Page 147 of 400 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1461
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 123

    பாகம் 2 - தந்தை


    தந்தை - மகள் பந்தம்

    30 வருடங்கள் சென்றன திருமண வாழ்க்கையில் -

    மனைவி என்னை இன்னும் புரிந்துகொள்ளவில்லை - மகள் என்னை புரிந்துகொண்டதைப்போல நானே என்னை இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை ---------


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 124

    பாகம் 2 - தந்தை


    தந்தை - மகள் பந்தம்

    மாறாத உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் தந்தை மகள் உறவு -
    மறக்கமுடியாத உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் அப்பா -மகள் உறவு
    தெய்வங்கள் வாழும் உறவில்லே என்ற நம்பிக்கை ஒன்றிருந்தால் அந்த உறவுதான் மகள் தந்தை உறவு -
    மீண்டும் பிறந்தால் வேண்டும் உறவு என்று ஒன்றிருந்தால் அதுதான் அப்பா மகள் உறவு

    Last edited by g94127302; 27th June 2015 at 12:23 PM.

  4. #1463
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 125

    பாகம் 2 - தந்தை


    தந்தை - மகள் பந்தம்



  5. #1464
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 126

    பாகம் 2 - தந்தை[/COLOR][/SIZE]

    தந்தை - மகள் பந்தம் [/B]

    இந்த பாடலை திரு கோபாலுக்கு சமர்ப்பிக்கிறேன் -நிதர்சன உண்மை வரிகள் .... இதயம் தொடும் குரலில் ..one of the best melodious songs of MS Viswanathan,


  6. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s, Russellmai, vasudevan31355 liked this post
  7. #1465
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'துலாரி'யும் 'கல்யாணி'யும்

    ராஜ்ராஜ் சாருடன் உரையாடி நீண்ட நாட்களாகி விட்டது. இன்று அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க ஆசை.

    ராஜ்ராஜ் சார்,

    உங்கள் 'ஜுகல் பந்தி' பாடல்களுக்கு முதல் ரசிகன் நான்தான். 'ஜி'யும் இந்த லிஸ்ட்டில் சேருவார்.

    இன்று ஒரு அருமையான 'ஜுகல் பந்தி' பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

    1949-ல் வெளி வந்த 'துலாரி' படம் பற்றி உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள் நம்மை இன்பக் கிறுக்கு பிடிக்க வைப்பவை.

    நௌஷாத்தின் நயமான இசையில் மிக மிக மிக அருமையான பாடல்கள்.

    குறிப்பாக ரஃபி பாடிய 'Suhani Raat Dhal Chuki...Na Jaane Tum Kab Aaoge '

    'என்ன இனிமை! அப்படியே சொக்கிப் போகலாம் சார்.

    அதை விட்டுவிடுவோம்.

    இதே படத்தில் ரஃபியும், லதாவும் பாடிய 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலைப் பற்றி என்ன சொல்ல! சுரேஷ், மதுபாலா இருவரும் அவ்வளவு ஜென்டிலாகப் பண்ணியிருப்பார்கள்.

    1952 ல் 'கல்யாணி' என்ற பெயரில் ஒரு படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வந்தது. நம்பியார் நாயகனாக நடித்த முதல் படம் அது. அந்தப் படத்தில் ஒரு பாடலில் நான் மேலே குறிபிட்டுள்ள 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலின் டியூனை உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

    தமிழில் இப்படத்திற்கு எஸ்.தட்சணாமூர்த்தியும், ஜி.ராமநாதனும் இசை அமைத்திருந்தார்கள்.

    கண்ணதாசன் அப்போதுதான் திரைப்பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்த நேரம்.

    இந்தப் பாடலைப் பாடிய ஆண் பாடகர் யாரென்று கேட்டால் அசந்து போவார்கள். பெண் குரல் கே. ராணி என்பதும் அவ்வளவு எளிதில் அறிய முடியாத ஒன்றுதான்.

    சரி! ஆண்குரல் யார்? நமது 'பாடகர் திலக'மேதான். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது. 'பாடகர் திலகம்' அவரது குரலில் இந்தப் பாடலைப் பாட, அப்போது அது மறுக்கப்பட்டு, அந்த சமயம் மிகவும் புகழ் பெற்று இருந்த கண்டசாலா அவர்களின் குரல் சாயலில் பாடுமாறு அவரிடம் வற்புறுத்தப்பட்டது.

    வேறு வழியில்லாமல் 'பாடகர் திலகம்' குரலை மாற்றிப் பாட வேண்டியதாயிற்று.

    'இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே'
    மண நாளே இதுதானே! ஓஹோ! ஆஹா!

    என்ற பாடல்தான் அது.

    ஆனாலும் பாதகமில்லை. அதே இனிமைதான். ஆனால் இது 'பாடகர் திலகம்' பாடியது என்று சொன்னால்தான் தெரியவே வரும்.

    இப்போது முதலில் ஒரிஜினல் இந்திப் பாடலைப் பார்ப்போம்.



    'கல்யாணி' படத்தின் வீடியோ பாடல்கள் கிடைக்காததால் 'வேம்பார்' திரு.மணிவண்ணன் அவர்கள் 'துலாரி' படத்தின் 'Mil milake gayenge ho ho do dil yaha' பாடலின் ஆடியோவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் அதே டியூனில் ஒலிக்கும் 'கல்யாணி' படத்தின் பாடலான 'இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே' பாடலின் ஆடியோவை இணைத்துவிட்டார்.

    ராஜ்ராஜ் சார்,

    'Nagaree yeh...

    har ghum sey aajad hai ...

    aabad hai ...

    'இது போலே....

    சுகமும் நான் காண்கிலேன்'...

    'நான் காண்கிலேன்'

    Last edited by vasudevan31355; 27th June 2015 at 01:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1466
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1234338] எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. QUOTE]

    +1

    எனக்கும் ஜோதிகாவைப் பிடிக்காது. எந்த முகபாவமும் இல்லாத மரக்கட்டை நடிகை. இந்த ஜோதிகா, அசின், அஞ்சலி இவர்களையெல்லாம் எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

    தசாவதாரம் கிளைமாக்ஸில் அசின் பண்ணும் அழும்பு கடுமையான எரிச்சலை உண்டுபண்ணும். முதல்படம் வெற்றியடைந்ததும் ஓவராக அலட்டிக்கொண்டு காணாமல் போன சந்தியாவும் இப்பட்டியலில் இடம்பெறுபவரே.

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #1467
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை 10: இரவு, வானம், மவுனம், இசை



    கழுகு’ படத்தில் ரதி, ரஜினி

    1980-களில் வெளியாகி வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் முதிர்ச்சியான ரசிகர்களுக்கானவை யாக அல்லாமல், சிறுவர்களுக் காகவே எடுக்கப்பட்டதாக இப்போது தெரிகிறது. தர்க்கரீதியான கேள்விகளை அலட்சியம் செய்தபடி தன் போக்கில் நகரும் அவ்வாறான படங்கள் தமிழில் பல உண்டு.

    ஆனாலும், சாகசங்களை விரும்பும் இளம் மனங்களுக்குப் பெரும் விருந்து படைத்த படங்கள் அவை. அப்படியான சாகசப் படங்களில் ஒன்று எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் ரஜினி, ரதி நடித்த ‘கழுகு’. காதல் திருமணம் செய்துகொள்ளும் ரஜினி-ரதி ஜோடிக்குப் திருமணப் பரிசாக ஒரு பேருந்து வழங்கப்படும்.

    படுக்கை, குளியல் வசதிகள், சமைக்கும் கருவிகள் என்று சகல வசதிகளுடன் ஒரு நகரும் வீடாக இருக்கும் அந்தப் பேருந்தில், நெருங்கிய நண்பர்களின் துணையுடன், இதுவரை அறிந்திராத பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்வார்கள். புதிய இடம் ஒன்றில் அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படம் முழுவதும் குதூகலம் தரும் பயணத் துணையாக, இளையராஜாவின் இசை கூடவே பயணிக்கும்.

    மலைக் காற்றின் தீண்டல்

    பாடல்களில் இசைக் கருவிகளுக்கு மாற்றாக, குரல்களை வைத்து இளையராஜா செய்த பரிசோதனைகள் நிறைய உண்டு. முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்த பாடல்கள் அவை. இப்படத்தில் இடம்பெறும், ‘பொன்னோவியம்… கண்டேனம்மா எங்கெங்கும்’ பாடல் அவற்றில் ஒன்று.

    பசுமையான மலைப் பாதைகளின் வழியாகச் செல்லும் பேருந்துக்குள் இருந்தபடி, இயற்கையை ரசிக்கும் காதலர்கள் பாடும் பாடல் இது. ‘லலலலலா…’ என்று பல குரல்களின் சங்கமமாக ஒலிக்கத் தொடங்கும் ஹம்மிங்குடன், துள்ளலான தாளம் இனிமையைக் கூட்டும். ‘பொன்னோவியம்…’. என்று எஸ். ஜானகியின் குரல் தொடங்கும்போது மலைக் காற்றின் ஸ்பரிசத்தை உணர முடியும். இயற்கையின் வசீகரத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பாடியிருப்பார் இளையராஜா.

    முதல் சரணத்துக்கு முன்னதான நிரவல் இசையில் ஒலிக்கும் குரல்கள், கொண்டாட்டத்தில் துள்ளும் என்றால், இரண்டாவது சரணத்துக்கு முன்னதான நிரவல் இசை சலனமற்று உறைந்து கிடக்கும் நதிக்கரையின் அமைதியைக் கண்முன் நிறுத்தும். ‘ம்ம்ம்..ம்ம்ம்’ என்று ஆண் பெண் குரல்கள் இணைந்து ஒலிக்கும்போது, இயற்கை தேவதைகளே இளம் ஜோடியை வாழ்த்துவதுபோல் இருக்கும்.

    இளையராஜா பாடிய பெரும்பாலான டூயட் பாடல்களில் அவருக்குத் துணையாகப் பாடியிருப்பவர் எஸ். ஜானகிதான். தனது அபாரமான கற்பனை வீச்சின் நுட்பங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட பாடகி என்பதால், தான் பாடும் பாடல்களில் ஜானகியின் குரலை இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரும் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்.

    கனவில் ஒலிக்கும் பாடல்

    ஆயிரக் கணக்கான திரைப் பாடல்களைப் பாடியவர்களுக்குக் கிடைக்கும் புகழ், சிலருக்கு ஒரே பாடல் மூலம் கிடைத்துவிடும். இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் எனும் கோவில்’ பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி அந்த வகையைச் சேர்ந்தவர். சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமியின் மகன் இவர். சில பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், சினிமாவில் அவர் பாடிய பாடல், அநேகமாக இது மட்டும்தான். பல உயரங்களுக்கு அனாயாசமாகப் பறந்து செல்லும் குரல் இவருடையது.

    இந்தப் பாடல் உருவாக்கும் கற்பனை மிக நுட்பமானது. மாலை நேரத்தின் மஞ்சள் நிறம் கரைந்துவிடாத இரவின் தொடக்கம். கடல், மலை, மரங்கள் என்று எதுவுமே இல்லாத பரந்த சமவெளி. பூமியைத் தொட்டுக்கொண்டே புரளும் பிரம்மாண்டமான திரையாக வானம். அதில் ஆங்காங்கே நட்சத்திரங்கள்.

    அசையாதச் சித்திரமாக விரிந்திருக்கும் இந்த கனவுப் பிரதேசத்தின் அமைதிக்கு நடுவில் மென்மையாக ஒலிக்கத் தொடங்குகிறது கிட்டார். சற்று நேர நடைக்குப் பின்னர் மெதுவாக ஓடத் தொடங்குவதுபோல், தொடக்க இசைக்குப் பின்னர் வேறுபட்ட திசையில் பாடல் திரும்பும். வேகம் கூடும் கிட்டாருடன், புல்லாங்குழல் ரகசியமாகக் கொஞ்ச, பாடல் தொடங்கும்.

    நிரவல் இசையில் வயலின் சேர்ந்திசையில், விமானம் தரையிலிருந்து வானத்துக்கு ‘டேக்-ஆஃப்’ செய்யும் அற்புதத்தை உணர முடியும். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இசை இது. தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் மிதந்து செல்லும் உணர்வைத் தரும் இப்பாடல் தரும். கனவுகளில் தோன்றும் நிலப்பரப்பின் இசை வடிவம் என்றும் இந்தப் பாடலைச் சொல்லலாம்.

    கோடை விடுமுறைச் சுற்றுலாவை நினைவுபடுத்தும் ‘ஒரு பூவனத்தில’ எனும் பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பார். சிறு மலர்கள் அடர்ந்திருக்கும் புல்வெளி மீது தரைவிரிப்பைப் பரப்பி அமர்ந்துகொண்டு கேட்க வேண்டிய பாடல் இது. போலிச் சாமியாரின் மர்மங்களை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் ரஜினி ஆடிப் பாடும் ‘தேடும் தெய்வம்’ எனும் பாடலைத் தனக்கே உரிய உற்சாகத்துடன் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன்.

  11. #1468
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சினிமா ரசனை 4: உயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா!


    ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ படத்தில்

    நீங்கள் ஒரு இயக்குநராக இருந்தால், ஒரு திரைப்படம் எடுக்க உச்சபட்சமாக என்னென்ன சோதனைகளை எதிர்கொள்வீர்கள்? ஒரு மாத காலம் தன் உடலையே மருந்துகளைப் பற்றிய பரிசோதனைகளுக்காக ஒப்புக்கொடுத்து, பல விதமான வாதைகளை அனுபவித்து, அதன் மூலம் திரட்டிய பணத்தில் படம் எடுத்து உலகப் புகழ் பெற்ற ராபர்ட் ரோட்ரிகஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    திரைப்படத் துறையில் ரோட்ரிகஸைப் போல உத்வேகமூட்டும் ஒரு நபரைக் காண்பது மிகவும் அரிது. யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று இன்றும் உறுதியாக நம்புபவர் அவர். அவரைப் பின்பற்றியே பலரும் தனியாளாகப் படம் எடுத்திருக்கின்றனர். ஒரு மிகப் பெரிய குழுவை வைத்துக்கொண்டு படம் எடுப்பதையோ, பலகோடி டாலர்கள் கொட்டுவதையோ விரும்பாத நபர் அவர். படமெடுப்பதில் கிட்டத்தட்ட ஒருவித கெரில்லா ஸ்டைலைப் புகுத்தியவர்.

    அவரது ஊக்கமூட்டும் முயற்சிகளைப் பற்றிய கட்டுரைதான் இது. திரைப்படம் என்பது பலரும் சேர்ந்து பணியாற்றும் ஒரு துறை. இயக்குநர் என்பவர்தான் எந்த ஒரு திரைப்படத்துக்கும் தலையாய நபர். என்றாலும், அவரின் கீழ் ஏராளமானவர்கள் பணியாற்றினால்தான் எந்த ஒரு திரைப்படமும் முழுமையடையும். அப்போதுதான் அந்த இயக்குநரின் பார்வை மழுங்காமல் திரைப்படத்தில் இடம்பெறும். ஆனால், கடந்த சில வருடங்களாக, குழு சார்ந்து பணியாற்றும் முறை மெதுவே தகர்ந்து, உலகம் முழுக்கவே மெல்லமெல்லத் தனியாகவே படமெடுக்கும் முறை அதிகரித்துவருகிறது.

    எப்படியென்றால், ஒரு நபருக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியாவது முயற்சி செய்து ஒரு கேமராவைத் தயார் செய்கிறார். தனது மனதில் இருக்கும் கதையை விரிவாக எழுதிக்கொண்டு, அந்தக் கதை நடக்கும் களத்துக்குச் செல்கிறார்.

    அங்கே இருக்கும் நிஜமான மக்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் பேசி, அவர்களையே கதாபாத்திரங்களாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார். இவரே ஒளிப்பதிவாளராகவும் மாறி, படத்தை எடுக்கிறார். பின்னர் எடிட்டிங், டப்பிங், ஒலிக்கலவை முதலியே எல்லா வேலைகளையும் இவரே செய்து படத்தை முழுமையாக உருவாக்குகிறார். இதுதான் உலகெங்கும் பிரபலமாக இருக்கும் One man film crew என்ற வகை. பல வருடங்கள் முன்னரே ஹாலிவுட்டில் சிலர் முயன்று பார்த்து வெற்றியடைந்த விஷயம் இது.

    படிக்கும்போது மிக எளிதானதாக இது தோன்றலாம். ஆனால், நிஜத்தில், திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற வெறி மூளை முழுதும் ஆக்கிரமித்தால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.

    உதாரணமாக, ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே குறும்படங்கள் மூலமாக மிகவும் திறமைசாலி என்று பெயர் எடுத்திருந்தார். இந்தக் குறும்படங்களும் மலிவான கேமரா ஒன்றில் தனது சகோதர சகோதரிகளை வைத்து இயக்கியவைதான். ஆனாலும், அவரது அபாரமான திறமையால் பல திரைவிழாக்களில் அவை பரிசு வாங்கின (‘Bedhead’ என்ற குறும்படம் இன்றைக்கும் பிரபலம்).

    இதனால் உந்தப்பட்டு, முழு நீளத் திரைப்படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் ரோட்ரிகஸ் இறங்குகிறார். ஆனால், அவரிடம் கையில் ஒரு பைசா கூடப் பணமில்லை. என்றாலும் மனம் தளராமல், படம் எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறார் ரோட்ரிகஸ். மிகக் குறைந்த பட்ஜெட் என்றால்கூட, 7,000 டாலர்கள் ஆகும் என்று தெரிகிறது. படத்தை எடுக்க இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது?

    ரோட்ரிகஸின் ஊரில் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் உண்டு. அங்கே சென்று நம்மை நாமே சோதனை எலியாக ஒப்புக்கொடுத்தால் பணம் கிடைக்கும். இப்படி, ஒரு மாதப் பரிசோதனைக்கு 3,000 டாலர்கள் கிடைப்பது தெரிந்துகொண்டு, அங்கே உடனடியாக சென்று தன் பெயரை ரோட்ரிகஸ் பதிவுசெய்துகொண்டார்.

    தினமும் அடிக்கடி ஊசி போட்டு ரத்தம் எடுப்பார்கள். ஆனால், அட்டகாசமான சாப்பாடு கிடைக்கும். சில பல சோதனைகளுக்குப் பின் ரோட்ரிகஸ் தேர்வாகிறார். உள்ளே நுழைகிறார். முதல் நாளில் பல முறை ரத்தம் எடுக்கிறார்கள். அவர்களின் மருந்தை உடலில் செலுத்துகிறார்கள். நரக வேதனை. பொறுத்துக்கொள்கிறார் ரோட்ரிகஸ்.

    ஒரு வாரம் கழித்து, அங்கே கிடைக்கும் 24 மணி நேர ஓய்வில் திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறார். அங்கு இருக்கும் இன்னொரு நபரும் இவருக்கு நண்பராக ஆக, அவரிடமும் இன்னொரு 3,000 டாலர்கள் தேறுகிறது. பாக்கிப் பணத்தை எப்படியோ அங்குமிங்கும் புரட்டுகிறார்.

    பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்து, ஒரு நண்பரிடம் இருந்த ஆரிஃப்ளெக்ஸ் கேமராவை இரண்டு வாரங்கள் கடனாக வாங்கிக்கொள்கிறார். படம் நடக்கும் களமான மெக்ஸிகோவின் சிற்றூர் ஒன்றுக்குச் சென்று, அங்கிருப்பவர்களை வைத்தே படத்தை முடிக்கிறார். படத்தின் டப்பிங், எடிட்டிங் ஆகியவற்றுக்கு ரோட்ரிகஸ் கஷ்டப்பட்டது தனிக்கதை. ஆனால், மனம் தளராமல் படத்தை எடுத்து முடித்து இறுதியான வடிவத்தைத் தயார் செய்கிறார்.

    இப்படி எடுக்கப்பட்ட படம், பற்பல சம்பவங்களுக்குப் பின்னர் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கே பரிசும் பெறுகிறது. உலகெங்கும் பிரபலமான இயக்குநராக மாறுகிறார் ரோட்ரிகஸ். அந்தப் படம் - எல் மரியாச்சி (El Mariachi). இதன்பின் அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களையும் (Desperado, Once upon a Time in Mexico) வெளியிடுகிறார். இன்று ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உடையவர். ஆனால் வயதோ நாற்பதுகளில்தான்.

    இவரது வாழ்க்கை, திரைப்படம் எடுக்க விரும்பும் அனைவருக்கும் அவசியம் உற்சாகமூட்டக்கூடியது. ஏழை இளைஞனாக இருந்த அவர் எப்படித் தனது முதல் படத்தைத் தனியொரு ஆளாக எடுத்தார் என்ற அருமையான கதையை ‘Rebel Without a Crew' என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். திரைப்படம் எடுக்கும் தாகம் உள்ள அனைவரும் அவசியம் பலமுறை படிக்க வேண்டிய புத்தகம் இது.

  12. Thanks uvausan thanked for this post
  13. #1469
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    'மகளுக்காக'



    இதோ மகளுக்காகவே தந்தை வாழ்ந்து வாழ்க்கையை இழந்த கதை. மகளுக்காகக் கொள்ளையடித்து ஒரு குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போகும் தந்தை (ஏ.வி.எம்.ராஜன்) தன் சிறுவயது மகளை நண்பனின் கண்காணிப்பில் நம்பி விட்டு விட்டுப் போகிறான். ஆனால் நண்பனோ மகளைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, அவளைத் தனியே தவிக்க விட்டு, ஜெயிலில் இவனைச் சந்தித்து அவன் மகளுக்காக சம்பாதித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் எங்கிருக்கிறது என்று கேட்டு வாங்கி பிடுங்கித் தின்கிறான்.(எம்.ஆர்.ஆர்.வாசு) மகளும் பெரியவளாகி விட்டாள் (ஜெயா). சூழ்ச்சி, வஞ்சகம் தெரியவர சிறையிலிருந்து தப்பி மகளைக் காண ஓடுகிறான் தந்தை.

    புகையாக, கொஞ்சமாக என் மனதில் நிழலாடும் 'மகளுக்காக' படத்தில் வரும் பாடலின் சிச்சுவேஷன் இதுதான்.

    ஜெயிலிருந்து தப்பி, காவலர்கள் வலை விரித்துத் தேட, தன் மகளைப் பார்க்க ஓடோடி வரும் இந்த பரிதாபத் தந்தையின் தணியாத ஆசையைப் பாருங்கள். அவனுடைய ஆர்வத்தையும், வேகத்தையும் பாருங்கள். காட்டாற்று வெள்ளம் போல கட்டுப்படுத்த முடியாத அவன் கால்களைப் பாருங்கள். மகளைச் சந்திக்கப் போகும் மகிழ்ச்சி அவன் முகத்தில் பொங்குவதைப் பாருங்கள். காடு, மலை இவைகளைத் தாண்டி மகளைப் பார்க்க ஓடுவதைப் பாருங்கள். ஜெயில் தண்டனை, கொடுமை இவற்றால் தாடி மீசையுடன் உருக்குலைந்து போன முகம் அதையெல்லாம் மீறி மகளின் முகத்தைப் பார்க்கப் போவதால் மதியாய் ஒளி வீசுவதைக் காணுங்கள். எதுவுமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை. உடல், உள்ளம், உயிர் அனைத்திலும் அவன் மகளைச் சுமந்து திரிகிறான்.

    அதுதான் தந்தை...அதுதான் பாசம். இந்தத் தந்தை 'தந்தை' என்ற அனைத்து இலக்கணங்களுக்கும் உட்பட்டவன். உதாரணமானவன். பாசத்திலிருந்து கொஞ்சமும் தடம் புரளாதவன். மகளுக்காகவே உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பவன். மகள் வாழ்வேதான் அவன் வாழ்வு.

    அவன் பாடும் பாடலைக் கேளுங்கள்.



    இனிமேல் எனக்கென்ன கவலை
    இனிமேல் எனக்கென்ன கவலை
    என் இதயம் பார்ப்பது மகளை
    உறவே எனக்கவள் எல்லை
    இனி உலகம் வேறேதும் இல்லை
    உறவே எனக்கவள் எல்லை
    இனி உலகம் வேறேதும் இல்லை

    ஆசைமகளே ஆசை மகளே
    எல்லாம் உனக்காக
    நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
    வாழ்வது உனக்காக

    இனிமேல் எனக்கென்ன கவலை

    பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
    பச்சைக் கிளிக்காக
    நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
    மகளே உனக்காக

    பாலில் நனைந்து தோளில் வளர்ந்த
    பச்சைக் கிளிக்காக
    நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன்
    மகளே உனக்காக

    வாசலில் நின்று வரவேற்பாயோ
    மகளே எனக்காக
    நான் வந்ததும் உந்தன் மடியினில் கிடப்பேன்
    தாயின் நினைவாக

    ஆசைமகளே ஆசை மகளே
    எல்லாம் உனக்காக
    நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
    வாழ்வது உனக்காக

    இனிமேல் எனக்கென்ன கவலை

    பதினான்காண்டு ராமன் காட்டில்
    வாழ்ந்தது வனவாசம்
    அந்த பாண்டவர் கூட்டம் காட்டில் இருந்ததை
    பாரதக் கதை பேசும்

    இதுநாள் வரையில் நானும் வாழ்ந்தது
    எல்லாம் எதற்காக
    அந்த இறைவன் தடுத்தால் நானும் எதிர்ப்பேன்
    மகளே உனக்காக

    ஆசைமகளே ஆசை மகளே
    எல்லாம் உனக்காக
    நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
    வாழ்வது உனக்காக

    இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
    இருந்தேன் நானம்மா
    என் எண்ணம் முடிந்தது
    கண்ணும் குளிர்ந்தது
    வருவேன் இனி அம்மா

    இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே
    இருந்தேன் நானம்மா
    என் எண்ணம் முடிந்தது
    கண்ணும் குளிர்ந்தது
    வருவேன் இனி அம்மா

    காட்டிலிருந்து கண்ணீர் வடித்தேன்
    கண்மணி உனக்காக
    நான் கடமையைச் செய்தேன் வருவது வரட்டும்
    வாழ்வே அதற்காக

    ஆசைமகளே ஆசை மகளே
    எல்லாம் உனக்காக
    நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து
    வாழ்வது உனக்காக

    இனிமேல் எனக்கென்ன கவலை
    என் இதயம் பார்ப்பது மகளை
    உறவே எனக்கவள் எல்லை
    இனி உலகம் வேறேதும் இல்லை

    இனிமேல் எனக்கென்ன கவலை

    பாடலைப் பார்க்காதவர்கள், கேட்காதவர்கள் கேட்டால் 'நடிகர் திலகம்' நினைவுக்கு வருவது அவர்கள் தவறல்ல.

    ஏ.வி.எம்.ராஜன் தந்தை வேடத்தில் தன்னை நடிகர் திலகமாகவே ஆக்கிக் கொண்டு, மாற்றிக் கொண்டு நடிக்க முயற்சி செய்து கொஞ்சம் வெற்றி பெறுவார்.

    டி.எம்.எஸ்ஸிடம் நடிகர் திலகத்துக்கு பாட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது.

    ரவிச்சந்திரன் கூட ஜெயாவின் ஜோடியாய் நடித்திருப்பார் என்று நினைவு.

    ஜெயாவுக்கு ஈஸ்வரி ராட்சஸி பாட, ரவி கிடார் வாசித்து 'அட என்னாங்க ஆண்டவனே பாட்டுக் கேட்க ஆசையா?' என்ற அபூர்வ பாடல் ஒன்றும் நினைவில் இருக்கிறது

    ராகவேந்திரன் சார் கிளியர் பண்ண வேண்டுகிறேன்.

    எப்படியிருந்தாலும் மகளுக்காக தந்தை உருகும் பாடலில் இப்பாடல் தலையாய பாடல்தான்.

    Last edited by vasudevan31355; 27th June 2015 at 03:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes uvausan, kalnayak, Russellmai liked this post
  15. #1470
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - மறுபடியும் திரு கோபாலிடம் இருந்து கடன் வாங்க வேண்டியுள்ளது -- " எப்படி என் மனதை படித்தீர்கள் ?" - கடைசியில் எழுதலாம் என்று நினைத்தேன் - என்னிடம் இருந்து நெய்வேலிக்கு தப்பிசென்ற புண்ணியம் செய்த பாடல்களுள் இதுவும் ஒன்று . 100 பதிவுகளில் நான் எழுதுவதை நீங்கள் ஒரே பாடலில் அலசி தனி முத்திரை பதித்து விடுகிறீர்கள் ..... எனக்கு avmr நடிப்பு அவ்வளவாக பிடிக்காது - அலட்டல் அதிகம் நடிப்பு என்ற பெயரில் - இவர் " தெய்வத்தில்"நடிப்பதைப்பார்த்து தெய்வமே தேவரை விட்டு ஓடிவிட்டதாக கேள்வி . மிகவும் அடக்கி வாசித்த படம் " தில்லானா மோகனாம்பாள் " . ஆமாம் - தலையான பாடல் இதுதான் என்று எழுதி இருக்கிறீர்கள் ---- அங்கு தான் கொஞ்சம் உதைக்கிறது -

    தாயின் வாழ்வு முடிந்துபோனால் தந்தைக்கு என்று யாரும் இல்லை
    தந்தை வாழ்வு முடிந்துபோனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - ஒருவராக வாழ்கின்றோம் - பிரிவதர்க்கோ இதயமில்லை -----

    இந்த பாடலை விடவா வேறு எந்த பாடலும் - தந்தை மகள் உறவை சொல்வதில் தலையாக இருக்க முடியும் ( கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் !)

    மீண்டும் நன்றி என்னுடன் சேர்ந்து பயணம் செய்வதற்காக !!
    Last edited by g94127302; 27th June 2015 at 05:31 PM.

  16. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •