Page 14 of 400 FirstFirst ... 412131415162464114 ... LastLast
Results 131 to 140 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #131
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜ் ராஜ் சார் தாங்க்ஸ்..ஃபார் த எக்ஸ்ப்ளனேஷன்..

    நா மதுரைக்காரன்..ஆனால் வெஜிடேரியன்

    பின் ஏன் மதுரைங்கறீங்களா.எங்கள் வீட்டிற்கு அருகாமையில் தேவி தியேட்டர் எனப்பலதடவை சொல்லியிருக்கிறேன்.அங்கு ஆம்லெட் மற்றும் மட்டன் ஸ்டால் உணவகங்கள் இரண்டு உண்டு...அதுவும் கொத்துபரோட்டோஎன்கிற சங்கதி இரவு 9 மணிக்குமேல் தான் சுதி சுத்தமாக ஆரம்பிக்கும் டக் டொய்ங்க் ட்யொங் டொய்ங்க் என..

    வெஜ் ஆக இருந்தாலும் பரோட்டா சால்னா (எலும்பில்லாமல்) உண்டதுண்டு..அதுவும் முரளியைக் கேட்டால் தெரியும்..லேபர் ஹைஸ்கூல் பக்கத்தில் நிறைய ஸ்டால்கள் உண்டு - மட்டன் ஸ்டால்;கள் தான் ..கல்லூரி படிக்கும் போது ஓசைப்படாமல் ரெண்டு மூன்று கொத் பரோட்டா அல்லதுவெறும் பரோட்டா (குட்டிப் பெளர்ணமியாய் விகசித்திருக்கும்) உண்டது உண்டு..ம்ம் அதெல்லாமொரு நிலாக் காலம்..வராது.. பாயாக்கறி கேட்டு பாட்டு எல்லாம் கேட்டிருக்கிறேன்.சாப்பிட்டதில்லை.. நன்றி அகெய்ன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி சார்

    ஆயிரம் பதிவுகளுக்கு அன்பான வாழ்த்துக்கள் .''கரு '' - தொடர் அமர்க்களம் .தொடர்ந்து அசத்துங்கள். நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி .

  4. #133
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முரளி சார்,

    மிக்க நன்றி! தங்கள் பொன்னான எழுத்துக்களை இங்கே எதிர்பார்க்கிறோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #134
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மிக்க நன்றி வினோத் சார் - உங்கள் திரி சார்பற்ற பாராட்டுக்கள் இன்னும் எழுத வேண்டும் - அவைகள் இன்னும் அருமையாக , பிறர்க்கு உபயோகப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற ஒரு மன உறுதி யைத்தருகின்றன . சாதனையாளர்கள் மனமுவந்து வாழ்த்தும்போது அதன் இனிமையே தனிதான் ....

  6. #135
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    இதுதான் கிருஷ்ணா என்பது. கேட்டவுடன் விஷயங்கள் அருவி மாதிரி கொட்டுகிறது. மோகினி பற்றி மோகனன் கேட்டதும் ஓடியாந்து தந்து விட்டீர்களே!



    மோகினி நடிகர் திலகத்துடன் நடித்த கேயாரின் 'சின்ன மருமகள்' அவருடைய கேரியரில் குறிப்பிடத் தகுந்த படம். கேயாரின் செல்லக்குட்டி.





    இந்தப் படம் பாண்டியில் சக்கை போடு போட்டது. வழக்கமாக சிவா மோகிக்கு ஹீரோ. (இவர் தன் நிஜ மனைவியை தண்ணி அடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்ததாக உலகத் தொலைகாட்சி வரலாறில் முதன் முறையாக பல தொலைக்காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை அளித்தன. சிறைத் தண்டனை கூட அனுபவித்தார் போல. இப்போது சில விளம்பரப் படங்களில் தலை காட்டி கொண்டிருக்கிறார்) இவருக்கு குர்தா எடுப்பாக இருக்கும்தானே கிருஷ்ணா! நடிகர் திலகம் பத்திரிக்கைகளுக்கு கதை எழுதும் கண் தெரியாத எழுத்தாளர். தேவருக்கு 'முதல் மரியாதை' தராத மாமியார். அடங்கிப் போகும் மூத்த மருமகள் ரேணுகா. அவர் கணவன் ராஜேஷ் தம்பி. மாமியாரின் கொழுப்பை அடக்கும் 'சின்ன மருமகள்' மோகி. அதை ரசிக்கும் நடிகர் திலகம். பெண்களை அதிகமாக கவர்ந்த படம். ஒருமுறை தான் பார்த்தேன். அதை நினைவில் வைத்து எழுதுகிறேன்.

    (அச்சா! நடிகர் திலகத்தைப் பற்றி இன்னைக்கு எழுதியாச்சு. எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லவோ அவர்!)

    அதே போல 'கண்மணி' படம் என்று நினைவு. மம்பட்டியான் மகன் ஹீரோ. மோகி திமிர் பிடித்த கல்லூரி மாணவி. நன்றாகவே செய்திருந்தார். ஒரு மாதிரி பூனைக்கண் அழகி நம் சின்னக் கண்ணனுக்கு பிடித்தாற் மாதிரி. நைஸாக பேசி விஷயத்தை கறந்து விட்டார் பார்த்தீர்களா?



    'கண்மணி' சி.கவுக்காக 'உடல் தழுவத் தழுவ' பாடல். பாடல் நன்றாக இருக்கிறது. அப்புறம் சி.க கோவிச்சுக்குவார். அப்ப சீன் நல்லா இல்லையென்று?

    Last edited by vasudevan31355; 24th May 2015 at 08:15 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #136
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 12

    புற்று நோயை , ஒரு குழந்தை என்று எண்ணி இவள் சுமக்கின்றாள் - அது அவளை சுமக்க ஆவலுடன் காத்திருக்கின்றது ... காதலின் பலனால் காதலித்தவனையே திருமணம் செய்துக்கொண்டவள் - சுமந்துகொண்டிருக்கும் தாய்மையினால் , தன் மரணத்தை கட்டிப்போட பார்க்கிறாள் . கற்பனையில் குழந்தை சிரிக்கின்றது - அவள் மனம் வானத்தில் மிதக்கின்றது - இவர்களை பார்த்து விதியும் சிரிக்கின்றது - என்ன அருமையான படம் ! அருமையான காதல் ஜோடி , அருமையான பாடல் - கண்களில் கண்ணீரை வற்ற வைக்கும் பாடல் இது - தாய்மையின் உச்சக்கட்டம் . கனவில் வரும் நிம்மதி , நிஜத்தில் வருவதில்லை


  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  9. #137
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 13

    என் தாய் சொன்ன ஒரு கதை - உழைத்து வாழவேண்டும் என்பதில் அவளிக்கிருந்த நம்பிக்கை என்னுள் இப்படி பரவி ஆலமரம் போல வளர்ந்துவிட்டது - மஹலக்ஷ்மியாக விளங்கும் அவளை வணங்குகிறேன் . அந்த தெய்வத்திற்கும் என்றும் என் நன்றி உரித்தாகுக -----



    அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்..ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார்..யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு .. இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர் .வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர் மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை ). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான் ) அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர் .மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று ..அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும் ..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் என்றான் .

    இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது..அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே .என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் . இடி இடித்தது மழை பெய்ய ஆரம்பித்தது நம்பிக்கை ஜெயித்து விட்டது .
    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்


  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #138
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு.

    எனக்கு பெரிய விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை இல்லை. என் கல்யாணமும் ஆகட்டும், என் மகன்களின் வர போகும் திருமணங்களும் ஆகட்டும், ஒரு திருமண ஒப்பந்தம்(சட்ட ஒப்பந்தம் இணைத்து),மணமக்களின் நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு விருந்து. பணபரிமாற்றங்களை வெறுப்பவன்.(வரதட்சினை,நகை, ETC ETC ,gifts )

    இரண்டு மகன்களுக்கும் உபநயனம் செய்யவில்லை.(எனக்கும் அவர்களுக்கும் ஜாதி முறையில் உவப்பில்லாததால்).கலப்பு மணங்களில் மிக்க உடன்பாடு. (நடக்கவும் போகிறது)பெரியார் ஜாபகம் வருகிறார். என்னையா கலப்பு மனுஷனுக்கும் மனுஷனுக்கும் தானே??!!!

    ஒரே விதிவிலக்கு .என் தாய் தந்தையர். அவர்களுக்கு 60, 70, 80 ஆகிய திருமணங்களை மிக மிக சிறப்பாக பிள்ளைகள் செய்தோம்.

    சமீபத்தில் எங்கள் அன்னையின் 80 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம்.அன்னையை மிகை படுத்தி சொல்வது உலக குறிப்பாக தமிழ் மரபு. எங்கள் அன்னையை பற்றி உள்ளதை சொன்னாலே மிக மிக மிகையாக தெரியும்.

    அந்த கால பட்டதாரி 50 களில். அம்மன் போன்ற ஒளி மிகு தோற்றம்.பாடகி.நடன வித்தகி. ஓவியம் தெரிந்தவர்கள்.ஆனால் மன வாழ்வில் புகுந்த வீட்டினால் மிகதொல்லைகள். பலவித கஷ்டங்கள். சொல்லவொணா துயரங்கள். எங்களுக்கு தாயாக,தந்தையாக இருந்து எங்கள் நால்வரையும் உயர்நிலைக்கு கொண்டு வந்தவர். ஆசிரியை. அதுவும் ஒரு சிறப்பான பொறுப்பான புத்திசாலி ஆசிரியை.எங்களுக்கு அவர் சிறு வயது முதலே தோழமையாக நின்றவர்.(என் தந்தையும்).யாரையும் தாழ்த்தி பேச கூடாது ,எல்லா தொழிலுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று போதித்ததுடன் ,சிறு வயதில் நாவிதர்கள்,கழிவறை தொழிலாளி இவர்களையும் அவர் ,இவர் என்று மரியாதையாக விளிப்பதுடன்,அவர்களுக்கு தண்ணீர் ,தேநீர் இவற்றை நாங்கள் புழங்கும் பாத்திரங்களிலேயே அளிப்பார். சாத்திர சடங்குகளில் நம்பிக்கை கிடையாது.எங்களுக்கு பத்து வயது வரை ஜாதி என்ன என்பதே தெரியாது.(பிறகு அந்த புண்ணியத்தை செய்தவன் மகேந்திரன் என்ற தி.மு.க நண்பன்) வேலைக்கு சென்றும் பிள்ளைகளான எங்களுக்கு ஒரு வேளை கூட தவறாமல் அற்புதமான சுவை உணவு. வேலையாட்களும் கிடையாது. அப்பப்பா எவ்வளவு கடும் உழைப்பு,மனத்துன்பங்கள்.நினைக்கும் போது இப்போதும் கண்ணீர் முட்டி நிற்கிறது.இவ்வளவும் இருந்தும் எல்லா வயதினரிடமும் சமமாக நட்பு பாராட்டி ,பல உலக விஷயங்களை விவாதித்து இன்றும் இளமையோடு ,ஆரோக்யத்தோடு வாழ்பவர். இன்னும் அவரும் என் தந்தையும் தனியாக வாழ்ந்தாலும் ,ஒரு நாள் கூட அவர்களிடமிருந்து எந்த உதவி கோரிய வேண்டுகோளும் எங்களுக்கு வந்ததில்லை.(நாங்கள்தான் நிறைய உதவி நாடுவோம்)

    அவர்களின் 80 வது பிறந்த நாளில் நான் எழுதி படித்த கவிதை.



    இவள் அன்னையல்ல.




    இவள் அன்னையல்ல. இந்தியாவின் அன்னைகளின் சித்தரிப்பு

    நகல்களின் விஸ்தரிப்பு , அத்தனை கோடியிலும் தனி இவள்.




    இவள் தெய்வமுமல்ல.




    இவளை மக்களிடம் இருந்து பிரித்து பீடத்தில் ஏற்றி ,சூடம் கொளுத்தி

    சிலுவையில் ஏற்றி தொழுது அண்ணாந்து பார்க்கும் மக்களை பெற்றவளில்லை




    இவள் ஈன்று புறம் தந்தவள் இல்லை.




    இவள் ஈன்று அகம் கொண்டவள். பசியாற மீனளிக்கும் அன்னை,தூண்டில் தர தந்தை

    குளத்தில் மீன் பிடிக்கும் வித்தை கற்க குரு என மூன்றுமாய் இவளே




    செல்ல துரையின் பட்டு பெண்ணிவள்.




    பாதம் பட்டால் நோகாது தேவலோக பஞ்சை தரை விரித்த தந்தை

    பாரதி சொன்னால் போதுமா, பாருங்கள் வித்தை கற்ற விந்தை பெண்ணை




    கல்லாத வித்தையாய் எதிர்நீச்சல் வித்தகியாம்




    அன்பின்மையால் சந்திக்கவொண்ணா சோதனைகள் சுமந்து தெப்பமென

    சுற்றம் கரையேற்றிய சீலத்தை செப்ப சீரிளமை தமிழால் இயலுமோ.





    அந்தரங்கம் தொந்தரவின் புனித பீடமல்ல என புனைநதவள்




    வாழ்வின் இருள் மறைவிடத்தில் பதுங்காமல் ,சூரிய ஒளியில் ,சுற்றியிருப்போர்

    சூழ வெளிப் படையான வெற்றி வாழ்வுக்கு விதையிட்டவள் இவளே




    ஆக்கி மட்டும் பார்த்தவள் அழித்தலை முற்றும் அறியாதவள்




    எங்கள் வாழ்வின் பொக்கிஷ அறைகளில் ,மனித எலும்பு கூடு , விடுங்கள்

    மிருகங்களின் எலும்பு கூட்டை கூட சேர விடாத அறச் சுற்றத்தின் ஆக்கமிகு தலைவி.




    தன்னை பிரதியெடுத்து மறு வெற்றி கண்டவள்




    நல்லதோர் வீணையாய் நலன்கெட்டும், மெல்லதோர் மாற்று வீணைகளாய் மக்களை

    சொல்லதோர் பிரதிகளாய் ,நாதம் கூட்டி நாலு பேர் இசைக்க,விசையுறு பந்தாகியவள்




    ஒப்பாரும் மிக்காரும் இல்லா திறனாளியிவள்




    ஒப்பிடுங்கால் மக்களாகிய நாங்களுமே மட்டு திறனாளிகளே ,இவள் கூட்டு

    திறன்களை கொள்ள கௌரவர் அனைய கூட்டம் வேண்டும் ,நாங்களோ நால்வரே




    தமிழையொத்த இளமை புதுமை இனிமை




    அகவை எண்பதாம் , எட்டிலிருந்து எண்பது வரை யார் வரினும் இவள் அகவை அவரினும்

    மிக்காது ஒன்றிரண்டை கழித்து தான் கொள்பவள் ,தமிழின் உண்மை தகைமகள்




    எனக்கு சுயமில்லாது மாற்று பெயர் மட்டும் இட்டவள்




    அன்னையின் நடமாடும் நிழலே நான் சுயத்தை தொலைக்காத இரவல் சுயமாய்

    தும்மலிலும் மூச்சிலும் பேச்சிலும் கலையிலும் வாழ்வின் அலையிலும் இவளின் குறை பிரதியாய்
    Last edited by Gopal.s; 24th May 2015 at 08:39 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes RAGHAVENDRA, uvausan liked this post
  13. #139
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    உடுமலை நாராயணகவியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி! கவி இயற்றிய பாடலில் ஜனரஞ்சகமான எனக்கு பிடித்த பாடல்.

    'நல்ல தம்பி' படத்திலிருந்து மதுரம் பாடும் எட்டு...ஏழு.... ஆறு.

    நடிகர் திலகமே தெய்வம்

  14. #140
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மோகினி பற்றி மேலும் தகவல்கள்

    என் அம்மா வேலை செய்த பூதான் போர்டில் அவருடன் தட்டச்சு அடிப்பவர் திரு செளந்தர்ராஜன். அவரும் இன்னொருவரும் சேர்ந்து தயாரித்த படம் ஈரமான ரோஜாவே .. அதில் நடிக்க புது முகங்களை தேடிக்கொண்டிருந்தனர். என் வகுப்பு முஸ்லிம் மாணவி தேர்வானார் . ஆனால் கடைசி நேரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல பின் மோகினியின் புகைப்படம் கிடைத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.

    நல்ல அழகு. ரஜினியே பாராட்டினாராம். நல்ல அழகும்மா நீ என்று.
    மூக்கும் முழியுமாக நன்றாகவே இருந்தார்.
    பல படங்களில் நடித்தார்.
    தொலைக்காட்சியிலும் நடித்தார். அதுவும் பாலச்சந்தரின் காதல் பகடையை மறக்க முடியுமோ
    மலையாளத்தில் நிறைய நடித்தார். கொஞம் நன்றாகவும் நடிப்பார்.

    சரி மோகினியின் சில பாடல்கள்

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாலு ஸ்வர்ணலதாவின் குரல்களில்





    மலேசியா ஜானகி குரல்களில் நல்ல பாடல்


    மனோ ஜானகியின் குரல்களில் எனக்கு பிடித்த கலகலக்கும் மணியோசை



    காதல் பகடை


    ஷெர்லாக் மாமி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •