Page 112 of 400 FirstFirst ... 1262102110111112113114122162212 ... LastLast
Results 1,111 to 1,120 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1111
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 93

    மரகதம்

    Emeralds, like all colored gemstones, are graded using four basic parametersthe four Cs of Connoisseurship: Color, Cut, and Clarity and Carat weight. Before the 20th century, jewellers used the term water, as in "a gem of the finest water, to express the combination of two qualities: colour and clarity. Normally, in the grading of coloured gemstones, colour is by far the most important criterion. However, in the grading of emeralds, clarity is considered a close second. Both are necessary conditions. A fine emerald must possess not only a pure verdant green hue as described below, but also a high degree of transparency to be considered a top gem.







    அகஸ்தியரின் நவரத்தின மாலை - 6 மரகதம் (எம்ரால்ட்)

    " மரகத வடிவே சரணம் சரணம் "

    மரகதம் மிகவும் அழகான நவரத்தின கல் - அந்த நிறத்தில் இருக்கும் அன்னை இன்னும் அழகானவள் - அவள் பாதங்களில் சரணடைகிறேன் .

    நம் எண்ணங்கள் :

    நிறத்தை இழந்து , தன் அழகையும் இழந்து நம்மை வளர்க்கிறாள் - அவளுடைய கருணையின் அழகுக்கு முன் இந்த மரகதம் எம்மாத்திரம் ?


    உண்மை சம்பவம் 12.


    உண்மை சம்பவம் 12.

    சந்துருவின் தாய் ஒரு சிறந்த மருத்துவர் . அவரிடம் வரும் நோயாளிகள் அதிகம் . மருந்துகளைத்தவிர அவளுடைய வார்த்தைகளில் இருக்கும் கனிவு , அன்பு மருந்துகளை சாப்பிடாமலேயே நோய்களை விரட்டிவிடும் . யாரை குறை சொல்லலாம் என்று அவள் மனம் என்றுமே நினைப்பதில்லை - எல்லோருக்கும் ஒரு பொது மொழி அது அன்புதான் என்று நினைப்பவள் . மனோதத்துவங்கள் தெரிந்தவள் . ஒருமுறை ஒரு நபர் அவளிடம் சென்றார் . அந்த சமயத்தில் அந்த மருத்துவர் தன் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார் - இந்த நபரை பார்த்ததும் " பெப்பி ரூமுக்கு வெளியில் நில்லு " என்று சொல்லி தன கதவின் ரூமை சாத்திக்கொண்டார் .. அந்த நபருடன் உரையாடல் தொடங்குகிறது .

    டாக்டர் ! கொஞ்ச நாட்களாக அடிக்கடி இறந்து விடுவோம் என்ற பயம் வருகிறது . இன்னும் வாழ்க்கையை சரியாக அனுபவிக்கவில்லை
    - இறந்த பின் என்ன வாகும் ? இந்த பயத்தை எப்படி போக்குவது ?

    டாக்டர் : பதில் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து சென்று தன் ரூமின் கதவைத்திறந்தார் . அவளின் நாய் ஓடிவந்து அவள் கால்களில் விழுந்து அவளை கொஞ்சியது . உடனே அந்த நபரிடம் " பார்த்தீர்களா - இங்கு என்ன நடந்தது என்று இந்த நாயிக்குத் தெரியாது - ரூமுக்குள் நான் இருக்கிறேன் என்பது ஒன்று மட்டும் தான் தெரியும் . நம் எல்லோருக்கும் ஒரு மாஸ்டர் இருக்கிறான் - அவன் நம்மை பார்த்துக்கொள்வான் - நமக்கு வேண்டியது அவனிடம் நம்பிக்கை - இந்த நாயைப்போல -------

    அந்த நபரின் முகத்தில் வெளிச்சம் , மகிழ்ச்சி - ஒரு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்ல முடியுமா ? சந்துருவை மிகவும் பாராட்டினேன் - இப்படி ஒரு தாயை அவன் பெற்றதற்கு .

    1.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1112
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 94

    மரகதம்







  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #1113
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.//

    இறுதியில் இதய அட்டாக். துருமனின் அழுகை செண்டிமெண்ட் தமிழை நினைவூட்டுகிறது. பில் கோட்டெல்லாம் சரி பண்ணிக் கொண்டு சாவது கொஞ்சம் வேடிக்கைதான்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1114
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!



    'நானே ராஜா' ஆய்வு நீங்கள்தான் 'பதிவுகளின் ராஜா' என்று பறை சாற்றி விட்டது. அற்புதமான அலசல். இதுவரை யாரும் தொடாதது. என் மனமுவந்த வாழ்த்துக்கள்.
    Last edited by vasudevan31355; 16th June 2015 at 08:35 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes uvausan liked this post
  9. #1115
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //படைப்பாளிகளை விட படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள்.

    அந்த அடிப்படையில் நமது நெல்லை கோபு அவர்கள் இந்த மய்யம் திரியிலேயே அதிக அளவில் மற்றவர்களை ஊக்குவித்துள்ளார் தனது லைக்குகளின் எண்ணிக்கையின் மூலம். மய்யம் திரியிலேயே ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மற்றவர்களின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்நிலையில் உள்ள கோபு அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.//

    நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன் ராகவேந்திரன் சார். நீங்கள் சொல்லி விட்டீர்கள். அமைதியாக பாராட்டுக்கள் தெரிவிக்கும் கோபு சாருக்கு என் சார்பாகவும், மதுர கானங்கள் சார்பாகவும் ஆழ்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks Russellmai thanked for this post
    Likes adiram, uvausan, RAGHAVENDRA liked this post
  11. #1116
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    மாணிக்கங்களாக, மரகதங்களாக உங்கள் கருவின் கரு நூறு தொடப் போகிறது. முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

    உங்கள் அயரா உழைப்புக்கும், அருமையான பாடல்களுக்கும் பாராட்டுக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks uvausan thanked for this post
    Likes rajeshkrv liked this post
  13. #1117
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மாணிக்கம் இன்னும் இருக்கின்றன. மரகதத்திற்கு வந்து விட்டோம். என்றாலும் மாணிக்கமான ஒரு மாணிக்கப் பாடலைப் பார்த்தும் கேட்டும் ரசிப்போமா..

    மெல்லிசை மன்னரின் இசையில் துணைவி படத்திற்காக மலேசியா வாசுவும் எஸ்.ஜானகியும் இணைந்தளித்த அருமையான கானம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks vasudevan31355, uvausan thanked for this post
  15. #1118
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரின் சாம்ராஜ்ஜியம் 80களிலும் தொடர்ந்ததற்கான துவக்கமான இப்பாடல் என்றென்றும் நம் நினைவில் நீங்காத மரகதமாகும்.

    மேகத்தையே இங்கு மரகதமாக்கி உவமை கூறுகிறார் கவிஞர்.

    மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிது..

    சி.க. சார் பக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks vasudevan31355, uvausan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #1119
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    8

    'நீராழி மண்டபத்தில்'



    அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.

    பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.

    எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.



    வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.

    சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)

    முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.



    எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.

    மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.

    வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.

    'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.




    பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?

    அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.

    'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய'

    கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.

    'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...

    என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!

    இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)

    கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து

    எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.

    நன்றி!




    நீராழி மண்டபத்தில்
    நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

    நாடாளும் மன்னவனின்
    நாடாளும் மன்னவனின்
    இதய வீடாளும் பெண்ணரசி
    தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
    மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்

    வாடையிலே வாழை இலை குனியும்
    வாடையிலே வாழை இலை குனியும்
    கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
    காதலிலே பெண்மை தலை குனியும்

    ஆ..........ஆ

    காதலிலே பெண்மை தலை குனியும்
    இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

    பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
    ஆ..........ஆ

    பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய
    வெண்ணிலவு முகிலில் போய் மறைய

    காதலனும் நல்ல வேலை கண்டான்
    அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்

    நீராழி மண்டபத்தில்

    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
    தேனளந்தே இதழ் திறந்திருக்க
    அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க

    போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
    வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க

    பேர் அளவில் இருவர் என்றிருக்க
    சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க

    கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
    அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை

    நீராழி மண்டபத்தில்
    தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
    தலைவன் வாராமல் காத்திருந்தாள்
    பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்


    Last edited by vasudevan31355; 16th June 2015 at 01:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Richardsof, Russellmai, uvausan liked this post
  19. #1120
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி,



    தங்களிடமிருந்து அயராத உழைப்பை, பரிசாக கேட்க விரும்புகிறேன். எத்தனை பதிவுகள் குறுகிய காலத்தில்? அதுவும் theme எடுத்து மென கெட்டு .நாளுக்கு நாள் மெருகேறி வருகிறீர்கள்.பாராட்டுக்கள்.



    சின்ன கண்ணன்,



    தாங்கள் திரியை இணைக்கும் நாராக ஆகி விட்டீர்கள். தங்கள் பாணி (எத்தனை % நகைசுவை,எத்தனை % கவிதை ETC )பரிச்சயமாகி விட்டாலும் அலுக்கவில்லை.



    ஆதிராம்,



    தங்களுடையது திருக்குறள் போல. சுருக்கம். அர்த்தபுஷ்டி.



    கல்நாயக்,



    நீண்ட பதிவெல்லாம் இங்கு வந்த பிறகுதான்.சி.க விற்கு பக்க மேளம்.



    கிருஷ்ணா,



    கலகலப்பு. வெண்கல கடையில் யானை.அம்புஜம் மாமி குசும்பு ,அடடா. அழுந்த சாதிக்கிறேள் .



    கலைவேந்தன்,



    உங்களின் உற்சாகம் நிறைந்த பாராட்டு மற்றவர்களுக்கு தூண்டுகோல். சமூக கருத்துக்களை பாட்டின் மூலம் இணைப்பது எனக்கு உடன்பாடற்ற பாணி எனினும் ,தங்கள் எழுத்தால் மெருகு பெறுகிறது. தராசின் முள்ளில் கவனம் தேவை. ஒரு பக்க நியாயமே அலச படுகிறது. அதுவும் வசதியான நிலை பாட்டில்.



    ராகவேந்தர்,.



    நமக்குள் பிளவு-உடன்பாடு சகஜம். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள். முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு.இது தேவையில்லா விஷயம். நான் உங்களை ,எந்தவித,நிபந்தனையும் இன்றி தொடர்கிறேன்.நீங்களும் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் எல்லா திரிகளிலும் பங்கு பெற்று அளிக்கும் பங்களிப்பை ரசித்து தொடர்கிறேன். இன்றைய நானே ராஜா, என்றுமே நீங்கள்தான் ராஜா என்று பறை சாற்றுகிறது.



    ராஜேஷ்,



    நீ ஜாலி பேர்வழி. உனக்கு பிடித்த பாடல்கள் ,மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.



    வாசு,



    உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )

    யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு.



    ராஜ் ராஜ்,



    யம காதகர். இவரின் பதிவுகள் அவ்வளவு அழுத்தம். என்ன இருந்தாலும் அனுபவஸ்தர்.



    எஸ்.வீ,



    எப்போதுமே நண்பர். சாயாமல் நின்றால் உற்சாக ,நம்ப கூடிய பங்காளி .



    முரளி,



    கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு. என்ன இருந்தாலும் ஒரே மேடையில் தோளோடு தோளாக மாதா மாதம் நிற்பவர்கள். நாமெல்லாம் யார்?



    ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  20. Thanks uvausan thanked for this post
    Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •