Page 170 of 400 FirstFirst ... 70120160168169170171172180220270 ... LastLast
Results 1,691 to 1,700 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1691
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி! கல்தூணின் உடுக்கை பாடல் என் உணர்வுகளோடு சங்கமம் ஆனது.

    தங்களின் தந்தைக் கரு அமர்க்கமாகத் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. அருமையான நிறைய விஷயங்கள் பாடலோடு.

    'அப்பா வந்தார்' குறும்படம் அருமை. நன்றி ரவி சார்.

    குழந்தைப் பருவத்திற்கு கல்தூண் படப் பாடலான 'சிங்கார சிட்டுத்தான்' பாடல் நல்ல தேர்வு.

    " நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ்வுலகு "

    குரலுக்கு விளக்கம் அருமை.

    ஆமாம்! நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? கல்ஸ் காணோம். ஆதிராம் சார் எங்கே? ராஜேஷ்ஜியும் அவ்வளவாகக் காணோம்? சி.க இன்னும் டூர் முடிக்கவில்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1692
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vanakkam

  4. #1693
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    vanakkm rajesh - I was about to file a FIR - thanks for returning to home safely .

  5. #1694
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    16

    'மங்கையரில் மகராணி'

    பாலாவின் மாணிக்க மகுடப் பாடல் இந்தத் தொடரில்.



    ஒன்று சொல்வார்கள்.

    'நீ இறப்பதற்கு முன் இந்த 100 தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டுவிட்டு கண்மூடு. (100 tamil films songs to hear before you die) அப்போதுதான் உன் பிறப்பின் பயன் முழுமையாகச் சேரும்'

    உண்மைதான். இசைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. அதுவும் தமிழிசைக்குத் தனி மகத்துவம். பொற்காலப் பாடல்கள் சொல்லொணா விசேஷங்கள் உடையது.

    அப்படி தமிழ்த் திரைப்பாடல்களில் நம் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே மகிழ சில பாடல்களை இசைச் சக்கரவர்த்திகளும், பாடகர்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை நம் வாழ்வோடு கலந்தவை



    அந்த மாதிரிப் பாடல்களில் கட்டாயம் இடம் பெற்ற பாடல்தான் இது. இந்தப் பாடல் இல்லாமல் தமிழ்த் திரைப்படப் பாடல்களே இல்லை. தமிழ்த் திரைப் பாடல்களின் சரித்திரம் பின்னால் எழுதப்படும்போது இந்தப் பாடல் முன்னிலை வரிசையில் நிற்கும் என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒன்றுதான்.

    பிடிக்கும்... பிடிக்காது என்ற இருவேறு கருத்துக்களுக்கு கொஞ்சமும் இடம் அளிக்காத பாடல் இது. நூற்றுக்கு நூறு அனைவரையும் கட்டிப் போட்ட பாடல்.

    இப்பாடலை யார் எங்கு கேட்டாலும் அதே இடத்தில் மெய் மறந்து அந்த சில நிமிடங்கள் உறைந்து விடுவார்கள். அப்படி வசியம் செய்யும் சக்தி மிகுந்த பாடல் இது.

    புது மணம் புரிந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி அன்புப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பாடல். கணவன் மனைவி உறவுக்கே இலக்கணமாய் அமைந்த பாடல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்.


    தன் எண்ணம் போல் தனக்கு வாய்த்த மனைவியை கணவன் எப்படி பெருமைப் படுத்துகிறான்!

    'மங்கையரில் அவள் மகராணியாம்'

    இந்த ஒற்றை வரியிலேயே அவள் பெருமை முழுதும் அனைவருக்கும் புரிய வைத்து விட்டான் கணவன்.

    மேல்கொண்டு என்ன சொல்கிறான் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.

    'மகராணி' விடுவாளா?

    'ஆடவரின் தலைவன் நீ' என்று அம்சமாக எசப்பாட்டு பாடி விட்டாளே! இதைவிடவும் அந்தக் கணவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும்?

    இதிலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட ஆதர்ஷ தம்பதிகள் என்று புரியவில்லையா?

    'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற ஸ்ரீதரின் அற்புதமான படத்தின் அள்ளிக் கொள்ள வேண்டிய பாடல். படமாக்கலிலும், பாடல் காட்சிகளிலும், காமெராக் கோணங்களிலும் ஸ்ரீதர் மன்னர். அவருக்குப் பிடித்த ஜெமினியும், அவரின் ஆஸ்தான நாயகியான காஞ்சனாவும் ஜோடியாகச் சேர்ந்து விட்டால்?!

    மனிதர் பின்னி எடுத்து விட்டார் 'மெல்லிசை மன்ன'ரையும், 'கவிஞ'ரையும் துணை சேர்த்துக் கொண்டு.

    கவிஞரின் எண்ணங்களை 'மன்னன்' மனதை வருடும் மெல்லிசையாய் வடிவமைத்துக் கொடுக்க, அதை வண்ணக் குழைவு செய்து ஸ்ரீதர் நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் ஆழப் புதைத்து விட்டார்.

    நாம் மண்ணில் புதைந்து அழிந்தாலும் நம் மனதில் புதைந்த இப்பாடல் அழியாது.




    மிக அழகான அன்றைய சாத்தனூர் டேம். பொங்கி வழியும் நீரூற்றுகள், வண்ணப் பூக்களைத் தாங்கிய பூங்கொடிகள், செடிகள், காகிதப்பூ மரங்கள், 'ஜூஸ்பர்ரி' பிஸ்கட் என்று சொல்வார்கள் (பிறைச்சந்திரன் போன்ற வடிவு) அதைப் போல வடிவமைக்கப்பட்ட பெரிய பிறை நிலா, அழகான பூங்காக்கள், சின்ன சின்னதாய் செதுக்கிய சிற்ப சிலைகள், தண்ணீர் வழிந்தோடும் அணைக்கட்டு, விசிறி வாழைகள், பாக்கு மரங்கள், சிறிய அழகான் நடைப் பாலங்கள், கைகளில் எதையோ பிடித்து நிற்கும் அந்த கட்டழகு பெண் சிலை, வண்ணக்குடை கோபுரங்கள், அசோகா மரங்கள், புல் பாதைகள், நீர் வழிந்தோடும் படிக்கட்டுகள், பிரவுன் நிற குரோட்டன்ஸ் செடிகள், பஞ்சு மிட்டாய் கவிழ்த்து வைத்தது போன்ற புஷ்க்கள் என்று சாத்தனூரை இவ்வளவு அழகாக காட்டியது இளமை இயக்குனர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

    அணையின் மீது கற்களால் படுக்கைவாக்கில் பொறிக்கப்பட்டிருக்கும் 'சாத்தனூர் டேம்' என்னும் ஆங்கில எழுத்துக்கள் பிரம்மாண்டமாகத் தெரிவதை பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.

    மிக சிம்பிளான ஒயிட் பேன்ட், ஷர்ட்டில் (ஆரஞ் அண்ட் எல்லோ கலர் மிக்ஸிங் ஸ்மால் செக்டு) 'மாப்பிளை' ஜெமினி, கல்யாணமான மங்களகரமான மனைவி கோலத்தில் மூக்குத்தியும், காதருகே செருகிய பூவும், வாணிஸ்ரீ கொண்டை 'விக்'கும், கைநிறைய வளையல்கள், கழுத்தில் வெண்முத்து மாலையுமாக 'கலையழகி' காஞ்சனா. 'காதல் மன்ன'னுக்கு செம ஜோடிப் பொருத்தம். ராசியான ராசி. 'இயற்கையென்னும் இளைய கன்னி' முடித்து 'மங்கையரில் மகராணி'யில் மீண்டும் இணைந்து மனதில் பிணைந்தது.




    சாத்தனூர் அணைக்கட்டையே இருவரும் ஒரு ரவுண்டு வந்து விடுவார்கள். ஜெமினி பின்னாட்களில் விடாமல் எல்லா பாடல்களிலும் ஒரு ஸ்டைலைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி, சற்றே உடம்பை ஆட்டியபடி நிற்பார். இல்லையென்றால் கால் முட்டியில் கைகளைக் குவித்து வைத்துக் கொள்வார்.

    காதல் காட்சிகளில் ஜெமினி மிக நெருக்கம் காட்டுவார் காஞ்சனாவிடம். 'எல்லையில்லாக் கலைவாணி'யிடம் சில சமயம் எல்லை மீற முயல்கிறாரோ 'காதல் மன்னன்' என்று கூட நினைக்கத் தோன்றும்.('கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்' உதடுகள் பட்டே விடும்.)

    'வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
    நெஞ்சில் விளையாட'

    வரிகளில் ஜெமினி பின்னி எடுத்து விடுவார். இயற்கையான ஸ்டைல் செய்து ஜமாய்த்து விடுவார் மனிதர், கைகளை உயர்த்தி காஞ்சனாவை நோக்கி ஸ்டைலாக, மெதுவாக நடந்து வருவது ஜோர். கைகளை ஒன்றாக இணைத்து காஞ்சனாவின் கழுத்தில் மாலையாய்க் கோர்ப்பதும் அழகு.

    காஞ்சனாவும் நல்ல ஈடு கொடுத்திருப்பார்.

    தோழிக்காக தன் வாழ்வை முத்துராமனிடம் முழுமையாக, அடிமையாக அர்ப்பணிக்கும் பாரதி 'ஆ...ஆ' என்று பாடலின் நடுவே சுசீலா குரலில் விசும்புவார். இவரும் முத்துராமனும் விட்டேர்த்தியாக 'தேமே' என்று சுரத்தில்லாமல் நிற்பார்கள். ஆனால் கதையின் சூழ்நிலை, பாடலின் இடை சூழ்நிலை அப்படித்தான். அதனால் பொருத்தமாகவே இருக்கும்.


    சுசீலா ஆனந்த அராஜகம் பண்ணுவார். மகிழ்ச்சி, இடையே சோகம் என்று காஞ்சனாவிற்கும், பாரதிக்கும் இரட்டை நாயன வாசிப்பு. பிரமாதப்படுத்துவார்.

    தொடரின் நாயகர் தொட்டிலிட்டு அமர்ந்து கொள்வார் நம் மனங்களில். குரல் வித்தைகள் விதவிதமாய் இன்பத் தாக்குதல்கள் கொடுக்கும்.

    'மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
    கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்'

    இந்த வார்த்தைகளில் 'மையோடு கொஞ்சம்' என்று கொஞ்சுவாரே! அது ஒன்றே போதும். குரல் இன்னும் மேம்பட்டு மெருகேறி சர்க்கரை, தேன், பாகு இவையெல்லாம் மீறிய சுகத்தைக் கொடுக்கும். பாலாவுக்கு புகழை வண்டிவண்டியாக அள்ளித் தந்த பாடல். மேடைகளில் ஒலிக்காமல் இதுவரை இருந்ததில்லை.

    கண்ணதாசனுக்கு கரும்பு சாப்பிடுவது போல இது போன்ற பாடல் வரிகள்.

    'மெல்லிசை மன்னர்' தான் இப்பாடலின் நிஜ ஹீரோ. அப்புறம்தான் மற்றவர்கள் பாலா உட்பட. என்ன ஒரு இசை ஆளுமை! இசைக் கருவிகள் ஒவ்வொன்றின் ஆதிக்கமும் சொல்லி மாளாதவை. வயலின், ஆர்கன், வீணை, கிடார், தபலா, பாங்கோ என்று அள்ளித் தெளித்து ஆட்சி செய்வார்.

    மொத்தத்தில் என்றென்றும் இளமை மாறாத காயகல்பப் பாடல்.




    மங்கையரில் மகராணி
    மாங்கனி போல் பொன்மேனி
    எல்லையில்லாக் கலைவாணி
    என்னுயிரே யுவராணி

    மங்கையரில் மகராணி
    மாங்கனி போல் பொன்மேனி
    எல்லையில்லாக் கலைவாணி
    என்னுயிரே யுவராணி

    கோடையிலே மழை போல் நீ
    கோவிலிலே சிலை போல் நீ
    ஆடவரில் தலைவன் நீ
    அடிமை நான் உன் ராணி

    கோடையிலே மழை போல் நீ
    கோவிலிலே சிலை போல் நீ
    ஆடவரில் தலைவன் நீ
    அடிமை நான் உன் ராணி

    மங்கையரில் மகராணி

    ஆ..............ஆ

    மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
    கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
    மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
    கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

    தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
    தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
    நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
    நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

    வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
    நெஞ்சில் விளையாட

    அங்கங்கள் எங்கெங்கோ
    நானும் மெல்ல தடை போட

    மங்கையரில் மகராணி
    மாங்கனி போல் பொன்மேனி
    எல்லையில்லாக் கலைவாணி
    என்னுயிரே யுவராணி

    மங்கையரில் மகராணி

    ஆ..............ஆ

    மாணிக்கத் தேரின் காணிக்கையாக
    முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

    தீராத ஆசை கோடானு கோடி
    தேனாக ஓடும் தானாகத் தீரும்

    தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
    மஞ்சள் நீராட

    சொல்லுங்கள் அங்கங்கே

    நானும் கொஞ்சம் கவி பாட

    மங்கையரில் மகராணி
    மாங்கனி போல் பொன்மேனி
    எல்லையில்லாக் கலைவாணி
    என்னுயிரே யுவராணி

    மங்கையரில் மகராணி


    Last edited by vasudevan31355; 10th July 2015 at 11:50 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1695
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - ARA ( ஆல் டைம் அருமை ) என்று உங்களை சொன்னால் அது மிகை ஆகாது . என்ன உழைப்பு ?? எப்படி சார் உங்களால் முடிகிறது ? நெய்வேலியில் ஏதாவது பிளாட் எனக்கு கிடைக்குமா ? ஒரு சின்ன ( அந்த "சின்ன " அல்ல ) வீடு ஏற்படுத்திக்கொண்டு உங்களுடன் சேர்ந்து இருந்தால் , கொஞ்சமாவது உங்கள் திறமையில் இருந்து சில துளிகள் எனக்கு கிடைக்காதா என்ற ஏக்கம் தான் ---

    மிகவும் மனதிற்கு பிடித்த பாடல் - அருமையான வரிகள் - ஜெமினி கொஞ்சம் ஓவராக நடித்திருப்பார் - காதலில் ஏன் இந்த வேகம் என்று புரியவில்லை .

    அருமையான பதிவை படித்தவுடன் 5 ஸ்டார் ஹோட்டல் சென்று ஒரு cocktail dinner யை அனுபவித்த திருப்தி கிடைத்தது

  7. #1696
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Goodafter Noon


  8. Likes Russellmai, vasudevan31355 liked this post
  9. #1697
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 174

    பாகம் 2 - தந்தை

    தந்தை - மகன் பந்தம்

    மாணவ /வாலிப / திருமண பருவம்


    உண்மை சம்பவம் 27


    அப்பாவின் எல்லா ரிசல்ட்ஸ்ம் வந்துவிட்டன . இந்த வயதில் வரும் வியாதிதான் - மருத்துவர்கள் என்னை சமாதானம் செய்தார்கள் . மனம் கேட்கவில்லை ...... பார்கின்சன் வியாதி

    [Parkinson's disease (PD, also known as idiopathic or primary parkinsonism, hypokinetic rigid syndrome (HRS), or paralysis agitans) is a degenerative disorder of the central nervous system mainly affecting the motor system. The motor symptoms of Parkinson's disease result from the death of dopamine-generating cells in the substantia nigra, a region of the midbrain. The cause of this cell death is poorly understood. Early in the course of the disease, the most obvious symptoms are movement-related; these include shaking, rigidity, slowness of movement and difficulty with walking and gait. Later, thinking and behavioral problems may arise, with dementia commonly occurring in the advanced stages of the disease, whereas depression is the most commonpsychiatric symptom. Other symptoms include sensory, sleep and emotional problems. Parkinson's disease is more common in older people, with most cases occurring after the age of 50; when it is seen in young adults, it is called young onset PD (YOPD).]

    நடுங்கிக்கொண்டிருந்தேன் குழந்தையாக - எவ்வளவு நாட்கள் அந்த நடுங்காத கைகளில் என் உடம்பை சுறுக்கி கொண்டிருந்துருப்பேன் .அந்த அழகிய கைகள் என்னை எவ்வளவு நாட்கள் தூக்கிகொண்டு இந்த உலகம் எங்கும் சுத்திருக்கும் . அந்த கைகள் காட்டிய பரிவுதானே என் கழுத்தில் விழுந்த மாலைகள் , மெடல்கள் ......படிக்கும் போது எனக்காக விழித்திருந்த கண்களில் இன்று ஒளி இல்லை . ஹார்லிக்ஸ் அவர் கொடுக்கும் உற்சாக வார்த்தைகள் . மெதுவாக அப்பாவை wheel chair இல் அழைத்துக்கொண்டு வந்தேன் .. இனி வாழ்க்கை சாதாரணமாக போகப்போகும் வாழ்க்கை இல்லை - அவருக்கு இது ஒரு போராட்டம் - அவருடன் எனக்கும் ஒரு போராட்டம் .

    ஏதோ சொல்ல நினைத்தார் - வார்த்தைகளில் தெளிவு இல்லை - அப்பா பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - 16 மொழிகளும் அவருக்கு அத்துப்படி - இன்று அவர் பேசுவது 17வது மொழி - அவருக்கு மட்டுமே புரிகின்ற மொழி - இனி நானும் கற்றுக்கொள்ளவேண்டும் . "இதுதான் வாழ்க்கை --- " எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது கண்ணதாசனின் வரிகள் ....... அப்பாவின் வாழ்க்கை ஒரு wheel chair க்குள் முடங்கி விட்டது ... அப்பாவிற்கு நான் அழுதால் சுத்தமாக பிடிக்காது -- அவரின் முதுகு புறம் நின்றுகொண்டு கண்ணீருக்கு வழி வகுத்தேன் .

    அப்பாவை நான் குளிப்பாட்டிக் கொண்டிருந்தேன் - என் கண்ணீரை என் மனைவி துடைத்துக்கொண்டிருந்தாள் -- அவள் சொன்ன வார்த்தைகளில் வேதம் சொல்லும் வார்த்தைகள் இருந்தன -- " ஏன் இதை உங்கள் அப்பாவிற்கு வந்த தண்டனை என்று எடுத்துக்கொள்கிறீர்கள் ? உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் ... " வரமா ? என்ன உளறுகிறாய் ?"

    " ஆமாம் வரம் தான் - எவ்வளவோ அவர் உங்களுக்கு பணிவிடைகள் செய்திருக்கிறார் - அவருக்கு நீங்கள் திருப்பி நன்றி கடன் செய்யும் தருணம் இது - அவருடன் அதிகமாக நேரத்தை செலவழிக்க ஆண்டவன் உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறான் - ஓய்வில்லாமல் உலகத்தை சுற்றிய உங்களை இனி இந்த wheel chair யை சுற்றினால் போதும் அந்த உலகத்தையே சுற்றி வருவதைப்போல் என்பதை இறைவன் மறைமுகமாக சொல்லுகிறான் - அவர் சென்றபின்பு செய்யும் மரியாதைகளை விட அவர் இருக்கும் போது அன்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க கொடுங்கள் - கங்கையில் குளிக்க வேண்டாம் - ஜெருசேலம் செல்லவேண்டாம் , மெக்கா வை நினைக்கக் கூட வேண்டாம் - அவைகள் அனைத்தும் உங்களை நினைக்கும் , உங்களை பூஜிக்கும் . விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை.- இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் "

    நான் எந்த கோயிலுக்கும் இப்பொழுதெல்லாம் போவதே இல்லை - இதோ இந்த wheel chair இல் அமர்ந்திருக்கும் தெய்வத்தை விடவா அங்கிருக்கும் இறைவன் சக்தி வாய்ந்தவன் ??

    பூக்களாக இருக்காதே
    உதிர்ந்து விடுவாய்
    செடிகளாக இரு
    அப்போதுதான்
    பூத்து கொண்டே இருப்பாய்

    என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்லும் கீதை இதுதான்

    Last edited by g94127302; 10th July 2015 at 02:48 PM.

  10. Likes vasudevan31355, eehaiupehazij liked this post
  11. #1698
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 175

    பாகம் 2 - தந்தை

    தந்தை - மகன் பந்தம்

    மாணவ /வாலிப / திருமண பருவம்


    முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் தந்தைக்கு புதியதாக செல் போன் ஒன்றை வாங்கிக்கொடுத்தான் NRI மகன் . தந்தைக்கு ஒரே சந்தோஷம் - எல்லோரிடமும் பெருமையாக அந்த புதிய செல் போனை " என் மகன் வாங்கிக்கொடுத்தது " என்று என்று காண்பித்துக்கொண்டிருந்தார் - அவன் மகன் " உடம்பை பார்த்துக்கோ அப்பா " என்று சொல்லிவிட்டு USA விற்கு தன் உடம்பை சுமந்து சென்றான் . மகனிடம் இருந்து எந்தவிதமான நியூஸ்ம் இல்லை . அந்த முதியவர் செல் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு சென்று " இந்த செல் யை " கொஞ்சம் ரிப்பேர் செய்யமுடியுமா ? என்று கேட்டார் --- " முழுவதும் பார்த்துவிட்டு அந்த கடைக்காரன் சொன்னான் " இந்த செல்லில் எல்லாம் சரியாகவே இருக்கிறது - பழுது ஒன்றும் இல்லை "

    அந்த பெரியவர் கேட்டார் " அப்படியா ? பிறகு ஏன் என் மகனிடம் இருந்து கால் வருவதில்லை ??? " - அந்த கடைக்காரன் சிலையாகி விட்டான் .....


    வளர்த்த கடா முட்ட வந்தால் - வெச்ச செடி முள்ளானால் ?? - கல் தூண் தொடர்கிறது -----


  12. Likes Russellmai, vasudevan31355 liked this post
  13. #1699
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரகான திரி நண்பர்களின் பார்வையிடலுக்காகவும் நடிகர்திலகம் திரியின் இணைப்பதிவு


    NT Positive / NT Negative / NT Neutral : New series!

    ரத்தத்தில் எந்த குரூப்பாக இருந்தாலும் மீண்டும் அதையே பாசிடிவ் நெகடிவ் என்றுதான் பிரிக்கிறோம் அதுபோலவே நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய எண்ணற்ற வகையான பாத்திரப் படைப்புக்களையும் பாசிடிவ் நெகடிவ் ஆகப் பிரிக்கும் அலசல் கண்ணோட்டத்தின் முன்னோட்டம்

    Part 1 :NT Positively Negative! PARAASAKTHI

    பகுதி 1 : நடிகர்திலகம் நேர்மறையாகவே எதிர்மறை குணாதிசயம் கையாளுதல் : பராசக்தி


    யாரும் தனக்குத் தீங்கிழைக்காதவரை தனி மனிதன் நல்லவனே தொடர் பாதிப்புக்கு உள்ளாகும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்னும் வாழ்வியல் தத்துவத்தை முதல் படம் என்ற பிரக்ஞையே இல்லாது தேர்ந்த நடிப்பிமையமாக பராசக்தியிலேயே சாதித்துக் காட்டினர் நடிகர்திலகம் !

    Positive NT surrounded by Negative elements!



    தங்கை கல்யாணியைப் பார்க்கும் பாசத் தூண்டுதலில் வெள்ளந்தியாக தாய் மண்ணை மிதித்தவுடனேயே பணம் பொருள் இழந்து உலகவியல் அனுபவத்தின் கசப்பான முதல் படியில் கால் வைக்கிறார் நடிப்பின் பரம்பொருள் குனியக் குனியக் குட்டு வாங்குபவர் நிமிர்ந்தால் ..உலகம் எப்படி சிதறி ஓடுகிறது!

    பரிதாபத்துக்குரிய பைத்தியக்கார வேஷதாரியாக மாறி உன்மத்தரின் தோலுரிக்கும் வைத்தியத்தை முதல் காவியத்திலேயே அரங்கேற்றிவிட்டாரே நடிக மன்னர் !!




    NT positively becomes Negative!!

    உளவியல் ரீதியாக வேறு எந்த வேஷத்தையும் விட மன நலம் தறிகெட்ட பைத்தியக்காரன் வேஷமே தன்னை வஞ்சித்த சமுதாயத்தை பயப்படுத்தி சிதறி ஓட வைக்கும் என்னும் தத்துவம் எவ்வளவு அழகாக அருமையாக சீராக நெத்தியடியாக நடிகர்திலகம் வாயிலாக உணர்த்தப் பட்டிருக்கிறது ?!



    NT negatively communicates positive!

    நேர்மறையாளரால் தன்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை சகிக்க இயலாதே!
    நெஞ்சு பொறுக்குதில்லையே......!




    NT Positive finally!!

    எதிர்ம(ரை)றையாக போயிருக்க வேண்டியவரை நேர்மறையாளர் ஆக்கியது காதலே! காதல் சீருடையான பைஜாமா ஜிப்பா காஸ்ட்யூமை ஜெமினிக்கும் அறிமுகம் செய்தது நடிகர்திலகமே!?


  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  15. #1700
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மிகவும் மனதிற்கு பிடித்த பாடல் - அருமையான வரிகள் - ஜெமினி கொஞ்சம் ஓவராக நடித்திருப்பார் - காதலில் ஏன் இந்த வேகம் என்று புரியவில்லை .
    ரவி
    Objection your honour!

    ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
    காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார் !

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •