Page 24 of 400 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #231
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 16

    ஆசை முகம் மறந்து போச்சே !!

    என் தாய் அதிகம் படிக்காதவள் - தந்தை வைப்பதுதான் சட்டம் - யாராவது புதியவர்கள் வீட்டிற்கு வந்தால் கூட என் தந்தை ஒருவரே பேசி அவர்களை அனுப்பி விடுவார் - நடுவில் காப்பி இருந்தால் , அம்மாவின் முகம் தென் படும் . அம்மாவிற்கு உலக ஞானம் அதிகம் - ஆனால் அதைக்கூட காண்பித்துக் கொள்ள மாட்டாள் . அம்மாவின் திறமைகளை முழுவதும் புரிந்துக்கொள்ள எனக்கு அன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது . ஒரு பெரியவர் என் வீட்டுக்கு வந்திருந்தார் - என் அப்பா ஊரில் இல்லை . அம்மா என்னை கூப்பிட்டு அவரை வரவேற்றாள் . பரிட்ச்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன் - கவனம் அவர்களின் உரையாடல்களில் லயிக்க வில்லை - அவர் ஒருவரே பேசிக்கொண்டிருந்த நேரத்தில் என் அம்மாவின் குரல் கணீரென்று கேட்டு , என் படிக்கும் புத்தகங்களை சற்றே மூடின .

    வாழ்க்கை முழுமை அடைவது எப்போது?! - இது அவர் வைத்த கேள்வி ......



    படித்து முடித்து கை நிறையச் சம்பாதித்தேன். என் குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்து, திருமணமும் செய்துவைத்தேன். ஓய்வும் பெற்று போதுமான அளவு ஓய்வூதியமும் வருகிறது. எந்தக் குறையுமில்லாமல், எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து முடித்துவிட்டதாக ஒருபுறம் மூளை சொல்கிறது. ஆனால் என் மனதில் ஒரு நிறைவின்மையும் வெறுமையும் இருக்கிறது. இன்னும் எதையோ தேடுகிறது. எதை நான் கோட்டைவிட்டேன், எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?

    என் அம்மாவின் பதில் .

    “ஒரு யோகி புதிதாக ஒரு கிராமத்துக்கு வந்தார். அவருடைய முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கினார்கள். ‘சாமி, ஏதாவது கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்’ என்று கேட்டார்கள். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் யோகி.

    மக்கள் அடுத்தநாளும் வந்தார்கள். பணிந்து, ‘அடுத்த போதனை என்ன?’ என்று கேட்டார்கள். மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். ‘வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்’ என்றார் மறுபடியும். அடுத்தடுத்த நாட்களிலும் அதையே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

    முதல் நாள் 1,000 பேர் வந்தார்கள். ஒரு வாரத்தில் அது பத்துப் பத்து பேராக குறைந்து, கடைசியில் எல்லோரும் வருவதையே நிறுத்திவிட்டனர். இப்போது யோகி தானாகவே ஒவ்வொரு வீடாகப் போய், அதே போதனையைச் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் எதிரே வந்தாலே, ‘ஐயோ, போதுமய்யா’ என்று மக்கள் ஓடி ஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. யோகியை அங்கே வரவழைத்தனர். ‘ஐயா, உங்கள் போதனை முதல் தடவை கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே போதனையை எத்தனை முறை கேட்பது?

    வேறு போதனைகள் கொடுக்கலாமே?’ யோகி சொன்னார், ‘என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால், முதல் போதனையையே நீங்கள் இன்னும் கடைப்பிடிக்கவில்லையே?

    உணர்வுபூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால், நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்!”

    அந்த யோகியின் நிலையில்தான் நான் இருக்கிறேன். பலநூறு முறை சொல்லிவிட்டேன். இன்னமும் மக்களுக்கு அதே கேள்வி இருக்கிறது.

    மனித மனம் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கும். எத்தனை கிடைத்தாலும் நிறைவின்மையைத்தான் உணரும். உங்கள் உள்நிலைக்கு எல்லை இல்லாமல் போகவேண்டும் என்று ஆசை. அதைப் பூர்த்தி செய்யாமல், வெளிச்சூழ்நிலைகளில் நீங்கள் மேலே மேலே கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறீர்கள்.

    இந்த உடலின் கட்டுப்பாட்டிலும் மனதின் வளையத்திலும் சிக்கிக்கொண்டு, அது விடுதலை பெற ஏங்குகிறது. இப்போதாவது, எதற்கும் திருப்திப்படாமல் இருப்பது ஏன் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்ததே இந்த உயிரின் அடிப்படை என்ன என்பதை உணராமல் வாழ முயற்சி செய்வதுதான் பெரிய பிரச்சினை. வாழ்க்கையின் நோக்கம் என்ன?

    புகழும் பெருமையும் பெறுவதா?

    அன்பையும் காதலையும் அனுபவிப்பதா? வளத்தையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதா? மதத்தையும் கடவுளையும் மதிப்பதா? இல்லை உங்கள் வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே எல்லை இல்லாமல் போகவேண்டும் என்பதுதான்.

    ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் படிப்பு, பதவி, பணம், குழந்தைகள், சொத்து என்று ஏதேதோ குறுக்கிட்டுள்ளன. உங்கள் நோக்கத்தின் கவனத்தைத் திசை திருப்பியதில் அவற்றுக்கும் பங்கு உண்டு.

    அவை வாழ்க்கைக்கு நிறைவு தரும் தீர்வுகள் அல்ல என்பதால், எல்லாம் கிடைத்தும் அடுத்து என்ன என்று பதின் வயதில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு அறுபதில் வந்துவிட்டது.

    வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. வாழ்க்கையின் முழு ஆழத்தையும் அகலத்தையும் வேர்வரை ஊடுருவி மனித மனம் எப்போதும் புரிந்துகொண்டது இல்லை.

    அதனால்தான், வாழ்க்கைக்கு மேலோட்டமான ஏதாவது நோக்கத்தை அது தேடிக்கொண்டே இருக்கிறது. ‘முழுமையான நிறைவு இல்லாமல், உள்ளுக்குள் ஓர் ஆசைத் தீ எப்போதுமே எரிந்துகொண்டு இருப்பதற்கு என்ன காரணம்?’ இந்தக் கேள்வி கேட்கும் மனதை சிறிது காலத்திற்குச் சமாதானம் செய்துவைக்க, மகான்களின் தத்துவங்கள், மதக் கோட்பாடுகள், புராண விளக்கங்கள், மறைநூல்களின் சொல்லாக்கம் எல்லாம் பயன்படலாம்.

    ஆனால் அடிப்படைக் கேள்வி காணாமல் போய்விடாது. விரைவிலேயே மீண்டும் தலை நிமிர்த்தி தவிப்பு ஏற்படுத்தும். வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை.

    அளந்து பார்க்கக்கூடிய எதைக் கொடுத்தாலும், உங்களுக்கு நிறைவு வராது. எல்லை இல்லாத பிரபஞ்சத்தின் அங்கமாகிய நீங்கள், கவனம் இல்லாமல் உங்களை ஓர் எல்லைக்குள் அடையாளப்படுத்தி அடக்கப்பார்ப்பதால் வரும் விளைவு இது.


    விரிவடைந்து விரிவடைந்து எல்லையற்றதுடன் கலந்துவிடத் துடிப்பதால்தான் அந்த ஆசைத் தீ வேறு எதைக் கொடுத்தாலும், அடங்க மறுக்கிறது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் முழுமையாக வாழ்வதுதான். அதை ஒழுங்காகச் செய்யவிடாமல், அதற்குப் பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும்தான். உங்களை கரைத்துவிட்டால், வாழ்க்கை அதன் முழுமையை நோக்கித் தானாகவே மலரும். இந்தப் பிரபஞ்சமும் நீங்களும் ஒன்றே என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் ஆசை சட்டென்று அதன் தவிப்பை விட்டுவிடும்.



    இந்த அறியாமையை எப்படிக் களைவது?

    முறையான யோகாவின் மூலம் குறுகிய எல்லைகளை உடைக்க முடியும். பேரானந்தத்தை ருசிக்க முடியும். உங்கள் உச்சபட்ச சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், அப்புறம் இந்த உலகில் எந்த விளையாட்டை வேண்டுமானாலும் வலி இல்லாமல் விளையாடிப் பார்க்க முடியும்.

    எல்லாவற்றையும் மறந்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கிறீர்கள். முழு கவனமும் அதில் பதிந்து இருக்கும்வரை பிரச்சினைகளைத் தற்காலிகமாக மறந்து போயிருப்பீர்கள். மனைவி வந்து தலை மேல் ‘டப்’ என்று கொடுத்ததும், காணாமல் போன பிரச்சினைகள் எல்லாம் கணத்தில் திரும்ப வந்து பூதாகரமாக நிற்கின்றன.

    உங்கள் வாழ்க்கையில் 40 வருடங்கள் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தது போல் ஓடிவிட்டது. அந்த நிகழ்ச்சிகள் முடிந்துபோய், மறுபடியும் கேள்வி எழுந்துவிட்டது. இப்பவும் தாமதம் ஆகிவிடவில்லை. இந்தக் கணத்தில் இருந்துகூட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முழுமையான ஈடுபாட்டுடன் முயற்சி செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே அளவு பணம், பதவி, அதிகாரம், வசதி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வில் ஒரே அளவு ஆனந்தம் கிடைப்பதை யார் தடுக்க முடியும்?”

    அந்த பெரியவர் ஒரு முழு திருப்தியுடன் வெளியேறினார் - அம்மாவின் உள் இத்தனை வேதாந்தமா ? அதிகம் பேசாதவள் - அன்று எல்லோரையும் பேசவே முடியாதபடி செய்துவிட்டாள் - அந்த ஆசை முகம் இன்று மறந்து போச்சே - யாரிடம் சொல்லி அழுவேன் ??

    ஆசை முகம் மறந்து போச்சே
    இதை யாரிடம் சொல்வேனடி தோழி

    நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
    நினைவு முகம் மறக்கலாமோ

    அன்னை (கண்ணன் )முகம் மறந்து போனால்
    இந்த கண்கள் இருந்து பயன் உண்டோ??

    Last edited by g94127302; 25th May 2015 at 04:40 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை இதே பகுதியில் சந்திப்போம் -வணக்கம்

  4. #233
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நெஞ்சை பிழியுதே ரவி .
    மன்னிக்கவும் இந்த வார்த்தைகளுக்கு.
    உங்கள் எழுத்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது .
    gkrishna

  5. #234
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Dear ravi,

    நண்பர் வினோத் கூறியது போல் இன்று பாடகர் திலகம் நினைவு நாள் .அன்னை ஒரு ஆலயம் பாடல் அதற்கு சரியாக பொருந்தி இருக்கிறது.
    எம்ஜீயார்,சிவாஜி மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்த பாடகர் திலகம் நடிகர் ரஜினிகாந்த்க்கு மிக சில பாடல்களே பாடி உள்ளார் . அவற்றில் மிக சிறந்த பாடல் 'அம்மா நீ சுமந்த பிள்ளை' .
    gkrishna

  6. Likes rajeshkrv liked this post
  7. #235
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    25.04.91 அதிகாலை

    கொழும்பு ட்ரான்ஸிட் டெஸ்கிலிருந்த அந்த இளைஞன் கொஞ்சம் தூக்கம் கலைந்து என்னைப் பார்த்தான்.. எஸ். கேன் ஐ ஹெல்ப் யூ

    நான்.. என் பெயர் இது.. கொழும்பு ட்ரிச்சி கன்ஃபர்ம் ஆகியிருக்கிறதா...என்னுடையது டிஸ்கவுண்ட்ட்ட் டிக்கட்.. ஐயாம் ஃப்ரம் எ ட்ராவல் ஏஜன்ஸி..


    என் கலைந்த தலை கசங்கிய சட்டை கலங்கிய கண்கள் உறுத்தியிருக்கவேண்டும்.. கொஞ்சம் நிச்சலனமாய்ப்பார்த்து.. “ நீங்கள் தானா அது” எனச்சொல்லி ஒரு கத்தை ஃபேக்ஸ் பேப்பர்களை எடுத்துப் போட்டான்.. இவ்வளவு பேர் இவ்வளவு தடவை உங்களுக்காக அனுப்பியிருக்கிறார்கள்..எனில் இந்தாருங்கள் டிக்கட்”

    “ நன்றி..என்னிடம் இன்னொரு முழு டிக்கட் கொழும்பு திருச்சி இருக்கிறது..அதை உபயோகப் படுத்தவேண்டியதில்லை தானே..”

    “அஃப் கோர்ஸ்.. நீங்கள் அதை ரீஃபண்ட் செய்து விடலாம்..லக்கேஜ்”

    சோனியான ஹேண்ட் லக்கேஜ் காண்பித்தேன்..இது மட்டும் தான்..”

    “போங்கள்..கேட் நம்பர்.. பை த பை உங்கள் மதர் தான் எக்ஸ்பைர்டா.. ஐயாம் ஸாரி..”
    கொழும்பில் ட்ரான்ஸிட் சென்றுதிருச்சி ஃப்ளைட்டில் ஏறி திருச்சியில் கால் வைத்த போது பொல பொலவென விடிந்திருந்தான் சூரியன்..

    திருச்சி ஏர்போர்ட் அந்தக் காலத்தில் கொஞ்சம் கிராம பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருக்க இறங்கி லக்கேஜ்ஸூக்காக சக பயணிகள் இன்னொரு தகரக் கொட்டகையை முற்றுகையிட கொஞ்சம் தொலைவிலிருந்த இன்னொரு இட்த்திற்குச் சென்றால் அங்கும் க்யூ..

    என்னருகில் நின்றவர் என்னைப்பார்த்தார்..என் கலங்கிய கண்களைப் பார்த்தார்.. ஒரு முறை நான் பானம் ஏதாவது அருந்தியிருக்கிறேனா என அருகிலும் வந்து எதுவும் வராத்தினால் பேச ஆரம்பித்தார்..என்ன விஷயம்..

    சொன்னேன்..

    நீங்கள் எதற்கு க்யூ.. எனச் சொல்லி அவரே முன்னாலிருந்தவர்களிடம் சொல்லி என்னை முன் தள்ள, கஸ்டம்ஸில் இருந்த்து ஒரு பெண்மணி.. கடமை தவறாதவர்..

    என் அம்மா போய்ட்டாங்க.. ஸோ மதுரைக்குப் போகிறேன்..

    சரி..என்றவர் இது ஒண்ணு தான் பெட்டியா ப்ளீஸ் ஓப்பன்..

    ஹேண்ட்லக்கேஜை ஓப்பன் செய்தபின்னர் கைவிரல்கள் எல்லாம் உள்ளே விட்டு கடமையாய் ச்செக்கிங்க்.. பின் கண்கள் என்னை முற்றுகையிட கையில் என்ன
    மோதிரம்..ஒன்றரை பவுன்.. கழுத்தில் செய்ன் 35 கிராம் அவ்வளவு தான்.. வேண்டுமென்றால் எண்டார்ஸ் செய்து கொள்ளுங்கள்.. நான் மதுரைக்குப் போக வேண்டும் இரண்டாம் நாள் காரியம்..இஃப் பாஸிபிள் தெரிந்த டாக்ஸி இங்கு இருக்கிறதா..

    ஹெல்ப்பெல்லாம் அப்புறம்..முதலில் அந்த ஆஃபீஸர் ஒத்துக் கொள்கிறாரா எனத்தொலைவில் அமர்ந்திருந்த இன்னொருவரைக் காட்டி “சார்..பாஸஞ்சர் மதர் எக்ஸ்பைர்ட்,. இந்த ரிங்க் செய்ன் போட்டிருக்கார் ஓகேயா”அவர் தலையசைக்க “சரிங்க நீங்க போகலாம்.. இதோ இந்த ஆள்- ஏர்போர்ட் ஆள்- காண்பித்து”இவர் உங்களை டாக்ஸியில் ஏற்றி விடுவார்”

    அந்த ஏர்போர்ட் ஆள் வெளிவந்து இன்னொரு டாக்ஸியிடம் மதுரை சொல்லி முன்னூறோ நானூறோ பேசி ஏற அவன் திருச்சி பஸ்ஸ்டாண்ட் வந்து இன்னொரு டாக்ஸியில் என்னை மாற்றி விட புது டாக்சிக்காரன் என்னசார் ஆச்சு..

    மதர் எக்ஸ்பைர்ட்பா எவ்ளோ சீக்கிரம்போக முடியுமோ போ”

    இதோ ரெண்டரை அவர்ல போலாம் சார்..

    டாக்சியில் சாய்ந்த போது ரெண்டு நாள் முன் மன்னி அழைத்த்து நினைவு..”அம்மாக்கு ரொம்ப ஒடம்பு முடியலை கண்ணா வந்தா நன்னா இருக்கும்”

    “ரொம்ப சீரியஸா மன்னி..என்னோட பாஸ் ஊரில் இல்லை” எனச்சொன்ன மட்த்தனம்..

    “சரி சரி கொஞ்சம் சீக்கிரம் வரப்பார் “எனச்சொன்னவர் 24 காலையில் “அம்மா போய்ட்டாடா”

    எந்த ஃப்ளைட் இருக்கு சென்னைக்கு எனத் திண்டாடி அலமலந்து கொண்டிருக்கையில் மறுபடி ஃபோன்..”இன்னிக்கே இப்பவே எல்லாம் பண்ணிடலாம்னு ஃபீல் பண்றாப்பா.. ஸோ நாங்க காட்டுக்குப் போறோம்” என அண்ணனின் குரல்..

    என்ன் சொல்லவெனத் தெரியாமல் பதறி பின் மறுபடி சரி என்றேன்..இன்னொரு மட்த்தனம்..

    ஆக 24ம் தேதி மதியம் எல்லாம் முடிந்துவிட்ட்து என் அன்னையினுடைய ஈமகாரியங்கள்.. பின்னும் டிக்கட் எல்லாம் கிடைக்காமல் ஏர்லங்காவில் கிடைத்து..இதோ மதுரை..

    வீட்டில் இறங்கினவுடனே கண்ணில் நீர் முட்டியது..இந்த வீடு..இதில் அன்னை இனி இல்லை..

    அண்ணா அணைத்துக்கொள்ள ஊரிலிருந்துவந்த சகோதரிகள் அழ என் கண்ணில் மட்டும் கொஞ்சம் நீர் கொட்டிக்கொண்டு இருந்த்து. வாய் விட்டு அழுகை வரவில்லை...

    சரி குளிச்சுட்டு ரெண்டாம் நாளுக்கு கிளம்பு

    ஆற்றங்கரையோரம் தோப்பு ஈம காரியங்களுக்கானது.. தாடி வைத்த சாமி வாத்யார் வந்திருக்கப் படாதோ ஒரு நாள் முன்னால..

    ஏதோ விதி தடுத்துடுச்சு மாமா

    ஆமாம்ப்பா..சமயத்தில அப்படித் தான் ஆகும் ..ஆனா மத்த எல்லா நாளுக்கும் இருந்து பண்ணிடு..என்ன..

    கண்டிப்பா..

    சொல்லு- ஒனக்குப் பூணுலும் இல்லையா.. சரி பரவாயில்லை..அண்ணாக்களோட முதுகைத் தொட்டுக்கோ.. ம்மஹ சொல்லு

    ம்மஹ..

    மாத்ரு..ப்ரேதஸ்ய.. த்விதியே அஹனி.. என அவர் ஸ்லோகம் சொல்லும் போது வெடித்து அழுதேன்.. ஒருவருடம் முன் ஊர்வந்து மறுபடி துபாய் சென்ற போது அம்மாவிடம் “உன்னை இனி பார்ப்பேனான்னு தெரியலையேம்மா..இப்ப பாத்துக்கறேன்” என வெளையாட்டா வினையா..ஏதோ ஒன்றாகப் பேசிய வார்த்தைகள் நினைவு வந்து பிராவகமாக அழுகை வர,, மற்றவர்கள் ஆறுதல் மட்டுமே சொன்னார்கள்.

    திரும்ப வீடுவந்து கொஞ்சம் நேரம் சென்று மாலைப்போதில் சகோதர சகோதரிகளிடம் சொன்னேன்..” உங்களுக்கெல்லாம் அம்மாவின் முகம் கொடுத்து வைத்திருக்கிறது..எனக்கு இல்லை.. கொஞ்சம் தவறாக நினைக்கவில்லை எனில் எல்லா பதின்மூன்று நாள் காரியச் செலவுகளும் நானே ஏற்றுக்கொள்கிறேன்..” அவர்கள் மறுக்க மறுக்க சம்மதிக்க வைத்தேன்..

    .
    *
    ஒன்றை இழக்கும் போது தான் அதன் அருமை தெரியுமாம்..அன்னையின் மறைவு அந்த அருமை இதோ தொடர்ந்து தொடர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கிறது..

    *
    ரவி..என் அன்னையின் முகம் மறக்கவில்லை..இன்னும் நின்று ஆசிர்வதித்துக்கொண்டு தானிருக்கிறது..

    *

    பாலகுமாரன் –அவரது தலையணைப்பூக்கள் கதையில் ஹீரோ சுந்தர்ராஜன் இறப்பதற்கு முன் அலை பாய்வான் பல்விதமாய்..அதற்கும் அலைபாயுதே கண்ணா பாட்டிற்கும் முடித்து ப் போட்டு எழுதியிருப்பார் அற்புதமாய்..

    அதையே நீங்கள் ஆசை முகம் மறந்து போச்சே காதல் பாட்டில் அன்னையின் நினைவைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..மேலும் “வாழ்க்கையை ஆன்ந்தமாக வாழ்” என்ற விஷயம் சொல்லி அதை ப்பற்றிய உங்கள் அன்னை சொன்ன கதையையும் வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.. நன்றி..( வர வர எழுத்துல என்னமோ பளபளன்னு பாலீஷ்லாம் தெரியுது..என்ன்வாக்கும் செய்யறீங்க..குட். ..)
    *
    மன்னிக்க என் சோக நினைவலைகளில் உங்களனைவரையும் துன்புறுத்தியதற்கு..
    *
    Last edited by chinnakkannan; 25th May 2015 at 03:06 PM.

  8. #236
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோ..

    லஷ்மி எனப்படும் டாக்டர் திரிபுர சுந்தரி..பெண்மனம் படித்ததில்லை..ஸ்ரீ மதி மைதிலி பின் 22 வருடம்
    கழித்து தென்னாப்பிரிக்காவில் இருந்து வ்ந்து குமுதத்தில் எழுத ஆரம்பித்த அத்தை, கதவு திறந்தால், விகடனில்
    நல்லதோர் வீணை குமுதத்தில் தேடிக்கொண்டே இருப்பேன் என நினைவுக்கு வருகின்றன

    வாஸந்தி எனக்குப் பிடிக்கும்.. கொஞ்சம் மென்மையான அதேசமயம் அழுத்தமான எழுத்துக்குச் சொந்தக்காரர்..தீக்குள் விரலை வைத்தால்
    மயக்கங்களும் சிலந்திக் கூடுகளும் துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள், வேர்களைத்தேடி

    ரமணி சந்திரன் அவ்வளவாய்ப்படித்ததில்லை.. பெர்முட்டேஷன் காம்பினேஷனில் வல்லவர் அவர்..

    இந்துமதி - பைசா நகரத்துக் கோபுரங்கள் என நினைவு, பின் சக்தி 81, ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன் என ஒரு மர்மக்கதை

    சிவசங்கரி - நதியின் வேகத்தோடு.. பாலங்கள்..

    கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளும் தொடர்ந்து வாங்கி ப்படித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

    ம்ம் அப்புறம் வாரேன்..

  9. #237
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ck - உணர்ச்சிகளை வெகு அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிண்டீர்கள் அதுவும் உங்கள் இயல்பான நடையில் . "கருணா ரஸ ஸாகரா " என்ற நாமம் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியை குறிப்பதாக வரும் - கருணையில் அவள் சமுத்திரத்தைவிட மிகப்பெரியவள் - அவள் தான் தன்னை பல ரூபங்களாக மாற்றிக்கொண்டு நம்மிடயே நம் தாயாக உலாவி வருகிறாள் - பலருக்கு வாழும் போது இதை புரிந்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை . புரிந்துகொள்ளும் போது கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவடைந்து விடுகின்றது ---------

  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  11. #238
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி..

    //அவள் தான் தன்னை பல ரூபங்களாக மாற்றிக்கொண்டு நம்மிடயே நம் தாயாக உலாவி வருகிறாள் -
    பலருக்கு வாழும் போது இதை புரிந்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை .
    புரிந்துகொள்ளும் போது கொடுக்கப்பட்டுள்ள நேரம் முடிவடைந்து விடுகின்றது -----// வெகு அழகாகச் சொன்னீர்கள்..


    வெகு காலத்திற்கு முன் எழுதிப்பார்த்த புதுக்கவிதை.. ( நினைவிலிருந்து எழுதுகிறேன்)

    **

    காக்கைக்கும் தன் குஞ்சு...
    **

    சின்ன வயதில்
    பட்டுப் பாவடை
    சட்டை, பூச்சூட்டி
    அழகுபார்த்தேன் உன்னை..

    சற்று வளர்ந்ததும்
    கண்ணில் கலக்கமுடன்
    கேள்வி நீ கேட்கப்
    பொறுன்மயாய் விளக்கம் சொல்லிக்
    கற்றும் கொடுத்தேன்..

    பின் திருமணமான பின்
    கத்தரிக்காய் பொடிக்கறிமீது
    இவருக்குப் பிடிக்கும் என்று
    என்னிடம் தான்
    கற்றுக் கொண்டாய்..

    இன்று
    என்ன வந்தது உனக்கு?

    ஓடியாடி விளையாடும்
    உன் பெண்ணைக்
    கொஞ்சம் பார்த்து விளையாடு
    எனச் சொன்னதற்கு
    என்னிடம்
    முகம் காட்டுகிறாய்..


    சரித்தான் போடி..!

    *

  12. Likes uvausan liked this post
  13. #239
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்னை சம்பந்தப்பட்ட இன்னொரு பாடல்..

    கவிதை எழுதுவோம் வாருங்கள் இழையில் எழுதியிருந்தது.

    *

    ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது

    வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
    செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
    மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
    தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..

    **

    கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
    தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
    அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
    அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்

    **

    முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..

  14. Likes uvausan liked this post
  15. #240
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க – 8
    **

    பாட்டு பாட்டு பாட்டு.. அதக் கேட்டுபுட்டு ஆஹா இப்படி இருக்கே படம் சூப்பரா இருக்குமப்புன்னுக்கிட்டு அந்தக்காலத்துல (சரி என்னை வர்ணிக்கலை) நானும் என்னோட ஃப்ரண்ட்டும் போனோமா..

    எங்க.. புதுசா கட்டின தியேட்டர் மதுரைல..(அந்தச் சமயத்தில).. ஒரு மாதிரி எசகுபிசகாக் கட்டியிருப்பாங்க.மொத்தம் மூணு தியேட்டர் (மதுரைல சினி மினி சுகத்திற்கு அப்புறம் வந்த மூணு தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இதுன்னு நினைக்கறேன்) நடனா நாட்டியா நர்த்தனா.. இதில் நர்த்தனாவில் இந்தப் படம் ரிலீஸ்..எது இளையராஜா இசையில் கார்த்திக்கின் நடிப்பில் பாடல்கள் இனிமையாய் இருக்கும் படம்.. சொல்லத் துடிக்குது மனசு..

    போனாக்க டிக்கட் காஸ்ட்லி ரூ.4.50 தான் கிடைச்சது டிக்கட் எடுத்துட்டு மாடி மாடி யாய் ஏறி மூச்சிரைக்க மூச்சிரைக்க படம்பார்க்க உட்கார்ந்தா பாட்டெல்லாம் ஓ.கே..ஆனா படம்.. .. குமுதம் விமர்சனத்தில் சொ வுக்குப் பதில் கொ என எழுதியிருந்ததாக நினைவு..

    (லொகேஷன் அலங்காருக்கும் அபிராமிக்கும் இடைப்பட்டதுன்னு நினைக்கேன்..சரியா முரளி.. இப்பவும் இருக்கான்னு தெரியாது.. ராமராஜன் அதை வாங்கியதாகப் புகையாகக் கேள்விப்பட்ட நினைவு)

    ம்ம் இந்தப் பாட்டக் கேக்கறச்சே பட்ட கஷ்டமெல்லாம் நெனப்பு வந்துடுச்சு.(படம்பார்த்துப் பட்ட கஷ்டமெல்லாம்) என்னமோ போங்க..

    குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ
    அதன் குரலுக்கொரு நிறமிருக்கா..கா கா


    *

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •