஷுவலுடன் விரைவில் தெரிவிக்கிறேன்.
    Last edited by vasudevan31355; 12th July 2015 at 08:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks adiram thanked for this post
  19. #1780
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,

    'தியாகம்' படத்தில் நடிகர் திலகத்தின் உதவியாளர்களாக நடிக்கும் சிஷ்யப் பிள்ளைகள் இருவர்.

    ஒருவர் ஜூனியர் பாலையா.

    இன்னொருவர் கிருஷ்ணமூர்த்தி.



    நாடக நடிகர். நிறைய சினிமாக்களிலும் நடித்துள்ளார். பார்த்திபன் கனவு (புதிது) படத்தில் கூட ஸ்ரீகாந்த்துடன் நடித்திருப்பார். ரேடியோ ரிப்பேர் செய்து கொண்டே இருப்பார்) வெடுவெடுவென்று கொஞ்சம் உயரமாய் இருப்பார்.



    நீங்கள் சொன்னதை கவனித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பொழுது போவதாக காட்டியது மாதிரிதான் தெரிகிறது.



    கடிகாரத்தில் ஒரு மணி காட்டும் போது கிருஷ்ணமூர்த்தி,

    'நம்பிக்கை வைத்தோம் நன்மை செய்வாய் ஆண்டவரே' என்று முழங்காலிட்டு சிலுவையில் அறைந்த இயேசு படத்தின் முன் வேண்டுவார்.

    அப்புறம் மேஜர் குளுகோஸ் கலந்து கொடுப்பது, நடிகர் திலகம் அதைக் குடிக்க முடியாமல் தவற விடுவது, பின் வாயிலிருந்து ரத்தம் அழிய அதை சட்டையால் துடைத்துக் கொள்வது, பின் அனைவரும் சோகத்துடன் பார்பாது, நாகேஷின் அல்லா வேண்டல், (கடிகாரம் அப்போது மணி 1.30 காட்டும்) அப்புறம் மனோரமாவின் சக்தி வேண்டல், படாபட்டின் மாரியம்மா கும்பிடு, பின் கிருஷ்ணமூர்த்தியின் பிதா வேண்டுதல், (இப்போது வானம் கொஞ்சம் இருண்டிருக்கும். சூரிய ஒளி மங்கியிருக்கும்) மறுபடி மேஜரின் வேண்டுகோளுக்குப் பிறகு வானம் தெளிவாக இருக்கும். நடிகர் திலகம் சைக்கிள் ஓட்டி முடிக்கும் போது மணி இரண்டு காட்டும். பார்வையாள ஜனங்கள் மீது 'சுள்'ளென்று வெயில் அடிக்கும்.

    சரியென்றும் படுகிறது. இல்லையென்றும் படுகிறது. சரி! அந்த நேரம் மேகங்கள் சூழ்ந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோமே.



    இன்னொரு கொசுறு செய்தி. நாகேஷின் பரிதாபத்துக்குரிய வியாதி பெண்ணாக நடிகர் திலகத்தை பெண்டு நிமிர்த்தும் அந்த முஸ்லீம் பெண் நடிகை யார் தெரியுமா?

    சுமங்கிலி. இந்தப் படத்தில்தான் அவர் அறிமுகம். பின்னாளில் சில படங்களில் காமெடி ரோல்களில் தலை காட்டினார்.

    இவ்வளவு இருந்தும் அத்தனை பேரையும் 'ஆண்டவரை' போடாமல் இருந்தால் எப்படி?

    Last edited by vasudevan31355; 12th July 2015 at 08:00 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Thanks adiram thanked for this post
    Likes eehaiupehazij, adiram, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •