Page 126 of 400 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1251
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே எழுதியவற்றின் மறு பதிப்பு.நான் கேட்டது,உணர்ந்தது,படித்தது ,அனைத்தின் தொகுப்பு. ஆனால் அவர் பாதிப்பில் என் பார்வையின் பதிப்பே. (உலக இயக்குனர்கள் முடிந்ததும் தொடர்வேன்)
    Last edited by Gopal.s; 20th June 2015 at 08:42 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1252
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like


    எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.


    இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.

    நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.

    நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.

    இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.

    பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?

    இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?

    மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.

    எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.

    இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

    இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.

    அடானா ராகத்தை பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S ) அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம், படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.

    ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.

    தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???


    ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.

    எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
    புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )

    எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு 4 உதாரணங்கள் .

    1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?

    2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

    3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.

    4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)

    எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.

    இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.


    ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.

    ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)

    எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.

    இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.

    chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.

    கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.

    இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.

    அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.

    மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.

    சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?


    இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.

    நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.

    அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

    அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.

    இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.

    "நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.

    கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.

    "தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.

    ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.

    "தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.

    பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
    Last edited by Gopal.s; 20th June 2015 at 09:38 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1253
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.

    எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.

    அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.

    மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
    கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
    மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
    இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

    பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…

    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ

    வண்ணப் பாவை
    கன்னித் தேனை
    கன்னம் என்னும்கிண்ணம்
    கொண்டு உண்ணச் சொன்னாளோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பொன்னழகே
    நான் கனவில் வந்தவளோ
    உன் மனதில் நின்றவளோ

    மின்னல் கோலம் கண்ணில்
    போட யார் சொன்னதோ

    கோலம் போடும் நீலக் கண்ணில்
    யார் நின்றதோ

    மென்மை கொஞ்சும் பெண்மை
    என்ன பாடல் பெறாததோ

    இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
    காதல் உண்டானதோ
    (தங்கத் தோணியிலே)

    அல்லி பூவைக் கிள்ளிப்
    பார்க்க நாள் என்னவோ

    கிள்ளும்போதே கன்னிப்
    போகும் பூ அல்லவோ

    அஞ்சும் கெஞ்சும் ஆசை
    நெஞ்சம் நாணம் விடாததோ

    அச்சம் வெட்கம் விட்டுப்
    போனால் தானே வராததோ
    (தங்கத் தோணியிலே)

    courtesy -thiru கவிஞர் காவிரிமைந்தன்.

  5. Likes rajeshkrv liked this post
  6. #1254
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Bicycle Thieves -Vittorio De Sica - Italy -1948.

    நான் மட்டுமல்ல உலக பட இயக்குனர்கள் ஜப்பான் முதல் ஈரான் வரை ,சத்யஜித்ரே,பிமல்ராய்,முதல் பாலுமகேந்திரா வரை தெய்வமாய், நியோ ரியலிச படங்களின் தந்தையாய் தொழும் நபர் விட்டோரியோ டிசிகா . இவரின் நூறாவது பிறந்த நாளை கானடா நாட்டு montreal சூதாட்ட விடுதியில் ,நண்பர்களுடன் கொண்டாடினேன்.(7 ஜூலை 2001) இது முடிந்து ஊர் திரும்பியதும் (ஜகர்தா) இந்திய தூதர் தந்த விருந்தில் இருக்கும் போது ,நம் தெய்வம் நடிகர்திலகம் மறைந்த செய்தி வந்து என்னை மீளா துயரில் வீழ்த்தியது.

    neo Realism என்ற பாணியை துவங்கியவர் ரோசலினி என்ற இத்தாலிய இயக்குனரே (1945இல்).இதை தொடர்ந்தவர் நமது டிசிகா Sciuscia (1946),Bicycle Thief (1948) போன்ற படங்களில். 5 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர் குருவாக ஏற்றது ரோசலினி ,சார்லி சாப்ளின் ஆகியோரை. சிறு வயதில் வறுமையில் வாடியவர், பிறகு நாடகம்,படத்துறை என்று பெரிய அளவில் சாதித்தார்.சூதாட்டத்தில் நாட்டம் கொண்டு பெருமளவில் இழந்தவர்.(சூதாட்ட விடுதியில் நாங்கள் நூறாம் ஆண்டு கொண்டாடிய காரணம்).

    சக சூழலில், சக மனிதர்களின் பிரச்சினையை எடுத்து அதை கலை சார்ந்த அழகுணர்ச்சியுடன்,உண்மை தன்மை கெடாமல் கொடுப்பதே Neo Realism .தீர்வு கொடுப்பதை விட,தீர்வை நாடி நம்மை ஓட வைக்கும்.மனத்தை ஈரமாக்கி ,துயர் துடைக்க வழி இல்லையெனினும்,துயரில் பங்கு பெரும் மனிதம் வளர்க்கும். தொழில் முறை நடிகர்களை நாடாமல் அமெச்சூர் நடிகர்களை வைத்தே படம் எடுத்தார்.(தொழில் முறை நடிகர்கள் டப்பிங் கொடுத்ததாக நினைவு).

    உலகத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்பாக கருத படும் படைப்பு இது.பல உன்னத படங்கள் ஒரு புத்தகத்தை மையமாக கொண்டே இருக்கும். இதுவும் லுஜி பர்டோலோனி என்பவரின் நாவல் .சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை வெளிச்சமிட்டு புகழடைபவர் என்ற குற்ற சாட்டு எழுந்தது போல, இவர் இத்தாலியின் வறுமையை வெளிச்சமிட்டு உலக புகழ் சேர்ப்பதாக ,இத்தாலியில் குற்றசாட்டு எழுந்தது. அதையும் மீறி ,இவர் படைப்பும்,ஐவரும் காலத்தில் அழியா புகழ் அடைந்தனர்.

    அமெரிக்க Great Depression காலத்திலும், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக போருக்கு பின்னரும் சொல்லொணா வறுமை,வேலையில்லா திண்டாட்டம், இளம் தலை முறையின் கொதிப்பு, அதிகரித்த குற்றங்கள் என்று எல்லா சவால்களையும் சந்தித்தன. இதை பற்றி அந்தோனியோ ,மனைவி மரியா, மகன் ப்ருனோ சுற்றி பின்ன பட்ட சுருக்க கதை ,உலகம் போற்றும் classic படமானது.

    வேலையில்லா அந்தோனியோ, போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவை ஒரு சைக்கிள். மனைவி,தனது உயர் ரக (கல்யாண சீதனம்) விரிப்புகளை அடகுக்கு கொடுத்து பணம் வாங்குகிறாள். முதல் நாளே சைக்கிள் திருடு போய் ,அதை மீட்க அவன் படும் பாடு, மகனும் சேர்ந்து அவனுடன் படும் துயர் கதை. இறுதியில் பாடு பட்டும் தன் உடமையை மீட்க முடியாத விரக்தியில்,இன்னொரு சைக்கிள் ஐ களவாட போய் பிடிபட்டு, இறுதியில் உடமையாளரால் மன்னிக்க பட்டு,மகனுடன் வருத்தம்,விரக்தி,மீளா வறுமை,செயலற்ற நிலையுடன் அவமானமும் சுமந்து செல்லும் துயரம்.

    இதன் பாதிப்பில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி தந்த அற்புத படைப்பே பொல்லாதவன்.வருங்கால பொழுது போக்கு படங்களுக்கு புது பாதை போட்ட படைப்பு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1255
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ''கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது.''
    மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
    உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
    எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .

    ''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
    என் பதிவு .1
    நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.

    ''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
    என் பதிவு -2
    நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
    இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.

    அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.


    நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    ''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
    என் பதிவு -3
    ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்

    அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    ''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
    என் பதிவு 4
    முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    ''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
    என் பதிவு - 5
    ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.

    உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.

    ''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
    என் பதிவு -6
    ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.

    ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.

    சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.

    ஆதிராம்
    என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .

    வேண்டுகோள்
    உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
    கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
    கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
    ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
    ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
    மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
    பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
    சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்

    ''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
    ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
    ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
    ஒருவன் அறிவான் எல்லாம்
    காலம் பார்த்து நேரம் பார்த்து
    அவனே தீர்ப்பு சொல்வான் !
    அஸ்ஸலாமு அலைக்கும் !

  8. #1256
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    குமார்,

    மொக்கை பதிவுகளாய் போடாமல், ஆழமான சுவாரஸ்ய விஷயம் உள்ள பதிவுகளாய் போட்டு ,நான் உட்பட பலரை இந்த திரிக்கு வரவழைத்த கார்த்திக் ,சாரதா மற்றும் நல்ல பதிவாளர்கள் கல்நாயக் ,ஆதிராம் இவர்கள் மீது நீங்கள் தொடுத்திருக்கும் அஸ்திரம், அதுவும் இடம் மாறி வந்து, ஆச்சர்யம் அளிக்கிறது. நண்பர்களிடம் ,நான் கேள்வி பட்ட வரை தாங்கள் ஒரு தரமான நடிகர்திலகம் ரசிகர் என்பதே.

    எதையுமே நிரூபிக்கும் வரை வீண் குற்றம் சுமத்துவது ,தங்களை போன்ற முதிர்வுற்ற பதிவருக்கு அழகல்ல. என்ன பெரிய ஒற்று வேலை? சதி செயலா புரிகிறீர்கள் நீங்கள்?

    தேடி துரத்தி வந்து தாக்குமளவு என்ன தவறு நேர்ந்தது குமார்?

    இன்னொன்றும் கூறி கொள்கிறேன். எனக்கு தனி தனியாகவே இந்த பதிவர்களின் மேல் மலையளவு மதிப்புண்டு. இவர்கள் எல்லோரும் ஒன்று என்றால் ,அவர் திறமையில் மலைத்து நின்று வணங்குவேனே தவிர, ரசனையற்று பழி சுமத்தி அவரை காய படுத்த மாட்டேன்.
    Last edited by Gopal.s; 20th June 2015 at 05:33 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks adiram thanked for this post
  10. #1257
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கோபால்

    என்னை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்ட உங்களுக்கு என்னுடைய நன்றி . எல்லா பதிவாளர்கள் மீதும் எனக்கு மரியாதை மதிப்பு உண்டு .
    என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை வெளி வருபடி செய்தவர் திரு ஆதி . திரியில் பலருக்கும் இந்த உண்மைகள் தெரியும் .
    நீங்கள் ஆத்திரத்தில் பதிவு போட்டு உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள் . முதுகு சொரியும் பட்டியலில் கோபாலும் சேர்ந்தார் என்ற
    அவப்பெயர் வேண்டாம் .இனி சம்பந்த பட்டவர்கள் விளக்கமளித்தால் போதும் .ஆதி எம்ஜிஆர் திரியில் மட்டும் வரவில்லையே ? மதுர கானம் திரியில் வருகிறாரே . எனவேதான் நான் இங்கும் பதிவிட்டேன் .சரியான பதில் கிடைத்தவுடன் நானும் அமைதி காக்கிறேன் .
    நீங்கள் ஒதுங்கி இருக்கவும் . முடியாது என்றால் ஆதியின் நிழற்படம் இங்கே பதிவிடவும் .

  11. #1258
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    குமார்,

    என்னிடம் ஆதியின் புகை படம் உள்ளது. அது அவர் 6 மாத குழந்தையாக இருந்த போது எடுத்தது. பரவாயில்லையா?போடலாமா?:-d
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #1259
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் ரவி சார்,

    உங்களின் 'கருவின் கரு' தொடர் வேள்வி உண்மையிலேயே பெரிய சாதனைதான் தாயின் பெருமைகளை மிகத்தெளிவாக அழகாக உணர்த்தியுள்ளீர்கள். தாய்ப்பாசம் அற்றவர்களும் உங்கள் பதிவுகளைப் படித்தால் மனம் திருந்தி தாயின் அருமையை உணர்வார்கள். கங்கை கரையில் தாயை அனாதரவாக விட்டு வந்தவர்கள் படித்து உணரவேண்டிய பொக்கிஷப்பதிவுகள்.

    இணைக்கப்பட்ட பொருத்தமான பாடல்கள் மட்டுமல்லாது, அவற்றோடு இணைத்து தந்த உண்மைச்சம்பவங்கள் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன.

    உங்கள் கடின உழைப்பு நிச்சயம் போற்றுதலுக்குரியது.

  13. #1260
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    நீங்கள் என்மீது வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கைக்கு, அதைவிட அதிகமான நன்றிகள்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •