Page 136 of 400 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1351
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 106

    பாகம் 2 - தந்தை


    உண்மை சம்பவம் 15


    பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன .



    நேற்றிரவு,

    தூங்கும் முன் என் மகன் என்னிடம் கேட்டான் .

    "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....

    அது எப்ப அப்பா தூங்கும்?"

    "அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

    "எப்ப தூக்கம் வரும்பா?"

    "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

    "கொசுக்கு வீடு எங்கப்பா?"

    "அதுக்கு வீடே இல்லை..."

    "ஏம்பா வீடே இல்லை?"

    "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

    "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."

    "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."

    "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."

    "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."

    "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"

    "கடவுள்..."

    "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"

    "கடிக்காது. கண்ணா .."

    "ஏம்பா கடிக்காது?"

    "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."

    ஏய் ! தூங்க மாட்ட நீ - நாளை அப்பாவிற்கு மீட்டிங் இருக்கு - என் மனைவியின் உண்மையான புலம்பல் ----

    "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"

    "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."

    "கடவுள் நல்லவராப்பா?"

    "ரொம்ப நல்லவர்...."

    "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

    "தப்பு செய்ததால்தானே கொசுவை .அடிக்க வேண்டியுள்ளது ." - கண்ணா - ஒரு பாட்டு பாடட்டுமா ??" - கண்ணன் விடுவதாக இல்லை

    "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

    "அதுக்கு பசிக்குது..."

    "கொசு இட்லி சாப்பிடுமா?"

    "அதெல்லாம் பிடிக்காது..."

    "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"

    " குடிக்காது கண்ணா ..."

    என் மனைவி பிரம்பைத் தேடிக்கொண்டிருந்தாள் , என்னை அடிக்கவா , கண்ணனை அடிக்கவா என்று தெரியவில்லை ....

    "ஒரே ஒரு கேள்வி அப்பா ?"

    "கேளு செல்லம் "

    "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

    "அதுக்கு பல்லே இல்லை..."

    "பிறகு எப்படி கடிக்கும்?"

    கேள்விகள் நிற்கவில்லை - என் உறக்கம் நின்று போய்விட்டது - 5 மணிக்கு வைத்த அலாரத்தை தட்டி நானே எழுப்பினேன் ..... எத்தனை கேள்விகள் கண்ணனிடம் ? எவ்வளவு ஆர்வம் கேள்வி கேட்பதில் - பொறுமையை இழந்தால் இந்த மழலையை அனுபவிக்க முடியுமா ? பொறுமை இல்லையெனில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் என்ன அர்த்தம் ? இந்த அரிய நாட்கள் பிறகு எனக்கு கிடைக்காமல் போகலாம் -- டைரியில் எழுதிக்கொண்டேன் ------

    காலம் வேகமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கு எடுத்துக்கொண்டதைப்போல ஓடியது . இன்று எனக்கு வயது 80.

    கண்ணனுடன் போஸ்டன் இல் இருக்கிறேன் - கண்ணனும் , அவன் மனைவி இந்துவும் இங்கு வேலை செய்கிறார்கள் - என் மனைவி எனக்கு விடை கொடுத்து 5 வருடங்கள் ஓடிவிட்டன . கண்ணனின் வீட்டில் இருக்கும் ஒரு அவுட் ஹௌசில் குடியிருப்பு - எனக்கு கம்பெனி நான் எழுதிய இந்த டைரியும் , கடந்த கால எண்ணங்களுமே ------ கண்ணன் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் என்னுடன் 10 நிமிடங்களாவது செலவழிப்பான் -- மற்ற நாட்களில் அவனை பார்ப்பது முடியாத காரியம் .. அன்று ஞாயிறு - கண்ணன் என்னை பார்க்க வரும் வேலை --- 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன் , வாக்கிங் ஸ்டிக் ரெடி -- மெதுவாக மழைச்சாரல் வேறு - கண்ணன் என்னிடம் வருவதை மழை தடுத்து விடுமோ ?? மழையை சென்னை தமிழில் திட்டினேன் - போஸ்டன் மழை - அதற்க்கு எங்கே சென்னை தமிழ் புரியப்போகிறது - திட்ட திட்ட மழை அதிகமானது .


    கண்ணன் வந்துவிட்டான் --- அப்பா மழையாக இருக்கிறது - என் காரில் கொஞ்ச தூரம் போய்விட்டு வரலாம் என்றான் - கண்ணனுடன் வெளியில் போவது எனக்கு முக்கியமில்லை - அவனுடன் 5 நிமிடமாவது சேர்ந்து இருக்க வேண்டும் - இதோ இங்கேயே இருக்கலாம் --- கட்டிலை சுற்றி மருந்துகளாக இருக்கிறது - அவனை எப்படி இங்கே உட்க்கார சொல்வது - மனம் வரவில்லை -- என் டைரியுடன் புறப்பட்டேன் .. டைரி எதற்கு அப்பா - வெறுமன வாருங்கள் ...... டைரி என் கையில் தான் இருக்கும் ---- காரில் அமர கண்ணன் உதவி தேவைப்பட்டது .... பேசாமல் ஒட்டி செல்லும் அந்த சாரதியிடம் சில கேள்விகளை கேட்டேன் - என் எல்லா கேள்விகளுக்கும் உணர்ச்சியற்ற ஒரே பதில் " ம்ம் " - கார் ஒரு இடத்தில் நின்றது - சற்றே இறங்க முயற்சித்தேன் - கண்ணனின் சூடான வார்த்தைகள் அந்த காரின் radiator யை விட அதிகமாக என்னை தாக்கியது ... கூட்டி செல்வதை ஒரு கடமையாக கருதிகிறான் கண்ணன் - அவனுடன் நேரத்தை செலவழிப்பதை பாக்கியமாக கருதுகிறேன் நான் ..... வீட்டுக்குத் திரும்பினோம் - டைரியை மறந்து காரில் விட்டு விட்டேன் .... அடுத்த ஞாயிறு தான் அது எனக்கு திருமா கிடைக்கும் ..... கண்ணனை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை - சற்றே கண்களை மூடிக்கொண்டேன் ----

    "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" --- கண்ணனின் மழலை கேள்விகள் காதுகளில் ரீங்காரம் இட்டன ....... " அப்பா ! ---- " தடித்த குரல் - கண்ணனாக இருக்குமோ ? கண்களைத்திறந்தேன் - அங்கே கண்ணனும் இந்துவும் நின்று கொண்டிருந்தார்கள் - இவ்வளவு சீக்கிரமாகவா இன்னொமொரு ஞாயிறு வந்து விட்டது ? -- அப்பா உங்கள் டைரி --- முதல் தடவையாக படித்தேன் --- ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டான் - எவ்வளவு தவறு செய்து விட்டேன் ! என்னை வளர்க்க என்னவெல்லாம் தியாகங்கள் செய்தாய் - எவ்வளவு கேள்விகள் உன்னை கேட்டு புனிதனானேன் -- அவன் வார்த்தைகளை கண்ணீர் தடுத்தது ----- இந்த ஒரு நாளுக்காக என் வயது 90 ஆக மாறினாலும் எனக்கு கவலை இல்லை --- எனக்கு என் கண்ணன் கிடைத்துவிட்டான் ---- அன்று முதல் ஞாயிறு தினமும் வந்தது.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1352
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 107

    பாகம் 2 - தந்தை


    உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
    அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

    இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
    என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

    தந்தையே உலகம் என்று சொல்லும் மகள் - அவளையே சுற்றி வரும் தந்தை - இந்த உறவை புரிந்துக்கொள்ள யுகங்கள் தேவைப்படும் - பத்து மாதங்கள் சுமக்கும் தாயின் அன்பு பேசப்படுகிறது - நெஞ்சத்தில் , உயிரில் , எண்ணங்களில் வாழ்க்கை முழுவதும் மகளை சுமக்கும் தந்தை ஏனோ காணாமல் போய் விடுகிறான் --- வேதங்கள் வணங்கும் அந்த உறவை இந்த பாடல் எதிரொலிக்கும் ----


  4. Likes Russellmai liked this post
  5. #1353
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 108

    பாகம் 2 - தந்தை


    வெறும் பாசம் கொடுத்து மகன் கெட்டு போய் விடக்கூடாதே என்று கண்டிப்பும் சேர்த்து மகனுக்கு ஊட்டுகிறான் -- அந்த கண்டிப்பு அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகரித்துக்கொண்டே போகிறது - கிடைக்கும் வெற்றியெல்லாம் அவன் சிந்திய வேர்வைகளிளிருந்து என்பதை மகன் உணரும் போது அவன் அப்பா இருந்த இடம் " TO LET" ஆகி விடுகிறது ------


  6. Likes Russellmai liked this post
  7. #1354
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 109

    பாகம் 2 - தந்தை


    மகளிடம் தன் உயிரை வைத்திருக்கிறான் இவன் - அவன் மனைவியோ மனதை வேறு யாரிடமோ வைத்திருக்கிறாள் - கணவன் சந்தர்ப்பவச கொலை காரன் - மானத்தை இழக்கிறான் கூடவே மகளின் பாசத்தையும் --எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட இவனால் மகளின் வெறுப்பை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை - எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீ தான் என் அன்னை - என் மகளே என்கிறான் ---- மகள் புரிந்துகொள்கிறாள் இறுதியில் - கங்கையில் நீராட வேண்டியவள் தந்தையின் கண்ணீரில் தன் தவறுகளை கழுவிக்கொல்கிறாள் - நடிப்பும் எதார்த்தமும் போட்டி போட்டுக்கொண்டு சிவாஜி என்ற அந்த மாமனிதருக்குள் ஒளிந்துகொள்ளும் ......

    Last edited by g94127302; 24th June 2015 at 04:27 PM.

  8. Likes Russellmai liked this post
  9. #1355
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு'


    கோபால் சார்!

    அடேங்கப்பா!

    நம் எத்தனை நாள் கனவு நிறைவேறுகிறது?


    எட்டு வயதில் சிலோன் வானொலியில் கேட்டு ரசிக்கத் துவங்கிய பாட்டு. கேட்டுக் கேட்டு மனதில் தங்கிப் புதைந்து போனது. அடிக்கடி கோபால், ராகவேந்திரன் சார் போன்றவர்களுடன் பேசும்போது பூதாகாரமாக வெளியே புறப்பட்டு வரும். அன்று முழுக்க முழுக்க ஆட்சி செலுத்தி விட்டு பின் கொஞ்சம் அடங்கும். இது போல நிறைய தடவை. சம்பந்தம் இல்லாமல் நடு இரவில் ஞாபகத்திற்கு வந்து உயிரை வாங்கும். தூக்கம் கெடுக்கும். அடுத்த நாள் டூ வீலரில் செல்லும்போது கூட பாடலின் முதல் நான்கு வரிகளை உதடு உச்சரித்துக் கொண்டே இருக்கும். பாடல் இடம் பெற்ற படமோ அபூர்வமானது. நடுவில் பார்க்கவே சந்தர்ப்பம் கிடைக்காதது. பாடலும் அப்படியே.

    கோபாலும் நானும் பேசும்போது இப்பாடலைப் பற்றி நிறைய தடவை அகமகிழ்ந்து பேசியிருப்போம். இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடி வேறு அமர்க்களம். இருவருக்கும் ரவியைப் பிடிக்கும். அவர் சேட்டைகள் மிகவும் பிடிக்கும்.

    எப்போது கிடைக்கும் என்று ஏங்கியிருந்த அந்தப் பாடல் இப்போது தேடுகையில் காணொளியாக கிடைத்தது.





    'மெல்லிசை மன்னர்' இசையமைத்த 'ஓடும் நதி' படத்தில் பாடகர் திலகம் பாடிய பாடல். ரவி மனைவி ஷீலாவுடன் துள்ளல் ஆட்டம் போட்டு பாடும் பாடல்.

    வரிகள் வளமானவை. ரவி உருவத்தில் திலகத்தின் ஜெராக்ஸ் என்றால் இப்பாடலில் உடையிலும். உள்ளே பனியன் தெரிய வெளியே அதே மெலிதான ஷர்ட். பாடலின் ஆரம்பத்தில் கால்களை முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாக வளைத்து சுழற்றியபடியே பின்னால் செல்வது பின்னல். இது அவருக்கே உரித்தானது.

    ஷீலாவுடன் நெருக்கம் அதிகம் தெரியும். ரவியிடம் இன்னொரு அம்சம் பிடிக்கும். அடிக்கடி நிறைய செய்வார். பாடலின் போது லேசாக மார்பு குலுங்க ஷோல்டர்களைத் தூக்கி ஒரு வசீகரச் சிரிப்பை உதிர்ப்பார். ரொம்ப அழகாய் இருக்கும். முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கி இரண்டாவது வரியின் போது அதாவது 'தன்னை நடக்கவிட்டு' எனும்போது இதை நன்றாக கவனிக்கலாம். முடிந்தவுடன் வரும் இசையில் சுழன்று ஆட்டம் போடுவதும் ஜோர்தான். இதுவும் பின்புறமாகத்தான்.

    'இழுத்துப் போடுது
    ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்'

    வரிகளில் ஷீலாவின் ஜடையைப் பின்பக்கம் கைகளால் இழுத்து சுற்றியபடியே பின்னாலேயே ஒரு ஸ்டெப் வைத்து அப்படியே அள்ளுவார். பின்னால் வரும் ஸ்டெப்களும் சர்வ சாதாரணமாக அலட்சியம் காட்டும்.

    நீளமுக ஷீலா சீலா மீன் போல் வழு வழு. குட்டைப் பாவாடையுடன் மிஸஸ் ரவிச்சந்திரன் நல்ல ஜோடி.


    டி.எம்.எஸ் இளமை ததும்ப அடி பின்னி எடுத்திருப்பார்.

    இந்தப் பாடலை சற்று வித்தியாசப் படுத்தியிருப்பார் குரலில். அதாவது மூக்கடைத்த ஜலதோஷம் பிடித்தவர் குரல் எவ்வாறு இருக்குமோ அதே போல பாடியிருப்பார். ஆனால் அவ்வளவு அழகாக இருக்கும். டியூனோ ரொம்ப ரொம்ப அழகு.

    அதே போல மூன்று சரணங்களிலும் 'ஒஹஹோ' போட்டு வார்த்தைகளை திரும்ப உடன் சேர்ப்பது இனிமையிலும் இனிமை.

    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று

    ஒஹஹோ வண்ணங்கள்
    ஒஹஹோ எண்ணங்கள்

    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல

    இப்படி.

    ஒரு இடத்தில் 'ஒஹஹோ..ம்ஹூஹூம்' என்று அர்த்தமே இல்லாமல் அசத்தல் ஹம்மிங்.

    இந்தப் பாடலில் ஒரு வரி ரொம்ப அமர்க்களம்.

    'அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல'

    கவிஞன் கலக்கிட்டான்யா.

    ('நான்தான் உன்னிடம் முழுசாக தஞ்சம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டேனே.. அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பிகு? அடிமையானவன் கிட்ட போய் ஆதிக்கம் செய்யலாமா?')

    சோமபானம், சுரா பானம் எல்லாம் இந்தப் பாட்டுகிட்ட என்ன பண்ணும்? டாஸ்மாக்கையும் மிஞ்சும் டக்கர் பாட்டு.



    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    வைரத்திலே தட்டு
    மலர்களிலே மொட்டு
    பறவைகளில் சிட்டு
    பறக்குதடி பட்டு
    தரையில் நாட்டியம்
    ஆடுது ஆடுது பெண் ஒன்று
    இடையின் கோலத்தைத்
    தேடுது தேடுது கண் ஒன்று

    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று
    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    பூவிதழோ கிண்ணம்
    புன்னகையோ மின்னும்
    மாந்தளிரோ கன்னம்
    மனமில்லையோ இன்னும்
    இழுத்துப் போடுது
    ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
    வளைத்துப் போடுது
    ஆசையில் ஓடிய எண்ணங்கள்

    ஒஹஹோ..ம்ஹூஹூம்
    ஒஹஹோ..ம்ஹூஹூம்
    ஒஹஹோ வண்ணங்கள்
    ஒஹஹோ எண்ணங்கள்

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    மரகதப் பூ மஞ்சம்
    மணக்குதடி நெஞ்சம்
    விருந்து கொள்வேன் கொஞ்சம்
    விழுந்து விட்டேன் தஞ்சம்
    விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது
    கண்ணல்ல
    அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள்
    பெண்ணல்ல
    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல
    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு


    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks Gopal.s thanked for this post
    Likes Russellmai, adiram, uvausan, Gopal.s liked this post
  11. #1356
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    எழுந்தது முதலே இன்று நல்ல சகுனம். காலையில் நடிகர்திலகத்தின் திருவிளையாடல் அவதாரத்தை தரிசித்து கண் முழித்தேன்.

    கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் அவதரித்த திருநாள். நண்பர் மகேந்தரனுடன் 30 நிமிட அரட்டை ,இங்கே வந்து பார்த்தால் உன் என்னதான் முடிவு. கண் மூடி திறக்கும் நேரம் தங்கள் சலங்கை கட்டி.

    ஒரு பெரிய வியாபாரம் முப்பது நாட்களாக இழுத்தது முடிவுக்கு வந்து பேரு மகிழ்ச்சி. you tube திறந்தால் நான் நாளாக தேடும் ரவி-ராஜஸ்ரீ இணையில் வந்த நீயும் நானும் படத்திலிருந்து யாரடி வந்தார்.

    இன்றுதான் உனக்கு பிரியாமான roshomon எழுத போகிறேன்.

    இதோ யாரடி வந்தார்.எல்.ஆர்.ஈஸ்வரி கிழி கிழி என்று கிழித்த பாடல்.(டி.எம்.எஸ் repeat சுமார்தான்) ரவி வித்யாசமான கெட்-அப் . கிட்டத்தட்ட Modern Tarzan போல.நம்ம இன்றைய ஹீரோதானே மியூசிக் ?(எம்.எஸ்.வீ?)

    Last edited by Gopal.s; 24th June 2015 at 05:58 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  13. #1357
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Roshomon - Akira Kurosawa -Japanese -1950

    Dont believe everything you hear .There are always three sides to a story. Yours,Theirs and the Truth........

    பல பாத்திரங்கள்.பலவித மாற்று கூற்றுக்கள்,தன சுயநலமா அல்லது
    தற்காப்பா ,ஒன்றுக்கொன்று முரண்பட்டு மாறுபடுவது ,அதுவும் பேச வந்த அல்லது விசாரணைக்கு வரும் ஒரே விஷயத்தை பற்றி. இந்த படம் உண்மையை கண்டறிவதில் ,அதன் இறுதியை இறுதி செய்வதில் அலையாமல் நிஜத்திற்கு பன்முகங்கள் உண்டு என்று காட்டிய படம்.

    இந்த படம் ஒரு period Drama என்ற வகை.

    கிகோரி என்ற விறகு வெட்டி Roshomon Gate (City Gate of Kyoto )என்ற இடத்தில் ஒரு வழிப்போக்கனுடன் இளைப்பாறும் போது , ஒரு கொலை செய்ய பட்டு கிடந்த சமுராய் உடலை பார்த்ததாக சொல்வான்.அங்கு வரும் இன்னொரு மத போதகர் சமுராய் தன மனைவியோடு காட்டு வழி போவதை பார்த்ததாக கூறுவார்.

    இது விசாரணைக்கு வரும். முதலில் கொள்ளை காரன்(தஜமாறு) சாட்சி சொல்வான். தன மனைவியோடு போகும் சமுராயை ,பழைய வாட்கள்,கேடயங்கள் சேகரத்தை பார்க்கும் சாக்கில் அழைத்து அவனை கட்டி போட்டு அவன் மனைவியை (கோடரியால் தற்காத்து கொள்ள முயலுவாள்) Seduce செய்து கணவன் எதிரிலேயே உறவு கொண்டு விடுவான்.ஆனால் இருவர் எதிரில் இந்த நிகழ்ச்சி நடந்ததால் ,அவமான படாமல் தப்பிக்க ,தன் கணவனுடன் போராடி அவனை கொல்ல சொல்வாள்.தஜோமொரு ,சமுராயை ஜெயித்து கொன்று விட , அந்த விலையுயர்ந்த கவசத்தோடு மனைவி ஓடி விடுவாள்.

    பிறகு அந்த மனைவியின் சாட்சி.கொள்ளைக்காரன் கற்பழித்து விட்டு ஓடி விட, தன்னை மன்னிக்க சொல்லி கணவனை கெஞ்சுவாள்.தன்னை கொன்று விட சொல்லுவாள். ஆனால் ஒரு வெறுப்பு கலந்த உதாசீனத்தொடு கணவன் பார்க்க ,மயக்கமுற்று விடுவாள்.எழுந்து பார்த்தால் மார்பில் கோடரியுடன் கணவன். அதை எடுத்து தன்னை மாய்த்து கொள்ள முயன்று தொல்வியுருவாள்.

    பிறகு ஒரு மீடியம் மூலம் ,இறந்த சமுராயை கூப்பிட்டு அவனை சொல்லச் சொல்ல ,அவன் வேறு விதமாக சொல்லுவான்.வன்புணர்ச்சி செய்த கொள்ளைகாரன் ,தன்னோடு வந்து விடும் படி சமுராய் மனைவியை அழைக்க அவள் ஒப்பு கொண்டு கணவனை கொன்று விட சொல்கிறாள்.அதனால் வெறுப்படையும் தஜமுறு ,அவளை கொல்வதா வேண்டாமா என்று யோசித்து,சமுராயை விட்டு விட்டு சென்று விடுகிறான்.சமுராய் வெறுப்பில் தன்னை தானே மாய்த்து கொள்ள, அந்த கோடரியை யாரோ ஒருவர் மார்பிலிருந்து எடுப்பார்.

    விறகு வெட்டி ,எல்லா கதையும் தப்பு என்று மறுத்து,தான் கண்டதாக ஒன்றை சொல்லுவான். தஜமுறு ,சமுராய் மனைவியை மணந்து கொள்ளும் படி கேட்க, அந்த பெண் சமுராயை தப்பிக்க விடுகிறாள்.ஆனால் கேட்டு போன பெண்ணிற்காக போராட கணவன் மறுக்க ,இருவர் ஆண்மையையும் பழித்து போராட தூண்டுகிறாள் அப்பெண்.சண்டை நடக்கும் போது தப்பியோடும் அப்பெண்ணை ,வென்ற கொள்ளை காரனால் பிடிக்க முடியவில்லை.

    அப்போது விறகு வெட்டி,வழிப்போக்கன்,மத போதகர் ,அனாதையாக விடப்பட்ட குழந்தை ஒன்றை பார்க்க,அதன் ஆடையை திருடி போக நினைக்கும் வழிபோக்கனை கண்டிப்பான் விறகு வெட்டி.வழிபோக்கனோ, சாட்சி சொல்ல முன்வராத விறகு வெட்டியே கோடாலியை திருடியவன் என்று குற்றம் சாட்டி ,ஒரு திருடன் இன்னொருவனை குறை சொல்ல தகுதியில்லை என்று போய் விடுகிறான்.மத போதகனோ எல்லோரும் சுயநலமாக செயல் படுவதால் மனிதத்தில் நம்பிக்கை இழப்பதாக நொந்து கொள்வான். பிறகு விறகு வெட்டி,அந்த குழந்தையை எடுத்தணைத்து,தன்னுடைய ஆறு குழந்தைகளுடன் ஏழாவதாக வளர்த்து கொள்வதாக எடுத்து போவான். மனிதம் வாழும் நம்பிக்கையுடன் மழை நின்று மப்பு விட்டு சூரியன் தோன்றுவதில் படம் முடியும்.

    இந்த பட இயக்குனர் அகிரா குரோசவா ,மேற்கத்திய நாடுகளால் பெரிதும் கொண்டாட பட்டவர். பலருக்கு ஊக்கு சக்தியாக,வழிகாட்டியாக விளங்கிய இயக்குனர்.இவரின் ikiru ,idiot ,seven samurai ,red beard முதலிய படங்கள் குறிப்பிட பட வேண்டியவை. இவர் திரைக் கதையே படத்தின் ஜீவன் என்று நம்பியவர். ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியவர். திரைக்கதை எழுதுவது,design மேற்பார்வையிடுவது,நடிகர்களுக்கு ஒத்திகை ,ஒவ்வொரு ஷாட்டையும் தீர்மானிப்பது,எடிட்டிங் ,முதலான எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவாராம்.

    உதாரணமாக seven samurai படத்துக்காக ,ஆறு பெரிய புத்தக குறிப்புகள்,சமுராய்களின் நடை,உடை,பாவனை,சாப்பாடு பேச்சு ,நடத்தை (அவர்கள் எப்படி காலனி அணிவார்கள் என்பது உட்பட)அனைத்து குறிப்புகளை எடுத்ததுடன் ,பல சமுராய் குடும்பங்களை அழைத்து ,நடிப்பவர்களை திருத்த சொல்வாராம்.

    இவருக்கு நடித்த, இசையமைத்த,கேமரா இயக்கிய எல்லோரையும் குரோசவா குழு என்றே அழைப்பார்களாம். கேமரா ,எடிட்டிங்,இசை எல்லாவற்றிலும் பல புதிய நுணுக்கங்களை கையாண்டவர்.சப்தங்களை அளவறிந்து பயன்படுத்தியவர்.மியகாவா கேமரா . ஹயசாகா இசை. Toshiro miffune ஆஸ்தான நடிகர்.(பல நடிப்பு முறைகளில் நடிகர்திலகத்தை நினைவு படுத்துவார்)

    வெளிச்சம்- நிழல்-இருள் எல்லாம் குறியீடுகள். பல பல சிந்தனையை தூண்டியவை.

    ஆனால் இவர் நேரடி கதைசொல்லி, மேற்கத்திய பாணியில் சமரசம் செய்தவர், ஜப்பான் உலக போரில் அடைந்த அவமானத்தை சமாளிக்கும் போக்கில் படமெடுத்தவர்,படங்களில் பெண்களை போற்றாதவர் ,இவரை விட யசிஜிரா ஒசுவே சிறந்த இயக்குனர் என்று மேற்கத்திய விமர்சகர்களாலும், ஜப்பான் விமர்சகர்களாலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர்.

    எந்த விமரிசனமும் ,அதீத திறமைசாலியான இவர் புகழை குறைக்க முடியாமல்(,(நம் நடிகர்திலகம் போல) இவர் நூற்றாண்டின் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார்.
    Last edited by Gopal.s; 24th June 2015 at 08:31 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes adiram, vasudevan31355 liked this post
  15. #1358
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்.



    அனுபவித்து ஒவ்வொரு எழுத்தாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கதையை மற்றவருக்கு வாயால் சொல்வது கூட ரொம்பக் கடினம். ஆனால் அகிரா கதை சொல்லும் தேர்ச்சி அதே நேர்த்தியை உங்கள் எழுத்தில் காணுகிறேன். இது வெறும் புகழ்ச்சியோ அல்லது தூக்கி வைத்துக் கொண்டாடுதலோ இல்லை. சகல திறமையும், உணமையான ரசிப்புத் தன்மையும் கொண்ட ஒரு அற்புதமான ரசிகனுக்கு, விமர்சகனுக்கு ஒரு ரசிகனாக நான் தரும் மரியாதை. ஏற்றுக் கொள்ளுங்கள். மய்யத்தின் கொண்டாடப்படவேண்டிய மகுடம் நீங்கள். உங்களால் உலக சினிமாக்களின் தரங்களைப் பற்றி இப்போது இலகுவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆத்ம நண்பனாக நான் பெருமிதம் கொள்கிறேன்.


    Toshiro miffune



    'Roshomon' பற்றி என்ன சொல்ல? எனக்கு 10 பக்கங்கள் கூட போதாது. ஒரே வார்த்தை. இணையே இல்லா உலகத் தரம். அவ்வவளவுதான் சொல்ல முடியும். இதில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் seven samurai படத்திலும் பங்கு பெற்றிருப்பார்கள் முற்றிலும் வித்தியாசமாக. இல்லையா?
    Last edited by vasudevan31355; 24th June 2015 at 08:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #1359
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தேங்க்ஸ் கோ.

    யாரடி வந்தார்? எம்.எஸ்.விதான் தந்தார்.

    கோ,

    ஒன்று கவனித்தீர்களா?

    ராட்சஸி 'ஹாய்லல்லோ... ஹாய்லல்லோ... ஹாய்லல்லல்லோ' முடித்தவுடன் அருமையான கிடார் பீட் ஒன்று மூன்று முறை வரும். (டிங் டிங் டிங் டங்க்... டிங் டிங் டிங் டங்க்... டிங் டிங் டிங் டங்க்) சொக்கிப் போகணும் கோ. இது போல நிறைய சங்கதிகள் 'ஒளி விளக்கு' படத்தின் 'யய்யய்ய... நான் கண்ட கனவினில் நீ இருந்தாய்' மற்றும் 'ருக்குமணியே பர பர பர' பாடல்களில் பிரம்மாண்டமாய் உண்டு.

    இதே 'நீயும் நானும்' படத்தில் ராட்சஸி மிகப் புதுமையாய் பாடிய பாடல் ஒன்றும் உண்டு. வழக்கம் போல ரகளை அல்லாமல் வேறென்ன?

    'லவ் ஈஸ் எ கேம்பிள்' (இதையே 4 முறை வெவ்வேறு விதமாக ராட்சஸி உச்சரிக்கும் ஆச்சர்யம். அதுவும் நான்காவது முறை செமையாக இழுத்து (கே....ம்பிள்) உச்சரிப்பது ஓஹோ!) என்று ஆரம்பித்து ஆர்ப்பாட்ட பாங்கோ மற்றும் கிடார் பின்னியில் 'இரவிலே ஒரு உலகம்...இருவரிடையே கலகம்' என்று தொடரும். ரவி, நாகேஷ் காபரே மங்கை விஜயஸ்ரீயுடன் ஆடுவது 'சுகம் எதிலே' 'பறக்கும் பாவை'யை நினைவூட்டும்.

    பாருங்களேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes adiram, Russellmai, rajeshkrv liked this post
  18. #1360
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Haridas (1944) ----MKT

    Rajesh,
    Here is another MKT song from Haridas ((1944).

    ennudalthanil ee moithapodhu ungaL kaNNil muL thaithaarpol......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  19. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •