Page 109 of 400 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1081
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 90:

    நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)

    இந்த பாட்டுக்கு எந்த மாணிக்கமும் இனையாகாதே !!



    பாடல்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    திரைப்படம்: ஆலயமணி

    ஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா
    ஆஹாஹாஹா.. ஆஹாஹாஹா...

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

    ஆஹாஹா.. ஆஹாஹா........ஆஹாஹாஹா......

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
    உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
    வண்ண கண்ணல்லவா
    உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
    வண்ண கண்ணல்லவா
    இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
    மின்னல் இடையல்லவா?

    ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

    ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ.......

    கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
    கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
    சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

    ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ஆ..ஆ..

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1082
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 91

    வாணி ஜெயராமின் மாணிக்க குரலில்

    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக

    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக

    மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
    தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
    மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
    தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
    பட்டு சேலையும் மெட்டியும் அணிந்து
    பக்கம் தோழியர் துணை வர நடந்து
    மந்திரம் சொல்லும் மேடையிலே
    மங்கல வாத்தியம் முழங்கையிலே
    அழகன் உங்கள் அருகினிலே
    அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
    அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக

    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக

    அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
    அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
    அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
    அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
    அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
    அன்பு நாடகம் ஆரம்பமாகும்
    அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
    அன்பு நாடகம் ஆரம்பமாகும்
    பள்ளியில் வாசல் கதவடைத்து
    பஞ்சணை பைங்கிளி கையணைத்து
    வெள்ளி முளைக்கும் வேளை வரை
    சொல்லி முடிப்போம் காதல் கதை
    சொல்லி முடிப்போம் காதல் கதை
    எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக

    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக .



    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
    ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
    தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
    ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    .
    மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
    மங்கள மங்கை என்போம்,
    மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
    மங்கள மங்கை என்போம்,
    மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்
    மனிதருள் மாணிக்கம் என்போம்,
    பண்ணிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
    குருஞ்சி மலர்களைப்போலே,
    தன்னலம் இல்ல தலைவர்கள் பிறப்பார்
    ஆயிரத்தில் ஒரு நாளே,
    .
    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
    ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
    .
    மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
    வண்டுகள் இன்னிசை பாடும்,
    மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
    வண்டுகள் இன்னிசை பாடும்,
    திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
    தேசம் அவனிடம் ஓடும்,
    எல்லா மலரும் இறைவன் படைப்பும்
    அவனது தோட்டம்,
    தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
    என்பது சுயநலக்கூட்டம்,

    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
    ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
    .
    இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
    பெருமை உடையது முல்லை,
    இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
    பெருமை உடையது முல்லை,
    ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
    உயரும் வரலாறில்லை,
    சூரியன் போகும் திசையினில் எல்லாம்
    வளையும் சூரியகாந்தி,
    நேரிய வழியில் நிதமும் நடந்தால்
    நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி,
    .
    சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
    தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
    தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
    ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....

    Last edited by g94127302; 15th June 2015 at 10:51 AM.

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #1083
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "மாணிக்கம் " தொடரும்

  7. #1084
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்'

    'சுவாதி நட்சத்திரம்'

    ஜி!

    உங்களூக்கு ஒரு அபூர்வ பாடல்.

    கே.எஸ்.ஜி கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த 'சுவாதி நட்சத்திரம்' (1974) திரைப்படத்தில் இருந்து சுசீலா அம்மா பாடிய ரேர் சாங்.



    உதயசந்திரிகா தான் ஹீரோயின். கண் பார்வை எப்போது வேண்டுமானாலும் போய் போய் வரும். எப்போது பார்வை பறி போகும் எப்போது வரும் என்று தெரியாது. கதையமைப்பு அப்படி இருக்கும். இவரை ஆதரிக்கும் கிறித்துவ சிஸ்டர் பானுமதி.

    உதயசந்திரிகாவுக்கு கண் பார்வை கிடைக்கும் ஒரு சமயம் இந்தப் பாடலைப் பாடுவது போல் காட்சி . இந்தப் படம் பிளாக் அண்ட் ஒயிட் படம். இயக்குனர் சமர்த்தர் காசு விஷயத்தில். ஆனால் ஹீரோயினுக்குக் கண் கிடைத்தவுடன் அவள் சந்தோஷத்தை, இயற்கைக் காட்சிகளைக் கண்டு அவள் ஆடும் ஆட்டத்தை, குஷியான குதூகலத்தை பார்வையாளர்கள் உணர வேண்டும் என்று மிக அருமையாக பாடலாக படமாக்கியிருப்பார். இதில் என்ன விசேஷம் தெரியுமா? அந்தப் பாடல் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிக்கு மிகப் பொருத்தமாக. (நாயகிக்கு பார்வை வரும் காட்சிகளை மட்டும் வண்ணத்தில் பார்த்த நினைவு.)

    ஹீரோயின் மலைமேல் நின்று, அங்கிருந்து கீழே தெரியும் இயற்கை அழகை கண் பார்வை பெற்றவுடன் கண்டு ரசிக்கிறாள். மலையடிவாரம், பூங்காக்கள் என்று சுற்றி சுகம் காணுகிறாள்.

    'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்
    பூமி எங்கும்
    ஆடுது பாடுது ஆசையில் தாவுது நெஞ்சம்
    எந்தன் நெஞ்சம்
    எழில் மிஞ்சும்

    வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகளை
    வாழ்வில் காணுவது மெய்தானா'

    என்று நாயகி தன்னைத்தானே இன்னும் நம்பாமல் கேட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.

    'வானம் தூவும் பனி மாவைப் போல
    புதுக் கோலம் போடுவது மெய்தானா

    நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
    அம்மம்மா அம்மம்மம்மம்மா'

    என்று ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறாள்.

    காட்டு வெள்ளமெனப் பொங்கி வரும் அருவி மீது நின்று ஆட்டம் போடுகிறாள்.

    'கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே
    எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே
    காண்பவை எல்லாம் கற்பனை தானோ
    ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ

    நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
    அம்மம்மா அம்மம்மம்மம்மா'

    பூங்காவிலுள்ள சிலைகளின் முன் சிலையாய் அபிநயம் பிடித்து, குழந்தைகளுடன் குழந்தையாய் சறுக்கு மரம் ஏறி விளையாடி, ஏரியில் படகு சவாரி விட்டு,

    மரகத வண்ண பச்சைப் பட்டு மண்ணைத் தழுவி
    மின்னும் அழகைக் கண்டேன்
    வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை
    கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்
    அம்மா அம்மம்மா அம்மம்மம்மம்மா'

    பார்வை வந்ததன் பலனை அனுபவிக்கிறாள்.

    பாடல் முடியும் போது பரிதாபமாக மீண்டும் கண் பார்வை பறி போகும்.



    உதயசந்திரிகாவின் உடை படு சிக்கனம். கவர்ச்சி அதிகம். வண்ணக் குழைவு எண்ணத்தை விட்டு அகல்வேனா என்கிறது. அற்புத வண்ண படப்பிடிப்பு. இயற்கை அழகை அப்படியே காமெரா அள்ளி நம் முன்னே வஞ்சனை இல்லாமல் கொட்டுகிறது.

    சுசீலா படுவேகம். ஜெட் வேகத்தில் பாடுவார். இவ்வளவு ஸ்பீடாக வேறு பாடல் ஏதும் பாடியிருப்பாரோ என்பது சந்தேகமே!

    'இருளும் ஒளியும்' படத்தில் வாணிஸ்ரீ சுசீலாவின் குரலில் பாடும்

    'வானிலே மண்ணிலே'

    பாடல் இப்பாடலை கேட்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது. (இப்பாடலுக்கு மாமா மியூசிக்)

    கண் தெரியாத பெண் பார்வை வந்தவுடன் காட்டும் உற்சாகம், வேகம், ஆனந்தம், பூரிப்பு, ரசிப்பு என்று உதயசந்திராகாவும் பாடலின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருப்பார்.

    இந்த அருமையான பாடலை மருதகாசி எழுதி இருப்பார். இசை 'மெல்லிசை மாமணி' வி.குமார். வித்தியாசம் நன்றாகவே தெரியும். சுசீலாவை வேகமாக பாட வைப்பதில் குமார் கில்லாடி. ('வெள்ளி விழா' படத்தில் 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்' ஒரு உதாரணம்).

    வண்ணத்துக்காகவே பல தரம் பாருங்கள்.


    Last edited by vasudevan31355; 15th June 2015 at 01:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes rajeshkrv, Russellmai, chinnakkannan liked this post
  9. #1085
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Hi all good afternoon

    சந்தில் சிந்து :

    மாணிக்கம் வழக்கம் போல குட் ரவி

    நன்றி வாசு.. அண்ட் ஸ்வாதி நட்சத்திர ரைட் அப்பிற்கும்.. பார்த்து பின் ஈவ்னிங்க் எழுதறேன்..

  10. #1086
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாணிக் நா மாணிக்பாஷா தான் நினைவுக்குவருது

    மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்னு பாடல் எதிரொலிக்கிறது..

  11. #1087
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kill Bill (1 and 2)- Quentin Tarantino - 2003/2004.

    எனக்கு மிக பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர். இவருடைய pulp fiction என்ற படத்தை 1994 இல் இயக்குனர் பெயர் அறியாமலே பார்த்து ஈடுபாடு கொண்டு பலமுறை பார்த்துள்ளேன்.

    இவர் நமது சம வயதினர். நடிப்பு பள்ளியில் பயின்று ஒரு video archieve கடையில் வேலை பார்க்கும் போது testing பண்ணும் வேலையில் எதையும் முழுசாக பார்க்க முடியாமல் ,துண்டு துண்டாக பார்த்ததில் ,இவருடைய புது பாணி பட முயற்சியான non -linear முறை அவருக்கு சாத்திய பட்டது.

    இவருடைய சிறப்பு, பழைய இயக்குனர்கள், படங்கள் எல்லாவற்றையும் மரபு முறையில் தொடராமல், இணைப்பு மற்றும் புது வகை திரைக் கதையமைப்பால் சுவாரச்யமாக்கி புது மெருகுடன் தருவார். பழைய இசைகள், வெவ்வேறு பாணி இசைகள் என்று இவருடைய படங்களில்
    இசையமைப்பு எப்போதும் படத்தை கூடுதல் ரசனைக்குரியதாக்கும்.

    கில் பில் படத்தின் சிறப்புகள்.

    1)ஜப்பானிய ,சீனா போர் முறை , இத்தாலிய பயங்கர குரூரம்,western sphegatti என்று அழைக்க பட்ட (Sergio Leone )பாணிகளை இணைத்து தந்த சுவாரஸ்ய படம்.

    2)கதையின் துண்டு துண்டாக மரபற்ற இணைப்பு முறையுடன் , வன்முறையை அழகுணர்ச்சியுடன் தந்த Neo Noir வகையில் அமைந்த வித்தியாச பொழுது போக்கு படம்.(Stylised Revenge Flick )

    3)முதல் முறையாக பெண்களை பெருமளவு உலகளவில் ஈர்த்த வன்முறை படம்.அவர்களின் பழியுணர்ச்சி கலந்த வன்முறை வக்கிர உணர்வுக்கு ஒரு fantasy தீர்வாக அமைந்தது ஒரு காரணம்.

    4)உமா துருமன் என்ற நடிகை இந்த படத்தை தூக்கி நிறுத்தி ,பல விருதுகள் பெற்றார். அவர்தான் இந்த படத்தின் நாயக-நாயகி.அவரை சுற்றியே படம்.

    5)சண்டையில் ஜெயிப்பது தவிர மனிதம்,மென்மை உணர்வுகளுக்கு இடமேயில்லை ,எதிர்ப்பது புத்தனே ஆனாலும் எதிரியை முடிப்பதே குறிக்கோள் என்ற ஜப்பானிய சண்டை தத்துவத்தில் ஊறிய படம்.

    6)இயக்குனரின் சிறப்பு தனக்கு முன்னோடியாக அமைந்தவற்றை பல படங்களை ,இயக்குனர்களை குறிப்பிடுவார். இந்த விதத்தில் கமலுக்கு நேர் எதிர்.(ஏன் கமலின் ஹிந்தி ஆளவந்தான் கூட சண்டை காட்சிகள் Graphic பண்ண காரணம் என்று கமலுக்கே credit கொடுத்துள்ளார்)

    இதை பற்றி சொல்லுவதை விட இரண்டு பாகங்களையும் ஒரு சேர கண்டு மகிழவும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #1088
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதிராம்,

    அற்புதமான யோசனை. எனக்கும் தமிழின் வளைகாப்பு பாடல்கள்,தோழியர் பாடல்கள் எல்லாம் மிக பிடிக்கும்..ஆரம்பமாகட்டும்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #1089
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் அண்ணா கோபால் அண்ணா!

    அப்படியே நிறுத்துங்கள். இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசக் கூடாது.

    முதலில் என் படத்தை எடுத்ததற்கு உம்மை மன்னிக்கவே முடியாது.



    நான் பார்த்து பார்த்து அணு அணுவாக அனுபவித்து என் குழந்தைகள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருடனும் ஒவ்வொரு முறையும் அகமகிழ்ந்து பார்த்து அதுவும் பாகம் 1 இல் உமா துருமனுடன் இரும்பு சங்கிலியில் கோர்த்த பிரம்மாண்ட முட்குண்டை வைத்து கழுத்துக்கு மேல் சுற்றி வலதுகாலின் உள்வழியாக வாங்கி, மூர்க்கத்தனமாக மோதி தண்ணி காட்டும் O-Ren Ishii (லூசி லியூ) வின் பாடிகார்டான அந்த பச்சை இளம் ஜப்பான் நடிகை Chiaki Kuriyama வின் பரம ரசிகன் நான். துருமன் காட்டும் முகபாவங்கள் ஒன்று கூட இங்கிருக்கும் எந்த நடிகையும் அறியாதவை.

    நான் மிகவும் ரசித்த துருமனின் கண்ணசைப்பு அலட்சியம்



    முக்கியமாக இரும்பு குண்டை Chiaki கீழே போட்டு பயமுறுத்தியவுடன் துருமன் காட்டும் அந்த அலட்சிய கண்ணடிப்பை ஆயிரம் முறை ரசித்திருப்பேன். Chiaki கொள்ளை அழகு பருவச் சிட்டு. அவள் கண்களில் இறுதியில் ரத்தம் வழியும் போது உடன் வழிந்தது எனக்கும்தான்.


    கோ,

    உன்னை மன்னிக்கவே முடியாது போ. ஒழுங்காக அடுத்ததற்கு தாவாமல் ஏனோ தானோ என்று இரண்டு வால்யூம்களையும் மொட்டையாக விட்டு விடாதே.

    எனக்கு முழு விவரங்களும் கதையோடு தேவை. இரண்டு வால்யூம்களின் கதைகளும் தனித்தனியாக வேண்டும்.

    ஏதாவது தவறு இருந்தால் திருத்து. இப்படத்தைப் பற்றி முழு விவரங்களையும் தந்து விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போ. விட மாட்டேன்.

    ப்ளாக் மாம்பா, காட்டன் மவுத், சினேக் சார்மர்....ஒன்று விடாமல் வேண்டும். அந்த ஒற்றைக் கண் கொடூர ஆணழகி முதற்கொண்டு.

    படுபாவி! தூக்கத்தைக் கெடுத்தாயே!
    Last edited by vasudevan31355; 15th June 2015 at 09:00 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes rajeshkrv liked this post
  15. #1090
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    அந்த ஸ்கூலில் இருந்து வரும் நீக்ரோ பச்சைக் குழந்தை முன் உமாவும், அந்தக் குழந்தையின் தாயும் கத்தியுடன் மோதும் வேகத்தை எந்தப் படத்திலாவது பார்க்க முடியுமா? அதகளம் நடந்தும் குழந்தை என்ன நடக்கிறது என்று அறியாமல் முழிக்க உமாவும், அந்த தாயும் பிஞ்சு மனது நோகக் கூடாதே என்று அந்த நேரம் சண்டையை நிறுத்தி விட்டு மகளை அந்த தாய் உமாவிடம் அறிமுகப்படுத்த உமா அந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்வது ஓஹோ! குழந்தை அப்படிச் சென்றவுடன் மறுபடி ரணகள சண்டை. வாவ்...என்ன ஒரு சீன்.

    Last edited by vasudevan31355; 15th June 2015 at 08:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •