Page 128 of 400 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1271
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    La Strada -Federico Fellini - 1954.

    வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.

    Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.

    இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.

    fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .

    இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1272
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு வணக்கம்.

    வேலை கடுமையாக இருந்ததால் சில நாட்களாக திரிக்கு வர முடியவில்லை. மன்னிக்கவும்.

    வாசு சார்,

    ‘ஆயிரம் ஆயிரம் அற்புத காட்சிகள் எங்கும்’ மிகவும் அபூர்வமான பாடல். இதுபோன்ற அடிக்கடி நினைவுக்கு வராத பாடல்களை தேடி எடுத்துக் கொடுப்பதிலும் அதற்கான உழைப்பிலும் உங்களை யாரும் மிஞ்ச முடியாது. பொன்னென்றும் பூவென்றும் பாடலும் தங்கள் விளக்கமும் அருமை.

    ‘நீராழி மண்டபத்தில்’ பாடல் பதிவுக்கும் நன்றி. அந்த பதிவை திரு.எஸ்.வி. எங்கள் திரியில் மீள்பதிவு செய்து, அதை நான் மீண்டும் எடுத்துப் போட்டு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தேன். பார்த்தீர்களா?

    கிருஷ்ணா சார்,

    நடிகர் சிவக்குமாரின் பேஸ்புக் பக்கம் பதிவு சுவையாக இருந்தது. அப்போதைய காபி, சாப்பாடு, முடி திருத்தும் கட்டணம் விலையை பார்த்தால் பெருமூச்சு வருகிறது. நன்றி.

    ரவி சார்,

    //இன்று மருத்துவ மனையில் பிறப்பதால் அடிக்கடி மருத்துவ மனைக்கு போகிறோம்//
    சிந்திக்க வைக்கும் வார்த்தைகள். நீங்கள் கூறியுள்ள கதைகளும்.

    கருவின் கருவை முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்ததற்கும் அசாத்திய உழைப்புக்கும் பாராட்டுக்கள்.

    அன்பே வா படத்தில் சிம்லாவுக்கு ஓய்வுக்காக செல்லும் மக்கள் திலகம், பர்ஸில் பணத்தை கத்தையாக திணிப்பதை பார்த்து திரு.நாகேஷ் அவர்கள் , ‘சார், கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. நமக்கு தொழில் நோட்டு அடிக்கிறதா?’ என்று தியேட்டரே சிரிப்பால் குலுங்க கேட்பார். அது மாதிரி நான் கேட்கிறேன். ‘உங்களுக்கு சைடுல நவரத்ன பிஸினஸ் உண்டா?’ (சாரி சார். மன்னிக்கவும். விளையாட்டுக்கு கேட்டேன்) நவரத்ன மாலையில் பாடல்களோடும் கருத்துக்களோடும் இல்லாமல் நவரத்னங்களைப் பற்றியும் அபூர்வ தகவல்களை தந்து அசத்தி விட்டீர்கள். பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.

    கல்நாயக்,

    எங்கே ரொம்ப நாளா காணோம்? பூ பாடல்கள் என்னாச்சு? வேண்டுமானால் நீங்கள் சின்னவர்தான் என்பதை ஒப்புக் கொண்டுவிடுகிறேன். கூச்சப்படாமல் வாருங்கள்.

    குமார் சார்,

    இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட தங்களின் தங்கத்தோணியிலே பதிவும் மற்றும் சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களின் பதிவும் அருமை.

    சின்னக்கண்ணன்,

    நீங்கள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிப்பதாய் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. Likes vasudevan31355 liked this post
  6. #1273
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...

    ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். பி.பி.எஸ். தேன்குரலில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் பாடும் இளமை கொலுவிருக்கும்... பாடல். (சுசீலா அவர்களின் குரலில் சாவித்திரி அவர்கள் பாடும் காட்சியை பெண்கள் தினத்தில் சின்னக்கண்ணன் பதிவிட்டதாக நினைவு. நான் சொல்வது பி.பி.எஸ் பாடுவது) மனதை மயக்கும் பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் நாமே நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற உணர்வு. கவிஞரின் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள்.

    இந்தக் காட்சியில் திரு.ஜெமினி கணேசன் அவர்கள் காதல் மன்னர் என்பதை நிரூபித்திருப்பார். நீச்சல் குளத்தில் அவரது ஜலக்ரீடை தாங்க முடியாது. கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் குளத்தில் மேலேயிருந்து குதிக்கும்போது பின்னால் திரும்பி நின்றபடி டைவ் அடிப்பார்.

    இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
    இயற்கை மணமிருக்கும் பருவத்திலே
    பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே...

    பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
    ஒரு பூவைக்கு மாலையிடும் மனம் வருமா

    ...எவ்வளவுதான் பொன் நகையும் பொருட்களும் இருந்தென்ன?
    அவையெல்லாம் இனிய மொழி பேசுமா? பூவைக்குத்தான் அவை மாலையிடப் போகிறதா?

    இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா

    ...செல்வம் நிலையற்றது என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் கவிஞர். அதை அனுபவபூர்வமாய் உணர்ந்தவர் கவிஞர். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனாதிபதிக்குத்தான் அதிக சம்பளம். இப்போது போல இல்லை. அதனால்தான் கவிஞர் ஒருமுறை தன் நிலைபற்றி இப்படிக் குறிப்பிட்டார். ....இந்திய ஜனாதிபதியை போல சம்பளம் வாங்குகிறேன். இந்தியாவைப் போல கடன்பட்டிருக்கிறேன் என்று தனது நிலையைக் கூட கவித்துவமாய் குறிப்பிட்டார்.
    அப்படிப்பட்ட நிலையற்ற செல்வம் சிரித்தபடி அமுதிடுமா? என்று கேட்கிறார். அமுது நமக்கு எப்படி கிடைக்கப் போகிறது? நாம் என்ன தேவர்களா? சோறுதான். ஆனால், இன்முகத்துடன் சிரித்தபடி மனைவி அந்த சோற்றை பரிமாறினாலே அது அமுதாம். நயமான உவமை.

    இயற்கையின் சீதனப் பரிசாய் விளங்கும் பெண்களின் பல சிறப்புகளை கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக விளங்கும் வார்த்தைகள்.

    அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ

    பெண்களுக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தாலும் தாய்மை என்பதுதான் பெண்மையின் உயர்ந்த சிறப்பு. அந்த தாயன்புக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லையே.

    உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.

    சின்னக்கண்ணன்,
    குழந்தை பாட்டோடு வருகிறேன் என்றேன். குழந்தைகள் பாட்டை போட்டு விட்டேன்....... என்ன பார்க்கிறீர்கள்? பள்ளி ஆசிரியையாக வரும் சாவித்திரி அவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாடலையும் ரசித்தபடியே அருங்காட்சியகத்தை பார்வையிடுவார். அங்கு மீ்ன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்தபடி எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் பாருங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Likes adiram, Richardsof liked this post
  8. #1274
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    PLAY BACK SINGERS P.LEELA ..GHANTASALA ...S.JANAKI

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #1275
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    P.SUSEELA - GHANTASALA - S.JANAKI

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #1276
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    SPB- GS- PBS

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #1277
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    ACTRESS SAVITHRI

  15. Thanks vasudevan31355 thanked for this post
  16. #1278
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks vasudevan31355 thanked for this post
  18. #1279
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    THEN PRIME MINISTER LB SASTHRI-1966
    ACTRESS DEVIKA

  19. #1280
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post

    உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் கூட தான் மிகவும் நேசித்த காதலி (கடைசி நேரத்தில் மணந்து கொண்டார்) இவா பிரானுடன் தற்கொலை செய்து கொண்டபோது (தற்கொலை செய்யவில்லை என்று இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது) மார்போடு ஒரு புகைப்படத்தை அணைத்தபடி இறந்திருந்தார். அது இவா பிரான் படமல்ல. அவரது தாயின் படம். இது ஒன்றே போதுமே, கல்லுக்குள்ளும் ஈரம் வைக்கும் தாயின் சிறப்பை விளக்க.
    கலை வேந்தன்,

    வருகைக்கு நன்றி.

    ஹிட்லர் பற்றி வேண்டுமென்றே மோசமான கருத்தாங்கங்கள் பரப்ப பட்டு ,அவருக்கு கடன் பட்ட ஜெர்மன் மக்களையும் வாயடைக்க செய்தது.

    தனிப்பட்ட முறையில் ஹிட்லர் ஒரு ஒழுக்க சீலன். தாயின் மீதும்,தாய்நாட்டின் மீதும் சொல்லொணா பற்று.சுத்த சைவர் .எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கேளிக்கையில் நாட்டம் இல்லாதவர். ஊழல் கிடையாது. பெண் பித்தன் கிடையாது. நேரத்தை மதிப்பவர்.

    வெர்சேல் உடன்பாடு அநியாயமானது. ஜெர்மன் மக்களை அடக்கியாள மற்றவர் செய்த சதி. பத்தே உறுப்பினர் கொண்ட கட்சியில் பின்னணியில்லாமல் நுழைந்து, சில வருடங்களில் ஜெர்மனியின் ஆட்சியை பிடித்தவர். முதல் ஆறு ஆண்டுகள் அவர் தலைமையில் ஜெர்மனி கண்ட வளர்ச்சி ,எந்த ஆட்சியிலும் நினைத்தும் பார்க்க முடியாதது. இரண்டாம் உலக போருக்கு அவரை காரணமாக சொன்னாலும்,போருக்கு பின் அனைத்து பொருளாதாரம்,தொழில்துறை,விஞ்ஞானம் எல்லாம் எல்லா நாடுகளிலும் வளர்ச்சியே பெற்றது.(நம் சேர சோழ மன்னர்களை போல உபயோகமற்ற போரல்ல)

    அவரின் கொலை வெறி தாக்குதல், யூதர்களை பற்றி முழு ஐரோப்பாவுக்கும் இருந்த வெறி அவர் மூலம் நிறைவேற்ற பட்டது. முழு உலக மனசாட்சியும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். தவறுதான் எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கும் அநீதியை எதில் சேர்க்க?இன்னொன்று தெரியுமா,டைம் பத்திரிகை ஹாலோகாஸ்ட் பற்றி வாயே திறக்கவில்லை அப்போது.(தெரிந்தும்)

    வரலாறு திரிக்க படுகிறது. களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்று நாம் படித்திருப்போம். ஆனால் மூவேந்தர் ஆட்சியில் நிலமெல்லாம் கோவில் அல்லது மேல்சாதி கையில். களப்பிரர் வந்து நிலசீர்திருத்தம் செய்து உழைக்கும் மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தனர். பிறகு ஆட்சி மாறிய பிறகு அவை பறிக்க பட்டு திரும்பவும் மேல்சாதி கையில்.களப்பிரர் ஆட்சி பற்றிய வரலாறு திட்டமிட்டு துடைத்தெறிய பட்டாலும், ஒரே ஒரு பாடல் குறிப்பு ,மேற்கண்டதை குறித்து நிற்கிறது.களப்பிரர் காலமே உழைப்போரின் பொற்காலம்.

    இன்னொன்று .நான் பட்டங்களை உபயோக படுத்தி பெருமை படுவதில்லை என்று சிறு வயதில் முடிவெடுத்த காரணம். என்று எல்லா தொழில் செய்வோரும் தங்கள் பெயரின் முன் தங்கள் தொழிலை குறிப்பிட்டு பெருமை கொள்ளும் காலம் வருமோ,அன்றே நாம் மருத்துவர்,ஆசிரியர் என்று தொழில் குறித்து பெயருடன் போடலாம்.அல்லது ஜாதி குறிப்பை போல தொழில் சார்ந்த அடை களும் தவிர்க்க படவே வேண்டும்.(சில தொழில்களை பற்றி தவறான புரிதல் தொடரும் வரை)
    Last edited by Gopal.s; 21st June 2015 at 06:38 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  20. Likes vasudevan31355, Russellzlc liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •